விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
பிசிசிஐ பாராட்டு விழாவில் தோனி பெயரை மறந்த சேவாக் டெல்லியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சேவாக்கிற்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர். அருகில் ஷேவாக்கின் தாய், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் பிசிசிஐ சார்பில் சேவாக்கிற்கு நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பேசிய சேவாக் தனது கேப்டன்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதேவேளையில் தோனியின் பெயரை அவர் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து கடந்த அக்டோபர் 20ம் தேதி சேவாக் ஓய்வு பெற்றார். இந்நிலையில் டெல்லியில் நேற்று தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக…
-
- 0 replies
- 818 views
-
-
தற்போதைய துடுப்புகள் ஆபத்தை விளைவிக்கலாம் : தென் ஆபிரிக்காவின் முன்னாள் வீரர் எச்சரிக்கை சமகால சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எத்தனையோ மாற்றங்கள் நடைபெற்றுவருகின்ற நிலையில் துடுப்புகளின் அளவுகளும் நாளுக்கு நாள் மாறுபட்டவண்ணம் இருக்கின்றன. 138 வருடங்களுக்கு முன்னர் முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டது முதல் இற்றைவரை துடுப்புகளின் அளவு பெரும் மாற்றம் பெற்றுள்ளதை அவதானிக்கலாம். தற்போதைய துடுப்புகளின் அளவை குறிப்பாக டேவிட் வோர்னர் பயன்படுத்தும் துடுப்பின் அளவு தன்னைப் பிரமிக்க வைப்பதாக தென் ஆபிரிக்காவின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பெற…
-
- 0 replies
- 556 views
-
-
பீபாவுக்கு இவ்வாண்டில் $ 187 மில். நட்டம் சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் (பீபா), இவ்வாண்டில் மாத்திரம் 187 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் (87 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்) அதிகமான நட்டம் ஏற்படுமென அறிவிக்கப்படுகிறது. பல்வேறுபட்ட ஊழல், மோசடி, முறைகேடு சம்பந்தமான குற்றச்சாட்டுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பீபா, அனுசரணையாளர்களிடமிருந்து அதிக அழுத்தங்களை எதிர்கொண்டிருந்தது. பல அனுசரணையாளர்கள், அனுசரணையிலிருந்து விலகியிருந்தனர். முதல்நிலை அனுசரணையாளர்களான எமிரேட்ஸ், சொனி இரண்டும், இரண்டாம் நிலை அனுசரணையாளர்களான கஸ்ட்ரோல், கொன்டினென்டல், ஜோன்சன் அன்ட் ஜோன்சன் ஆகிய நிறுவனங்கள், அனுசரணையிலிருந்து விலகியிருந்ததோடு, அவர்கள…
-
- 0 replies
- 818 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் மேலும் புதிய மாற்றங்கள்? அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்ததையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து பல தரப்பாலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை மேலும் போட்டித் தன்மை வாய்ந்ததாக மாற்றவும், இரசிகர்களை கவரவும் இத்தகைய மாற்றங்கள் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுவருகிறது. அவற்றிலே முக்கியமாக, போட்டிக்கு முன்னதான நாணயச் சுழற்சியை நிறுத்துவதற்கான ஆலோசனை பற்றி கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற ஒரு நாட…
-
- 0 replies
- 673 views
-
-
பீபா அதிகாரிகள் கைது மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை கையூட்டாக பெற்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உயர்மட்ட பீபா அதிகாரிகள் சுவிஸ் ஹொட்டலொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் சில பீபா அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்த சொகுசு போர் உ லக் ஹொட்டலிலேயே பொலிஸார், திடீரெனப் புகுந்து கைது செய்திருந்தனர். பீபாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் தொடர்பாக வாக்கெடுப்புக்கு செல்வதற்கான பீபாவினது நிறைவேற்றுச் சபையின் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக சூரிச்சில் இடம்பெற்ற நிலையிலேயே மேற்படிக் கைதுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், ஐக்கிய அமெரிக்க நீதித் திணைக்களத்தினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கவனமெடுப்பதாக தெரிவி…
-
- 0 replies
- 1k views
-
-
ஐ.சி.சி அணிகள் அறிவிப்பு: ஒரு நாள் அணியில் சங்கா, டில்ஷான் Comments சர்வதேச கிரிக்கெட் சபையின், 2015ஆம் ஆண்டுக்கான உலக பதினொருவர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளே அறிவிக்கப்பட்டுள்ளன.செப்டெம்பர் 18, 2014 முதல் செப்டெம்பர் 13, 2015 வரையிலான காலப்பகுதியில் வெளிப்படுத்தப்பட்ட திறமைகளின் அடிப்படையிலேயே, இவ்வணிகள் தெரிவாகியுள்ளன. டெஸ்ட் அணியில் இலங்கையர்கள் எவரும் இடம்பெறாத அதேவேளை, ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் திலகரட்ண டில்ஷானும் குமார் சங்கக்காரவும் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட்: டேவிட் வோணர், அலஸ்டெயர் குக் (தலைவர்), கேன் வில்லியம்ஸன், யுனிஸ் …
-
- 0 replies
- 653 views
-
-
இந்தியாவுக்கு அபராதம் தென் ஆப்பிரிக்காவுடனான 3 வது டெஸ்ட் போட்டி நடைப்பெற்ற நாக்பூர் மைதானம் உரிய தரத்தில் பேணப்படாததால் இந்தியாவுக்கு £ 9950 பவுன் அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விளக்கம் அளிக்க விரும்பினால் 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கலாம் என அந்த சபை இந்தியாவிற்கு தெரிவித்துள்ளது. http://www.hirunews.lk/tamil/sports/121219/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
-
- 2 replies
- 1.4k views
-
-
லையன் ஆட்டமிழப்புச் சர்ச்சை ஐ.சி.சியிடம் நியூசி விளக்கம் December 02, 2015 கிரிக்கெட் வரலாற்றின் முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் அடிலெய்டில் நடைபெற்றது. இந்த முதல் ஆட்டத்திலேயே லையன் ஆட்டமிழப்புச் சர்ச்சை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக ஆகியிருக்கிறது என்றால் மிகையாகாது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 202 ஓட்டங்களில் சுருண்டது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 110 ஓட்டங்களைக் கடப்பதற்குள் 8 இலக்குகளை இழந்து தத்தளித்தது. 9ஆவது இலக்குக்கு நாதன் லையன் களம் இறங்கினார். இவர் ஓட்டங்கள் ஏதும் எடுக்காத நிலையில், கிரைக்கின் பந்தில் வில்லியம்சனிடம் பிடி கொடுத்தார். ஆனால், இந்தியாவைச் சேர்ந்த மைதான நடுவர் ரவி ஆட்டமிழப்பை கொடுக்க மறுத்த…
-
- 0 replies
- 820 views
-
-
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கவுரவம் அளிக்கப்படவில்லை: அமித் மிஸ்ரா வேதனை இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா | கோப்புப் படம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் 47 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். மொத்தம் 50 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில் அஸ்வின் 24, ஜடேஜா 16, அமித் மிஸ்ரா 7 விக்கெட் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களின் திறமையை பாராட்டாமல், ஆடுகளத்தின் தன்மை குறித்தே அதிகம் பேசப்படு வதாக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா வேதனையடைந் துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி: எங்களுக்கு போதிய கவுரவம் அளிக்காமல் ஆடுகளத்தை பற்றியே பேசு கிறார்க…
-
- 0 replies
- 720 views
-
-
வெளியானது கடிதம்: சிக்கலில் ரெய்னா 2010ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்தேகமிக்க நடவடிக்கைகள் தொடர்பான இரகசியக் கடிதமொன்று வெளியாகியுள்ளது. இதில், சுரேஷ் ரெய்னாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதன் காரணமாக, அவருக்குச் சிக்கல்கள் ஏற்படக்கூடுமெனக் கருதப்படுகிறது. தம்புள்ளையில் இடம்பெற்ற இத்தொடரில், இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தது. ஆனால், அந்தத் தொடரில், சுரேஷ் ரெய்னாவின் அறையில் பெண்ணொருவர் தங்கியிருந்ததாக, நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தன. இது தொடர்பான உத்தியோகபூர்வ கருத்தெதுவும், சர்வதேச கிரிக்கெட் சபையாலோ, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையாலோ, அல்லது இ…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஆசியாவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஹ்மத் கலீல் ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனத்தின் வருடாந்த விருது விழாவில் ஐக்கிய அரபு இராச்சிய வீரர் அஹ்மத் கலீல், 2015இன் அதிசிறந்த ஆசிய கால்பந்தாட்ட வீரர் விருதை வென்றெடுத்தார். ஆசியாவின் அதி சிறந்த, கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட கால்பந்தாட்ட வீரர் என்ற இரண்டு விருதுகளையும் வென்ற மூன்றாவது வீரர் இவராவார். ஆசியாவின் அதிசிறந்த கனிஷ்ட கால்பந்தாட்ட வீரர் விருதை 2008 இல் கலீல் வென்றிருந்தார். இவ்வருடத்தின் அதி சிறந்த வீரருக்கான குறும்பட்டியலில் இடம்பெற்ற சக நாட்டு வீரர் ஓமர் அப்துல்ரஹ்ம…
-
- 0 replies
- 737 views
-
-
செய்தித் துளிகள் அடிலெய்டில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியானுக்கு அவுட் கொடுக்காமல் தீர்ப்பு வழங்கி 3வது நடுவர் நைஜெல் லாங் தவறிழைத்தார். இதனால் ஆட்டத்தின் திசையே மாறியது. இதுதொடர்பாக நியூஸிலாந்து அணி நிர்வாகம் ஐசிசியிடம் விளக்கம் கேட்டது. இந்நிலையில் நைஜெல் லாங் வழங்கிய தீர்ப்பு தவறானது தான் என ஐசிசி பதில் அளித்துள்ளது. ---------------------------------------------------- இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நாக்பூரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் மூன்று நாட்களில் முடிவடைந்தது. 40 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றினர். இந்நிலையில் நாக்பூர் ஆடுகளம் மிகவும் மோசமான ஆடுகளம் என ஐசிசி த…
-
- 0 replies
- 549 views
-
-
ரஞ்சி கிரிக்கெட் போட்டி... திண்டுக்கல் மைதானத்தில் பந்து தாக்கியதால் மயங்கி விழுந்த ஆஸி. நடுவர் திண்டுக்கல்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய நாட்டு நடுவர் ஜான்வாட் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். அவருக்கு திண்டுக்கல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்றுப் போட்டிகள் இன்று நாடு முழுவதும் பல மைதானங்களில் நடைபெறுகின்றன. இதில் தமிழகம்- பஞ்சாப் இடையேயான கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அருகே நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் தமிழக வீரர் சந்திரசேகர் வீசிய பந்தை பஞ்சாப் வீரர் பல்விந…
-
- 1 reply
- 790 views
-
-
மின்னல் வேகத்தில் 5 கோல்கள் : கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது லெவோண்டஸ்கி சாதனை! கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜெர்மன் பந்தஸ்லீகா தொடரில், பேயர்ன்மியூனிச்- வுல்ஸ்பர்க் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய பேயர்ன்மியூனிச் அணியின் போலந்து ஸ்டிரைக்கர் ராபர்ட் லெவோண்டஸ்கி களமிறங்கிய 9 நிமிடங்களுக்குள் 5 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். அதாவது 3.22 வினாடிகளுக்குள் ஹாட்ரிக் கோல் அடித்தும், 5 நிமிடம் 42 வினாடிகளுக்குள் 4 கோல்கள் அடித்தும் 8 நிமிடம் 59 வினாடிகளில் 5 கோல்கள் அடித்தும் புதிய சாதனை படைத்தார். அதோடு மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி 5 கோல்கள் அடித்ததும் புதிய சாதனை ஆகும். இந்த சாதனைகள் அனைத்தும் க…
-
- 0 replies
- 893 views
-
-
சர்வதேச கிரிக்கெட் சம்மேளம் புதிய தரப்படுத்தல் சர்வதேச கிரிக்கெட் சம்மேளம் நேற்று புதிய தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி, டெஸ்ட் போட்டிகளின் துடுப்பாட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் இருவர் முதலாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இங்கிலாந்தின் ஜோ ரூட் , மற்றும் அவுஸ்ரேலியாவின் ஸ்டிவன் சுமித் ஆகியோர் 886 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த தென்னாபிரிக்காவின் ஏ.பி.டி விலியர்ஸ் நூறாவது போட்டியில் பங்குகொள்ளும் போது முதலிடத்தில் இருந்த போதிலும், தற்போது அவர் அந்த முதலிடத்தை இழந்துள்ளார். புதிய பட்டியலின் படி, டி விலியர்ஸ…
-
- 0 replies
- 773 views
-
-
இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையுடன் நடைப்பெறயுவுள்ள டெஸ்ட் போட்டிக்காக நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் பிரண்டன் மெக்கல்லம் தலைமையிலான 12 பேர் கொண்ட அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது அதனடிப்படையில் , கடந்த போட்டிகளில் திறமையை வெளிக்காட்டாத அனுபவம் வாய்ந்த வீரர்களான மார்டின் கப்டில் மற்றும் மார்க் க்ரேக் ஆகியோர் தொடர்ந்தும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 10 ம் திகதி டனேடீன்னில் ஆரம்பமாகவுள்ளது. http://www.hirunews.lk/tamil…
-
- 21 replies
- 1.5k views
-
-
பல்லான் டி ஆர் விருது : இறுதி பட்டியலில் மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் இந்த ஆண்டுக்கான பல்லான் டி ஆர் ( தங்கபந்து ) விருதுக்கான இறுதி பட்டியலில் பார்சிலோனாவின் மெஸ்சி, நெய்மர் மற்றும் ரியர்மாட்ரிட்டின் ரொனால்டோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இறுதி 3 பேர் பட்டியலில் இருந்து விருதுக்குரிய வீரர், கால்பந்து பத்திரிகையாளர்கள், தேசிய அணியின் பயிற்சியாளர்கள் வாக்கெடுக்கின் மூலம் தேர்வு செய்வார்கள். ஜனவரி 11ஆம் தேதி இந்த ஆண்டுக்கான விருதுக்குரிய வீரர் அறிவிக்கப்படுவார். சிறந்த பயிற்சியாளருக்கான பல்லான் டி ஆர் விருதுக்கு பேயர்ன் மியூனிச்சின் பெப் கார்டியாலாவும் பார்சிலோனாவின் லுயீஸ் என்ரிச்சும் அர்ஜென்டினாவின் ஜோர்ஜ் சம்போலியும் முதல் 3 பட்டியலில் இடம் பெற்றுள…
-
- 1 reply
- 879 views
-
-
பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இங்கே நிலைத்திருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டிகள், தொடர்ந்து நிலைத்திருக்குமென, நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற உலகின் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்தே அவர், இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார். மென் சிவப்புப் பந்தால் விளையாடப்பட்ட இப்போட்டி, மூன்று நாட்கள் மாத்திரமே நீடித்திருந்த போதிலும், 123,736 இரசிகர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர். தொலைக்காட்சி தரப்படுத்தலிலும், மிக உயர்ந்த எண்ணிக்கையானோர் பார்வையிட்டதாக அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்த மக்கலம், 'இதுவொ…
-
- 0 replies
- 769 views
-
-
கெய்ன்ஸ் குற்றமற்றவர் என கண்டுபிடிப்பு இலண்டனில் இடம்பெற்ற சௌத்வோர்க் கிரவுண் நீதிமன்றத்தில் கடந்த ஒன்பது வாரமாக இடம்பெற்ற விசாரணையின் முடிவில், பொய் வாக்குமூலம் வழங்கிய, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்ற குற்றச்சாட்டுக்களில் குற்றமற்றவர் என நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மையோர் இணங்கியுள்ளனர். பத்து மணித்தியாலங்கள் 17 நிமிடங்கள் ஆழமாக ஆராய்ந்து நேற்றுக் காலை 10.40 அளவில் இணக்கத்துக்கு வந்த நீதிபதிகள், தீர்ப்பை அளித்திருந்தனர். மேற்படி இந்த முடிவானது, கெய்ன்ஸுக்கு பாரிய நிம்மதியை அளித்துள்ளது. தீர்ப்புகளின் படி, எந்தவொரு ஆட்டநிர்ணய பங்கேற்புகளில் இருந்தும் கெய்ன்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின்போது பிரண்டன் மக்கு…
-
- 0 replies
- 704 views
-
-
தலையால் முட்டி தந்தை பெயரை காப்பாற்றிய தனயன்! கடந்த 2006-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. பெர்லின் நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணியுடன் இத்தாலி மோதிக் கொண்டிருந்தது. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து, 90 நிமிட நேர ஆட்டத்தை சமனில் முடித்தன. கூடுதல் நேரத்தில் 110வது நிமிடத்தில் நடந்த அந்த அதிர்ச்சி சம்பவம் உலகையே அதிர வைத்தது. பிரான்ஸ் அணியின் கேப்டன் ஜினடேன் ஜிடேனுக்கும், இத்தாலி மிட்பீல்டர் மார்கோ மெட்ரசிக்கும் ( தற்போது சென்னையின் எப்.சி அணியின் பயிற்சியாளர் ) மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில், ஜிடேனின் குடும்பத்தார் குறித்து மெட்ரசி ஏதோ கூறியதாகத்…
-
- 0 replies
- 893 views
-
-
தலைவராக அசத்துகிறார் மத்தியூஸ்- அரவிந்த டி சில்வா November 30, 2015 மத்தியூஸ் மூன்று வகையிலான கிரிக்கெட் தொடர்களையும் வழிநடத்த தகுதியானவர் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். தனது அறக்கட்டளை மூலம் இளம் வீரர்களை தேடும் பணியில் தீவிரமாக செயற்பட்டுவரும் சில்வா, தற்போது துபாயிலும் கிரிக்கெட் அக்கடமியை ஆரம்பித்திருக்கிறார். மத்தியூஸ் தொடர்பாக சில்வா தெரிவிக்கையில் – ‘மலிங்கவின் ஓய்வுக்கு பிறகு ரி-20 தலைவராகவும் மத்தியூஸ் செயல்பட வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன். அவர் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களாக இளம் வீரராக அனைத்தையும் அற்புதமாக கையாள்கிறார். அனுபவம் கைகொடுக்க மத்தியூஸ் இன்றும் சிறப்ப…
-
- 0 replies
- 794 views
-
-
முரளி முதலிடத்தில் November 30, 2015 டெஸ்ட் தொடர்களில் ஆதிக்கம் செலுத்திய வீரர்கள் பட்டியலை விஸ்டன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்களில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மன் முதலிடத்தில் இருக்கிறார். பந்துவீச்சில் முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். ஓய்வுபெறாதவர்கள் என்ற கோணத்தில் பார்க்கும் பொழுது துடுப்பாட்டத்தில் வில்லியர்ஸ் 3ஆவது இடம் பிடித்துள்ளார். அதேபோல் யுனிஸ்கான் 6ஆவது இடத்தில் உள்ளார். இந்திய, இலங்கை வீரர்களில் யாரும் இடம் பெறவில்லை. ஸ்ரெயின் ஒருவரே பந்துவீச்சுப் பட்டியலில் இடம்பெற்ற ஓய்வு பெறாத வீரர். இவர் 7ஆவது இடத்தில் உள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=4175&cat=2
-
- 1 reply
- 1.3k views
-
-
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை அறிவுரையாளர் பொறுப்பிலிருந்து கும்ளே விலகல் ஜனவரி 2013-லிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் பொறுப்பு வகித்தார் கும்ளே. | படம்: பிடிஐ. மும்பை இந்தியன்ஸ் ஐபிஅல் அணியின் தலைமை அறிவுரையாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்ளே விலகியுள்ளார். கிரிக்கெட்டில் மற்ற வாய்ப்புகளை எதிர்நோக்கி கும்ளே இந்த முடிவை எடுத்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. "டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிக விக்கெட்டுகள் சாதனைக்குரியவரான அனில் கும்ளேவுக்கு மும்பை இந்தியன்ஸ் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவர் அறிவுரையாளராக பொறுப்பேற்ற பிறகு மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும், சாம்பியன…
-
- 0 replies
- 558 views
-
-
படுமோசமான பேட்டிங்: ஷான் மார்ஷை கிளென் மெக்ராவுடன் ஒப்பிட்ட இயன் சாப்பல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென் ஷான் மார்ஷ். | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய இடது கை பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் டெஸ்ட் போட்டிகளில் கடுமையாக சொதப்பி வருவதையடுத்து அவரது பேட்டிங்கை கிளென் மெக்ராவுடனும், டேனி மாரிசனுடனும் ஒப்பிட்டார் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல். நடந்து முடிந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஷான் மார்ஷ் ரன் அவுட் ஆனார். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் கடுமையாகப் போராடி முக்கியப் பங்களிப்பாக 49 ரன்களைச் சேர்த்தார் ஷான் மார்ஷ். ஆனால், இதுவும் கூட இயன் சாப்பலை வசீகரிக்கவில்லை. அவர் அணியில் நீடிப்பது பற…
-
- 0 replies
- 673 views
-
-
டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் 2-வது இடம்; முதலிடத்தை இழந்த டிவில்லியர்ஸ் டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறிய அஸ்வின். | கோப்புப் படம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அருமையாக வீசி விக்கெட்டுகளை அள்ளி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆனால், பேட்டிங் தரவரிசையில் முதலிடம் வகித்த அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தை இழந்தார். முதலிடத்தை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். வெள்ளிக்கிழமையன்று தொடங்கும் 4-வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா…
-
- 0 replies
- 792 views
-