விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ஆரம்ப ஏலம் ரூ.40 கோடி: ஐபிஎல் அணியை வாங்குகிறார் தாேனி? புதுடெல்லி: டிசம்பர் 8ம் தேதி புதியதாக ஏலம் விடப்பட உள்ள ஐபிஎல் அணிகளில் ஒன்றை வாங்க இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை, ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த இரு அணிகளுக்கும் பதிலாக புதிய அணிகளை தேர்வு செய்ய ஐபிஎல் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது. புதிதாக சேர்க்கப்படும் 2 அணிகள் குறித்த விவரம் டிசம்பர் 8-ம் தேதி தெரிய வரும். ஏனெனில் அன்றைய தினம்தான் ப…
-
- 0 replies
- 305 views
-
-
மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் உபதலைவர்களில் ஒருவராக தமிழர் November 09, 2015 இலங்கை தேசிய மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் 2016-2017ஆம் ஆண்டுக்கான நிர்வாக சபையில் உப தலைவர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார் கே. விஜிதரன். நேற்றுச சனிக்கிழமை கொழும்பு விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிர்வாகத் தெரிவில் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான கே. விஜிதரன் உபதலைவர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார். இவர் சர்வதேச மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் தரம்1, தரம்2 பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளார். மற்றும் இலங்கை தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தில் டிப்ளோமா, உயர் டிப்ளோமா பயின்றுள்ளார். வவுனியா மாவட்ட மெய்வன்மை பயி…
-
- 0 replies
- 239 views
-
-
ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கம் சீனிவாசன் | கோப்புப் படம்: ஜோதி ராமலிங்கம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் நீக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவரைத் திருப்பி அழைத்தது. சீனிவாசனுக்குப் பதிலாக தற்போதைய பிசிசிஐ தலைவர் ஷஷாங் மனோகர் ஐசிசி தலைவர் ஆகிறார். மும்பையில் நடைபெற்ற 86-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் மீதான சீனிவாசனின் பிடி முடிவுக்கு வந்தது. கடந்த ஜூன் மாதம் ஐசிசி தலைவராக சீனிவாசன் பொறுப்பேற்றார். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. எனவே, மீதமுள்ள பதவிக்காலத்…
-
- 1 reply
- 621 views
-
-
உலகில் மிகவும் பிரபலமான துடுப்பு மட்டை November 09, 2015 கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமான துடுப்பு மட்டை எது தெரியுமா? நியூயோர்க்கில் நடைபெற்ற முதலாவது சகல நட்சத்திரங்களின் ஆட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நட்சத்திரங்களும் கையொப்பமிட்ட இந்த துடுப்புமட்டைதான். நியூயோர்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப் படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.onlineuthayan.com/sports/?p=3224&cat=2
-
- 1 reply
- 875 views
-
-
நிர்வாக மாற்றங்களுடன் பிசிசிஐ களங்கம் துடைப்பு நடவடிக்கை சீனிவாசன், ரோஜர் பின்னி மற்றும் ரவி சாஸ்திரி | கோப்புப் படங்கள் கடந்த ஐபிஎல் போட்டிகளில் நடந்த ஸ்பாட் பிக்சிங் உள்ளிட்ட ஊழல்களினால் பிசிசிஐ மீது படிந்த கறையை அகற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது 86-வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. முதல் நடவடிக்கையாக, ஐசிசி தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் நீக்கப்பட்டார். | அதன் விவரம் - ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கம் | மும்பையில் இன்று நடைபெற்ற 86-வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பிசிசிஐ மேலும் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. பிசிசிஐ-யின் முக்கிய பிரச்சினைய…
-
- 0 replies
- 192 views
-
-
ஒ.நா.ச போட்டிகளில் இவ்வருடத்தில் 101 சதங்கள் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இவ்வருடத்தில் மாத்திரம் 101 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இரண்டு சதங்கள் குவிக்கப்பட்ட நிலையிலேயே, 101 சதங்கள் என்ற மைல்கல் எட்டப்பட்டுள்ளது. பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில் முஷ்பிக்கூர் ரஹீம் பெற்ற சதமே 100ஆவது சதமாகவும், இலங்கைக்கெதிராக மார்லன் சாமுவேல்ஸ் பெற்ற சதம், 101ஆவது சதமாகவும் அமைந்திருந்தது. வருடமொன்றில் 100 சதங்கள் எட்டப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதோடு, இரண்டாமிடத்தில் காணப்படும் 2014ஆம் ஆண்டை விட, 22 சதங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதில், 2014ஆம் ஆண்டில் 121 ஒருநாள் சர்வதேசப் போட்டிக…
-
- 0 replies
- 205 views
-
-
கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த விஷபாம்பு ; அதிர்ச்சியில் ரஞ்சி வீரர்கள் கொல்கத்தாவில் மேற்கு வங்க மற்றும் விதர்பா அணிகளுக்கிடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜே.யு சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 2வது நாளான இன்று, விதர்பா அணி வீரர்கள் பீல்டிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பந்துவீச்சாளர் ஸ்வான்பில் பண்டிவார் பந்து வீசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிரே பாம்பு ஒன்று ஊர்ந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டது. வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். தொடர்ந்து மைதான பராமரிப்பாளர்கள் கம்பு கட்டையுடன் ஓடி வந்து பாம்பை அடிக்க முற்பட்டனர். ஆனால் அந்த பாம்பு அவர்களுக்…
-
- 2 replies
- 452 views
-
-
ரஞ்சி கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்து வாசிம் ஜாபர் சாதனை! ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை விதர்பா அணி வீரர் வாசிம் ஜாபர் பெற்றுள்ளார். கொல்கத்தாவில் மேற்கு வங்க - விதர்பா அணிகளுக்கிடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் மேற்கு வங்க அணி 334 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து விதர்பா அணி பேட் செய்யத் தொடங்கியது. இந்த போட்டியில் விதர்பா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வாசிம் ஜாபர் 7 ரன்கள் எடுத்த போது, ரஞ்சி டிராபியில் 10 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ரஞ்சி டிராபியை பொறுத்த வரை 126 போட்டிகளில் 196 இன்னிங்ஸ்களில் விளையாடி …
-
- 0 replies
- 202 views
-
-
யார்கிட்ட...செல்போனை திருடிய நபரை விரட்டி பிடித்த செரீனா ! உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள சீன உணவகம் ஒன்றில், தனது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டே உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது செரீனாவின் மேஜை அருகே வந்த நபர் ஒருவர், அவரது மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்போனை எடுத்து விட்டு சென்று விட்டார். சில வினாடிகள் கழித்து தனது மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்போனை காணாமல் போனதை கவனித்த செரீனா, அவரை பின்னாடியே விரட்டி சென்று செல்போனை திரும்ப கேட்டு வாங்கி விட்டார். அப்போது தெரியாமல் எடுத்து வந்துவிட்டீர்களா? என்றும் செரீனா அந்த நபரிடம் கேட்டா…
-
- 0 replies
- 190 views
-
-
பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆரம்பம் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. அபுதாபியில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ளது. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக சுழல்பந்துவீச்சாளர் யசிர் ஷா பாகிஸ்தான் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஐந்து வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள சொஹைப் மலிக் விளையாடுகிறார். காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீபன் ஃபின் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக இடதுகை சுழல்பந்துவீச்சாளர…
-
- 27 replies
- 2.5k views
-
-
அதிவேக 150 விக்கெட்: இந்திய அளவில் அஸ்வின் சாதனை! 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வினைப் பாராட்டும் இந்திய வீரர்கள். இடம்: மொஹாலி. | படம்: ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொஹாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் ஆனார் அஸ்வின். தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அஸ்வின் எல்கார், வான் ஸில், ஆம்லா, டேன் விலாஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தனது 29-வது டெஸ்ட் போட்டியில் 53-வது இன்னிங்ஸில் அஸ்வின் 150-வது விக்கெட்டைக் கை…
-
- 0 replies
- 216 views
-
-
அஜ்மல் மீது ஐ.சி.சி. நடவடிக்கை November 06, 2015 பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீரர் சயித் அஜ்மல், சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையை விரும்பத்தகாத வகையில் விமர்சித்தமையை அடுத்து, குறித்த விமர்சனத்துக்கு விளக்கம் தருமாறு ஐ.சி.சி. அஜ்மலை கேட்டுள்ளது. அஜ்மல் விளக்கம் கொடுத்த பின்னர் -அடுத்த 24 மணி நேரத்துக்குள் அவர்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் முறைகேடான பந்துவீச்சால் இவரது பந்துவீச்சுக்கு தடை விதிக்கப்பட்டது. ஐ.சி.சி. விதிமுறைப்படி 15 டிகிரி வரை முழங்கையை மடக்கலாம். ஆனால் அஜ்மல் வீசும் அனைத்துப் பந்துகளும் விதிமுறைகளை மீறும் வகையில் இருந்தன. 5 மாதங்களுக்கு பிறகு அவரது பந்துவீச்சுக்கு ஐ.சி.சி. அனுமதி அளித்தது. பந்துவீச்சு ம…
-
- 0 replies
- 332 views
-
-
ரி-20யில் சதம் விளாசினார் கெவின் பீற்றர்சன் November 06, 2015 தென்னாபிரிக்காவின் கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடரில் டொல்பின்ஸ் அணியைப் பிரதிநிதித்துவம் செய்து களமிறங்கிய கெவின் பீற்றர்சன் தனது அதிரடி சதத்தின் மூலம் அணியை நெருக்கடியில் இருந்து மீட்டது மட்டுமல்லாமல் தனது அணிக்கு வெற்றிதேடியும் கொடுத்துள்ளார். இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் கெவின் பீற்றர்சன். அணிக்கு பல்வேறு வெற்றிகளை பெற்றுத் தந்த இவருக்கு சில ஆண்டுகளாக, தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் ஐ.பி.எல், கரீபியன் லீக் போன்ற கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடரில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தென்னாபிரிக்காவில் கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பீற்றர…
-
- 0 replies
- 323 views
-
-
உலகக்கிண்ணம் வென்று நாடு திரும்பிய நியூ சீலாந்து ரக்பி அணிக்கான உன்னத 'ஹக்கா' வரவேற்பு http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-2816-உலகக்கிண்ணம்-வென்று-நாடு-திரும்பிய-நியூ-சீலாந்து-ரக்பி-அணிக்கான-உன்னத.html
-
- 3 replies
- 489 views
-
-
குழம்பிய டேவிட் பூண்: பந்துவீசிய சாமுவேல்ஸ் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவராகச் செயற்பட்ட மார்லன் சாமுவேல்ஸ், சர்வதேசக் கிரிக்கெட் சபையின் போட்டி மத்தியஸ்தரான டேவிட் பூணின் தவறால், பந்துவீச அனுமதிக்கப்பட்டார். இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பந்தை வீசியெறிகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சாமுவேல்ஸ், 14 நாட்களுக்குள் அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென்பதோடு, அவ்வாறு சோதிக்கப்பட்டால், அதன் முடிவுகள் வரும்வரை பந்துவீச அனுமதிக்கப்படுவார். ஆனால், குறித்த காலத்தை 21 நாட்கள் என டேவிட் பூண் அறிவிக்க, போட்டி ஆரம்பித்த பின்னரே சாமுவேல்ஸ் பந்துவீச அனுமதிக்கப்படமாட்டார் என அறிவிக்க…
-
- 0 replies
- 297 views
-
-
பந்தை எறிகிறார் ஹர்பஜன்: அஜ்மலின் குற்றச்சாட்டும் பின்னணிகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா பந்தை எறிவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல், பந்துவீச்சு முறையில் மாற்றங்களைக் கொண்டுவந்து, மீண்டும் அணியில் இடம்பிடிக்க முயற்சித்துவரும் நிலையில், திங்கட்கிழமை மாலை தெரிவித்த கருத்துக்கள், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பந்தை வீசியெறிவதாகவும், அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அஜ்மல், தான் இலக்கு வைக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு, அனுமதிக்கப்பட்ட 15 பாகை அளவை விட அதிகமாக ஹர்பஜன் சிங் அவரது முழங்கை ‘…
-
- 0 replies
- 223 views
-
-
ஆப்கான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரானார் இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். | கோப்புப் படம்: பிடிஐ. முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். முதலில் வரவிருக்கும் ஜிம்பாப்வே தொடருக்கு மட்டும் இன்சமாம் நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் ஆப்கான் கிரிக்கெட் சங்க தலைமைச் செயலதிகாரி ஷபிக் ஸ்டானிக்சாய் தெரிவிக்கும் போது, “இன்சமாம் ஒப்பந்தம் 2 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்” என்று கூறினார். கடந்த 3 ஆண்டுகளாக பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளராக இன்சமாம் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இன்று வரை அது குறித்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் எடுக்க…
-
- 4 replies
- 383 views
-
-
செய்தித்துளிகள் 2013ல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய முத்கல் குழு அறிக்கையில், ஐபிஎல் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் ராமன் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனினும் கடந்த இரண்டாண்டுகளாக சுந்தர் ராமன் பதவியில் நீடித்து வந்தார். இதற்கிடையே பிசிசிஐ தலைவராக சஷாங் மனோகர் சமீபத்தில் பொறுப்பேற்ற நிலையில் சுந்தர் ராமன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். ---------------------------- தோனியின் தலைமைத்துவ சாதனைகளை எட்டிப் பிடிக்க கோலி இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும். கோலி ஒரு அபாரமான பேட்ஸ்மேனாகத் திகழ்கிறார், கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் …
-
- 0 replies
- 192 views
-
-
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாவிட்டால் வாழ்க்கை முடிந்து விடாது: சானியா சர்ச்சை பேச்சு இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா இந்த ஆண்டில் இரட்டையர் பிரிவில் 9 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். முன்னாள் டென்னிஸ் வீரர் ரமேஷ் கிருஷ்ணன் சமீபத்தில் கருத்து தெரிவிக்கையில், கடந்த 1996ம் ஆண்டு நடந்த அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இப்போது ரியோ ஒலிம்பிக் போட்டியில் சானியாவுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் ஆடுவதால் இன்னொரு பதக்கம் பிரகாசமாகியுள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சானியா இததொடர்பான கேள்விக்கு பத…
-
- 0 replies
- 191 views
-
-
கோலியை நமக்குப் பிடிக்க இந்த 5 விஷயங்கள் தான் காரணமா? நவம்பர் 5... இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியின் 27வது பிறந்த நாள். கோலியை ஏன் நமக்குப் பிடிக்கும். இந்த 5 காரணங்களில் அதை அடக்கிவிடலாமா? 1) மிஸ்டர் ரன் மிஷின்! கோலி 2008-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற கையோடு இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்தார். 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அறிமுகமாகிய போட்டியில் ஆரம்பித்து இன்று வரை 10,641 ரன்களை குவித்து இந்தியாவின் சக்ஸஸ் ஃபுல் ரன்மெஷினாக உருவாகியுள்ளார். இந்திய அணிக்காக 34 சதங்களை அடித்து ரன் மெஷின் மட்டுமல்ல ரன் ராக்கெட்டாக திகழ்கிறார். 2) மிஸ்டர் ஸ்லெட்ஜிங்! முன்பெல்லாம் ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் பந்த…
-
- 0 replies
- 269 views
-
-
பிளாக்மெயில் வழக்கில் ரியல்மாட்ரிட் வீரர் கரிம் பென்ஜமா கைது! பிரான்ஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வந்தவர்கள் கரீம் பென்ஜமா மற்றும் மத்தீயோ வல்புனா. தற்போது பென்ஜமா, ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். பிரெஞ்சு லீக் அணியான லியோன் அணிக்காக வல்புனா விளையாடுகிறார். இதற்கு முன் கரீம் பென்ஜமாவும், லியோன் அணிக்காக விளையாடியுள்ளார். அப்போதிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள். இந்நிலையில், வல்புனா தொடர்புடைய 'செக்ஸ் டேப் ' ஒன்று கரீம் பென்ஜமாவிடம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனை வைத்து வல்புனாவை, கரீம் பென்ஜமாவும் மார்செலி அணிக்காக விளையாடிய சிஸ்சேவும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கேட்கும் தொகை தரப்படவில்லையென்றால், சம்பந்தப்பட்ட செக்ஸ் டேப்பை மீடியாக்களிடம் …
-
- 0 replies
- 343 views
-
-
கிரிக்கெட்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து சோயப் மாலிக் ஓய்வு இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போதுநடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும், 2019ம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காகவும் ஓய்வு பெறுவதாக சோயப் மாலிக் கூறினார். சோயப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்துள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1379059
-
- 2 replies
- 272 views
-
-
பீபா ஊழல்: 2006 உலகக் கிண்ண ஏலத்தில் தவறு ஏற்பு 2006ஆம் ஆண்டு ஜேர்மனியில் இடம்பெற்ற கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் ஏலத்தில் தவறுகள் காணப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, அந்த உலகக் கிண்ணத்தின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் ஜேர்மனிக்காக உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்த தலைவருமான பிரான்ஸ் பெக்கென்பவர் தெரிவித்துள்ளார். எனினும், வாக்குகளை விலைகொடுத்து வாங்கியமை குறித்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். சஞ்சிகையொன்று வெளிப்படுத்திய குற்றச்சாட்டின்படி, 6.7 மில்லியன் யூரோக்களைச் செலுத்தி, ஜேர்மனுக்கான வாக்குகள் விலைகொடுத்து வாங்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், பிரான்ஸின் கருத்தின்படி, நிதியியல் மானியமொன்றுக்காக, பீபாவுக்குப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்…
-
- 2 replies
- 254 views
-
-
ஐரோப்பிய கிண்ண காற்பந்தாட்ட தெரிவுகாண் தொடர்-முதல் சுற்று ஐரோப்பிய கிண்ண காற்பந்தாட்ட தொடரின் தெரிவுகாண் போட்டிகளின் முதற்கட்டம் நிறைவடைந்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரின் முதற்கட்டப் போட்டிகள் கடந்த 14 ஆம் திகதி நிறைவுக்கு வந்தன. இதன் இரண்டாம் கட்டப்போட்டிகள் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளன. இறுதித் தொடர் அடுத்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பித்து ஜூலை 10 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. உலகக்கிண்ண தொடருக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய அணிகள் மிகப்பெரிய சர்வதேசத்தொடராக ஐரோப்பிய கிண்ண தொடரையே கருதுகின்றனர். உலகக்கிண்ண தொடருக்கும் இந்த தொடர் நல்லதொரு முன்னோடி தொடராக ஐரோப்பிய அணிகளுக்கு அமைந்துவிடுவதும் வழமை. …
-
- 0 replies
- 285 views
-
-
விராட் கோலி செய்கையால் நெகிழ்ந்து போன மொகாலி பிட்ச் பராமரிப்பாளர்! இந்தியா தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி 5ஆம் தேதி மொகாலி நகரில் தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் தற்போது மொகாலி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியும், நேற்று மொகாலி பிட்சை பார்வையிட்டார். மொகாலி மைதானத்திற்குள் வந்த விராட் கோலி, முதல் வேலையாக அந்த மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் 73 வயது தல்ஜித் சிங்கின் பாதங்களை தொட்டு வணங்கினார். கடந்த 20 வருடங்களாக தல்ஜித் சிங் இந்த பிட்ச்சின் பராமரிப்பாளராக இருந்து வருகிறார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அவரது காலை தொட்டு வணங்கியது. தல்ஜித் சிங்கை மிகுந்த உணர்ச்சிவசப்பட வைத்தது. வி…
-
- 1 reply
- 192 views
-