Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பிரபல நடிகையை மணக்கும் யுவராஜ்? ரெய்னா, ஹர்பஜன் சிங்கை அடுத்து யுவராஜ் சிங்கும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 33 வயதான யுவராஜ் சிங், இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட நடிகை மற்றும் மாடல் அழகி ஹேஷல் கீச்சை வரும் பெப்ரவரி மாதம் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே யுவராஜும் ஹேசல் கீச்சும் நெருக்கமாக பழகி வந்தனர். சமீபத்தில் நடைபெற்ற ஹர்பஜன் சிங் வரவேற்பில் யுவராஜ்-ஹேசல் கீச் ஜோடியாக வந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=74134

  2. இந்தியாவில் விளையாடலாம்; ஆனால், வருவாய் யாருக்கு?- அப்ரீடி கேள்வி ஷாகித் அப்ரீடி. | கோப்புப் படம். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை இந்தியாவில் நடத்தலாம் என்று பிசிசிஐ விருப்பம் தெரிவித்ததாக எழுந்த ஊடகச் செய்திகளை அடுத்து பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரீடி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திலோ அல்லது பாகிஸ்தானிலோ விளையாடும் சாத்தியமில்லை என்று பிசிசிஐ நேற்று தெளிவாகக் கூறியிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் விளையாடினால் 50-50 வருவாய் பகிர்வுக்கான உத்தரவாதம் இருந்தால் விளையாடலாம் என்று அப்ரீடி கருத்து தெரிவித்துள்ளார். ஜியோ சூப்பர் சானலில் அவர் கூறியதாவது: இந்தியாவுக்குச் செ…

  3. அறிவிக்கப்பட்டது இலங்கை அணி October 24, 2015 மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் மூன்று அறிமுக வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர் செகான் ஜெயசூரிய, சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வண் டர்சே மற்றும் சகலதுறை வீரர் தனு­க குணதிலக ஆகியோரே அறிமுக வீரர்களாக களமிறங்க உள்ளனர். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நவம்பர் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகிறது. மூன்று அறிமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளமை மாத்திரம் இன்றி மலிங்க. டில்சான் ஆகிய அனுபவ வீரர்களும் அணிக்கு திரும்புகின்றனர். டெஸ்ட் தொடரில் தடுமா…

  4. ஓய்வுபெறுவது குறித்துச் சிந்திக்கிறேன்: ஜோன்சன் கிரிக்கெட் வாழ்வில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஜோன்சன், ஒவ்வொரு போட்டியுமே தனது இறுதி டெஸ்ட் போட்டியாக அமையுமென்ற எண்ணம் காணப்படுவதாக ஒத்துக் கொண்டுள்ளார். 34 வயதான மிற்சல் ஜோன்சன், இங்கிலாந்தில் இடம்பெற்ற ஆஷஸ் தொடருடன் ஓய்வுபெறுவது பற்றிச் சிந்தித்திருந்ததை ஏற்றுக் கொண்டிருந்தார். குறிப்பாக, மைக்கல் கிளார்க், பிரட் ஹடின், ஷேன் வொற்சன், றயன் ஹரிஸ், கிறிஸ் றொஜர்ஸ் ஆகியோர் ஓய்வுபெற்ற நிலையில், அந்த எண்ணம் அதிகரித்ததாகத் தெரிவித்திருந்தார். எனினும், தொடர்ந்தும் விளையாடிவரும் ஜோன்சன், நியூசிலாந்துக்கெதிராக பிறிஸ்பேணில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி…

  5. மீண்டும் பில் சிமன்ஸ் முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான மேற்கிந்திய தீவுகளின் குழாம் தேர்வு செய்யப்பட்டிருந்தமை குறித்து, தனது மகிழ்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்தியதன் காரணமாக, மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பில் சிமன்ஸ், மீண்டும் மேற்கிந்திய தீவுகளின் பயிற்சியாளராக மேற்கிந்திய கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் பில் சிமோன்ஸ் பொது வெளியில் தெரிவித்த முறையற்ற கருத்துகளுக்கு, அவருக்கு வழங்கப்பட எச்சரிக்கையுடன் கூடிய கடிதம், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையிடமும் அவரால் குற்றஞ்சாசாட்டப்பட்டவர்கள் என நம்பப்படுபவர்க…

  6. ஒருநாள் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றார் யூனிஸ் கான் இங்கிலாந்துக்கு எதிராக புதன் அன்று நடைபெறும் ஒருநாள் போட்டியே கடைசி போட்டி. யூனிஸ் கான் ஓய்வு. | படம்: ஏ.பி. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் அறிவித்துள்ளார். இன்று (புதன்) அபுதாபியில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியே தனது கடைசி ஒருநாள் போட்டி என்று பாகிஸ்தான் மூத்த வீரர் யூனிஸ் கான் அறிவித்துள்ளார். இந்த பகலிரவுப் போட்டியில் விளையாடுவதோடு தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்வை முடித்துக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். “டி20 மற்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை விளையாடும்போதே எ…

  7. பந்துகள் அதிவேகத்துடன் எகிறும் பிட்ச்: பெர்த்தில் தயாரிப்பு பெர்த் மைதானம். | படம்: கெட்டி உலகின் அதிவேக பிட்ச் என்று கருதப்படும் பெர்த் இடையில் சில காலங்கள் அதன் மரபான வேகத்தையும், எகிறு பந்தையும் இழந்திருந்தது. ஆனால் தற்போது நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கு பழைய அதிவேக பிட்ச் பெர்த்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடைசியாக பெர்த்தில் நடைபெற்ற 8 டெஸ்ட் போட்டிகளிலும் முடிவு தெரிந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் வென்றுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நியூஸிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டிக்காக பழைய அதிவேக பெர்த் பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மைதானத்தின் பிட்…

  8. பங்களாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டி 16 ஒப்பந்த வீரர்களுக்கு அனுமதி இல்லை? பங்­க­ளாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்கு மத்­திய ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டுள்ள 16 இலங்கை வீரர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­ப­டலாம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் அறி­வித்­துள்­ளது. மாறாக இங்கு நடை­பெ­ற­வுள்ள ப்றீமியர் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் போட்­டி­களில் விளை­யா­டு­மாறு குறிப்­பிட்ட வீரர்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்­கப்­படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்­பாட்டு அதி­காரி கார்ல்டன் பேர்­னாடஸ் குறிப்­பிட்­டுள்ளார். பங்­க­ளாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மாகும் அதே …

  9. நெய்மர், சுவாரஸின் ஆட்டத்தால் வில்லாரியலை வீழ்த்தியது பார்சிலோனா பார்சிலோனா அணியில் கடந்த சில வாரங்களாக லயனல் மெஸ்ஸி காயம் காரணமாக விளையாடாமல் உள்ளார். ஆனால், அவர் இல்லாத குறையை நெய்மர் மற்றும் சுவாரஸ் ஆகியோர் சிறப்பான முறையில் சரிசெய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-ஆவது பாதி நேரத்தில் 60-ஆவது நிமிடத்தில் நெய்மர் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 10ஆ-வது நிமிடத்தில் சுவாரஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார். 85ஆ-வது நிமிடத்தில் நெய்மர் மேலும் ஒரு கோல் அடிக்க, பார்சிலோனா …

  10. ரஹானேவுக்கு ரூ.1 கோடி சம்பளம்: ரெய்னா, புவனேஷ்வர் குமாருக்கு பாதியாக குறைந்தது அஜிங்க்ய ரஹானே இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஒவ்வொரு ஆண்டும் வீரர்களை அவர்களின் தகுதி நிலைக்கு ஏற்ப 3 பிரிவுகளாக ஒப்பந்தம் செய்யும். இதன்படி 2015-2016ம் ஆண்டுக்காக வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி அஜிங்க்ய ரஹானே ஏ பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். ரஹானே தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணி ஜிம்பாப்வே தொடரை வென்றிருந்தது. மேலும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இதே பிரிவில் தோனி…

  11. ஆரம்ப ஏலம் ரூ.40 கோடி: ஐபிஎல் அணியை வாங்குகிறார் தாேனி? புதுடெல்லி: டிசம்பர் 8ம் தேதி புதியதாக ஏலம் விடப்பட உள்ள ஐபிஎல் அணிகளில் ஒன்றை வாங்க இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை, ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த இரு அணிகளுக்கும் பதிலாக புதிய அணிகளை தேர்வு செய்ய ஐபிஎல் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது. புதிதாக சேர்க்கப்படும் 2 அணிகள் குறித்த விவரம் டிசம்பர் 8-ம் தேதி தெரிய வரும். ஏனெனில் அன்றைய தினம்தான் ப…

  12. மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் உபதலைவர்களில் ஒருவராக தமிழர் November 09, 2015 இலங்கை தேசிய மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் 2016-2017ஆம் ஆண்டுக்கான நிர்வாக சபையில் உப தலைவர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார் கே. விஜிதரன். நேற்றுச சனிக்கிழமை கொழும்பு விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிர்வாகத் தெரிவில் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான கே. விஜிதரன் உபதலைவர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார். இவர் சர்வதேச மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் தரம்1, தரம்2 பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளார். மற்றும் இலங்கை தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தில் டிப்ளோமா, உயர் டிப்ளோமா பயின்றுள்ளார். வவுனியா மாவட்ட மெய்வன்மை பயி…

  13. ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கம் சீனிவாசன் | கோப்புப் படம்: ஜோதி ராமலிங்கம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் நீக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவரைத் திருப்பி அழைத்தது. சீனிவாசனுக்குப் பதிலாக தற்போதைய பிசிசிஐ தலைவர் ஷஷாங் மனோகர் ஐசிசி தலைவர் ஆகிறார். மும்பையில் நடைபெற்ற 86-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் மீதான சீனிவாசனின் பிடி முடிவுக்கு வந்தது. கடந்த ஜூன் மாதம் ஐசிசி தலைவராக சீனிவாசன் பொறுப்பேற்றார். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. எனவே, மீதமுள்ள பதவிக்காலத்…

    • 1 reply
    • 628 views
  14. உலகில் மிகவும் பிரபலமான துடுப்பு மட்டை November 09, 2015 கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமான துடுப்பு மட்டை எது தெரியுமா? நியூயோர்க்கில் நடைபெற்ற முதலாவது சகல நட்சத்திரங்களின் ஆட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நட்சத்திரங்களும் கையொப்பமிட்ட இந்த துடுப்புமட்டைதான். நியூயோர்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப் படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.onlineuthayan.com/sports/?p=3224&cat=2

    • 1 reply
    • 881 views
  15. நிர்வாக மாற்றங்களுடன் பிசிசிஐ களங்கம் துடைப்பு நடவடிக்கை சீனிவாசன், ரோஜர் பின்னி மற்றும் ரவி சாஸ்திரி | கோப்புப் படங்கள் கடந்த ஐபிஎல் போட்டிகளில் நடந்த ஸ்பாட் பிக்சிங் உள்ளிட்ட ஊழல்களினால் பிசிசிஐ மீது படிந்த கறையை அகற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது 86-வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. முதல் நடவடிக்கையாக, ஐசிசி தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் நீக்கப்பட்டார். | அதன் விவரம் - ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கம் | மும்பையில் இன்று நடைபெற்ற 86-வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பிசிசிஐ மேலும் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. பிசிசிஐ-யின் முக்கிய பிரச்சினைய…

  16. ஒ.நா.ச போட்டிகளில் இவ்வருடத்தில் 101 சதங்கள் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இவ்வருடத்தில் மாத்திரம் 101 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இரண்டு சதங்கள் குவிக்கப்பட்ட நிலையிலேயே, 101 சதங்கள் என்ற மைல்கல் எட்டப்பட்டுள்ளது. பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில் முஷ்பிக்கூர் ரஹீம் பெற்ற சதமே 100ஆவது சதமாகவும், இலங்கைக்கெதிராக மார்லன் சாமுவேல்ஸ் பெற்ற சதம், 101ஆவது சதமாகவும் அமைந்திருந்தது. வருடமொன்றில் 100 சதங்கள் எட்டப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதோடு, இரண்டாமிடத்தில் காணப்படும் 2014ஆம் ஆண்டை விட, 22 சதங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதில், 2014ஆம் ஆண்டில் 121 ஒருநாள் சர்வதேசப் போட்டிக…

  17. கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த விஷபாம்பு ; அதிர்ச்சியில் ரஞ்சி வீரர்கள் கொல்கத்தாவில் மேற்கு வங்க மற்றும் விதர்பா அணிகளுக்கிடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜே.யு சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 2வது நாளான இன்று, விதர்பா அணி வீரர்கள் பீல்டிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பந்துவீச்சாளர் ஸ்வான்பில் பண்டிவார் பந்து வீசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிரே பாம்பு ஒன்று ஊர்ந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டது. வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். தொடர்ந்து மைதான பராமரிப்பாளர்கள் கம்பு கட்டையுடன் ஓடி வந்து பாம்பை அடிக்க முற்பட்டனர். ஆனால் அந்த பாம்பு அவர்களுக்…

  18. ரஞ்சி கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்து வாசிம் ஜாபர் சாதனை! ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை விதர்பா அணி வீரர் வாசிம் ஜாபர் பெற்றுள்ளார். கொல்கத்தாவில் மேற்கு வங்க - விதர்பா அணிகளுக்கிடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் மேற்கு வங்க அணி 334 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து விதர்பா அணி பேட் செய்யத் தொடங்கியது. இந்த போட்டியில் விதர்பா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வாசிம் ஜாபர் 7 ரன்கள் எடுத்த போது, ரஞ்சி டிராபியில் 10 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ரஞ்சி டிராபியை பொறுத்த வரை 126 போட்டிகளில் 196 இன்னிங்ஸ்களில் விளையாடி …

  19. யார்கிட்ட...செல்போனை திருடிய நபரை விரட்டி பிடித்த செரீனா ! உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள சீன உணவகம் ஒன்றில், தனது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டே உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது செரீனாவின் மேஜை அருகே வந்த நபர் ஒருவர், அவரது மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்போனை எடுத்து விட்டு சென்று விட்டார். சில வினாடிகள் கழித்து தனது மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்போனை காணாமல் போனதை கவனித்த செரீனா, அவரை பின்னாடியே விரட்டி சென்று செல்போனை திரும்ப கேட்டு வாங்கி விட்டார். அப்போது தெரியாமல் எடுத்து வந்துவிட்டீர்களா? என்றும் செரீனா அந்த நபரிடம் கேட்டா…

  20. பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆரம்பம் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. அபுதாபியில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ளது. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக சுழல்பந்துவீச்சாளர் யசிர் ஷா பாகிஸ்தான் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஐந்து வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள சொஹைப் மலிக் விளையாடுகிறார். காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீபன் ஃபின் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக இடதுகை சுழல்பந்துவீச்சாளர…

  21. அதிவேக 150 விக்கெட்: இந்திய அளவில் அஸ்வின் சாதனை! 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வினைப் பாராட்டும் இந்திய வீரர்கள். இடம்: மொஹாலி. | படம்: ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொஹாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் ஆனார் அஸ்வின். தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அஸ்வின் எல்கார், வான் ஸில், ஆம்லா, டேன் விலாஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தனது 29-வது டெஸ்ட் போட்டியில் 53-வது இன்னிங்ஸில் அஸ்வின் 150-வது விக்கெட்டைக் கை…

  22. அஜ்மல் மீது ஐ.சி.சி. நடவடிக்கை November 06, 2015 பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீரர் சயித் அஜ்மல், சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையை விரும்பத்தகாத வகையில் விமர்சித்தமையை அடுத்து, குறித்த விமர்சனத்துக்கு விளக்கம் தருமாறு ஐ.சி.சி. அஜ்மலை கேட்டுள்ளது. அஜ்மல் விளக்கம் கொடுத்த பின்னர் -அடுத்த 24 மணி நேரத்துக்குள் அவர்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் முறைகேடான பந்துவீச்சால் இவரது பந்துவீச்சுக்கு தடை விதிக்கப்பட்டது. ஐ.சி.சி. விதிமுறைப்படி 15 டிகிரி வரை முழங்கையை மடக்கலாம். ஆனால் அஜ்மல் வீசும் அனைத்துப் பந்துகளும் விதிமுறைகளை மீறும் வகையில் இருந்தன. 5 மாதங்களுக்கு பிறகு அவரது பந்துவீச்சுக்கு ஐ.சி.சி. அனுமதி அளித்தது. பந்துவீச்சு ம…

  23. ரி-20யில் சதம் விளாசினார் கெவின் பீற்றர்சன் November 06, 2015 தென்னாபிரிக்காவின் கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடரில் டொல்பின்ஸ் அணியைப் பிரதிநிதித்துவம் செய்து களமிறங்கிய கெவின் பீற்றர்சன் தனது அதிரடி சதத்தின் மூலம் அணியை நெருக்கடியில் இருந்து மீட்டது மட்டுமல்லாமல் தனது அணிக்கு வெற்றிதேடியும் கொடுத்துள்ளார். இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் கெவின் பீற்றர்சன். அணிக்கு பல்வேறு வெற்றிகளை பெற்றுத் தந்த இவருக்கு சில ஆண்டுகளாக, தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் ஐ.பி.எல், கரீபியன் லீக் போன்ற கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடரில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தென்னாபிரிக்காவில் கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பீற்றர…

  24. உலகக்கிண்ணம் வென்று நாடு திரும்பிய நியூ சீலாந்து ரக்பி அணிக்கான உன்னத 'ஹக்கா' வரவேற்பு http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-2816-உலகக்கிண்ணம்-வென்று-நாடு-திரும்பிய-நியூ-சீலாந்து-ரக்பி-அணிக்கான-உன்னத.html

  25. குழம்பிய டேவிட் பூண்: பந்துவீசிய சாமுவேல்ஸ் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவராகச் செயற்பட்ட மார்லன் சாமுவேல்ஸ், சர்வதேசக் கிரிக்கெட் சபையின் போட்டி மத்தியஸ்தரான டேவிட் பூணின் தவறால், பந்துவீச அனுமதிக்கப்பட்டார். இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பந்தை வீசியெறிகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சாமுவேல்ஸ், 14 நாட்களுக்குள் அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென்பதோடு, அவ்வாறு சோதிக்கப்பட்டால், அதன் முடிவுகள் வரும்வரை பந்துவீச அனுமதிக்கப்படுவார். ஆனால், குறித்த காலத்தை 21 நாட்கள் என டேவிட் பூண் அறிவிக்க, போட்டி ஆரம்பித்த பின்னரே சாமுவேல்ஸ் பந்துவீச அனுமதிக்கப்படமாட்டார் என அறிவிக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.