விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
யாழில் கரம் சுற்றுப்போட்டி யாழ். மாவட்ட கழகங்களுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான கரம் சுற்றுப்போட்டி நாளையும் நாளைமறுதினமும் யாழ். பல்கலைக்கழக உடற்கல்வி அலகில் இடம்பெறவுள்ளது. இச் சுற்றுப்போட்டியை யாழ். பல்கலைக்கழக விளையாட்டு அவையும் உடற்கல்வி அலகும் இணைந்து நடத்தவுள்ளன. இப்போட்டிக்கு ஹரிகரன் பிறின்டேர்ஸ் அனுசரணை வழங்குகின்றனர். முதல்நாள் போட்டிகள் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும். இச் சுற்றுப்போட்டிக்கு பிரதம விருந்தினராக மானிப்பாய் வலி தென்மேற்குப் பிரதேச சபை செயலாளரும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் கரம் பெண்கள் அணியின் தலைவியுமாகிய திருமதி. ஜெயந்தா சோமராஜ் கலந்து சிறப்பி…
-
- 1 reply
- 1k views
-
-
அலெக்சிஸ் சாஞ்செஸ் மாயஜாலம் : ஆர்சனலிடம் மான்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி ( வீடியோ) இங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரில் நேற்று பலத்த எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை தோற்கடித்தது. லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆர்சனல் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் மெசூத் ஓசில் கொடுத்த பாசை மிக அழகாக வளைக்குள் தள்ளி ஆர்சனல் அணிக்கு முன்னிலை தேடி கொடுத்தார் அலெக்சிஸ் சாஞ்செஸ். அடுத்த நிமிடம் தியாகோ வால்காட் கொடுத்த கிராசை மிக நேர்த்தியாக கோலுக்குள் அடித்தார் ஓசில். ஆட்டம் தொடங்கிய 7 நிமிடங்களுக்குள் ஆர்சனல் அணி 2 கோல்கள் முன்னிலை பெற்றது. பின…
-
- 0 replies
- 386 views
-
-
யாழ். இந்துவிடம் வீழ்ந்தது கொக்குவில் இந்து யாழ். மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கத்தால் 19வயதுக்குட்டபட்ட அணிகளுக்கிடையே நடத்தப்பட்டு வரும் ரி-20 தொடரில் கொக்குவில் இந்துக்கல்லூரியை 6 இலக்குகளால் வீழ்த்தியது யாழ். இந்துக்கல்லூரி. நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்துக் கல்லூரி 20 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது. அதிக பட்சமாக தனுசன் 36 ஓட்டங்களையும், கீர்தனன் 19 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் யாழ். இந்துக் கல்லூரி அணி சார்பில் எஸ்.துவாரகன், சந்துரு இருவரும் தலா 2 இலக்குகளையும் எம்.துவாரகன், சிவலக்சன், பிரகலாதன் மூவரும் தல…
-
- 0 replies
- 349 views
-
-
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் சைக்கிள் ஓட்டப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி வீராங்கனை வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான 36 கிலோ மீற்றர் தூர சைக்களிள் ஓட்டப்போட்டியில் நிர்மலேஸ்வரன் விதுசனா கலந்து கொண்டு தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=141633&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 225 views
-
-
பிசிசிஐ தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வு சஷாங்க் மனோகர் | படம்: ஏபி பிசிசிஐ என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சஷாங்க் மனோகர் ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிசிசிஐ தலைவராக அவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளது இது இரண்டாவது முறையாகும். மும்பையில் இன்று நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரை மணிநேரத்துக்கும் குறைவாக நடந்த இந்த சிறப்பு பொதுக்குழுவில் சஷாங்க் மனோகர், பிசிசிஐ தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். டால்மியாவின் மகன் அவிஷேக், மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி, திரிபுரா கிரிக்கெட் சங்கத்தின் சவுரவ் தாஸ் குப்தா, அசாம் கிரிக்கெட் சங்கத்தின் கவுதம் ராய், ஒட…
-
- 0 replies
- 310 views
-
-
மஹேலவைப் போற்றும் இங்கிலாந்து பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்குமிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்துக் குழாம், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சென்றுள்ள நிலையில், அவ்வணியின் வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், இத்தொடருக்கான இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக, இலங்கையின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன செயலாற்றுகிறார். 'ஜெயவர்தன மிகவும் சிறப்பானவர். இலகுவாக அணுகக்கூடியவர். அவருக்கெதிராக விளையாடிய அதிர்ஷ்டத்தையும் கொண்டிருக்கிறேன், ஆகவே என்னைப் பற்றி அவருக்குச் சிறிது தெரிந்திருந்தது. அவரது அனுபவம் மிகவும் பெறுமதியானது. எல்லா வீரர்களும் அவருடன் இணைந்து நிறை நேரத்தைச் செலவிடுகின்றனர்" என, இங்கிலாந்து அணியின் இளம் துடுப்பாட்ட…
-
- 0 replies
- 466 views
-
-
கால்பந்து சண்டைகள் : லிவர்பூல் - எவர்ட்டன் மோதல் (வீடியோ) இங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரில் இன்று ஆக்ரோஷமன மோதல்கள் நடைபெறுகின்றன. மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் 'மெர்சி சைட் டெர்பி' என்று அழைக்கப்படும் லிவர்பூல்- எவர்ட்டன் அணிகள் களம் காண்கின்றன. இரவு 8.30 மணிக்கு இதே லீக்கில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி ஆர்சனல் அணியை எதிர்கொள்கிறது. ஜெர்மன் பந்தஸ்லீகாவில் பலம் வாய்ந்த பேயர்ன்மியூனிச் அணியுடன் போர்சியா டோர்ட்மண்ட் அணி மோதுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பானீஷ் லீக்கின் வலிமை வாய்ந்த ரியல்மாட்ரிட் - அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதுகின்றன. இத்தாலி சீரி 'ஏ' தொடரில் 12.15 மணிக்கு ஏ.சி.மிலனுடன் நேபோலி அணி…
-
- 0 replies
- 453 views
-
-
ஓய்வு பற்றி மனம் திறக்கும் மிஸ்பா உல் ஹக் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று டெஸ்ட், நான்கு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வரும் 13-ம் திகதி தொடங்குகிறது. இந்தத் தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு, 41 வயதான மிஸ்பா உல் ஹக் தலைவராக இருந்து வருகிறார். இவர் இந்தியாவுடன் ஒரு தொடர் விளையாடிய பிறகு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால், இநதியாவுடன் போட்டிகள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கும் தன்னுடைய தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடிய பின் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்ப…
-
- 0 replies
- 379 views
-
-
முரளி கிண்ணத் தொடர் புதனன்று ஆரம்பம் ; 24 அணிகள் பங்கேற்பு 2015ஆம் ஆண்டுக்கான முரளி ஹார்மனி கிண்ணத் தொடர் எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பிக்கிறது. 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடர், தொடர்ந்து 4ஆவது முறையாக நடைபெறும் முரளி ஹார்மனி கிண்ணத் தொடரில் மொத்தம் 16 ஆண்கள் அணிகளும், 8 பெண்கள் அணிகளும் பங்குபற்றுகின்றன. இந்தப் போட்டிகள் அனைத்தும் வடக்குப் பகுதியிலுள்ள மைதானங்களில் நடைபெறுகின்றமை விசேட அம்சமாகும். யாழ்ப்பாணம், ஒட்டுச்சுட்டான், மாங்குளம், கிளிநொச்சி ஆகிய பிரதேச மைதானங்களில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் குழு 'ஏ' இல் யாழ். கல்லூரி கூட்டு அணி, டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, மலியதேவ கல்லூரி, மொனராகலை ஆகிய அணிகள…
-
- 1 reply
- 270 views
-
-
டேல் ஸ்டெயினின் 'பேபிஸ் டே அவுட்'! (வீடியோ) தென்ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினிடம், ஒரு குழந்தையை கொடுத்து 24 மணி நேரம் பார்த்துக்க சொன்னால் என்ன செய்வார்? இதற்காக நியூ பேலன்ஸ் தென்ஆப்ரிக்கா என்ற காலணி நிறுவனம் ஒரு ஏற்பாடு செய்தது. டேல் ஸ்டெயினை ஒன்றரை வயது குழந்தையுடன் ஒருநாள் பொழுதை கழிக்க வைத்தது. ஆனால் அந்த குழந்தையை டேல் ஸ்டெயினால் சரிவர கவனிக்க முடியவில்லை. குழந்தையுடன் ஸ்டெயின் போராடும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. http://www.vikatan.com/news/article.php?aid=53208
-
- 0 replies
- 218 views
-
-
முன்னதாக ஆரம்பிக்கும் போர்மியுலா வன் 2016 பருவகாலம் ஏற்கனவே திட்டமிடப்பட்டது போன்று இல்லாமல், அடுத்த 2016ஆம் ஆண்டு பருவகாலம் இரண்டு வாரங்கள் முன்பதாக அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. மெல்போர்ன் ஓட்டப்பந்தயம் முன்னர் எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி ஆரம்பிப்பதாய் இருந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், எதிர்வரும் வருடமே முன்னதாய் ஆரம்பிக்கவுள்ளது. எனினும் ஒரு வருட காலத்தில் சாதனை ரீதியாக 21 பந்தயங்களை நடாத்தும் பொருட்டு, நெருக்கடியான அட்டவணையைத் தயாரித்ததாக அணிகள் முறைப்பாடு செய்ததையடுத்தே, பருவகாலத்தின் ஆரம்பம் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து பஹ்ரெயின், சீனா, ரஷ்யாவில் இரு வார இடைவெளிகளில் பந்தயங்கள் இ…
-
- 0 replies
- 217 views
-
-
சென்றல் டிஸ்றிக்கில் ஜெயவர்த்தன Commentsநியூசிலாந்தின் உள்ளூர் இருபது-20 போட்டித்தொடரான ஜோர்ஜி பை சுப்பர் ஸ்மாஷில் இலங்கையணியில் இருந்து ஓய்வுபெற்றுள்ள முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்த்தன சென்றல் டிஸ்றிக்ஸ் அணிக்காக பங்கேற்கவுள்ளார். http://tamil.wisdensrilanka.lk/article/2061
-
- 0 replies
- 329 views
-
-
மட்டையிலும் பந்திலும் மனிதத்தை இழக்கக்கூடாது -கப்டன் கூல் அட்வைஸ் October 03, 2015 ஆக்ரோசமாக விளையாடலாம். ஆனால், அந்த ஆக்ரோசம் தவறான நடத்தைக்குக் கொண்டு சென்று விடக்கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார் டோனி. இந்திய டெஸ்ட் அணித்தலைவர் கோக்லி, இயக்குநர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் வீரர்கள் எனப்பலரும் ஆக்ரோசம் தொடர்பாக எதிர்மாறான கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், தென்னாபிரிக்காவுக்கு எதிரான ரி-20 தொடர் ஆரம்ப மாகும் முன்னதாக ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து டோனி ஆக்ரோசம் தொடர்பாக தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். டோனி மேலும் தெரிவித்ததாவது – ஆக்ரோசம் என்பதற்கு சூடான வார்த்தைகளை பரிமாறிக் கொள்வதும், உடலளவில் இடித்துத்தள்ளுவதும் என்று அர்த்தம் கிடையாது. மிகச் சிறந்த வ…
-
- 0 replies
- 431 views
-
-
செய்தித் துளிகள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் எனது கடைசி கிரிக்கெட் தொடராக இருக்கலாம். எனினும் ஓய்வு பெறுவது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். ------------------------------------------- முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யின் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதி ரான தொடருக்காக அவர் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட் டிருக்கிறார். ------------------------------------------- ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விதர்பா அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், ஒடிசா அணிக்கு எதிராக 128 ரன்கள் குவித்தார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட…
-
- 0 replies
- 317 views
-
-
இந்தியா, தென் ஆபிரிக்க தொடர் முன்னோட்டம் இந்தியா, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கவுள்ளது. பலமான இரண்டு அணிகள் மோதும் தொடர் என்பதினால் இந்த தொடர் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. 3 டுவென்டி டுவென்டி போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர் இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ளது. சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு நல்ல பலப் பரீட்சைக்கான தொடராக இது அமையவுள்ளது. இந்தியா அணி நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது சொந்த நாட்டில் தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களின் பின்னர் சொந்த நாட்டில் இந்த தொடர் ஆரம்பிக்கவுள்ளது. சொந்த நாட்டில் புலிகளாகவும், வெளிநாடுகளில் எலிகலாகவும் திகழும் இந்திய அணிக்கு க…
-
- 0 replies
- 416 views
-
-
இன்று இரவு 7 மணிக்கு கேப்டன் தோனி...! இந்திய அணியின் கேப்டன் தோனி 50 டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையை இன்று பெறப் போகிறார். உலகிலேயே இத்தகையை சாதனையை எட்டும் முதல் கேப்டன் தோனிதான். தென்ஆப்ரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹிமாச்சல்பிரதேசத்தில் உள்ள எழில்கொஞ்சும் தரம்சாலாவில் இன்று இந்த இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய அணியின் கேப்டன் தோனியின் 50வது டி20 போட்டி ஆகும். இந்த பட்டியலில் அயர்லாந்தின் வில்லியம் போர்டர்பீல்ட் 41 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றி 2வது இடத்தை பிடிக்கிறார். அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியின் டேரன் சமி 39 போட்டிகளுக்கு கேப்டனாக பண…
-
- 0 replies
- 263 views
-
-
இங்கிலாந்து, ஆஸி ஒ.ச. போட்டித் தொடர்: மீள் பார்வை இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. உலக சம்பியன் அவுஸ்திரேலியா அணி 3-2 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது. இரண்டு அணிகளும் மாறி மாறி வெற்றி பெற்று ஐந்தாவது போட்டி தொடரை நிர்ணயிக்கும் போட்டியாக அமைந்தது. இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்டது. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தாலும், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் வெற்றி பெற்று தாம் உலகச்சம்பியன் என்பதனை நிரூபித்துவிட்டனர். ஆனாலும் இங்கிலாந்து அணியைப் பொறுத்தமட்டில் இது பெரிய தோல்வியாக கருதமுடியாது. உலகக்கிண்ணத் தொடரில் முதல் சுற்றுடன் தோல்வியடைந்து…
-
- 0 replies
- 296 views
-
-
இலங்கை வந்தது மேற்கிந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இன்று கொழும்பை வந்தடைந்தனர். இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் மற்றும் 2 இருபது20 போட்டிகளில் மேற்கிந்திய அணி மோதவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. (படம்:ஏ.எவ்.பி) - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12437#sthash.CeKM5ZhZ.dpuf
-
- 1 reply
- 279 views
-
-
பாகிஸ்தான் செல்லும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு அதியுயர் பாதுகாப்பு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ள பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதியளித்துள்ளது. பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியினர் இம் மாதம் 28ஆம் திகதி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது 2009இல் இடம்பெற்ற பயங்கரவாத துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஒன்று பாகிஸ்தானுக்கு செல்வது இதுவே முதல் தடவையாகும். பங்களாதேஷ், பாகிஸ்தான் மகளிர் அணிகள் இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இரண்டு இருபத…
-
- 1 reply
- 207 views
-
-
கிரிக்கெட் விதிகளில் மாற்றம் கிரிக்கெட்டில் களத்தடுப்புச் சம்பந்தமான விதியொன்றில் மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ள , கிரிக்கெட் விதிகளுக்குப் பொறுப்பான அமைப்பான மெரில்லிபோன் கிரிக்கெட் கழகம் (எம்.சி.சி) அறிவித்துள்ளது. இதன்படி, துடுப்பாட்ட வீரரொருவர் தான் பந்தை அடிக்கப் போகும் திசை குறித்துத் தெளிவான சமிக்ஞைகளை மேற்கொண்டால், விக்கெட் காப்பாளர் தவிர்ந்த ஏனைய களத்தடுப்பாளர்கள், பந்துசெல்லவுள்ள திசையை நோக்கிக் கணிசமானளவு நகர முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், பாவட் அலாமின் பிடியொன்றைப் பிடித்த போது, இது தொடர்பான விவாதம் ஏற்பட்டு, சர்வதேச கிரிக்கெட் விளையாடும் நடைமுறைகளில் இம்மாற்றம் ஏற்பட்டது. அதுவே, தற்…
-
- 0 replies
- 299 views
-
-
செல்சி, ஆர்சனல் தோல்வி சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், இன்றைய போட்டிகளில் ஆர்சனல், செல்சி அணிகள் தோல்வியடைந்தன. பார்சிலோனா அணி வெற்றிபெற்றது. ஒலிம்பியாகொஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் ஆர்சனல் அணி, 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 33ஆவது நிமிடத்தில் ஒலிம்பியாகொஸின் பெலிப் பார்டோ பெற்ற கோலுக்கு, உடனடியாகப் பதிலடி வழங்கிய ஆர்சனலின் தியோ வொல்கொட், 1-1 என்ற கணக்கில் கோல் நிலையை மாற்றிய போதிலும், 40ஆவது நிமிடத்தில் டேவிட் ஒஸ்பினாவின் 'ஒவ்ண் கோல்" காரணமாக, ஒலிம்பியாகொஸ் அணி, 2-1 என முன்னிலை வகித்தது. 65ஆவத நிமிடத்தில் அலெக்ஸிஸ் சன்செஸ் கோலொன்றைப் பெற்று, ஆர்சனலுக்கு 2-2 என் சமநிலையை வழங்கிய போதிலும், அடுத்த நிமிடத்தில் அர்பிரட் பின்பொகாசொன் பெற்ற …
-
- 0 replies
- 450 views
-
-
கால்பந்து வாழ்க்கையில் 500 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை! ரியல்மாட்ரிட் ஸ்டிரைக்கர் ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையில் 500 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி மால்மோ அணியை எதிர்கொண்டது. ஸ்வீடனில் உள்ள மால்மோ நகரில் நடந்த இந்த போட்டியில் 28வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல்மாட்ரிட் அணிக்கான முதல் கோலை அடித்தார். இது அவரது கால்பந்து வாழ்க்கையில் அடிக்கும் 500வது கோல் ஆகும். இதற்கு ரொனால்டோவுக்கு 753 போட்டிகள் தேவைப்பட்டது. அதோடு சாம்பியன்ஸ் லீக் தொடரில் 117 போட்டியிகளில் ஆடியுள்ள அவர் அடிக்கும் 81வது கோலாகவும் இது அமைந்தது. பிற்பாதி ஆட்டத்தில் 90வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒர…
-
- 0 replies
- 231 views
-
-
பங்களாதேஷ் தொடரிலிருந்து பற் கம்மின்ஸ் வெளியேற்றம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு பயணமாகும் அவுஸ்திரேலிய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பற் கம்மின்ஸ் விலகியுள்ளார். மறுபடியும் முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காயம் காரணமாகவே இவர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக சகலதுறை வீரர் ஜேம்ஸ் போக்னர் அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்றுள்ளார். போக்னர் இதுவரையில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதிதாக ஏற்பட்டுள்ள காயம் கம்மின்சுக்கு பாரிய பின்னடைவாக காணப்படுகிறது. 2011ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிராக 18 வயதில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டபோதும், அதன் பின் முதுகு மற்றும் கால் காயங்களால் அவதிப்படும் கம்மின்ஸ் அதற்கு பி…
-
- 2 replies
- 371 views
-
-
2017 இல் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ICC Champions Trophy போட்டிகளில் பங்கேற்கவுள்ள அணிகளின் இறுதிப் பட்டியலை இன்று ICC அறிவித்திருக்கிறது. செப்டெம்பர் 30 ம் திகதியான இன்றைய நாள் வரையில் தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடித்திருக்கின்ற அணிகள் இதற்கு தேர்வாகியிருக்கின்றன. மேற்கிந்திய தீவுகள் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறது. Rank Team Points 1 Australia 127 2 India 115 3 South Africa 110 4 New Zealand 109 5 Sri Lanka 103 6 England 100 7 Bangladesh 96 8 Pakistan 90 9 West Indies 88 10 Ireland 49 11 Zimbabwe 45 12 Afghanistan 41 http://www.icc-cricket.com/news/2015/media-releases/89911/teams-confirmed-for-icc-champions-trophy-2017
-
- 1 reply
- 381 views
-
-
2015 உலகக் கோப்பை மே.இ.தீவுகள் அணியிலிருந்து 8 வீரர்கள் மாற்றம்: கெய்ல் இல்லை இலங்கை தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு கெய்ல் இல்லை, சுனில் நரைன் மீண்டும் தேர்வு. | படம்: ஏ.எஃப்.பி. இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான மே.இ.தீவுகளின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2015 உலகக் கோப்பைக்குச் சென்ற மே.இ.தீவுகள் அணியில் 8 பேர் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் இல்லை. ஒரே ஆறுதல் சுனில் நரைன் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். கிறிஸ் கெய்ல் இரண்டு அணிகளிலும் இல்லை. முதுகு அறுவை சிகிச்சை காரணமாக அவர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. டேரன் சமி, லெண்டில் சிம்மன்ஸ், சுலைமான் பென், ஷெல்டன் காட்ரெல், நிகிடா மில்லர், கிமார் ரோச், டிவைன் ஸ்மித் ஆகி…
-
- 0 replies
- 227 views
-