Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இன்று இரவு 7 மணிக்கு கேப்டன் தோனி...! இந்திய அணியின் கேப்டன் தோனி 50 டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையை இன்று பெறப் போகிறார். உலகிலேயே இத்தகையை சாதனையை எட்டும் முதல் கேப்டன் தோனிதான். தென்ஆப்ரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹிமாச்சல்பிரதேசத்தில் உள்ள எழில்கொஞ்சும் தரம்சாலாவில் இன்று இந்த இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய அணியின் கேப்டன் தோனியின் 50வது டி20 போட்டி ஆகும். இந்த பட்டியலில் அயர்லாந்தின் வில்லியம் போர்டர்பீல்ட் 41 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றி 2வது இடத்தை பிடிக்கிறார். அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியின் டேரன் சமி 39 போட்டிகளுக்கு கேப்டனாக பண…

  2. இங்கிலாந்து, ஆஸி ஒ.ச. போட்டித் தொடர்: மீள் பார்வை இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. உலக சம்பியன் அவுஸ்திரேலியா அணி 3-2 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது. இரண்டு அணிகளும் மாறி மாறி வெற்றி பெற்று ஐந்தாவது போட்டி தொடரை நிர்ணயிக்கும் போட்டியாக அமைந்தது. இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்டது. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தாலும், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் வெற்றி பெற்று தாம் உலகச்சம்பியன் என்பதனை நிரூபித்துவிட்டனர். ஆனாலும் இங்கிலாந்து அணியைப் பொறுத்தமட்டில் இது பெரிய தோல்வியாக கருதமுடியாது. உலகக்கிண்ணத் தொடரில் முதல் சுற்றுடன் தோல்வியடைந்து…

  3. யாழில் கரம் சுற்றுப்போட்டி யாழ். மாவட்ட கழகங்களுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான கரம் சுற்றுப்போட்டி நாளையும் நாளைமறுதினமும் யாழ். பல்கலைக்கழக உடற்கல்வி அலகில் இடம்பெறவுள்ளது. இச் சுற்றுப்போட்டியை யாழ். பல்கலைக்கழக விளையாட்டு அவையும் உடற்கல்வி அலகும் இணைந்து நடத்தவுள்ளன. இப்போட்டிக்கு ஹரிகரன் பிறின்டேர்ஸ் அனுசரணை வழங்குகின்றனர். முதல்நாள் போட்டிகள் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும். இச் சுற்றுப்போட்டிக்கு பிரதம விருந்தினராக மானிப்பாய் வலி தென்மேற்குப் பிரதேச சபை செயலாளரும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் கரம் பெண்கள் அணியின் தலைவியுமாகிய திருமதி. ஜெயந்தா சோமராஜ் கலந்து சிறப்பி…

  4. இலங்கை வந்தது மேற்கிந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இன்று கொழும்பை வந்தடைந்தனர். இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் மற்றும் 2 இருபது20 போட்டிகளில் மேற்கிந்திய அணி மோதவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. (படம்:ஏ.எவ்.பி) - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12437#sthash.CeKM5ZhZ.dpuf

  5. கிரிக்கெட் விதிகளில் மாற்றம் கிரிக்கெட்டில் களத்தடுப்புச் சம்பந்தமான விதியொன்றில் மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ள , கிரிக்கெட் விதிகளுக்குப் பொறுப்பான அமைப்பான மெரில்லிபோன் கிரிக்கெட் கழகம் (எம்.சி.சி) அறிவித்துள்ளது. இதன்படி, துடுப்பாட்ட வீரரொருவர் தான் பந்தை அடிக்கப் போகும் திசை குறித்துத் தெளிவான சமிக்ஞைகளை மேற்கொண்டால், விக்கெட் காப்பாளர் தவிர்ந்த ஏனைய களத்தடுப்பாளர்கள், பந்துசெல்லவுள்ள திசையை நோக்கிக் கணிசமானளவு நகர முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், பாவட் அலாமின் பிடியொன்றைப் பிடித்த போது, இது தொடர்பான விவாதம் ஏற்பட்டு, சர்வதேச கிரிக்கெட் விளையாடும் நடைமுறைகளில் இம்மாற்றம் ஏற்பட்டது. அதுவே, தற்…

  6. செல்சி, ஆர்சனல் தோல்வி சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், இன்றைய போட்டிகளில் ஆர்சனல், செல்சி அணிகள் தோல்வியடைந்தன. பார்சிலோனா அணி வெற்றிபெற்றது. ஒலிம்பியாகொஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் ஆர்சனல் அணி, 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 33ஆவது நிமிடத்தில் ஒலிம்பியாகொஸின் பெலிப் பார்டோ பெற்ற கோலுக்கு, உடனடியாகப் பதிலடி வழங்கிய ஆர்சனலின் தியோ வொல்கொட், 1-1 என்ற கணக்கில் கோல் நிலையை மாற்றிய போதிலும், 40ஆவது நிமிடத்தில் டேவிட் ஒஸ்பினாவின் 'ஒவ்ண் கோல்" காரணமாக, ஒலிம்பியாகொஸ் அணி, 2-1 என முன்னிலை வகித்தது. 65ஆவத நிமிடத்தில் அலெக்ஸிஸ் சன்செஸ் கோலொன்றைப் பெற்று, ஆர்சனலுக்கு 2-2 என் சமநிலையை வழங்கிய போதிலும், அடுத்த நிமிடத்தில் அர்பிரட் பின்பொகாசொன் பெற்ற …

  7. கால்பந்து வாழ்க்கையில் 500 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை! ரியல்மாட்ரிட் ஸ்டிரைக்கர் ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையில் 500 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி மால்மோ அணியை எதிர்கொண்டது. ஸ்வீடனில் உள்ள மால்மோ நகரில் நடந்த இந்த போட்டியில் 28வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல்மாட்ரிட் அணிக்கான முதல் கோலை அடித்தார். இது அவரது கால்பந்து வாழ்க்கையில் அடிக்கும் 500வது கோல் ஆகும். இதற்கு ரொனால்டோவுக்கு 753 போட்டிகள் தேவைப்பட்டது. அதோடு சாம்பியன்ஸ் லீக் தொடரில் 117 போட்டியிகளில் ஆடியுள்ள அவர் அடிக்கும் 81வது கோலாகவும் இது அமைந்தது. பிற்பாதி ஆட்டத்தில் 90வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒர…

  8. 2017 இல் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ICC Champions Trophy போட்டிகளில் பங்கேற்கவுள்ள அணிகளின் இறுதிப் பட்டியலை இன்று ICC அறிவித்திருக்கிறது. செப்டெம்பர் 30 ம் திகதியான இன்றைய நாள் வரையில் தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடித்திருக்கின்ற அணிகள் இதற்கு தேர்வாகியிருக்கின்றன. மேற்கிந்திய தீவுகள் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறது. Rank Team Points 1 Australia 127 2 India 115 3 South Africa 110 4 New Zealand 109 5 Sri Lanka 103 6 England 100 7 Bangladesh 96 8 Pakistan 90 9 West Indies 88 10 Ireland 49 11 Zimbabwe 45 12 Afghanistan 41 http://www.icc-cricket.com/news/2015/media-releases/89911/teams-confirmed-for-icc-champions-trophy-2017

  9. 2015 உலகக் கோப்பை மே.இ.தீவுகள் அணியிலிருந்து 8 வீரர்கள் மாற்றம்: கெய்ல் இல்லை இலங்கை தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு கெய்ல் இல்லை, சுனில் நரைன் மீண்டும் தேர்வு. | படம்: ஏ.எஃப்.பி. இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான மே.இ.தீவுகளின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2015 உலகக் கோப்பைக்குச் சென்ற மே.இ.தீவுகள் அணியில் 8 பேர் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் இல்லை. ஒரே ஆறுதல் சுனில் நரைன் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். கிறிஸ் கெய்ல் இரண்டு அணிகளிலும் இல்லை. முதுகு அறுவை சிகிச்சை காரணமாக அவர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. டேரன் சமி, லெண்டில் சிம்மன்ஸ், சுலைமான் பென், ஷெல்டன் காட்ரெல், நிகிடா மில்லர், கிமார் ரோச், டிவைன் ஸ்மித் ஆகி…

  10. செய்தித் துளிகள் - கருத்து தெரிவிக்க மறுத்த கங்குலி கங்குலி. | கோப்புப் படம். துருக்கியின் அக்ரி நகரில் நடைபெற்று வரும் அக்ரி கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா வின் சாகேத் மைனேனி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது முதல் சுற்றில் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் செர்பியாவின் மதிஜா பெகோட்டிக்கை தோற் கடித்தார். ------------------------------------------------- சர்வதேச கால்பந்து சம்மேள னத்தின் (பிஃபா) முன்னாள் தலை வரான ஜேக் வார்னருக்கு வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச விளையாட்டு நெறிமுறை தீர்ப்பாயம். வார்னர் இனிமேல் கால்பந்து தொடர்பான எந்த செயல்களிலும் ஈடுபட முடியாது. ------------------------------------------------- பிசிசிஐயின் தலைவராக வரவுள்ள சஷ…

  11. 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கராத்தே உட்பட 5 விளையாட்டுகளை இணைக்க ஒலிம்பிக் போட்டி அமைப்பு குழு சிபாரிசு செய்துள்ளது. 2016-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோடிஜெனீரோவில் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கு அடுத்த ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டடு ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் அனுமதியை பொறுத்துதான் புதிய போட்டிகள் இடம் பெறுவது இறுதி செய்யப்படும். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பேஸ்பால், கராத்தே, போர்ட் ஸ்கேட்டிங், மலையேற்…

  12. பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இணைகிறார் சமிந்தவாஸ் பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்­டியில் சமிந்த வாஸ், ஜோர்டன் கிரினிஜ் உள்­ளிட்ட பலர் பயிற்­சி­யா­ளர்களாக இணைய உள்­ளனர். பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்­டி­களை அடுத்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் நடத்த திட்­ட­மிட்­டுள்­ளது. இதில் இலங்­கையின் முன் னாள் வேகப்­பந்து வீச்­சாளர் சமிந்த வாஸ், மேற்­கிந்­திய தீவு­களின் ஜோர்டன் கிரினிஜ், இந்­தி­யாவின் முன்னாள் சக­ல­துறை வீரர் ரொபின் சிங் உட்­பட 15 பயிற்­சி­யா­ளர்கள் ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்­ளனர். இது பற்றி பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்­டியின் தலைவர் நஜம் சேத்தி கூறு­கையில், 15 பயிற்­சி­யா­ளர்கள் இது­வரை ஒப்­பந்தம் செய்­யப்பட்­டுள்­ளனர். இன்னும் சில பயிற்­சி­யா­ளர்­களை ஒப்பந்தம்…

  13. மத்திய கல்லூரி அபார வெற்றி! September 30, 2015 யாழ். மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கம் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கிடையே நடத்தி வரும் ரி-20 தொடரில் கடந்த சனிக்கிழமை சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் யாழ்.மத்திய கல்லூரி அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணியினர் 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 170 ஒட்டங் களைப் பெற்றனர். அதிகபட்சமாக டினோசன் 58 ஓட்டங்களையும், பிரியலக்சன் 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி சார்பில் சண்முகன், அஜந்தன், பிரசாந், மிதுசன் ஆகியோர் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர். 171 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்கு துடுப…

  14. கால்பந்து வீரரை துப்பாக்கி காட்டி மிரட்டிய நடுவர்! (வீடியோ) பேளோ ஹாரிஜொந்தே: பிரேசில் நாட்டு கால்பந்து வீரர் ஒருவரை, நடுவர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டிலுள்ள பேளோ ஹாரிஜொந்தே அருகேயுள்ள புருமாண்டினோவில், உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், அமெச்சூர் புருமாண்டினோ அணியும், அமண்டஸ் டா பேளோ அணியும் மோதின. கேப்ரில் முர்தா என்பவர் நடுவராக இருந்தார். அப்போது அமண்டஸ் டா பேளோ அணி வீரர் ஒருவருக்கும், நடுவர் கேப்ரில் முர்தாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நடுவர், தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி, கால்பந்து வீரரை மிரட்டினார். மேலும், அந்த வீரரை உதைத்து தள்ளி கன்னத்திலும் அறைந்ததா…

  15. சீனாவில் 30 கால்பந்து பள்ளிகளை திறக்கும் பிரேசில் நட்சத்திரம் ரொனால்டோ பிரேசில் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ. | கோப்புப் படம். பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ, சீனாவில் 30 கால்பந்து பள்ளிகளை திறக்கிறார். மேலும் கால்பந்தில் சீன இளைஞர்களை புதுவிதமான பயிற்சியின்ஹ் மூலம் உருவாக்க முயற்சி எடுப்பதாக அவர் தெரிவித்தார். சாவோ போலோவில் உள்ள கேம்பினாஸில் தனது கால்பந்து பள்ளியின் தொடக்க விழாவின் போது இத்தகவலை ரொனால்டோ தெரிவித்தார். "வணிக நோக்கம் தவிர, சீனாவில் கால்பந்து பள்ளிகளைத் தொடங்கக் காரணம், அங்கு கால்பந்துக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர், நிறைய வீரர்கள் விளையாடி வருகின்றனர். சீன அரசும், குடிமை அமைப்புகளும் கூட கால்பந்தை வளர்த்தெடுப்பதில் ம…

  16. இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தாரிந்து கவுஷல் தூஸ்ரா வீச ஐசிசி தடை தூஸ்ரா வீச தடை செய்யப்பட்ட இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தாரிந்து கவுஷல். | படம்: ராய்ட்டர்ஸ். இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் ஆஃப் ஸ்பின்னர் தாரிந்து கவுஷல் சர்வதேச போட்டிகளில் தூஸ்ரா வீச ஐசிசி தடை விதித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியின் போது தாரிந்து கவுஷல் பந்து வீச்சு மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை ராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில் உள்ள சோதனைக் கூடத்தில் தாரிந்து கவுஷலின் பந்துவீச்சு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இவர் ஆஃப் ஸ்பின் வீசும் போது முழங்கை 15 டிகிரிக்கும் குறைவாக மடங்குவது தெரியவந்தது. ஆனால் தூஸ்ரா வீ…

  17. என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றிய பெருமை டோணிக்கே சேரும்.. சொல்வது தென் ஆப்பிரிக்க கேப்டன்! டெல்லி: என்னை ஒரு கிரிக்கெட் வீரராக மாற்றிய பெருமை இந்திய அணி கேப்டன் டோணியை சேரும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் டி20 அணி, கேப்டன் பாப் டுப்ளசிஸ் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது அந்த அணியின் கேப்டனான டோணியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாக டுப்ளசிஸ் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அக்டோபர் 2ம் தேதி முதல் டி20 போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இதையொட்டி தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஏற்கனவே டெல்லி வந்துவிட்டனர். டுப்ளசிஸ் புகழாரம் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய தென் ஆப்பிரிக்க டி20 அணிக்கான, கேப்டன் பாப் டுப்ள…

  18. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அதிரடி 'சஸ்பெண்ட்' மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. எல்டைன் பாப்டைஸ்ட் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொடருக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தேர்வு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதையடுத்து அவர் மீது இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி மிகுவேல், சிம்மன்சுக்கு சஸ்பெண்ட் தொடர்பான தகவலை இமெயில் மூலம் அனுப்பியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான தொடர் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்குகிறது. அங்கு இரண்டு டெஸ்ட், 3 ஒர…

  19. சாம்பியன் பட்டத்தை நோக்கி ஹாமில்டன் நேற்று நடந்த F1 ஜப்பான் கிராண்ட்பிக்ஸ் போட்டியில் முதலாக வந்ததன் மூலம் சென்னாவின் 41 கிராண்ட் பிக்ஸ் போட்டி வெற்றிகளை சமன் செய்துள்ளார் லுயிஸ் ஹாமில்டன். இந்த ஆண்டின் 14 வது F1 கிராண்ட்பிக்ஸ் ஜப்பானில் நேற்று நடந்தது. இதில் சக மெர்சிடிஸ் வீரர் ரோஸர்பர்க் பின் போட்டியை தொடங்கிய ஹாமில்டன்,முதல் வளைவிளையே ரோஸர்பர்கை முந்தினார்.30 வது LAP வரை இரண்டாவதாக வந்துக் கொண்டிருந்த வெட்டலை பின்னுக்கு தள்ளி,இரண்டாவதாக வரத் தொடங்கினார் ரோஸர்பர்கை.எவ்வளவோ முயன்றும் ரோஸர்பர்காள் ஹாமில்டனை முந்த முடியவில்லை. இறுதியில் பந்தய தூரத்தை 1hr 28mins 6.508sec என்ற நேரத்தில் முடித்து ஹாமில்டன் முதலாவதாகவும் ஹாமில்டனை விட 18.9 விநாடிகள் பின்தங்கிய ரோஸர்ப…

  20. தென்ஆப்ரிக்காவுக்கு எதிரானத் தொடர் : இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவ பயிற்சி! தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் விதத்தில், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தரம்சாலாவில் ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியா - தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடர், அக்டோபர் 2ஆம் தேதி தொடங்குகிறது. மூன்று டி20 போட்டி, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடருக்காக தென்ஆப்ரிக்க அணி, இந்தியாவில் 72 நாட்கள் முகாமிடுகிறது. தென்ஆப்ரிக்க அணி வீரர்கள் நேற்று டெல்லி வந்தடைந்தனர். இந்த தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய வீரர்கள் பெங்களுருவிவில் பயிற்சி பெற்றனர். இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு உடல்ரீதியான திறனையும், மனோபலத்தையும் அதிகரிக்…

  21. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் பதவிக்கு மனோகர் தெரிவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது 2015-09-28 12:58:42 இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையின் புதிய தலை­வ­ராக ஷஷான்க் மனோகர் தெரி­வா­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­ரித்­துள்­ள­தாக தகவல் வெளி­யா­கியுள்ளது. இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபைத் தலைவர் ஜெக்மோன் டால்­மி­யாவின் மறைவை அடுத்து ஏற்­பட்­டுள்ள வெற்­றி­டத்­திற்கு புதிய தலைவர் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ளார். இந்நிலையில் ஆளும் பார­தீய ஜனதா கட்­சியின் ஆத­ரவைப் பெற்­றுள்ள ஷஷான்க் மனோகர் இப்பத­விக்கு பொருத்­த­மா­ன­வ­ராகக் கரு­தப்­ப­டு­கின்றார். இவர் பத்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையின் தலை­வ­ராக பதவ…

  22. இலங்கைத் தொடருக்கு பிராவோ – பொல்லார்டை இணைக்க போராடும் சிம்மன்ஸ். மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­யின் பிராவோ மற்றும் பொல் லார்ட் இல்­லா­மை­யினால் விரக்­தி­ய­டைந்­துள்­ளாராம் அந்த அணியின் பயிற்­சி­யாளர் சிம் மன்ஸ். இந்த இரு­வ­ரையும் அணியில் சேர்க்க முயற்சி செய்து வரு­கிறார். இதற்கு மேற்­கிந்­தியத் தீவுகள் அணி யின் தலைவர் ஜேசன் ஹோல்­டரும் ஆத­ர­வாக இருக்­கி­றா ராம். விரைவில் மேற்­கிந்­தியத் தீவுகள் அணி இலங்­கை­யில் சுற்­றுப்­ப­யணம் செய்யஇருக்­கி­றது. இந்த தொடரில் இடம்­பெறும் வீரர்­களை தேர்வு செய்­வ­தற்­கான கூட்டம் நடை­பெற்­றது. இந்த கூட்­டத்தில்இ வெய்ன் பிராவோ மற்றும் பொல்­லார்டு ஆகி­யோரை சேர்த்தால் மேற்­கிந்­தி­யத்­தீ­வுகள் அணி வலு­வா­ன­தாக இருக்கும் என்று சிம்மன்ஸ் கூறி…

  23. 8 வாரங்களுக்கு மெஸ்ஸி இல்லை பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியனொல் மெஸ்ஸி, 7 தொடக்கம் 8 வாரங்களுக்குப் போட்டிகளில் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்படுகிறது. சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் காயமடைந்திருந்த நிலையிலேயே, 8 வாரங்கள் வரை அவரால் போட்டிகளில் பங்குபெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் பல்மாஸ் அணிக்கெதிரான இப்போட்டியில், அவருக்கு முழங்காலில் உபாதை ஏற்பட்டிருந்ததோடு 10ஆவது நிமிடத்தில் அவர் வெளியேறியிருந்தார். மைதானத்தை விட்டு வெளியேறிய மெஸ்ஸி, அணி அறைக்குள் வைத்துப் பரிசோதிக்கப்பட்ட பின்னர், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். மெஸ்ஸின் இடது முழங்காலில் உள்ளக தசைநாண்களில் கிழிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியா…

  24. அன்வர் அலிக்காக ஆமீர் யமின் சிம்பாப்வேயில் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் குழாமிலிருந்து பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் அன்வர் அலி விலகியுள்ளார். ஏற்பட்டிருந்த சிறிய காயத்திலிருந்து குணமடையும் பொருட்டு, இரண்டு இருபது-20 போட்டிகளுக்கான குழாமில் அன்வர் அலியை சேர்க்காத தேர்வாளார்கள், சர்வதேச ஒருநாள் போட்டிக்கான குழாமில் சேர்த்திருந்தனர். எனினும் அன்வர் அலி, உடற்றகுதி சோதனையில் சித்தியடையாததால், அவருக்கு பதிலாக குழாமில் ஆமிர் யாமின் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். முல்தானை சேர்ந்த 25 வயதான சகலதுறை வீரரான யமின், 25 முதற்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன், 39.18 என்ற சராசரியில் மூன்று சதங்கள் உள்ளடங்கலாக 1058 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், மூன்று ஐந்து விக்…

  25. முதலில் இஷாந்த் சர்மா முடி வெட்ட வேண்டும்.. மாஜி தெ. ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் அட்வைஸ் மும்பை: இஷாந்த் சர்மாவின் இன்றைய நிலைக்கு அவர்தான் பொறுப்பாவார். அவர் முதலில் பல நல்ல பழக்கங்களை தன்னுள் கொண்டு வர வேண்டும். முதலில் தலைமுடியை சீரமைக்க வேண்டும். அவரது தலைமுடியால் அணிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் பானி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். அவரைப் பார்த்தால் எனக்கு ஸ்போர்ட்ஸ்மேன் போலவே தெரியவில்லை. அவரது ஹேர்ஸ்டைல் மிக மோசமாக உள்ளது. கெட்டப் பையன் போன்ற தோற்றத்தையே அது தருகிறது என்றும் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். இமேஜ்தான் முதலில் அவருக்குப் பெரும் பிரச்சினை. அதை அவர் சரி செய்தாக வேண்டும். அவரிடம் நல்ல கிரிக்கெட் உள்ளது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.