Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பம் வடமாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். ஆறு மைதானங்களில் நடைபெறும் இப்போட்டிகள் ஆண்l பெண் இருபாலருக்கும் நான்கு பிரிவுகளாக இடம்பெறவுள்ளன. இதற்கமைய 15, 17,19 வயது ஆகிய பிரிவுகளில் 108 அணிகள் இப்போட்டிகளில் மோதுகின்றன. இப்போட்டிகளின் இறுதிப்போட்டிகள் எதிர்வரும் 21ம் திகதி யாழ் மத்திய கல்லூரி மைதானத்திலும் சென் ஜோண்ஸ்…

  2. இந்தியாவிடம் ஏன் கெஞ்ச வேண்டும்...? -சாகித் அப்ரிடி கோபம் இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடுவதற்கு பதிலாக வேறு நாட்டு அணிகளை பாகிஸ்தானுக்கு அழைத்து வந்து போட்டிகளை நடத்தலாம் என்று பாகிஸ்தான் அணி வீரர் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். எல்லையோரத்தில் தாக்குதலை நிறுத்தினால் மட்டும்தான் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடுவது பற்றி யோசிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளித்து விட்டது. ஆனால் பாகிஸ்தான் வாரியம், டிசம்பரில் அமீரகத்தில் வைத்து இந்திய அணியுடன் போட்டித் தொடரை நடத்த யோசித்து வருகிறது. 2015-2023 ஆம் ஆண்டுகளுக்கிடையே 6 தொடர்கள் வரை விளையாட இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. பல பிரச்னைகள் காரணமாக இதற்கு இந்திய அர…

  3. பிரிட்டன் ராணுவத்துக்காக டி20 காட்சிப் போட்டியில் விளையாடும் தோனி தோனி, சேவாக். | கோப்புப் படம். காயமடைந்த மற்றும் உடல்நலம் குன்றிய பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டும் காட்சி டி20 போட்டியில் இந்திய ஒருநாள் கேப்டன் தோனி விளையாடுகிறார். வியாழக்கிழமை, லண்டன் கியா ஓவல் மைதானத்தில் 'கிரிக்கெட் ஃபார் ஹீரோஸ்' என்ற நிதிதிரட்டு காட்சி போட்டியில் தோனி, சேவாக், ஷாகித் அப்ரீடி, ஹெர்ஷல் கிப்ஸ் ஆகியோர் ஒரு அணியில் விளையாடுகின்றனர். ஹெல்ப் ஃபார் ஹீரோஸ் அணியின் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ். இந்த அணிக்கும் உலக லெவன் அணிக்கும் டி20 காட்சிப் போட்டி நடைபெறுகிறது. இந்த அணியில் பிரெண்டன் மெக்கல்லம், ஹெய்டன், ஜெயவர்தனே, கிரேம் ஸ்மித், முன்னாள் நியூஸிலாந்து வீரர்கள் ஸ்காட் ஸ்டைரிஸ், …

  4. பெண் நிருபரால் தாக்கப்பட்ட சிரிய அகதி ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளர் ஆனார்! கடந்த சில நாட்களுக்கு முன் சிரியாவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற அகதிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பெண் வீடியோகிராபரான பெட்ரோ லஸ்லா என்பவரால் ஒசமாக அகமது என்ற அகதி காலை இடறி கீழே விழ வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்படியே தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகியது. இந்த சம்பவத்தை தொலைகாட்சிகளில் பார்த்த மக்கள், அந்த பெண் நிருபரின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நிருபர் பெட்ரோ லஸ்லாவை அவர் வேலை பார்த்து வந்த நிறுவனமும் பணியை விட்டு நீக்கியது. பெண் நிருபரால் தாக்கப்பட்ட சிரிய அகதி ஒசமா அப்துல் சிரிய நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து அணிகளுக்கு…

  5. ஃபிபாவில் உருளும் தலைகள் : பொதுச் செயலர் ஜெரோம் வால்கி 'சஸ்பெண்ட்' உலக கால்பந்து சம்மேளனமான ஃபிபா பொதுச் செயலர் ஜெரோம் வால்கி திடீரென்று நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஃபிபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '' ஜெரோம் வால்கி அவரது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மறுஉத்தரவு வரும் வரை அவர் பணிகளை தொடர தடை உள்ளது '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது, டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்தாகவும் அதில் ஜெரோம் வால்கிக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பிஃபா எதிக்ஸ் கமிட்டி விசாரித்து வருவதாகவும் தெரிகிறது. பி…

  6. சங்கா, மஹேல மீது அர்ஜுன காட்டம் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் மீது, அமைச்சரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்க, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இருவருமே அண்மையில் ஓய்வுபெற்றுள்ள போதிலும், அவர்கள் ஓய்வுபெறும் வரை தங்களது துடுப்பாட்ட நிலையை மாற்றி, இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார். 'இன்று, வீரர்களின் ஒழுக்கமென்பது முழுமையாக அழிவடைந்துள்ளது. நான்காம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக விளையாடிய நான், எனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினேன். துடுப்பாட்ட இடமொன்றில் ஏனைய இளைய வீரர்கள் பரிச்சயத்தைப் பெறுவதற்கே அதைச் செய்தேன்"…

  7. தோனிதான் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் என்கிறார் லான்ஸ் குளூஸ்னர் தோனி. | படம்: சஞ்ஜய் கோஷ். முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிரடி ஆல்ரவுண்டர் லான்ஸ் குளூஸ்னர், கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர் தோனிதான் என்று கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்கா இந்தியாவில் கிரிக்கெட் பயணம் மேற்கொள்வதையடுத்து ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் கூறும் போது இதனை தெரிவித்தார். "ஆல்-ரவுண்டர்கள் இருக்கின்றனர், இல்லையென்று கூறவில்லை. ஆனால் நீண்ட ஆண்டுகள் என்ற அளவில் அவர்கள் நிரூபிக்க முடியவில்லை. ஜாக் காலீஸ், ஷான் போலாக் எங்களுக்கு கிடைத்தது அதிர்ஷ்டமே. ஆல்ரவுண்டர்கள் வரிசையில் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென்களையும் சேர்க்க வேண்டும். தோனி, கில்கிறிஸ்ட் ஆகியோர் மதிப்பு மிக்க ஆல் ரவுண்டர்கள். ஆனாலும் கடந்த சில ஆண்டு…

  8. கிறிஸ்டியானோ ரொனால்டோ உட்பட மெஸ்ஸிக்கு யாரும் இணையாக முடியாது: பார்சிலோனா பயிற்சியாளர், வீரர்கள் புகழாரம் அட்லெடிகோஸ் மாட்ரிட் அணிக்கு எதிரான போட்டியின்போது, எதிரணி வீரர்களை அநாசயமாக வீழ்த்தி கோலடிக்கும் பார்சிலோனாவின் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு யாரும் இணையாக மாட்டார்கள் என பார்சிலோனா பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக், தடுப்பாட்டக்காரர் ஜோர்டி அல்பா ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர். சாம்பியன்ஸ் லீக் போட்டியை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது பார்சிலோனா. கடந்த 1990-ம் ஆண்டு ஏசி மிலன் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை வென்றது. அதன்பிறகு எந்த அணியும் வெற்றிக்கோப்பையைத் தக்கவைத்ததில்லை. கடந்த மே மாதம் நடந்த இறுதிப்போ…

  9. வடமாகாண சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சால் வடமாகாண மாவட்ட அணிகளுக்கிடையே இடம்பெற்ற கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ். மாவட்ட அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ். மாவட்ட அணியும் முல்லைத்தீவு மாவட்ட அணியும் மோதிக் கொண்டன. இரு அணிகளும் ஆரம்பத்தில் சற்று பலமான நிலையில் விளையாடிய போதிலும், தொடர்ந்து யாழ். மாவட்ட அணி முன்னணியில் திகழ்ந்தது. இறுதியில் யாழ்.மாவட்ட அணி 72: 57 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனானது. http://onlineuthayan.com/news/393

  10. குமார் சங்ககாரா மீண்டும் சதம் இங்கிலாந்து surrey கவுன்டி அணிக்காக ஆடிவரும் குமார் சங்ககாரா County Championship போட்டியில் Lancashire அணிக்கு எதிராக 118 ஓட்டங்கள் எடுத்து உள்ளார். Surrey 480 & 283/7d Lancashire 272 & 22/0 (7.0 ov) Lancashire require another 470 runs with 10 wickets http://www.espncricinfo.com/county-championship-div2-2015/engine/match/804433.html

  11. இங்கிலாந்து பயிற்றுநர் குழாமில் மஹேல, கொலிங்வுட் பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான மூவகை கிரிக்கெட் தொடர்­களை முன்­னிட்டு மஹேல ஜய­வர்­தன, போல் கொலிங்வுட் ஆகி­யோரை விசேட பயிற்­று­நர்­க­ளாக இங்­கி­லாந்து நிய­மித்­துள்­ளது. இதன் மூலம் தனது நிபு­ணத்­துவ பயிற்­றுநர் குழாமை இங்­கி­லாந்து பலப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளது. ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­திற்கு விஜயம் செய்யும் இங்­கி­லாந்து அணியின் பயிற்சிப் போட்­டி­யின் ­போதும் பாகிஸ் ­தா­னுக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­யின் ­போதும் இங்­கி­லாந்து அணிக்கு துடுப்­பாட்டப் பயிற்­சி­களை மஹேல ஜய­வர்­தன வழங்­க­வுள்ளார். ஆசிய கண்ட ஆடு­க­ளங்­களின் தன்­மையை நன்கு அறிந்­துள்ள மஹேல ஜய­வர்­தன, இந்த ஆடு­க­ளங்­களில் திற­மையை …

  12. பார்சிலோனா அணிக்கு எதிராக ரோமா வீரர் அடித்த அசத்தல் கோல் (வீடியோ) சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று ரோம் நகரில் நடந்த ஆட்டத்தில், பார்சிலோனா- ஏ.எஸ். ரோமா அணிகள் மோதின. இந்த போட்டியின் போது பார்சிலோனா அணியின் சுவாரஸ் 21வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். மெஸ்சி கொடுத்த கிராசை தலையால் முட்டி சுவாரஸ் கோலாக்கினார். 31வது நிமிடத்தில் ரோமா அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணியின் ஃபுளோரன்சி 60 அடி தொலைவில் இருந்து அடித்த பந்து மிக நேர்த்தியாக வளைக்குள் வந்து தஞ்சமடைந்தது. பார்சிலோனா அணியின் கோல்கீப்பர் ஸ்டெகன் கோல்கம்பத்தை விட்டு சற்று முன்னால் நின்று கொண்டிருந்ததை கவனித்த ஃபுளோரன்சி அந்த சமயத்தை பயன்படுத்தி மிக நேர்த்தியாக இந்த கோலை…

  13. சானியாவின் அடுத்த ஜோடி யார்? கடந்த 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில், இந்திய டென்னிஸ் அணித் தேர்வில் யார்-யாருடன் ஜோடி சேருவது என்பதில் ஒரு களேபரமே நடந்தது. இறுதியில் 7 பேர் கொண்ட இந்திய டென்னிஸ் குழுவினர் வெறுங்கையுடன் திரும்பியது தான் மிச்சம். இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, லியாண்டர் பெயசுடன் சேர்ந்து விளையாடினார். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது சானியா மிர்சா யாருடன் ஜோடி சேருவார் என்ற கேள்வி இப்போதே எழத் தொடங்கி விட்டது. சானியா சூப்பர் பார்மில் இருப்பதால் கலப்பு இரட்டையர் பிரிவு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்திய முன்னணி வீரர் ரோகன் போபண்ணாவிடம் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்திய…

  14. தேசிய மட்ட கபடிப் போட்டிகளில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் சாதனை படைத்துள்ளன. 15 வயது பிரிவில் கிளிநொச்சி சிவபுரம் அ.த.க பாடசாலை முதலிடத்தினையும், 19 வயது பிரிவில் கிளிநொச்சி இந்து கல்லூரி இரண்டாம் இடத்தினையும் பெற்று மாவட்டத்திற்கும், வடமாகாணத்திற்கும் புகழ் தேடி தந்துள்ளனர். கிளிநொச்சி இந்துக்கல்லூரி 19 வயது பிரிவு மாணவர்கள் திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய மட்ட கபடி போட்டியில் அனுராதபுரம் மக்குளாவ மகாவித்தியாலயத்தை எதிர்த்து தேசிய மட்டத்திற்கான இறுதிப்போட்டியில் போட்டியிட்டு பத்திற்கு இருபது எனும் விகிதத்தில் இரண்டாம் நிலையினை பெற்றுக்கொண்டார்கள். இப்போட்டியில் பிரகாசித்த இரு வீரர்களான க.தசப்பிரியன், எஸ்.சிவராஜ் ஆகியோர் தேசிய கபடி அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறி…

  15. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு மிஸ்பா உல் ஹக். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. ஐக்கிய அரபு அமீரகத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இடது கை பேட்ஸ்மென் ஃபவாத் ஆலம் சேர்க்கப்பட்டுள்ளார். 2009-ம் ஆண்டில் நியூஸிலாந்துக்கு எதிராக பவாத் ஆலம் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியதால் அவர் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொழும்புவில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் 168 ரன்களை அடித்தார் பவாத் ஆலம். பாகிஸ்தான் டெஸ்ட் அணி வருமாறு: மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), அகமது ஷெசாத், ஷான் மசூத்…

  16. சாம்பியன்ஸ் லீக் தொடங்கியது : ஐரோப்பாவின் கால்பந்து அரசன் யார்? (அலசல் கட்டுரை) உலக கால்பந்து காதலர்களின் தாகத்தைத் தணிக்க வந்துவிட்டது யூஃபா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ஜூன் இறுதியில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று, 17 நாடுகளைச் சார்ந்த 32 அணிகள் இத்தொடரில் விளையாட தகுதிபெற்றுள்ளன. செப்டம்பர் 15 தொடங்கும் 61ஆவது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், பங்கேற்கும் 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இரண்டு அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி இத்தாலியின் சான் சிரோ நகரில் நடைபெறும். வெற்றி பெரும் அணிக்கு பரிசுத் தொகையாக 15 மில்லியன் யூரோ வழங்கப்படும். தற்போது இக்கோப்ப…

  17. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுகிறார் கெயில்! பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முதல் சீசன் அடுத்த ஆண்டு கத்தாரில் உள்ள தோஹா நகரில் தொடங்குகிறது. ஐந்து அல்லது 6 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த தொடரில் குறைந்தது 25 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறவேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தொடரில் வீரர்களுக்கான வரைவு பட்டியலில் கெயில் இடம் பெறுவார் என வீரர்களை ஒப்பந்தம் செய்யும் ஏஜன்சி உறுதி செய்துள்ளது. டி20 போட்டிகளை பொறுத்த வரை கெயிலுக்கு சந்தை மதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் இவரை ஏலம் எடுக்க பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகள் முட்டி மோதிக் கொள்ளும். இவர் தவிர கீரான் பொல்லார்ட், டேரன் சமி,சுனில் நரீன், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஓவைஸ் ஷா …

  18. சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி தோல்வி! சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்றுத் தொடங்கின. இதில் இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் முதல் ஆட்டத்திலேயே பரிதாப தோல்வியை சந்தித்துள்ளன. 'பி ' பிரிவில் இடம் பெற்றுள்ள மான்செஸ்டர் யுனைடெட் அணி நேற்று பி.எஸ்.வி என்டோவன் அணியை எதிர்கொண்டது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிர்ச்சி தோல்வி கண்டது. மற்றொரு ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் சக்தர் டொனாஸ்க் அணியை வீழ்த்தியது. கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார். கரீம் பென்ஜமா தன் பங்குக்கு ஒரு கோல் அடித்தார். இங்கிலாந்தை சேர்ந்த ம…

  19. செல்சியில் நகைச்சுவை, கேலிக்குத் தடை இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களாக செல்சி அணி, இப்பருவகாலத்தில் மோசமான தொடக்கமொன்றைப் பெற்றுள்ள நிலையில், அவ்வணியின் பயிற்சிகளின் போது நகைச்சுவையான கேலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. கடந்த 29 வருடங்களில், செல்சி அணி சந்தித்த மிக மோசமான பருவகால ஆரம்பத்தையடுத்தே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதல் 5 போட்டிகளில், வெறுமனே 4 புள்ளிகளை மாத்திரமே செல்சி அணி பெற்றுள்ள போதிலும், நெருக்கடி நிலைக் கூட்டங்களுக்கான தேவை இன்னமும் ஏற்படவில்லை எனவும் அக்கழக வட்டாரங்கள் அறிவிக்கின்றன. செல்சியின் முகாமையாளராக மொரின்கோ பதவியேற்றுக் கொண்ட பின்னர், பயிற்சிகளின் போது …

  20. முதலிடத்தைப் பிடித்தார் சானியா மிர்சா உலக டென்னிஸ் வீரர்­களின் தர வரி­சைப்­பட்­டி­யலை சர்­வ­தேச டென்னிஸ் சங்கம் வெளி­யிட்­டுள்­ளது. இதன்­படி பெண்கள் இரட்­டையர் பிரிவில் இந்­திய வீராங்­கனை சானியா மிர்சா முத­லி­டத்­திலும், மார்ட்­டினா ஹிங்கிஸ் (சுவிட்­ஸர்­லாந்து) 2ஆ-வது இடத்­திலும் நீடிக்­கின்­றனர். அண்­மையில் நடந்­து­மு­டிந்த அமெ­ரிக்க ஓபன் டென்னிஸ் போட்­டியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி சம்­பியன் பட்டம் வென்­றி­ருந்­தது. இது­கு­றித்து சானியா கூறு­கையில், விம்­பிள்டன் பட்­டத்­துக்கு பிறகு அமெ­ரிக்க ஓபன் பட்­டத்­தையும் வென்றிருப்­பது மகிழ்ச்சி அளிக்­கி­றது. எனக்­கா­கவும், நாட்­டுக்­கா­கவும், எனது குடும்­பத்­துக்­கா­கவும் டென்னிஸ் விளை­யா­டு­கிறேன். அதில் வெற்றி பெற வ…

  21. சுவிஸ் நாட்டின் ஜூறா மாநிலத்தில் வசித்து வரும் 13 வயதுடைய ஈழத்து சிறுவன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் குறித்த மாநில தேசிய ஐஸ் ஹொக்கி கழகத்தில் U 14 பிரிவில் காப்பாளராக விளையாடி வருகின்றார். இவர் தற்போது சுவிஸ் நாட்டில் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களில் ஒன்றான EHC-Bienne (LNA) Minitop பிரிவில் பந்து காப்பாளராக ஒப்பந்தமாகி விளையாடி வருகின்றார்.சுவிஸ் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களுக்கிடையிலான சம்பியன் லீக் 2015- 2016 போட்டிகளில் அஷ்வின் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அஷ்வின் கடந்த பெப்ரவரி மாதம் கனடாவில் நடைபெற்ற சர்வதேச U 14 ஐஸ் ஹொக்கி சம்பியன்ஷிப் போட்டிகளில் சுவிஸ் அணிக்காக விளையாடி சிறந்த பந்து காப்பாளர் பட்டத்தையும் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும். - See more at: h…

  22. வேகப்பந்து வீச்சு பயிற்றுநராக நுவான் சொய்ஸா இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராக, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இப்பதவியில் காணப்பட்ட சமிந்த வாஸ், சில மாதங்களுக்கு முன்னர் அப்பதவியிலிருந்து விலகிய நிலையிலேயே, தற்போது நுவான் சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள அவரது ஒப்பந்தம், ஒரு வருடத்துக் செல்லுபடியாகும் என, இலங்கை கிரிக்கெட் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை சார்பாக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நுவான் சொய்ஸா, 64 விக்கெட்டுகளையும், 95 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 108 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்க…

  23. உலகக் கிண்ண ஒளிபரப்பு உரிமை:அழுத்தத்தில் செப் பிளட்டர் 2010, 2014ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வழங்கப்பட்டதில், முறைகேடுகள் இடம்பெற்றதாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஏற்கெனவே அழுத்தத்துக்குள்ளாகியுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (ஃபீபா) தலைவர் செப் பிளட்டர், மேலும் அழுத்தத்துக்குள்ளாகியுள்ளார். ஃபீபா உப தலைவராகக் கடமையாற்றிய ஜக் வோணர், 2005ஆம் ஆண்டு கரீபியன் கால்பந்தாட்ட ஒன்றியத்திற்குத் தலைவராகவும் காணப்பட்டதோடு, 2010, 2014ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான 600,000 அமெரிக்க டொலர்களுக்கு, ட்ரினிடாட் அன்ட் டொபாகோவுக்கான ஒளிபரப்பு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அவ்வொன்றியத்த…

  24. பதவி விலகுகிறார் ரொஷான் மஹாநாம சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் எலைட் பேனல் நடுவர் குழுவில் இருந்து ரொஷான் மஹாநாம இந்த வருட இறுதியுடன் விலகவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. 1996ம் ஆண்டு இலங்கை அணி உலகக் கிண்ணத்தை சுவீகரித்த வேளை, அந்த அணியில் இடம்பெற்ற முக்கிய வீரர்களில் மஹாநாமவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் எலைட் பேனல் நடுவர் குழுவில் சுமார் 12 ஆண்டுகாலம் சேவையாற்றிருந்த இவர் இந்த வருட இறுதியில் அப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=72606 ரொஷான் மகாநாமா விலகல் தனது குடும்பத்துடனும், தனது வர்த்தக நடவடிக்கைகளுடனும் இலங்கையில் மேலதிக நே…

  25. ஆஸ்திரேலியாவை வீழ்த்த நல்ல வாய்ப்பு: முஷ்பிகுர் ரஹிம் நம்பிக்கை வங்கதேச அணியின் டெஸ்ட் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம். | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரவிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அந்த அணியை வீழ்த்த ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று வங்கதேச டெஸ்ட் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார். "ஆஸ்திரேலியாவை வீழ்த்த இதுவே சிறந்த வாய்ப்பு, எனவே நாங்கள் 100%-க்கும் மேல் பங்களிப்பு செய்து வெற்றிக்கான வாய்ப்புகளை சாத்தியமாக்குவோம்” என்றார். ஒருநாள் போட்டிகளில் வளர்ந்து வரும் வங்கதேசம், தொடர்ச்சியாக ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரன இருதரப்பு ஒருநாள் தொடர்களை வென்றது. டெஸ்ட் போட்டிகளில் ஜிம்பாப்வேயை 3-0 என்று வீழ்த்தியது வங்கத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.