Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. விம்பிள்டனில் ஆதிக்கம் செலுத்திய மூன்று பெண்கள் பகிர்க 2018-ம் ஆண்டுக்கான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று துவங்கியுள்ளது. விம்பிள்டன், அமெரிக்க ஓபன், பிரஞ்ச் ஓபன், ஆஸ்திரேலியா ஓபன் ஆகிய நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பே மிகவும் பழமையான மற்றும் முக்கியமான டென்னிஸ் தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த காலங்கள் விம்பிள்டன் போட்டியின் பெண்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய மூன்று முக்கிய வீராங்கனைகளை பார்ப்போம். மார்டினா நவ்ராட்டிலோவா படத்தின் காப்புரிமைGETTY IMAGES செக்கோஸ்லோவாக்கியா சேர்ந்த மார்டினா நவதிலொவா 1956-ம் ஆண்டு பிறந்தார். செக்கோஸ்லோவா…

  2. மைலோ கிண்ணக் கால்பந்தாட்டம்: சம்பியனானது குருநகர் பாடுமீன் யாழ்.மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில், நெஸ்ட்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையில், நூறுக்கும் மேற்பட்ட, யாழ்.மாவட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கிடையே இடம்பெற்று வந்த இவ்வருடத்துக்கான மைலோ கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில், குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியுள்ளது. மூன்றாவது வருடமாக இடம்பெற்ற இந்த மைலோ கிண்ணச் சுற்றுப் போட்டியில், பருத்தித்துறை, தீவகம், வலிகாமம், வடமராட்சி, மருதங்கேணி, யாழ்ப்பாணம் ஆகிய கால்பந்தாட்ட லீக்குக்குட்பட்ட அணிகளுக்கிடையில் தனித்தனியாக முதலில் போட்டிகள் இடம்பெற்று, ஒவ்வொரு லீக்கிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்குத் தெர…

  3. கரம் போட்டியில் பசறை தமிழ்த் தேசிய கல்லூரி முதலிடம் Published on 2019-11-28 13:06:12 2019 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை விளையாட்டுப் போட்டியில் இருபது வயதுக்கு கீழ்பட்டோருக்கான 'கரம் ' போட்டித்தொடரில் பசறை தமிழ் தேசிய கல்லூரி மாணவர்கள் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். குறித்த போட்டியில் வெற்றியீட்டி கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை வரவேற்று பாராட்டும் நிகழ்வு நேற்றைய தினம் (27/11/2019) பசறை தமிழ் தேசிய கல்லூரி அதிபர் சித்தார்த்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பசறை நகரிலிருந்து பசறை தமிழ் தேசிய கல்லூரி வரை வாகனப் பேரணியில் வெற்றியீட்டிய மாணவர்காகிய கே.பிர…

  4. ஐ.சி.சி., தரவரிசை:அஷ்வின் ‘நம்பர்–9’ துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர்களுக்கான ரேங்கிங்கில் (தரவரிசை) இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 9வது இடத்துக்கு முன்னேறினார். பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ஷிகர் தவான் 32வது இடம் பிடித்தார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 12வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு முன்னேறினார். இவர், இலங்கைக்கு எதிரான காலே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் கைப்பற்றினார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா 21வது இடத்தில் உள்ளார். …

  5. ஐக்கிய அரபு இராச்சியத்தில் பகல் - இரவு டெஸ்ட்: பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் இணக்கம் டெஸ்ட் கிரிக்கெட் விளை­யாடும் நாடு­க­ளுக்கு மத்­தியில் பகல் –இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­களை நடத்­து­வ­தற்­கான முஸ்­தீ­புகள் இடம்­பெற்று வரும் நிலையில் பாகிஸ்­தானும் மேற்­கிந்­தியத் தீவு­களும் பகல் – இரவு டெஸ்ட் போட்­டியில் விளை­யாட கொள்கை அளவில் இணங்­கி­யுள்­ளன. நடு­நி­லை­யான ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் பகல் - இரவு டெஸ்ட் போட்­டியை இளஞ்­சி­வப்பு பந்­தைக் ­கொண்டு நடத்த இரண்டு நாடு­களும் முன்­வந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இந்த யோச­னைக்கு மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்ெகட் சபைஆ…

  6. இங்கிலீஷ் பிரிமீயர் லீ்க் கால்பந்து: ஸ்வான்சீ அணியை 4-0 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் ஸ்வான்சீ அணியை 4-0 என வீழ்த்தி மான்செஸ்டர் அணி 2-வது வெற்றியை பெற்றுள்ளது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து 2017-18 சீசன் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இன்றைய ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான மான்செஸ்டர் யுனைடெட், ஸ்வான்சீ அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல்பாதி நேரத்தின் கடைசி நிமிடமான 45-வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் எரிக் பெய்லி முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல்பாதி நேரத்தில் மான்செ…

  7. அனல் பறக்கும் இந்தியா-ஆஸி., தொடர் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் தொடரில் அனல் பறப்பது நிச்சயம்,'' என, முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்தார். அடுத்த மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பிப்., 22 முதல் மார்ச் 24 வரை) பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் சென்னையில் பிப்., 22 முதல் 26 வரை நடக்கிறது. சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்திலுள்ள ஆஸ்திரேலிய அணி, இத்தொடரை முழுமையாக (4-0) வென்றால் 121 புள்ளிகள் கிடைக்கும். அதேநேரம், இப்போது முதலிடத்திலுள்ள தென் ஆப்ரிக்க அணி (124), பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தால், தரவரிசையில் நீண்ட இடைவெளிக்குப் பின், "நம்பர்-1' இடத்தை ஆஸ்திரேலியா பிடிக்கலாம்.…

  8. இந்தி நடிகையை கரம் பிடித்தார் யுவராஜ்சிங் இந்திய கிரிக்கெட் வீரர் 34 வயதான யுவராஜ்சிங், மாடல் அழகியும் இந்தி நடிகையுமான 29 வயதான ஹாசல் கீச்சை காதலித்து வந்தார். ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இவர்கள் நேற்று இல்வாழ்க்கையில் இணைந்தனர். யுவராஜ்சிங் - ஹாசல் கீச் திருமணம் பஞ்சாப் மாநிலம் சர்ஹிந்த் - சண்டிகார் ரோட்டில் உள்ள படேகர் சாஹிப் குருத்வாராவில், சீக்கிய மத சடங்குகளின்படி நேற்று நடந்தது. சீக்கிய மத தலைவர்களில் ஒருவரான பாபா ராம்சிங் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார். இரு வீட்டாரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ்சிங் மகனின் திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை. ‘கடவுள் மீது நம்பிக…

  9. ஆண்டர்சன், பிராட் நீக்கம் லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் ஜூன் 9ல் பர்மிங்காமில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் லண்டன் (ஜூன் 12), சவுத்தாம்ப்டன் (ஜூன் 14), நாட்டிங்காம் (ஜூன் 17), செஸ்டர்–லி–ஸ்டிரீட் (ஜூன் 20) நகரில் நடக்கவுள்ளன. இத்தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டனர். இயான் பெல், சுழற்பந்துவீச்சாளர் மொயீன் அலி ஆகியோருக்கும் இடம் கிடைக்கவில்லை. அடுத்த மாதம்…

  10. ஐபிஎல் ஒப்பந்தத்திற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் ‘ஸ்லெட்ஜ்’ செய்யவில்லை: சேவாக் அதிரடி சேவாக். - கோப்புப் படம். | கே.பாக்யபிரகாஷ். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-4 என்று ஆஸ்திரேலியா இழந்துள்ள நிலையில், அடுத்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் வலுவான ஒப்பந்தங்களை எதிர்நோக்குவதால் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்கள் மீது ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடவில்லை என்று அதிரடி மன்னன் சேவாக் அதிரடி கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “அடுத்த ஆண்டு பெரிய அளவில் ஐபிஎல் ஏலங்கள் உள்ளன, இதனால் அவர்கள் பயந்து விட்டார்கள். இந்திய வீரர்களை அவர்கள் ஸ்லெட்ஜ் அல்ல…

  11. 28 வருடங்களின் பின் FIFA உலகக் கிண்ணத்தில் எகிப்து 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் விளையாடுவதற்கு அரபு உலகில் அதிகளவு மக்களைக் கொண்ட நாடாக விளங்குகின்ற எகிப்து தகுதி பெற்றுக்கொண்டது. ஆபிரிக்க கால்பந்து கூட்டமைப்பு நாடுகளுக்கான தகுதிகாண் போட்டிகளின் 3 ஆவது சுற்றில் 20 அணிகள் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தங்களது குழுக்களில் உள்ள மற்றைய அணிகளுடன் மோதிக்கொள்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இடம் பெறும் அணி 2018 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாடத் தகுதி பெறும் நிலையில், E குழுவில் நேற்று கொங்கோ அணியுடன் இடம்பெற்ற போட்டியில் லிவர்பூல் கழகத்துக்காக விளையாடி வருகின்ற எகிப்து அணியின் 25 வயதுடைய இளம் நட்சத்திர…

  12. பிளாக்மெயில் வழக்கில் ரியல்மாட்ரிட் வீரர் கரிம் பென்ஜமா கைது! பிரான்ஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வந்தவர்கள் கரீம் பென்ஜமா மற்றும் மத்தீயோ வல்புனா. தற்போது பென்ஜமா, ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். பிரெஞ்சு லீக் அணியான லியோன் அணிக்காக வல்புனா விளையாடுகிறார். இதற்கு முன் கரீம் பென்ஜமாவும், லியோன் அணிக்காக விளையாடியுள்ளார். அப்போதிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள். இந்நிலையில், வல்புனா தொடர்புடைய 'செக்ஸ் டேப் ' ஒன்று கரீம் பென்ஜமாவிடம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனை வைத்து வல்புனாவை, கரீம் பென்ஜமாவும் மார்செலி அணிக்காக விளையாடிய சிஸ்சேவும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கேட்கும் தொகை தரப்படவில்லையென்றால், சம்பந்தப்பட்ட செக்ஸ் டேப்பை மீடியாக்களிடம் …

  13. 1,800 கோடிப்பே.. நெய்மர் காயம்... பி.எஸ்.ஜி மீது கடுப்பாகும் பிரேசில்! பட்ட காலிலே படும் என்பது நெய்மருக்குப் பக்காவாகப் பொருந்தும். கடந்த ஞாயிற்றுக்கிழமை Ligue 1 தொடரில் மார்சிலிக்கு எதிரான போட்டியின்போது நெய்மர் காயமடைந்தார். அனல் பறக்கும் ஆட்டம் இல்லை; ஆக்ரோஷமான டேக்கிள் இல்லை; ஆனாலும், அவர் கீழே விழுந்தார். வலது காலின் முன்பாதப் பகுதியை எசகுபிசகாக தரையில் ஊன்றி விட, வலியால் துடித்தார். களத்துக்குள் பிசியோ வந்தார். பெயின் கில்லர் பயனளிக்கவில்லை. ஸ்ட்ரெச்சர் வந்தது. நிலைமை சீரியஸ். ஆம், நெய்மரின் முன்பாதத்தில் எலும்புமுறிவு (Metatarsal fracture), போதாக்குறைக்குக் கணுக்காலில் தசைப்பிடிப்பு. களத்திலிருந்து ந…

  14. சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற இரத்தினபுரி இளைஞர்! இரத்தினபுரி, கஹாவத்த பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் கபில பிரசாத் குமார் எனும் 27 வயதுடைய இளைஞர், மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரை மலேசியாவில், சர்வதேச சிலம்பம் போட்டி இடம்பெற்றது. இப் போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், கட்டார், மலேசியா, டுபாய், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 600 இற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர். இப் போட்டியில், இலங்கை சார்பாக கலந்து கொண்டிருந்த முத்துகுமார் கபில பிரசாத் குமார் தங்கப்பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெறுமை சேர்த்துள்ளார். இ…

  15. லா லிகா: டெபோர்டிவோவிடம் வீழ்ந்து முதல் இடதை பறிகொடுத்த பார்சிலோனா லா லிகா தொடரில் டெபோர்டிவோவிடம் 1-2 என தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பறிகொடுத்தது பார்சிலோனா. லா லிகா தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல ரியல் மாட்ரிட், பார்சிலோனா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நேற்றைய போட்டிகளுக்கு முன் ரியல் மாட்ரிட் 25 போட்டிகளில் 18 வெற்றி, 5 டிரா மற்றும் 2 தோல்விகளுடன் 59 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பார்சிலோனா 26 போட்டிகளில் 17 வெற்றி, 6 தோல்வி மற்றும் 3 டிராவுடன் 60 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் இருந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட் அ…

  16. மெஸ்சியை மிஞ்சும் ரொனால்டோ! #Ballond'or ரஜினிக்கு வயசாயிடுச்சு. முடி கொட்டிப் போச்சு. ஆனாலும் ஸ்க்ரீன்ல அவர் என்ன பண்ணாலும் ரசிக்கிறோம் இல்லையா? அதே மாதிரிதான் ஃபுட்பால்ல கிறிஸ்டியானோ ரொனால்டோ. வயசு ஏற ஏற ரொனால்டோ ஆட்டமும் மெருகேறுது. கிரவுண்ட்ல அவர் என்ன பண்ணாலும் அது வசீகரமா இருக்கு. இது ரொனால்டோ குறித்து, சந்தோஷ் டிராபியில் தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக இருந்த ராபின் சார்லஸ் ராஜா சொன்னது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் உலகின் சிறந்த கால்பந்து வீரர் (ballon d'or) விருதை, நான்காவது முறையாக வென்றிருக்கிறார் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஃபிரான்ஸில் நடந்த 2016 யூரோ கோ…

  17. டி20 பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி முதலிடம் விராட் கோலி. | படம்: கெட்டி இமேஜஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விராட் கோலி தனது கனவு பார்மில் இருந்து வருகிறார். இந்நிலையில் டி20 தொடரில் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய டி20 கேப்டனும், தொடக்க வீரருமான ஏரோன் பிஞ்ச்சை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்தார். மூன்று டி20 போட்டிகளில் 90 நாட் அவுட், 59 நாட் அவுட், 50 ஆகிய ஸ்கோர்களை எடுத்தார் விராட் கோலி. இதன் மூலம் 47 தரவரிசைப் புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்று முதலிடம் சென்றார். டேவிட் வார்னர் 6 இடங்கள் பின்னடைவு கண்டு 18-வது இடத…

  18. பிலிப் ஹியூஸின் மரணம்: வேண்டுமென்றே பவுண்சர்கள் வீசப்பட்டனவா? தெற்கு அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் போது, நியூ சௌத் வேல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஷோன் அபொட் வீசிய பந்து, தலையில் தாக்கி உயிரிழந்த துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூஸின் மரணம் தொடர்பான, மருத்துவ இறப்பு ஆய்வறிக்கைக்கான விசாரணைகள் இன்று ஆரம்பித்தன. 2014ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி தலையில் பந்தால் தாக்கப்பட்ட ஹியூஸ், 27ஆம் திகதி உயிரிழந்திருந்தார். முதல் நாள் விசாரணைகளில், நியூ சௌத் வேல்ஸ் அணியின் அப்போதைய தலைவர் பிரட் ஹடின், துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர், வேகப்பந்து வீச்சாளர் டக் பொலிஞ்சர், ஹியூஸின் குடும்பத்தினர் ஆகியோர் வாக்குமூலமளித்தனர். ஹியூஸ்…

  19. சர்வதேச போட்டிகளில் 100 ஆவது கோல் புகுத்தினார் மெஸி Published By: SETHU 29 MAR, 2023 | 11:35 AM ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் தலைவர் லயனல் மெஸி, தனது 100 ஆவது சர்வதேச கோலைப் புகுத்தியுள்ளார். கியூராசாவ் - ஆர்ஜென்டீன அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ போட்டியில் தனது 100 கோலை மெஜி புகுத்தினார். ஆர்ஜென்டீனாவின் சான்டியாகோ டெல் எஸ்டேரோ நகரில் செவ்வாய்க்கிழமை (இலங்கை, இந்திய நேரப்படி இன்று காலை) நடைபெற்ற இப்போட்டியில் 7-0 கோல்களால் ஆர்ஜென்டீனா வென்றது. இப்போட்டியில் லயனல் மெஸி ஹெட்ரிக் கோல்களைப் புகுத்தினார். போட்டியின் 20, 33, 37 ஆவது நிமிடங்களில் அவர் புகுத்தினார் இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் …

  20. 21 ஆண்டுகளுக்குப் பிறகு... ஃபிஃபா தர வரிசையில் டாப் 100ல் என்ட்ரி கொடுத்த இந்தியா! ஐபிஎல் போட்டிகளில் நாம் பிஸியாக இருக்கிறோம். ஆனால், இந்த நேரத்தில் நம் கால்பந்து அணி சைலன்டாக ஒரு சாதனையைச் செய்துள்ளது. ஃபிஃபா (FIFA) வெளியிட்டுள்ள சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 100-வது இடத்தைப் பிடித்துள்ளது. 1996-ம் ஆண்டு 94-வது இடத்தை இந்திய அணி பிடித்திருந்தது. தற்போது வரை ஃபிஃபா தர வரிசையில், இந்தியாவின் சிறந்த நிலை அதுதான். கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்த பட்டியலில், இந்திய அணி 101-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருந்தது. 64 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மர் மண்ணிலேயே, அந்த அணியை வீழ்த்தியது, கம்போடியா அணியைச் சாய்த்தது ஆக…

  21. ஸ்பானிஷ் லா லிகா: புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது ரியல் மாட்ரிட் இரண்டு கோல்கள் அடித்து ரியல் மாட்ரிட் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் கரிம் பென்ஸிமா. படம்: கெட்டி இமேஜஸ் மாட்ரிட் முன்னணி 20 கால்பந்து அணிகள் பங்கேற்கும் ஸ்பானிஷ் லா லிகா கால்பந்துப் போட்டியில் அத்லெடிக் பில்பாவோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ரியல் மாட்ரிட் அணி, 13 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியில் முதலிடம் பிடித்துள்ளது. அதேசமயம், பார்சிலேனாவை, செல்டா 4-1 என்ற கோல்கணக்கில் அபாரமாக வீழ்த்தி அதிர்ச்சி யளித்தது. ரியல் மாட்ரிட் அணிக்கும் அத்லெடிக் பில்பாவோ அணிக்கும் இடையே நடந்த போட்டியில், 19-வது நிமிடத்தில் பிரான்ஸின் கரிம் பென்ஸிமா ரியல்மாட்ரிட் அணிக…

  22. ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்த மகேந்திர சிங் தோனி - முதல் இடத்தில் சச்சின் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்தியர் எனும் பெருமையை பெற்றுள்ளார் முன்னாள் கேப்டன் தோனி. #MSDhoni #RahulDravid துபாய் : 14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் …

  23. ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவுக்கு தோனி மீண்டும் கிடைப்பாரா? முன்னாள் வீரர் சந்தேகம்! Ads by Kiosked ஐபிஎல் ஏலத்தில் தோனியைத் தேர்வு செய்ய கடும் போட்டி நடக்கும் என்று முன்னாள் வீரர் நிகில் சோப்ரா கணித்துள்ளார். 2013-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முத்கல் குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த…

  24. ரஹீமோடு முரண்படுகிறார் தமிம் பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், ஓரளவு போட்டித்தன்மையை வெளிப்படுத்திய போதிலும், பங்களாதேஷ் அணி, அப்போட்டியில் தோல்வியடைந்த நிலையில், அப்போட்டியிலிருந்து பெறப்படக்கூடிய முடிவு என்னவென்பது குறித்து, அவ்வணியின் தலைவர் முஷ்பிக்கூர் ரஹீமோடு, அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால், முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். 22 ஓட்டங்களால் தோல்வியடைந்த பின்னர் கருத்துத் தெரிவித்த ரஹீம், அப்போட்டியில் பங்களாதேஷ் அணி போட்டித்தன்மையுடன் விளையாடியதை முன்னிறுத்தியதோடு, தங்களால் முடிந்ததை, தாங்கள் செய்ததாகவும் தெரிவித்திருந்தார். அத்தோடு, அப்போட்டியில் வெ…

  25. 2016-ல் அதிக விக்கெட்டுகள்: ஹெராத்தைக் கடந்து அஸ்வின் சாதனை அஸ்வின். | படம்: ராய்ட்டர்ஸ். விசாகப்பட்டண டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து தோல்வியை முடுக்கி விட்ட அஸ்வின் 2016-ம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை அவர் இந்த ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் 55 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 22.23. மேலும் 6 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஹெராத் 8 டெஸ்ட் போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 13 டெஸ்ட்களில் 46 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 10 டெஸ்ட் போட்டிகளில் 41 விக்கெட்டுகளையும் இந்த ஆண்டில் கைப்பற்றியுள்ளனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.