விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
ரியோ ஒலிம்பிக்கில் அம்பலமான கொள்ளை நாடகம்: அமெரிக்க நீச்சல் வீரருக்கு 10 மாதம் தடை கொள்ளை நாடகம் நடத்திய அமெரிக்க நீச்சல் வீரர்கள். | படம்: கெட்டி இமேஜஸ். சமீபத்தில் முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது தங்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறி செய்ததாக நாடகமாடிய அமெரிக்க நீச்சல் வீரர் ரயான் லோக்ட் விளையாட 10 மாதகாலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவருடன் நாடகம் அரங்கேற்றிய மற்ற 3 வீரர்களுக்கும் 4 மாதங்கள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு புடாபெஸ்டில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் லோக்ட் பங்கேற்க முடியாது என்று யு.எஸ்.ஏ. டுடே பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. இந்தத் தடை பற்றி அத…
-
- 0 replies
- 407 views
-
-
வேகமான 200 விக்கெட் சாதனை நோக்கி அஸ்வின். வேகமான 200 விக்கெட் சாதனை நோக்கி அஸ்வின். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் ,வேகமான 200 டெஸ்ட் விக்கெட் சாதனை நோக்கி காத்திருக்கிறார். எதிர்வரும் 22 ம் திகதி கான்பூர் மைதானத்தில் இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி இந்தியாவின் 500 வது டெஸ்ட் என்பதோடு மாத்திரமல்லாமல் , ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனைக்காகவும் இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 193 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.அண்மையில் நிறைவுக்கு வந்த மேற்கிந்திய தீவுகள் அணியுடனான த…
-
- 0 replies
- 338 views
-
-
கணினியில் விளையாட வந்துவிட்டது ஒரு 'வாவ்' கேம்! - DON BRADMAN CRICKET 17 டிரெய்லர் கிரிக்கெட் லவ்வர்கள் கணினிகளில் கிரிக்கெட் கேமுக்கு என குறிப்பிட்ட ஜி.பி ஒதுக்கிவிடுவார்கள். உலகம் முழுவதும் கணினிகள், மொபைல், லேப்டாப், டேப்லெட் என எந்த வடிவத்திலும் அதிகம் விளையாடப் படும் கேம்களில் கிரிக்கெட்டுக்கும் முக்கிய இடம் உண்டு. தற்போதைய சூழ்நிலையில், தெருவில் கிரிக்கெட் ஆட முடியாதவர்கள், வயதானவர்கள் என அத்தனை பேரும் தங்களது கிரிக்கெட் ஆசையைத் தீர்த்துக் கொள்வது கிரிக்கெட் வீடியோ கேம் ஆடுவது மூலமாகத் தான். இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடித்தால், அன்று இரவே, லேப்டாப்பில் கிரிக்கெட் கேமை போட்டு, ஆஸ்திரேலியாவைத் துவைத்து எடுத்து டென்ஷனைத் தீர்த்துக…
-
- 0 replies
- 333 views
-
-
தெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி வெற்றிகரமான சேசிங்கில் அதிக சதம் அடித்திருந்த கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் சாதனையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது முறியடித்தார். உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபிக்கும் வகையில் விராட் கோலி மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் அவர் 105 பந்தில் 122 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். 177-வது ஒரு நாள் போட்டியில் விளையாடிய விராட்…
-
- 0 replies
- 509 views
-
-
மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே எனது இலக்கு – அனிதா ஜெகதீஸ்வரன் மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே தமது இலக்கு என வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 23 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் அவர் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகள் தியகமை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (23) ஆரம்பமானது. 23 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் 03.40 மீற்றருக்கு தாவிய யாழ். மாவட்டத்தின் அனிதா ஜெகதீஸ்வரன் போட்டி சாதனையை புதுப்பித்தார். இதேவேளை 20 வயதிற்குட்ப…
-
- 0 replies
- 243 views
-
-
உலக சாதனை படைத்தார் சுழல் மன்னன் ஹேரத் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கை அணியின் சுழல் மன்னன் ரங்கன ஹேரத் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதலாவது இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்ற உலகசாதனையை படைத்தார். 39 வயதான ரங்கன ஹேரத், இலங்கை அணிக்காக 1999 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 84 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 153 இன்னிங்ஸ்களில் விளையாடி 23, 835 பந்துதுகளை வீசி 11, 128 ஓட்டங்களை எதிரணி வீரர்களுக்காக கொடுத்து 400 விக்கெட் என்ற சாதனையை படைத்துள்ளார். ரங்கன ஹேரத்திற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து அணியின் டானியல் வெற்றேரி 362 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். …
-
- 0 replies
- 390 views
-
-
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் 10 ஆட்டங்களிலும் ஜெர்மனி வெற்றி அஜர்பைஜான் நடுகள வீரர் ரஷித்திடம் பந்தை விட்டுக்கொடுக்காமல் கடத்திச் செல்லும் ஜெர்மனி வீரர் லியோன் கோரேட்ஸ்கா. - படம்: ஏஎப்பி உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் 10 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ஜெர்மனி அணி சாதனை படைத்துள்ளது. 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் அந்த அணி தகுதி சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று முன்தினம் பெர்லின் நகரில் அஜர்பைஜான் அணியை எதிர்கொண்டது. இதில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெ…
-
- 0 replies
- 203 views
-
-
கேப்டனாக கோலி நீண்ட காலம் நீடிப்பார் என்று தோன்றவில்லை: தெ.ஆ. முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கருத்து விராட் கோலி. - படம். | ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவின் வெற்றிகரமான கேப்டனான கிரேம் ஸ்மித், கோலியின் அணுகுமுறை அவரை நீண்ட கேப்டன்சி தெரிவாக வைத்திருக்க முடியுமா என்பதை உறுதி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். கோலி அடிக்கடி அணியை மாற்றுவதும், தன் மனம்போன போக்கில் முடிவுகளை எடுப்பதும் பல விமர்சனங்களை தருவித்துள்ளது. கிரிக்கெட் எழுத்தாளர் ராமச்சந்திர குஹா, பிசிசிஐ-யில் கோலியின் அதிகாரம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். கோலியை எதிர்த்து அவரைக் கண்டித்து அடக்கும் பயிற்சியாளர், நிர…
-
- 0 replies
- 229 views
-
-
மோடிக்கும், தோனிக்கும் ‘சவால்’ விடுத்த விராட் கோலி விராட் கோலி, பிரதமர் மோடி, தோனி : கோப்புப்படம் விராட் கோலி, பிரதமர் மோடி, தோனி : கோப்புப்படம் பிரதமர் மோடிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்த சவாலை ஏற்றுக் கொள்வதாக மோடி பதில் ட்வீட் செய்துள்ளார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்தன் ரத்தோர் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு ட்வீட் செய்திருந்தார். அதில் பிரதமர் …
-
- 0 replies
- 1k views
-
-
இனி பந்தின் நிறம் பற்றிய கவலையில்லை: டெஸ்ட் பேட்டிங் வெற்றி குறித்து ஐபிஎல்-க்கு பெருமை சேர்க்கும் ஜோஸ் பட்லர் ஜோஸ் பட்லர். | படம். | ஏ.பி. ஐபிஎல் 2018 போட்டித் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய ஜோஸ் பட்லர் தனது அதிரடி பேட்டிங் மூலம் ராயல்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்ததோடு, இங்கிலாந்து டெஸ்ட் அணியிலும் அவர் மீண்டும் அழைக்கப்பட காரணமாக அமைந்தது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்தைப் பந்தாடினாலும் ஜோஸ் பட்லர் 67 ரன்களை எடுத்தார், 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து பழிதீர்ப்பு பதிலடி கொடுத்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஜோஸ் பட்லர் அதிரடி முறையில் 8…
-
- 0 replies
- 382 views
-
-
ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங்குக்கு இடம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் : கோப்புப்படம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், அணியின் ‘சுவர்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ராகுல் டிராவிட், ஆஸ்திரலேய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். ‘ஹால் ஆஃப் பேம்’ என்பது கிரிக்கெட்டில் வீரர்கள் செய்த சாதனை, பங்களிப்பு ஆகியவற்றுக்காக ஐசிசி வழங்கும் பட்டமாகும். இவர்கள் இருவரையும் தவிர்த்து இங்கிலாந்து மகளிர் அணியின் விக்கெட் கீப்பரும், ஓய்வு பெற்ற வீராங்கனையுமான கிளையர் டெய்லரும் ச…
-
- 0 replies
- 352 views
-
-
28 வருடத்திற்குப் பிறகு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1990-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தியுள்ளது. #PAKvAUS ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்தது. பின்னர் 184 ரன்கள…
-
- 0 replies
- 485 views
-
-
மோசமாக பேட் செய்தால் நீக்கப்படுவார்கள்; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு செல்லும்: பிசிசிஐ அதிரடி இந்திய அணி : கோப்புப்படம் இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்த தவறி மோசமாக பேட் செய்தால் இளம் வீரர்கள் அழைக்கப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம்(பிசிசிஐ) தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது, ஒருநாள் தொடரை 2-1 என்று பறிகொடுத்தது. டெஸ்ட் தொடரில் கேப்டன் விராட் கோலி, புஜாரா, ரஹானே, ராகுல் தவிர மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இது பெரு…
-
- 0 replies
- 549 views
-
-
1983ல் உலக கோப்பையை அதிருஷ்டத்தால் இல்லை.. திறமையால்தான் வென்றது இந்தியா: விவ் ரிச்சர்ட்ஸ் துபாய்: 1983ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்லும் அளவுக்கு தகுதியானதாகவே இருந்தது என்று விவ் ரிச்டர்ஸ்ட் தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு உலக கோப்பையில், கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக சாம்யன் பட்டத்தை வென்றது. இறுதி போட்டியில், அப்போதைய நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது இந்தியா. 2 உலக கோப்பைகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள், 3வது உலக கோப்பையை இந்தியாவிடம் பறிகொடுத்தது. அதிருஷ்டத்தால் கிடைத்த வெற்றியா.. அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி அசைக்க முடியாத பலம் கொண்டதாக இருந்தது. எனவே இந்தியாவின் வெற்றியை பலரும் அதிருஷ்டத்த…
-
- 0 replies
- 457 views
-
-
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்: அப்ரிடி வரவிருக்கும் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் இங்கிலாந்துக்கே வெற்றி வாய்ப்பு சாத்தியம் இருப்பதாக பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக சொந்தமண்ணில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை இழந்ததில்லை. இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் அப்ரிடி கூறும்போது, “உள்நாட்டில் விளையாடுவதால் இங்கிலாந்துக்கு சாதகங்கள் அதிகம். இங்கிலாந்தில் எப்படி வீச வேண்டும் என்பதை அந்த அணியின் பவுலர்கள் நன்கு அறிவார்கள். இங்கிலாந்தில் அவர்கள் சிறப்பாக வீசுவதை நாம் பார்த்து வருகிறோம், மற்ற நாடுகளில் அவர்கள் சோபிக்க முடிவதில்லை. ஒருநாள் போட்டிகளில் அவர்கள…
-
- 0 replies
- 381 views
-
-
விருதும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்... புலம்பியபடி வெளியேறிய மெஸ்சி! பொதுவாகவே அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.. பார்சிலோனா அணிக்காக விளையாடும் போது அபாரமாக ஆடுவார் என்றும் தாய்நாட்டுக்காக விளையாடும் போது சொதப்புவார் என்பதுதான் அந்த குற்றச்சாட்டு. கால்பந்து தனிநபர் போட்டி அல்ல. பார்சிலோனாவில் கையாள்வது பெரும்பாலும் ஸ்பெயினின் டிக்கி டாக்கா ஆட்டம். டிக்கி டாக்காவால் எதிரணி வீரர்களுக்கு பந்து அவ்வளவாக கிடைக்காது. வாய்ப்பு கிடைக்கும் போது மிக எளிதாக கோலுக்குள் பந்து போகும். அது தவிர அங்கே சேவி, இனியஸ்டா போன்றவர்கள் மெஸ்சிக்கு பந்தை சப்ளை செய்வதில் கை தேர்ந்தவர்கள்.அர்ஜென்டினா அணியில் பார்சிலோனாவின் ஜேவியர் மச்சரானோ, பாரீஸ் செயின்ட் ஜெ…
-
- 0 replies
- 350 views
-
-
ஜனாதிபதி முதல் சமானியன் வரை சானியா பத்திதான் பேச்சு...! விம்பிள்டன் மகளிர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஷா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து பட்டம் வென்றுள்ளார். விம்பிள்டன் வரலாற்றில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சானியாதான். இதையடுத்து அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சானியாவுக்கு வாழ்த்துக்கள்... இளம் இந்தியர்களுக்கு உங்கள் சாதனை ஊக்க சக்தியாக அமையட்டும் என்று தெரிவித்துள்ளார். அருமையான டென்னிஸ் விளையாட்டை வெளிப்படுத்தி, அற்புதமான வெற்றியை ஈட்டியுள்ள உங்களால் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்து செ…
-
- 0 replies
- 284 views
-
-
சாம்பியன்ஸ் லீக் : இறுதிப் போட்டிக்கு ரொட்டன்ஹேம் அணி தகுதி பெற்றுள்ளது! ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்கு இடையே பல்வேறு மைதானங்களில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு ரொட்டன்ஹேம் (Tottenham) அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி போட்டியின் 2 வது லெக் ஆட்டத்தில் அஜாக்ஸ் அணியை ரொட்டன்ஹேம் அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் அஜாக்ஸ் அணி வீரர்கள் 2 கோல்கள் அடித்து அசத்தினார்கள். இரண்டாவது பாதியில் ரொட்டன்ஹேம் வீரர் லூகாஸ் மோரா அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அணிக்கு பலம் சேர்ந்தார். போட்டியில் வெற்றி பெற மேலும் ஒரு கோல் தேவைப்பட்ட நிலையில், லூகாஸ் மோரா ஒரு கோல் அடித்து…
-
- 0 replies
- 506 views
-
-
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தாரிந்து கவுஷல் தூஸ்ரா வீச ஐசிசி தடை தூஸ்ரா வீச தடை செய்யப்பட்ட இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தாரிந்து கவுஷல். | படம்: ராய்ட்டர்ஸ். இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் ஆஃப் ஸ்பின்னர் தாரிந்து கவுஷல் சர்வதேச போட்டிகளில் தூஸ்ரா வீச ஐசிசி தடை விதித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியின் போது தாரிந்து கவுஷல் பந்து வீச்சு மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை ராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில் உள்ள சோதனைக் கூடத்தில் தாரிந்து கவுஷலின் பந்துவீச்சு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இவர் ஆஃப் ஸ்பின் வீசும் போது முழங்கை 15 டிகிரிக்கும் குறைவாக மடங்குவது தெரியவந்தது. ஆனால் தூஸ்ரா வீ…
-
- 0 replies
- 182 views
-
-
ரஷ்ய கிராண்ட் ப்ரீ போட்டிகளில் லூயிஸ் ஹாமில்டன் வெற்றி ரஷ்ய கிராண்ட் ப்ரீ போட்டிகளில் மெர்சிடிஸ் அணியின் ஃபார்முலா ஒன் வீரர் லூயிஸ் ஹாமில்டன் வெற்றிபெற்றுள்ளார். ஸோச்சியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பல விபத்துக்களும் நடந்துள்ளன. ஹாமில்டனின் மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்த சக போட்டியாளர் நிகோ ரோஸ்பெர்க், காரின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பந்தயத்திலிருந்து வெளியேற நேர்ந்தது. ஃபெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டல் இரண்டாவது இடத்துக்கு வந்தார். ஃபோர்ஸ் இந்தியா அணியைச் சேர்ந்த செர்கியோ பெரெஸ் மூன்றாவது இடத்தைப் பெற்றார். ஸ்பெயின் ஃபார்முலா ஒன் வீரர் கார்லோஸ் செயின்ஸ், கடந்த சனியன்று பயிற்சியின்போது எதிர்நோக்கியிருந்த விபத்துக்குப் பின்னரும் இன்றைய பந்தயத்தில் கலந்து…
-
- 0 replies
- 893 views
-
-
கொல்கத்தாவின் பயிற்சியாளரானார் October 24, 2015 அடுத்த ஆண்டுக்கான ஐ.பி .எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்னாபிரிக்க முன்னாள் வீரர் கலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் கொல்கத்தாவின் பயிற்சியாளராக இருந்த பெலிஸ், ஜூன் மாதம் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக சென்று விட் டார். இதையடுத்து கலிஸ் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தமாகியுள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=2481&cat=2
-
- 0 replies
- 339 views
-
-
குழம்பிய டேவிட் பூண்: பந்துவீசிய சாமுவேல்ஸ் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவராகச் செயற்பட்ட மார்லன் சாமுவேல்ஸ், சர்வதேசக் கிரிக்கெட் சபையின் போட்டி மத்தியஸ்தரான டேவிட் பூணின் தவறால், பந்துவீச அனுமதிக்கப்பட்டார். இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பந்தை வீசியெறிகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சாமுவேல்ஸ், 14 நாட்களுக்குள் அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென்பதோடு, அவ்வாறு சோதிக்கப்பட்டால், அதன் முடிவுகள் வரும்வரை பந்துவீச அனுமதிக்கப்படுவார். ஆனால், குறித்த காலத்தை 21 நாட்கள் என டேவிட் பூண் அறிவிக்க, போட்டி ஆரம்பித்த பின்னரே சாமுவேல்ஸ் பந்துவீச அனுமதிக்கப்படமாட்டார் என அறிவிக்க…
-
- 0 replies
- 296 views
-
-
லா லிகா கால்பந்து போட்டியில் 35 ஆவது முறையாக ‘ஹெட்ரிக்’ கோல் அடித்து மெஸ்சி சாதனை படைத்துள்ளார். ஸ்பெயினில், கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பார்சிலோனா அணி 5-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாலோர்கோவை தோற்கடித்தது. பார்சிலோனா வீரர் லூயிஸ் சுவாரஸ் 43 ஆவது நிமிடத்தில் பின்வாக்கில் உதைத்த பந்து கோலுக்குள் நுழைந்ததை பார்த்த ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இதே போல் பார்சிலோனா முன்னணி வீரர் லயோனல் மெஸ்சி ‘ஹெட்ரிக்’ கோல் அடித்ததமையும் இந்த ஆட்டத்தில் இன்னொரு சிறப்பம்சமாகும். இது அவருக்கு 35 ஆவது ‘ஹாட்ரிக்’ ஆகும். இதன் மூலம் லா லிகா …
-
- 0 replies
- 503 views
-
-
தவறல்ல அக்கறையின்மை 'கோடியில் ஒருத்தி' ஷரபோவா சரிந்தது ஏன்? ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா நேற்று முன்தினம் (07-03-2016), அன்று வைத்த பிரஸ்மீட் சர்வதேச டென்னிஸ் ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஒதுக்குபுறமாக நடந்த அந்த பிரஸ்மீட்டில் இருந்த செய்தியாளர்களுக்கு காயம் காரணமாக ஓய்வு அறிவிப்பார் என்றுதான் எதிர்பார்த்து சென்றனர். ஏனென்றால் சில காலமாகவே தோள்பட்டை வலியால் அவர் அவதிப்பட்டு வந்தார். ஆனால் பிரஸ்மீட்டில் ''இந்த ஆண்டின் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆஸ்ட்ரேலியன் ஓப்பன் போட்டியில் நடத்தப்பட்ட "ஊக்க மருந்து கண்டுபிடிப்பு சோதனையில் தான் தோல்வி அடைந்ததாகக் ஷரபோவா கூற …
-
- 0 replies
- 592 views
-
-
ஒலிம்பிக்கில் “மூன்று - மூன்று” வரலாற்றுச் சாதனையை நெருங்கும் உசைன் போல்ட் ஒலிம்பிக் போட்டியில் மூன்று முறை தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வென்றிருக்கும் உசைன் போல்ட், இந்த சாதனையை படைத்திருக்கும் முதலாவது நபர் என்ற பெருமை பெற்றிருக்கிறார். ரியோவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் ஜமைக்கா தளகட வீரரான உசைன் போல்ட் 9.81 வினாடிகளில் ஓடி, தன்னுடைய முக்கிய போட்டியாளரான அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினை விட முன்னிலை பெற்றார். இந்த வெற்றியானது, ஒலிம்பிக்கில் ”மூன்று - மூன்று” அதாவது 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம் என மூன்று போட்டிகளில் மூன்று முறை தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வெல்லும் வரலாற்று சாதனைக்கு நெருக்கமாக அ…
-
- 0 replies
- 278 views
-