விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங்குக்கு இடம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் : கோப்புப்படம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், அணியின் ‘சுவர்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ராகுல் டிராவிட், ஆஸ்திரலேய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். ‘ஹால் ஆஃப் பேம்’ என்பது கிரிக்கெட்டில் வீரர்கள் செய்த சாதனை, பங்களிப்பு ஆகியவற்றுக்காக ஐசிசி வழங்கும் பட்டமாகும். இவர்கள் இருவரையும் தவிர்த்து இங்கிலாந்து மகளிர் அணியின் விக்கெட் கீப்பரும், ஓய்வு பெற்ற வீராங்கனையுமான கிளையர் டெய்லரும் ச…
-
- 0 replies
- 356 views
-
-
28 வருடத்திற்குப் பிறகு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1990-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தியுள்ளது. #PAKvAUS ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்தது. பின்னர் 184 ரன்கள…
-
- 0 replies
- 496 views
-
-
மோசமாக பேட் செய்தால் நீக்கப்படுவார்கள்; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு செல்லும்: பிசிசிஐ அதிரடி இந்திய அணி : கோப்புப்படம் இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்த தவறி மோசமாக பேட் செய்தால் இளம் வீரர்கள் அழைக்கப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம்(பிசிசிஐ) தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது, ஒருநாள் தொடரை 2-1 என்று பறிகொடுத்தது. டெஸ்ட் தொடரில் கேப்டன் விராட் கோலி, புஜாரா, ரஹானே, ராகுல் தவிர மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இது பெரு…
-
- 0 replies
- 553 views
-
-
1983ல் உலக கோப்பையை அதிருஷ்டத்தால் இல்லை.. திறமையால்தான் வென்றது இந்தியா: விவ் ரிச்சர்ட்ஸ் துபாய்: 1983ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்லும் அளவுக்கு தகுதியானதாகவே இருந்தது என்று விவ் ரிச்டர்ஸ்ட் தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு உலக கோப்பையில், கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக சாம்யன் பட்டத்தை வென்றது. இறுதி போட்டியில், அப்போதைய நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது இந்தியா. 2 உலக கோப்பைகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள், 3வது உலக கோப்பையை இந்தியாவிடம் பறிகொடுத்தது. அதிருஷ்டத்தால் கிடைத்த வெற்றியா.. அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி அசைக்க முடியாத பலம் கொண்டதாக இருந்தது. எனவே இந்தியாவின் வெற்றியை பலரும் அதிருஷ்டத்த…
-
- 0 replies
- 462 views
-
-
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்: அப்ரிடி வரவிருக்கும் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் இங்கிலாந்துக்கே வெற்றி வாய்ப்பு சாத்தியம் இருப்பதாக பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக சொந்தமண்ணில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை இழந்ததில்லை. இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் அப்ரிடி கூறும்போது, “உள்நாட்டில் விளையாடுவதால் இங்கிலாந்துக்கு சாதகங்கள் அதிகம். இங்கிலாந்தில் எப்படி வீச வேண்டும் என்பதை அந்த அணியின் பவுலர்கள் நன்கு அறிவார்கள். இங்கிலாந்தில் அவர்கள் சிறப்பாக வீசுவதை நாம் பார்த்து வருகிறோம், மற்ற நாடுகளில் அவர்கள் சோபிக்க முடிவதில்லை. ஒருநாள் போட்டிகளில் அவர்கள…
-
- 0 replies
- 384 views
-
-
விருதும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்... புலம்பியபடி வெளியேறிய மெஸ்சி! பொதுவாகவே அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.. பார்சிலோனா அணிக்காக விளையாடும் போது அபாரமாக ஆடுவார் என்றும் தாய்நாட்டுக்காக விளையாடும் போது சொதப்புவார் என்பதுதான் அந்த குற்றச்சாட்டு. கால்பந்து தனிநபர் போட்டி அல்ல. பார்சிலோனாவில் கையாள்வது பெரும்பாலும் ஸ்பெயினின் டிக்கி டாக்கா ஆட்டம். டிக்கி டாக்காவால் எதிரணி வீரர்களுக்கு பந்து அவ்வளவாக கிடைக்காது. வாய்ப்பு கிடைக்கும் போது மிக எளிதாக கோலுக்குள் பந்து போகும். அது தவிர அங்கே சேவி, இனியஸ்டா போன்றவர்கள் மெஸ்சிக்கு பந்தை சப்ளை செய்வதில் கை தேர்ந்தவர்கள்.அர்ஜென்டினா அணியில் பார்சிலோனாவின் ஜேவியர் மச்சரானோ, பாரீஸ் செயின்ட் ஜெ…
-
- 0 replies
- 354 views
-
-
ஜனாதிபதி முதல் சமானியன் வரை சானியா பத்திதான் பேச்சு...! விம்பிள்டன் மகளிர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஷா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து பட்டம் வென்றுள்ளார். விம்பிள்டன் வரலாற்றில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சானியாதான். இதையடுத்து அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சானியாவுக்கு வாழ்த்துக்கள்... இளம் இந்தியர்களுக்கு உங்கள் சாதனை ஊக்க சக்தியாக அமையட்டும் என்று தெரிவித்துள்ளார். அருமையான டென்னிஸ் விளையாட்டை வெளிப்படுத்தி, அற்புதமான வெற்றியை ஈட்டியுள்ள உங்களால் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்து செ…
-
- 0 replies
- 288 views
-
-
சாம்பியன்ஸ் லீக் : இறுதிப் போட்டிக்கு ரொட்டன்ஹேம் அணி தகுதி பெற்றுள்ளது! ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்கு இடையே பல்வேறு மைதானங்களில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு ரொட்டன்ஹேம் (Tottenham) அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி போட்டியின் 2 வது லெக் ஆட்டத்தில் அஜாக்ஸ் அணியை ரொட்டன்ஹேம் அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் அஜாக்ஸ் அணி வீரர்கள் 2 கோல்கள் அடித்து அசத்தினார்கள். இரண்டாவது பாதியில் ரொட்டன்ஹேம் வீரர் லூகாஸ் மோரா அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அணிக்கு பலம் சேர்ந்தார். போட்டியில் வெற்றி பெற மேலும் ஒரு கோல் தேவைப்பட்ட நிலையில், லூகாஸ் மோரா ஒரு கோல் அடித்து…
-
- 0 replies
- 509 views
-
-
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தாரிந்து கவுஷல் தூஸ்ரா வீச ஐசிசி தடை தூஸ்ரா வீச தடை செய்யப்பட்ட இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தாரிந்து கவுஷல். | படம்: ராய்ட்டர்ஸ். இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் ஆஃப் ஸ்பின்னர் தாரிந்து கவுஷல் சர்வதேச போட்டிகளில் தூஸ்ரா வீச ஐசிசி தடை விதித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியின் போது தாரிந்து கவுஷல் பந்து வீச்சு மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை ராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில் உள்ள சோதனைக் கூடத்தில் தாரிந்து கவுஷலின் பந்துவீச்சு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இவர் ஆஃப் ஸ்பின் வீசும் போது முழங்கை 15 டிகிரிக்கும் குறைவாக மடங்குவது தெரியவந்தது. ஆனால் தூஸ்ரா வீ…
-
- 0 replies
- 189 views
-
-
ரஷ்ய கிராண்ட் ப்ரீ போட்டிகளில் லூயிஸ் ஹாமில்டன் வெற்றி ரஷ்ய கிராண்ட் ப்ரீ போட்டிகளில் மெர்சிடிஸ் அணியின் ஃபார்முலா ஒன் வீரர் லூயிஸ் ஹாமில்டன் வெற்றிபெற்றுள்ளார். ஸோச்சியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பல விபத்துக்களும் நடந்துள்ளன. ஹாமில்டனின் மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்த சக போட்டியாளர் நிகோ ரோஸ்பெர்க், காரின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பந்தயத்திலிருந்து வெளியேற நேர்ந்தது. ஃபெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டல் இரண்டாவது இடத்துக்கு வந்தார். ஃபோர்ஸ் இந்தியா அணியைச் சேர்ந்த செர்கியோ பெரெஸ் மூன்றாவது இடத்தைப் பெற்றார். ஸ்பெயின் ஃபார்முலா ஒன் வீரர் கார்லோஸ் செயின்ஸ், கடந்த சனியன்று பயிற்சியின்போது எதிர்நோக்கியிருந்த விபத்துக்குப் பின்னரும் இன்றைய பந்தயத்தில் கலந்து…
-
- 0 replies
- 896 views
-
-
கொல்கத்தாவின் பயிற்சியாளரானார் October 24, 2015 அடுத்த ஆண்டுக்கான ஐ.பி .எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்னாபிரிக்க முன்னாள் வீரர் கலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் கொல்கத்தாவின் பயிற்சியாளராக இருந்த பெலிஸ், ஜூன் மாதம் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக சென்று விட் டார். இதையடுத்து கலிஸ் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தமாகியுள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=2481&cat=2
-
- 0 replies
- 349 views
-
-
குழம்பிய டேவிட் பூண்: பந்துவீசிய சாமுவேல்ஸ் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவராகச் செயற்பட்ட மார்லன் சாமுவேல்ஸ், சர்வதேசக் கிரிக்கெட் சபையின் போட்டி மத்தியஸ்தரான டேவிட் பூணின் தவறால், பந்துவீச அனுமதிக்கப்பட்டார். இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பந்தை வீசியெறிகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சாமுவேல்ஸ், 14 நாட்களுக்குள் அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென்பதோடு, அவ்வாறு சோதிக்கப்பட்டால், அதன் முடிவுகள் வரும்வரை பந்துவீச அனுமதிக்கப்படுவார். ஆனால், குறித்த காலத்தை 21 நாட்கள் என டேவிட் பூண் அறிவிக்க, போட்டி ஆரம்பித்த பின்னரே சாமுவேல்ஸ் பந்துவீச அனுமதிக்கப்படமாட்டார் என அறிவிக்க…
-
- 0 replies
- 300 views
-
-
லா லிகா கால்பந்து போட்டியில் 35 ஆவது முறையாக ‘ஹெட்ரிக்’ கோல் அடித்து மெஸ்சி சாதனை படைத்துள்ளார். ஸ்பெயினில், கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பார்சிலோனா அணி 5-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாலோர்கோவை தோற்கடித்தது. பார்சிலோனா வீரர் லூயிஸ் சுவாரஸ் 43 ஆவது நிமிடத்தில் பின்வாக்கில் உதைத்த பந்து கோலுக்குள் நுழைந்ததை பார்த்த ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இதே போல் பார்சிலோனா முன்னணி வீரர் லயோனல் மெஸ்சி ‘ஹெட்ரிக்’ கோல் அடித்ததமையும் இந்த ஆட்டத்தில் இன்னொரு சிறப்பம்சமாகும். இது அவருக்கு 35 ஆவது ‘ஹாட்ரிக்’ ஆகும். இதன் மூலம் லா லிகா …
-
- 0 replies
- 510 views
-
-
தவறல்ல அக்கறையின்மை 'கோடியில் ஒருத்தி' ஷரபோவா சரிந்தது ஏன்? ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா நேற்று முன்தினம் (07-03-2016), அன்று வைத்த பிரஸ்மீட் சர்வதேச டென்னிஸ் ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஒதுக்குபுறமாக நடந்த அந்த பிரஸ்மீட்டில் இருந்த செய்தியாளர்களுக்கு காயம் காரணமாக ஓய்வு அறிவிப்பார் என்றுதான் எதிர்பார்த்து சென்றனர். ஏனென்றால் சில காலமாகவே தோள்பட்டை வலியால் அவர் அவதிப்பட்டு வந்தார். ஆனால் பிரஸ்மீட்டில் ''இந்த ஆண்டின் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆஸ்ட்ரேலியன் ஓப்பன் போட்டியில் நடத்தப்பட்ட "ஊக்க மருந்து கண்டுபிடிப்பு சோதனையில் தான் தோல்வி அடைந்ததாகக் ஷரபோவா கூற …
-
- 0 replies
- 595 views
-
-
ஒலிம்பிக்கில் “மூன்று - மூன்று” வரலாற்றுச் சாதனையை நெருங்கும் உசைன் போல்ட் ஒலிம்பிக் போட்டியில் மூன்று முறை தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வென்றிருக்கும் உசைன் போல்ட், இந்த சாதனையை படைத்திருக்கும் முதலாவது நபர் என்ற பெருமை பெற்றிருக்கிறார். ரியோவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் ஜமைக்கா தளகட வீரரான உசைன் போல்ட் 9.81 வினாடிகளில் ஓடி, தன்னுடைய முக்கிய போட்டியாளரான அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினை விட முன்னிலை பெற்றார். இந்த வெற்றியானது, ஒலிம்பிக்கில் ”மூன்று - மூன்று” அதாவது 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம் என மூன்று போட்டிகளில் மூன்று முறை தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வெல்லும் வரலாற்று சாதனைக்கு நெருக்கமாக அ…
-
- 0 replies
- 282 views
-
-
பாராலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடி ஏந்திச் சென்றார் மாரியப்பன் மாரியப்பன் தங்கவேல் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த 7-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 160 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 22 விளை யாட்டுக்களில் 528 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 11 நாட்கள் நடந்த இந்த விளை யாட்டு திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சிகள், வரலாற்று சிறப்பு மிக்க மரக்கானா ஸ்டேடியத்தில், வண்ணமயமான வாண வேடிக் கைகளுடன் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடை பெற்றது. பல்வேறு நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, சைக்கிள் பந்தயத்தின்போது உயிரிழந்த ஈரான் வீரர் பஹ்மன் கோல…
-
- 0 replies
- 406 views
-
-
மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 பேர் ஒப்பந்தத்தில் கைச்சாத்து இலங்கை கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தில் ஏஞ்சலோ மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், ரங்கன ஹேரத், தினேஸ் சந்திமால், திமுது கருணாரத்ன, குசேல் ஜனித் பெரேரா, சுரங்க லக்மால், லஹிரு திரிமான, தில்ருவன் பெரேரா, குசேல் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன, நுவான் பிரதீப், கௌசல் சில்வா, தனஞ்சய டி சில்வா, துஷ்மந்த சமிர, தனுஸ்க குணதிலக, ஜெப்ரி வெண்டர்சே, லக்ஷான் சந்தகன் ஆகியோரே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/12590
-
- 0 replies
- 239 views
-
-
விவியன் ரிச்சர்ட்ஸ் + சச்சின் + ரிக்கி பாண்டிங் = கோஹ்லி! சொல்வது யார்? கோஹ்லிக்கு பாராட்டுகள் 360 டிகிரியில் வந்து கொண்டேதான் இருக்கின்றன. இப்போது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மொகிந்தர் அமர்நாத் டர்ன். கொஞ்சம் அதீதமாக தோன்றினாலும் பரவாயில்லை என கோஹ்லியை விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின், ரிக்கி பாண்டிங் சேர்ந்த காம்போ என்கிறார் அமர்நாத். கோஹ்லியை பற்றி அவர் வாசித்த பாராட்டுப் பத்திரம் இதோ... ”ஒரே வீரரை திரும்ப திரும்ப புகழ்வது சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், விராட் கோஹ்லியைப் புகழ்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. கோஹ்லியைப் போல ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்ச்சியாக நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய பேட்ஸ்மேனைப் பார்த்ததில்லை. உண்…
-
- 0 replies
- 312 views
-
-
கோலியின் அதி துணிச்சல் ஆட்டம்: ஓர் அலசல் கோலி, கிறிஸ் வோக்ஸ் பந்தில் சிக்ஸ் அடித்த அந்த அரிதான, கடினமான ஷாட். இங்கிலாந்துக்கு எதிராக புனே ஒருநாள் போட்டியில் 64/4 என்ற நிலையிலிருந்து இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்ற கோலி மற்றும் கேதர் ஜாதவ்வின் சதங்களில் கோலியின் ஆட்டம் வேறு ஒரு துணிச்சல் பரிமாணத்தை எட்டியுள்ளது. கேதர் ஜாதவ்வின் வேகமான அதிரடி சதமும் கோலியின் துணிச்சலுக்கு இணையாக அமைந்தது. ஆரம்ப கால சச்சின், பிறகு சேவாக், லாரா, கில்கிறிஸ்ட், ஜெயசூரியா, இன்றும் தொடரும் கிறிஸ் கெய்ல், கெவின் பீட்டர்சன் ஆகியோரது அதி துணிச்சல் ரக அலாதியான ஷாட்களை கோலி தனது 122 ரன்களில் ஆடியது குறிப்பிடத்தக்கது. மேற்கூற…
-
- 0 replies
- 502 views
-
-
டி20 பிளாஸ்ட் லீக்: லங்காஷைர் அணியுடன் ஜெயவர்தனே ஒப்பந்தம் இங்கிலாந்தின் ‘டி20 பிளாஸ்ட்’ கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட லங்காஷைர் அணியுடன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணியின் கேப்டனாகவும், முன்னணி பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் மகேலா ஜெயவர்தனே. 39 வயதாகும் இவர், 2014-ம் ஆண்டு இலங்கை அணி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வாங்க முக்கிய காரணமாக இருந்தார். டி20 கிரிக்கெட்டில் 5455 ரன்கள் குவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ளார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற…
-
- 0 replies
- 290 views
-
-
உலகின் பணக்கார கால்பந்து கிளப்பாக மான்செஸ்டர் யுனைடெட் அணி தேர்வு டெலாய்ட் நிறுவனம் வருமானம் அடிப்படையில் உலகின் தலைசிறந்த பணக்கார கால்பந்து கிளப்-ஐ தேர்வு செய்தது. இதில் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் மான்செஸ்ர் யுனைடெட் அணி 2-வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது. ரியல் மாட்ரிட் 2-வது இடத்தையும், பார்சிலோனா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் கிளப் 10-வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது. 2016-17 சீசனில் ஈட்டிய வருமானம் அடிப்படையில் கிளப்புகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. யூரோவில் கொடுக்கப்பட்டுள்ளது. 1. மான்செஸ்டர் யுனைடெட் (676.3 மில்லியன்) 2. ரியல் …
-
- 0 replies
- 201 views
-
-
இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அஸ்வின் திகழ்கிறார்: சையத் கிர்மானி புகழாரம் ரவிச்சந்திர அஸ்வின் : கோப்புப் படம் கிரிக்கெட் விளையாட்டில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனைகளும், அர்ப்பணிப்பும், இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக் இருக்கிறது என்று இந்தியஅணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மாணி புகழாரம் சூட்டினார் சென்னை ரோட்டரி சார்பில் தமிழக வீரரும், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு “ ஐக்கான் ஆப் சென்னை” விருது இன்று வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தியஅணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மாணி, அஸ்வினுக்கு வழங்கினார். …
-
- 0 replies
- 241 views
-
-
உலக கோப்பை தகுதிச்சுற்று - ஜிம்பாப்வேயை வீழ்த்தியது யுனைடெட் அரபு எமிரேட்ஸ் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான சூப்பர் சிக்ஸ் தகுதிச்சுற்றில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியிடம் ஜிம்பாப்வே அணி 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. #ICCWCQ #Zimbabwe #Unitedarabemirates உலக கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான போட்டியில் ஜிம்பாப்வே - யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணிகள் ஜிம்பாப்வேயில் நேற்று மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங்கை தேர்வு செ…
-
- 0 replies
- 501 views
-
-
இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பின் பிரகாரம் செயற்படாத பட்சத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருக்கு கடிதம் ஒன்றில் அனுப்பி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்தளு. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று விளையாட்டுச் சட்டத்தில் சில புதிய ஒழுங்குமுறைகளை உள்ளடக்கியிருந்ததோடு, அதற்கு எதிராக தற்போது பல தேசிய விளையாட்டு சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனமும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன…
-
- 0 replies
- 841 views
-
-
செய்தித்துளிகள்: வார்னருக்கு அனுமதி கொரியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் இந்தியா தனது 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று 3-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் குர்ஜித் கவுர், வந்தனா கட்டாரியா, லால்ரெம்ஷியாமி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி ஜப்பானையும், சீனாவையும் வீழ்த்தியிருந்ததால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறும் ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. போட்டியை நட…
-
- 0 replies
- 437 views
-