விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
வட மாகாணத்தில் புதிய சாதனையை நிலை நாட்டிய வவுனியா நேர்மதி வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் செல்வி நேர்மதி கிட்ணசாமி 2015 ம் ஆண்டு வடமாகாண மட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டு போட்டியில் புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளார். 19வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டம், 1500 மீற்றர் ஓட்டம், 5000 மீற்றர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் முதலாம் இடங்களை பெற்றுத் தேசியமட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 800 மீற்றர் தூரத்தினை 2.36.3 நேரத்திலும் 1500மீற்றர் ஓட்டத்தினை 5.25.0 என்ற நேரத்திலும் ஓடிமுடித்து வடமாகாணத்தில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். http://www.newjaffna.com/moreartical.php?newsid=39609&cat=sports&sel=current&subcat=…
-
- 8 replies
- 450 views
-
-
சிஎஸ்கேவை காப்பாற்று.. சேப்பாக்கம் நோக்கி மஞ்ச சட்டையோடு ஆரவாரமாக கிளம்பும் ரசிகர்கள் சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க பிசிசிஐ அமைப்பை வலியுறுத்துவதற்காக SaveCSK என்ற பெயரில் பேஸ்புக் பக்கம் திறந்துள்ளனர் சென்னை ரசிகர்கள். மேலும், ஆகஸ்ட் 1ம் தேதி, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கையெழுத்து இயக்கமும் நடத்த உள்ளனர். ஐபிஎல் அணிகளிலேயே அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதை பேஸ்புக் போன்ற நிறுவனங்களும் ஆய்வு செய்து அறிவித்திருந்தன. இந்நிலையில்தான், கிரிக்கெட் சூதாட்டம் பற்றி லோதா கமிட்டி அளித்த தீர்ப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரு வருடங்கள் ஐபிஎல் தொடரில் ஆட தடை விதிக்கப்பட்டுவதாக தெரி…
-
- 0 replies
- 401 views
-
-
டோனியின் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகிய சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார். ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை இந்திய அணித்தலைவர் டோனியின் நண்பர் நடத்தி வருகிறார். மேலும்இ இதில் பெரும்பாலான பங்குகள் டோனியிடம் இருப்பதாக கூறப்படுகிறது. சுரேஷ் ரெய்னாவின் விளம்பரம் தொடர்பான அனைத்தையும் இந்த நிறுவனம் தான் கவனித்து வந்தது. இந்த நிலையில் ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகிய ரெய்னா, தற்போது ஐ.ஒ.எஸ். ஸ்போர்ட்ஸ் மற்றும் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த நிறுவனம் ரெய்னாவை 3 ஆண்டுக்கு ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம் செய்து உள்ளது. இதற்கான ஒப்பந்தத…
-
- 0 replies
- 238 views
-
-
'டக் அவுட்' பிரபலம் லார்ட்சில் சதமடித்தது எப்படி? இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர், எதுக்கு ரொம்ப ஃபேமஸ்னு கேட்டா... சின்னப்புள்ள கூட கண்ண மூடிட்டு சொல்லும் டக் அவுட்டுக்கு ரொம்ப பேமஸ்னு. அஜித் அகர்கர் தொடர்ந்து 7 முறை டக்அவுட் ஆகியெல்லாம் வரலாறு படைத்துள்ளார். இதில் 4 முறை, முதல் பந்திலேயே மனிதர் வெளியேறியிருக்கிறார். இப்படி 'டக் அவுட்' ஆகியே பிரபலம் ஆன அஜித் அகர்கர், லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து அசத்தியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? கடந்த 2002ஆம் ஆண்டு இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதே நாளில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அஜித் அகர்கர் 190 பந்துகளில், 109 ரன்களை அடித்து அசத்தினார். இதில் 1…
-
- 0 replies
- 505 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் எனக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கவில்லை: சுரேஷ் ரெய்னா ஆதங்கம் 2011 இங்கிலாந்து தொடரில், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கிரேம் ஸ்வான் பந்தில் எல்.பி.ஆகி டக் அடித்த சுரேஷ் ரெய்னா. | படம்: ராய்ட்டர்ஸ். ஜேம்ஸ் ஆண்டர்சன் பவுன்சருக்கு கண்களை மூடிக் கொண்டு எம்பிக் குதிக்கும் சுரேஷ் ரெய்னா. | படம்: ஏ.எஃப்.பி. தான் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்பதை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் தனக்கு வழங்கப்படவில்லை என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் இது குறித்து அளித்த பேட்டியில் கூறும்போது, “ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சீரான முறையில் ரன்களை எடுத்து வருகிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் கூட ரன்கள் எடுத்தேன். ஆனால், 2012-ம் ஆண்டு 3 டெஸ்ட் இ…
-
- 0 replies
- 313 views
-
-
அப்துல் கலாம் மறைவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மவுன அஞ்சலி! சென்னை:குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மவுனஅஞ்சலி செலுத்தினர். சென்னை சேப்பக்கம் மைதானத்தில் இந்திய -ஆஸ்திரேலிய 'ஏ ' அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. முன்னதாக இந்த போட்டி தொடங்கும் முன், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 2 நிமிடம் மவுனஅஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. அதோடு இரு அணி வீரர்களும் கறுப்பு பட்டையை கையில் அணிந்தவாறு விளையாடினர். இந்திய அணி 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வ…
-
- 0 replies
- 341 views
-
-
பத்திரிகையாளரை தாக்கிய மெக்சிகோ கால்பந்து அணியின் பயிற்சியாளர் நீக்கம் ! பத்திரிகையாளர் ஒருவரை தாக்கியதால் மெக்சிகோ கால்பந்து அணியின் பயிற்சியாளர் மிகுவேல் ஹெரைரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த 'கான்காப்' தங்க கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோ அணி, இறுதி ஆட்டத்தில் ஜமைக்கா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் கோப்பையை வென்ற 24 மணி நேரத்துக்குள், மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் மிகுவேல் ஹெரைரா, தொலைக்காட்சி நிருபர் ஒருவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த திங்கட்கிழமை பிலடெல்பியா விமான நிலையத்தில் வைத்து, அஸ்டெகா தொலைக்காட்சியின் நிருபரான கிறிஸ்டியன் மார்ட்டினோலியின் முகத்தில் மிகுவேல் குத்தியுள்ளார்…
-
- 0 replies
- 211 views
-
-
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிளைவ் ரைஸ் மரணம் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிளைவ் ரைஸ் காலமானார். | கோப்புப் படம். உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்படுபவரும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான கிளைவ் ரைஸ் கேப்டவுனில் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. அவர் சிறிது காலமாக மூளைக்கட்டி நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கேப்டவுன் மருத்துவமனையில் செவ்வாயன்று அவரது உயிர் பிரிந்தது. கடந்த மார்ச் மாதம் புற்று நோய் தொடர்பான சிகிச்சைக்காக பெங்களூரு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வலது கை வேகப்பந்து வீச்சாளரும், பேட்ஸ்மெனும் ஆவார். ஆல்ரவுண்டரான கிளைவ் ரைஸ் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில்…
-
- 0 replies
- 305 views
-
-
டெஸ்ட் அணியில் எனது இடம் சற்றே சிக்கலில்தான் உள்ளது: ரோஹித் சர்மா ரோஹித் சர்மா. | படம்: ஏ.எஃப்.பி. மே.இ.தீவுகளுக்கு எதிரான தனது அறிமுக தொடரில் 2 சதங்களை அடித்த ரோஹித் சர்மா அதன் பிறகு 17 டெஸ்ட் இன்னின்ங்ஸ்களில் இரண்டு முறை மட்டுமே அரைசதம் கடந்துள்ளார். 2012-ம் ஆண்டு இலங்கைக்கு இந்திய அணி சென்ற போது ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் ஸ்கோர் 5,0,0,4,4 ஆகும். மேலும் இந்திய அணி 5 பவுலர்களைக் கொண்டு ஆட முடிவெடுத்தால் ரோஹித் சர்மாவின் இடம் கேள்விக்குறியாகிவிடுகிறது. ஆனாலும் விராட் கோலி கேப்டனான பிறகு 3 டெஸ்ட் போட்டிகளில் புஜாராவுக்குப் பதிலாக 3-ம் நிலையில் ரோஹித்தை களமிறக்கி அழகு பார்த்தார் விராட் கோலி. இதில் ரோஹித்தின் ஸ்கோர் 53, 39, மற்றும் 6. இந்நிலையில் டெஸ்ட் இட…
-
- 0 replies
- 259 views
-
-
கரீபியன் பிரீமியர் லீக்கிலும் சாம்பியன் ஆனது நடிகர் ஷாருக்கானின் அணி! பிராவோவின் அசத்தல் ஆட்டம் காரணமாக, கரீபியன் பிரீமியர் லீக்கில் நடிகர் ஷாருக்கானின் ரெட் ஸ்டீல் அணி கோப்பையை வென்றது. போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பர்படாஸ் டிரினிடான்ட் அணியுடன் ரெட் ஸ்டீல் அணி மோதியது. முதலில் விளையாடிய ரெட்ஸ்டீல் அணி, 50 ஓவர்களில் 178 ரன்களை எடுத்தது. டெல்ஸ்போட் 50 ரன்களும், கம்ரான் அக்மல் 60 ரன்களும் அடித்தனர். பிராவோ 15 பந்துகளில் 29 ரன்களை விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய பர்படாஸ் டிரினிடாட் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களேயே எடுக்க முடிந்தது. இதனால் ரெட் ஸ்டீல் அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோப்பையை …
-
- 0 replies
- 285 views
-
-
தென்ஆப்ரிக்க அணியின் இந்திய சுற்றுப்பயண விபரம் : அக். 22ஆம் தேதி சென்னையில் மோதல் தென்ஆப்ரிக்க அணி செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 70 நாட்கள் முதல் டிசம்பர் வரை 70 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இங்கு 3 டி20 போட்டி, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுடன் தென்ஆப்ரிக்க அணி விளையாடவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 29ஆம் தேதி இந்தியா வரும் தென்ஆப்ரிக்க அணி டிசம்பர் 7ஆம் தேதிக்கு பின்னரே இந்தியாவில் இருந்து கிளம்புகிறது. முதலில் நடைபெறும் டி20 போட்டிக்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்ரிக்க அணி விளையாடுகிறது. சென்னையில் அக்டோபர் 22- ஆம் தேதி ஒருநாள் போட்டியில் இந்தியா தென்ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. …
-
- 0 replies
- 384 views
-
-
41 வயது மிஸ்பா உல் ஹக் ஓய்வு பெற இந்தியாதான் வழி காட்டனும்...! தற்போது 41 வயதாகியும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், ஒரு வழியா ஓய்வு முடிவுக்கு வந்துட்டாரு. ஆனா இந்தியாவுக்கு எதிரா டெஸ்ட் போட்டி நடந்தா அதுல விளையாடிட்டுதுதான் ஓய்வு பெறுவாராம். பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் மிஸ்பா உல்-ஹக், ஏற்கனவே சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.இந்நிலையில் நேற்று அளித்த ஒரு பேட்டியில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். '' நான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக சில டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆசைப்படுகிறேன்.இன்னும…
-
- 0 replies
- 328 views
-
-
நாட்வெஸ்ட் தொடருக்கு வரவேற்பு இல்லை... ஐ.பி.எல். பாணியில் இங்கிலாந்தில் டி20 தொடர் ! ஐ.பி.எல். போல இங்கிலாந்தில் 8 நகரங்களை மையமாக வைத்து புதிய டி 20 கிரிக்கெட் தொடரை உருவாக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் போல வேறு எந்த டி20 தொடரும் உலகம் முழுவதும் பிரபலமாகவில்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் தொடர், தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் நாட்வெஸ்ட் டி20 தொடரையெல்லாம் விட, ஐ.பி.எல். தொடருக்குதான் வரவேற்பு அதிகம். எனவே ஐ.பி.எல். தொடரை போல நகரங்களை மையமாக கொண்டு ஒரு டி20 தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. லார்ட்ஸ், ஓவல், பிரிம்மிங்ஹாம், லீட்ஸ், நாட்டிங்ஹாம…
-
- 0 replies
- 209 views
-
-
சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பு பறிபோகும் அச்சம்: ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது பாகிஸ்தான் பாகிஸ்தான் அணி வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடவிருந்தது. இந்நிலையில், அந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு வெளிப்படையான காரணம் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், 2017-ம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால்தான் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நடைபெற்ற இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில், இம்முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. இரு வாரியங்களுமே, வேறு…
-
- 0 replies
- 197 views
-
-
புத்துயிர் பெறும் வங்கதேச அணி: கேப்டன் முஸ்பிகுர் ரஹிம் பெருமிதம் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் வீரர்கள் சில குறிப்பிட்ட அணிகளே கோலோச்சிக் கொண்டிருக்கும் கிரிக்கெட்டில், தனது காலை வலுவாக ஊன்றத் தொடங்கியிருக்கிறது வங்கதேசம். டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியாக இருந்தாலும் சில பெரிய அணிகளுக்கு அது கத்துக்குட்டிதான். அவ்வப்போது பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும்போது மட்டுமே வங்கதேசம் பற்றி கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் பேசுவார்கள். ஆனால், அதுகூட தோற்றுவிட்ட பெரிய அணியின் மீதான விமர்சனமாக இருக்குமே தவிர, வங்கதசேத்தின் வெற்றி குறித்ததாக இருக்காது. ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. தன் இருப்பை கொஞ்சம் உரத்தே வெளிப்படுத்தத் த…
-
- 0 replies
- 273 views
-
-
உலக கோப்பை: ஒரே பிரிவில் பிரான்ஸ், நெதர்லாந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து (2018) தொடருக்கான தகுதிச் சுற்றில் பிரான்ஸ், நெதர்லாந்து, சுவீடன் அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளன. வரும் 2018ல் ரஷ்யாவில் ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கின்றன. இதில் ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச் சுற்றில் மோதும் அணிகளின் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 52 அணிகள் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் உலக கோப்பை பிரதான சுற்றில் விளையாட தகுதி பெறும். ஒவ்வொரு பிரிவிலும் 2வது இடம் பிடிக்கும் அணிகளில் இருந்து சிறந்த 8 அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றில்…
-
- 0 replies
- 366 views
-
-
மிக விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீரர் திலகரத்னே தில்ஷன்! ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை அடித்து இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை எட்டிய 11வது வீரர் இவர் ஆவார். ஹம்பான்தொட்டாவில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் 5வது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன் 55 ரன்கள் எட்டிய போது ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இலங்கை வீரர்களில் ஜெயசூர்யா, மகிலா ஜெயவர்த்தனே, சஙகக்காரா ஆகியோருக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டிய வீரர் இவர். தற்போது 39 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் தில்ஷன் 318 சர்வதேச போட்டிகளில் விளையாடி 293வது இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை அடித்துள்ளார். அந்த வகையி…
-
- 1 reply
- 349 views
-
-
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உள்பட 36 பேர் விடுதலை! புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா உள்பட 36 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 6வது ஐபிஎல் போட்டியில், லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட ஓவரில் ரன்களை வழங்க சம்மதம் தெரிவித்த குற்றச்சாட்டுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோர் கடந்த மே 16ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும், 11 சூதாட்டத் தரகர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோருக்கு …
-
- 3 replies
- 424 views
-
-
காயத்திற்கு பிறகு களமிறங்கும் போல்ட் உலகின் அதிவேக வீரர் உசேன் போல்ட். ஜமைக்காவை சேர்ந்த இவர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளர் ஆவார். 100 மீட்டரில் 9.58 வினாடியில் கடந்தும், 200 மீட்டரில் 19.19 வினாடியில் கடந்தும் சாதனை படைத்தார். காயத்தால் அவதிப்பட்ட அவர் அதற்காக சிகிச்சை பெற்றார். அதன்பின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் நீண்ட காலத்துக்கு பிறகு களம் இறங்குகிறார். லண்டனில் ஒலிம்பிக் மைதானத்தில் தடகள போட்டி தொடங்குகிறது. இதில் உசேன் போல்ட் களம் இறங்குகிறார். அதிவேக 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடக்கிறது. காயம் குணம் அடைந்து மீண்டும் பிரவே…
-
- 1 reply
- 334 views
-
-
போதும்... போறேன்...! மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயிலுக்கு தற்போது 35 வயதாகிறது. உலகம் முழுக்க கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் சென்று டி20 போட்டிகளில் பங்கேற்பதுதான் கெயிலின் தற்போதைய முக்கிய வேலை. தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வரும் அவருக்கு முதுகு வலி இருந்து வந்தது. அண்மை காலங்களில் வலி அதிகரித்ததை தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் அதனை சரி செய்ய கிறிஸ் கெயில் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து கிரிக்கெட்டுக்கு தற்காலிகமாக 3 முதல் 4 மாதங்கள் வரை முழுக்கு போட திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெயில் கூறுகையில், ''ஆகஸ்ட் 2ஆம் தேதி சாரிட்டி ஆட்டம் ஒன்றில் பங்கேற்கிறேன். அதற்கு பின், அறுவை சிகிச்சைக்காக என்னை தயார் செய்ய வேண்டியது உள்ளது. அனேகமாக டிசம்பர்…
-
- 0 replies
- 459 views
-
-
மட்டுவில் வளர்மதி விளையாட்டுக்கழகம் தனது பொன்விழாவையொட்டி பெருமெடுப்பில் நடத்திய உதைபந்தாட்ட சுற்றுத் தொடரை நாவாந்துறை மற்றும் குருநகர்வாசிகள் குழப்பி, மட்டுவில் வாசிகளின் முகத்தில் கரியை பூசியுள்ளனர். அண்மைக்காலமாக உதைபந்தாட்டத்தை விட, மல்யுத்தத்திலேயே அதிக அக்கறை காட்டும் நாவாந்துறை சென்.மேரில் மற்றும் குருநகர் பாடுமீன் ரசிகர்கள் மைதானத்திற்குள் கொலைவெறியுடன் மோதிக் கொண்டதால், பெரும் அல்லோலகல்லோலமே நிகழ்ந்தது. மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம் தனது பொன்விழாவை முன்னிட்டு அணிக்கு 7 பேரை கொண்ட உதைபந்தாட்ட தொடரை நடத்தியது. இதை முன்னிட்டு பெருமெடுப்பில் மைதானம் அமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக தொடர் நடத்தப்பட்டது. இதற்காக மட்டுவிலை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களும் ஊரு…
-
- 0 replies
- 350 views
-
-
அறிமுக டெஸ்ட், ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஒரே வீரர்! அறிமுகமான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஒரே வீரர் என்ற பெருமையை வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் பெற்றுள்ளார். வங்கதேசத்தின் 20 வயது இளம் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதன் முறையாக சர்வதேச போட்டியில் களமிறங்கினார். முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முஸ்தாபிசுர் ரஹ்மான், ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்தியாவை அடுத்து வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் சென்ற தென்ஆப்ரிக்க அணியும், வங்தேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்று இழந்தது. இந்த இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21ஆம் தேதி சிட்டகாங்கில் தொடங்க…
-
- 1 reply
- 249 views
-
-
உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனிக்கு 9வது இடம் உலகிலேயே அதிக மதிப்புள்ள விளையாட்டு வீரர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு பின்னரே கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார்கள் ரொனால்டோ, லயனல் மெஸ்சி இந்த பட்டியலில் வருகின்றனர். லண்டன் ஸ்கூல் ஆப் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் முதல் இடத்தை பிடித்துள்ளார். கால்பந்து வீரர்கள் ரொனால்டோ, மெஸ்சி ஆகியோரை விட இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு சந்தையில் அதிக மதிப்பு இருக்கிறது. தோனியின் ஆண்டு வருமானம் 31 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் விளம்பரங்கள் மூலம் கிடை…
-
- 0 replies
- 198 views
-
-
டி20 உலகக் கோப்பை: ஓமன், ஆப்கானிஸ்தான் தகுதி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்ற மகிழ்ச்சியில் ஓமன் அணியினர். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஓமன், ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அயர்லாந்தின் துல்பின் அருகேயுள்ள மலாஹைடில் நடைபெற்ற டி20 தகுதிச்சுற்றில் நமீபியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை வாய்ப்பை பெற்றுள்ளது ஓமன். உலகக் கோப்பை போன்ற பெரிய சர்வதேச போட்டிகளில் விளையாட ஓமன் தகுதி பெற்றிருப்பது இதுவே முதல்முறையாகும். முன்னதாக கனடா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை ஓமன் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. கனடா உள்ளிட்ட 3 அணிகளும் நிறைய போட்டிகளில் ஆடிய அனுபவம் பெற்றவையாகும…
-
- 2 replies
- 341 views
-
-
பாரதரத்னா மறுக்கப்பட்ட ஹாக்கி ஜாம்பவானுக்கு பிரிட்டன் பார்லியில் விருது! ஹிட்லர் அழைத்தும் ஜெர்மனி அணியில் இணைய மறுத்த, இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்துக்கு 'பாரத் கவுரவ் 'வாழ்நாள் சாதனையாளர் விருது பிரிட்டன் பார்லிமென்டில் இன்று வழங்கப்படுகிறது. அயல்நாடு வாழ் இந்தியர்கள் அமைப்பான 'சன்ஸ்கிரிட் யுவா சங்கம்' என்ற அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது. பிரிட்டன் பார்லிமென்டில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிற இந்த விருதை மேஜர் தயான்சந்த் சார்பில் அவரது மகன் அசோக் பெற்றுக் கொள்கிறார். மேஜர் தயான்சந்த் இந்திய ஹாக்கி உலகின் பிதாமகன். இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் 400 கோல்களுக்கும் மேல் அடித்துள்ளார். 1928,1932, 1936ஆம் ஆண்டு இந்…
-
- 0 replies
- 327 views
-