Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பாகிஸ்தான் பவுலர் சயீத் அஜ்மல் பந்துவீச்சு மீது புகார் சந்தேகத்திற்கிடமான முறையில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் வீசுகிறார் என்று ஐசிசி-யிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக நேற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அவரது பந்து வீச்சு மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐசிசி விதிமுறைகளின் படி அவர் 21 நாட்களுக்குள் பரிசோதனைக் கூடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் அவர் தொடர்ந்து பந்து வீசலாம் என்று ஐசிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் இருந்த ஆட்ட அதிகாரிகள் அஜ்மல் வீசிய பல பந்துகள் விதிமுறைகளை மீறியதாக உள்ளது என்று கூறியுள்ளனர். இந்த புகார் அறிக்கையை பாகிஸ்தான் அணி…

  2. பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஜாகிர் அப்பாஸ் ஐ.சி.சி. புதியதலைவர்! பார்படோஸ்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ், ஐசிசி-யின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணியிடம் வங்கதேச அணி தோல்வியடைந்தது. இதையடுத்து, ஐ.சி.சி. சேர்மன் ஸ்ரீநிவாசனின் உத்தரவின்பேரில்தான் நடுவர்கள், இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக அப்போது ஐ.சி.சி. தலைவராக இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தபா கமால் குற்றம் சாட்டியதோடு, பதவியில் இருந்தும் விலகினார். இதையடுத்து அந்த பதவிக்கு தற்போது பாகிஸ்தானை சேர்ந்த ஜாகிர் அப்பாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளில் உள்ள பார்படோசில் நடைபெற்று வருத் ஐ.சி.சி. வருடாந்திர ஆலோசனை கூட்டத்த…

  3. பாகிஸ்தான் ரசிகருக்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி! இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, பாகிஸ்தானை சேர்ந்த தன்னுடைய தீவிர ரசிகரான பசீருக்கு போட்டிக்கான டிக்கெட் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 62 வயதான முகமது பசீர் தீவிர கிரிக்கெட் ரசிகர். பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது ஆதரவை தோனிக்கும் இந்திய அணிக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதியப் போட்டியை பார்க்க பசீருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனையறிந்த தோனி அவருக்கு உதவியுள்ளார். இந்தநிலையில் 2015ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவர் தொடர்ந்து இந்திய அணிக்காகவும், தோனிக்காகவும் ஆதரவு அளித்து வந்தார். அவர…

  4. பாகிஸ்தான் வீரர் அஹமட் ஷேசாத் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணம் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று (10) உறுதி செய்தது. இதன் காரணமாக அவருக்கு குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அவரிடம் விளக்கம் கோரி குற்றப்பத்திரிகை சமர்பிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 26 வயதுடைய அனுபவமிக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் கிண…

  5. பாகிஸ்தான் வீரர் இடைநீக்கம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மலை, கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அதிரடியாக அறிவித்தது. அவரை பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) போட்டியின் போது ஸ்பாட்பிக்சிங் என்ற சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அணுகி இருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்துக்கு கொண்டு செல்ல உமர் அக்மல் தவறி விட்டார். இதனாலேயே அவர் மீது இத்தகைய நடவடிக்கை பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இடைநீக்கம் காரணமாக நேற்று தொடங்கிய பி.எஸ்.எல். போட்டியில் இருந்து அவர் ஒதுங…

  6. பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மீது விதிக்கப்பட்ட தடை 18 மாதங்களாக குறைப்பு! by : Anojkiyan பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரான உமர் அக்மல் மீது விதிக்கப்பட்ட தடை குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று ஆண்டுகள் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை தற்போது 18 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. தடையை எதிர்த்து உமர் அக்மல் மேன்முறையீடு செய்து இருந்த மனுவை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி பாகிர் முகமது கோக்ஹர், உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்டு இருந்த 3 ஆண்டு கால தடையை 18 மாதங்களாக குறைத்து உத்தரவிட்டார். கருணையின் அடிப்படையில் இந்த தண்டனை குறைப்பு செய்யப்…

  7. பாகிஸ்தான் வீரர் நசீர் ஜம்ஷீடுக்கு 10 ஆண்டுகள் தடை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நசீர் ஜம்ஷீட், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 10 ஆண்டுகள் போட்டித் தடை விதித்துள்ளது. கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரின், 2016/17 பருவகாலத்தின் போது, நசீர் ஜம்ஷீட் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த தண்டனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின், ஊழல் எதிர்ப்பு பிரிவு வழங்கியுள்ளது. இதுதொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ஊழல் தடுப்பு பிரிவு, நசீர் ஜம்ஷீட் …

  8. பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீசுக்கு இனிமேல் பந்து வீச தடை பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் பந்து வீச்சாளர் மொஹமட் ஹபீசுக்கு சர்வதேச போட்டிகளின் போது பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பந்து வீச்சு முறை சட்ட விதிக்கு எதிரானது என்ற காரணத்தினால் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மொஹமட் ஹபீசுக்கு எதிரான இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=97500

  9. பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாமை சதியா?:-லலித் மோடி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 12 ஆம் திகதி நடைபெறயிருப்பதால் ஒவ்வொரு அணிகளும் வீரர்களை ஏலத்தில் தெரிவு செய்தன. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருமே ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை. எனவே இது தொடர்பில் பாகிஸ்தான் கூறுகையில் எங்களை பழிவாங்கும் நோக்கிலேயே பாகிஸ்தான் வீரர்களில் ஒருவரைக் கூட ஏலத்தில் தெரிவுசெய்யவில்லையென தெரிவித்திருந்து. ஆனால் இது குறித்து ஐபிஎல் ஆணையாளர் லலித் மோடி கூறுகையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாததில் சதி ஏதுமில்லை இவ்வாறு இருக்க ஐபிஎல் ஏலத்தில் அவுஸ்திரேலியா, கனடா, சிம்பாப்வே, நியூஸிலாந்து, பாகிஸ்தான் வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் பாகிஸ்தான் வீர…

  10. பாகிஸ்தான்-இலங்கை கிரிக்கெட் போட்டி: சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது! இந்தூர்: பாகிஸ்தான்-இலங்கை அணிகள் விளையாடிய டி-20 கிரிக்கெட் போட்டியன்று பணம் வைத்து சூதாட்டம் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோடிய டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியை மையமாக வைத்து மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரில் பணம் வைத்து ‘ஆன்லைன்’ மூலம் சூதாட்டம் நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, கட்ஜு காலனியில் உள்ள ஒரு வீட்டை போலீசார் சுற்றிவளைத்து சோதனையிட்டனர். அப்போது, அங்கிருந்தபடி ஆன்லைன் மூலம் சூதாட்டத்துக்கான பணப் பரிவர்த்தனையை செய்து கொண்டிருந்த அஜய் பர்யானி (34) என்பவரை போலீசார் கைது செய்த…

  11. பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் 3 வது டெஸ்ட் -வெற்றியின் விளிம்பில் மேற்கிந்திய தீவுகள். பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் 3 வது டெஸ்ட் -வெற்றியின் விளிம்பில் மேற்கிந்திய தீவுகள். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3 வதும் இறுதியான போட்டி இடம்பெற்று வருகின்றது. இந்தப் போட்டியின் இன்றைய 4 ம் நாள் நிறைவில் மிக திறமையாக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியின் விளிம்பில் காத்திருக்கின்றது. தங்களது 2 வது இன்னிங்சில் ஆடிய பாகிஸ்தான், இன்றைய நாளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 281 ஓட்டங்களையும், மே…

  12. பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் முதல் T20-உலக சாம்பியன்களை இலகுவாக பந்தாடியது பாகிஸ்தான் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் முதல் T20-உலக சாம்பியன்களை இலகுவாக பந்தாடியது பாகிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி டுபாய் DSC மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்தப் போட்டியில் சகல துறைகளிலும் மிக சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி உலக சாம்பியன்கள் மேற்கிந்திய தீவுகள் அணியை 9 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டு 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்பிராஸ் அஹமெட் முதலில் களத்தடுப்பு முடிவை மேற்க…

  13. கிரிக்கெட் - பாக் அழைப்பு இலங்கை நிராகரிப்பு கிரிக்கெட் போட்டிகள் விளையாட வரும்படி இலங்கைக்கு பாகிஸ்தான் விடுத்த அழைப்பை பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி இலங்கை நிராகரித்துள்ளது. லாகூர் நகரில் 2009 ஆம் ஆண்டு அங்கு சென்றிருந்த இலங்கை அணியினர் பயணித்த பேருந்தின் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தானில் எந்த கிரிக்கெட் போட்டியும் இடம்பெறவில்லை. எதிர்வரும் அக்டோபர் மாதம் தமது நாட்டுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வருமாறு இலங்கைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால், தமது அணியினரின் பாதுகாப்பு குறித்த கவலைகள் இருப்பதால், அங்கு பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது என்று இலங்கை கிரிக்கெட் சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்க…

    • 0 replies
    • 632 views
  14. பாக் வீரர்கள் மீது குற்றம் ஊர்ஜிதம் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சல்மான் பட் மற்றும் வேகப் பந்து வீச்சாளர் முகமது ஆசிப் ஆகிய இருவரும் கிரிக்கெட் பெட்டிங் ஊழலில் ஈடுபட்டதாக லண்டன் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது சல்மான் பட் வேண்டுமென்றே நோ பால்களை வீசியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தாங்கள் எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்று இந்த இருவரும் தெரிவித்தனர். பணம் வாங்கியதாக கூறப்படுவதையும் மறுத்தனர். ஆனால் இந்த வழக்கை விசாரித்த 12 ஜூரிக்களில் 10 பேர் சல்மான் பட் பணம் வாங்கிக் கொண்டு முறைகேடு செய்ததில் உடந்தையாக இருந்தார் என்ற தீர்ப்பை எட்டியுள்ளனர். அதே நேரம் முகமது ஆ…

    • 0 replies
    • 499 views
  15. பாக். – பங்களாதேஷ் மோதும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் பங்­க­ளா­தே­ஷிற்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் பங்­க­ளாதேஷ் அணிக்­கு­மி­டை­யி­லான முத­லா­வது ஒரு நாள் போட்டி இன்று டாக்­காவில் நடக்­கி­றது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்­க­ளா­தேஷில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு ஒரு நாள், இரு­பது ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் விளை­யா­ட­வுள்­ளது. இந்தச் சுற்றுப் பய­ணத்­திற்கு பாகிஸ்தான் அரசு அனு­மதி அளித்­தி­ருந்­தது. ஆனால், பாது­காப்பு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பங்­க­ளா­தேஷில் உள்ள தங்­க­ளது தூத­ரகம் மூலம் நட­வ­டிக்கை மேற்­கொள்ளும் எனவும் தெரி­வித்­தி­ருந்­தது. இதனால் போட்டி நடக்கும் இடங்கள் அறி­விக்­கப்­ப­டாமல் இருந்­தன. அதன்ப…

  16. பாக். கிரிக்கெட் அணியின் கேப்டன் ராஜினாமா ஷஹார்யர் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அசார் அலி ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹார்யர் கான் கேட்டுக் கொண்டதால் அப்பதவியில் நீடிக்க அவர் ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் ஆடவுள்ளது. இதற்காக அந்த அணியினர் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்கள். சூதாட்ட புகார் காரணமாக 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த வேகப் பந்து வீச்சாளர் முகமது ஆமிர் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறார். இதற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நில…

  17. பாக். கிரிக்கெட் வாரியத்தின் மீது சாடிய யூனிஸ் கான் மீது நடவடிக்கை பாய்கிறது யூனிஸ் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் துக்கு எதிராக கருத்து தெரிவித்த மூத்த பேட்ஸ்மேனான யூனிஸ் கான் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கான் தெரிவித் துள்ளார். இதன்மூலம் அவர் மீது நடவடிக்கை பாய்வது உறுதியாகி யுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு தன்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைக்கவில்லை எனக் கூறிய யூனிஸ் கான், வாரியத்தின் மீது கடுமையாக சாடினார். இந்த நிலையில் அது தொடர்பாக சஹாரி யார் கான் கூறியதாவது: யூனிஸ் கான் மீது நான் மிகுந்த மரியாதை வை…

  18. பாக். கேப்டன் சர்பராஸ் அகமதுவின் நீட்டிய கையைப் புறக்கணித்த கிளென் மேக்ஸ்வெல் படம். | ஏ.எப்.பி. ஹராரேயில் நடைபெற்ற முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியபோது ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெலின் விளையாட்டுணர்வற்ற செயல் பலரது கவனத்தையும் ஈர்த்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது, அப்போது மேக்ஸ்வெல், ஷோயப் மாலிக்குடன் கைகொடுத்தார். நடுவர்களுக்குக் கைகொடுத்தார், ஆனால் பாகிஸ்தான் வெற்றிக் கேப்டன் சர்பராஸ் அகமது தன் கையை மேக்ஸ்வெலை நோக்கி நீட்டியபோதும் கண்டும் காணாமல் சென்றார் கிளென் மேக்ஸ்வெல், இதனை கேமரா…

  19. பாக். சுப்பர் லீக் : முதல் வெற்றியை பதிவுசெய்தது கராச்சி (Highlights) டுபாயில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய போட்டியில் சங்கக்காரவின் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியினை பதிவு செய்தது. நேற்றைய போட்டியில் இஸ்லாமாபாத் யுனைட்டட் அணியை எதிர்கொண்ட கராச்சி அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த போட்டி மழைக்காரணமாக 13 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இஸ்லாமாபாத் யுனைட்டட் அணி 8 விக்கட்டுளை இழந்து 90 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கராச்சி அணி 9.4 ஓவர்களில் 75 ஓட்டங்களை…

  20. பாக். சுப்பர் லீக்கில் கலக்கும் குமார் சங்கக்கார (Highlights) இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் , அணித்தலைவருமான குமார் சங்கக்கார பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு-20 போட்டியில் அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு-20 போட்டியில் கராச்சி கிங்ஸ் அணித் தலைவராக செயற்படும் சங்கக்கார நேற்றைய லாஹுர் கெலண்டர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 45 பந்துகளுக்கு முகங்கொடுத்து 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஒரு ஆறு ஓட்டம் மற்றும் 8 நான்கு ஓட்டம் அடங்கலாகவே இவர் 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். எனினும் குறித்த போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 7 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தமை…

  21. பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் அடுத்த களபலி: கேள்விக்குறியான வஹாப் ரியாஸின் எதிர்காலம் வஹாப் ரியாஸ். - படம். | ராய்ட்டர்ஸ். முன்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை மைக்கேல் கிளார்க் தலைமையில் ‘அதி திறன் அணி’யாக மாற்றியே தீருவேன் என்று அவதாரபுருஷர் போல் சூளுரைத்து சர்ச்சையில் சிக்கி அங்கிருந்து வெளியேறிய பிறகு பாகிஸ்தான் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று ஒவ்வொருவரையாக அனுப்புவது என்ற ‘திருப்பணி’யை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மேற்கொண்டு வருகிறார். கம்ரன் அக்மல், உமர் அக்மல், மொகமது ஆமிர்... என்று இவரது களபலிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஹபீஸ் குறித்தும் ஆர்தர் கைவிரல்களை மூடி தாளம் போட்டுக் க…

  22. பாக். மண்ணில் கிரிக்கெட்: பாதுகாப்பு அனுமதி, வீரர்கள் ஒப்பந்தம் குறித்து யோசிக்கும் வெ.இண்டீஸ் பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு பாதுகாப்பு அனுமதி மற்றும் வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினை குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது. 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பிற்கு எந்தவொரு கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. இதனால் எப்படியாவது முன்னணி அணிக்கெதிரான தொடரை பாகிஸ்தான் மண்ணில் நடத்தியே தீர வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர் முயற்சியில் ஈடுபட்ட…

  23. பாக். ரசிகர்களை கடுப்பேத்துகிறதா புதிய 'மோக்கா' வீடியோ? இந்தியாவுடான போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் வெற்றியே பெறாததைச் சுட்டிக்காட்டி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு விளம்பரம் ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டது. தமது தேச அணி வெற்றி பெற்றால் பட்டாசு வெடிக்கவேண்டும் என்ற பாகிஸ்தான் ரசிகர்களின் எண்ணம் கடைசி வரை நிறைவேறாமலே இருப்பதாக அமைந்திருந்த அந்த வீடியோ இணையத்தில் ஹிட் ஆனது. முதல் வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான லீக் ஆட்டத்தை முன்வைத்து ஒரு விளம்பரத்தை பதிவேற்றம் செய்தது. அது, இந்திய ரசிகர்களின் ஏக்கத்தைக் குறிப்பாதாக நையாண்டியுடன் இருந்தது. அந்த வீடியோவுக்கு பதிலடி தரும் வகையில், இந்திய ரசிகர்கள் ஒரு …

  24. பாக்., வீரருக்கு 2 ஆண்டு தடை * ஊக்கமருந்து விவகாரத்தில் நடவடிக்கை கராச்சி: ஊக்கமருந்து பிரச்னையில் சிக்கிய பாகிஸ்தான் அணி வீரர் ரேஜா ஹசனுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் இளம் வீரர் ரேஜா ஹசன், 22. ஒரே ஒருநாள் போட்டி, 10 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடந்த உள்ளூர் ‘பென்டாங்குலர்’ கோப்பை தொடரின் போது நடத்தப்பட்ட சோதனையில், ஹசன் ‘கோகைன்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணைக்கு 14 நாட்களுக்குள் வர வேண்டும் என, கடந்த மார்ச் 24ல் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) விடுத்த அழைப்பை, ஹசன் ஏற்கவில்லை. விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்த இவர், லாகூர் ஓட்டல் ஒன்ற…

  25. பாக்.கிற்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிப்பு பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை 15 பேர்கொண்ட வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையல் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெறவுள்ளது. முதலாவது போட்டி 23 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையிலும் 2 ஆவது போட்டி 27 ஆம் திகதி கொழும்பில் பகலிரவு போட்டியாகவும் 3 ஆவது போட்டி 30 திகதி தம்புள்ளையிலும் இடம்பெறவுள்ளன. அஞ்சலோ மெத்தியூஸ் அணித் தலைவராக செயற்படுகின்றார். உபதலைவராக லகிரு திரிமன்னே கடமையாற்றுகின்றார். திலகரட்ண டில்சான், உபுல் தரங்க, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, தினேஸ் சண்டிமல், அசான் பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.