விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
கிறிஸ் கெயில் விளாசல் சதம்: ஜமைக்கா அபார வெற்றி கரீபியன் பிரிமியர் லீகில் தொடர்ந்து அதிரடியாக ஆடிவரும் கிறிஸ் கெயில். | கோப்புப் படம்: ஏ.பி. கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டியில் கிறிஸ் கெயில் ஆடும் ஜமைக்கா தாலவா அணி அவரது அதிரடி இன்னிங்ஸினால் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஜமைக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதில் கிறிஸ் கெயில், 57 பந்துகளில் 6 பவுண்டரி 9 சிக்சர்களுடன் 105 ரன்கள் விளாசினார். எதிரணியான டிரினிடாட் & டொபாகோ அணி 130 ரன்களையே எடுக்க முடிந்தது. டிரினிடாட் கேப்டன் டிவைன் பிராவோ டக் அவுட் ஆனார். இந்த அணியில் ஜாக் காலிஸ் மட்டும் தொடக்க வீரராக களமிறங்கி 36 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.…
-
- 0 replies
- 344 views
-
-
சுனில் கவாஸ்கர் சுனில் கவாஸ்கர் ‘லிட்டில் மாஸ்டர்’ என்று அழைக்கப்படுபவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் மனோகர் கவாஸ்கர் (Sunil Manohar Gavaskar) பிறந்தநாள் இன்று (ஜூலை10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: l மும்பையில் நடுத்தரக் குடும்பத்தில் (1949) பிறந்தவர். சிறு வயதிலேயே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது மாமா இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர். அவர்தான் இவரது முதல் பயிற்சியாளரும்கூட. l மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார். பள்ளி நாட்களில் பல கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு ‘இந்தியாவின் பெஸ்ட் ஸ்கூல்பாய் கிரிக்கெட்டர்’ என்று பெயர் எடுத்தவர். l முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 1966-67ல் விளையாடத் தொடங்க…
-
- 0 replies
- 243 views
-
-
உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளின் பணப்பரிசுத் தொகையில் ஏன் இந்த பாகுபாடு? ஆடவருக்கு 576 மில்லியன் டொலர்கள், மகளிருக்கு 11.1 மில்லியன் டொலர்கள் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மகளிருக்கான போட்டியில் வழங்கப்படும் பரிசுத் தொகையை விட 400 மடங்கு அதிகமான பரிசுத் தொகை ஆடவருக்கான போட்டிக்கு வழங்கப்படுவதாக குறைகூறப்படுகின்றது. நான்கு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளில் வழங்கப்பட்ட பரிசுத்தொகையைவிட இம் முறை கனடாவில் நடைபெற்ற போட்டிகளுக்கு பணப்பரிசு 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டது. எனினும் , ஆடவர் உலக சம்பியனான ஜேர்மனிக்கு கடந்த வருடம் 35 மில்லியன் அமெரிக்க டொலர்…
-
- 1 reply
- 222 views
-
-
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பவுலிங்! ஹராரே: ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் இரு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. டோணி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு உள்ளது. அவ்வாறு வெற்றி பெற்றால்தான் ஒருநாள் தரவரிசையில் இந்தியாவால் 2வது இடத்தில் நீடிக்க முடியும். ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணியில், வழக்கமான கேப்டன் ட…
-
- 17 replies
- 606 views
-
-
2016 ஜனவரியில் இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது: 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் 2016- ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது இந்திய அணி. | கோப்புப் படம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் அந்த அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தத் தொடரில் 3 டி20 சர்வதேச போட்டிகளும் அடங்கும். 2015 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏமாற்றத் தோல்வியைத் தழுவியதையடுத்து ஆஸ்திரேலியாவை மீண்டும் ஜனவரியில் அவர்கள் சொந்த மண்ணில் சந்திக்கிறது இந்திய அணி. நியூஸிலாந்து மற்றும் மே.இ.தீவுகளுக்கு எதிராக தலா 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலியா அதற்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக…
-
- 0 replies
- 276 views
-
-
ஜிம்பாப்வே வந்து சேர்ந்த ரஹானே தலைமை இந்திய அணி: வெள்ளிக்கிழமை முதல் போட்டி இந்திய அணி. | படம்: விவேக் பெந்த்ரே. 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட அஜிங்கிய ரஹானே தலைமை இந்திய அணி ஜிம்பாப்வே சென்றடைந்தனர். இந்த அணியின் மூத்த வீரரான ஹர்பஜன் சிங் இது பற்றி ட்விட் செய்துள்ளார், “ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே வந்தடைந்தோம். உள்ளூர் டிரம் இசைக் கலைஞர்கள் எங்களை வரவேற்றனர், மீண்டும் இவர்களைப் பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்று ட்வீட் பதிவிட்டுள்ளார். நாளை முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டி ஹராரேயில் நாளை இந்திய நேரம் 12.30 மணிக்குத் தொடங்குகிறது. ராபின் உத்தப்பா இந்தத் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்படவிருக்கிறார். எனவே இது அவருக்…
-
- 0 replies
- 191 views
-
-
ஓய்வு நேரத்தில் ராணுவத்துடன் இணைந்து பணியாற்ற 'லெப்டினன்ட்' தோனி முடிவு! ஓய்வு நேரத்தில் இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி முடிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்றார். இதனால் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதில் தோனி உள்ளிட்ட சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அஜிங்கிய ரஹானே தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வே சென்றுள்ளது. இதனால் ஒருநாள் அணியின் கேப்டன் தோனிக்கு கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஓய்வு கிடைத்துள்ளது. தற்போது ராஞ்சியில் குடும்பத்தினரு…
-
- 0 replies
- 192 views
-
-
பங்களாதேஷ் தொடரிலிருந்து டிவிலியர்ஸ் விலகல் : அணித் தலைவராகிறார் ஹசீம் அம்லா தென்னாபிரிக்க கிரிக்கெட்அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி நடக்கிறது. இந்த ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க தலைவர் டிவில்லியர்ஸ் விளையாட வில்லை. அவரை அணியில் இருந்து நிர்வாகம் விடுவித்தது. உலக கிண்ண அரை இறுதியில் மெதுவாகப் பந்து வீசியதற்காக அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக முதல் ஆட்டத்தில் அவர் விளையாட இயலாது. இதன் காரணமாக அவர் ஒருநாள் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். இதனால் ஹசிம் அம்லா தலைவராக பணியாற்றுகிறார். …
-
- 0 replies
- 310 views
-
-
பாகிஸ்தானுடனான தோல்வியை ஜீரணிக்க சில காலம் செல்லும் என்கிறார் மெத்யூஸ் பாகிஸ்தானுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அடைந்த தோல்வியை ஜீரணிக்க சில காலம் செல்லும் என இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார். ‘‘பல்லேகலையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 377 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தபோது நாங்கள் சிறந்த நிலையில் இருந்ததாக நான் கருதினேன். எனினும் இறுதியில் அடைந்த தோல்வியை ஜீரணிப்பதற்கு நிச்சயமாக சில காலம் செல்லும். எமது அணியினரிடமிருந்து இத்தகைய ஆற்றல் வெளிப்பாடுகளை நாங்கள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. பாகிஸ்தான் அணியினரோ கடைசி இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினர்’…
-
- 0 replies
- 229 views
-
-
தோனியை மிஞ்சிய இந்திய கேப்டன் சவுரவ் கங்குலிதானா? இந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக கருதப்படும் கங்குலிக்கும், தோனிக்கும் அடுத்த அடுத்த நாட்களில் பிறந்த நாட்கள் வருகின்றன. நேற்று தோனி 34வது பிறந்த நாளை கொண்டாடினார். இன்று கங்குலிக்கு 43வது பிறந்த நாள். இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த இருவருமே ஜாம்பவான்கள்தான். எனினும் தோனியை விட கங்குலிதான் சிறந்த கேப்டன் என்று சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு கங்குலி கேப்டனாக பொறுப்பேற்ற போது, அணியே பெரும் இக்கட்டில் இருந்தது. அப்போதைய கேப்டன் முகமது அசாருதீன் மேல் சூதாட்டப்புகார் எழுந்து, இந்திய கிரிக்கெட் மீதே ரசிகர்கள் நம்பிக்கை இழந்த சமயத்தில், கேப்டன் பொறுப்பு கங்குலியிடம் ஒப்படைக்கப்…
-
- 0 replies
- 329 views
-
-
''மதுவை தொட்டதுமில்லை... தொடுவதுமில்லை '' - இந்திய கேப்டன் தோனி தனது 34வது பிறந்தநாளை கொண்டாடிய இந்திய அணியின் கேப்டன் தோனி நேற்று கேக் வெட்டுவதற்கு முன், செய்தியாளர்கள் சந்திப்பில் சில சுவரஷ்யங்களை பகிர்ந்து கொண்டார். நான் மதுவை தொட்டதே இல்லை. ஆனால் அது சுவையானது என்பதை மற்றவர்கள் கூறுவதை வைத்து புரிந்து கொண்டிருக்கிறேன்.அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் மற்றும் டிராவிட் இவர்கள் தான் என்னுடைய ஹீரோக்கள். பொறுமை என்றால் என்ன என்பதை ராகுல் டிராவிட்தான் கற்றுக் கொடுத்தவர். பைக்குகளின் மீதான தீராத காதல் பற்றி டோனி கூறுகையில்,புதியது- பழையது என்று எல்லாம் பார்க்க மாட்டேன். எல்லாமே எனக்கு பிடிக்கும்.என்னிடம் டுகாட்டி பண்டா, ஹார்லே பேட் பாய், அமெரிக்காவில் தயாரிக்கப்படு…
-
- 2 replies
- 912 views
-
-
அவுஸி சார்ப்பாக விம்பில்டனில் விளையாடி வரும் Nick Kyrgios (வயது 20,மலேசிய தமிழ் வழி தாய்க்கும் கிரேக்க தந்தைக்கும் பிறந்தவர்.) அசிங்கமான நிறவெறி தாக்குதலுக்கு இலக்காகி மனவேதனை அடைந்துள்ளார். அவுஸ்திரேலியா சார்ப்பாக சிறுவனாகவே ரெனிஸில் ஆட ஆரம்பித்து இன்று உலக தர டெனிஸில் விளையாடும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் இவர் மீது மோசமான நிறவெறித் தாக்குதலும் புறக்கணிப்பும் நிகழ்ந்து வருகிறது. விம்பில்டனில் 2015 தொடரில் இவர் அடைந்த தோல்வியை அடுத்து இன்னும் அதிகம் நிறவெறி பொழியப்பட்டுள்ளது இவர் மீது. இவர் உலக தர வரிசையில் 29 வது இடத்தில் இருந்தாலும் இள வயதினர் என்ற வகையில் விரைந்து டெனிஸில் முன்னேறி வர வழி இருக்கும் நிலையில் அவரை ஊக்குவிப்பதற்குப் பதில்.. அவர் மீது நிறவெறியைக் காட்டி …
-
- 0 replies
- 376 views
-
-
பெங்கால் டைகர் கங்குலிக்கு பிறந்தநாள்! ''உலகிற்கு கட்டாயம் என்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நிறைய உதடுகள் உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என கூறிவிடும்'' இதனை கூறியது தத்துவமேதையோ, அறிஞர்களோ அல்ல, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தான். கால்பந்திலிருந்து கிரிக்கெட்! மேற்கு வங்க மாநிலத்தில் 1972ம் ஆண்டு பிறந்தவர் சவுரவ் சந்திதாஸ் கங்குலி. ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய கங்குலிக்கு தன் அண்ணன் பயிற்சியை பார்த்து தான் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்தது. இயல்பாக இவர் வலது கை பழக்கம் உள்ளவர்; ஆனால் இடது கை ஆட்டக்காரராக தன் பயிற்சியை தொடங்கினார். 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இங்கிலாந…
-
- 1 reply
- 342 views
-
-
டி20 போட்டியில் 8 ஆயிரம் ரன்கள் அடித்து கிறிஸ் கெயில் வரலாற்று சாதனை! இருபது ஓவர் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற புதிய சாதனையை மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் படைத்துள்ளார். கரீபியன் பிரிமீயர் லீக்கில் நடந்த 16வது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா டல்லாவஸ் அணியுடன் லூசியா சூக்ஸ் அணி மோதியது. முதலில் பேட் செய்த லூசியா சூக்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை அடித்தது. கெவின் பீட்டர்சன் 57 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். தொடர்ந்து ஜமைக்கா அணி பேட் செய்தது. தொடக்க வீரர் வால்ட் 76 ரன்களை குவித்தார். கிறிஸ் கெயில் கடைசி வரை அவுட் ஆகாமல் 64 ரன்களை எடுத்தார். இத்துடன் கிறிஸ் கெயில் டி20 வரலாற்றில் புதிய சாதனையையும் படைத்தார். அத…
-
- 0 replies
- 224 views
-
-
இந்தியா–இலங்கை தொடர் எப்போது மும்பை: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 2 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஜூலை 19ல் தொடர் முடிந்தவுடன் மறுநாள் இந்திய வீரர்கள் திரும்புகின்றனர். அடுத்து இந்திய அணி இலங்கை சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான அட்டவணை நேற்று வெளியானது. இதன் படி ஆக., 12–16ல் முதல் டெஸ்ட் காலேயில் நடக்கும். அடுத்து ஆக., 20–24ல் இரண்டாவது டெஸ்ட் கொழும்புவிலும், ஆக., 28–செப்.,1ல் மூன்றாவது டெஸ்ட் பல்லேகெலேயிலும் நடக்கும். இப்போட்டிகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. முன்னதாக துவக்கம்: இரு …
-
- 2 replies
- 330 views
-
-
ஆஷஸ் - இது கிரிக்கெட் அல்ல போர்! உலகில் பல காரணங்களுக்காக போர் நடந்து பார்த்திருப்போம். ஆனால் இரண்டு நாடுகளுக்கு இடையே ஒரு கிரிக்கெட் போட்டியை போராக கருதுவதை பார்த்திருக்கிறீர்களா? வார்த்தை பரிமாற்றங்கள் துவங்கி களத்தில் மோதிக் கொள்ளாத குறையாக நடந்து கொள்வது வரை அனைத்துமே இந்த ஆட்டங்களில் நடக்கும். கிரிக்கெட்டை இப்படி ரசிகர்களும், வீரர்களும் போர் போல பார்க்கிறார்கள் என்றால் அது ஒன்று இந்தியா- பாகிஸ்தான் போட்டியாக இருக்கும், இன்னொன்று இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் போட்டியாக இருக்கும். இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் டெஸ்ட் போட்டிகளில் மோதிக் கொள்ளும் போட்டிகள் அனைத்தும் 1882க்கு பிறகு 'ஆஷஸ் தொடர்' என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன. நாளை ஆஷஸ் தொடரின் 69வது த…
-
- 2 replies
- 398 views
-
-
இலங்கையணி அறிவிப்பு இடதுகை சுழற்பந்துவீச்சு சகலதுறைவீரர்களான மிலிந்த சிறிவர்த்தன, சச்சித் பத்திரன ஆகியோர் முதற்தடவையாக பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடருக்கான அணிக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேவேளை ரங்கன ஹேரத், தரிந்து கௌஷால், தம்மிக பிரசாத், நுவான் குலசேகர, ஜீவன் மென்டிஸ், டுஷ்மந்த சமீர, டிமுத் கருணாரட்ன ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு இறுதியாக ஒருநாள் போட்டியில் விளையாடிய நுவான் பிரதீப்புடன், லசித் மலிங்க, சுரங்க லக்மால், சகலதுறைவீரர் திசார பெரேரா ஆகியோர் வேகப்பந்துவீச்சை கவனிக்கவுள்ளனர். சுழற்பந்துவீச்சை மேற்படி இரு சகலதுறைவீரர்கள் உட்பட சீக்குக பிரசன்னாவும், சசித்திர சேனநாயக்காவும் கவனிக்கவுள்ளனர். துடு…
-
- 25 replies
- 1.3k views
-
-
பயிற்சியைப் புறக்கணித்த உமர் அக்மல்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி சிக்கலில் உமர் அக்மல். | படம்: ஏ.எப்.பி. இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கு பாகிஸ்தான் பேட்ஸ்மென் உமர் அக்மல் தேர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை. காரணம், அவர் பயிற்சிக்கு அழைப்பு விடுத்திருந்தும் புறக்கணித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தேர்வாளர் ஹரூன் ரஷீத் பிடிஐ-யிடம் தெரிவிக்கும் போது, “இலங்கைக்கு எதிரான ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்படவிருந்த வீரர்களுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஆஜராகுமாறு கூறியிருந்தோம். ஆனால் உமர் அக்மல் வரவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் முகமது அக்ரமிடம் உமர் அக்மல் …
-
- 0 replies
- 323 views
-
-
5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை மிதாலிராஜ்! மகளிர் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்ககளை கடந்து இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மகளிர் கிரிக்கெட் தொடரின் 4வது ஒருநாள் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 221 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து இந்திய 44.2 ஓவர்களில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ், 53 ரன்கள் எடுத்த போது ஒருநாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். மகளிர் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீராங்கனை மிதாலி ராஜ்…
-
- 0 replies
- 324 views
-
-
டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான்! காலே: பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்கள் அடித்து ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்துள்ளார். காலேவில் இலங்கை& பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 278 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் 215 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை 313 ரன்கள் அடிக்க, பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. அகமது ஷேஷாத் டக் அவுட் ஆனார். அசார் அலி 5 ரன்களில் வெளியேறினார். அடுத்து யூனிஸ் கான், மற்றொரு தொடக்க வீரரான ஷான் மசூத்துடன் இணைந்து அணியை மீட்டெடுத்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 255 ரன்கள் க…
-
- 2 replies
- 451 views
-
-
கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது... என்ன செய்யப் போகிறார் யுவராஜ் சிங்? பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், யூவீகேன் வென்ச்சர்ஸ் என்னும் புதிய நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். முதலீட்டு நிறுவனமான இதன் மூலம் ஆன்லைனில் நிதி திரட்ட யுவராஜ்சிங் திட்டமிட்டுள்ளார். தனது புதிய நிறுவனத்தில் ரூ. 50 கோடி ரூபாயை யுவராஜ்சிங் முதலீடு செய்திருக்கிறார். இந்த நிறுவனத்தில் 80 சதவீதம் இவருடைய பங்காகவும் மீதி 20 சதவீதம் யுவியின் நண்பரும் நிறுவனத்தின் துணை நிறுவனருமான நிஷாந்த் சிங்காலின் பங்காகவும் உள்ளது. தனது நெருங்கிய நண்பரான நிஷாந்த் சிங்காலின் அறிவுரைப்படியே இந்த நிறுவனத்தை யுவராஜ் சிங் தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் 300 கோடி ரூபாய் அளவுக்க…
-
- 0 replies
- 244 views
-
-
விருதும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்... புலம்பியபடி வெளியேறிய மெஸ்சி! பொதுவாகவே அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.. பார்சிலோனா அணிக்காக விளையாடும் போது அபாரமாக ஆடுவார் என்றும் தாய்நாட்டுக்காக விளையாடும் போது சொதப்புவார் என்பதுதான் அந்த குற்றச்சாட்டு. கால்பந்து தனிநபர் போட்டி அல்ல. பார்சிலோனாவில் கையாள்வது பெரும்பாலும் ஸ்பெயினின் டிக்கி டாக்கா ஆட்டம். டிக்கி டாக்காவால் எதிரணி வீரர்களுக்கு பந்து அவ்வளவாக கிடைக்காது. வாய்ப்பு கிடைக்கும் போது மிக எளிதாக கோலுக்குள் பந்து போகும். அது தவிர அங்கே சேவி, இனியஸ்டா போன்றவர்கள் மெஸ்சிக்கு பந்தை சப்ளை செய்வதில் கை தேர்ந்தவர்கள்.அர்ஜென்டினா அணியில் பார்சிலோனாவின் ஜேவியர் மச்சரானோ, பாரீஸ் செயின்ட் ஜெ…
-
- 0 replies
- 354 views
-
-
ஜூலை 7: 'கேப்டன் கூல்' தோனி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர் இளம் வயதில் செம விளையாட்டு பையன்.பிடித்த விளையாட்டு கால்பந்து தான்,கூடவே பாட்மிண்டன் ! கால்பந்தில் டோனி அணியின் கோல் கீப்பர்,பல காலத்திற்கு கால்பந்தே விளையாடிக்கொண்டு இருந்தார் . ஒரு கிரிக்கெட் போட்டியின் பொழுது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட்டதால் தோனியை கீப்பிங் செய்ய சொன்னார்கள் நண்பர்கள்.அப்படி தொற்றிக்கொண்டது தான் கிரிக்கெட் ஆர்வம். இளம் வயதிலேயே ரொம்பவே துறுதுறுப்பான பையன்.காலையில் எழுந்தத…
-
- 1 reply
- 2.4k views
-
-
என்னைத் தாக்கியதற்கு வார்னர் கூறும் காரணம் நகைப்புக்குரியது: ஜோ ரூட் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட். | படம்: ஏ.பி. அடங்கிய ஆஷஸ் தீ மீண்டும் பல்வேறு விதங்களில் மூட்டப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பர்மிங்ஹாம் மதுபான விடுதி ஒன்றில் தாக்கினார். இதற்கு வார்னர் கூறிய காரணம் என்னவெனில், வார்னர் நண்பரிடமிருந்து ‘விக்’ ஒன்றை பிடுங்கிய ஜோ ரூட் அதனைத் தனது கன்னத்தில் தாடியாக ஒட்டிக்கொண்டார். இது தென் ஆப்பிரிக்க்க வீரர் ஹஷிம் ஆம்லாவின் தாடியை கேலி செய்வது போல் இருந்தது, இதனால்தான் ஜோ ரூட்டைத் தாக்கினேன் என்றார் வார்னர். இதனையடுத்து ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக ஜோ ரூட், இரண்டு ட்விட்டர் பதிவுகளை வெளியிட்…
-
- 0 replies
- 303 views
-
-
பார்முலா 1 : கிண்ணத்தை வென்றார் ஹமில்டன் பார்முலா 1 கார்பந்தய போட்டியில் லீவிஸ் ஹமில்டன் முதலிடத்தை பெற்றுள்ளார். கார்பந்தயத்தில் முதலிடத்தில் இருக்கும் பார்முலா 1 போட்டியின் 9ஆவது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பரி சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நடந்தது. பந்தய தூரமான 306 கிலோ மீட்டர் இலக்கை மெர்சிடஸ் அணியின் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹமில்டன் 1 மணி 31 நிமிடம் 27.729 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்து கிண்ணம் வென்றார். ஜேர்மனி வீரர்கள் ரோஸ்பெர்க் 2ஆவது இடத்தையும் செபஸ்டியன் வெட்டல் 3ஆவது இடத்தையும் பெற்றனர். 19 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் இதுவரை நடந்துள்ள 9 சுற்று முடிவில் ஹமில்டன் 194 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரோஸ்பெர்க் 177 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் உள்…
-
- 0 replies
- 241 views
-