Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. குஜராத் மண்ணில் தமிழ்நாடு வெற்றிக்கொடி நாட்டியது எப்படி? அஷ்வின், சுந்தர், நடராஜன் என நட்சத்திர வீரர்கள் இல்லாத போதும் குஜராத் மண்ணில் தமிழ்நாடு வெற்றிக்கொடி நாட்டியது எப்படி?

    • 0 replies
    • 645 views
  2. போதையில் தகாத வார்த்தைகளை வீசிய ஓ'கீபேவுக்கு 15 ஆயிரம் டாலர் அபராதம் புனே டெஸ்டில் இந்தியாவை தோற்கடிக்க முக்கிய காரணமாக இருந்த ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபேவுக்கு போதையில் திட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபே. 32 வயதான இவர் புனே போட்டியில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்தார். விளையாட்டில் சிறப்பாக செயல்படும் இவர், கிரிக்கெட்டிற்கு வெளியே ஒழுக்கத்துடன் நடமாடியது கிடையாது. கடந்த வருடம் சிட்னி ஓட்டலில் கடும்போதையில் தகராறு செய்து பிரச்சினையில் சிக்கிக்கொண்டார். இந்நிலையில் தற்போத…

  3. 9ஆவது பெனால்டியில் புனித பத்திரிசியாரை வீழ்த்தி சம்பியனாகிய புனித ஹென்ரியரசர் ஐந்தாவது முறையாக நடாத்தப்படுகின்ற மைலோ கிண்ண கால்பந்து தொடரின் ஓர் அங்கமாக இந்த வருடம் இடம்பெற்ற யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவின் இறுதிப் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரியை பலத்த போராட்டத்தின் பின்னர் வெற்றி கொண்ட புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பியன் பட்டத்தினை தமதாக்கியது. அதேவேளை, முன்றாமிடத்தினை கொற்றாவத்தை அமெரிக்க மிசன் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது. இறுதிப் போட்டி வட மாகாண கால்பந்தில் பெரும் பலம்கொண்ட அணிகளான யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் இளவாலை புனித ஹென்றியரசர் கல…

  4. ஒரு சிறந்த இன்னிங்ஸ் ஆடிவிட்டால் நாம் உடனே பீடத்தில் அமர்த்திவிடுகிறோம்: தோனி இங்கிலாந்துக்கு எதிரான ரெய்னாவின் சதம் அற்புதமானது என்று வருணித்துள்ள கேப்டன் தோனி, அவர் சோபிக்காது போயிருந்தால் கேள்விகள் வேறுவிதமாக அமைந்திருக்கும் என்றார். நேற்றைய வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் தோனி கூறியதாவது: “ரெய்னாவின் இன்னிங்ஸ் அற்புதமானது, 30வது ஓவர் முடியும் போது கூட நாங்கள் நிறைய ரன்களை எடுத்திருக்கவில்லை. எனவே ரெய்னா நிற்பது அவசியம் என்றானது. ஏனெனில் அவர்தான் நேற்று மிகவும் அனாயசமாக ஆடினார். நாங்கள் இருவரும் நின்றால், நிச்சயம் நிறைய ரன்களை இந்தப் பிட்சில் குவிக்க முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். ரெய்னா மிகவேகமாக ரன் குவிக்கு ஒரு பேட்ஸ்மென், ம…

  5. நேசத்துடன் இந்தியா செல்கிறோம்: லாகூர் லயன்ஸ் கேப்டன் மொகமது ஹபீஸ் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ் அணி வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டது. இதனையடுத்து கேப்டன் மொகமது ஹபீஸ் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். லாகூர் லயன்ஸ் அணியில் பாகிஸ்தான் அணிக்கு விளையாடும் உமர் அக்மல், அகமது ஷேஜாத், வஹாப் ரியாஸ், நசீர் ஜாம்ஷேட் ஆகியோர் உள்ளனர். மேலும் அய்ஜாஸ் சீமா என்ற வீரரும் உள்ளார். விசா கிடைத்தது பற்றிய மகிழ்ச்சியைத் தெரிவித்த மொகமது ஹபீஸ், “நாங்கள் நேசம் என்ற செய்தியுடன் இந்தியா செல்கிறோம். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அங்கு எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். பாகிஸ்தான் நாட்டின் தூதர்களாக நாங்கள் அங்கு செல்ல…

  6. 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கவுன்டவுண் தொடங்கியது..! 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கவுன்டவுண் தொடங்கியுள்ளது. photo credit: @ICC நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, அடுத்த ஆண்டு மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள இத்தொடருக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் தகுதிபெற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகளில் விளையாட உள்ளன. இதில் தகுதி பெறும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையமுடியும். இந்தியா, தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மேலும், தனது ப…

  7. உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் சாதனை படைத்த குத்துச்சண்டை வீரர்! விளையாட்டு, ஒரு வீரருக்கு எவ்வளவு புகழை தேடிக் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு பணத்தையும் கொட்டிக் கொடுக்கின்றது. அவ்வாறு புகழுடன் கூடிய பணத்தை சம்பாதிக்கும் ஓர் குத்துச்சண்டை வீரர் குறித்து தான் தற்போது நாம், பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் இச்செய்திக்குள் நுழையலாம்… மெக்சிகோ நாட்டின் முன்னணி குத்துச்சண்டை வீரரான கானலோ அல்வரேஸ், உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில், புதிய சாதனை படைத்துள்ளார். இவர் ஒரு ஒளிபரப்பு நிறுவனத்துடன் செய்துக் கொண்டுள்ள ஒப்பந்தப் படி, சுமார் 365 மில்லியன் டொலர்கள் சம்பாதிக்க உள்ளார். விளையாட்டு உலகத்தில் இதுவே அதிக மதிப்ப…

  8. இலங்கை சுழல்பந்து வீச்சாளர்கள் திறமையை வெளிப்படுத்தவில்லை என்கிறார் மெத்யூஸ் சுழல்­பந்­து­ வீச்­சா­ளர்­க­ளுக்கு சாதக­மான காலி ஆடு­க­ளத் தில் பாகிஸ்தான் சுழல்­பந்து வீச்­சா­ளர்­க­ளான யசிர் ஷாவும் ஸுல்ஃபிகார் பாபாரும் தனது சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­களை விஞ்சிவிட்­டதை இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் ஒப்­புக்­கொண்­டுள்ளார். பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் 10 விக்கெட்­களால் தோல்வியடைந்த பின்னர் செய்­தி­யா­ளர்கள் மத்­தியில் மெத்யூஸ் கருத்து வெளி­யிட்டார். யசிரும் பாபாரும் தங்­க­ளி­டையே 13 விக்கெட்­களைப் பகிர்ந்­து­கொண்­ட­துடன் மொஹமத் ஹஃபீஸ் இரண்டு விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார். ஆனால் இலங்­கையின் முன்­னணி சுழல்­பந்­து­வீச்­ச…

  9. யாழில் முதல் முறையாக மின்னொளியில் இருபதுக்கு இருபது போட்டி March 29, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விஜயரட்ணம் ஞாபகார்த்த இருபதுக்கு இருபது (T20) கடின பந்து (லெத போல்) துடுப்பாட்ட போட்டி யாழில் முதல் முறையாக மின்னொளியில் நடத்தப்படவுள்ளது. யாழில்.உள்ள கழகங்களில் அழைக்கப்பட்ட எட்டு கழகங்களுக்கு இடையில் குறித்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன. போட்டிக்கான அணிகளின் அறிமுகம், சீருடை (ஜெசி) வெளியிடு என்பன நேற்றைய தினம் யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது. அதன் போது போட்டியினை நடாத்தும் விஜயரட்ணம் பிரபன் கருத்து தெரிவிக்கையில், எனது தந்தையாரின் ஞாபகார்த்தமாகவே குறித்…

  10. உலக கோப்பை கிரிக்கெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி - பிரித்வெய்ட்டின் சதம் வீண் ஜூன் 23, 02:18 AM உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் கோதாதவில் இறங்கின. வெஸ்ட் இண்டீஸ் அணியில் மூன்று மாற்றமாக காயத்தால் அவதிப்படும் ஆந்த்ரே ரஸ்செல் மற்றும் கேப்ரியல், டேரன் பிராவோ ஆகியோர் கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக கார்லஸ் பிராத்வெய்ட், கெமார் ரோச், ஆஷ்லே நர்ஸ் சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ ஜெயித்…

  11. Started by nunavilan,

    இலங்கை திணறல் Friday, 15 February, 2008 04:12 PM . பெர்த், பிப். 15: பெர்த்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவிடம் திணறி வருகிறது. . பெர்த்தில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மேத்யூ ஹைடன் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆனால் மற்றொரு துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கில்கிறிஸ்ட் இலங்கை பந்துவீச்சாளர்களை பந்துகளை அடித்து நொறுக்கி விளையாடி சதமடித்தார். 107 பந்துகளில் அவர் தனது சதத்தை நிறை…

    • 0 replies
    • 1.1k views
  12. ஏலம் போன வீரர்களுக்கான தொகையும் அவர்களை விலை கொடுத்து வாங்கிய அணிகளும் [22 - February - 2008] [Font Size - A - A - A] இந்திய பிரிமியர் லீக் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 16 வீரர்கள் இடம்பெறுவார்கள். ஒரு அணி 8 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்யலாம். அதில் 4 பேர் மட்டுமே ஆடும் அணியில் இடம்பெறமுடியும். அணியின் சொந்த இடங்களைச் சேர்ந்த 4 பேரும், 22 வயதுக்குட்பட்ட 4 பேரும் அணியில் இடம்பிடிப்பார்கள். பிரிமியர் லீக் போட்டிக்கான 75 வீரர்கள் மும்பையில் ஏலம் விடப்பட்டனர். அவர்கள் மொத்தம் 144 கோடி ரூபாவுக்கு ஏலம் போனார்கள். அணி வீரர்கள் ஏலம் போன தொகையையும் அவர்களை விலை கொடுத்து வாங்கிய அணிகளின் விபரமும் வருமாறு: சென்னை அணி: …

  13. தோள் பட்டை வலிக்காக டேல் ஸ்டெயினுக்கு வித்தியாசமான சிகிச்சை! தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள வலிக்காக, தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வரும் தெனாப்பிரிக்க பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. தோள்பட்டை வலி காரணமாக அந்த போட்டியில் இருந்து அவர் விலகினார். அடிக்கடி தோள்பட்டை வலியால் அவதிப்படுவதால், இந்த முறை டெல் ஸ்டெயினுக்கு ஹைபெர்பெரிக் முறையிலான ஆக்சிஜன் தெரபி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, முழுவதும் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ஒரு தனி சேம்பரில் டேல் ஸ்டெயின் அடைக்கப்பட்டார். இந்த ச…

  14. பாகிஸ்தான் சென்று விளையாட பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹிம் மறுப்பு By Mohammed Rishad - பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அந்த அணியின் அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹிம் அங்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஆனால் பாதுகாப்பு காரணத்தை முன்னிறுத்தி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட தயார் எனவும், டெஸ்ட் தொடரை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என …

    • 0 replies
    • 468 views
  15. நியூசிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வென்று, அந்த அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து இந்தியா சாதனை படைத்தது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் 4 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி வென்று முன்னிலை வகித்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி, மவுன்ட் மவுன்கனோய் (( Mount Maunganui)) பகுதியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 60 ரன்களும், கே.எல். ராகுல் 45 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 33 ரன்களும் சேர்த்தனர். இதைத்…

    • 0 replies
    • 550 views
  16. கேப்டன் பொறுப்பில் இருந்து அப்ரீடி விலகல் அப்ரீடி. | கோப்பு படம்: ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஷாகித் அப்ரீடி அறிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் குரூப் சுற்றிலேயே வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் டி 20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அப்ரீடி விலகவேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூறிவந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அப்ரீடி நேற்று அறிவி…

  17. கிரிக்கெட்டிலும் இனவெறி: நான் அதை சந்தித்துள்ளேன்- கிறிஸ் கெய்ல் சொல்கிறார் அமெரிக்காவில் காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் உயிர் இழந்தார். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. கறுப்பின மக்கள் இந்த சம்பவம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியதாவது:- மற்றவர்களை போல கறுப்பு இன மக்களின் வாழ்க்கையும் முக்கியமானதுதான். அவர்களுக்கு என்று தனி வாழ்க்கை முறை கிடையாது. கறுப்பின மக்களை முட்டாள்கள் போல நடத்துவது …

  18. என்னதான் வேண்டும் அர்ஜுனவுக்கு? -பேரின்பராஜா திபான், கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கைக்கு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தவரும் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில், இலங்கை கிரிக்கெட் சபை பற்றியும் இலங்கையில் கிரிக்கெட் பற்றியும் தனது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். இலங்கையின் சாதனை வீரரான முத்தையா முரளிதரனைத் "துரோகி"யாக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில், அர்ஜுனவின் கலந்துரையாடல், முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆனால், அர்ஜுனவின் வழக்கமான பாணியிலான முறைப்பாடுகளே, இதன்போது காணப்பட்டன. …

  19. ஹாக்கி: பெல்ஜியத்திடம் காலிறுதியில் இந்தியா தோல்வி: பதக்க வாய்ப்பை இழந்தது பெல்ஜியத்துடனான ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய சோகத்தில் இந்திய வீரர்கள் | படம்: ஏ.பி. ஹாக்கியில் வெண்கலமாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் போனது, காலிறுதியில் பெல்ஜியத்திடம் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது. முதலில் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார், ஆனால் பெல்ஜித்தின் செபாஸ்டியன் டாக்கியர் 2 கோல்களை அடிக்க பெல்ஜியம் 2-1 என்று முன்னிலை பெற்றது. இந்நிலையில் இந்திய அணி சமன் செய்த எடுத்த முயற்சிகள் தோல்வியடைய, கடைசி கவுன்ட்டர் அட்டாக்கில் பெல்ஜியம் வீரர் டாம் பூன் 3-வது கோலை அடித்து இந்திய வாய்ப்புக்கு ‘சீல்’ வைத்தார். …

  20. இந்தியத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு- ஆண்டர்சன் அணியில் இல்லை. இந்தியத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு- ஆண்டர்சன் அணியில் இல்லை. இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள அலிஸ்டயார் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பங்களாதேஷ் அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் அணியில் எதுவித மாற்றமுமின்றி அதே அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. உபாதைகள் காரணமாக அவதிப்பட்டு வரும் அந்த அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தியத் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் மாதம் 9 ம் தி…

  21. இங்கிலாந்து பிறீமியர் லீக்: லிவர்பூல், சிற்றி, ஆர்சனல் வெற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்றுச் சனிக்கிழமை (29), இடம்பெற்ற போட்டிகளில், லிவர்பூல், மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், வட்போர்ட், மிடில்ஸ்பேர்க் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளதோடு, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், லெய்செஸ்டர் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் மன்செஸ்டர் யுனைட்டெட், பேர்ண்லி ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்துள்ளது. லிவர்பூல், கிறிஸ்டல் பலஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது. லிவர்பூல் சார்பாக, எம்ரே கான்,டெஜான் லொவ்ரென், ஜோயல் மட்டிப், ரொபேர்ட்டோ…

  22. விராட் கோலியைச் சீண்டி கோபப்படுத்துவோம்: ஆஸி. கேப்டன் ஸ்மித் டிசம்பர் 28, 2014-ல் மெல்போர்னில் சதம் எடுத்துத் துள்ளிக் குதிக்கும் கோலியை பார்க்கும் ஆஸி. கேப்டன் ஸ்மித். | படம்: ஏ.எஃப்.பி. இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளை ஆடவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், இந்திய கேப்டன் விராட் கோலியின் பண்பை சோதிப்போம் என்ற தொனியில் கருத்து தெரிவித்துள்ளார். 3 வடிவங்களிலும் 50 ரன்கள் சராசரி என்ற சாதனை ஆண்டை கோலி அணியின் வெற்றிகளுடன் கொண்டாடி வரும் நிலையில் பயணிக்கவிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அவரது குணாம்சத்திற்கு சோதனை கொடுப்போம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் கூறும்…

  23. உதைபந்தாட்ட வீரர்களுக்கு வித்தியாசமான காரணத்தால் விளையாடத் தடை முறையற்ற சிகையலங்காரத்துடன் விளையாடவிருந்த நாற்பத்தாறு உதைபந்தாட்ட வீரர்களைத் தடை செய்திருக்கிறது ஐக்கிய அரபு இராச்சிய உதைபந்தாட்டச் சம்மேளனம். மேலும், சிகை அலங்காரத்தை மாற்றிக்கொண்டால் மட்டுமே அவர்கள் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. சவூதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் சிலவற்றில் ‘மோஹோக்’ மற்றும் ‘காஸா’ போன்ற சிகையலங்காரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. 2012ஆம் ஆண்டு சவூதியின் தேசிய உதைபந்தாட்ட அணி கோல் காப்பாளர் வலீத் அப்துல்லாவுக்கும், அவரது சிகையலங்காரத்தை மாற்றிக்கொள்ளுமாறு போட்டி நடுவர்களால் கூறப்பட்டிருந்தது. சவூதியில் உ…

  24. மத்தி., சேவியர், பற்றிக்ஸ் முன்னேற்றம் IM பாடசாலைகளுக்கு இடையிலான மாகாணமட்ட கால்பந்தாட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 18 வயதுப்பிரிவு ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி, சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானங்களில் நேற்று நடைபெற்றன. அரையிறுதிக்குத் தகுதிபெற்ற அணிகளின் விவரங்கள் வருமாறு. முதலாவது காலிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி மோதியது. 3:0 என்ற கோல் கணக்கில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் வவுனியா செட்டிக்குளம் மகா வித்திhலய அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணி மோ…

  25. உமர் அக்மலுக்கு போட்டித் தடை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடந்த காலங்­களில் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளான உமர் அக்மல், அவ்­வ­ணியின் பயிற்­சி­யாளர் மிக்கி ஆர்தர் தன்னை மோச ­மான மொழியில் வசை ­பா­டினார் என்றும் தேசிய கிரிக்கெட் அக­ட­மியின் வச­தி­களைத் தான் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தடை விதித்தார் என்றும் ஊட­கங்கள் மூல­மாக குற்­றஞ்­சாட்­டி­யதால் அவர் போட்டித்தடைக்கு உள்­ளா­கி­யுள்ளார். அத்துடன் ஒரு மில்­லியன் ரூபா அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது. http://www.virakesari.lk/article/25239

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.