விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
சர்வதேச தடகள சம்மேளனத்தின் மூன்று உயரதிகாரிகளுக்கு வாழ்நாள் தடை சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைமை அலுவலகம் ரஷ்ய தடகள விளையாட்டு வீரர்களின் ஊக்கமருந்து மோசடிகளை மூடிமறைக்க முயன்ற குற்றச்சாட்டில் தடகள விளையாட்டு உலகின் மூன்று மூத்த அதிகாரிகளுக்கு ஆயுள்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விளையாட்டுத் துறைக்கு எதிர்பார்த்திராத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச தடகள சம்மேளனத்தின் ஒழுக்கநெறி ஆணையம் கூறியுள்ளது. ரஷ்ய தடகள சங்கத்தின் தலைவர், உலக தடகள சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான Lamine Diack-இன் மகன் ஆகியோரும் தடைவிதிக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர். ரஷ்ய மராத்தன் ஓட்ட வீராங்கனை ஒருவர் ஊக்கமருந்தை பயன்படுத்தியதை மறைப்பதற்கு இவர்கள் லஞ்சம் கோரியதாக ஒழ…
-
- 0 replies
- 335 views
-
-
இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு இரு தமிழ் இளைஞர்கள். இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு இரு தமிழ் இளைஞர்கள். சீனாவில் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவபடுத்தி விளையாடுவதற்கு 2 தமிழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த சச்சிதானந்தன் உகந்தன், கிறிஸ்ரின் விஜய் ஆகிய இருவருமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://vilaiyattu.com/இலங்கை-தேசிய-கூடைப்பந்தா/
-
- 1 reply
- 335 views
-
-
2011 உலகக்கோப்பையில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி: விசாரணை நடத்த ரணதுங்கா வலியுறுத்தல் 2011-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது குறித்து விசரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் கேப்டன் ரணதுங்கா வலியுறுத்தி உள்ளார். கொழும்பு: மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் ஆடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் 18 ரன்…
-
- 0 replies
- 335 views
-
-
கோலியை தேர்வு செய்ய எதிர்த்த தோனி; பலிகடாவான தமிழக வீரர் பத்ரிநாத்: அம்பலப்படுத்தினார் வெங்சர்க்கர் கோப்புப் படம் விராட் கோலி அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீரர் பத்ரிநாத் சுப்பிரமணியன் தேர்வு செய்யப்படவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான திலிப் வெங்சர்க்கர் அம்பலப்படுத்தியுள்ளார். அணிக்குள் விராட் கோலியைத் தேர்வு செய்ய அப்போது கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனியும், பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கர், கடந்த 2006-ம் ஆண்டில் …
-
- 0 replies
- 335 views
-
-
பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீசுக்கு இனிமேல் பந்து வீச தடை பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் பந்து வீச்சாளர் மொஹமட் ஹபீசுக்கு சர்வதேச போட்டிகளின் போது பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பந்து வீச்சு முறை சட்ட விதிக்கு எதிரானது என்ற காரணத்தினால் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மொஹமட் ஹபீசுக்கு எதிரான இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=97500
-
- 0 replies
- 335 views
-
-
''சைமண்ட்ஸ் ஒரு குடிகாரர், புக்கனனுக்கு ஒன்றும் தெரியாது ''- மைக்கேல் கிளார்க் ஆவேசம் தன்னை விமர்சித்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ஹைடன், சைமண்ட்ஸ் , ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் புக்கனன் ஆகியோருக்கு மைக்கேல் கிளார்க் தனது புத்தகம் வாயிலாக கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். அண்மையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மைக்கேல் கிளார்க் 'ஆஷஸ் டைரி 15 'என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலரையும் விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கிளார்க்கின் தலைமைப் பண்பு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சைமண்ட்ஸ் தனது புத்தகத்தில் இவ்வாறு கூற…
-
- 0 replies
- 334 views
-
-
உலுக்கும் உபாதைகளால் அவதிப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள். உலுக்கும் உபாதைகளால் அவதிப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் பலர் அண்மைய நாட்களாக உபாதைகளால் அவதிப்பட்டு வருவதாகவும், சிலவேளைகளில் அடுத்துவரும் சிம்பாவே தொடருக்கான அணியில் இளையவர்கள் அழைக்கப்படலாம் எனும் கருத்து வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சேனநாயக்கவை மேற்கோள்காட்டி இந்த செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை அணியின் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் , ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரில் தசைப்பிடிப்பு காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார்,ஆயினும் அவரும் இன்னும் குணமாகவில்லை என அறியக் கிடைக்கிறது. இலங்…
-
- 0 replies
- 334 views
-
-
உடல் எடையை குறைப்பதற்காக ஓட ஆரம்பித்தவர் 24 மணித்தியாலங்களில் 319 கி.மீ. ஓடி உலக சாதனை By VISHNU 26 SEP, 2022 | 01:00 PM லித்துவேனியாவைச் சேர்ந்த ஓட்ட வீரர் அலெக்ஸாண்டர் சோரோகின், 24 மணித்தியாலங்களில் 319.6 கிலோமீற்றர் தூரம் ஓடி புதிய உலக சாதனை படைத்துள்ளார். 41 வயதான சோரோகின் சானியா எனும் பெயரிலும் அழைக்கப்படுகிறார். 24 மணித்தியாலங்களில் அதிக தூரம் ஓடும் ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் வெரோனா நகரில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் 319.6 கிலோமீற்றர் ஓடிய சோரோகின், முதலிடம் பெற்றதுடன் புதிய உலக சாதனை படைத்தார். சராசரியாக மணித்தியாலத்துக்கு …
-
- 2 replies
- 334 views
- 1 follower
-
-
நமக்குத் தேவை வேகப்பந்து வீச்சாளர்களா? நல்ல பந்து வீச்சாளர்களா?: தோனி வேகப்பந்து வீச்சாளர்கள் மீது தோனி சாடல். | கோப்புப் படம். வங்கதேசத்துக்கு எதிராக 1-2 என்று ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணியின் கேப்டன் தோனி, ஆட்டம் முடிந்த பிறகு கேள்விகளுக்கு பதில் அளித்தார். பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய தோனி, 'நமக்குத் தேவை வேகப்பந்து வீச்சாளர்களா, அல்லது நல்ல பந்து வீச்சாளர்களா என்பதை முடிவெடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். நேற்றைய ஆறுதல் வெற்றி குறித்து தோனி, கூறும் போது, “ரன்கள் இருந்தால் வெற்றி நிச்சயம், இந்தப் போட்டியில் ரன்கள் குவித்தோம். நமது பவுலர்களுக்கு கூடுதலாக 10-15 ரன்களைக்கான சவுகரியம் அளிக்கும் போது ஆட்டம் சுவாரசியமாகிறது. சில வேளைகளில் இத்தகைய, பந்துகள் மெத…
-
- 0 replies
- 334 views
-
-
ஜேர்மன் கிண்ண கால்பந்தாட்டத்திலிருந்து நடப்பு சம்பியன் மியூனிச் வெளியேற்றம் பொருசியா டோர்ட்மண்ட் கழகத்திற்கு எதிரான ஜேர்மன் கிண்ண அரை இறுதிப் போட்டியில் சமநிலை முறிப்பு பெனல்டிகள் அனைத்தையும் கோட்டைவிட்ட நடப்பு சம்பியன் பயேர்ன் மியூனிச்கழகம் 2 – 0 என்ற பெனல்டி அடிப்படையில் தோல்வியடைந்து போட்டிகளிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. இரண்டு அணிகளுக்கும் இடையில் வார இறுதியில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் மேலதிக நேர முடிவின்போது 1– 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்திருந்தது. இதனை அடுத்து வழங்கப்பட்ட பெனல்டிகளில் தனது நான்கு பெனல்டிகளையும் பயெர்ன் மியூனிச் கோட்டை விட்டது. ஜேர்மன் வீரரும் பயேர்…
-
- 0 replies
- 334 views
-
-
பேட்ஸ்மென் அடித்த ஷாட் பவுலர் தலையில் பட்ட பிறகு சிக்ஸ்: நியூஸி. கிரிக்கெட்டில் வினோதம்; ஆபத்திலிருந்து தப்பிய பவுலர் படம். | ட்விட்டர். நியூஸிலாந்தின் உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்ஸ்மென் ஆக்ரோஷமாக அடித்த ஷாட் ஒன்று பவுலர் தலையில் பட்டு பிறகு சிக்ஸருக்குச் சென்ற வினோதச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆக்லாந்து பேட்ஸ்மென் ஜீத் ராவல், ஆண்ட்ரூ எல்லிஸ் என்ற பவுலரின் பந்தை நேராக ஆக்ரோஷமாக அடிக்க பந்து பவுலர் தலையில் பட்ட பிறகும் சிக்சருக்குப் பறந்தது. கேண்டர்பரி அணியைச் சேர்ந்தவர் பவுலர்/கேப்டன் எல்லிஸ். பந்து தலையில் பட்டதையடுத்து பரிசோதனை மேற்கொண்டார். …
-
- 4 replies
- 334 views
-
-
அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக்குடன் 6 விக்கெட் வீழ்த்திய கல்லூரி மாணவர்! வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்ரிக்க பந்துவீச்சாளர் காஜிசோ ரபேடா ஹாட்ரிக் சாதனையுடன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவர் கல்லூரியில் படித்து வரும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிர்பூரில் நடந்த இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த வங்காளதேசம் 36.3 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க தரப்பில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபேடா, 8 ஓவர்களில் 3 மெய்டனுடன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தமிம் இக்பால்,லிட்டான் தாஸ், மக்முதுல்லா ஆகியோரை டக்அவுட் செய்து ‘ஹாட்ரிக்’ சாதனை வேறு படைத்தார். இதன்…
-
- 0 replies
- 334 views
-
-
சென்றல் டிஸ்றிக்கில் ஜெயவர்த்தன Commentsநியூசிலாந்தின் உள்ளூர் இருபது-20 போட்டித்தொடரான ஜோர்ஜி பை சுப்பர் ஸ்மாஷில் இலங்கையணியில் இருந்து ஓய்வுபெற்றுள்ள முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்த்தன சென்றல் டிஸ்றிக்ஸ் அணிக்காக பங்கேற்கவுள்ளார். http://tamil.wisdensrilanka.lk/article/2061
-
- 0 replies
- 334 views
-
-
நியூசிலாந்துக் குழாம் அறிவிப்பு சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்காவுக்கான டெஸ்ட் தொடர்களுக்காகச் செல்லும் நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, 16 பேர் கொண்ட குழாமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட குழாமில், முதற்தடவையாக நியூசிலாந்துக் குழாமொன்றில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜீட் ராவல் இடம்பிடித்ததோடு, புறச் சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதியும் மீண்டும் டெஸ்ட் குழாமில் இடம்பிடித்திருக்கும் நிலையில், சகலதுறை வீரர் கொரே அன்டர்சன் குழாமில் இடம்பிடித்திருக்கவில்லை. எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி ஹராரேயில் ஆரம்பிக்கவுள்ள போட்டியுடன் இத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது. குழாம்: கேன் வில்லிய…
-
- 0 replies
- 334 views
-
-
ஐ.பி.எல்.-2017: கே.கே.ஆர். அணியில் வாசிம் அக்ரம் இடம்பெறவில்லை 2017-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் வாசிம் அக்ரம் இடம்பெறமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடர் மிகவும் பிரபலமானது. இந்த ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பங்கேற்று வருகிறது. 9 வருடங்கள் சிறப்பாக முடிந்துள்ள நிலையில் 10-வது தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி தொடங்குக…
-
- 0 replies
- 334 views
-
-
பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் முதல் T20-உலக சாம்பியன்களை இலகுவாக பந்தாடியது பாகிஸ்தான் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் முதல் T20-உலக சாம்பியன்களை இலகுவாக பந்தாடியது பாகிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி டுபாய் DSC மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்தப் போட்டியில் சகல துறைகளிலும் மிக சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி உலக சாம்பியன்கள் மேற்கிந்திய தீவுகள் அணியை 9 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டு 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்பிராஸ் அஹமெட் முதலில் களத்தடுப்பு முடிவை மேற்க…
-
- 1 reply
- 334 views
-
-
கெவின் பீட்டர்சனை சூதாட்டக்காரராக சித்தரித்து சர்சையை ஏற்படுத்திய பத்திரிக்கை கெவின் பீட்டர்சனை சூதாட்டக்காரராக சித்தரித்து சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிக்கை. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான கெவின் பீட்டர்சனை சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தியை வெளியிட்டு ஊடகம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அல்வீரோ பீட்டர்சன், உள்ளூர் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அண்மையில் அறிவித்தது. இந்தநிலையில் பங்களாதேஷை சேர்ந்த பிரபல பத்திரிகையொன்று அல்வீரோ பீட்டர்சனுக்குப் பதிலாக,இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் படத்தை பிரசுரித்து ச…
-
- 0 replies
- 334 views
-
-
கோலியை விமர்சனம் செய்தே ஆஸ்திரேலிய ஊடகங்கள் எழுதும்: மைக்கேல் கிளார்க் 2012-ம் ஆண்டு புகைப்படம். அடிலெய்ட் டெஸ்ட். விராட் கோலி, பேட்ஸ்மன் மைக்கேல் கிளார்க். - படம். | ராய்ட்டர்ஸ். இந்திய கேப்டன் விராட் கோலியிடம் நிறைய ‘ஆஸ்திரேலிய உணர்வு’ (ஸ்பிரிட், மனநிலை, அணுகுமுறை) இருப்பதாகவும் ஆனால் இதற்காக ஆஸ்திரேலிய ஊடகம் விராட் கோலியை ஒருபோதும் புகழ்ந்து எழுதாது என்றும் கூறினார் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க். ஆஸ்திரேலியச் சுற்றுலாத் துறையை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகாக புனே வந்திருந்த மைக்கேல் கிளார்க் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் விராட் கோலிக்கு அதிக ரசிகர…
-
- 0 replies
- 334 views
-
-
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல சீரான முறையில் ஆட வேண்டும்: தோனி இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனி. | கோப்புப் படம்: விவேல் பெந்த்ரே. 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல சீரான முறையில் ஆடுவது அவசியம் என்று இந்திய ஒருநாள், டி20 அணி கேப்டன் தோனி கூறியுள்ளார். ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரை 8 நாடுகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை தோனி தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் தோனி 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி குறித்து ஐசிசி இண…
-
- 0 replies
- 334 views
-
-
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீர்ர என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். ‘சிக்சர் மன்னன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், டி20 கிரிக்கெட்டில் முடிசூடா மன்னராக விளங்கி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் டி20 சர்வதேச கிரிக்கெட் அணிக்காக மட்டுமே விளையாடி வரும் கெய்ல், உலகின் பல்வேறு பகுதிய…
-
- 4 replies
- 334 views
-
-
டெஸ்ட் விளையாடும் இளம் வீரர்களுக்காக களத்தில் குதித்த சங்கக்கார டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கொடுக்கும் முறையை அமுல்படுத்த வேண்டும் எனவும், இதனால் இளம் வீரர்கள் T-20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதை தடுக்க முடியும் எனவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர கிரிக்கெட் வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்தார். டெஸ்ட் அரங்கில் அதிக ஓட்டங்களைக் குவித்த உலகின் 5ஆவது வீரராக வலம்வருகின்ற சங்கக்கார, கடந்த வருடம் முதல்தரப் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற T-20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றார்.…
-
- 0 replies
- 334 views
-
-
பாய்ந்து சென்று தங்கம் வென்ற மில்லர் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை பாய்ந்தபடி கடக்கும் பஹாமஸ் வீராங்கனை ஷானே மில்லர். படம்: ஏஎப்பி ரியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பஹாமாஸைச் சேர்ந்த மில்லர் தங்கப் பதக்கம் வென்றார். அவர் போட்டியில் ஜெயித்த விதம் சிலிர்ப்பூட்டும் வகையில் அமைந்தது. பந்தயம் முடிகிற நேரத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அலிசன் பெலிக்ஸ் வெற்றி பெறுகிற நிலையில் இருந்தார். அவருக்கும் பஹாமாஸைச் சேர்ந்த ஷானே மில்லருக்கும் கடும்போட்டி அமைந்தது. அப்போது மில்லர் திடீரென எல்லைக்கோட்டைத் தொடுகிற சமயத்தில் தடாலடியாக கீழே விழுந்த நிலையில் பாய்ந்து முன்னே சென்றார். இந்தச் செயலால் அவர் முதலிடத்தைப் பிடிக்கமுட…
-
- 0 replies
- 334 views
-
-
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா தவிர்க்க 1950இல் எடுத்த முடிவுதான் காரணமா? என்ன முடிவு அது? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரதீப் குமார் பதவி,பிபிசி செய்தியாளர் 19 நவம்பர் 2022, 13:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகக் கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20ஆம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. உலகம் முழுவதும் கால்பந்து விளையாடி வரும் 32 சிறந்த அணிகளுக்கு இடையிலான பரபரப்பான பந்தயங்களுக்குப் பிறகு கால்பந்து உலகின் மன்னர் யார் என்பது முடிவாகும். நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும் இந்த உலகக் …
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
உலக இருபதுக்கு-20 தொடரில் அயர்லாந்துக்காக ராங்கின் எதிர்வரும் வருடம் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில் மீண்டும் அயர்லாந்து அணிக்காக வேகப்பந்துவீச்சாளர் பொயிட் ராங்கின் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக, 2012ஆம் ஆண்டு உலக இருபதுக்கு-20 தொடரில் அயர்லாந்து அணிக்காக பங்கேற்ற ராங்கின், அதன் பின்னர், 2013ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்குமிடைப்பட்ட பகுதியில் இங்கிலாந்து அணிக்காக 11 போட்டிகளில் பங்கேற்றிருந்தார். அதன் பின்னர், இங்கிலாந்து அணியில் வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையிலேயே, தற்போது அவர் அயர்லாந்துக்கு மீளத் திரும்புகிறார். இதன்படி, இறுதியாக கடந்த வருடம் ஜனவர் மாதம் 17ஆம் திகதி இங்கிலாந்து அணிக்காக பங்கேற் ராங்கின், சர…
-
- 0 replies
- 333 views
-
-
UEFA சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றில் பரபரப்பு போட்டிகள் Getty Images உக்ரைனின் கீவ் நகரில் நடைபெறவுள்ள UEFA சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் மோதும் சுற்றுக்கான போட்டிகள் விபரம் இன்று (11) வெளியானது. இதன்மூலம் இந்த சுற்றில் பரபரப்பான சில முக்கிய போட்டிகள் இடம்பெறவுள்ளன. UEFA சம்பியன்ஸ் லீக்கின் இந்த ஆண்டு குழு நிலைப் போட்டிகளில் இரு முக்கிய சாதனைகள் படைக்கப்பட்டன. ரியல் மெட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அனைத்து குழு நிலைப் போட்டிகளிலும் கோல் பெற்ற முதல் வீரராக சாதனை படைத்தார். பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (PSG) குழுநிலையில் மொத்தம் 25 கோல்களை போட்டு அதிக கோல்கள் பெற்ற அணியாக சாதனை படைத்தது. முன்னர் 21 கோல்கள் போட்ட போர்ஷியா டொர்மு…
-
- 1 reply
- 333 views
-