விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
ராகுல் திராவிடுக்கு அண்டர்-19, இந்தியா-ஏ அணி பயிற்சியாளர் பொறுப்பு? பிசிசிஐ அமைத்த ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லஷ்மண் நியமிக்கப்பட்ட பிறகு ராகுல் திராவிடையும் பிசிசிஐ தனது செயல் திட்டத்துக்குள் கொண்டு வர முடிவெடுக்கலாம் என்று தெரிகிறது. அனுராக் தாக்கூர் ஏற்கெனவே இது பற்றி கூறும்போது, “ராகுல் திராவிட் போன்ற ஒரு கிரிக்கெட் வீரரை பிசிசிஐ சரியான இடத்தில் பயன்படுத்திக் கொள்ளூம். காலம் வரும்போது இதற்கான அறிவிப்பு வரும். ஒரே குழுவில் அனைவரையும் கொண்டு வர முடியாது” என்று கூறியதும் ராகுல் திராவிடுக்கு அளிக்கப்படும் புதிய பொறுப்பு பற்றிய செய்தியுடன் இணைத்து நோக்கத்தக்கது. ராகுல் திராவிட் மேற்பார்வையின் கீழ் சஞ்சு சாம்சன், கருண் நாயர், தீபக் ஹூடா போன்றோர் சிறப…
-
- 0 replies
- 267 views
-
-
குறைந்தது 5 ஆண்டுகளுக்கு இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதை விரும்புகிறேன்: விராட் கோலி உலகின் தலைசிறந்த அணியாக திகழ இந்திய கிரிக்கெட் அணியிடத்தில் திறமை இருக்கிறது என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மன்த்லிக்காக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "குறைந்தது 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் உலகில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நான் வலுவாக விரும்புகிறேன். நம்மிடம் திறமை நிறைய இருக்கிறது. இந்தத் திறமையை ஒருங்கிணைத்து எப்படி சிறப்பாக மேலாண்மை செய்வது என்பதைப் பொறுத்து இந்திய அணி ஆதிக்கம் செய்வது அமையும். நான் அணி வீரர்களிடத்தில் வலுவான பிணைப்பையும் நட்புறுதியையும் ஏற்படுத்த விரும்புகிறேன். ஆண்டில் 250 முதல் …
-
- 0 replies
- 319 views
-
-
இந்திய அணி இடைக்கால பயற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் வங்கதேசம் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், அணியின் துணைப் பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர், பரத் அருண் மற்றும் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் தொடருவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாம்ப்வே தொடர் தொடங்கவுள்ள ஜூலை மாதத்துக்குள்ளாகவே இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சிக் குழு நிர்வாகம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக, இங்கிலாந்து தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் எதிரொலியாக, இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அப்போதே பாங்கர், அருண், ஸ்ரீதர் ஆகியோர் துணைப் பயிற்ச…
-
- 0 replies
- 345 views
-
-
அதிருப்தியில் பாக்., கிரிக்கெட் லாகூர்: தற்கொலைப்படை தாக்குதலை வெளிப்படையாக கூறிய பாகிஸ்தான் அரசு மீது, அந்நாட்டு கிரிக்கெட் போர்டு அதிருப்தியில் உள்ளது. கடந்த 2009ல் லாகூரில், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கராவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் கழித்து, முதல் அணியாக ஜிம்பாப்வே, பாகிஸ்தான் சென்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி லாகூரின் கார்டிப் மைதானத்தில் நடந்தது. இப்போட்டி நடந்து கொண்டிருந்த போது, மைதானத்திற்குள் பயங்கராவாதி ஒருவர் நுழைய முற்பட்டார். ஆனால், இந்த தற்கொலைப்படை தாக்குதலை போலீசார் முறியடித்தனார். இதில் சப்– இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் இறந்தனர். இதை பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பர்வேஸ் ரஷித் உறுதிபடு…
-
- 0 replies
- 335 views
-
-
பிசிசிஐ ஆலோசனை குழுவில் சச்சின், சவுரவ் கங்குலி, லஷ்மண் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லஷ்மண் ஆகிய முன்னாள் வீர்ர்கள் சேர்க்கப்பட்டனர். கிரிக்கெட் தொடர்பான அனைத்து முடிவு எடுக்கும் தீர்மானங்களிலும் இனி இந்த மூவர் கூட்டணியின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் இருக்கும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா, செயலர் அனுராக் தாக்கூர் ஆகியோர் கிரிக்கெட் குறித்த மிக முக்கியமான முடிவுகள் அனைத்திலும் இவர்களை ஆலோசித்தே முடிவு எடுப்பார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%…
-
- 1 reply
- 338 views
-
-
10 நாட்களில் என்னை மறந்து விடுவார்கள்: ஐபிஎல் ‘சக்சஸ்’ குறித்து ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல் கிரிக்கெட் 8-வது தொடரில் சிறப்பாக வீசி அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஆஷிஷ் நெஹ்ரா, இந்தியத் தேர்வுக்குழுவினர் தனது திறமையைக் கண்டு கொள்ளாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நெஹ்ரா 22 விக்கெட்டுகளுடன் 4-ம் இடம் பிடித்தார். இந்நிலையில் இந்திய அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ-வுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியில் நிறைய பவுலர்களை முயற்சி செய்கின்றனர். நானும் இந்த வடிவங்களில்தான் அதிகமா…
-
- 0 replies
- 463 views
-
-
கட்டுக்கடங்காத கிறிஸ் கெயில்: 62 பந்துகளில் 151 ரன்கள் டாண்டன் மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்ற நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கெண்ட் அணிக்கு எதிராக கிறிஸ் கெயில் 62 பந்துகளில் 151 ரன்கள் விளாசித் தள்ளினார். இதில் வேடிக்கை என்னவெனில் கெண்ட் அணியின் 227 ரன்கள் இலக்கை துரத்திய போது சோமர்செட் அணிக்காக கெயில் இந்த இன்னிங்சை ஆடி கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தும் 3 ரன்கள் வித்தியாசத்தில் சோமர்செட் அணி தோல்வி தழுவியது. கெயில் 10 பவுண்டரிகள் 15 சிக்சர்களை விளாசினார். இப்படி அடித்தும் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. கெயிலிடம் ஸ்ட்ரைக் வரவில்லை. 2 பந்துகள் கழித்தே கெயிலுக்கு ஸ்ட்ரைக் கிடைத்தது. முன்பாக சொஹைல் தன்வீர் ஆட்டமிழந்தார். கெயில் ஸ்ட்ரைக்கு வ…
-
- 1 reply
- 411 views
-
-
யாழ் இந்து எதிர் கொழும்பு இந்து கிரிகெட் போட்டி அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இதில் கொழும்பு இந்து வெற்றியீட்டியுளது.
-
- 4 replies
- 559 views
-
-
பார்சிலோனா அணி சாம்பியன்: ‘கோபா டெல் ரே’ கால்பந்தில் அசத்தல் பார்சிலோனா: ‘கோபா டெல் ரே’ கோப்பை கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில், அத்லெடிகோ பில்பாவோ அணியை தோற்கடித்தது. ஸ்பெயினில், உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் ‘கோபா டெல் ரே’ கோப்பை கால்பந்து தொடர் ஆண்டு தோரும் நடத்தப்படும். பார்சிலோனாவில் நடந்த 2014–15 சீசனுக்கான பைனலில், பார்சிலோனா, அத்லெடிகோ பில்பாவோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி முதல் கோல் அடித்தார். பின், 36வது நிமிடத்தில் பார்சிலோனாவின் நெய்மர் தன்பங்கிற்கு ஒரு கோலடித்தார். முதல் பாதி முடிவில் பார்சிலோனா அணி 2–0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பா…
-
- 0 replies
- 399 views
-
-
இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் டி20-யில் விளாசித்தள்ளிய கிறிஸ் கெயில் இங்கிலாந்தில் நடைபெறும் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடரில் சோமர்செட் அணிக்காக எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் 92 ரன்களை விரைவு கதியில் விளாசி அசத்தினார். நேற்று இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் சோமர்செட் அணி கெயிலின் அதிரடியினால் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த டென் டஸ்சாதே தலைமை எஸ்ஸெக்ஸ் அணி நியூஸிலாந்து வீரர் ஜெஸி ரைடர் (54 ரன்கள், 28 பந்துகள், 8 பவுண்டரி 1 சிக்சர்) மற்றும் வெஸ்ட்லி (56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 68) ஆகியோரது அரைசதங்களுடன் 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தனர், சோமர்செட் அணியில் பாக் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சொஹைல் தன்வீர் 2 விக்கெட்டுகளையும், ஏ.சி.தாமஸ் 4 விக்கெட்டு…
-
- 0 replies
- 267 views
-
-
அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரரானார் அலிஸ்டர் குக்: கூச் சாதனை முறியடிப்பு அதிக டெஸ்ட் ரன்களை எடுத்த இங்கிலாந்து வீரரானார் கேப்டன் அலிஸ்டர் குக். கிரகாம் கூச் வைத்திருந்த சாதனையை முறியடித்தார் அலிஸ்டர் குக். நியூஸிலாந்துக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 350 ரன்கள்க்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கேப்டன் அலிஸ்டர் குக் 53 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் 29 ரன்களிலிருந்த போது இன்னிங்ஸின் 28-வது ஓவரை டிம் சவுதீ விச, 3-வது பந்தை அருமையான ஸ்கொயர் டிரைவ் அடித்து பவுண்…
-
- 0 replies
- 328 views
-
-
பாகிஸ்தான் செல்லுமா இலங்கை அணி இலங்கை கிரிக்கெட் அணியை அழைத்து பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த அந்த நாட்டின் கிரிக்கட் சபை முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தகவல்களை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர். இதனை அடுத்து பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எவையும் இடம் பெற்றிருக்கவில் லை. தற்போது சிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சென்று விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/05/30/%E0…
-
- 0 replies
- 300 views
-
-
வெடிமருந்து கடத்திய கிரிக்கெட் வீரர் கைது வெடி மருந்து கடத்தியதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆன்ட்ரூ ஃபிளெட்ச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ஆன்ட்ரூ பிளெட்ச்சர், தற்போது டொமினிக்கா தீவில் உள்ள வின்ட்வேர்ட் ஐலேண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் டொமினிக்காவில் இருந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு செல்ல அவர், அங்குள்ள டக்ளஸ் விமானநிலையத்துக்கு சென்றார். அப்போது அவரை சோதனையிட்ட அதிகாரிகள் ஃபிளெட்சரின் பைகளில் வெடிமருந்து இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஃபிளெட்சரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்…
-
- 2 replies
- 548 views
-
-
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவராக செப் பிளாட்டர் மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மீண்டும் தலைவராக பிளாட்டர் தேர்வு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோர்டான் நாட்டு இளவரசர் அலி பின் அல் ஹுசைன் இரண்டாம் சுற்றின்போது போட்டியிலிருந்து விலகியதால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகவும் பரபரப்புக்கு இடையே இந்தத் தேர்தல் ஜூரிக் நகரில் நடைபெற்றது. முதல் சுற்று வாக்கெடுப்பில் இரு வேட்பாளர்களுக்கும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காததால், போட்டி இரண்டாம் சுற்றுக்குச் சென்றது. எனினும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது, அலி பின் அல் ஹுசைன் விலகுவதாக தெரிவித்த பின்னர், பிளாட்டர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டத…
-
- 4 replies
- 473 views
-
-
ஐ.எஸ்.எல்., கால்பந்து அட்டவணை வெளியீடு புதுடில்லி: இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் முதல் போட்டியில், ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா அணி, சென்னை அணியை எதிர்கொள்கிறது. பிரிமியர் கிரிக்கெட் தொடர் போல கடந்த ஆண்டு முதன்முறையாக இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் வெற்றிகரமாக நடந்தது. இதில் சென்னை, மும்பை, கோல்கட்டா, கொச்சி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இதன் பைனலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலியின் கோல்கட்டா அணி, இந்திய ஜாம்பவான் சச்சினின் கொச்சி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நடப்பு ஆண்டுக்கான 2வது ஐ.எஸ்.எல்., தொடர் வரும் அக்., 3ல் சென்னையில் துவங்குகிறது. இத்தொடரு…
-
- 52 replies
- 4.3k views
-
-
400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து பவுலர்: ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை நியூஸிலாந்துக்கு எதிராக லீட்ஸில் வெள்ளியன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 400-வது விக்கெட்டைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். தனது 400-வது டெஸ்ட் விக்கெட்டாக மார்டின் கப்திலை வீழ்த்திய இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன். | படம்: ஏ.எஃப்.பி. மார்டின் கப்தில், ஆண்டர்சனின் 400-வது விக்கெட்டாக வீழ்ந்தார். ஆண்டர்சன் இந்த சாதனையை 104-வது டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தியுள்லார். இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக ஒரு பந்து வீச்சாளர் 400 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிகிறார் என்றால் அது ஜேம்ஸ் ஆண்டர்சன்தான். இதற்கு ம…
-
- 0 replies
- 379 views
-
-
'மோசடி' கேட்சை எடுத்து லாராவை வீழ்த்தியதில் பெருமிதம் தேவையா? - ஸ்டீவ் வாஹ் மீது ரிச்சர்ட்ஸ் பாய்ச்சல் 1995-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி மே.இ.தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டு விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் ஏகப்பட்ட சர்ச்சைகள் நிகழ்ந்தன. முதலில் ஆம்புரோஸ், ஸ்டீவ் வாஹ் நடத்தை மீது தனது விமர்சனத்தை பகிரங்கமாக தனது சுயசரிதையில் எழுதினார். தற்போது ஆஸ்திரேலிய அணி, மே.இ.தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து பழைய சர்ச்சைகள் கிளம்புகின்றன என்றாலும் ஸ்டீவ் வாஹ் பிடித்த ‘மோசடி’ கேட்சிற்கு பிரையன் லாரா வெளியேறியது உலக கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஆஸ்திரேலிய கிரிக்கெட் மோசடிகளில் புகழ்பெற்றது. 1995-ம் ஆண்டு நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் மே.இ.தீவு…
-
- 0 replies
- 426 views
-
-
பங்களாதேஷ் டெஸ்டிலிருந்து டிவிலியர்ஸ் விலகல் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை மாதத்தில் பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர்இ 3 ஒருநாள்இ 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பங்களாதேஷ் போட்டி தொடருக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டது. இதில் டிவில்லியர்ஸின் மனைவிக்கு விரைவில் குழந்தை பிறக்க இருப்பதால் டிவில்லியர்ஸ் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார். முதல் முறையாக ரீஜா ஹென்ரிக்ஸ்இ டேன் விலாஸ், ஆரோன் பாங்கிசோ, காஜிசோ ரபடா ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஒருநாள் போட்டித் தொடரில் ஸ்டெயின்இ பிலாண்டர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2015/05/29/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%…
-
- 0 replies
- 317 views
-
-
20 வயதின்கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் நியூஸிலாந்தில் நாளை ஆரம்பம் 24 நாடுகள் பங்குபற்றும் 20 வயதுக்குட்பட்ட 19ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நியூஸிலாந்தில் நாளை ஆரம்பமாகவுள்ளன. நியூஸிலாந்து, யுக்ரைன், ஐக்கிய அமெரிக்கா, மியன்மார் (குழு ஏ), ஆர்ஜென்டீனா, பனாமா, கானா, ஆஸ்திரியா (குழு பி), கத்தார், கொலம்பியா, போர்த்துகல், செனகல் (குழு சி), மெக்ஸிகோ, மாலி, உருகுவே, சேர்பியா (குழு டி), நைஜீரியா, பிறேஸில், வட கொரியா, ஹங்கேரி (குழு ஈ), ஜேர்மனி, ஃபிஜி, உஸ்பெகிஸ்தான், ஹொண்டுராஸ் (குழு எவ்.) ஆகிய 24 நாடுகள் ஆறு குழுக்களில் மோதவுள்ளன. நடப்பு சம்பியன் பிரான்ஸ் இப்போட்டிக ளுக்கு தகுதிபெறாதமை விசேட அம்சமாகும். லீக் சுற்றில் 36 போட் டிகள் நடைபெறவுள்ளன. லீக் சுற…
-
- 11 replies
- 555 views
-
-
தோனியின் மனதில் உள்ளதை அறிய முடியாது: கோலிக்கு கபில் அறிவுரை வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் தலைமையேற்று வழி நடத்தும் விராட் கோலி, தோனியிடமிருந்து கேப்டன்சி பண்புகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். மைதானத்தில் உணர்ச்சிகளை வெளிப்படையாக காண்பிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் கோலி இன்னும் முதிர்ச்சியடைய வேண்டும் என்கிறார் கபில் தேவ். "கோலி கிரிக்கெட் மைதானத்தில் ஆக்ரோஷமாக செயல்படுகிறார், அவரது உணர்ச்சிகள் வெளிப்படையாகத் திரையில் தெரிகிறது. மாறாக தோனியின் மனதில் என்ன உள்ளது என்பது ஒருவருக்கும் தெரியாது. உணர்ச்சிகளை வெளிப்படையாக தோனி காண்பிக்க மாட்டார். முதிர்ச்சி என்பது கிரிக்கெட்டில் மிக மிக முக்கியமான விஷயம். தோனி நிறைய …
-
- 0 replies
- 445 views
-
-
பாக்., வீரருக்கு 2 ஆண்டு தடை * ஊக்கமருந்து விவகாரத்தில் நடவடிக்கை கராச்சி: ஊக்கமருந்து பிரச்னையில் சிக்கிய பாகிஸ்தான் அணி வீரர் ரேஜா ஹசனுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் இளம் வீரர் ரேஜா ஹசன், 22. ஒரே ஒருநாள் போட்டி, 10 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடந்த உள்ளூர் ‘பென்டாங்குலர்’ கோப்பை தொடரின் போது நடத்தப்பட்ட சோதனையில், ஹசன் ‘கோகைன்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணைக்கு 14 நாட்களுக்குள் வர வேண்டும் என, கடந்த மார்ச் 24ல் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) விடுத்த அழைப்பை, ஹசன் ஏற்கவில்லை. விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்த இவர், லாகூர் ஓட்டல் ஒன்ற…
-
- 0 replies
- 461 views
-
-
சர்வதேச கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் நிறுவனமான ஃபிஃபா அமைப்பின் 6 மூத்த அதிகாரிகள், பல மில்லியன் கணக்கான டாலர்களை லஞ்சமாக கொடுத்ததாகவும் வாங்கியதாகவும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த அமைப்பின் வருடாந்த கூட்டத்துக்காக ஒரு ஆடம்பர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது அதிகாலை வேளையில் சுவிட்ஸர்லாந்து போலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவுக்கு பொறுப்பான துணைத் தலைவர் ஜெஃப்ரி வெப்பும் அடங்குகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை செய்வதற்காக அவர்களை அமெரிக்காவுக்கு நாடுகடத்துமாறு அமெரிக்கா கேட்டிருக்கிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Ar…
-
- 9 replies
- 641 views
-
-
டெஸ்ட் இன்னின்சில் 2 தொடக்க வீரர்களும் டக் அவுட்: சுவையான புள்ளி விவரங்கள் நடந்து முடிந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் தொடக்க வீரர்கள் இருவரும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நியூஸிலாந்து தொடக்க வீரர்களான மார்டின் கப்தில் மற்றும் லாதம் ஆகியோர் ரன் எடுக்காமல் முறையே ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரிடம் ஆட்டமிழந்தனர். இந்தியாவின் சிறந்த டெஸ்ட் தொடக்க வீரர்களான சுனில் கவாஸ்கர், சேத்தன் சவுகான். | கோப்புப் படம். நியூஸிலாந்து அணியில் 6 முறை இரண்டு தொடக்க வீரர்களும் ரன் எடுக்காமல் அவுட் ஆகியுள்ளனர். அது பற்றிய சுவையான புள்ளி விவரம் வருமாறு: லார்ட்ஸில் இவ்வாறு 3 முறை நடந்துள்ளது. இதில் நியூஸிலாந்து அணி 2 முறை இத்தகைய துரதிர்ஷ்ட…
-
- 0 replies
- 513 views
-
-
இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற் கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த பீட்டர் மூர்ஸ் நீக்கப்பட்ட பிறகு, அந்தப் பதவிக்கு டிரெவர் பேலிஸ், முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி ஆகியோரிடையே போட்டி நிலவி வந்த நிலையில் இப்போது பேலிஸுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தொடர்பாக இங்கி லாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “ டிரெவர் பேலிஸ், பயிற்சி யாளராக நிறைய சாதித்துள்ளார். கிரிக்…
-
- 0 replies
- 511 views
-
-
இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுநராக ஜொன்டி றோட்ஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுநராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் வீரர் ஜொன்டி றோட்ஸ் குறுகிய காலத்திற்கு பதவி வகிக்கவுள்ளார். இவர் நேற்று இரவு இலங்கையை வந்தடையத் திட்டமிடப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிருவாக சபைத் தலைவர் சிதத் வெத்தமுனியின் முயற்சியின் பயனாகவே ஜொன்டி றோட்ஸின் வருகை அமைந்துள்ளது. அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின்போது இலங்கை அணியினரின் களத்தடுப்பு தரம் குன்றியிருந்ததை அடுத்தே ஜொன்டி றோட்ஸ் அழைக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த எட்டாவது இண்டியன் …
-
- 3 replies
- 544 views
-