விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியில் ராகுல் டிராவிட்டின் பங்கு என்ன? நிதின் ஸ்ரீவeஸ்தவா பிபிசி செய்தியாளர், மெல்போர்னில் இருந்து (ஆஸ்திரேலியா) 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து அடிலெய்டுக்கு குவான்டாஸ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. விமானம் முழுவதுமாக நிரம்பியிருந்தது. இந்திய கிரிக்கெட் அணியும் அதே விமானத்தில் இருந்தது. ஒரு நாள் முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணியின் எல்லா வீரர்களும் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் எகானமி பிரிவில் கார்னர் சீட்ட…
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
ஞாயிற்றுக்கிழமை, 2, ஜனவரி 2011 (22:59 IST) 2016 ஒலிம்பிக் போட்டி சின்னம் தயார் பிரெஞ்ச் நாட்டில் வரும் 2016ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான சின்னம் வெளியீட்டு விழா நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவில் 1.5 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். சின்னத்தில் மூன்று வீரர்கள் கைகள் மற்றும் கால்கள் மூலம் ஒருவருடன் ஒருவரை இணைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விழாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஜாக்குவிஸ் ரோஜ்ஜி கலந்து கொண்டார். சின்னத்தை வடிவமைப்பதில் பிரேசில் நாட்டை சேர்ந்த 139க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் போட்டியில் பங்குகொண்டன. இருப்பினும் 8 நிறுவனங்கள் மட்டுமே இறுதிப்போட்டியில் கலந்து கொண்டன. nakkheeran
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆடம் கில்கிறிஸ்ட் முதல் கே.எல்.ராகுல் வரை: ஐபிஎல் அதிவேக அரைசதங்கள் 14 பந்துகளில் அதிவேக ஐபிஎல் அரைசதம் கண்ட ராகுல். - படம். | அகிலேஷ் குமார். ஐபில் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதங்கள் சில நிகழ்ந்துள்ளன, இந்த அரைசதங்கள் அணியின் வெற்றிகளைத் தீர்மானித்துள்ளன. அவற்றில் சுவையான் சில இன்னிங்ஸ்கள் இதோ. இதில் ரெய்னாவின் பாஸ்ட் அரைசதம் ஒன்று வெற்றியைத் தரவில்லை. ஆடம் கில்கிறிஸ்ட் முதல் கே.எல்.ராகுல் வரை ஓர் பார்வை: ஆடம் கில்கிறிஸ்ட்: டெக்கான் சார்ஜர்ஸ் என்ற அணிதான் இன்று பெயர் மாறி, உரிமையாளர்கள் மாறி சன் ரைசர்ஸ் ஆக மாறியுள்ளது. டெக்கான் சார்ஜர்ஸ் ஆக 2009-ம் ஆண்டு இருந்த ஐபி…
-
- 0 replies
- 535 views
-
-
உலகக் கால்பந்து பிரபலங்களில் ஒருவரான ரொனால்டோ தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரேஸிலைச் சேர்ந்த ரொனால்டோ நசாரியோ மூன்று முறை சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபாவின் சிறந்த வீரர் விருது பெற்றவர். உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகளில் அதிகப்படியான கோல்களை அடித்தவர் என்ற பெருமை ரொனால்டோவுக்கு உண்டு. அப்போட்டிகளில் அவர் 15 கோல்களை அடித்துள்ளார். உலகளவில் 18 ஆண்டுகள் கால்பந்து விளையாட்டில் தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றிருந்த ரொனால்டோ பல உச்சங்களைத் தொட்டவர். அதேபோல் வீழ்ச்சிகளையும் கண்டவர். 199697 ஆம் ஆண்டுகளில் அவர் பார்சிலோனா கால்பந்து அணிக்காக ஆடியபோது கோல்போடும் ஒரு இயந்திரமாகவே காணப்பட்டார். தேவைப்படும் நேரத்தில் வேகமாக ஓடி, வேகத்தைக் குறைக்க வேண்…
-
- 0 replies
- 1k views
-
-
ஜயசூரியவை பின்னுக்கு தள்ளிய சங்கா புதிய சாதனை இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் சாதனை நாயகனுமான குமார் சங்கக்கார இன்று புதிய மைல்கல் ஒன்றை எட்டினார். சர்வதேச ஒரு நாள் அரங்கில் அதி கூடுதலாக ஓட்டங்களை பெற்றவர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை கைப்பற்றி குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார் . நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய நான்காவது ஒருநாள் போட்டியில் 76 ஓட்டங்களை பெற்றதன் மூலமே இந்த இலக்கை அடைந்துள்ளார். சர்வதேச ஒருநாள் அரங்கில் 394 போட்டிகளில் விளையாடியுள்ள குமார் சங்கக்கார, 20 சதங்கள் 92 அரைச் சதங்கள் அடங்கலாக 13490 ஓட்டங்களை பெற்றுள்ளார். மேலும் 40.63 சராசரியையும் கொண்டுள்ளார். சர்வ…
-
- 0 replies
- 599 views
-
-
சுற்றுலா இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் : அவுஸ்ரேலியா முன்னிலை! சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த அவுஸ்ரேலிய அணி தமது முதலாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பெர்த் மைதானத்தில் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமான குறித்த போட்டியில் முதல் இன்னிங்சில் அவுஸ்ரேலி அணி சார்பாக மாக்கஸ் ஹரிஸ் 70 ஓட்டங்களையும், ட்ராவிஸ் ஹெட் 58 ஓட்டங்களையும், ஆரோன் வின்ஞ் 50 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றனர். இதனிடையே, இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் இஷாந்த் சர்மா 4 விக்கட்டுகளை கைப்பற்றி…
-
- 0 replies
- 635 views
-
-
தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி இலங்கை ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட உத்தியோபூர்வமற்ற ஒருநாள் தொடரை இலங்கை அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று கொழும்பு ஆர் .பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை ஏ அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 87 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். கடந்த இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்திருந்த குசல் பெரேரா இப்போட்டியில் 13 ஓட்டங்களால் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன் மூல…
-
- 0 replies
- 349 views
-
-
வரி ஏய்ப்பு விவகாரம் : தந்தையால் நீதிமன்ற படிகட்டு ஏறும் லயனல் மெஸ்சி! பார்சிலோனா :வரி ஏய்ப்பு விவகாரத்தில் பார்சிலோனா அணி வீரர் லயனல் மெஸ்சி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயனல் மெஸ்சி, உலகப் புகழ்பெற்ற கால்பந்து அணியான ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வருகிறார். கடந்த 2007 முதல் 2009 ஆம் ஆண்டு காலத்தில் லயனல் மெஸ்சி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. விளம்பர வருவாயை குறைத்துக் காட்டி, சுமார் 4.1 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.60 கோடி) வரி ஏய்ப்பு செய்ததாக மெஸ்சி அவரது தந்தை ஜார்ஜ் ஹார்சியோ ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அத…
-
- 0 replies
- 282 views
-
-
ஐந்து வருடங்களின் பின்னர் புற்றரை டென்னிஸில் நடால் சம்பியனானார் ஸ்டுட்கார்ட் டென்னிஸ் அரங்கில் வார இறுதியில் நடைபெற்ற மேர்சிடெஸ் கிண்ண டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் சேர்பிய வீரர் விக்டர் ட்ரொய்க்கியிடம் கடும் சவாலை எதிர் கொண்ட ஸ்பானிய வீரர் ரஃபாயல் நடால் 2 நேர் செட்களில் வெற்றிபெற்று சம்பியனானார். புற்தரை டென்னிஸ் போட்டி ஒன்றில் 2010 இல் சம்பியனான பின்னர் புற்றரையில் நடால் சம்பியனாகியிருப்பது இதுவே முதல் தடவையாகும். இருவருக்கும் இடையிலான இறுதி ஆட்டத்தின் முதலாவது செட் யார் வெற்றிபெறுவார் எனக் கூற முடியாத அளவுக்கு கடுமையாக மோதிக்கொள்ளப்பட்டது. சமநிலை முறிப்புவரை நீடித்த முதலாவது செட்டில் கடும் முயற்சிக்குப் பின…
-
- 0 replies
- 347 views
-
-
அணிக்காக எதையும் செய்வார்: விருத்திமான் சஹாவை ஆதரிக்கும் விராட் கோலி மொஹாலி டெஸ்ட் போட்டியில் ஆம்லாவை வீழ்த்தியதைக் கொண்டாடும் விராட் கோலி, சஹா, புஜாரா. | கோப்புப் படம். தோனி ஓய்வு பெற்றதையடுத்து விக்கெட் கீப்பராக செயலாற்றி வரும் விருத்திமான் சஹாவின் சர்வதேச தரம் பற்றிய கேள்விகள் எழுந்து வரும் நிலையில் அவருக்கு சாதகமாக வாதாடியுள்ளார் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி. “சஹாவின் அணுகுமுறை எனக்கு உண்மையிலேயே பிடித்துள்ளது. அவர் கடினமாக உழைக்கும் கிரிக்கெட் வீர்ர். அணிக்குத் தேவையான எந்த ஒன்றையும் அவர் செய்ய தயாராகவே இருக்கிறார். அவர் சிறந்த விக்கெட் கீப்பர், பேட்டிங்கிலும் நன்றாகவே செயல்படுகிறார். முதல் தர கிரிக்கெட்டில் அவர் நி…
-
- 0 replies
- 204 views
-
-
(நெவில் அன்தனி) வருடத்தின் அதிசிறந்த உலக மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை ஒலிம்பிக் சம்பியன்கள் சிபான் ஹசன், லெட்சைல் டெபோகோ ஆகியோர் வென்றெடுத்தனர். மொனாக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக மெய்வல்லுநர்கள் விருது விழா 2024இன் போது அவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது. வருடத்தின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநருக்கான விருதை வென்றெடுத்த நெதர்லாந்தின் சிபான் ஹசன், அதிசிறந்த வெளியரங்க வீராங்கனைக்கான விருதையும் வென்றெடுத்தார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 7 நாட்கள் இடைவெளியில் 2 வெண்கலப் பதக்கங்களையும் ஒரு தங்கப் பதக்கத்தையும் சிபான் ஹசன் வென்றிருந்தார். பெண்களுக்கான 5000 மீற்றர், 10000 ம…
-
- 0 replies
- 466 views
- 1 follower
-
-
ஆடுகளத்தில் தொழில்நுட்ப தொந்தரவு: ஸ்மித் ஆட்டமிழப்பும் சர்ச்சையும் பந்துவீச்சாளர் ஃபால்க்னருடன் ஆஸி. கேப்டன் ஸ்மித் | கோப்புப் படம் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் ஆட்டமிழந்தது குறித்து சர்ச்சை உருவாகியுள்ளது. களத்தில் ஆடிக்கொண்டிருந்த ஸ்மித்துடன் மைக்கில் வர்ணணையாளர்கள் பேசிக் கொண்டிருந்தால் தான் கவனச்சிதறலில் ஸ்மித் ஆட்டமிழக்க நேரிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி, அடிலெய்டு நகரில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது, களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்…
-
- 0 replies
- 284 views
-
-
இனி கிரிக்கெட் கதை சொல்ல மாட்டாரா ஹர்ஷா போக்ளே..?! கிரிக்கெட் – இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற தேசியப் பண்டிகை. மேட்ச் பார்க்க பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு கட் அடிப்பது, டி.டி.எச் பேக்குகள் வாங்குவது, கேபிள் காரரிடம் சண்டையிட்டு சோனி, ஸ்டார் சேனல்களை வரச்செய்வது என இந்தியர்களுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குமான காதலை வலுப்படுத்திய ஒரு அற்புத சக்தி தான் கிரிக்கெட். அப்படி அத டி.வி யில தான் பாக்கனுமா? ஸ்டேடியத்தில் பார்ப்பதை விட டி.வி யில் கிரிக்கெட் பார்க்க இந்தியர்கள் அதிகம் விருப்பப்படுவது ஏன்? இரண்டே காரணங்கள் தான். ஒன்று அடிக்கடி காட்டும் ரீ-ப்ளே. இரண்டாவது மேட்சை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வர்ணனை. என்னதான் இந்தியா பாகிஸ்த…
-
- 0 replies
- 589 views
-
-
ரியோ ஒலிம்பிக்கில் தொடரும் அனர்த்தங்கள் (அதிர்ச்சி வீடியோ) பிரேசிலில் இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் அடிக்கடி அனர்த்தங்கள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில் நேற்று பழுதூக்கல் போட்டியில் பங்குபற்றிய ஆர்மேனிய வீரர் அன்ரிக் கரபெட்யன் பலத்த கை முறிவுடன் போட்டியிலிருந்து வெளியேறினார். 77 கிலோகிரம் எடைப்பிரிவில் போட்டியிட்ட 20 வயதான அன்ரிக் கரபெட்யன் 195 கிலோகிராம் பழுவினை தூக்க முற்பட்ட போது பலத்த கை முறிவுக்கு உள்ளாகியுள்ளார். (மனம் பலவீனமானவர்கள் வீடியோவை பார்க்க வேண்டாம்) http://www.virakesari.lk/article/10061
-
- 0 replies
- 300 views
-
-
இங்கிலாந்து அணியின் 44 ஆண்டு கனவு நிறைவேறுமா? கோப்புப் படம் ஆரம்ப காலங்களில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இங்கிலாந்து அணி ஆடும் விதம் சிறப்பாகவும், நிதானமாகவும் இருந்தது. நிதானமாக ஆடி, விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் இறுதி கட்டத்தில் நன்கு அடித்தாடுவது என்ற முறையை பின்பற்றி, 1992-ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றது. 1992 உலக கோப்பை இறுதி ஆட்டம் 24 ஆண்டுகளுக்கு முன்னர் நடைப்பெற்ற இந்த இறுதி போட்டி தகுதி தான், இங்கிலாந்து அணியின் மிகப் பெரிய வெற்றியாக பல ஆண்டுகளுக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் கடந்த 23 ஆண்டுகளில், உலகின் பல நாடுகளும் இங்கிலாந்து அணியை ஒரு …
-
- 0 replies
- 462 views
-
-
இலங்கை மகளிர் கபடி அணி வெண்கலப்பதக்கம் வென்றது. இலங்கை மகளிர் கபடி அணி வெண்கலப்பதக்கம் வென்றது. ஆசிய கரையோர விளையாட்டுப் போட்டியில் இலங்கை மகளிர் கபடி அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. வியட்னாமில் நடைபெற்று வரும் ஐந்தாவது ஆசிய கரையோர விளையாட்டுப் போட்டியிலே இலங்கை அணி பதக்கத்தை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் 43-31 என்ற அடிப்படையில் வெற்றி பெற்ற இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. தாய்லாந்து அணி 2ம் இடத்தைப் பெற்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற ஆடவருக்கான கபடி போட்டியிலும் இலங்கைக்கு வெண்கலப்பதக்கம் கிடைக்கப் பெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் இதுவரை 16தங்கப்பதக்கங்களையும், 16 வெள்ளிப்பதக்கங்களையும்,22வெண்கலப்பதக்கங்களையும் …
-
- 0 replies
- 255 views
-
-
சுவிஸ் சம்பியன் கால்பந்தாட்ட அணியில் பிரகாசிக்கும் இலங்கை வீரர் ஹனீப் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் இன்டர் கன்ட்ரி கால்பந்தாட்ட லீக் போட்டிகளில் சம்பியனான எவ். சி. வெட்டிஞ்சென் அணியில் இலங்கையைச் சேர்ந்த ஹசீப் ஹனீப்பும் இடம்பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார். திஹாரியவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஹனீப் விளையாடும் எவ். சி. வெட்டிஞ்சென் கழகம் 26 போட்டிகளில் 14 இல் வெற்றி பெற்றதுடன் 6 போட்டிகளை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டது. 6 போட்டிகளில் தோல்வி அடைந்தது. இக் கழகம் மொத்தமாக போட்ட 60 கோல்களில் 15 கோல்களை ஹனீப் போட்டு அணியின் சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்கின்றார். இ…
-
- 0 replies
- 344 views
-
-
கூடைப்பந்தில் யாழில் தமது பலத்தை நிரூபித்தது சென்றலைட்ஸ் அணி Tamil கூடைப்பந்தில் யாழில் தமது பலத்தை நிரூபித்தது சென்றலைட்ஸ் அணி யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 98வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு யாழ் மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழக அணியை வெற்றி கொண்ட சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. இரு பாலாருக்குமான இந்த போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டி நான்கு குழுக்கலாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழுவில் இரண்டு அணிகள் அங்கம் வகித்து போட்டி…
-
- 0 replies
- 416 views
-
-
7ஆவது தடவையாக பலூன் டோரை வென்ற மெஸ்ஸி ஏழாவது தடவையாக, உலகின் சிறந்த வீரருக்கான பலூன் டோர் விருதை ஆர்ஜென்டீனாவின் லியனல் மெஸ்ஸி வென்றுள்ளார். போலந்தின் றொபேர்ட் லெவன்டோஸ்கி, இத்தாலியின் ஜோர்ஜினியோவைத் தாண்டியே விருதை இம்முறை மெஸ்ஸி வென்றிருந்தார். மெஸ்ஸி 613 புள்ளிகளைப் பெற்ற நிலையில், லெவன்டோஸ்கி 580 புள்ளிகளையும், ஜோர்ஜினியோ 460 புள்ளிகளையும் பெற்றிருந்தனர். இந்நிலையில், சிறந்த முன்களவீரராக லெவன்டோஸ்கியும், சிறந்த கோல் காப்பாளராக இத்தாலியின் ஜல்லூயிஜி டொன்னருமா தெரிவானார். சிறந்த கழகமாக இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் செல்சி தெரிவாகியது. சிறந்த வீராங்கனையாக ஸ்பெய்னின் அலெக்ஸியா புடெல்லஸ் தெரிவாகியிருந்தார். …
-
- 0 replies
- 576 views
-
-
தமிழ் குத்துச்சண்டை வீரர் போட்டியின் போது பலி ( காணொளி இணைப்பு ) சிங்கப்பூரில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றிருந்த தமிழ் குத்துச்சண்டை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிங்கப்பூரில் ஆசியா பைட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி இடம்பெற்றது. இதில் பிரதீப் சுப்ரமணியன் என்ற தமிழ் வீரர் பங்கேற்றிருந்தார். இவர் பிரபல வீரர் ஸ்டீவன் லிம் என்பவரை எதிர்கொண்டார். இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதன்போது பலத்த தாக்குதலுக்குள்ளான பிரதீப் மேடையிலேயே சரிந்து விழுந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலைக்கு செல்லும் போதே அவர் மாரடைப்பு மற்றும் மூச்சு திணறல் ஏற்ப…
-
- 0 replies
- 785 views
-
-
மாலிங்கவைப் போல பந்துவீசும் தமிழ்நாட்டு வீரர் அதிசயராஜ் கிரிக்கெட் விளையாட்டில் வழக்கத்துக்கு மாறான பந்துவீச்சுப் பாணியைக் கொண்டவர்கள் எப்போதும் ரசிகர்களை மைதானத்துக்கு ஈர்ப்பவர்கள். மேற்கிந்திய தீவுகளின் ஜொயல் கார்னர், கொலின் க்ரொப்ட் முதல் இலங்கையின் லசித் மாலிங்க உட்பட தற்போது உருவெடுத்து வருகின்ற இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா வரை வித்தியாசமான பாணியில் பந்துவீசுபவர்களைப் பார்ப்பதற்கான ஆர்வம் எப்போதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகம், அதேநேரம் சுழல் பந்துவீச்சில் போல் ஆடம்ஸ், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். இன்னும் எவ்வளவோ பந்துவீச்சாளர்கள் மைய நீரோட்டத்துக்கு வராமலேயே திறமையான பந்துவீச்சாளர்களாக…
-
- 0 replies
- 521 views
-
-
ஒலிம்பிக் கனவுகளுடன் தமிழகத்தில் உருவாகும் நம்பிக்கை கீற்று 'கோலேசியா' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தந்தையை இழந்து மிக எளிய பின்னணியில் தாய் மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வரும் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியான கோலேசியாவுக்கு 2024 பாரீஸ் ஒலிம்பிஸ் மட்டும்தான் கனவு. தனது கனவை அடைய அவர் செய்த தியாகங்கள் என்ன? கோலேசியாவின் ஒருநாள் வாழ்க்கை எப்படி? அதிகாலை 5 மணிக்கு எ…
-
- 0 replies
- 381 views
-
-
மைக்கேல் கிளார்க்கின் விசித்திர களவியூகத்தால் சர்ச்சை அபுதாபியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் அமைத்த களவியூகம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திணறினர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய சில களவியூகங்களை ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் அமைத்தார். இன்று ஒரு சமயத்தில் மிட்செல் ஜான்சனை அழைத்து நேராக, அதாவது பந்து வீசும் பவுலருக்கு நேராக நிற்க வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், பேட்ஸ்மென்களுக்கு பவுலரின் கை நன்றாகத் தெரிவதற்காகத்தான் 'சைட் ஸ்க்ரீன்' வைக்கப்பட்டுள்ளது. சைட் ஸ்க்ரீன் நிலை சரியில்லை என்றால் பேட்ஸ்மென் ஓடி வரும் பவுலரையே கூட நிறுத்துவதை ந…
-
- 0 replies
- 680 views
-
-
அஷ்வின் தொடர்ந்து ‘நம்பர்–1’ நவம்பர் 04, 2014. துபாய்:ஐ.சி.சி., டெஸ்ட் போட்டிக்கான ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின் ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை (ரேங்க்) பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது. இதில் ‘ஆல்–ரவுண்டர்களுக்கான’ பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (357 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது, மூன்றாவது இடங்கள் முறையே தென் ஆப்ரிக்காவின் பிலாண்டர்(348), வங்கதேசத்தின் சாகிப் (346) உள்ளனர். யூனிஸ் முன்னேற்றம்: ‘பேட்ஸ்மேன்களுக்கான’ தரவரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து, தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்த பாகிஸ்தானின் யூனிஸ் கான…
-
- 0 replies
- 834 views
-
-
புதிய சாதனைக்கு காத்திருக்கும் சச்சின் [27 - January - 2007] [Font Size - A - A - A] ஒருநாள் போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்திவரும் சச்சின் டெண்டுல்கர் விரைவில் புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளார். இந்திய வீரர்களில் ஒருநாள் போட்டியில் அதிகமுறை டக் அவுட் ஆனவர் என்ற சாதனை தான் அதுவாகும். 376 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் இதுவரை 17 முறை டக் அவுட் ஆகியுள்ளார். (ஓட்டம் ஏதும் எடுக்காமல்) இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஜவஹல் ஷ்ரீநாத் 19 முறையும், கும்பிளே 18 முறையும் `டக் அவுட்' ஆகியுள்ளனர். தற்போது சச்சின் 3 ஆம் இடத்தில் உள்ளார். டக் அவுட் சாதனை படைப்பாரா அல்லது சென்னையில் இன்று நடக்கும் போட்டியில் சதம் அடிப்பாரா என்று பொறுத்த…
-
- 0 replies
- 1.1k views
-