Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. உலககோப்பை அரங்கை நிர்மாணிக்கும் பணியாளர்களின் அவலம் - காணொளி 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடும் வெப்பத்தை தவிர்க்க, 2022 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலககோப்பையை நவம்பர் , டிசம்பரில் நடத்துமாறு உலக கால்பந்து சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது. டோஹாவில் நடந்த ஒரு சந்திப்பை அடுத்து இந்த பரிந்துரை வந்திருக்கிறது. அதேவேளை, இந்த போட்டிக்கான அரங்கத்தை நிர்மாணிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் கட்டாரில் படும் கஸ்டங்கள், பாதுகாப்பின்மை குறித்த விவாதமும் சூடுபிடித்திருக்கிறது. பிபிசி ரகசியமாக சேகரித்த சில தகவல்கள். <iframe width="400" height="500" frameborder="0" src="http://emp.bbc.co.uk/emp/embed/smpEmbed.html?playlist=http%3A%2F%2Fwww.bbc.co.uk%2Ftamil%2Fmeta%2Fdps%2F2015%2F02%2Femp…

  2.  துணை அங்கத்துவ நாடுகளின் கையில் அவமானப்படும் ஐசிசி அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே ஆகியன சர்வதேச கிரிக்கெட் சபையின் முழு அங்கத்துவமுடைய நாடுகளாகக் காணப்படுகின்றன. இவை டெஸ்ற் விளையாடும் தகுதியையும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவற்றிற்கு மேலதிகமாக 38 நாடுகளை சர்வதேச கிரிக்கெட் சபையானது துணை அங்கத்துவ நாடுகளாக அங்கீகரித்துள்ளது. இந்த 38 நாடுகளில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஹொங் கொங், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகள் ஒருநாள் சர்வதேச அந்தஸ்தினைக் கொண்ட துணை அங்கத்துவ நாடுகளாகக் காணப்படுகின்றன. இரண்டாயிரத்துப் பதினொராம் ஆண்டு இட…

  3. சதுரங்கத்தில் மட்டுமன்றி கராத்தேயிலும் சளைக்காத ஹரிகிஷன் இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகள் பலவற்றிலும் நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்திய, சாம்பியன் பட்டங்களையும் பதக்கங்கiயும் சான்றிதழ்களையும் தம்வசப்படுத்திய கண்டி, புனித திருத்துவ கல்ல}ரியில் 6ஆம் தரத்தில் பயிலும் மாணவனான கிருபாகர் ஹரிகிஷன், கராத்தேயிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இலங்கை சோடோகன் கராத்தே கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 8ஆவது தேசிய கராத்தே சம்பியன் கிண்ண போட்டி, கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்றது. இரண்டரை வயது முதல் சதுரங்கத்தில் தன்னுடைய திறமையை காண்பித்துவரும் இவர், போலந்து, இந்தியா, ரஷ்யா மற்ற…

  4. ஐ.சி.சி. மனநிலை குறித்து அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்பீல்ட் வருத்தம் 2019 உலகக்கோப்பை போட்டிகளுக்கு 10 டாப் அணிகள் மட்டுமே விளையாடுமாறு செய்யும் ஐசிசி திட்டத்தின் மீது பரவலான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட் ஐசிசி நிர்வாகிகளின் மனநிலை பற்றி மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார். அசோசியேட் அணிகளுக்கான வாய்ப்புகள் ஏற்கெனவே குறைக்கப்பட்டு வரும் நிலையில் உலகக்கோப்பை, ஐசிசி போட்டிகளில் மட்டுமே அந்த அணிகள் ஆடி வருகின்றன. தற்போது அதிலிருந்தும் இந்த வளரும் அணிகளை கழற்றி விடும் முடிவு குறித்து போர்ட்டர்ஃபீல்ட் கூறும்போது, "வெறும் டாப் 10 அணிகளுக்கு மட்டுமே நடத்தப்பட்டால் அதனை உலகக்கோப்பை என்று அழைக்க முடியாது. எப்போதும் …

  5. பாக். ரசிகர்களை கடுப்பேத்துகிறதா புதிய 'மோக்கா' வீடியோ? இந்தியாவுடான போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் வெற்றியே பெறாததைச் சுட்டிக்காட்டி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு விளம்பரம் ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டது. தமது தேச அணி வெற்றி பெற்றால் பட்டாசு வெடிக்கவேண்டும் என்ற பாகிஸ்தான் ரசிகர்களின் எண்ணம் கடைசி வரை நிறைவேறாமலே இருப்பதாக அமைந்திருந்த அந்த வீடியோ இணையத்தில் ஹிட் ஆனது. முதல் வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான லீக் ஆட்டத்தை முன்வைத்து ஒரு விளம்பரத்தை பதிவேற்றம் செய்தது. அது, இந்திய ரசிகர்களின் ஏக்கத்தைக் குறிப்பாதாக நையாண்டியுடன் இருந்தது. அந்த வீடியோவுக்கு பதிலடி தரும் வகையில், இந்திய ரசிகர்கள் ஒரு …

  6. சந்திமால், திரிமான மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஜனித் போன்ற திறமையான வீரர்கள் இல்லாமல் இலங்கை எவ்வாறு கிண்ணத்தை வெல்லும்?: அர்ஜுன ஆதங்கம் இலங்கை அணியில் சந்திமால், திரிமான, கருணாரத்ன போன்ற இளம் வீரர்களுக்கு கடந்த 4 மாதங்கள் சரியாக விளையாட வாய்ப்புகள் வழங்கவில்லை. இவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போட்டி தன்மையை மாற்ற கூடிய ஜனித் பெரேரா போன்ற திறமை வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் எவ்வாறு இலங்கை அணி கிண்ணத்தை வெல்லும் என பாரக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இலங்கை அணி தொடர்பில் இன்று அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உலகக் கிண்ணத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அணியானது…

  7. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு 'பாலக்காட்டு மாதவன்'.... கிருஷ்ண சந்திரனின் பிளாஷ்பேக்! சென்னை: தமிழக தலைநகர் சிங்கார சென்னையில் பள்ளி கல்வி பயின்ற மலையாளத்து கிருஷ்ண சந்திரன், இன்று ஐக்கிய அரபு எமிரேட்டின் நம்பிக்கை நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆகியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான பெர்த் போட்டியில் கிருஷ்ண சந்திரன் விளையாடும்போது அவரது சொந்த மாநிலமான கேரளாவில் இவருக்காகவும் கைத்தட்டல் ஒலிக்கப்போகிறது. ஐக்கிய அரபு எமிரேட் இந்த உலக கோப்பையில் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், அந்த அணியின் ஒரு வீரரின் பெயரை பார்த்ததும் இந்தியர்களுக்கு.. அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு இயல்பாகவே ஒரு சந்தேகம். இது.. நம்மூர்காரர் பெயர் மாதிரி உள்ளதே என்பதுதான் அந்த சந்தேகம். அந்த பெயருக்கு சொந…

  8. குமார் தர்மசேனவின் தீர்ப்பு அவருக்கு உலை வைக்குமா? இங்­கி­லாந்­துக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடையில் மெல்­பர்னில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற உலகக் கிண்ண குழு ஏ போட்­டியில் இங்­கி­லாந்தின் கடைசி ஆட்­டக்­கா­ர­ருக்கு மத்­தி­யஸ்தர் குமார் தர்­ம­சேன வழங்­கிய தீர்ப்பு முழு கிரிக்கெட் உல­கையும் அதிர்ச்­சியில் ஆழத்­தி­யுள்­ளது. சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் சிறப்பு மத்­தி­யஸ்­தர்கள் குழாமில் இடம்­பெறும் மத்­தி­யஸ்தர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து இத்­த­கைய தீர்ப்பு ஒன்று வரும் என்று யாருமே எதிர்­பார்த்­தி­ருக்க முடி­யாது. இதன் கார­ண­மாக உலகக் கிண்ணப் போட்­டி­களில் அவ­ருக்கு தொடர்ந்து மத்­தி­யஸ்தம் வகிக்கும் வாய்ப்பு வழங்­கப்­ப­டுமா என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது. போட்…

  9. வங்கதேசத்தை வெல்வதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் ஜெயித்து விட்டதாக டிவிட் போட்ட அமரிக்க தூதரகம் காபூல்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரே அடியாக மூழ்கிப் போய் ஆர்வ மிகுதியால் ஜெயிப்பதற்கு முன்னதாகவே ஆப்கானிஸ்தான் அணி, வங்க தேசத்தை வீழ்த்தியதாக டுவிட் போட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம். ஆப்கானிஸ்தான் - வங்க தேசத்திற்கு இடையிலான உலகக் கோப்பை போட்டியானது கான்பெராவில் இன்று நடைபெற்று வருகின்றது. வங்கதேசத்தை வெல்வதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் ஜெயித்து விட்டதாக டிவிட் போட்ட அமரிக்க தூதரகம் போர்களுக்கு பெயர் போன நாட்டின் கிரிக்கெட் களமும் பல கோடி பேரினை தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வளைதளங்களில் கட்டிப் போட்டுள்ளது. இந்த நிலையில், நடைபெற்று வருகின்ற…

  10. பாகிஸ்தான் சீனியர் வீரர்கள் கெட்ட வார்த்தையிலேயே என்னை திட்டுராங்க... ஃபீல்டிங் கோச் பரபரப்பு புகார் கராச்சி: கெட்ட வார்த்தைகளால் சீனியர் வீரர்களை தன்னை திட்டுவதால், ராஜினாமா செய்யப்போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் கிரான்ட் லுடென் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. 2007 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் தோற்ற நிலையில்தான், அந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் மர்மமாக உயிரிழந்தார். நடப்பு உலக கோப்பை தொடரில் ஆடுவதற்கு, ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள பாகிஸ்தான் வீரர்களும் சரியான நேரத்திற்கு ஹோட்டலுக்கு திரும்பவில்லை என்பதற்காக அபராதத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் புதிய ச…

  11. பெப்ரவரியில் ஏலம் ஐ.பி.எல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பெங்களூரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் யுவராஜ் சிங், கெவின் பீற்றர்ஸன் மற்றும் தினேஸ் கார்த்திக் ஆகியோர் அதிக விலையில் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். எனினும் இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டிகளில் யுவராஜ் சிங்கை றோயல் சலஞ்சர்ஸ் அணியும் கெவின் பீட்டர்ஸன், தினேஸ் கார்த்திக், உள்ளிட்ட 14 வீரர்களை டெல்லி அணியும் நீக்கியுள்ளது. இந்நிலையில் பெப்ரவரியில் நடைபெறவுள்ள ஏலத்தில் எத்தனை வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. http://www.virakesari.lk/articles/2015/01/30/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8…

  12. 6 விக்கெட்டுகளால் சென்.ஜோன்ஸ் வெற்றி பி.துவாரகசீலனின் சகலதுறை ஆட்டத்தின் காரணமாக சென்.ஜோன்ஸ் கல்லூரி 6 விக்கெட்களால் ஜா – எல கிறிஸ்ட் கிங் கல்லூரி அணியை வெற்றிபெற்றது. இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் 19 வயதுப்பிரிவு பிரிவு 3 அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த சுற்றுப்போட்டியின் போட்டியொன்று சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் ஜா – எல கிறிஸ்ட் கிங் கல்லூரி அணிக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை (02) மற்றும் சனிக்கிழமை (04) ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.ஜோன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 60.4 ஓவர்களில் அ…

  13. ஆஸ்திரேலியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய அணியில் தனது இடத்தைத் தக்கவைக்கப் போராடி வரும் ஷேன் வாட்சன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீர்ர்களில் அதிகம் பணம் ஈட்டுபவராக உள்ளார், 2014ஆம் ஆண்டுக்கான பி.ஆர்.டபிள்யூ.வின் டாப் 50 பணக்கார ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ஷேன் வாட்சன் 8-வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் மிட்செல் ஜான்சன் 10-வது இடத்திலும், கேப்டன் மைக்கேல் கிளார்க் 11-வது இடத்திலும், டேவிட் வார்னர் 12-வது இடத்திலும் உள்ளனர். ஷேன் வாட்சன் கடந்த ஆண்டு ஈட்டிய தொகை 4.5 மில்லியன் டாலர்கள். மிட்செல் ஜான்சன் 4.1 மில்லியன் டாலர்களையும், மைக்கேல் கிளார்க் 4 மில்லியன் டாலர்களையும் ஈட்டியுள்ளனர். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய கூ…

  14. தோனி மீதான அதிருப்தியை என் தந்தை பகிரங்கப்படுத்தியது ஏன்?- யுவராஜ் சிங் விளக்கம் உலகக்கோப்பை அணியில் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படாததற்கு தோனியே காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியதற்கு யுவராஜ் சிங் பதிலளித்துள்ளார். இது குறித்து யுவராஜின் தந்தையும் முன்னாள் இந்திய வீரருமான யோக்ராஜ் சிங் கூறும்போது, “என் மகனுடன் தோனிக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினைகள் இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்? கடவுள் நீதியளிப்பார். உங்கள் கேப்டன் பொறுப்பில் இந்தியா உலகக்கோப்பையை வெல்ல பிரார்த்திக்கிறேன். ஆனால் இது போன்று நீங்கள் (தோனி) நடந்து கொண்டதை விடவும் வேறு வருத்தங்கள் இருக்க முடியாது.” என்றார். ஆனால், தன் ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங், தனது தந்தை…

  15. கடந்த இரு மாத காலமாக நியுசிலாந்தில் விளையாடி வரும் இலங்கையணி , அந்த நாட்டிற்கெதிராக விளையாடிய இரு டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்ததோடு, அதன் பின்னர் நடந்த ஒரு நாள் விளையாட்டுத் தொடரிலும் 4-2 என்கிற வித்தியாசத்தில் தோற்றிருந்ததும் நினவிலிருக்கும். இலங்கையணியின் மிகமோசமான துடுப்பாட்டமும், பந்துவீச்சாளர்களின் இயலாமையுமே இந்தத் தோல்விகளுக்கான காரணமாக முன்வைக்கப்பட்டாலும் கூட, இலங்கையணி ஆடிய விதமும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக டெஸ்ட் தொடரில் நியுசிலாந்து அணி ஓவர் ஒன்றிற்கு 4 அல்லது 5ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தபோதும் கூட, இலங்கையணியின் குறிப்பிட்ட சில முன்னணி துடுப்பாட்டக் காரர்கள் வேண்டுமென்றே ஓவர் ஒன்றிற்கு 1 அல்லது 2 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டதும் கு…

    • 12 replies
    • 1.1k views
  16. யாழ் கள உதைபந்தாட்டக் கிண்ணம் யாருக்கு ? எதிர்வரும் ஆனி மாதம் 12 ம் திகதி பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க உள்ளது. இறுதி ஆட்டம் 13 ம் திகதி ஆடி மாதம் ரியோ டெ ஜெனீரோ நகரில் நடைபெறும். பிரேசில் நாட்டின் 12 நகரங்களில் விளையாட்டுக்கள் நடைபெற உள்ளன. நடைபெற இருக்கும் உதைபந்தாட்டப் போட்டியினைத் தொடர்ந்து யாழ் கள உறவுகளுக்கிடையிலான ஒரு போட்டி இது. போட்டியில் வெற்றிபெறும் கள உறவு யாழ் கள உதைபந்தாட்டக் கிண்ணம் வழங்கிக் கௌரவிக்கப்படுவார். ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். போட்டியில் பங்குபெறுபவர்கள் ஒரு தரத்தில் விடைகளை அளிக்கவேண்டும். அளித்த பதில்களில் எதுவித திருத்தங்களும் செய்தல் தவிர்க்கப்படல்வேண்டும் போட்டிக்கான பதில்களை …

  17. ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: சச்சினுக்கு அடுத்த இடத்தில் சங்கக்காரா உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நியூசிலாந்துக்கு எதிராக 39 ரன்கள் எடுத்த சங்கக்காரா ஒருநாள் கிரிக்கெட்டில் 13,732 ரன்கள் எடுத்து சச்சினுக்கு அடுத்த இடத்திற்கு வந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதலிடம் வகிக்க அதற்கு அடுத்த இடத்தில் முன்னதாக ரிக்கி பாண்டிங் 13,704 ரன்களுடன் இருந்தார். தற்போது 13,732 ரன்களுடன் சங்கக்காரா 2-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெடில் சங்கக்காரா 1030 ரன்களை எடுத்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 1000 ரன்களுக்கும் மேல் எடுக்கும் 3-வது இலங்கை வீரர் ஆனார் சங்கக்காரா, மொத்தத்தில் 14-வது வீரர். சச்சின் டெண்டுல்கர் உலகக்கோப்ப…

  18. குருவுக்கு பாடம் நடத்திய சீடன்: சக்லைனை நோகடித்த அஜ்மல் மூத்த வீரர்கள் சிலர் தங்கள் நடத்தை மற்றும் பேச்சில் முதிர்ச்சி காட்டுவது அவசியம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டித்திருப்பதில் காரணம் இல்லாமலில்லை. பாக்.கிரிக்கெட் வாரியம் இப்படிக் கூறியதற்குக் காரணம் அதன் மூத்த வீரரான அஜ்மல். சயீத் அஜ்மல் வீசும் பந்துகள் 100% விதிமுறைகளை மீறுவதாக உள்ளன என்று ஐசிசி பந்துவீச்சுக் கண்காணிப்புக் குழு கூறி அவர் பந்துவீசத் தடை விதிக்கப் பரிந்துரை செய்து, சயீத் அஜ்மலும் தடை செய்யப்பட்டார். அதன் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அஜ்மல் தனது த்ரோ-வை செய்து கொள்வதற்கு உதவுமாறு முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் தற்போது பல்வேறு தரப்பில் பயிற்சியும் அளித்து வரும் சக்லைன் மு…

  19. சச்சின் டெண்டுல்கருடன் ஏற்பட்ட பிரச்சினை என்ன? - மனம் திறக்கிறார் கிரெக் சாப்பல் அணியின் நன்மைக்காக சச்சின் டெண்டுல்கர் பின்னால் களமிறங்க விரும்பினோம், ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை என்கிறார் கிரெக் சாப்பல். 2007-உலகக்கோப்பை போட்டிகளின் போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ஆஸி.-யின் கிரெக் சாப்பல் தனக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் பிளவு ஏற்படக் காரணம் என்ன என்பதை விவரித்தார். ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சானல் ஒளிபரப்பிய 'கிரிக்கெட் லெஜண்ட்ஸ்’ நிகழ்ச்சியில் சாப்பல் அப்போது நடந்ததை விவரிக்கும் போது, சச்சின் டெண்டுல்கர் தொடக்கத்தில் இறங்காமல் அதன் பிறகு களமிறங்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், ஆனால் சச்சின் அதனை விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். "அணிக்கு…

  20. 11 ஆவது உலகக் கிண்ண திருவிழா தொரு­மு­னை­யிலும் பாட­சாலை நேரங்­களின் இடையே திருட்­டுத்­த­ன­மாக கிரிக்கெட் விளை­யாடும் சிறு­வர்கள் முதல், விடு­முறை நாட்­களில் மைதா­னத்­திலும் வெற்­றுக்­கா­ணி­க­ளிலும் விரை­வாக விளை­யாடும் இளை­ஞர்கள் முதல் உலகில் வாழும் மக்கள் தொகை யால் நேசிக்­கப்­படும் இரண்­டா­வது பெரு­வி­ளை­யாட்­டான கிரிக்­கெட்டின் உல­கமே ஒன்­றி­ணைந்து கொண்­டாடும் திரு­விழா கோலா­க­ல­மாக ஆரம்­ப­மா­க­வுள்­ளது. வண்­ண­ம­ய­மான வர்­ணக்­கொ­டிகள். மாயாஜாலம் காட் டும் அலங்­கார மின்­வி­ளக்­குகள், விநோ­த­மான உருவ பொம்­மை கள், கண்­கவர் சித்­தி­ரங்கள், மனதைக் கொள்­ளை­ய­டிக்கும் பாரிய புகைப்­ப­டங்கள் ஒரு­பு­ற­மி­ருக்­கையில் மறு­ பு­றத்தில் சாதா­ர­ண­மா­கவே மக்கள் நெருக்­க…

  21. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி : ஆரம்ப விழா இன்று 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆரம்ப விழா அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளில் இன்று கோலாகலமாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 14 அணிகள் பங்கேற்கும் 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் சனிக்கிழமை 14 ஆம் திகதி தொடங்குகிறது. மார்ச் 29 ஆம் திகதி வரை இடம்பெறும் இத்தொடரில் மொத்தம் 49 போட்டிகள் நடக்கவுள்ளன. உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாக இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் தொடக்க விழா இன்று இரண்டு நகரங்களிலும் கோலாகலமாக நடத்த …

  22. 11 ஆவது உலகக் கிண்ணம் : 11 கிலோ எடை வெள்ளியால் உருவாக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட 11 ஆவது உலகக் கிண்ணம் 60 சென்ரிமீற்றர் உயரத்தையும் 11 கிலோ எடையையும் கொண்டது. குறித்த 11 ஆவது உலகக் கிண்ணத்தை கையில் ஏந்தப் போகும் அணி எது என்பது மார்ச் மாதம் 29 ஆம் திகதி தெரிய வரும். ஆரம்பத்தில் ஒவ்வொரு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போதும், வெவ்வேறு வடிவங்களில் கிண்ணம் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 1999 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியின் போது தான் நிரந்தர வடிவமைப்பை பெற்றது. அந்த உலகக் கிண்ணத்தை லண்டனை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியது. இதற்காக 2 மாத காலம் எடுத்துக் கொண்டது. உலகக் கிண்ணம் 60 சென்ரிமீற்றர் உயரமும், 11 கிலோ எடையும் கொண்டது. வெள்ளியால் செய்…

  23. த்ரிஷா வருண்மணியன் ஜோடியினர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விலைக்கு வாங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. த்ரிஷா – வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் இரு தினங்களுக்கு முன்பே சென்னையில் நடைபெற்றது. மார்ச் மாதத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர். திருமணத்துக்கு பிறகு வருண்மணியனுடன் இணைந்து த்ரிஷா படங்கள் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்ற உத்தரவால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விற்பனைக்கு வருகிறது. த்ரிஷாவும், வருண்மணியனும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியை வாங்குவது பற்றி யோசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=508833839429321861#sthash.ZNL4tAOB.dpuf

  24. 2015: எந்த அளவுக்கு இந்தியா தயாராக உள்ளது? உலகக் கோப்பையை இந்தியா தக்கவைத்துக் கொள்ளுமா என்னும் கேள்வியும் ஏக்கமும் இந்திய ரசிகர்கள் மனங்களில் உள்ளன. இந்தியாவின் அதி தீவிர ஆதர வாளர்கூட இந்தியா வெல்லும் என்று சொல்லும் நிலையில் இன்றைய இந்திய அணி இல்லை என்பதே கசப்பான யதார்த்தம். இந்திய அணியைப் பீடித்தி ருக்கும் பிரச்சினைகளில் முதன்மை யானது உடல் தகுதி. ரோஹித் சர்மா, ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ், ஷமி, மோஹித் சர்மா ஆகியோர் எப்போது வேண்டுமானாலும் காய மடையலாம் என்ற நிலையே உள்ளது. இரண்டாவதாக, இந்திய பவுலிங். உயர் தரத்திலான போட்டி களுக்கு ஏற்ற பந்து வீச்சு இந்தியா விடத்தில் இல்லை என்பதே நிதர்சனம். அதுவும் வேகப்பந்துக்கு உகந்த ஆஸ்திரேலிய நியூஸிலாந்து …

  25. சதத்தை நெருங்கும் போது பேட்ஸ்மென்களின் ஆட்டத்தில் நடுக்கம் ஏற்படுவது உண்மையே: ஆய்வு 90 ரன்களைக் கடந்த பிறகு சதம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் பேட்ஸ்மென்களுக்கு நடுக்கம் ஏற்படுவது உண்மையே என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் உள்ள QUT பொருளாதாரப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 1971ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான ஒருநாள் சர்வதேச போட்டிகளை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அப்போது, பேட்ஸ்மென்கள் தங்களது முக்கிய மைல்கல்லை எட்டும் முயற்சியில் தங்களது ஸ்ட்ரைக் ரேட்டை குறைத்து விடுகின்றனர் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், ம…

    • 1 reply
    • 351 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.