விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
4-ஆம் நிலையில் விராட் கோலி ஆதிக்கம் செலுத்த முடியும்: விவ் ரிச்சர்ட்ஸ் ஊக்கம் விராட் கோலியை 3ஆம் நிலையை விடுத்து, 4ஆம் நிலையில் களமிறக்குவது பற்றிய விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், விவ் ரிச்சர்ட்ஸ் அந்த உத்தியை ஆதரித்துள்ளார். இது பற்றி அதிரடி வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் கூறியதாவது: "எந்த ஒரு சிறந்த பேட்ஸ்மெனுக்கும் 4-ஆம் நிலை ஒரு சிறந்த பேட்டிங் நிலையே. பவுன்ஸ் சற்று கூடுதலாக இருக்கும் ஆஸ்திரேலிய பிட்ச்களில் சில பேட்ஸ்மென்கள், குறிப்பாக முதல் 3 நிலையில் களமிறங்குபவர்கள் சோபிக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது. அதனால் விராட் கோலியை 4-ஆம் நிலையில் இறக்குவதில் அர்த்தமிருப்பதாகவே கருதுகிறேன். அந்த நிலையில் அவர் எதிரணியினர் பந்துவீச்சு, களவீயூகத்தினை ஆதிக்கம் செலுத்த முட…
-
- 0 replies
- 243 views
-
-
ரோஜர் பெடரர் தோற்று வெளியேற்றம்: அதிர்ச்சி அளித்த ஆண்ட்ரியாஸ் செப்பி ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் உலகின் நம்பர் 2 வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார். இத்தாலி வீரர் ஆண்ட்ரியாஸ் செப்பி, ரோஜர் பெடரரை 6-4, 7-6, 4-6, 7-6 என்று 4 செட்களில் 3-1 என்று கைப்பற்றி வீழ்த்தினார். 2001-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் இவ்வளவு விரைவில் ரோஜர் பெடரர் வெளியேறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செப்பி 11 போட்டிகளில் இப்போதுதான் ரோஜர் பெடரரை வீழ்த்துகிறார். செப்பிக்கு இந்த டென்னிஸ் தொடரில் தரவரிசை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது செட் டைபிரேக்கரில் பெடரர் 4-1 என்று ம…
-
- 4 replies
- 546 views
-
-
மாலிங்க தயாராகிடுவார்: மஹேல உறுதியான நம்பிக்கை இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மாலிங்க உலகக் கிண்ணத் தொடருக்கு தயாராகிடுவார் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது என இலங்கை அணியின் சிரேஷ் வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்ட இணையத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மஹேல ஜயவர்தன, லசித் மாலிங்க கடந்த சில நாட்களுக்கு முன்னரே பந்து வீச ஆரம்பித்து விட்டார். இதுவரையில் அவருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும் உலகக் கிண்ணத் தொடரில் களமிறங்குவதற்கு முன்னர் விளையாட முடியுமா என நூறு வீதம் உறுதிப்படுத்திகொள்ள வேண்டும். ஆனால் அவர் உலகக் கிண்ணத் தொடரில் களமிறங்க தயாராகிடுவார் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது என்றார். கட…
-
- 0 replies
- 401 views
-
-
ஒழுக்கக்கோவையை மீறும் வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.சி.சி. அறிவுறுத்தல் விளையாட்டரங்கிற்குள் வீரர்கள் மத்தியில் இடம்பெறும் வாக்குவாதங்கள் மற்றும் முறைகேடாக பேசுதல் போன்றவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். சில வீரர்கள் நீதியை தங்கள் கைக்குள் எடுத்துக்கொண்டு ஒழுக்கக் கோவைகளை மீறும் வகையில் செயற்படும் பழக்கம் தற்போது அதிகரித்துள்ளதைக் காணமுடிகின்றது. தங்களது அணிக்கு சாதகமான முடிவைப் பெறும் நோக் கில் சில வீரர்கள் விதிகளுக்கு புறம்பாக சென்று எதிரணி வீரர்களை மனோரீதியாக வீழ்த்தும் பொருட்டு வசை பாடுவது அதிகரித்துள்ளது.…
-
- 0 replies
- 308 views
-
-
ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி, சீனிவாசன் குற்றமற்றவர்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட நிலையில் ராஜ் குந்த்ரா மற்றும் குருநாத் மெய்யப்பனுக்கான தண்டனை குறித்து தீர்மானிக்க முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 நபர் குழு அமைக்கப்படும். சூதாட்டத்தில் ஈடுபட்டு தவறிழைத்தவர்கள் மீதான நடவடிக்கை தனிநபர் சார்ந்ததல்ல அவர்கள் சார்ந்த அணியையும் கட்டுப்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதான நடவடிக்கை பற்றி சூசகமாகத் தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்றும், சீனிவாசன் குற்றமற்றவர் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து…
-
- 2 replies
- 473 views
-
-
பயிற்சியாளராகின்றார் முரளிதரன்..! ஐ.பி.எல். 2015 தொடரில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். முத்தையா முரளிதரன், டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, சர்வதேச அரங்கில் இருந்து விடைபெற்றார். அதன் பிறகு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட ஆரம்பித்த முரளிதரன், 66 போட்டிகளில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் சென்னை, கேரளா மற்றும் பெங்களூர் அணிகளில் விளையாடியுள்ளார். 2010, 2011ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணியிலும், 2010 ஆண்டு நடந்த சம்பியன்ஸ் லீக் போட்டியிலும் கிண்ணம் வென்ற சென்னை அணியிலும் இணைந்…
-
- 0 replies
- 440 views
-
-
இங்கிலாந்து அணியில் சங்ககரா ஜனவரி 16, 2015. லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் ‘கவுன்டி’ போட்டிகளில், சர்ரே அணிக்காக விளையாட, இலங்கையின் சங்ககரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணியின் அனுபவ வீரர் சங்ககரா, 37. சமீபத்தில் டெஸ்ட் அரங்கில் 12 ஆயிரம் ரன்களை கடந்த இவர், அடுத்த மாதம் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க உள்ளார். இதனையடுத்து இவரை, இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் ‘கவுன்டி’ போட்டிகளில் விளையாட, சர்ரே அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அணிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாட உள்ள இவர், இந்த ஆண்டு நடக்கவுள்ள ‘கவுன்டி’ சீசனில் நிறைய போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவர், ‘கவுன்டி’ போட்ட…
-
- 1 reply
- 425 views
-
-
இவானோவிக் அதிர்ச்சி தோல்வி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று காலை ஆரம்பமானது. இதில் உலகின் 5ஆம் நிலை வீராங்கனையான அனா இவானோவிக் (செர்பியா) ஆரம்ப சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். செக் குடியரசுவைச் சேர்ந்த லூசி 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் இவானோவிக்கை வீழ்த்தினார். 3ஆம் நிலை வீராங்கனையான ஹிமோனா ஹெலப் (ருமேனியா) 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனை கர்னை வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதேவேளை இந்திய வீரர் யூசிபாம்ப்ரி முதல் சுற்றிலேயே வெளியேறினார். 6ஆம் நிலை வீரர் ஹெண்டி முர்ரே (இங்கிலாந்து) 6-3, 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட் கணக்கில் பாம்பரியை வீழ்த்தினார். http:/…
-
- 0 replies
- 421 views
-
-
ஜயசூரியவை பின்னுக்கு தள்ளிய சங்கா புதிய சாதனை இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் சாதனை நாயகனுமான குமார் சங்கக்கார இன்று புதிய மைல்கல் ஒன்றை எட்டினார். சர்வதேச ஒரு நாள் அரங்கில் அதி கூடுதலாக ஓட்டங்களை பெற்றவர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை கைப்பற்றி குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார் . நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய நான்காவது ஒருநாள் போட்டியில் 76 ஓட்டங்களை பெற்றதன் மூலமே இந்த இலக்கை அடைந்துள்ளார். சர்வதேச ஒருநாள் அரங்கில் 394 போட்டிகளில் விளையாடியுள்ள குமார் சங்கக்கார, 20 சதங்கள் 92 அரைச் சதங்கள் அடங்கலாக 13490 ஓட்டங்களை பெற்றுள்ளார். மேலும் 40.63 சராசரியையும் கொண்டுள்ளார். சர்வ…
-
- 0 replies
- 599 views
-
-
தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி ஜனவரி 17, 2015. டர்பன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஸ்டைன், பிலாண்டர் உள்ளிட்ட பவுலர்கள் அசத்த, தென் ஆப்ரிக்க அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் வென்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி டர்பனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். டிவிலியர்ஸ் அபாரம்: முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு ரோசவ் (0), டுபிளசி (0) ஏமாற்றினர். பின் இணைந்த ஹசிம் ஆம்லா (66), கேப்டன் டிவிலியர்ஸ் (81) ஜோடி அபாரமாக ஆடியது. அடுத்து வந்த டேவிட் மில்லர் (70) நம்பிக்கை தந்தார். டுமினி (12)…
-
- 5 replies
- 541 views
-
-
இங்கிலாந்து அணியை நீக்க திட்டம்? *உலக கோப்பை தொடரில் அதிர்ச்சி ஜனவரி 17, 2015. துபாய்: இங்கிலாந்து அணியை உலக கோப்பை தொடரில் இருந்து நீக்குவதற்கான வேலைகளில் ஐ.சி.சி., இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து உலக கோப்பை அணிக்கு கேப்டனாக, அயர்லாந்தை சேர்ந்த இயான் மார்கன் உள்ளார். தவிர, கேரி பேலன்ஸ் (ஜிம்பாப்வே), பென் ஸ்டோக்ஸ் (நியூசிலாந்து) உள்ளிட்ட வீரர்கள் வேறு நாட்டினை சேர்ந்தவர்கள். வேகப்பந்து வீச்சாளர் ஜோர்டன், வெஸ்ட் இண்டீசின் பார்படாசை சேர்ந்தவர். அதாவது, இங்கிலாந்து உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் பலர், பாரம்பரியமாக இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் அல்ல. விதியால் பலன்: ஐ.சி.சி., விதி 2010, 3.3ன் படி, ‘ தேர்வு செய்யப்ப…
-
- 0 replies
- 284 views
-
-
மனைவிகளுக்கும் தடை, காதலிகளுக்கும் தடை.. சோகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்! மும்பை: உலகக் கோப்பைப் போட்டியின்போது வீரர்களுடன் அவர்களது மனைவியரும், காதலிகளும் உடன் செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடித் தடை விதித்து விட்டது. இதனால் வீரர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனராம். குறிப்பாக விராத் கோஹ்லி இனிமேல் அரை சதம் அடிக்கும்போதும், சதம் போடும்போதும் பெவிலியனைப் பார்த்து காதலி அனுஷ்கா சர்மாவுக்கு பறக்கும் முத்தங்களைப் பறக்க விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த தடை உத்தரவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாம் இந்திய கிரிக்கெட் வாரியம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பிப்ரவரி 14ம் தேதி 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பிரஷரை…
-
- 0 replies
- 391 views
-
-
கொண்டாட்டத்துக்குத் தயாராகுங்கள்… - பரவசமூட்டிய தருணங்கள் ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் திருவிழாவுக்காக ரசிகர்கள் தவம் இருக்கிறார்கள். நம் நாட்டு ரசிகர்களுக்கு உலகக் கோப்பைக் கிரிக்கெட் என்றால் சாப்பாடு, தூக்கம் எதுவுமே வேண்டாம். போட்டிகள் முடியும்வரை ஒட்டுமொத்த நினைப்பும் மட்டையையும் பந்தையும் சுற்றியே இருக்கும். உலகக் கோப்பை கிரிக்கெட் நினைவலைகள் ஒவ்வொரு ரசிகரின் நெஞ்சிலும் பட்டாம்பூச்சியாய் படபடக்கும். நினைவுகளின் வண்ணத்துப் பூச்சிகளைப் பின் தொடர்வோமா? இதோ இன்றிலிருந்து தொடங்கிவிட்டது உலகக் கோப்பைக்கான முன்னோட்டம். மறக்கவே முடியாத தருணங்கள் 10 உலகக் கோப்பைப் போட்டிகள். பதினாயிரம் நினைவுகள். கிரிக்கெட்டின் ஆகப்பெரிய சவால…
-
- 0 replies
- 291 views
-
-
செய்தி சில வரிகளில்.. #அண்டார்டிக் கடல் பகுதியில் 1 டிகிரி செல்சியஸ் குளிரில் 1.4 மைல் தூரத்தை 52 நிமிடங்களில் நீந்தி கடந்து உலக சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை பக்தி சர்மா. அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இச்சாதனையை படைத்த இளம் வயது வீராங்கனை, முதல் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்ற பெருமையையும் பக்தி சர்மா பெற்றுள்ளார். # மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் கிராண்ட் பிரீக்ஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஜய் ஜெயராம் அரையிறுதிக்கு சென்றுள்ளார். # உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மொ…
-
- 0 replies
- 469 views
-
-
101 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்கள்: விராட் கோலியை முறியடித்த ஹஷிம் ஆம்லா ஒருநாள் போட்டிகளில் 114 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை எடுத்து சாதனையை வைத்திருந்த விராட் கோலி, விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோரை ஹஷிம் ஆம்லா முறியடித்தார். கிங்ஸ்மீட் டர்பனில் நேற்று நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் ஆம்லா 66 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸ் அவரது 101-வது இன்னிங்ஸ், இதில் அவர் 5,000 ரன்களைக் கடந்து அதிவேக 5,000 ரன்கள் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இது மட்டுமல்ல, ஒருநாள் போட்டிகளில் 2000, 3000, 4000 ரன்களையும் குறைந்த இன்னிங்ஸ்களில் எடுத்த சாதனையும் ஆம்லாவுக்குரியதே. நேற்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா மழைகாரணமாக 48.2…
-
- 0 replies
- 348 views
-
-
உலகக்கிண்ணத்தில் சிறப்பாக செயற்பட்ட அணி இலங்கை கடந்த காலங்களில் இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிக நூறு ஓட்டங்களை எடுத்த அணியாக இலங்கையணி பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் இலங்கையணி 61 வீரர்கள் உலகக்கிண்ண போட்டியில் நூறு ஓட்டங்களை பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாது கடந்த காலங்களில் உலகக்கிண்ண போட்டிகளில் துடுப்பாட்டம், பந்து வீச்சு, மற்றும் களத்தடுப்பில் மிகச்சிறப்பாக செயற்பட்ட வீரர்களை கொண்ட அணியாகவும் இலங்கையணி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=118123810415630183#sthash.q1Sl7nIf.dpuf
-
- 1 reply
- 411 views
-
-
டி20 கிரிக்கெட்: கிறிஸ் கெய்ல் சிக்சர் மழையில் மூழ்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டவுனில் நேற்று இரவு நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா-மே.இ.தீவுகளுகு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெய்ல் அதிரடியில் மே.இ.தீவுகள் வெற்றி பெற்றது. ஆம்லா, டிவிலியர்ஸ், டேல் ஸ்டெய்ன், மோர்கெல் என்று முன்னிலை வீரர்கள் இல்லாத அணியை டு பிளேசி வழிநடத்தினார். மே.இ.தீவுகளுக்கு டேரன் சமி கேப்டன். டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. டுபிளேசி 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 38 ரன்கள் விளாசி அவுட் ஆனார். புதிய அதிரடி வீரர் ரூஸோ 40 பந்துகளில் 51 ரன்களை எடுக்க பிஹார்டீன் 18 ரன்களையும் டேவிட் மில்லர் 24 ரன்…
-
- 7 replies
- 753 views
-
-
கேவிக் கேவி அழுத கெவின் பீ்ட்டர்சன் லண்டன்: இங்கிலாந்து அணியிலிருந்து தன்னை நீக்கிய செய்தியைக் கேள்விப்பட்டதும் தான் அழுததாக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். தற்போது இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சன் இல்லை. அவரை நீக்கி விட்டனர். அவரது நீக்கம் அப்போது இங்கிலாந்து அணியில் சலசலப்புகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் போட்டிகளை ஆட இங்கிலாந்து போயிருந்தது. அபபோது ஐந்து போட்டிகளிலும் அது தோல்வியைத் தழுவியது. இதனால் பெரும் சர்ச்சைக்குள்ளானது இங்கிலாந்து அணி. கேவிக் கேவி அழுத கெவின் பீ்ட்டர்சன் இதையடுத்து கெவின் பீ்ட்டர்சனை அதிரடியாக நீக்கியது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு. இதுகுறித்து தற்போது கருத்து தெ…
-
- 0 replies
- 532 views
-
-
நொந்து போன ‘கீப்பர்’ நுாயர் ஜனவரி 14, 2015. ஜூரிச்:‘‘உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது, எங்களைப் போன்ற கோல் கீப்பர்களுக்கு கிடைப்பது சிரமம்,’’ என, மானுவல் நுாயர் தெரிவித்தார். சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது இறுதி பட்டியலில் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி, உலக கோப்பை வென்ற ஜெர்மனி அணி கோல்கீப்பர் மானுவல் நுாயர் என, 3 பேர் இடம் பெற்றனர். இதில் ரொனால்டோ முதலிடம் (37.66 சதவீதம்) பெற்று விருதை தட்டிச் சென்றார். மெஸ்சி (15.76), நுாயர் (15.72) அடுத்த இரு இடங்கள் பெற்றனர். இதுகுறித்து நுாயர் வேதனையுடன் கூ…
-
- 0 replies
- 397 views
-
-
பயிற்சியாளரை தேர்வு செய்ய கோஹ்லிக்கு அதிகாரம் ? ஜனவரி 14, 2015. மெல்போர்ன்: விராத் கோஹ்லிக்கு இந்த பொங்கல் மிகவும் சிறப்பானது. டெஸ்ட் அணியின் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்த இவரை சுற்றித் தான் இந்திய அணியின் எதிர்காலம் உள்ளது. இவர் கை காட்டும் நபரை தான் புதிய பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியின் இளம் நட்சத்திரம் விராத் கோஹ்லி, 26. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடிலெய்டு, சிட்னி போட்டியில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். களத்தில் இவரது ஆக்ரோஷ செயல்பாடு அனைவரையும் கவர்ந்தது. 4 டெஸ்டில் 692 ரன்கள் குவித்த இவர், கேப்டன் பதவி தனது பேட்டிங்கை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை நிரூபித்தார். …
-
- 0 replies
- 507 views
-
-
இயன் பெல் 187 ரன்கள் விளாசல்; 50 ஓவர்களில் 391 ரன்கள் குவித்த இங்கிலாந்து வெற்றி முத்தரப்பு ஒருநாள் தொடருக்கு முன்பான ஒருநாள் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணியை இங்கிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்து அணிக்கு இயன் மோர்கன் கேப்டன், ஆஸி. பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு மைக் ஹஸ்ஸி இல்லாததால் கிறிஸ் ராஜர்ஸ் கேப்டனாக செயல்பட்டார். கான்பராவில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து இயன் பெல்லின் அதிரடி 187 ரன்கள் மூலம் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஆஸி. பிரைம் மினிஸ்டர் லெவன் அணி அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெல் 89 பந்துகளில் 136 ரன்களை விளாசியும் 60 ரன்கள் …
-
- 0 replies
- 671 views
-
-
தேறாத பந்து வீச்சும் மாறாத அணுகுமுறையும் இந்தியாவின் மட்டை வலு எவ்வளவுதான் கூடினாலும் 20 விக்கெட்களை வீழ்த்தக்கூடிய பந்து வீச்சு இல்லாமல் வெற்றிகளைக் குவிப்பது பற்றிக் கனவு காண முடியாது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவை இரண்டு முறை மட்டுமே இந்தியாவால் முழுக்க ஆட்டமிழக்கச் செய்ய முடிந்திருக்கிறது. அந்த இரண்டு சமயங்களிலும் ஆஸ்திரேலியா 500 ரன்களைக் கடந்த பிறகே ஆட்டமிழந்தது. இந்தியாவால் சில சமயங்களில் வெற்றிக்கு அருகே செல்ல முடிந்தது என்றால் அதற்கு ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்ததுதான் காரணம். பந்து வீச்சின் மூலம் இந்தியா அந்த நிலையை எட்டவில்லை. பிரிஸ்பேனில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே இந்திய வேகப்பந்து வீச்சு வீரியத்துடன் வெளிப்பட்டது (130-6). மற்ற சமயங்களில் யார் வேண்டுமான…
-
- 1 reply
- 546 views
-
-
விளையாட்டுச் செய்திச் சாரல்கள்... # ஆஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டி ‘ஏ’ பிரிவில், ஆஸ்திரேலியா ஓமன் அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. # பார்முலா ஒன் கார் கிராண்ட் பிரீ கார்பந்தயத்தில் 2015-க்கான பட்டியலில் கொரியாவில் பந்தயம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் நிதி நெருக்கடி காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு 20 சுற்றுக்கள் மட்டுமே போட்டி நடைபெறும். # ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரைச் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதை, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ‘இந்நாளை என்றும் மறக்கமாட்டேன்’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார். …
-
- 0 replies
- 339 views
-
-
இந்தியாவில் திறமையான பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சம்: டிராவிட் வருத்தம் இந்திய அணிக்குத் தேவைப்படும் அளவுக்கு, திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் தற்போது இல்லை. உள்ளூர் போட்டி களிலும் எதிர்பார்த்த அளவுக்கு திறமையுள்ள பந்துவீச்சாளர்கள் தற்போது இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: விராட் கோலியைப் பற்றி இப்போதே கணிக்கக் கூடாது. ஆனால், தன்னால் தலைமை யேற்க முடியும் என நிரூபித்திருக் கிறார். ஆஸ்திரேலிய தொடரில் அவரின் தனிப்பட்ட செயல்பாடு களை அவருடைய பலமாகக் கருதுகிறேன். இந்திய கிரிக்கெட் அணிக்கு நீண்ட கேப்டனாகச் செயல்பட அவரை அணி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். இந்திய அணியின் பேட்டிங் வரிசை நன்றாகவ…
-
- 0 replies
- 312 views
-
-
சாய்ந்தது "தல".... டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு "குட்பை" சொன்னார் டோணி...கோஹ்லி புது கேப்டன்! மெல்போர்ன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திரசிங் டோணி அறிவித்துள்ளார். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி இந்தியாவுக்கு தலைமையேற்பார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது. காயம் காரணமாக முதல் போட்டியில் டோணி களமிறங்காததால் விராட் கோஹ்லி தலைமையில் இந்தியா களம் கண்டது. ஆனால் போராடி தோற்றது. 2வது மற்றும் இன்று நிறைவடைந்த மூன்றாவது டெஸ்டில் டோணி கேப்டனாக செயல்பட்டார். 2…
-
- 24 replies
- 1.7k views
-