விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறந்த உதைபந்தாட்ட வீரர் 2014 உலகின் சிறந்த உதைபந்தாட்ட வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பான பிபா சார்பில் நடந்த விழாவில் உலகின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ(37,66%) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 2008 ஆம் ஆண்டிற்குப்பின்னர் சென்ற ஆண்டும் இந்த விருதைப்பெற்றுக்கொண்ட ரொனால்டோ 2014 ஆம் ஆண்டுக்கான விருதை மீண்டும் தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ஆர்ஜென்ரீனாவின் விளையாட்டு வீரர் லயனல் மெஸ்சி(15,76%) மற்றும் ஜேர்மன் நாட்டின் மானுவெல் நோயர்(15,72%) ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்த விருதை அடைந்துள்ளார். உலகின் சிறந்த உதைபந்தாட்டப் பயிற்சியாளராக …
-
- 2 replies
- 824 views
-
-
டெஸ்ட் தொடரை இழந்ததை வைத்து இந்திய அணியை குறைவாக எடை போடவேண்டாம்: மைக் ஹஸ்ஸி எச்சரிக்கை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததை வைத்து இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் குறைவாக எடைபோட வேண்டாம் என்று மற்ற அணிகளை மைக் ஹஸ்ஸி எச்சரித்துள்ளார். அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை போட்டிகளின் போது இந்திய அணி தங்கள் சாம்பியன் தகுதியை தக்க வைக்க கடுமையாக விளையாடும் என்பதை மறந்து விட வேண்டாம் என்று கூறுகிறார் ஹஸ்ஸி. "இந்திய அணிக்கு உள்ள மிகப்பெரிய அனுகூலம் என்னவெனில் ஆஸ்திரேலிய மைதானங்களில் 2 மாதங்களாக விளையாடி வருகின்றனர். இப்போது அவர்கள் இங்குள்ள பல்வேறு சூழ்நிலைகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருப்பார்கள். அதாவது பிட்ச்களின் வேகம் மற்றும் பவுன்ஸிற்கு அந்…
-
- 0 replies
- 623 views
-
-
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. மகிழ்ச்சியும் வருத்தமும் டெஸ்ட் போட்டிகளில் கடைசி நாளன்று மட்டை பிடித்து நிற்பது சவாலான விஷயம். பந்து வீசப்படும் களத்தில் பல விரிசல்கள் ஏற்பட்டிருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் ஓடிய கால் தடங்கள் பிட்சின் மீது ஏற்படுத்திய சிறு பள்ளங்கள் பந்து தாறுமாறாக எகிறவும் கூடுதலாகத் திரும்பவும் உதவும். ஒரு பந்து எதிர்பார்ப்புக்கு மேல் எழும். இன்னொறு நினைத்ததைவிட அதிகம் தாழும். வழக்கமான உத்திகளை வைத்துக்கொண்டு கரைசேர்ந்துவிட முடியாது. இத்தகைய ஐந்தாவது நாளில் ஆடும் வாய்ப்பு இந்தியாவுக்கு இந்தத் தொடரில் மூன்று முறை கிடைத்தது. மூன்றிலுமே இந்தியா மெச்சத்தக்க விதத்தில் ஆடியது. ஒன்றில் தோல்வி என்றாலும் தீரமான போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த …
-
- 0 replies
- 376 views
-
-
டெஸ்ட் தரவரிசை: சங்ககாரா மீண்டும் முதலிடம் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசை பட்டியலில் இலங்கையின் குமார் சங்ககாரா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சங்ககாரா 203 ரன்கள் எடுத்தார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதே டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்த நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்தார். இது தரவரிசையில் அவரது அதிகபட்ச முன்னேற்றமாகும். இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி 3 இடங…
-
- 0 replies
- 350 views
-
-
இந்தியாவின் மனநிலை மாறுமா * மனம் திறக்கிறார் கும்ளே புதுடில்லி: ‘‘வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடர்களின் போது பவுலர்களை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் மனநிலை மாற வேண்டும். மூன்று ‘வேகங்கள்’, ஒரு ‘ஸ்பின்னர்’ என்ற ‘பார்முலா’ எப்போதும் கைகொடுக்காது,’’ என, கும்ளே தெரிவித்தார். சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரில், இந்திய அணி வீரர்கள் ஒரு போட்டியில் கூட, ஆஸ்திரேலிய அணியில் 20 விக்கெட்டுகளையும் முழுமையாக வீழ்த்தவில்லை. இதனால், பேட்டிங்கில் அசத்திய போதும், டெஸ்ட் தொடரை இழக்க நேரிட்டது. இதுகுறித்து இந்திய அணி சார்பில் ஒருநாள் (337) மற்றும் டெஸ்ட் (619) போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய, ‘சுழல்’ ஜாம்பவான் கும்ளே, 44, கூறியது: இந்திய அணியில் …
-
- 0 replies
- 676 views
-
-
1,000 போட்டிகளில் வென்று ரோஜர் பெடரர் சாதனை டென்னிஸ் விளையாட்டில் ஆயிரம் போட்டிகளில் வென்ற மூன்றாவது நபர் என்ற சாதனையை ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் பெற்றுள்ளார். உலக ஒற்றையர் தரவரிசையில் 2-வது இடத்திலுள்ள பெடரர், நேற்று நடைபெற்ற பிரிஸ்பென் சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில், உலகின் 8-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பெடரர் பெறும் 1,000வது வெற்றி இதுவாகும். ரயோனிக்கை அவர், 6-4, 6-7(2), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். டென்னிஸ் வரலாற்றில் 1,000 போட்டிகளில் வெற்றி பெறும் மூன்றாவது நபர் பெடரர் ஆவார். முன்னதாக, அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் (1253), இவான் லெண்டில் (1071) ஆகியோர் 1,000 போட்டிகளில் வென்றுள்ளனர். பெடரர்…
-
- 1 reply
- 404 views
-
-
ஒருநாள் போட்டிகளிலிருந்து மிஸ்பா ஓய்வு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் மிஸ்பா உல்ஹக் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பிறகு சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் இருபதுக்கு 20 போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு டெஸ்டில் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். 40 வயதான மிஸ்பா கடந்த 2002 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4669 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/01/12/%E0%…
-
- 0 replies
- 480 views
-
-
முரளி விஜய் ஆஸ்திரேலியாவில் அடித்து நொறுக்கியும் புண்ணியம் இல்லாம போச்சே! சென்னை: தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று தொடக்க போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடி ரன் குவித்த தமிழகத்தின் முரளி விஜய்க்கு உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இந்திய தேர்வாளர்கள் மறுத்துள்ளனர். விராத் கோஹ்லி போல முரளி விஜய்யும் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடி வந்தார். சதம், அரை சதம் என்று இவரும் தன் பங்குக்கு ரன் குவித்தார். அதை விட முக்கியமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பாக விளையாடும் இந்திய வீரர் என்ற பெருமையும் இவருக்கு மட்டுமே உண்டு. முரளி விஜய் ஆஸ்திரேலியாவில் அடித்து நொறுக்கியும் புண்ணியம் இல்லா…
-
- 10 replies
- 839 views
-
-
இந்திய அணிக்கு முற்றிலும் புதிய பந்துவீச்சாளர்கள் தேவை: சுனில் கவாஸ்கர் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இழந்த இந்திய அணிக்கு முற்றிலும் புதிய பந்துவீச்சாளர்கள் தேவை என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். என்.டி.டி.வி.-க்கு கவாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2-வது டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா அணி இந்திய பந்து வீச்சை ஒன்றுமில்லாமல் அடித்துள்ளது. 2011-12-இல் பவுலர்கள் எப்படி செயல்பட்டனரோ அப்படித்தான் இந்தத் தொடரிலும் செயல்பட்டனர். 20 விக்கெட்டுகளை வீழ்த்த விருப்பம் இருப்பதாக அவர்களிடத்தில் நான் எதையும் காணவில்லை. எனவே தற்போதுள்ள பவுலிங் யூனிட்டை அணியில் வைத்திருப்பது கூடாது. உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றலாம், ஆனால், …
-
- 0 replies
- 316 views
-
-
-
ஒரு பந்தில் 7 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்திய வீரர் தென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிரேக் பிராத்வெய்ட் ஒரே ஒரு பந்தில் 7 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளார். தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி கேப்டவுண் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. அந்தப் போட்டியில் தான் இந்த உலக சாதனை அரங்கேறியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணிவீரர் கிரேக் பிராத்வெய்ட் தனக்கு வந்த பந்தை வேகமாக அடித்து விரட்டி உடனடியாக ஓட்டங்கள் எடுக்க ஓடினார். அப்படி ஓடியே அவர் 3 ஓட்டங்களை எடுத்து விட்டார். அந்த சமயம் பந்தை வசப்படுத்திய தென்னாபிரிக்க விக்கெட் கீப்பர் ஏப் டிவில்லியர்ஸ், அதை ஸ…
-
- 0 replies
- 1.2k views
-
-
அயல்நாட்டுப் பிட்ச்களில் வீசும் முறையைக் கற்க வேண்டிய நிலையில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் இதுவரை 24 போட்டிகளில் 115 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் இந்தியாவில் மட்டும் 95 விக்கெட்டுகளை 15 போட்டிகளில் கைப்பற்றியுள்ளார். இந்தியாவில் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமான, புழுதி நிறைந்த ஆட்டக்களங்களில் மட்டுமே அவரால் ஆஃப் ஸ்பின்னர்களை திறமையாக வீச முடிகிறது என்பதை இது காட்டுகிறது. அவரது பிரச்சினை என்னவென்று பார்த்தால் அவர் வீசும் திசை மற்றும் லெந்த், அவர் கேட்கும் களவியூகம் என்று அயல்நாடுகளில் அவரால் திறம்பட வீச முடியாமல் இருப்பதே. அதுவும் பிரிஸ்பன், மெல்பர்ன், தற்போது சிட்னி ஆகிய டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் பந்து வீச்சு எரிச்சலைக் கிளப்புவதாகவே…
-
- 0 replies
- 639 views
-
-
திங்கள்கிழமை உலக ஜூனியர் சம்பியன் போட்டியில் தோல்வியடைந்து தங்க பதக்கததை இழந்தத பின்னர் ரஷ்ய அணியை சேர்ந்த சியாற் பெய்ஜின் ஆபத்தான வழியில் தன் பொறுமையை இழந்தார். கனடிய அணியினர் தங்கள் வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கையில் 19-வயதுடைய குறிப்பிட்ட ரஷ்ய வீரர் தனது குச்சியை ஒரு ரசிகரை தாக்கும் வண்ணம் அரங்கத்தில் எறிந்துள்ளார். இந்த தங்கப்பதக்க போட்டியில் கனடா 5-4 ஆக ரஷ்ய அணியை வென்றது. கனடியர்களின் வெற்றி கொண்டாட்டத்தின் போது கனடிய வீரர் ஒருவரும் தனது குச்சியை மேல் நோக்கி வீசியுள்ளார். பெய்ஜின் நீல கோட்டிற்கு சறுக்கிச் சென்று தனது குச்சியை கண்ணாடி மீது வீசினார். ஜூனியர்சின் அணியை நிரவகிக்கும் சர்வதேச ஐஸ் ஹொக்கி கூட்டமைப்பு இந்த சம்பவத்திற்காக பெய்ஜின் தண்டனையை எதிர்நோக்க…
-
- 0 replies
- 232 views
-
-
கனடாவின் பிரபல டெனிஸ் வீராங்கனையான யூஜீன் பூஷார்ட் (Eugine Bouchard) 2014ம் ஆண்டுக்கான சிறந்த பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றார். இந்தப் பெருமையின் மூலமாக பொபி றோசென்ஃபெல்ட் (Bobbie Rosenfeld) விருது குபெக்கைச் சேர்ந்த யூஜீனுக்கு வழங்கப்படுகின்றது. மேலும் தொடர்ந்து இரண்டாவது வருடமாக அவர் இந்த விருதைப் தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாடளாவிய ரீதியில், விளையாட்டுச் செய்தி ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்கள் நடத்திய வாக்களிப்பில், 74 வாக்குகளைப் பெற்று யூஜீன் இந்த விருதிற்காகத் தெரிவு செய்யப்பட்டார். 20 வயதான பூஷார்ட், உலக டெனிஸ் வரிழைசயில் 32வது இடத்திலிருந்து, பின்னர் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி, வருட இறுதியில் ஏழாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்…
-
- 12 replies
- 1.1k views
-
-
பிசிசிஐ தடையையும் மீறி சிட்னியில் கோஹ்லியுடன் சுற்றும் நடிகை அனுஷ்கா சிட்னி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் சிட்னியில் உள்ள டார்லிங் ஹார்பருக்கு சென்று வந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா சென்ற பிறகு தான் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கோஹ்லி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சில விதிமுறைகளை விதித்துள்ளது. காதலிகளுக்கு தடை கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் ஆஸ்திரேலியா செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்…
-
- 1 reply
- 658 views
-
-
ரஷ்ய கால்பந்தாட்ட வீரர் சுட்டுக்கொலை ரஷ்யாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கசான் மகோமெதோவ், இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் வடக்கு காகசஸின் டாஜெஸ் பகுதியில் உள்ள அன்ஷி மகா செக்கலா தேசிய கால்பந்தாட்ட லீக்கில் விளையாடி வந்தார். இந்நிலையில் மகோமெதோவ் நேற்று காரில் சென்று கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். http://www.virakesari.lk/articles/2015/01/06/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%…
-
- 0 replies
- 557 views
-
-
கடந்த வருட கிரிக்கெட்டில் 2014ஆம் ஆண்டில் மொத்தம் 42 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் அவுஸ்ரேலியா, நியூஸ்சிலாந்து மற்றும் இலங்கை அணிகள் அதிகமான வெற்றிகளை பெற்றுள்ளன. 2014ஆம் ஆண்டில் நிறைய தோல்விகளை சந்தித்த அணி என்றால் இந்தியா தான். 10 டெஸ்டில் விளையாடி ஒன்றில் வெற்றியும், ஆறில் தோல்வியும், மூன்றில் வெற்றி தோல்வி இன்றி முடித்துள்ளது. அந்த ஒரு வெற்றி, லண்டன் லார்ட்சில் இங்கிலாந்துக்கு எதிராக கிடைத்தவை ஆகும். டெஸ்டில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள முதல் 10 துடுப்பாட்ட வீரர்களில் இலங்கை அணியினைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்திய வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இலங்கை அணியின் வீரரான சங்கக்கார பங்களாதேஷ்சிற்கு எதிராக 319 ஓட்டங்களையும், நியூசிலாந்து அண…
-
- 0 replies
- 470 views
-
-
கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்கள் கடந்து சங்ககரா சாதனை! வெலிங்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 12,000 ரன்களை குறைந்த இன்னிங்ஸ்களில் எடுத்து இலங்கையின் சங்ககரா சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான சங்ககரா உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். 37-வயதான அவர் கடந்த மாதம் ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ரன்னை கடந்து 4-வது வீரர் என்ற சாதனையை படைத்தார். கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்கள் கடந்து சங்ககரா சாதனை! இந்த நிலையில் சங்ககரா இன்று டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்னை தொட்டு சாதனை புரிந்தார். நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட…
-
- 3 replies
- 570 views
-
-
உலக கிரிக்கெட்டின் மன்னன் விராட் கோஹ்லி: ஆஸி. மாஜி வீரர் டீன் ஜோன்ஸ் புகழாரம் சிட்னி: விராட் கோஹ்லி உலக கிரிக்கெட்டின் ராஜாவாகிவிட்டதாக, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டரும், வர்ணணையாளருமான டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த டோணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து புதிய கேப்டனாக விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டீன் ஜோன்ஸ் கூறியதாவது: விளையாட்டு உலகிலேயே கஷ்டமான விஷயம் என்றால், அது இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருப்பதாகத்தான் இருக்கும். உலக கிரிக்கெட்டின் மன்னன் விராட் கோஹ்லி: ஆஸி. மாஜி வீரர் டீன் ஜோன்ஸ் புகழாரம் உலக கிரிக்கெட்டில், பலம் வாய்ந்த நாடு இந்தியா. பணக்கார கிரிக்கெட் வாரிய…
-
- 0 replies
- 427 views
-
-
இன்னும் ஓராண்டில் இந்த இந்திய அணி திறமைகளை எங்கும் நிரூபிக்கும்: ரவி சாஸ்திரி இந்த இளம் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த ஓராண்டில் பலமாக எழுச்சியுறும் என்று அணி இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் கூறியதாவது: ”2-0 என்று தொடரை இழந்தது பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில் இந்த அணி வெளிப்படுத்திய ஆட்டத்திறமைதான். கடந்த காலங்களில் நாம் வீழ்ந்திருக்கிறோம், நெருக்கடியில் எந்த வித சவாலையும் அளிக்காமல் தோற்றிருக்கிறோம். ஆனால் தற்போது எதிரணியினரிடம் தாக்குதல் ஆட்டத்தை கொண்டு சென்றுள்ளோம். இந்த அணி வீரர்களின் சராசரி வயது 26. ஆனால், இது தோல்விக்கான சாக்குபோக்கு அல்ல. இந்த அணிக்கு நான் முன்னமே கூறியது போல் இன்னும் 12 மாதங்கள் கொடுங்கள்,…
-
- 1 reply
- 1k views
-
-
இவ்வாண்டின் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நாளை ஆரம்பமாகும் 2 ஆவது டெஸ்ட் போட்டி இவ்வாண்டின் முதலாவது டெஸ்ட் போட்டியாக கிரிக்கெட் நாட்காட்டியில் இடம்பெறவுள்ளது. இப் போட்டி நாளை 3 ஆம் திகதி சனிக்கிழமை நியூசிலாந்தின் வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளது. அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையில் இலங்கை அணியில் கௌஷால் சில்வா, திமுத்து கருணாரத்ன, குமார் சங்கக்காரஈ லஹிரு திரிமன்னே, நிரோஷன் திக்வெல்ல, பிரசன்ன ஜயவர்தன, தரிந்து கௌஷால், தம்மிக்க பிரசாத், எரங்க, சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, தினேஷ் சந்திமல், நுவன் பிரதீப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் இப்போட்டியில் களமிறங்கவுள்ளனர். நியூசிலாந்து அணியில் பிரட்டன் மெக்கலம்- டொம் லெதம்- ஹமீஷ் ருத…
-
- 1 reply
- 510 views
-
-
விராட் கோலி அதிகம் உணர்ச்சிவயப்படுகிறார்: ஷாகித் அப்ரீடி இந்திய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள விராட் கோலி அதிகம் உணர்ச்சிவசப்படுவராகத் திகழ்கிறார். கேப்டன் பொறுப்பை கையாள அவருக்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என்று பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரீடி தெரிவித்துள்ளார். தோனி விட்டுச் சென்ற வெற்றிடத்தை கோலி நிரப்ப இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும் என்று தொலைக்காட்சி சானல் ஒன்றில் அப்ரீடி தெரிவித்துள்ளார். “தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்ததை கேள்விப்பட்டு கடும் ஏமாற்றமடைந்தேன், ஏனெனில் அவர் ஒரு போராடும் குணம் படைத்தவர், இந்திய கிரிக்கெட்டின் ஒரு மிகப்பெரிய தலைவராக அவர் திகழ்ந்துள்ளார். அந்த அணியை பலமுறை முன்னே நின்று வழிநடத்திச் சென்றுள்ளார்…
-
- 0 replies
- 732 views
-
-
மைக் ஹஸ்ஸியை பயிற்சியாளராக்க தோனி பரிந்துரை? இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸியை பரிசீலிக்கலாம் என்று ஓய்வு பெற்ற டெஸ்ட் கேப்டன் தோனி பிசிசிஐ-க்கு பரிந்துரை செய்ததாக தெரிகிறது. இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றில் எழுதப்பட்ட பத்தி ஒன்றை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலிய ஊடகம் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: டன்கன் பிளெட்சருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியவருமான மைக் ஹஸ்ஸி பெயரை தோனி பரிந்துரை செய்துள்ளதாக அந்தப் பத்தியில் கூறப்பட்டுள்ளது. பிசிசிஐ-யின் முதன்மை அதிகாரிகளுக்கு மைக் ஹஸ்ஸியை பயிற்சியாளர் பொறுப்பிற்கு தோனி பரிந்துரை செய்துள…
-
- 1 reply
- 799 views
-
-
டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியீடு : முதல் மூன்று இடங்களுக்குள் சங்கா, ஹேரத் சர்வதேச கிரிக்கெட் சபையினால் டெஸ்ட் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சு வீரர்களுக்கான புதிய தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இப்பட்டியலில் தென் ஆபிரிக்க அணி வீரர் ஏ.பி.டி.வில்லியர்ஸ் முதலிடத்தில் உள் ளார். மூன்றாம் இடத்தில் தென் ஆபிரிக்க டெஸ்ட் அணித்தலைவர் ஹசிம் அம்லா தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணியின் தற்காலிக தலைவர் ஸ்டீபன் ஸ்மித் இந்த பட்டியலில் 5 ஆவது இடத்தில் காணப்படுகின்றார். இந்த பட்டியலில் இந்திய டெஸ்ட் அணி யின் புதிய தலைவர் விராட் கோலி 15 ஆவது இடத்தை பெற்…
-
- 0 replies
- 389 views
-
-
இந்திய-அஸ்திரேலிய வீரர்களுக்கு ஆஸி. பிரதமர் டோனி அபாட் புத்தாண்டு தேநீர் விருந்து ஆஸி.பிரதமர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள். | படம்: சிறப்பு ஏற்பாடு. ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தனது சிட்னி இல்லத்தில் இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு புத்தாண்டு தினமான இன்று தேநீர் விருந்து அளித்தார். இரு அணி வீரர்களும் பிறகு பிரதமர் டோனி அபாட்டுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் டீம் இந்தியா டி-சர்ட் மற்றும் கால்சட்டைகளுடன் இந்திய வீரர்கள் சாதாரண உடையில் பிரதமர் டோனி அபாட்டுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அணி வீரர்களுடன் புகைப்படம் எடு…
-
- 0 replies
- 433 views
-