விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
101 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்கள்: விராட் கோலியை முறியடித்த ஹஷிம் ஆம்லா ஒருநாள் போட்டிகளில் 114 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை எடுத்து சாதனையை வைத்திருந்த விராட் கோலி, விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோரை ஹஷிம் ஆம்லா முறியடித்தார். கிங்ஸ்மீட் டர்பனில் நேற்று நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் ஆம்லா 66 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸ் அவரது 101-வது இன்னிங்ஸ், இதில் அவர் 5,000 ரன்களைக் கடந்து அதிவேக 5,000 ரன்கள் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இது மட்டுமல்ல, ஒருநாள் போட்டிகளில் 2000, 3000, 4000 ரன்களையும் குறைந்த இன்னிங்ஸ்களில் எடுத்த சாதனையும் ஆம்லாவுக்குரியதே. நேற்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா மழைகாரணமாக 48.2…
-
- 0 replies
- 353 views
-
-
இங்கிலாந்து அணியில் சங்ககரா ஜனவரி 16, 2015. லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் ‘கவுன்டி’ போட்டிகளில், சர்ரே அணிக்காக விளையாட, இலங்கையின் சங்ககரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணியின் அனுபவ வீரர் சங்ககரா, 37. சமீபத்தில் டெஸ்ட் அரங்கில் 12 ஆயிரம் ரன்களை கடந்த இவர், அடுத்த மாதம் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க உள்ளார். இதனையடுத்து இவரை, இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் ‘கவுன்டி’ போட்டிகளில் விளையாட, சர்ரே அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அணிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாட உள்ள இவர், இந்த ஆண்டு நடக்கவுள்ள ‘கவுன்டி’ சீசனில் நிறைய போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவர், ‘கவுன்டி’ போட்ட…
-
- 1 reply
- 433 views
-
-
24ஆம் திகதி அஜ்மலுக்கு அக்கினிப் பரீட்சை விதிமுறைகளுக்கு முரணாகப் பந்துவீசுகிறார் என்பது நிரூபிக்கப்பட்டதால் பந்துவீசுவதற்கு தடைசெய்யப்பட்டிருக்கும் பாகிஸ்தான் அணி வீரர் சயிட் அஜ்மல், வரும் 24ஆம் திகதி சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி.யின் பந்துவீச்சுப் பரிசோதனையில் பங்குகொள்கிறார். இந்தப் பரிசோதனைக்கு கடந்த டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தபோதிலும் அஜ்மல் முழுமையாகத் தயாராகாததால், திகதியை பின்போடுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்திருந்தது. அதனையடுத்து ஐ.சி.சி.யினால் ஜனவரி 24 இற்கு பரிசோதனை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தப் பரிசோதனையில் அஜ்மல் தனது புதிய பந்துவீச்சுமுறை, விதிகளுக்கு அமைவானது என நிரூபிப்பாராகவிருந்தால் அவர்ம…
-
- 5 replies
- 543 views
-
-
உலகக்கிண்ணத்தில் சிறப்பாக செயற்பட்ட அணி இலங்கை கடந்த காலங்களில் இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிக நூறு ஓட்டங்களை எடுத்த அணியாக இலங்கையணி பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் இலங்கையணி 61 வீரர்கள் உலகக்கிண்ண போட்டியில் நூறு ஓட்டங்களை பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாது கடந்த காலங்களில் உலகக்கிண்ண போட்டிகளில் துடுப்பாட்டம், பந்து வீச்சு, மற்றும் களத்தடுப்பில் மிகச்சிறப்பாக செயற்பட்ட வீரர்களை கொண்ட அணியாகவும் இலங்கையணி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=118123810415630183#sthash.q1Sl7nIf.dpuf
-
- 1 reply
- 417 views
-
-
கேவிக் கேவி அழுத கெவின் பீ்ட்டர்சன் லண்டன்: இங்கிலாந்து அணியிலிருந்து தன்னை நீக்கிய செய்தியைக் கேள்விப்பட்டதும் தான் அழுததாக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். தற்போது இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சன் இல்லை. அவரை நீக்கி விட்டனர். அவரது நீக்கம் அப்போது இங்கிலாந்து அணியில் சலசலப்புகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் போட்டிகளை ஆட இங்கிலாந்து போயிருந்தது. அபபோது ஐந்து போட்டிகளிலும் அது தோல்வியைத் தழுவியது. இதனால் பெரும் சர்ச்சைக்குள்ளானது இங்கிலாந்து அணி. கேவிக் கேவி அழுத கெவின் பீ்ட்டர்சன் இதையடுத்து கெவின் பீ்ட்டர்சனை அதிரடியாக நீக்கியது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு. இதுகுறித்து தற்போது கருத்து தெ…
-
- 0 replies
- 537 views
-
-
நொந்து போன ‘கீப்பர்’ நுாயர் ஜனவரி 14, 2015. ஜூரிச்:‘‘உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது, எங்களைப் போன்ற கோல் கீப்பர்களுக்கு கிடைப்பது சிரமம்,’’ என, மானுவல் நுாயர் தெரிவித்தார். சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது இறுதி பட்டியலில் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி, உலக கோப்பை வென்ற ஜெர்மனி அணி கோல்கீப்பர் மானுவல் நுாயர் என, 3 பேர் இடம் பெற்றனர். இதில் ரொனால்டோ முதலிடம் (37.66 சதவீதம்) பெற்று விருதை தட்டிச் சென்றார். மெஸ்சி (15.76), நுாயர் (15.72) அடுத்த இரு இடங்கள் பெற்றனர். இதுகுறித்து நுாயர் வேதனையுடன் கூ…
-
- 0 replies
- 410 views
-
-
பயிற்சியாளரை தேர்வு செய்ய கோஹ்லிக்கு அதிகாரம் ? ஜனவரி 14, 2015. மெல்போர்ன்: விராத் கோஹ்லிக்கு இந்த பொங்கல் மிகவும் சிறப்பானது. டெஸ்ட் அணியின் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்த இவரை சுற்றித் தான் இந்திய அணியின் எதிர்காலம் உள்ளது. இவர் கை காட்டும் நபரை தான் புதிய பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியின் இளம் நட்சத்திரம் விராத் கோஹ்லி, 26. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடிலெய்டு, சிட்னி போட்டியில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். களத்தில் இவரது ஆக்ரோஷ செயல்பாடு அனைவரையும் கவர்ந்தது. 4 டெஸ்டில் 692 ரன்கள் குவித்த இவர், கேப்டன் பதவி தனது பேட்டிங்கை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை நிரூபித்தார். …
-
- 0 replies
- 513 views
-
-
இயன் பெல் 187 ரன்கள் விளாசல்; 50 ஓவர்களில் 391 ரன்கள் குவித்த இங்கிலாந்து வெற்றி முத்தரப்பு ஒருநாள் தொடருக்கு முன்பான ஒருநாள் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணியை இங்கிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்து அணிக்கு இயன் மோர்கன் கேப்டன், ஆஸி. பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு மைக் ஹஸ்ஸி இல்லாததால் கிறிஸ் ராஜர்ஸ் கேப்டனாக செயல்பட்டார். கான்பராவில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து இயன் பெல்லின் அதிரடி 187 ரன்கள் மூலம் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஆஸி. பிரைம் மினிஸ்டர் லெவன் அணி அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெல் 89 பந்துகளில் 136 ரன்களை விளாசியும் 60 ரன்கள் …
-
- 0 replies
- 688 views
-
-
விளையாட்டுச் செய்திச் சாரல்கள்... # ஆஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டி ‘ஏ’ பிரிவில், ஆஸ்திரேலியா ஓமன் அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. # பார்முலா ஒன் கார் கிராண்ட் பிரீ கார்பந்தயத்தில் 2015-க்கான பட்டியலில் கொரியாவில் பந்தயம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் நிதி நெருக்கடி காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு 20 சுற்றுக்கள் மட்டுமே போட்டி நடைபெறும். # ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரைச் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதை, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ‘இந்நாளை என்றும் மறக்கமாட்டேன்’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார். …
-
- 0 replies
- 346 views
-
-
இந்தியாவில் திறமையான பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சம்: டிராவிட் வருத்தம் இந்திய அணிக்குத் தேவைப்படும் அளவுக்கு, திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் தற்போது இல்லை. உள்ளூர் போட்டி களிலும் எதிர்பார்த்த அளவுக்கு திறமையுள்ள பந்துவீச்சாளர்கள் தற்போது இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: விராட் கோலியைப் பற்றி இப்போதே கணிக்கக் கூடாது. ஆனால், தன்னால் தலைமை யேற்க முடியும் என நிரூபித்திருக் கிறார். ஆஸ்திரேலிய தொடரில் அவரின் தனிப்பட்ட செயல்பாடு களை அவருடைய பலமாகக் கருதுகிறேன். இந்திய கிரிக்கெட் அணிக்கு நீண்ட கேப்டனாகச் செயல்பட அவரை அணி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். இந்திய அணியின் பேட்டிங் வரிசை நன்றாகவ…
-
- 0 replies
- 317 views
-
-
தேறாத பந்து வீச்சும் மாறாத அணுகுமுறையும் இந்தியாவின் மட்டை வலு எவ்வளவுதான் கூடினாலும் 20 விக்கெட்களை வீழ்த்தக்கூடிய பந்து வீச்சு இல்லாமல் வெற்றிகளைக் குவிப்பது பற்றிக் கனவு காண முடியாது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவை இரண்டு முறை மட்டுமே இந்தியாவால் முழுக்க ஆட்டமிழக்கச் செய்ய முடிந்திருக்கிறது. அந்த இரண்டு சமயங்களிலும் ஆஸ்திரேலியா 500 ரன்களைக் கடந்த பிறகே ஆட்டமிழந்தது. இந்தியாவால் சில சமயங்களில் வெற்றிக்கு அருகே செல்ல முடிந்தது என்றால் அதற்கு ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்ததுதான் காரணம். பந்து வீச்சின் மூலம் இந்தியா அந்த நிலையை எட்டவில்லை. பிரிஸ்பேனில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே இந்திய வேகப்பந்து வீச்சு வீரியத்துடன் வெளிப்பட்டது (130-6). மற்ற சமயங்களில் யார் வேண்டுமான…
-
- 1 reply
- 554 views
-
-
இந்திய பவுலர்களின் மோசமான வீச்சுக்கு கேப்டன்களே காரணம்: இயன் சாப்பல் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னேற்றத்தைத் தடுப்பது கேப்டன்களின் தவறான அணுகுமுறையே என்கிறார் இயன் சாப்பல். இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் கூறியிருப்பது வருமாறு: "உத்தி ரீதியாக, வலுவான இளம் பேட்ஸ்மென்களை சர்வதேச கிரிக்கெட்டிற்கு கொண்டு வருவதில் இந்தியா மற்ற கிரிக்கெட் நாடுகளை விட பல மைல் தூரம் முன்னால் உள்ளது. இது ஆஸ்திரேலியா, மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற வலுவான அணிகளுக்கே பொறாமை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், கேப்டன்சி, பவுலிங், அருகில் கேட்ச் பிடித்தல் ஆகிய பிரிவுகளில் இந்தியா இன்னும் சில தூரம் செல்ல வேண்டியுள்ளது. இந்திய பந்துவீச்சி…
-
- 0 replies
- 890 views
-
-
டெஸ்ட் தொடரை இழந்ததை வைத்து இந்திய அணியை குறைவாக எடை போடவேண்டாம்: மைக் ஹஸ்ஸி எச்சரிக்கை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததை வைத்து இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் குறைவாக எடைபோட வேண்டாம் என்று மற்ற அணிகளை மைக் ஹஸ்ஸி எச்சரித்துள்ளார். அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை போட்டிகளின் போது இந்திய அணி தங்கள் சாம்பியன் தகுதியை தக்க வைக்க கடுமையாக விளையாடும் என்பதை மறந்து விட வேண்டாம் என்று கூறுகிறார் ஹஸ்ஸி. "இந்திய அணிக்கு உள்ள மிகப்பெரிய அனுகூலம் என்னவெனில் ஆஸ்திரேலிய மைதானங்களில் 2 மாதங்களாக விளையாடி வருகின்றனர். இப்போது அவர்கள் இங்குள்ள பல்வேறு சூழ்நிலைகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருப்பார்கள். அதாவது பிட்ச்களின் வேகம் மற்றும் பவுன்ஸிற்கு அந்…
-
- 0 replies
- 629 views
-
-
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. மகிழ்ச்சியும் வருத்தமும் டெஸ்ட் போட்டிகளில் கடைசி நாளன்று மட்டை பிடித்து நிற்பது சவாலான விஷயம். பந்து வீசப்படும் களத்தில் பல விரிசல்கள் ஏற்பட்டிருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் ஓடிய கால் தடங்கள் பிட்சின் மீது ஏற்படுத்திய சிறு பள்ளங்கள் பந்து தாறுமாறாக எகிறவும் கூடுதலாகத் திரும்பவும் உதவும். ஒரு பந்து எதிர்பார்ப்புக்கு மேல் எழும். இன்னொறு நினைத்ததைவிட அதிகம் தாழும். வழக்கமான உத்திகளை வைத்துக்கொண்டு கரைசேர்ந்துவிட முடியாது. இத்தகைய ஐந்தாவது நாளில் ஆடும் வாய்ப்பு இந்தியாவுக்கு இந்தத் தொடரில் மூன்று முறை கிடைத்தது. மூன்றிலுமே இந்தியா மெச்சத்தக்க விதத்தில் ஆடியது. ஒன்றில் தோல்வி என்றாலும் தீரமான போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த …
-
- 0 replies
- 383 views
-
-
டெஸ்ட் தரவரிசை: சங்ககாரா மீண்டும் முதலிடம் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசை பட்டியலில் இலங்கையின் குமார் சங்ககாரா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சங்ககாரா 203 ரன்கள் எடுத்தார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதே டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்த நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்தார். இது தரவரிசையில் அவரது அதிகபட்ச முன்னேற்றமாகும். இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி 3 இடங…
-
- 0 replies
- 354 views
-
-
இந்தியாவின் மனநிலை மாறுமா * மனம் திறக்கிறார் கும்ளே புதுடில்லி: ‘‘வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடர்களின் போது பவுலர்களை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் மனநிலை மாற வேண்டும். மூன்று ‘வேகங்கள்’, ஒரு ‘ஸ்பின்னர்’ என்ற ‘பார்முலா’ எப்போதும் கைகொடுக்காது,’’ என, கும்ளே தெரிவித்தார். சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரில், இந்திய அணி வீரர்கள் ஒரு போட்டியில் கூட, ஆஸ்திரேலிய அணியில் 20 விக்கெட்டுகளையும் முழுமையாக வீழ்த்தவில்லை. இதனால், பேட்டிங்கில் அசத்திய போதும், டெஸ்ட் தொடரை இழக்க நேரிட்டது. இதுகுறித்து இந்திய அணி சார்பில் ஒருநாள் (337) மற்றும் டெஸ்ட் (619) போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய, ‘சுழல்’ ஜாம்பவான் கும்ளே, 44, கூறியது: இந்திய அணியில் …
-
- 0 replies
- 681 views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறந்த உதைபந்தாட்ட வீரர் 2014 உலகின் சிறந்த உதைபந்தாட்ட வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பான பிபா சார்பில் நடந்த விழாவில் உலகின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ(37,66%) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 2008 ஆம் ஆண்டிற்குப்பின்னர் சென்ற ஆண்டும் இந்த விருதைப்பெற்றுக்கொண்ட ரொனால்டோ 2014 ஆம் ஆண்டுக்கான விருதை மீண்டும் தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ஆர்ஜென்ரீனாவின் விளையாட்டு வீரர் லயனல் மெஸ்சி(15,76%) மற்றும் ஜேர்மன் நாட்டின் மானுவெல் நோயர்(15,72%) ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்த விருதை அடைந்துள்ளார். உலகின் சிறந்த உதைபந்தாட்டப் பயிற்சியாளராக …
-
- 2 replies
- 832 views
-
-
1,000 போட்டிகளில் வென்று ரோஜர் பெடரர் சாதனை டென்னிஸ் விளையாட்டில் ஆயிரம் போட்டிகளில் வென்ற மூன்றாவது நபர் என்ற சாதனையை ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் பெற்றுள்ளார். உலக ஒற்றையர் தரவரிசையில் 2-வது இடத்திலுள்ள பெடரர், நேற்று நடைபெற்ற பிரிஸ்பென் சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில், உலகின் 8-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பெடரர் பெறும் 1,000வது வெற்றி இதுவாகும். ரயோனிக்கை அவர், 6-4, 6-7(2), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். டென்னிஸ் வரலாற்றில் 1,000 போட்டிகளில் வெற்றி பெறும் மூன்றாவது நபர் பெடரர் ஆவார். முன்னதாக, அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் (1253), இவான் லெண்டில் (1071) ஆகியோர் 1,000 போட்டிகளில் வென்றுள்ளனர். பெடரர்…
-
- 1 reply
- 411 views
-
-
ஒருநாள் போட்டிகளிலிருந்து மிஸ்பா ஓய்வு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் மிஸ்பா உல்ஹக் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பிறகு சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் இருபதுக்கு 20 போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு டெஸ்டில் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். 40 வயதான மிஸ்பா கடந்த 2002 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4669 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/01/12/%E0%…
-
- 0 replies
- 484 views
-
-
டி20 கிரிக்கெட்: கிறிஸ் கெய்ல் சிக்சர் மழையில் மூழ்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டவுனில் நேற்று இரவு நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா-மே.இ.தீவுகளுகு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெய்ல் அதிரடியில் மே.இ.தீவுகள் வெற்றி பெற்றது. ஆம்லா, டிவிலியர்ஸ், டேல் ஸ்டெய்ன், மோர்கெல் என்று முன்னிலை வீரர்கள் இல்லாத அணியை டு பிளேசி வழிநடத்தினார். மே.இ.தீவுகளுக்கு டேரன் சமி கேப்டன். டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. டுபிளேசி 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 38 ரன்கள் விளாசி அவுட் ஆனார். புதிய அதிரடி வீரர் ரூஸோ 40 பந்துகளில் 51 ரன்களை எடுக்க பிஹார்டீன் 18 ரன்களையும் டேவிட் மில்லர் 24 ரன்…
-
- 7 replies
- 759 views
-
-
இந்திய அணிக்கு முற்றிலும் புதிய பந்துவீச்சாளர்கள் தேவை: சுனில் கவாஸ்கர் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இழந்த இந்திய அணிக்கு முற்றிலும் புதிய பந்துவீச்சாளர்கள் தேவை என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். என்.டி.டி.வி.-க்கு கவாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2-வது டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா அணி இந்திய பந்து வீச்சை ஒன்றுமில்லாமல் அடித்துள்ளது. 2011-12-இல் பவுலர்கள் எப்படி செயல்பட்டனரோ அப்படித்தான் இந்தத் தொடரிலும் செயல்பட்டனர். 20 விக்கெட்டுகளை வீழ்த்த விருப்பம் இருப்பதாக அவர்களிடத்தில் நான் எதையும் காணவில்லை. எனவே தற்போதுள்ள பவுலிங் யூனிட்டை அணியில் வைத்திருப்பது கூடாது. உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றலாம், ஆனால், …
-
- 0 replies
- 321 views
-
-
ஆஸ்திரலியா எதிர் இங்கிலாந்து 16 ஜனவரி சிட்னி ஆஸ்திரேலியா எதிர் இந்தியா 18 ஜனவரி மெல்போர்ன் இங்கிலாந்து எதிர் இந்தியா 20 ஜனவரி பிரிஸ்பேன் ஆஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து 23 ஜனவரி ஹோபார்ட் ஆஸ்திரேலியா எதிர் இந்தியா 26 ஜனவரி சிட்னி இங்கிலாந்து எதிர் இந்தியா 30 ஜனவரி பேர்த் இறுதி போட்டி 01 பிப்ரவரி பேர்த்
-
- 35 replies
- 1.7k views
-
-
ஒரு பந்தில் 7 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்திய வீரர் தென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிரேக் பிராத்வெய்ட் ஒரே ஒரு பந்தில் 7 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளார். தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி கேப்டவுண் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. அந்தப் போட்டியில் தான் இந்த உலக சாதனை அரங்கேறியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணிவீரர் கிரேக் பிராத்வெய்ட் தனக்கு வந்த பந்தை வேகமாக அடித்து விரட்டி உடனடியாக ஓட்டங்கள் எடுக்க ஓடினார். அப்படி ஓடியே அவர் 3 ஓட்டங்களை எடுத்து விட்டார். அந்த சமயம் பந்தை வசப்படுத்திய தென்னாபிரிக்க விக்கெட் கீப்பர் ஏப் டிவில்லியர்ஸ், அதை ஸ…
-
- 0 replies
- 1.2k views
-
-
அயல்நாட்டுப் பிட்ச்களில் வீசும் முறையைக் கற்க வேண்டிய நிலையில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் இதுவரை 24 போட்டிகளில் 115 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் இந்தியாவில் மட்டும் 95 விக்கெட்டுகளை 15 போட்டிகளில் கைப்பற்றியுள்ளார். இந்தியாவில் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமான, புழுதி நிறைந்த ஆட்டக்களங்களில் மட்டுமே அவரால் ஆஃப் ஸ்பின்னர்களை திறமையாக வீச முடிகிறது என்பதை இது காட்டுகிறது. அவரது பிரச்சினை என்னவென்று பார்த்தால் அவர் வீசும் திசை மற்றும் லெந்த், அவர் கேட்கும் களவியூகம் என்று அயல்நாடுகளில் அவரால் திறம்பட வீச முடியாமல் இருப்பதே. அதுவும் பிரிஸ்பன், மெல்பர்ன், தற்போது சிட்னி ஆகிய டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் பந்து வீச்சு எரிச்சலைக் கிளப்புவதாகவே…
-
- 0 replies
- 644 views
-
-
திங்கள்கிழமை உலக ஜூனியர் சம்பியன் போட்டியில் தோல்வியடைந்து தங்க பதக்கததை இழந்தத பின்னர் ரஷ்ய அணியை சேர்ந்த சியாற் பெய்ஜின் ஆபத்தான வழியில் தன் பொறுமையை இழந்தார். கனடிய அணியினர் தங்கள் வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கையில் 19-வயதுடைய குறிப்பிட்ட ரஷ்ய வீரர் தனது குச்சியை ஒரு ரசிகரை தாக்கும் வண்ணம் அரங்கத்தில் எறிந்துள்ளார். இந்த தங்கப்பதக்க போட்டியில் கனடா 5-4 ஆக ரஷ்ய அணியை வென்றது. கனடியர்களின் வெற்றி கொண்டாட்டத்தின் போது கனடிய வீரர் ஒருவரும் தனது குச்சியை மேல் நோக்கி வீசியுள்ளார். பெய்ஜின் நீல கோட்டிற்கு சறுக்கிச் சென்று தனது குச்சியை கண்ணாடி மீது வீசினார். ஜூனியர்சின் அணியை நிரவகிக்கும் சர்வதேச ஐஸ் ஹொக்கி கூட்டமைப்பு இந்த சம்பவத்திற்காக பெய்ஜின் தண்டனையை எதிர்நோக்க…
-
- 0 replies
- 236 views
-