விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தத்தை 2021 வரை நீட்டித்தார் மெஸ்சி கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்சி பார்சிலோனா உடனான ஒப்பந்தத்தை 2021 வரை நீட்டித்துள்ளார். அவரது டிரான்ஸ்பர் பீஸ் 835 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனாக திகழும் லயோனல் மெஸ்சி இந்த தலைமுறையின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப் ஆன பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். தனது ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த கிளப்பிற்காகத்தான் விளையாடி வருகிறார். தொடர்ந்து அணியில் இடம்பிடித்து வந்தாலும் அவரது ஒப்பந்தம் குறிப்பிட…
-
- 0 replies
- 317 views
-
-
வருகை தரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு நியூஸி. கேப்டனின் எளிய அறிவுரை கேன் வில்லியம்சன். | படம்: ஏ.பி. வரும் மாதங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருப்பதை முன்னிட்டு நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் எளிய ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். இந்திய அணியிடம் 0-3 என்று ஒயிட்வாஷ் ஆன நியூஸிலாந்து 3 டெஸ்ட் போட்டிகளிலும் டாஸில் தோல்வியுற்று டெஸ்ட்டிலும் தோல்வி தழுவியது. இந்திய பிட்ச்களில் முதலில் பேட் செய்யும் சாதகங்களைக் குறிப்பிட்டு கேன் வில்லியம்சன் கூறும்போது, “டாஸில் வெல்வது உதவியாக இருக்கும். நிச்சயம் அணிகள் இந்திய அணிக்கு எதிராக தங்களது சிறப்பான ஆட்ட்த்திறனை வெளிப்படுத்துவது அவ…
-
- 0 replies
- 317 views
-
-
இந்திய அணியில் 4-ம் இடத்துக்கு பொருத்தமான பேட்ஸ்மேன் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ், ரோஹித்?- என்ன சொல்கிறார் மஞ்ச்ரேக்கர் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர்: கோப்புப்படம் இந்திய அணியில் நடுவரிசையில் முக்கியமான 4-ம் இடத்தில் யாரைக் களமிறக்குவது என்பது பல்வேறு விதத்தலும் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு வரும் நிலையில், ரோஹித் சர்மா, ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், விராட் கோலி ஆகியோரில் ஒருவரை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பரிந்துரை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொருவரையும் எந்த இடத்தில் களமிறக்கினால், எப்படி இருக்கும் என்பதையும் விளக்கியுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி …
-
- 0 replies
- 316 views
-
-
கிரிக்கெட் கௌன்சிலின் பிரதித் தலைவர் இலங்கை வருகிறார்.. சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் பிரதித் தலைவர் இம்ரான் க்வாஜா நாளை (09.05.2023) இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு பற்றிய குற்றச்சாட்டு குறித்த உண்மையைக் கண்டறிவதற்கு இலங்கை வரவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன்போது அவர் விளையாட்டுத் துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அரசியல் தலையீடு குறித்து இலங்கை கிரிக்கெட் சபையிடம் இருந்து வந்த தொடர்ச்சியான முறைப்பாட்டை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் ஜெய் ஷா தலைமையிலான மூவர் கொண்ட குழுவை ஐ.சி.சி நியமித்ததாக கூறப்படுகிறது. …
-
- 1 reply
- 316 views
-
-
சிந்திக்க முடியாதது, ஏற்றுக் கொள்ள முடியாதது, மன்னிக்க முடியாதது: கிரெக் சாப்பலை விளாசிய ‘தாதா’ கங்குலி கங்குலி, கிரெக் சாப்பல். - கோப்புப் படம். | வி.கணேசன். ‘எ செஞ்சுரி இஸ் நாட் இனஃப்’ என்ற சுயசரிதை புத்தகத்தில் இந்திய முன்னாள் கேப்டன் ‘தாதா’ கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கிரெக் சாப்பலை கடுமையாகச் சாடியுள்ளார். கிரெக் சாப்பல் பயிற்சியாளராக வருவதை பெரிதும் விரும்பியவர் கங்குலி, ஆனால் கங்குலி கேப்டன்சி போனதோடு, அணியிலும் நீடிக்க முடியாத நிலை கிரெக் சாப்பல் பயிற்சி காலக்கட்டத்தில் அவருக்கு ஏற்பட்டது. 2005 முதல் 2007 உலகக்கோப்பை வரை …
-
- 0 replies
- 316 views
-
-
வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், ட்ரோய் அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில் ட்ரோய் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, அஞ்சல் டி மரியா, கிறிஸ்டோபர் எனக்குங்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இப்போட்டியில் காயம் காரணமாக நேமர், கிலியான் மப்பே ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை. இதேவேளை, நேமருக்கு வெற்றிகரமாக நேற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், நேமர் குணமடைய இரண்டரை தொடக்கம் மூன்று மாதங்கள் வரையில் செல்லும் என பிரேஸில் தேசிய கால்பந்தாட்ட அணியின் வைத்தியர் றொட்றிகோ லஸ்மர் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 316 views
-
-
முதல் ஒருநாள் கிரிக்கெட்: வெ.இண்டீசை 45 ரன் வித்தியாசத்தில் வீழத்தியது இங்கிலாந்து வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மோர்கனின் சதத்தால் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டி கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ராய், பில்லிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராய் 13 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜோ…
-
- 0 replies
- 316 views
-
-
விம்பிள்டன் தரவரிசைகள் வெளியிடப்பட்டன இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசைகள் (seeds) வெளியிடப்பட்டுள்ளன. ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர் போட்டிகளுக்கான தரவரிசைகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, உலகின் முதல் 3 வீரர்களான நொவக் ஜோக்கோவிச், அன்டி மரே, ரொஜர் பெடரர் ஆகியோர், முதல் 3 தரவரிசைகளையும் பெற்றுள்ளனர். 4ஆம் நிலை வீரரான ரபேல் நடால், இத்தொடரில் பங்குபெற மாட்டார் என்பதால், 5ஆம் நிலை வீரரான ஸ்டான் வவ்றிங்கா, 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். 5ஆவது இடத்தில் ஜப்பானின் கீ நிஷிகோரியும் 6ஆவது இடத்தில் கனடாவின் மிலோஸ் றாவோனிக்கும் 7ஆவது இடத்தில் பிரான்ஸின் றிச்சர்ட் கஸ்கட்டும் காணப்படுகின்றனர். ப…
-
- 0 replies
- 316 views
-
-
கவாஸ்கர், சச்சின், திராவிடுடன் இணைந்த விராட் கோலியின் சாதனை சதம் மும்பை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் எடுத்த விராட் கோலி. | படம்.| பிடிஐ. இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் இன்று அதிதிறமை வாய்ந்த ஒரு சதம் எடுத்து 147 ரன்களுடன் ஆடி வரும் விராட் கோலி இதன் மூலம் சிலபல சாதனைகளைப் புரிந்துள்ளார். சாதனைத்துளிகள் வருமாறு: 1. இந்திய கேப்டன் ஒருவர் ஒரே தொடரில் 500 ரன்களை எடுத்தவகையில் விராட் கோலி, சுனில் கவாஸ்கருடன் இணைந்துள்ளார். கவாஸ்கர் இதனை இருமுறை சாதித்துள்ளார், மே.இ.தீவுகளுக்கு எதிராக 1978-79 தொடரில் கேப்டனாக கவாஸ்கர் 732 ரன்களை எடுத்தார், பிறகு 1981-82 தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 500 ர…
-
- 0 replies
- 316 views
-
-
கால்பந்தாட்ட தடையை நீக்கிய ஃபிஃபா! – இந்தியாவில் நடைபெறுகிறது பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து! இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஃபிஃபா விதித்த தடை நீக்கப்பட்டதால் இந்தியாவில் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மௌனமான பிபா கால்பந்து போட்டிகளை ஒன்றிணைக்கிறது. சமீபத்தில் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கலைத்த உச்சநீதிமன்றம், கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்காக 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. புதிய நிர்வாகிகள் நியமனம் வரை இந்த 3 பேர் குழுவே கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 316 views
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு பத்ம பூஷண் விருது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புது டெல்லி: ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம பூஷண் விருது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு அறிவிக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 316 views
-
-
நல்லது, கெட்டது இரண்டும் கலந்த 2014-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் சாதனை 264 ரன்கள், எப்போது முடியும் என்று கேள்வி எழுப்பும் அயல்நாட்டுத் தோல்விகள், ஐபிஎல்-6-ல் குறித்த நீதிமன்ற வழக்குகள், பிசிசிஐ-யிலிருந்து சீனிவாசன் விலகியிருக்கக் காரணமான ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டுகள் என்று 2014-ல் இந்திய கிரிக்கெட் பன்முகம் எய்தியுள்ளது. ஈடன் கார்டனில் ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் எடுத்த அதிகபட்ச 264 ரன்கள் சாதனை இந்த ஆண்டின் பிரதான கிரிக்கெட் உற்சாகமாகும். 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அணி 264 ரன்கள் எடுத்தால் அது வெற்றிக்கான ஸ்கோர் என்ற நிலை மாறி ஒரு தனிப்பட்ட வீரர் 264 ரன்கள் என்பதாக ஒருநாள் கிரிக்கெட் வளர்ச்சி கண்…
-
- 0 replies
- 316 views
-
-
யூனிஸ்கான் கிரிக்கெட்டில் ஜொலிக்கிறார்...சொந்த வாழ்க்கையில் அழுகிறார்! பாகிஸ்தான் அணியின் தற்போதைய மூத்த வீரர் யூனிஸ் கான், அண்மையில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்தார். கடந்த 2000ஆம் ஆண்டு இலங்கைக்கு அணிக்கு எதிராக களமிறங்கிய அவர், தொடர்ந்து 15 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஆனால் யூனிஸ் கானின் சொந்த வாழ்க்கை, சோகம் ததும்பியது. தந்தை, இரு சகோதரர்கள், சகோதரி என அடுத்தடுத்து அவர் வீட்டில் நிகழ்ந்த மரணங்கள் யூனிஸ் கானை உலுக்கி எடுத்தன. தற்போது 37 வயதான யூனிஸ்கானின் தந்தை இறந்த போது, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தார். தந்தை இறந்ததை தொடர்ந்து தாய்நாடு திரும்பினார். தொடர்ந்து உக்ரேனில் நடந்த கார் விபத்தில் யூனிஸ் கானின் மூ…
-
- 0 replies
- 316 views
-
-
அஸ்வின் பந்துவீச்சில் அதிகமுறை ஆட்டமிழந்த பேட்ஸ்மேனும் ஒருமுறைகூட வீழ்த்தமுடியாதவர்களும்! இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி, மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இன்று தொடங்கியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று, இலங்கை பேட்ஸ்மேன் லஹிரு திரிமானே 9 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். இதையடுத்து அஸ்வின் வீழ்த்திய பேட்ஸ்மேன்களில் அதிகமுறை அவுட் ஆனவர் என்கிற ஒரு பெயர் திரிமானேவுக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு அஸ்வின் பந்துவீச்சில் அதிகமுறை ஆட்டமிழந்தவர்களாக (11) திரிமானேவும் வார்ன…
-
- 2 replies
- 316 views
-
-
குசாலுக்கு நான்கு வருடத் தடை: அமைச்சர் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான குசால் ஜனித் பெரேராவுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபையால் நான்கு வருடத் தடை விதிக்கப்பட்டுள்ள, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனினும், சர்வதேச கிரிக்கெட் சபையால் இதுவரை, இது உறுதிப்படுத்தப்படவில்லை. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியிருந்தார் என, முதலாவது பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த அவர், நியூசிலாந்துத் தொடரிலிருந்து மீள அழைக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது மாதிரிப் (பி மாதிரி) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே கருத்துத் தெரிவித்துள…
-
- 0 replies
- 316 views
-
-
மைக்கேல் கிளார்க் 66666... அது என்ன? டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 66 ஆயிரத்து 666வது விக்கெட்டாக ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் அவுட் ஆகியுள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஷஸ் தொடருக்கான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 566 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க், 7 ரன்கள் எடுத்த நிலையில் வுட் பந்துவீச்சில் பல்லான்சிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 66 ஆயிரத்து 666வது விக்கெட்டாக மைக்கேல் கிளார்க் அவுட் ஆனதுதான் சிறப்பம்சம். இந்த போட்டியில் 2வது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்களை இழந்து தடுமாறி வருகிறது. http://…
-
- 1 reply
- 316 views
-
-
10 வருடங்களுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகும் இலங்கை 2018 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி பல கிரிக்கெட் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு விளையாடவுள்ளது. இதில் முதலாவதாக இலங்கை அணி எதிர்வரும் ஜனவரி மாதம் நடுப்பகுதியில் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 2 டி20 மற்றும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. இதனையடுத்து இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்பு டி20 போட்டித் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சுமார் 10 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தை எதிர்வரும் மே…
-
- 0 replies
- 316 views
-
-
தலைசிறந்த வீரராக தோனியை கிரிக்கெட் வரலாறு பதிவுசெய்துகொள்ளும்!’ - ரவி சாஸ்திரி புகழாரம் 'கிரிக்கெட் உலகம் கண்ட தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரராக, வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருப்பார் தோனி' என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். Photo Credit: Twitter/RaviShastriOfc சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி மொத்தம் 69 ரன்கள் எடுத்தார். இதனால், தோனியின் பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஒருநாள் தொடருக்கு அடுத்தபடியாக நடந்த 3 போட்டிகள்கொண்ட டி20 தொடரில், 80 ரன்கள் எடுத…
-
- 0 replies
- 316 views
-
-
மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்! கொல்கத்தா: மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். இவர் மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராகவும் பதவி வகித்து வந்தார். அவரது மறைவை தொடர்ந்து அந்த பதவியும் காலியாக இருந்தது. இந்நிலையில், மேற்கு வங்க கிரிக்கெட் சங்க இணைச்செயலாளராக பதவி வகித்து வந்த சவுரவ் கங்குலி, மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக நியமிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். http://www.vikatan.com/news/article.php?aid=52843
-
- 0 replies
- 316 views
-
-
உலகக் கிண்ண வலைப்பந்தாட்டம் சிட்னியில் ஆரம்பம் : ஆசியாவின் முதல் நிலை நாடுகள் இன்று மோதல் சர்வதேச வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் மேற்பார்வையில் அவுஸ்திரேலிய வலைப் பந்தாட்ட சங்கம் முன்னின்று நடத்தும் 14ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகள் சிட்னி ஒலிம்பிக் பார்க் உள்ளக அரங்கில் இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. 10 தடவைகள் சம்பியனானதும் நடப்பு சம்பியனுமான அவுஸ்திரேலியா, முன்னாள் சம்பியன்களான நியூஸிலாந்துஇ ட்ரினிடாட் அண்ட் டுபாகோ ஆகியன உட்பட 16 நாடுகள் இவ் வருட உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுகின்றன. முன்னாள் ஆசிய சம்பியனான இலங்கை தனது முதலாவது போட்டியில் நடப்பு ஆசிய …
-
- 0 replies
- 316 views
-
-
தங்கப்பந்து விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மெஸ்ஸி, ரொனால்டோ பெயர்கள் இந்த ஆண்டுக்கான பல்லான் டி. ஆர் விருதுக்கு (தங்கப்பந்து) ரியல்மாட்ரிட் அணியின் ரொனால்டோ, பார்சிலோனா வீரர் மெஸ்ஸி உள்ளிட்ட 23 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. உலக கால்பந்து சம்மேளனம் ஒவ்வொரு ஆண்டும், சிறந்த கால்பந்து வீரருக்கு 'பல்லான் டி ஆர்' விருது வழங்கி வருகிறது. கடந்த ஆண்டுக்கான இந்த விருதை ரொனால்டோ பெற்றார். இந்த ஆண்டுக்கான விருதுக்கு 23 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட இந்த 23 வீரர்களில் இருந்து ரசிகர்கள் இ பிபா இணையத்தளத்தில் ஒன்லைன் மூலம் வாக்களிப்பார்கள். இதில் முதல் 3 இடங்களை பெறுபவர்களில் இரு…
-
- 0 replies
- 315 views
-
-
110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதல் முறையாக ஜமைக்காவுக்கு தங்கம் ஒலிம்பிக்கில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் ஒமர் மெசிலாட் தங்கப் பதக்கம் வென்றார். 22 வயதான ஒமர் மெசிலாட் பந்தய தூரத்தை 13.05 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்கா தங்கம் வெல்வது இதுவே முதன்முறை. ஸ்பெயின் வீரர் ஓர்டேகா 13.17 விநாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கமும், பிரான்சை சேர்ந்த டிமிட்ரி பாஸ்கோவ் 13.24 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர். ஒலிம்பிக் போட்டிகளில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்கா பதக்க மேடையை தவறவிடுவது இதுவே முதன்முறையாகும். அந்த நாட்டின் தேவோன் ஆலன் 5-வது இ…
-
- 0 replies
- 315 views
-
-
இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு? இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. வீரர்களின் ஊதியம் ஏ, பி, சி என்ற மூன்று நிலைகளில் பிரிக்கப்படுகிறது. வீரர்களின் செயல்பாடு, அனுபவம் ஆகியவற்றை வைத்து வீரர்களுக்கு வீரர் சம்பளம் வேறுபடும். அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் தோனி, டெஸ்ட் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களின் அடிப்படை ஊதியம் ஒரு கோடி ஆகும். 'ஏ' பிரிவில் டோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 1 கோடி வழங்கப்படும். 1 டெஸ்ட் போட்டிக்கு ரூ. 5 லட்சமும், ஒருநாள் போட்டி ஒன்றுக்கு 3 லட்சமும் சம்பளமாக வழங்கப்படுகிறது. பிரிவு 'பி'யில் ஓஜ…
-
- 0 replies
- 315 views
-
-
மாறுவேடத்தில் சென்று கங்குலி ருசித்த கபாப்: தனியே செல்லாதீர்கள், அன்புடன் கண்டித்த பர்வேஸ் முஷாரப் சவுரவ் கங்குலி, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் - கோப்புப் படம் பாகிஸ்தானில், மாறுவேடத்தில் சென்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கபாப், பிரியாணி சாப்பிட்டுள்ளார். தனியாக செல்லாதீர்கள் என்று முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் தொலைபேசியில் கங்குலியை அழைத்து கண்டித்துள்ள ஸ்வரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தனது சுயசரிசையை எழுதியுள்ளார். “ ஏ சென்சுரி இஸ் நாட் எனப்” என்ற தலைப்பில் அந்த நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த …
-
- 0 replies
- 315 views
-
-
ஒருநாள் தொடரில் ஆஸி.க்கு முதல் ஒயிட்வாஷ்: தென் ஆப்பிரிக்கா மகத்தான 5-0 வெற்றி! தென் ஆப்பிரிக்க அணி கொண்டாட்டம். | படம்: ராய்ட்டர்ஸ் ரைலி ருசோவ்வின் அதிரடி சதத்தின் மூலம் கேப்டவுனில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 5-0 என்று தொடரைக் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா முதன்முதலாக ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு ஒயிட்வாஷ் தோல்வியைப் பெற்றுத் தந்தது. அனுபவமற்ற ஆஸ்திரேலிய பந்துவீச்சு மட்டுமல்ல, டேவிட் வார்னர் நீங்கலாக ஆஸ்திரேலிய பேட்டிங்கும் சப்பென்று ஆகி வரலாறு காணாது ஒருநாள் போட்டி ஒயிட்வாஷ் தோல்வியை அடைந்தது ஆஸ்திரேலியா. கேப்டவுனில் நேற்று நடைபெற்ற பகலிரவு ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்…
-
- 2 replies
- 315 views
-