Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியாவுடனான போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ரசிகர்கள் மற்றும் மீடியாக்களை நோக்கி ஆபாசமாக கத்தினர். இதுதொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது. 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 2–வது அரை இறுதிப்போட்டியில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தனர். இருப்பினும், இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3–4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது. இதனையடுத்து வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்கள் மகிழ்ச்சியில் நடனம் ஆடின…

  2. கார்ல்சனுடன் மோதும் தமிழக சிறுவன் உலகின் மிகப்பெரிய செஸ் இணைய தளமான செஸ்.காம் நடத்தும் போட்டியில் உலக செஸ் சாம்பியன் கார்ல்சனுடன் விளையாடும் வாய்ப்பினை தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ராஜரிஷி கார்த்தி பெற்றுள்ளார். 'ப்ளே செஸ்.காம், கார்ல்சனின் நிறுவனமான ப்ளே கார்ல்சன் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க செஸ் வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக, செஸ்.காம்-மில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற 10 நபர்களுக்கு கார்ல்சனுடன் மோதும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்வான ராஜரிஷி, இன்று செஸ்.காம் இணையதளத்தில் நடைபெறுகிற போட்டியில் கார்ல்சனுடன் மோதுகிறார். ராஜரிஷி, இந்தப் போட்டியில் பங்கே…

  3. கண்டி எனது குடும்பத்தின் ஒரு அங்கம்: ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி : தாய் மண்ணில் சங்காவின் இறுதி வார்த்தைகள் நான் பிறந்த மண்ணில் விளையாடுவது இதுவே இறுதித் தருணமாகும். கண்டி எனது குடும்பத்தின் ஒரு அங்கம். இன்று கண்டியில் உள்ள அனைவரும் இங்கு வந்துள்ளனர். எனக்கு ஆதரவு வழங்கிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என குமார் சங்கக்கார தெரிவித்தார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் 6 ஆவது போட்டி இன்று கண்டி பல்லேகலயில் இடம்பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 90 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியதோடு 4-2 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் உலகின்…

  4. 40 முறை ரஞ்சி சாம்பியனான மும்பையை வீழ்த்தி காஷ்மீர் அணி படைத்தது வரலாறு மும்பையில் நடைபெற்ற ஏ பிரிவு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 40 ஆண்டுகள் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி ஜம்மு-காஷ்மீர் அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது. மும்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்த தோல்வி அதிர்ச்சியாக பார்க்கப்பட்டாலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்த்தில் இந்த வெற்றி பெரிதாகப் பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் ஏற்பட்ட வரலாறு காணாத காட்டு வெள்ளத்தில் அங்குள்ள மைதானம் பயிற்சி செய்ய முடியாத நிலைக்குச் சென்றிருந்தாலும் போதிய வசதியின்மையுடன் கூடவே ஜம்மு அணி வலுவான மும்பையை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்ஸில் மும்பை 236 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஜம்மு-காஷ்மீர் அணி …

  5. காத்திருக்கும் பலோன் டிஓ விருதுகள் திங்கட்கிழமை, 08 டிசெம்பர் 2014 விளையாட்டு மைதானத்தில் தமது அணியின் வெற்றிக்காக போராடிய கிறிஸ்ரியானோ ரொனால்டொ, லியனல் மேசி ஆகிய இருவரும் சிறந்த பலோன் டிஓ விருதுக்கு கடும் போட்டி வீரருக்கான போட்டியிலும் முட்டி மோதுகின்றனர். இவர்களுக்குப் போட்டியாக ஜேர்மனியின் கோல்கீப்பர் மனுவல் நெயூரும் களத்தில் உள்ளார். சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த பயிற்சியாளர்களைத் தெரிவு செய்து விருது வழங்கிவருகிற‌து பீபா. 1956ஆம் ஆண்டு பலோன் டிஓ விருது அறிமுகப்படுத்தப்பட்டபோது இங்கிலாந்து வீரர் ஸ்டான்லி மத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார். 12ஆம் திகதி விருது பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்படும். சிறந்த வீரருக்கான பலோன் டிஓ விருதுக்காக சிறப்பாக செயற்பட 23 …

  6. சங்ககாரவும் ஓய்வும் திங்கட்கிழமை, 08 டிசெம்பர் 2014 சர்வதேச இருபதுக்கிருபது போட்டிகளில் இருந்து குமார் சங்ககார, ஏற்கெனவே ஓய்வு பெற்றுள்ள நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஒருநாள் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். ஆனாலும் சிரேஸ்ட வீரரான மஹேல ஜெயவர்த்தன, ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாலும் தற்போது சங்ககாரவும் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டால் இலங்கை அணியை அது பலவீனப்படுத்தி விடும் என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்தும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஏதுவாக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தேர்வாளர்களும…

  7. இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள இரண்டு போட்­டி­களைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொட­ருக்­கான இலங்கை கிரிக்கட் குழாமில் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளான கௌஷால் சில்வா, திமுத் கரு­ணா­ரட்ன, சக­ல­துறை ஆட்­டக்­காரர் டில்­ருவன் பெரேரா, விக்கட் காப்­பாளர் ப்ரசன்ன ஜய­வர்­தன ஆகியோர் மீண்டும் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர். நியூ­ஸி­லாந்­துக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடர் இம் மாதம் 26ஆம் திகதி க்றைஸ் ட்சேர்ச் மைதா­னத்தில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்தத் தொடரை முன்­னிட்டு 16 வீரர்கள் அடங்­கிய டெஸ்ட் கிரிக்கட் குழாமை இலங்கை கிரிக்கட் தெரி­வா­ளர்கள் பெய­ரிட்­டுள்­ளனர். அந்தக் குழாமில் அஞ்­சலோ மெத்…

  8. கனடியர்கள் மத்தியில் பிரபலமான Ice Dancing என்ற விளையாட்டில் தமிழ் யுவதியான பிரியா ரமேஷ் அண்மைக் காலத்தில் தனி முத்திரை பதித்து வருகின்றார். தனது Ice Dancing துணையான Brandon Lebelleஉடன் கனடா ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் பிரியா ரமேஷ். தாயகத்தில் இளவாலையை பூர்வீகமாக கொண்ட பிரியா ரமேஷ் திரு.திருமதி.ரமேஷ்-சிவாஜினி தம்பதியினரின் புதல்வியாவார். தேசிய ரீதியில் தொலைக்காட்சியில் இனிவரும் காலங்களில் பிரியா ரமேஷ் தனி முத்திரை பதித்து.வளர்ச்சி பெறுவார் என கூறப்படுகின்றது. அத்துடன் ஒலிம்பிக் போட்டியில் ஈடுபடுவதை குறிக்கோளாக கொண்டுள்ள பிரியா ரமேஷ் கனடாவிற்காக பதக்கம் பெற்று கனடாவிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க எமது வாழ்த்துக்கள், - See more at: http://www.canadamirro…

    • 15 replies
    • 1.7k views
  9. பாகிஸ்தானுக்கு வெற்றி செவ்வாய்க்கிழமை, 09 டிசெம்பர் 2014 பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகளுக்கிடையில், டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று (08) நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டியில், பாகிஸ்தான் அணி 3 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் நியூஸிலாந்து அணியினை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. நியூஸிலாந்து அணி சார்பில் ரோஸ் டெய்லர், அதிகபட்சமாக ஒரு சிக்ஸர், 9 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழப்பின்றி 105 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்…

  10. சேனநாயக்கவிற்கு பந்து வீச ஐ.சி.சி. அனுமதி இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் சச்சித்திர சேனநாயக்கவிற்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. அனுமதியளித்துள்ளது. சச்சித்திர சேனநாயக்கவின் பந்துவீச்சுப் பணி தொடர்பில் கடந்த ஜூலை மாதம் அதிருப்தியேற்பட்டதையடுத்து சோதனைக்குட்படுத்தப்பட்டார். இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் சேனநாயக்க மீள்பரிசோதனை க்குட்படுத்தப்பட்டார். இதன்போது பந்துவீச்சுப் பணி விதிமுறைகளுக்குட்பட்டிருந்ததையடுத்து அவருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித்தடை நீக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/12/09/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%A…

  11. டெஸ்ட் கிரிக்கெட்டில் 10-வது சதம்: முன்னணி வீரர்களுடன் இணைந்த டேவிட் வார்னர் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இன்று வார்னர் தனது 10-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார். 33-வது டெஸ்ட் போட்டியில் 10-வது சதம் கண்ட 4-வது ஆஸ்திரேலிய வீரராக உள்ளார் வார்னர். டான் பிராட்மேன், நீல் ஹார்வி, ஆர்தர் மாரிஸ் ஆகிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்குப் பிறகு தற்போது 33 டெஸ்ட் போட்டிகளில் வார்னர் 10 டெஸ்ட் சதங்களை எடுத்து சாதனை புரிந்துள்ளார். 33 டெஸ்ட் போட்டிகளில் பிராட்மேன் 18 சதங்களையும் 7 அரைசதங்களையும் எடுத்திருந்தார். நீல் ஹார்வி 12 சதங்களையும், 11 அரைசதங்களையும், ஆர்தர் மாரிஸ் 10 சதங்களையும் 8 அரைசதங்களையும் எடுக்க, வார்னர் 10 சதங்களையும் 13 அரைசதங்களையும் எடுத்து அந்த உயர்மட்ட பட்டியலில் இ…

  12. தரவரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு 6-ஆம் இட இந்தியா சவால் அளிக்குமா? பிலிப் ஹியூஸ் அகால மரணத்திற்குப் பிறகு கனத்த இதயத்துடன் ஆஸ்திரேலியா நாளை அடிலெய்டில் கிளார்க் தலைமையில் களமிறங்குகிறது. மாறாக உற்சாகமான கோலியின் தலைமையில் புதிய திருப்பம் காண இந்தியா எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. இந்திய அணியில் புவனேஷ் குமார் ஆடமுடியாது போயுள்ளது ஒரு பின்னடைவே. ஆனாலும் நாளை காலைதான் கூற முடியும் என்று கூறியுள்ளார் கோலி. புவனேஷ் குமார் சிக்கனமாக வீசுவதோடு, தொடக்கத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் திறமையை சமீபமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நிரூபித்துள்ளார். மேலும், பின்னால் பேட்டிங்கில் களமிறங்கி அருமையான திறமையை வெளிப்படுத்தி ஒரு முழுமையான டெஸ்ட் ஆல்ரவுண்டராக மாற…

  13. தினம், தினம் நரக வேதனை: ஸ்ரீசாந்த் புலம்பல் டிசம்பர் 07, 2014. ‘‘கிரிக்கெட் சூதாட்ட புகாரின் பேரில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஐந்து நிமிடத்தில் பி.சி.சி.ஐ., முடித்து விட்டது’’ என, புலம்பியுள்ளார் ஸ்ரீசாந்த். ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணிக்காக பங்கேற்றார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், 31. இவர் ‘பிக்சிங்’ செய்தது அம்பலமாக, டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார். இவருக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வாழ்நாள் தடை விதித்தது. அதேநேரம், சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் தனியாக விசாரிக்கிறது. தோனி, ரெய்னா உள்ளிட்ட 13 பேர் மீது புகார் உள்ளதாக தெரிகிறது. தவிர, சென்னை அணி உரிமையாளர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தானின் ரா…

  14. பாதியில் முடிந்த தோனியின் கனவு டிசம்பர் 07, 2014. நிதிப்பற்றாக்குறை காரணமாக தோனியின் ‘மகி ரேசிங்’ அணிக்கு மூடுவிழா நடத்தப்பட உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, 33. இவர், ஒரு ‘பைக்’ பிரியர். பல்வேறு ரக பைக்குகளை வாங்கி குவித்துள்ளார். இந்த ஆர்வம் காரணமாக கடந்த 2012ல் ‘எம்.எஸ்.டி., ரேசிங் டீம் இந்தியா’ என்ற பெயரில் ஒரு ‘பைக்’ அணி வாங்கினார். சூப்பர்ஸ்போர்ட் உலக சாம்பியன்ஷிப் பந்தயங்களில், இந்த அணி பங்கேற்றது. முதல் சாம்பியன்: 2013ல் ‘மகி ரேசிங் டீம்’ என்று பெயர் மாற்றப்பட்டு, கெனான் சோபோக்லு, பேபியன் போரட் என, புதிய வீரர்களுடன் களம் கண்டது. பங்கேற்ற 13 சுற்றில் 6ல் வெல்ல, அணிக்கான சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. கடைசி போட்டி: இந்த ஆண்டு நடந்த இரண்டாவ…

  15. மேலும் ஒரு பாகிஸ்தான் பந்து வீச்சாளர் பந்து வீச ஐசிசி தடை! துபாய்: சயீத் அஜ்மலைத் தொடர்ந்து மேலும் ஒரு பாகிஸ்தான் பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு ஐசிசி தடை விதித்துள்ளது. இந்த முறை ஆல் ரவுண்டர் முகம்மது ஹபீஸ் சிக்கியுள்ளார். அவரது பந்து வீச்சு சந்தேகத்திற்கிடமானதாக இருப்பதால் அவரதை் தடை செய்வதாக ஐசிசி அறிவித்துள்ளது. உலகக் கோப்பை் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் மேலும் ஒரு முக்கிய வீரருக்கு ஐசிசி தடை விதித்திருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. மேலும் ஒரு பாகிஸ்தான் பந்து வீச்சாளர் பந்து வீச ஐசிசி தடை! இதுகுறித்து ஐசிசி வெளியி்ட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி பாகிஸ்தான் வீரர் முகம்மது ஹபீஸ் பந்து வீச…

  16. ஸ்போர்ட்ஸ் ஃபெர்ஸ்ட் மொபிடெல் பிளட்டினம் விருது விழாவில் கெபிடல் மகா­ராஜா ஓர்­க­னை­சேஷன், ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் ஆகிய நிறு­வ­னங்கள் ஒன்­றி­ணைந்து நடத்­திய முத­லா­வது ஸ்போர்ட்ஸ் ஃபெர்ஸ்ட் மொபிடெல் பிளட்­டினம் விருது விழாவில் மூன்று பிர­தான விரு­து­களும் வாழ்நாள் விருதும் கிரிக்கெட் விளை­யாட்­டுத்­துறை சார்ந்­த­வர்­க­ளுக்கு வழ ங்­கப்­பட்­டது. வரு­டத்தின் அதி­சி­றந்த கிரிக்கெட் வீரர், ஜன­ரஞ்­சக வீரர் ஆகிய இரண்டு விரு­து­களை இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் வென்­றெ­டுத்தார். வரு­டத்தின் அதி­சி­றந்த கிரிக்கெட் வீராங்­கனை விருது இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்­தப்­பத்­த­வுக்கு கிடைத்­தது. வாழ்நாள் விருது எவ்­வித சந்­தே­கத்­திற்கும் இட­மின்…

  17. பில் ஹியூக்ஸ் காயமடைந்து சரிந்து விழுந்த பிட்சுக்கு ஓய்வு! சிட்னி: ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹியூக்ஸ், பவுன்சர் பந்து தாக்கி படுகாயமடைந்து கீழே விழுந்த பிட்ச்சுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் அந்த பிட்ச் பயன்படுத்தப்பட மாட்டாது என்று சிட்னி கிரிக்கெட் மைதான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சிட்னி மைதானத்தின் 7வது பிட்ச் இது. 22 யார்டு நீளமுள்ள அந்த பிட்ச்சில்தான் தலையில் பந்து பட்டு படுகாயமடைந்த நிலையில் கீழே விழுந்தார் ஹியூக்ஸ் என்பதால் அந்த பிட்ச்சை இனிமேல் பயன்படுத்துவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பில் ஹியூக்ஸ் காயமடைந்து சரிந்து விழுந்த பிட்சுக்கு ஓய்வு! சிட்னி மைதானத்தில் மொத்தம் 10 பிட்ச்சுகள் உள்ளன. அதில் 7வது பிட்ச்சில்தான் ஹியூக்ஸ் படுகாயமடைந்து …

  18. சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சங்கா? சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக அரைச்சதம் எடுத்த சச்சினின் சாதனையை சங்கக்காரா நெருங்கிவிட்டார். இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருக்கும் சங்கக்காரா களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் தன் அசத்தல் திறமையை காட்டி வருகிறார். பல சாதனைகளையும் குவித்து வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 13000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டிய சங்கக்காரா அடுத்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சினின் அதிக அரைச்சதம் என்ற சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார். 452 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சச்சின் 96 அரைச்சதம் அடித்துள்ளார். ஆனால் 386 இன்னிங்ஸ் விளையாடியுள்ள சங்கக்காரா இப்போழுதே 89 அரைச்சதம் கடந்து விட்டார். சச்ச…

  19. விழிப்புலனற்றோர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் அரையிறுதியில் இலங்கை விழிப்புலனற்றோர் தென் ஆபி­ரிக்­காவில் நடை­பெற்­று­வரும் விழிப்­பு­ல­னற்றோர் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்­டி­களின் அரை யிறுதி ஆட்­டத்தில் விளை­யா­டு­வ­தற்கு இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணி தகு­தி­பெற்­றுள்­ளது. தென் ஆபி­ரிக்க விழிப்­பு­ல­னற்றோர் அணிக்கு எதி­ரான போட்­டியில் 8 விக்­கெட்­களால் வெற்­றி­பெற்­றதை அடுத்து இலங்கை விழிப்­ப­லன்றோர் அணி உலகக் கிண்ண இறுதி ஆட்­டத்தில் விளை­யாட தகு­தி­பெற்­றது. இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் இங்­கி­லாந்து விழிப்­பு­ல­னற்றோர் அணியை 90 ஓட்­டங்­களால் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணி வெற்­றி­கொண்­டி­ருந்­தது. அப் போட்­டியில் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணி சார்­பாக சந்­த…

  20. பவுன்சர்களை சுதந்திரமாக வீசிய இந்திய, ஆஸ்திரேலிய பவுலர்கள் பிலிப் ஹியூஸ் பவுன்சர் தாக்கி அகால மரணமடைந்ததையடுத்து ஆஸ்திரேலிய நாடே துக்கம் அனுஷ்டித்து வருகிறது. இந்நிலையில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும், வலைப்பயிற்சியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களும் பவுன்சர்களை சரமாரியாகவே வீசினர். அடிலெய்டில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் முதல் நாள் ஆட்டத்தில் மொகமது ஷமி, வருண் ஆரோன், உமேஷ் யாதவ் சுதந்திரமாக பவுன்சர்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா பேட்ஸ்மென்களுக்கு எதிராக வீசினர். பிலிப் ஹியூஸ் மரணம் என்பதையெல்லாம் பின்னுக்குத் தள்ளியதோடு, பவுன்சர்கள் வீசுவதில் எங்களுக்கு எந்த வித தயக்கமும் இல்லை என்பது போல் வீசினர். கிரிக்கெட் ஆஸ்திரேலியா வீரர் செப் காட்ச்…

  21. இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இரு சாதனைகளை படைத்த சங்கா இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் குமார் சங்கக்காரா இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 242 ஓட்டஙகளைபெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 236 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் டக்வேர்த் லூயிஸ் முறையில் வெற்றிபெற்றது. இப் போட்டியில் சங்கக்கார 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இப்போட்டியில் துடுப்பெடுத்தாடிய சங்கக்கார 13 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 4 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். 37 வயதான சங்கக்கரா இதுவரை 386 ஒருநாள் போட்டி…

  22. கிரிக்கெட்டின் செல்வாக்கை கடந்து இலங்கையில் கால்பந்து துறையை முன்னிலைப்படுத்த எதிர்பார்ப்பு : பீபா தலைவர் பிளட்டர் இலங்கை கால்பந்தாட்ட அபிவிருத்தியில் எனக்கு அதிருப்தி காணப்படுகின்ற போதிலும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 75 வருட பூர்த்தி விழா உட்பட மற்றைய வைபவங்களில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன் எனத் தெரிவித்துள்ள சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜோசப் செப் பிளட்டர், இலங்கையில் கிரிக்கெட்டின் செல்வாக்கை கடந்து கால்பந்து துறையை முன்னிலைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார். கடந்த முதலாம் திகதி பிரத்தியேக விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்திருந்த சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனத் தலைவர…

  23. அமைதியாக தூங்கு தம்பி.. நானும் ஒரு நாள் வருவேன்.. மைக்கல் கிளார்க் உருக்கம்! மாக்ஸ்வில்லி, நியூ செளத்வேல்ஸ், ஆஸ்திரேலியா: மறைந்த கிரிக்கெட் வீரர் பில் ஹியூக்ஸுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் உருக்கமான இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க மிகுந்த சிரமத்துடன் தனது இரங்கல் செய்தியை வாசித்த கிளார்க்கின் நிலை மிகவும் சோகமாக இருந்தது. ஹியூக்ஸ் மரணமடைந்தது முதலே கிளார்க் சோகமாக காணப்பட்டார். தனது தம்பி போலவே ஹியூக்ஸுடன் நெருக்கமாக பழகி வந்தவர் கிளார்க். இதனால் ஹியூக்ஸின் மரணம், கிளார்க்கை உலுக்கி விட்டது. அமைதியாக தூங்கு தம்பி.. நானும் ஒரு நாள் வருவேன்.. மைக்கல் கிளார்க் உருக்கம்! இந்த நிலையில் ஹியூக்ஸ் இறுதிச்…

  24. யாழில் உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் திறந்து வைப்பு சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசின் உதவியுடன் சர்வதேச தரத்திலான உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் ஒன்று இன்று யாழ். அரியாலைப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜோசப் ஷெப் பிளாட்டர் பிற்பகல் 1.50 மணியளவில் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், வடக்கு மாகாண முதலமைச்சர்,வடக்கு மாகாண கல்வி அமைச்சர், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர்,வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=289643…

  25. ஸிம்பாப்வேயை 5 - 0 என்ற கணக்கில் துவம்சம் செய்த பங்களாதேஷ் தனது சொந்த நாட்டில் நடை­பெற்ற ஐந்து போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸிம்­பாப்­வேயை 5 - 0 என பங்­க­ளாதேஷ் வெள்­ளை­ய­டிப்பு செய்­தது. மிர்பூரில் நேற்று நடை­பெற்ற கடைசிப் போட்­டியில் 5 விக்­கெட்­களால் வெற்­றி­பெற்­றதன் மூலம் தொடரில் முழு­மை­யான வெற்­றியை பங்­க­ளாதேஷ் பதிவு செய்­து­கொண்­டது. குறைந்த மொத்த எண்­ணிக்­கை­களைக் கொண்ட இப்போட்­டியில் சிர­மத்­திற்கு மத்­தி­யி­லேயே பங்­க­ளாதேஷ் வெற்­றி­பெற்­றது. பங்­க­ளாதேஷ் பந்­து­வீச்­சாளர் தைஜுல் இஸ்லாம் தனது கன்னி முயற்­சியில் ஹட் - ட்ரிக் முறையில் விக்­கெட்­களைக் கைப்­பற்­றி­யமை இப்போட்­டியில் விசேட அம்­ச­மாகும். 27ஆவது ஓவரின் கடைச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.