விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் மொரின்ஹோ செல்சி அணியின் முன்னாள் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோ, மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்துடன் ஒப்பந்தத்துக்கு முன்னரான உடன்பாடொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாண்டு ஜூன் மாதத்துக்கு முன்னர், அக்கழகத்தின் முகாமையாளராக மொரின்ஹோ நியமிக்கப்படாதுவிடின், அவருக்கு 15 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது. கடந்தாண்டு டிசெம்பரில், செல்சி அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மொரின்ஹோ, அதன் பின்னர், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியுடன் இணைந்து கொள்வார் எனத் தகவல்கள் தெரிவித்த போதிலும், உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இ…
-
- 0 replies
- 340 views
-
-
[size=4]பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி அரையிறுதிப் போட்டிக்கு துடுப்பாட்டத்துக்கு மிகப் பாதகமாக ஆடுகளத்தை தயாரித்திருந்ததான அதிகாரிகளை பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம் கண்டித்துள்ளார். 16 ஓட்டங்களினால் இலங்கை அணி பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்த இந்த ஆடுகளம் துடுப்பாட முடியாததாக அமைந்திருந்தது என அறிவிப்பாளராக கொழும்பு வந்திருந்த வசீம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடுகளத்தில் 140 ஓட்டங்களை முந்துவது 180 ஓட்டங்களை முந்துவது போலாகும் என அவர் கூறினார். இப்படியான முக்கியத்தும்மிக்க ஒரு போட்டிக்கு இவ்வாறாக ஆடுகளம் அமைத்தது எவ்வாறு என அவர் வினவினார். பெண்களுக்கான அரையிறுதிப் போட்டியும் இந்த…
-
- 0 replies
- 409 views
-
-
மொரின்ஹோ யுகத்தை எதிர்பார்க்கும் றூணி மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் நட்சத்திர வீரரான வெய்ன் றூணி, தனது அணியின் புதிய முகாமையாளரான ஜொஸ் மொரின்ஹோவின் கீழ் விளையாடுவதற்கு, அதிக ஊக்கத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளதோடு, இடம்பெறவுள்ள பிறீமியர் லீக் பருவகாலம் தொடர்பாக எதிர்பார்ப்புடன் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பணியாற்றிய லூயிஸ் வான் காலின் காலத்தில், மத்தியகள வீரராக விளையாடிய வெய்ன் றூணி, கடந்த பருவகாலத்தில் கோல்களைப் பெறுவதற்குத் தடுமாறியிருந்தார். ஆனால், இம்முறை அவரை முன்கள வீரராகக் களமிறக்கும் சமிக்ஞைகளை, மொரின்ஹோ வெளியிட்டுள்ளார். அத்தோடு, புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஸல்ட்டான் இப்ராஹிமோவிக்குடன் இணைந்து,…
-
- 0 replies
- 240 views
-
-
சம்பியன்ஸ் லீக்: வென்று அடுத்த சுற்றில் பார்சிலோனா ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் தொடரின் குழு நிலைப் போட்டிகளில், நேற்றுப் புதன்கிழமை (23) இடம்பெற்ற போட்டியொன்றில் வெற்றி பெற்ற பார்சிலோனா, இறுதிப் 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது. பார்சிலோனா, 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்கொட்லாந்து அணியான செல்டிக்கைத் தோற்கடித்தே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் லியனல் மெஸ்ஸி பெற்றார். இந்நிலையில், ஜேர்மனியின் புண்டெலிஸ்கா தொடர் சம்பியன்களான பெயார்ண் மியூனிச், ரஷ்ய அணியான எஃப்.சி றொஸ்டோவ்விடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. எவ்வாறெ…
-
- 0 replies
- 339 views
-
-
கிளப் போட்டிகளில் ரொனால்டோ 500 கோல்கள் அடித்து சாதனை கிளப் அணிகளுக்கிடையிலான கால்பந்து போட்டிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 500 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் இவர் ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். கிளப் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த 2-வது அரை இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கிளப் அமெரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இது அ…
-
- 0 replies
- 312 views
-
-
140 கிலோ உடல் எடை கொண்ட மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர் ரக்கீம் கார்ன்வால் மே.இ.தீவுகளின் ஆண்டிகுவா ஆல்ரவுண்டர் ரக்கீம் கார்ன்வால் என்ற வீரரின் உடல் எடை 140 கிலோ. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பிடித்தால் கிரிக்கெட் வரலாற்றில் அதிக உடல் எடைகொண்ட வீரராகத் திகழ்வார். ரக்கீம் கார்ன்வால் வயது 24 மட்டுமே என்பதும் கவனிக்கத்தக்கது. இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் லீவர்ட் தீவுகள் அணிக்கு ஆடுகிறார், கரிபீயன் பிரிமியர் லீக் டி20 போட்டிகளில் ஆண்டிகுவா ஹாக்ஸ்பில்ஸ் அணிக்கு ஆடுகிறார். இவர் ஒரு ஆஃப் ஸ்பின் ஆல் ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தர கிரிக்கெட்டில் 25 போட்டிகளில் 125 விக்கெட்டுகளை 24 என்ற சராசரி…
-
- 0 replies
- 995 views
-
-
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: முதல் லெக்கில் 2-0 என மொனாகோவை வீழ்த்தியது யுவான்டஸ் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் மொனாகோவிற்கு எதிரான முதல் லெக்கில் ஹிகுவைனின் அபார ஆட்டத்தால் யுவான்டஸ் 2-0 என வெற்றி பெற்றது. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியின் முதல் லெக் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் யுவான்டஸ் - மொனாகோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியது முதலே யுவான்டஸ் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 29-வது நி…
-
- 0 replies
- 292 views
-
-
நீச்சலில் இலங்கையின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் பவலச்சந்திரன் அருக்ஷன் Tamil நீச்சலில் இலங்கையின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் பவலச்சந்திரன் அருக்ஷன் அண்மையில் இடம்பெற்று முடிந்த தேசிய கனிஷ்ட நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளின் நிறைவில் ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஒரு இளம் வீரர் தன்பக்கம் ஈர்த்திருந்தார். 19 வயதிற்குட்பட்ட பிரிவில் கலந்து கொண்ட 15 வயது வீரரான இவர், தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்த வீரர்களை தோற்கடித்து போட்டித் தொடரின் மிக முக்கிய விருதினை சுவீகரித்திருந்தார். சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் குழுமியிரு…
-
- 0 replies
- 353 views
-
-
20 ஓவர் கிரிக்கெட்டில் டக்வொர்த் விதி பொருத்தமற்றது: ஸ்டீபன் பிளமிங் கருத்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதி முறையை பின்பற்றுவது பொருத்தமற்றது என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார். ஐதராபாத்: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியின் வெளியேற்றம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதிய எலிமினேட்டர் ஆட்டம் நேற்று முன்தினம் பெங்களூரில் நடந்தது. முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 128…
-
- 0 replies
- 334 views
-
-
உலக மெய்வல்லுனர் தொடரில் தொடரும் அமெரிக்காவின் ஆதிக்கம் லண்டனில் நடைபெற்றுவருகின்ற 16ஆவது உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 5 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதில் 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 9 வெள்ளிப் பதக்கங்களை அவ்வணி பெற்றுக்கொண்டுள்ளது. இப்பட்டியலில் 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று கென்யா 2ஆவது இடத்தையும், ஒரு தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற எத்தியோப்பியா 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. மெய்வல்லுனர் உலகின் முதல்நிலை அணியாக விளங்கிய ஜமைக்கா பதக்கப்பட்டியலில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 400 மீற்ற…
-
- 0 replies
- 448 views
-
-
ஒரு காலத்துல எப்படி இருந்த பார்சிலோனா... ஒரு ரசிகனின் குமுறல்! பார்சிலோனா, இந்தப் பெயரை தெரிந்தோ தெரியாமலோ சமீபத்தில் அதிகமாக கடந்து வந்த்திருப்பீர்கள். ஸ்பெயின் நாட்டின் டாப் இரண்டு கிளப்புகளில் ஒன்றுதான் பார்சிலோனா. புரியும்படி சொன்னால் கால்பந்து உலகின் மேஸ்ட்ரோவும், அர்ஜெண்டினா தேசிய அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்சி விளையாடிவரும் கிளப் அணிதான் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இந்த பார்சிலோனா அணி. ஒரு காலத்தில் வெற்றிமேல் வெற்றி பெற்ற இந்த அணி சமீபமாக பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. பிரேசில் நட்சத்திரம் நெய்மாரின் விலகல், ரியல் மாட்ரிட் அணியிடம் பேக் டூ பேக் தோல்வி, அணி நிர்வாக குழப்பம், வீரர்கள் தேர்வு என சமீபகாலமாக தொடர்ந்து சறுக்கிக் கொண…
-
- 0 replies
- 630 views
-
-
சென்னை சுப்பர் கிங்ஸின் 3 வீரர்கள் விவரம் ‘ரிலீஸ்’ ஐ.பி.எல். தொடரில் முக்கிய அணிகளில் ஒன்றான சென்னை சுப்பர் கிங்ஸ், அடுத்த வருடம் தக்கவைக்கவுள்ள மூன்று வீரர்களின் விவரம் வெளியானது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடர் மிகவும் பிரபலமானது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின் போது முறை கேடுகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை இந்த வருடத்துடன் முடிவடைந்துள்ளது. அடுத்த வருடம் இந்த இரண்டு அணிகளும் மீண்டும் களமிறங்குகின்றன. இதையடுத்து ஒவ்வொரு அ…
-
- 0 replies
- 379 views
-
-
சம்பியனானது அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் அவுஸ்திரேலிய உள்ளூர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 தொடராக பிக் பாஷ் லீக்கில், 2017/18ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான சம்பியனாக அடிலெய்ட் ஸ்ரைக்கஸ் தெரிவானது. அடிலெய்ட்டில் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், ஹோபார்ட் ஹரிகேன்ஸை 25 ஓட்டங்களால் வென்றமையையடுத்தே அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் சம்பியனானது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸின் அணித்தலைவர் ட்ரெவிஸ் ஹெட், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ், 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜக் வெதர்லான்ட் 115 (70), ட…
-
- 0 replies
- 236 views
-
-
சவுத்தாம்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 569 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளர் செய்துள்ளது. அதிகபட்சமாக பெல் 167 ஓட்டங்களும் மற்றும் பேலன்ஸ் 156 ஓட்டங்களும் குவித்துள்ளனர். இதனை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 330 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராகனே 54 ஓட்டங்களும் தோனி 50 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்கள் வீழ்த்தினர். இந்நிலையில் 261 ஓட்…
-
- 0 replies
- 479 views
-
-
தோனியின் இடத்துக்குக் குறிவைக்கும் கே.எல்.ராகுல்...?! விஜய் ஹசாரே டிராபி ஃபைனல்... டாஸ் போட வந்திருந்த கருண் நாயர் ``கே.எல் ராகுல் இன் ஃபார் சி.எம்.கௌதம்" என்று சொன்னபோது பெரிதாக யாருக்கும் ஆச்சர்யம் ஏற்படவில்லை. இலங்கையில் நடக்கும் முத்தரப்புத் தொடருக்கு முன்பாக ஒரு பயிற்சிப் போட்டி என்று சிலர் நினைத்தனர். `இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு' என்று சிலர் கருதினர். ஆனால், இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால், தோனியின் இடத்துக்கு ராகுல் வைத்த குறியாகவும் இது தெரிகிறது. தென்னாப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்தியா திரும்பிய ராகுல், விஜய் ஹசாரே கோப்பையின் லீக் சுற்றில் பங்கேற்றார். முதல் போட்டியில் ஓ…
-
- 0 replies
- 786 views
-
-
40 வயது... 18,000 ரன்கள்... 25 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கும் வாசிம் ஜாபர்! சேவக், கம்பீர் காலத்துக்கு முன்னாள் இந்தியா சோதித்துப் பார்த்த பல தொடக்க ஆட்டக்காரர்களில் கொஞ்சம் அதிக காலம் தாக்குப்பிடித்தவர் இவர்தான். சர்வதேசப் போட்டிகளில் அவ்வளவு சிறப்பாகச் செயல்படாவிட்டாலும், உள்ளூர் போட்டிகளில் பாட்ஷாவாகவே வலம் வந்தார். வாசிம் ஜாபர் - முதல்தர கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத வீரர். அவருக்கு அப்போது வயது 15 இருக்கும். அந்தச் சிறு வயதில், பள்ளி கிரிக்கெட் அணிக்காக 400 ரன்களைக் குவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இன்று அவருக்கு வயது 40. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பின்னும், அதே ஆச்சர்யத்தை தன் பேட்டிங் திறமையால்…
-
- 0 replies
- 315 views
-
-
உலக கோப்பை பைனலில் இந்தியா–ஆஸ்திரேலியா: ரிக்கி பாண்டிங் கணிப்பு அக்டோபர் 19, 2014. புதுடில்லி: ‘‘அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடரின் பைனலில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும்,’’ என, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து அடுத்த ஆண்டு (பிப்., 14 – மார்ச் 29) 11வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடரை(50 ஓவர்) நடத்துகின்றன. இத்தொடரில் சாதிக்கக் கூடிய அணிகள் குறித்து பாண்டிங் கூறியது: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடரின் பைனலில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோத அதிக வாய்ப்புகள் உள்ளன. சொந்த மண்ணில் விளையாடுவது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான விஷயம். எனவே ஆஸ்திரேலிய அணி கோப்பை வெல்லும் என நம்…
-
- 0 replies
- 574 views
-
-
வட மாகாண விளையாட்டு விழாவில் சம்பியனாகிய யாழ் மாவட்டம் வட மாகாண சபையும், வட மாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 12 ஆவது வட மாகாண விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த கடந்த 27 ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெற்றது. இம்முறைப் போட்டித் தொடரில் தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற பல வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், 7 புதிய போட்டி சாதனைகளும் இங்கு நிகழ்த்தப்பட்டன. இதில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்களான எம். பிரேம்தாஸ் (100 மீற்றர்), ஏ. அபிஷான் (400 மீற்றர் சட்டவேலி ஓட்டம்), பி. ந…
-
- 0 replies
- 457 views
-
-
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் கோஹ்லி உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ஒரேயொரு கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி இடம்பெற்றுள்ளதாக ‘போர்ப்ஸ்’ (Forbes) பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், உலகின் அதிக சம்பளம் பெறும் வீரராக உலகின் முன்னணி குத்துச்சண்டை வீரரும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான ப்ளோய்ட் மேவெதர் (Floyd Mayweather) முதலிடத்தையும், கால்பந்து உலகின் நட்சத்திர ஜாம்பவான்களான லியோனல் மெஸ்சி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் முறையே 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் உலகில் அதிக…
-
- 0 replies
- 624 views
-
-
புதிய சாதனை; 200 ரன்கள் அடித்த பாக். வீரர் பக்கர் ஜமன்: ஜிம்பாப்வேவுக்கு 400 ரன்கள் இலக்கு இரட்டை சதம் அடித்தமகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர் பக்கர் ஜமன் - படம் உதவி: ட்விட்டர் புலவாயோ நகரில் நடந்து வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பக்கர் ஜமான் 210 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்கள் பக்கர் ஜமன், இமான் உல் ஹக் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 304 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரர்கள் யாரும் செய்யாத சாதனையாகும். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் சேர்த்தத…
-
- 0 replies
- 396 views
-
-
ஆசியாவில் ‘எப்படியிருந்த’ தெ.ஆ அணி இன்று ‘இப்படி’யாகிவிட்டதே: வீழ்ச்சியின் சுவாரசியங்கள் தெ.ஆ. கேப்டன் டுப்ளெசிஸ் ஆட்டமிழக்கும் காட்சி. | ஏ.பி. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி துணைக்கண்டங்களில் சிறப்பாக ஆடும் அணியாகும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து போன்ற அவர்கள் நாட்டில் ஜாம்பவான் அணிகளெல்லாம் இங்கு வந்து மண்ணைக் கவ்வியுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா மட்டும் சிறப்பாக இங்கு ஆடியுள்ளதைத்தான் பார்த்திருக்கிறோம், ஆனால் 2015 அக்டோபருக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணி இங்கு கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரில் 2-0 என்று தோல்வி தழுவியது. சிறுகுழந்தைகள் ஆரஞ்சுப் பழத்தை …
-
- 0 replies
- 369 views
-
-
14 SEP, 2023 | 10:13 AM (நெவில் அன்தனி) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ரிட்ஸ்பறி 91ஆவது சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் ஆரம்பநாளான புதன்கிழமை (13) 4 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டது. சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் அம்பகமுவ மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவனும் மாணவியும் சாதனைகள் நிலைநாட்டியது குறிப்பிடத்தக்க விடயமாகும். சிறுவர்கள் பிரிவில் 3 புதிய சாதனைகளும் சிறுமிகள் பிரிவில் ஒரு சாதனையும் நிலைநாட்டப்பட்டது. 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உயரம் பாய்தலில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ரி. மெண்டிஸ…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: விண்டீஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்கள் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் விண்டீஸ் அணி, எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ஓட்டங்களை பெற்றுள்ளது. விண்டீஸ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, பிரிட்ஜ்டவுனில் நேற்று ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று விண்டீஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. போட்டியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய பிராத்வைட் மற்றும் அறிமுக வீரர் கேம்ப்பெல் ஆகியோர் முறையே 40, 44 என்ற ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஷாய் ஹோப் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அதேபோல் ரோஸ்டன் சேஸ் 54 ஓட்டங்களையும், ஹ…
-
- 0 replies
- 275 views
-
-
உலக சாம்பியனுக்கு உதை: ஜெர்மனியை வீழ்த்தியது அமெரிக்கா கொலாக்னே: ‘நட்பு’ கால்பந்து போட்டியில் உலக சாம்பியன் ஜெர்மனியை, 2–1 என்ற கணக்கில் வீழ்த்தியது அமெரிக்க அணி. உலக கோப்பை சாம்பியன் ஜெர்மனி, அமெரிக்க அணிகள் மோதிய ‘நட்பு’ கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடந்தது. கடந்த வாரம் ஆம்ஸ்டர்டாமில் நடந்த ‘நட்பு’ போட்டியில் நெதர்லாந்தை 4–3 என, வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கியது அமெரிக்கா. போட்டியின் 13வது நிமிடத்தில் மரியா கோட்சா, ஜெர்மனி அணிக்கு முதல் கோல் அடித்தார். 41வது நிமிடத்தில் அமெரிக்காவின் மிக்ஸ் டிஸ்கிரட் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி 1–1 என சமன் ஆனது. இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் முன்னிலை பெற எடுத்த முயற்சிகள் வீணாகின. போட்டி முடிய 3 நிமிடம் இருந்த …
-
- 0 replies
- 439 views
-
-
அவுஸி சார்ப்பாக விம்பில்டனில் விளையாடி வரும் Nick Kyrgios (வயது 20,மலேசிய தமிழ் வழி தாய்க்கும் கிரேக்க தந்தைக்கும் பிறந்தவர்.) அசிங்கமான நிறவெறி தாக்குதலுக்கு இலக்காகி மனவேதனை அடைந்துள்ளார். அவுஸ்திரேலியா சார்ப்பாக சிறுவனாகவே ரெனிஸில் ஆட ஆரம்பித்து இன்று உலக தர டெனிஸில் விளையாடும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் இவர் மீது மோசமான நிறவெறித் தாக்குதலும் புறக்கணிப்பும் நிகழ்ந்து வருகிறது. விம்பில்டனில் 2015 தொடரில் இவர் அடைந்த தோல்வியை அடுத்து இன்னும் அதிகம் நிறவெறி பொழியப்பட்டுள்ளது இவர் மீது. இவர் உலக தர வரிசையில் 29 வது இடத்தில் இருந்தாலும் இள வயதினர் என்ற வகையில் விரைந்து டெனிஸில் முன்னேறி வர வழி இருக்கும் நிலையில் அவரை ஊக்குவிப்பதற்குப் பதில்.. அவர் மீது நிறவெறியைக் காட்டி …
-
- 0 replies
- 371 views
-