விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
ஃபிஃபா நடுவரின் வீடு இதுதான் : வறுமையும் பொறுமையும் ரூபாதேவியின் அடையாளம்! பூட்டுக்கும் பிரியாணிக்கும் மட்டும் திண்டுக்கல் பெயர் போன ஊர் கிடையாது. கால்பந்தும் இங்கும் வெகு பிரபலம். தடுக்கி விழுந்தால் ஒரு கால்பந்து வீராங்கனையை இங்கு சந்திக்கலாம். இதே திண்டுக்கல் இப்போது சூரிச் வரை பேசப்படுகிறது என்றால் அதற்கு காரணம் ரூபாதேவி என்ற கால்பந்து வீராங்கனை. தமிழகத்தில் இருந்து முதன் முறையா ஃபிஃபாவின் அங்கீகரிக்கப்பட்ட நடுவராக இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவில் கால்பந்து ஏழ்மையும் துயரமும் கலந்த விளையாட்டுதானே. அதற்கு ரூபாதேவியும் தப்பவில்லை. கூரை வேயப்பட்ட வீடு. அதுவும் ஆங்காங்கே பிய்ந்து தொங்குகிறது. ஆனால் ரூபாதேவிக்கு இன்று உலகின் பணக்கார அமை…
-
- 0 replies
- 527 views
-
-
நடுவரை திட்டிய அவுஸ்திரேலிய வீரர் ஹாசெல்வுட் February 24, 2016 நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ’அவுட்’ கொடுக்க மறுத்த நடுவரை அவுஸ்திரேலிய வீரர் ஹாசெல்வுட் தகாத வார்த்தையால் திட்டியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்ச்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் 4வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து 2வது இன்னிங்சை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது 4 விக்கெட்டுக்கு 196 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஹாசெல்வுட் வில்லியம்சனுக்கு யார்க்கராக ஒரு பந்துவீசினார். அது அவரது காலில் பட்டதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இந்நிலையில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித், …
-
- 0 replies
- 333 views
-
-
அணி வீரர்களுக்கு சீருடை வாங்க கடன் கொடுத்த டி20 சாம்பியன் கேப்டன்! "டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாட, அணி வீரர்களுக்கு சீருடை வாங்க நான்தான் கடன் கொடுத்தேன்" என்று சாம்பியன் பட்டத்தை வென்ற மேற்கிந்திய தீவு அணி கேப்டன் டேரன் சமி வேதனை தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவு அணி, இங்கிலாந்தை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த நிலையில், தனது அணியின் வெற்றி குறித்து மேற்கிந்திய தீவு அணி கேப்டன் டேரன் சமி கூறுகையில், "எங்கள் அணிக்கு ரவ்லே லீவிஸ் என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு எந்த அணியிலும் அவர் மேலாளராக இருந்து அனுபவமே இல்லாதவர். எங்களுக்கு சீருடையோ, சீருடை மீதான பிரிண்டிங்க…
-
- 0 replies
- 540 views
-
-
141ஆவது முறையாக நடைபெறவிருக்கும் நீல நிறங்களின் சமர் By A.Pradhap - இலங்கையின் பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பழைமை வாய்ந்த கிரிக்கெட் பெரும் போட்டியான (BIG MATCH) கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிசை புனித தோமையார் கல்லூரி அணிகளுக்கு இடையிலான “நீல நிறங்களின் சமர் (Battle of Blues)”, இந்த ஆண்டு 141ஆவது முறையாக மார்ச் மாதம் 12ஆம், 13ஆம், 14ஆம் திகதிகளில் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது. இலங்கையின் கிரிக்கெட் பித்துக்காலத்தினை (March Madness), அலங்கரிக்கும் முக்கிய பெரும் போட்டி…
-
- 0 replies
- 680 views
-
-
யுனைட்டெட்டின் முகாமையாளராக இவ்வாரம் நியமிக்கப்படுகிறார் மொரின்ஹோ மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாளராக, செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான ஜொஸ் மொரின்ஹோ நியமிக்கப்படவுள்ளதாக, பி.பி.சி செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இவ்வாரத்தில் அவர் நியமிக்கப்படுவார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற எப்.ஏ கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்பதாகவே, மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்துக்கும் மொரின்ஹோவுக்குமிடையிலான இணக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. லூயிஸ் வான் காலின் முகாமைத்துவத்தின் கீழ், சம்பியன்ஸ் லீக் தொடருக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் அணி தகுதிபெறாமை காரணமாக, மாற்றமொன்றை மேற்கொள்ள, அக்கழக நிர்வாகிகள் முடிவெட…
-
- 0 replies
- 348 views
-
-
. இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் தனஞ்சய டி சில்வாவின் விக்கெட்டினைக் கைப்பற்றியபோது, 19 வருடங்களாக நீடித்த சாதனையை மிற்செல் ஸ்டார்க் தகர்த்தார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வேகமாக 100ஆவது விக்கெட்டினைக் கைப்பற்றியவர் என்ற சாதனையையே ஸ்டார்க் படைத்திருந்தார். தனது 52ஆவது போட்டியில் ஸ்டார்க் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த நிலையில், இதற்கு முன்னர் 53 போட்டிகளிலேயே சக்லைன் முஸ்டாக் 100 விக்கெட்டுகளை 1997ஆம் ஆண்டு கைப்பற்றியிருந்தார். http://tamil.wisdensrilanka.lk/article/4035
-
- 0 replies
- 481 views
-
-
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியிலிருந்து 5 பேர் அதிரடி நீக்கம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான காமன்வெல்த் பேங்க் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணியிலிருந்து 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் விளையாட நான்கு புதுமுக வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வி அடைந்துள்ளது ஆஸ்திரேலிய அணி. தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே காமன்வெல்த் பேங்க் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளன. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய …
-
- 0 replies
- 459 views
-
-
சதம் அடித்ததும், டோனி அதிக அளவில் ரியாக்சன் காட்டாதது ஏமாற்றம் அளித்தது: பகர் சமான் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நான் சதம் அடித்ததும் டோனி முகத்தில் அதிக அளவில் ரியாக்சன் இல்லாதது ஏமாற்றம் அளித்தது என பகர் சமான் கூறியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. கோப்பையுடன் சென்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு சொந்த நாட்டில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அனைத்து மீடியாக்களும் வீரர்களை அழைத்து பேட்டி கண்டு வருகிறது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பகர் சமான்…
-
- 0 replies
- 430 views
-
-
மூவருக்குமான போட்டித் தடை நீக்கம் இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போது ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான தனுஷ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது. மேற்படி மூன்று வீரர்களுக்கும் தலா 10 மில்லியன் ரூபாய் அபாராதமும், சர்வதேச போட்டிகளில் விளையாட ஒரு வருடகால தடையும், உள்நாட்டு போட்டிகளில் விளையாட 6 மாத காலம் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற, இங்கிலாந்து சுற்றுத் தொடரின் போது, ஜூன் 27 ஆம் திகதி இரவு, …
-
- 0 replies
- 336 views
-
-
2018 உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற்றது ஸ்பெயின் 3-வது கோலை தியாகோ அடிக்க ஸ்பெயின் வீரர் ஜெரார்ட் பிகே (நடுவில் சிரித்துக் கொண்டிருப்பவர்) கொண்டாடுகிறார். - படம்.| ஏ.பி. அல்பேனியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி ரஷ்யாவில் நடைபெறும் 2018-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது. ஸ்பெயின் அணியில் ரோட்ரிகோ (16வது நிமிடம்), இஸ்கோ (23), தியாகோ (26) ஆகியோர் முதல் பாதியிலேயே கோல்களை அடித்து முடித்தனர். இதனால் 9 போட்டிகளில் 8 போட்டிகளில் ஸ்பெயின் வென்று ஜி குரூப்பிலிருந்து உலகக்கோப்பைத் தகுதியை உறுதி செய்துள்ளது. இத்தாலி அணி மேசிடோனியா அணிக்கு எதிராக ட…
-
- 0 replies
- 466 views
-
-
காமன்வெல்த் 2022: எங்கு எப்போது நடைபெறுகிறது? இந்திய வீரர்கள் யார்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுகள் இந்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இடம்பெறுகிறது. காமன்வெல்த் போட்டிகள் என்றால் என்ன? காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளும் அதனை சார்ந்த பிராந்தியங்களுக்கும் இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டியே 'காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி' என அழைக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் 72 நாடுகள் கலந்து கொள்கின்றன. …
-
- 0 replies
- 364 views
- 1 follower
-
-
வாசிம் அக்ரமை அசத்திய பாக். இடது கை வேகப்பந்து வீச்சு சிறுவன்: வைரலான வீடியோ வாசிம் அக்ரமை அசத்திய அதே பாணி இடது கை வேகப்பந்து வீச்சு பாக்.சிறுவன். - படம்.| ட்விட்டர். தனது பயங்கரமான இன்ஸ்விங்கர்கள் மற்றும் யார்க்கர்களால் உலக முன்னணி பேட்ஸ்மென்களை நிலைகுலையச் செய்த வாசிம் அக்ரம் அசந்து போகும் வகையில் பாகிஸ்தான் சிறுவன் ஒருவர் தனது இடது கை வேகப்பந்து வீச்சுத் திறமையை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் அந்த இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் போலவே வீசியதும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த வாசிம் அக்ரம் தன் ட்விட்…
-
- 0 replies
- 371 views
-
-
அதிவேக 100 விக்.: உலக சாதனைக்கு வெகு அருகில் ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான் ரஷீத் கான். - படம். | கெட்டி இமேஜஸ் ஆப்கானிஸ்தான் அணியின் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் தன் 19வது வயதிலேயே உலகம் முழுதும் ஒருநாள் போட்டிகள், டி20 லீகுகளில் தனது புதிரான லெக்ஸ்பின்னில் கலக்கி வருகிறார். அயர்லாந்தை நேற்று வீழ்த்தி உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி. குறிப்பாக சூப்பர் சிக்ஸுக்கே தகுதி பெறுமா என்ற நிலையில் பிற அணிகளின் தோல்வியினால் சூப்பர் சிக்ஸுக்கு புள்ளிகள் இல்லாமலேயேதகுதி பெற்று மீண்டெழுந்து, அயர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி 2019 இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பைக்குத் தகுத…
-
- 0 replies
- 392 views
-
-
’103 பந்துகளில் 7 ரன்கள்... பட்டையைக் கிளப்பிட்டான்ல..!’ இதான் டெஸ்ட் மேட்ச் #NZvENG டி-20, டி-10, ஐஸ் கிரிக்கெட் வரை பார்த்துவிட்ட கிரிக்கெட் ரசிகர்கள், இன்று சர்வதேச 'பாக்ஸ் கிரிக்கெட்' ஆட்டத்தையும் பார்த்திருப்பார்கள். நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் ஆடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி செஷன் அப்படித்தான் இருந்தது. பேட்டைச் சுற்றி 8 ஃபீல்டர்கள். பந்து பேட்டைத் தொட்டு 'எட்ஜ்' ஆனால் பிடிப்பதற்காக ஒற்றைக்காலில் காத்திருக்கிறார்கள். தூக்கி அடித்தாலும் முடிந்தது. பந்தை விடவும் முடியாது... யார்க்கர்கள் தாக்குகின்றன. உடலாலும் வாங்க முடியாது. எல்.பி ஆக வாய்ப்புண்டு. தோல்வி அருகாமையில் இருப்பதால் நெருக்கடி வேறு. இத்தனையையும் சமாளிப்பது …
-
- 0 replies
- 459 views
-
-
ரவி சாஸ்திரியின் அணுகுமுறையும் உலகக் கோப்பை கனவும்! திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால் இந்திய கிரிக்கெட் ‘ரவி சாஸ்திரி காலகட்டம்’ என்ற ஒன்றை விரைவில் காணும் என்று 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழ் பத்தியில் கிரிக்கெட் எழுத்தாளர் சுரேஷ் மேனன் கூறுகிறார். அவர் எழுதிய பத்தியின் தமிழ் வடிவம் வருமாறு: டைகர் பட்டோடிக்குப் பிறகு ஒரு கேப்டனாகவே வளர்த்தெடுக்கப்பட்ட ரவி சாஸ்திரி ஏன் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் கேப்டன்சி செய்தார் என்பது எனக்கு தர்க்கபூர்வமாகத் தெரியவில்லை. அந்த ஒரு போட்டி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, அதில் இந்தியா வெற்றி பெற்றது. ரவி சாஸ்திரி இங்கிலாந்துக்கு எதிராக அண்டர்-19 அணியை தலைமையேற்றுச் சென்ற காலக்கட்டத்திலேயே அவரை ஒரு லீடர் என்றே அனைவரும் கருதி…
-
- 0 replies
- 455 views
-
-
என்னை கிண்டல் செய்வதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை: நெய்மர் என்னை கிண்டல் செய்வதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை என்று பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர் கூறியுள்ளார். சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பிரேசில் வீரர் நெய்மர் அதீத செயல்பாடு காரணமாக சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார். நெய்மர் வேண்டுமென்றே காயம் அடைந்து விட்டதாக நடித்து நேரத்தைக் கடத்துவதால், தங்கள் அணியின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டதாகவும் பிற அணியினர் குற்றம் சுமத்தினர். நெய்மர் களத்தில் விழும் காட்சிகளை கேலி செய்து ரசிகர்கள் ட்விட்டரில் வீடியோக்களைப் பதிவிட்டனர். இந்த நிலையில் தன்னைப் பற்றிய விம…
-
- 0 replies
- 419 views
-
-
‘உலகின் அதிவேக மனிதன் உசைன் போல்ட்’ கால்பந்து வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறல் பயிற்சியில் உசைன் போல்ட். | ஏ.எப்.பி. உலகின் அதிவேக மனிதன், ஒலிம்பிக் தங்கங்கள் வென்ற நாயகன், உசைன் போல்ட் கூட தன்னால் தொழில்பூர்வ கால்பந்தாட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இந்த வாரத்தில் ஒரு அமெச்சூர் அணியுடன் அவர் முதல் போட்டியில் களமிறங்க வாய்ப்பிருப்பதால் கடுமையாக தன் உடற்தகுதியை மேம்படுத்த போராடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 8 முறை ஒலிம்பிக் சாம்பியனான உசைன் போல்ட்டுக்கு ஆஸ்திரேலியாவின் செண்ட்ரல் கோஸ்ட் மரைனர்ஸ் அணி அவரது கால்பந்து கனவை நிறைவேற்ற வாய்ப்பள…
-
- 0 replies
- 644 views
-
-
இலங்கை அணியின் உடற்பயிற்சி பயிற்சியாளராக மைக்கல் மெயின் இலங்கை கிரிக்கெட் அணிக்கு உடற்பயிற்சி வழங்கும் பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கல் மெயின் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர், தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஹம்ப்ஷியர் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார். இவர்இ வீரர்களை வலுவூட்டுதல் பற்றியும்இ விளையாட்டு கற்கைகள் பற்றியும் பல்கலைக்கழக பட்டங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/05/08/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8…
-
- 0 replies
- 300 views
-
-
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் இறுதிப் போட்டிக்கு தகுதி! அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான முதல் அரையிறுதி போட்டி இன்று(வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால், பெடரரை தோற்கடித்த இளம் வீரரான கிரீஸின் சிட்ஸிபஸ்-ஐ எதிர்கொண்டார். நடாலின் அதிரடிக்கு சிட்ஸிபஸ்ஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 6-2 எனவும், 2-வது செட்டை 6-4 எனவும், 3-வது செட்டை 6-0 எனவும் கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் பேட்டிக்கு முன்னேறினார் நடால். நடால் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் அல்லது பவுலி ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavann…
-
- 0 replies
- 681 views
-
-
'பல விக்கெட் கீப்பர்களுக்கு இவரை பிடிக்காது' - கில்கிறிஸ்ட் செய்த மாற்றம் என்ன? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 13 நவம்பர் 2025 ''முன்பெல்லாம் கீப்பர் என்று சொன்னாலே தோனி, பவுச்சர் பேருக்கெல்லாம் முன்பு இவர்தான் ஞாபகம் வருவார்'' - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பற்றிப் பேசும்போது தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் சொன்னது இது. நவம்பர் 14, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கியமான அங்கமாக இருந்த (1996 முதல் 2008 வரை) ஆடம் கில்கிறிஸ்ட்டின் பிறந்த நாள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 905 ஆட்டமிழப்புகளைச் செய்திருக்கும் கில்கிறிஸ்ட் பற்றி சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு - தேசிய கிர…
-
- 0 replies
- 73 views
- 1 follower
-
-
ஸ்பெயின் கேப்டன் ஐகெர் கேசிலாஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு கடந்த 2010ம் ஆண்டு யூரோ 2012ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியின் கேப்டன் ஐகெர் கேசிலாஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஒய்வு அறிவித்துள்ளார். நடப்பு யூரோ தொடரில் நாக்அவுட் சுற்றிலேயே ஸ்பெயின் அணி இத்தாலியிடம் 2 கோல்கள் வாங்கி தோல்வியடைந்தது. இந்த தொடரில் ஸ்பெயின் அணியில் கேசிலாஸ் இடம் பெற்றிருந்தாலும் கோல்கீப்பிங் பணியை டிஜியா மேற்கொண்டார். தற்போது 35 வயதான கேசிலாஸ் மாற்று ஆட்டக்காரராகவே இருந்தார். யூரோவில் இருந்து ஸ்பெயினும் வெளியேறியதை தொடர்ந்து கேசிலாஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு முதல் ஸ…
-
- 0 replies
- 397 views
-
-
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ-வை வீழ்த்தி இந்தியா ஏ கோப்பையை வென்றது கோப்பையை வென்ற இந்தியா ஏ. | படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நாற்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா ஏ அணியை 57 ரன்களில் வீழ்த்தி மணீஷ் பாண்டே தலைமை இந்தியா ஏ அணி கோப்பையை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3-வது முறையாக கோப்பையை வென்ற்து இந்தியா ஏ அணி. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஏ அணி 209 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியா ஏ ஸ்பின்னர்கள் யஜுவேந்திர சாஹல் (4), கருண் நாயர் (2), அக்சர் படேல் (2) ஆகியோர் த…
-
- 0 replies
- 363 views
-
-
பிரபல கொல்ப் வீரர் ஆர்னல்ட் பால்மர் காலமானார் பிரபல கொல்ப் (Golf) வீரர் ஆர்னல்ட் பால்மர் காலமானார். கொல்ப் விளையாட்டு வரலாற்றில் உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படும் பால்மர் தனது 87ம் வயதில் காலமானார். பால்மர் பென்சல்வேனியாவின் பிட்ஸ்பெர்க் வைத்தியசாலையில் காலமானார். மிக நீண்ட காலமாக கொல்ப் போட்டிகளில் பங்கேற்று வந்த பால்மர் சர்வதேச ரீதியில் 90 போட்டித் தொடர்களில் வெற்றியீட்டியுள்ளார். பால்மரின் இழப்புக்கு உலகின் கொல்ப் வீரர்கள் கொல்ப் ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136343/language/ta-IN/article.…
-
- 0 replies
- 298 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஷாகித் அப்ரிடி ஓய்வு அஃப்ரிடி | கோப்புப் படம் பாகிஸ்தான் ஆல் ரவுண்டரான ஷாகித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தார். இதன்மூலம் சர்வதேச அரங்கில் அவரின் 21 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 36 வயதான அப்ரிடி, முன்னதாக 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2015-ல் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். பாகிஸ்தான் 20-20 கிரிக்கெட்டில் விளையாடிய அப்ரிடி, 2016 உலகக் கோப்பையில் பங்கேற்றிருந்தார். அதைத் தொடர்ந்து போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பார் என்று எல்லோரும் நினைத்த வேளையில், அப்ரிடி தன்னுடைய கேப்…
-
- 0 replies
- 267 views
-
-
ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு புது கேப்டன்? இதை யாரும் எதிர்பார்க்கலயே.. ரவி சாஸ்திரி பரபர தகவல்.. இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிப்பது குறித்து ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ உன்னிப்பாக கவனித்து வருவதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி சமீபத்தில் விலகினார். இதனை அடுத்து ரோகித் சர்மா இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்த கிரிக்கெட் தொடர்களில் தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. …
-
- 0 replies
- 395 views
-