விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
வடக்கின் தாரகை வீராங்கனை ஆஷிகா விஜயபாஸ்க்கர்
-
- 0 replies
- 564 views
-
-
உலக சம்பியன் பிரான்ஸ் பிஃபா தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம் Image Courtesy - Getty Images சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் பிஃபா உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் ஒன்றரை தசாப்தத்திற்கு பின் முதலிடத்திற்கு முன்னேறியதோடு முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜேர்மனி 12 ஆண்டுகளில் தனது மோசமான தரநிலையை பதிவு செய்துள்ளது. கடந்த ஜுலை மாதம் 15 ஆம் திகதி முடிவடைந்த பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு பின் சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில் பிஃபா உலகத் தரவரிசை இன்று (16) புதுப்பிக்கப்பட்டது. இதில் உலகக் கிண்ணத்தில் சோபித்த அணிகள் அதிரடி முன்னேற்றங்கள் கண்டிருப்பதோடு அந்த தொடரில் ஏமாற்றம் தந்த அணிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. …
-
- 0 replies
- 317 views
-
-
உலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த் – எதில் தெரியுமா? December 10, 2018 அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் என்ற உலக சாதனையை சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி துடுப்பாட்டத்தைவிட, பந்துவீச்சு மற்றும் களத்;தடுப்பில் மிகச்சிறப்பாகச் செயற்;பட்டது. இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களைத் திணறடித்தனர். இதேபோல் இளம் விக்கெட் கீப்பரான ர…
-
- 0 replies
- 607 views
-
-
பிளிஸ்கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நவோமி அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று(வியாழக்கிழமை) பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் பெட்ரா கிவிட்டோவா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 2-வது அரையிறுதி ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்)- 7-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினர். முதல் செட்டை ஒசாகா 6-2 என எளிதில் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது செட்டை பிளிஸ்கோவா 6-4 என அதிரடியாக கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஒசாகா கை ஓங்கியது. அவர் 3-வது செட்டை 6-4 எனக்…
-
- 0 replies
- 440 views
-
-
தோனியை மிஞ்சிய இந்திய கேப்டன் சவுரவ் கங்குலிதானா? இந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக கருதப்படும் கங்குலிக்கும், தோனிக்கும் அடுத்த அடுத்த நாட்களில் பிறந்த நாட்கள் வருகின்றன. நேற்று தோனி 34வது பிறந்த நாளை கொண்டாடினார். இன்று கங்குலிக்கு 43வது பிறந்த நாள். இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த இருவருமே ஜாம்பவான்கள்தான். எனினும் தோனியை விட கங்குலிதான் சிறந்த கேப்டன் என்று சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு கங்குலி கேப்டனாக பொறுப்பேற்ற போது, அணியே பெரும் இக்கட்டில் இருந்தது. அப்போதைய கேப்டன் முகமது அசாருதீன் மேல் சூதாட்டப்புகார் எழுந்து, இந்திய கிரிக்கெட் மீதே ரசிகர்கள் நம்பிக்கை இழந்த சமயத்தில், கேப்டன் பொறுப்பு கங்குலியிடம் ஒப்படைக்கப்…
-
- 0 replies
- 325 views
-
-
ஸ்ரீசாந்த் வாங்கிய புதிய ஜாகுவார் கார்! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் புதியதாக ஜாகுவார் ரக கார் வாங்கியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஸ்ரீசாந்த், ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதால் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படவில்லை. கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்ட பிறகே அவருக்கு திருமணமும் நடந்தது. கடந்த 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் அரச குடும்பத்தை சேர்ந்த புவனேஷ்வரி குமாரியை ஸ்ரீசாந்த் மணந்தார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஸ்ரீசாந்த், புதியதாக ஜாகுவார் ரக காரை வாங்கியுள்ளார். ப…
-
- 0 replies
- 408 views
-
-
சானியாவுக்கு இது பொன்னான வருடம் தனது டென்னிஸ் வாழ்க்கையில் இந்த வருடம் ஒரு பொன்னான வருடமாக அமைந்ததாக இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தெரிவித்துள்ளார். பெண்களுக்கான இரட்டையர் தரவரிசையில் முதல் நிலை வீராங்கனையான சானியா மீர்ஸா, இந்த வருடம் பல வெற்றிகளை ஈட்டியுள்ளதுடன் இந்த வெற்றிகள் மனநிறைவை தருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்தை விட சிறந்த வருடம் மிண்டும் அமைவது மிகவும் கடினம் என அவர் கூறினார். அடுத்த ஆண்டு இந்த ஆண்டை விட சிறப்பாக அமையும் என எதிர்பார்ப்பதுடன் இந்த ஆண்டுக்கு நிகரான வெற்றிகளை குவிக்க முடியும் என்ற…
-
- 0 replies
- 594 views
-
-
பிரபல கிரிக்கெட் வீரருக்குத் தடை சிம்பாபே கிரிக்கெட் அணியின் 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விடோரி, கடந்த மாதம் பங்களாதேஷூக்கு எதிரான 20க்கு இருபது கிரிக்கெட் போட்டியின் போது பந்தை எறிவதாக சர்ச்சையில் சிக்கினார். இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பந்துவீச்சு பரிசோதனை மையத்தில் அவரது பந்து வீச்சு பரிசோதிக்கப்பட்டது. இதில் விதிமுறைக்கு புறம்பாக, பந்து வீசும் போது அவரது முழங்கை 15 டிகிரி கோணத்திற்கு மேல் வளைவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு பந்து வீச தடை விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடோரி, தனது பந்து வீச்சு குறைபாடுகளை சரி செய்த …
-
- 0 replies
- 432 views
-
-
இங்கிலாந்து அணி, 2 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை வென்றது T Bavuma dropped on 19 by C Jordan in 3.5 overs South Africa 53/0 in 5.0 overs 1st wkt Partnership: 53 off 30 balls between T Bavuma (22) and de Kock (31) Mandatory Power play (1-6): South Africa 69/0 de Kock 5th T20I fifty: 53 runs in 17 balls (1x4) (7x6) Referral 1 (6.5 ovs): T Bavuma against ENG (LBW) Successful (ENG: 1, SA: 1) (Retained) South Africa 101/1 in 9.0 overs South Africa 152/3 in 15.1 overs South Africa 200/5 in 19.3 overs Referral 2 (19.5 ovs): D Pretorius against ENG (LBW) Unsuccessful (ENG: 1, SA: 1) (Retained) South Afri…
-
- 0 replies
- 477 views
-
-
ஐசிசி டி20 உலக அணியின் கேப்டன் விராட் கோலி; அணியில் தோனி இடம்பெறவில்லை விராட் கோலி. | படம்: ஏ.எஃப்.பி. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலிக்கு ஐசிசி டி20 உலக அணியின் கேப்டன் என்ற கவரவத்தை ஐசிசி வழங்கியுள்ளது. ஆனால் இந்த அணியில் தோனி இடம்பெறவில்லை. இன்னொரு முக்கிய விடுபடல் என்னவெனில் கிறிஸ் கெய்லும் இந்த அணியில் இடம்பெறவில்லை. வங்கதேசத்தில் நடைபெற்ற முந்தைய உலகக்கோப்பை டி20 முடிந்த பிறகு இறுதிப் போட்டியில் இந்திய அணி நுழைந்ததையடுத்து அறிவிக்கப்பட்ட ஐசிசி ஆல்ஸ்டார்ஸ் அணிக்கு தோனிதான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த அணியில் 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர், தற்போது இது 2-ஆக குறைந்…
-
- 0 replies
- 399 views
-
-
மெஸ்ஸி எனும் ஃபுட்பால் ஏலியன் “இந்த உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் ரொனால்டோ தான். ஏனெனில் மெஸ்ஸி வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்” என்று தான் மொத்த உலகமும் அந்த ஐந்தரை அடி கோல் மெஷினைப் போற்றி வந்தது. எவராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு 5 பாலன் டி ஓர் விருதுகள் வாங்கி கால்பந்து ஏணியின் உச்சானிக் கொம்பில் நிற்பவர் இந்த லயோனல் மெஸ்ஸி. இவரது நுணுக்கங்களும் ஸ்டைலும் வீடியோ கேமில் கூட நம்மால் செய்ய முடியாதவை. கால்பந்தின் ஹிஸ்டரி தெரியாத நம்ம ஊரு யூத்ஸ் கூட மெஸ்ஸியின் பெயர் போட்ட ஜெர்சியை போட்டுக் கொண்டு அளப்பறை செய்வார்கள். கால்பந்து வெறியர்களின் ஒரு தீராக்கனவு மெஸ்ஸியை ஒரு முறையாவது தொட்டுப் பார்க்க வேண்டுமென்பதாகத் தான் இருக்கும். …
-
- 0 replies
- 879 views
-
-
செய்தித்துளிகள்: கேப்டன் பதவியில் அசார் அலி நீடிப்பு இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டி தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் அசார் அலிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு டி 20 அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பொறுப்பு வகிக்கக்கூடும் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அசார் அலியை மீண்டும் கேப்டனாக நியமித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அசார் அலி தலைமையில் பாகிஸ்தான் அணி 25 ஆட்டத்தில் 15 தோல்விகளை சந்தித்துள்ளது. மேலும் ஒருநாள் போட்டி தரவரிசையில் 9-வது இடத…
-
- 0 replies
- 360 views
-
-
1970இல் உலக சம்பியனான பிரேஸில் அணித் தலைவர் கார்லோஸ் காலமானார் 2016-10-27 10:05:40 பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவான்களில் ஒருவரும் 1970 உலக சம்பியனான பிரேஸில் அணியின் தலைவருமான கார்லோஸ் அல்பர்ட்டோ தனது 72ஆவது வயதில் காலமானார். ரியோ டி ஜெனெய்ரோவில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக தெரிவிக்கப்பட்டது. இத்தாலிக்கு எதிராக 1970 இல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கார்லோஸ் புகுத்திய கோல், உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அதி சிறந்த கோலாக இன்றும் புகழப்படுகின்றது. பின்கள வீரரான கார்லோஸ், முன்களத்திற்கு நகர்ந்து தன்னை நோக்கி பரிமாறப்பட்ட பந்தை எவருமே எதிர்…
-
- 0 replies
- 312 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-01#page-12
-
- 0 replies
- 377 views
-
-
சகரிகா கட்ஜ்க்கு கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானுடன் நிச்சயதார்த்தம்: விரைவில் திருமணம் பிரபல கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் - பாலிவுட் நடிகை சகரிகா கட்ஜ்க்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. நேற்று இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சகரிகா கட்ஜ். இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை மையமாக வைத்து கடந்த 2007-ல் இந்தியில் வெளியான `சக் தே இந்தியா' படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் இணைந்து முக்கிய கதாபாத்திர…
-
- 0 replies
- 357 views
-
-
‘செல்சியைத் தவிர்க்கவே அஸ்டன் வில்லாவில்’ செல்சி அணியின் முன்னாள் தலைவரான ஜோன் டெரி, எதிர்காலப் போட்டிகளில், செல்சி அணிக்கெதிராக விளையாடுவதைத் தவிர்ப்பதற்காகவே, அஸ்டன் வில்லா அணியுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். 22 ஆண்டுகளாக செல்சி அணியில் விளையாடியிருந்த டெரி, கடந்த பருவகாலத்துடன், அவ்வணியிலிருந்து விலகியிருந்தார். இந்நிலையிலேயே, அஸ்டன் வில்லா அணியுடன், ஓர் ஆண்டுக்கான ஒப்பந்தமொன்றில் அவர் கைச்சாத்திட்டுள்ளார். வாராந்தம் 77,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் என்ற ஊதியத்திலேயே, இந்த ஒப்பந்தத்தில் அவர் கைச்சாத்திட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது. செல்சி அணி, பிறீமியர் லீக் பிரிவில் விளைய…
-
- 0 replies
- 505 views
-
-
ரஷ்யா - உக்ரேன் போர் - சர்வதேச பராலிம்பிக் குழுவின் அதிரடி அறிவிப்பு 2022 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால பராலிம்பிக் போட்டியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சர்வதேச பராலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, சீனாவின் பீஜிங்கில் நடைபெறும் குளிர்கால பாராலிம்பிக் போட்டியில் அவர்களுக்கு கலந்து கொள்ள முடியாது. குளிர்கால பராலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா நாளை (04) நடைபெறவுள்ளதுடன் அதன் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன. மற்ற உறுப்பு நாடுகளின் எதிர்ப்பால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச பாராலிம்பிக் …
-
- 0 replies
- 283 views
-
-
பாக். கேப்டன் சர்பராஸ் அகமதுவின் நீட்டிய கையைப் புறக்கணித்த கிளென் மேக்ஸ்வெல் படம். | ஏ.எப்.பி. ஹராரேயில் நடைபெற்ற முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியபோது ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெலின் விளையாட்டுணர்வற்ற செயல் பலரது கவனத்தையும் ஈர்த்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது, அப்போது மேக்ஸ்வெல், ஷோயப் மாலிக்குடன் கைகொடுத்தார். நடுவர்களுக்குக் கைகொடுத்தார், ஆனால் பாகிஸ்தான் வெற்றிக் கேப்டன் சர்பராஸ் அகமது தன் கையை மேக்ஸ்வெலை நோக்கி நீட்டியபோதும் கண்டும் காணாமல் சென்றார் கிளென் மேக்ஸ்வெல், இதனை கேமரா…
-
- 0 replies
- 753 views
-
-
பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம் Published By: SETHU 21 MAR, 2023 | 02:58 PM பிரான்ஸின் தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் பிரான்ஸ் தோல்வியுற்றதையடுத்து, அவ்வணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார், இந்நிலையில், புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார் என பிரெஞ்சு கால்பந்தாட்டச் சம்மேளனம் அறிவித்துள்ளது. பயிற்றுநர் டெஸ்சாம்ப்ஸுடனான கலந்துரையாடலையடுத்து, அணித்தலைவர் பதவியை கிலியன் எம்பாப்பே ஏற…
-
- 0 replies
- 391 views
- 1 follower
-
-
ஆசிய விளையாட்டு விழாவுக்கான இறுதி வாய்ப்பை இழந்த அனித்தா கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் யாழ். பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன், 3.40 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். எனினும், அனித்தாவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சச்சினி பெரேராவும் அதே அளவு (3.40 மீற்றர்) உயரத்தைத் தாவி அனித்தாவுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதன்படி, கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகின்ற தேசிய மட்டப் போட்ட…
-
- 0 replies
- 453 views
-
-
மேற்கிந்திய முன்னாள் வீரர்களுக்கு உலகக் கிண்ண போட்டியில் கௌரவம் மேற்கிந்திய அணி இரண்டு முறை உலக கிண்ணத்தை வென்றதற்காக அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் இந்த உலகக் கிண்ணத்தின் போது கௌரவப்படுத்தப்படுகிறார்கள். 1975 மற்றும் 1979 ஆம் ஆண்டு நடந்த முதல் இரண்டு உலகக் கிண்ணத்தை கிளைவ் லொயிட் தலைமையிலான மேற்கிந்திய அணி வென்று மகத்தான சாதனை படைத்தது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த மேற்கிந்திய கிரிக்கெட் சபையும் ஐ.சி.சி.யும் இணைந்து முடிவு செய்துள்ளன. 9 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முதன் முறையாக மேற்கிந்தியாவில் நடைபெறுகிறது. மார்ச் 13 ஆம் திகதி முதல் போட்டி நடக்கிறது. தொடக்கப் போட்டிக்கு முன்பாக, முன்னாள் மேற்கிந்திய வீரர்…
-
- 0 replies
- 826 views
-
-
மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரின் ஓய்வு இலங்கை அணியின் மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் தனது இறுதி டெஸ்ட் போட்டியை தற்போழுது காலி மைதானத்தில் விளையாடிவருகிறார். காலி கிரிகெட் மைதானத்தில் தனது முதலாவது டெஸ்ட் போட்டிகளை ஆரம்பித்த அவர். அதே மைதானத்தில் தனது இறுதி டெஸ்ட் போட்டியையும் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. முத்தையா முரளிதரனின் ஓய்வுக்குப் பின்னர் ஹேரத்தின் வருகை இலங்கை அணிக்கு பெரும் பக்கபலமாக இருந்தது. என்றாலும் தற்போது 40 வயதைக் கடந்துள்ள ஹேரத் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக இடம்பெற்ற 3 டெஸ்ட் தொடர்களினும் முழுமையாக விளையாடவில்லை. இன்று தனது இறு…
-
- 0 replies
- 538 views
-
-
ஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி! பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் ஷாய் ஹோப்பின் அதிரடியால் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. அதில் டெஸ்ட் போட்டியை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவது ஒருநாள் போட்டியையும் இழந்திருந்தது. இந்நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் இன்று பங்களாதேஷ் அணியுண்ட பலப்பரிட்சை நடத்தியது. டாக்காவில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய த…
-
- 0 replies
- 694 views
-
-
ஆஷஸ் தொடரைக் குறிவைக்கும் கெவின் பீட்டர்சன் 170 ரன்கள் விளாசல் மீண்டும் இங்கிலாந்து அணியில் நுழைய அவருக்குப் பிடித்தமான ஐபிஎல் கிரிக்கெட் ஒப்பந்தத்தையே கைவிட்ட கெவின் பீட்டர்சன் கவுன்ட்டி கிரிக்கெட்டில் அதிரடி 170 ரன்கள் விளாசினார். சர்ரே அணிக்காக அவர் நேற்று 170 ரன்களை விளாசினார். ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து 5-0 என்று உதை வாங்கிய பிறகு கெவின் பீட்டர்சன் பலிகடாவாக்கப்பட்டார். இவரை நீக்கியதில் ஸ்டூவர்ட் பிராட், மேட் பிரையர் பயிற்சியாளர் மூர்ஸ், கேப்டன் குக் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்க பங்காற்றினர். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தோல்வி அடைந்த பிறகு இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் மீண்டும் திரும்புவது பற்றிய பேச்சுக்கள் எழுந்தன. இந்நிலையில் இங்கிலாந்துக்காக ம…
-
- 0 replies
- 567 views
-
-
விராட் கோலி தலைமையில் இந்தியா உலகக் கோப்பை வெல்லும்: சவுரவ் கங்குலி நம்பிக்கை விராட் கோலி ரன்கள் குவிக்கும் வரையில் அவரது சொந்த நடத்தையைப் பற்றி பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் டால்மியா, விராட் கோலியின் நடத்தை நெருக்கமாக கண்காணிக்கப்படும் என்றும், மீறல் தொடர்ந்தால் வாரியம் தலையிடும் என்ற ரீதியில் தெரிவித்திருந்தது பற்றி சவுரவ் கங்குலியிடம் கேட்ட போது, “விராட் கோலி பற்றி அவர் என்ன கூறினார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் விராட் ஒரு அபாரமான கிரிக்கெட் வீரர். நான் அப்படித்தான் பார்க்கிறேன். அவர் இளம் வீரர். 26 வயதுதான் …
-
- 0 replies
- 287 views
-