விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் 2014-10-03 13:28:14 ஆசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான இருபது20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 68 ஓட்டங்களால் இலங்கை அணி வென்றது. தென் கொரியாவின் இன்ச்சொன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 131 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அணித்தலைவர் லஹிரு திரிமான்ன 37 பந்துகளில் 57 ஓட்டங்களைக் குவித்தார். தினேஷ் சந்திமால் 27 பந்துகளில 33 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 65 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் சகல விக்கெட்களையும…
-
- 0 replies
- 443 views
-
-
சுனில் நரைன் பந்து வீச்சு மீது நடுவர்கள் புகார் பவுலிங் செய்யாமல் த்ரோ செய்யும் பந்து வீச்சாளர்கள் மீது ஐசிசி-யின் நடவடிக்கைகள் இறுகுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரைன் மீது தற்போது நடுவர்கள் த்ரோ புகார் எழுப்பியுள்ளனர். நேற்று ஐதராபாதில் நடைபெற்ற டால்பின்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலர் சுனில் நரைன் பந்து வீச்சு மீது கள நடுவர்களான அனில் சவுதாரி மற்றும் சேட்டிஹோடி சம்சுதின் மற்றும் 3வது நடுவர் குமார் தர்மசேனா ஆகியோர் புகார் எழுப்பினர். சுனில் நரைன் வீசும் வேகப்பந்து த்ரோ போல் தெரிகிறது என்று இவர்களது புகார் ஆகும். சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் சட்டவிரோத பந்துவீச்சுக் கொள்கையின் படி முதலில் பிசிசிஐ சட்டவிரோத பந்து…
-
- 2 replies
- 630 views
-
-
மரியாதை குறைவாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்துகிறது : யூனிஸ்கான் மூத்த வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்தும் விதம் வேதனையளிக்கிறது. நான் உடற்தகுதியுடன் இல்லை என தேர்வுக்குழு தலைவர் மொயீன் கான் எப்படி கூற முடியுமென பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவரும், மூத்த வீரருமான யூனிஸ்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவரும், மூத்த வீரருமான யூனிஸ்கான், 15 மாதங்களுக்குப் பின்னர் கடந்த மாதம் இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற ஒருநாள் தொடரில் விளையாட அழைக்கப்பட்டார். அதில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய யூனிஸ்கான், உறவினரின் மரணத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குத் திரும்பினார். இந்நிலையில் அடுத்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எத…
-
- 0 replies
- 417 views
-
-
கீழே விழுந்து பந்தை பிடிக்க இந்திய அணி வீரர்கள் யோசிக்கிறார்கள்: ஜான்டி ரோட்ஸ் கருத்து தென்னாப்பிரிக்க அணி வீரர்களுடன் ஒப்பிடுகையில் கிரிக்கெட் ஆட்டத்தின் போது இந்திய அணி வீரர்கள் கீழே விழுந்து பந்தை தடுக்க யோசிக்கிறார்கள் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிறந்த ஃபீல்டருமான ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார். கோவை ஜி.ஆர்.டி. அறிவியல் கல்லூரியில் ஜான்டி ரோட்ஸுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்டி ரோட்ஸிடம் மாணவர்கள் கேள்வி கேட்டனர். அவர்களுக்கு பதில் அளித்து ஜான்டி ரோட்ஸ் பேசியதாவது: இந்திய அணியில் தற்போது சிறந்த ஃபீல்டர் என்றால் யாரைக் குறிப்பிடுவீர்கள்? தற்போதைய இந்திய அணியில் நான் பார்த்த வகையில்…
-
- 0 replies
- 408 views
-
-
சகோதரனின் கிரிக்கெட் வாழ்க்கையை பாக்.கிரிக்கெட் சபை சீரழிக்கின்றது : கம்ரான் அக்மல் சசோதரனுக்கு விக்கெட் காப்பளர் பணியைக் கொடுத்து அவரது கிரிக்கெட் வாழ்க்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களும் நிர்வாகிகளும் சீரழிக்கின்றனரென கம்ரான் அக்மல் குற்றம் சாட்டியுள்ளார். கம்ரான் அக்மல் கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். அதேபோல் கடந்த ஆண்டிலிருந்து ஒருநாள் போட்டிக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் தேர்வாளர்கள் தனது சகோதரர் மற்றும் அணியில் நடு வரிசை துடுப்பாட்டக்காரராக உள்ள உமர் அக்மலின் கிரிக்கெட் வாழ்க்கையை கெடுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கம்ரான் அக்மல் தெரிவிக்கையில், ஒருநாள் ம…
-
- 0 replies
- 696 views
-
-
அதிக உடல் எடை : அப்ரிடி, உமர் அக்மலிடம் அபராதம் அப்ரிடி, உமர் அக்மல், அப்துர் ரகுமான், ராசாஹசன் ஆகிய நான்கு முன்னணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எடையுடன் இருந்ததால் அவர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சமீபத்தில் அதிரடியான உத்தரவாக ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் உடல் தகுதி இல்லாவிட்டால் அவர்களின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தது. அதன்படி வீரர்களிடம் உடல் தகுதி சோதனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்தியது. இந்நிலையில் இருபதுக்கு 20 அணித்தலைவர் சகீத் அப்ரிடி, உமர் அக்மல், அப்துர் ரகுமான், ராசாஹசன் ஆகிய 4 முன்னணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எட…
-
- 0 replies
- 351 views
-
-
திரைப்படமாகிறது தோனியின் வாழ்க்கை: சுஷாந்த் சிங் ராஜ்புத் ஹீரோவாக நடிக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவரவுள்ளது. இதில் தோனியாக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார். ‘M.S. Dhoni - The Untold Story’ என்ற இந்தத் திரைப்படத்தின் அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படம் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின்போது வெள்ளித்திரைக்கு வரலாம் என்று தெரிகிறது. நிதி ஆதாரப் பிரச்சினைகளில் இந்தத் திரைப்பட முயற்சி சிக்கியிருப்பதாக செய்திகள் வந்தன. இன்று இத்திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் வெளியானதையடுத்து தோனியின் மனைவி சாக்ஷி தோனி தனது ட்விட்டரில், “கடந்த சில நாட்களாக உலவி வந்த வதந்திகள் முடிவுக்கு வந்தன. அவையனைத…
-
- 0 replies
- 459 views
-
-
'பிடிக்காத' நாட்டில் இருந்து வாழ்நாள் சாதனை விருதைப் பெற்ற கபில்தேவ் லண்டன் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் கபில் தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது. இந்த விருதை இந்திய-ஐரோப்பிய வர்த்தக அமைப்பு வழங்கியுள்ளது. விளையாட்டுத் துறையில் கபில்தேவின் பங்களிப்புக்காகவும் குஷீ சொசைட்டி மூலம் ஏழை மற்றும் ஆதரவற்றோர் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு கபில் தேவின் பங்களிப்பை அங்கீகரித்தும் அவருக்கு நேற்று விருது அளிக்கப்பட்டது. விருதை ஏற்றுக் கொண்டு பேசிய கபில்தேவ் “இந்தியனாக இருப்பதில் பெருமையடைகிறேன், இன்றைய தினம் இந்தியா உலக அளவில் எந்த நாட்டுடனும் வர்த்தகத்தில் ஈடுபடத் தயாராக இருக்கிறது” என்றார். பிறகு கொஞ்சம் நகைச…
-
- 0 replies
- 758 views
-
-
பீட்டர்சன் என்ற தலைவலியை குக்கினால் சமாளிக்க முடியாது: பாய்காட் இங்கிலாந்து அணியில் மீண்டும் கெவின் பீட்டர்சன் தேர்வு செய்யப்பட வாய்ப்பேயில்லை என்று கூறியுள்ளார் ஜெஃப்ரி பாய்காட். ஸ்போர்ட் 24 பேட்டியில் அவர் கூறும் போது, “கெவின் பீட்டர்சன் இங்கிலாந்துக்கு மேட்ச்-வின்னிங் ஆட்டங்களை ஆடக்கூடியவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அவர் சில தலைவலிகளைக் கொடுப்பார். அதனைச் சமாளிக்க தற்போதைய கேப்டன் அலிஸ்டர் குக் லாயக்கற்றவர். முன்னாள் கேப்டன்களில் மைக்கேல் வான் போன்றவர்கள் பீட்டர்சன் போன்ற ஆளுமைகளைத் திறமையாகக் கையாள்வார். ஆனால் குக்கினால் முடியாது. ஆகவே பீட்டர்சன் மீண்டும் இங்கிலாந்துக்காக ஆடுவது கடினமே” என்றார். இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆஷஸ் தொடரில் இ…
-
- 0 replies
- 501 views
-
-
கவுண்ட்டி கிரிக்கெட்டில் பந்தைக் கையால் தடுத்து ஆட்டமிழந்தார் புஜாரா இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் டெர்பிஷயர் அணிக்கு விளையாடி வரும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மென் புஜாரா விசித்திரமான முறையில் ஆட்டமிழந்தார். லீஷயர் அணிக்கு எதிரான 4 நாள் கிரிக்கெட் போட்டி நேற்று டெர்பி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற லீஷயர் அணி முதலில் டெர்பியை பேட் செய்ய அழைத்தது. 4ஆம் நிலையில் களமிறங்கிய புஜாரா 28 நிமிடங்கள் ஆடினார், 21 பந்துகளைச் சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தின் 20வது ஓவரில் லீஷயரின் இடது கை மீடியம் ஃபாஸ்ட் பவுலர் அடிஃப் ஷேய்க் பந்து வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை ஷெய்க் வீச புஜாரா பந்தைக் கையால் தட்டி விட்டதாக நடுவரால் அவுட் கொடுக்கப்…
-
- 0 replies
- 708 views
-
-
சிக்சர் மழையில் பொலார்டிற்கு அடுத்த இடத்தில் ரெய்னா டால்பின்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் 43 பந்துகளில் 90 ரன்கள் விளாசிய சுரேஷ் ரெய்னா டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கண்ட முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 183 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா மொத்தம் 5023 ரன்களை 34.88 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 5000 கடந்த முதல் இந்திய வீரர் என்பதோடு உலக அளவில் 7வது வீரராகவும் திகழ்கிறார். டால்பின்ஸ் அணிக்கு எதிராக 8 சிக்சர்களை விளாசிய ரெய்னா, சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் மொத்தம் 31 சிக்சர்களை அடித்து 2ஆம் இடத்தில் உள்ளார். 21 இன்னிங்ஸ்களில் இவர் 31 சிக்சர்களை அடிக்க கெய்ரன் பொலார்ட் 27 இன்னிங்ஸ்களில் 49 சிக்சர்களுடன் முதல…
-
- 0 replies
- 373 views
-
-
தனி நிறுவனமாகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் "சென்னை சூப்பர் கிங்ஸ் டிவிஷனை தனி உரிமை துணை நிறுவனமாக மாற்ற எங்கள் நிறுவனம் (இந்தியா சிமெண்ட்ஸ்) முன்மொழிந்துள்ளது” என்று மும்பைப் பங்குச் சந்தைக்கு ஃபைல் செய்த மனுவில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதி இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்தியா சிமெண்ட்ஸிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு தனிச்சிறப்பான பிராண்ட் இமேஜை வழங்கியுள்ளது. மேலும் அனைத்திந்திய கார்ப்பரேட் நிறுவனம் என்ற அடையாளத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பிராண்ட் இந்தியா சிமெண்ட்ஸிற்கு வழங்கியது. தோனி என்ற மிகப்பெரிய கிரிக்கெட் பிம்பத்தின் காரணமாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் குஜராத் ம…
-
- 0 replies
- 520 views
-
-
மாலிங்கவுக்கு இடது காலில் சத்திரசிகிச்சை சனிக்கிழமை, 20 செப்டெம்பர் 2014 இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லலித் மாலிங்க தனது இடது காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சத்திரசிகிச்சை செய்து கொள்வதற்காக அவர், அவுஸ்திரேலியாவுக்கு இன்று பயணமாகிறார். இந்தநிலையில் அவரால் 16 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக 2015 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே அவரால் பயிற்சிகளில் ஈடுபட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி 14ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் ஆரம்பமாகின்றன. எனவே உலக கிண்ணப்போட்டிகளில் மாலிங்கவின் பங்களிப்பு குறித்து சந்தேகம் வெளி…
-
- 0 replies
- 375 views
-
-
இனியாவது நிறுத்துங்கள் அரசியல் விளையாட்டை! நாங்கள் இந்தியாவில் வசிக்கவில்லை. கிரிக்கெட் விளையாடுவதற்காகவே இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் தாயகம் திரும்புகிறபோது எங்களின் கிரிக்கெட் ஆட்டத்தாலும், செயல்களாலும் இங்குள்ள மக்களின் மனங்களை கவர்ந்து செல்வோம். இங்கே எங்களுடைய வீரர்களுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை அழிக்க நாங்கள் விரும்பவில்லை. இப்படி மிக அழகாக முதிர்ச்சியோடு பேசியிருப்பவர் வேறு யாருமல்ல, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வரும் லாகூர் லயன்ஸ் அணியின் கேப்டனுமான முகமது ஹபீஸ்தான். விளையாட்டில் அரசியலை கலக்காதீர்கள். பிரச்சினை என்பது இரு நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு இடையில்தான். வ…
-
- 0 replies
- 524 views
-
-
17ஆவது ஆசிய விளையாட்டு விழா இன்று ஆரம்பம் 2014-09-19 11:21:08 ஆசிய விளையாட்டு விழாவின் 17ஆவது அத்தியாயம் தென் கொரியாவின் இன்சொன் நகரில் அமைந்துள்ள பிரதான விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறும் கோலாகல தொடக்க விழா வைபவத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடக்க விழாவில் சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளுடன் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்படவுள்ளன. நாடுகளின் அணிவகுப்பு, ஆசிய விளையாட்டு விழா கொடியேற்றம், ஆசிய விiளாயட்டுத் தீபம் ஏற்றல், வீர, வீராங்கனைகள், மத்தியஸ்தர்கள் ஆகியோரின் சார்பிலான சத்தியப் பிரமாணங்கள் என்பன ஆரம்ப விழா வைபவத்துடன் பின்னிப் பிணைந்த நிகழ்வுகளாகும். இப் போட்டிகளில் ஆசிய ஒலிம்பிக் பேரவையில் அங்கம் வகிக்கும் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13000 வீர, வீராங்கனைகள் பங்…
-
- 0 replies
- 547 views
-
-
தலைமுறையில் ஒருமுறைதான் தோனி போன்ற வீரர்கள் கிடைப்பார்கள்: காஸ்பரோவிச் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் காஸ்பரோவிச், இந்திய அணியின் ஆஸ்திரேலிய தொடர் பற்றி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்திய கேப்டன் தோனி பற்றி கூறுகையில், “தோனி ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த வீரர் என்றே நான் கருதுகிறேன். தோனி போன்ற வீரர்கள் எப்போதும் அபாயகரமானவர்கள், இவரைப்போன்றவர்கள் தலைமுறைக்கு ஒரு முறையே உருவாகக் கூடியவர்கள்” என்றார். இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா செல்கிறது, அங்கு இந்திய அணியின் வாய்ப்புகளைப் பற்றி அவர் கூறுகையில், “இந்திய அணியின் இப்போதைய வீரர்கள் நிச்சயம் திறமை மிக்கவர்கள். அவர்கள் ஆஸ்திரேலியாவில் ஆதி…
-
- 0 replies
- 356 views
-
-
அதிக பந்துகள்... ஆனால் ரன் எடுக்காமல் அவுட்: விசித்திர சாதனைகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக பந்துகளை எதிர்கொண்டு ஆனால் 1 ரன் கூட எடுக்காமல் 0-வில் ஆட்டமிழந்த சில வீரர்கள் இருக்கிறார்கள். டெஸ்ட் போட்டியில் அத்தகைய விசித்திர சாதனைகள் செய்த வீரர்கள்: 1 ரன் கூட எடுக்காமல் அதிக பந்துகளை விளையாடி கடைசியில் டக் அவுட் ஆனவர்களில் முதலிடத்தில் இருப்பவர். நியூசி. வீரர் ஜெஃப் ஆலட். இவர் 1999ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 77 பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சமீபமாக இலங்கைக்கு எதிராக 2014ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் 55 பந்துகள் விளையாடி டக் அவுட் ஆனார். அட! இந்தியாவுக்கு எதிராகவும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இருபதுக்கு - 20 போட்டிகளின் தலைவராக அப்ரிடி நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தலைவராக அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய தொடர்களில் அப்ரிடி தலைவராக செயற்படவுள்ளார். இந்தியாவில் 2016 இல் நடைபெறவுள்ள உலக இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிவரை பாகிஸ்தானின் இருபதுக்கு 20 கிரிக்கட் அணித் தலைவர் பதவியை அவர் வகிப்பார் என அந் நாட்டு கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. பங்களதேஷில் இவ் வருடம் நடைபெற்ற உலக இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகளின் முதல் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியதை அடுத்து மொஹமட் ஹபீஸ் அணித் தலைவர் பதவியைத் துறந்திருந்தார். அ…
-
- 0 replies
- 382 views
-
-
21ஆம் நூற்றாண்டின் முதல் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை 21ஆம் நூற்றாண்டின் முதல் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை அயர்லாந்து வீராங்கனை கேபி லூயிஸ் பெற்றுள்ளார். 13 ஆண்டுகள் 166 நாட்களே நிரம்பிய கேபி லூயிஸ் சீனியர் கிரிக்கெட் அணிக்கு ஆடிய, 21ஆம் நூற்றாண்டில் பிறந்த முதல் கிரிக்கெட் வீராங்கனை ஆவார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 20 ஓவர் கிரிக்கெட் சர்வதேச போட்டியில் இவர் அயர்லாந்துக்காக தன் முதல் போட்டியில் ஆடினார். இவரது முதல் போட்டி அபாரமாக அமையவில்லை. இவர் 5 ரன்கள்தான் அடித்தார். தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிராக அயர்லாந்து மகளிர் அணி படுதோல்வியைச் சந்தித்தது. அடுத்த போட்டியில் 12 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அந்தப் போட்டியிலும் அய…
-
- 0 replies
- 410 views
-
-
சிங்கப்பூர் ஓ சி பி சி தொகுதி உள்ளக அரங்கில் ஞாயிறன்ற ஆரம்பமான ஒன்பதாவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் குழு பியில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் சைனீஸ் தாய்ப்பேயின் சவாலை முறியடித்து 57 - 36 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது. (Photo: Netball Singapore) சைனீஸ் தாய்ப்பே அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளில் பெரும்பாலானவர்கள் கூடைப்பந்தாட்ட வீராங்கனைகள் என்பதால் அவர்கள் அதி வேகமாக விளையாடி இலங்கை அணிக்கு சவால் விடுத்த வண்ணம் இருந்தனர். எனினும் இவ் வருடப் போட்டிகளில் சம்பியனாகி அடுத்த வருட உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறவேண்டும் என்ற கங்கணத்துடன் விளையாடிய இலங்கை அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது. இப்…
-
- 6 replies
- 995 views
-
-
500வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரலாறு படைக்கும் வெஸ்ட் இண்டீஸ்: சில சுவையான தகவல்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 500வது டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடுகிறது. வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டிற்கு ஒரு வரலாற்று கணமாகும். ஆனால் இந்த வரலாற்றுக் கணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் விளையாட முடியாமல் போயுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 1928ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. இங்கிலாந்துக்கு எதிரான 1928ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கார்ல் நூனெஸ். இந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் வெற்றி: …
-
- 0 replies
- 433 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சயீட் அஜ்மல் இடைநிறுத்தம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னிலை சுழற்பந்துவீச்சாளரான சயீட் அஜ்மல் சர்வதேச போட்டிகளிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) இன்று அறிவித்துள்ளது. சயீட் அஜ்மலின் பந்துவீச்சுப் பாணி விதிகளுக்கு முரணானது என கண்டறியப்பட்டதையடுத்து அவர் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6772#sthash.SXUY3STC.dpuf
-
- 4 replies
- 636 views
-
-
தோனியின் தகுதிக்கு உரிய கவுரவம் இன்னும் கிடைக்கவில்லை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தகுதிக்கு உரிய கவுரவம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றே கருதுகிறேன் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் இயக்குநருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்தவர்களில் இதுவரை யாருக்குமே கிடைக்காத பாராட்டுகள் தோனிக்கு கிடைத்துள்ளது. அதற்கு அவர் முழு தகுதியானவர்தான். அவரது தலைமையில்தான் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. இப்போதும் கூட தோனியின் தகுதிக்குரிய கவுரவம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும் என்றார். இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணி ட…
-
- 0 replies
- 398 views
-
-
பேட்ஸ்மென்களை பவுல்டு செய்வதை குறிக்கோளாகக் கொண்ட முரளிதரன்: பிரசன்னா அலசல் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்கான உலக சாதனை படைத்த இலங்கையின் முத்தையா முரளிதரன் பந்து வீச்சு பற்றி இந்திய முன்னாள் ஸ்பின் பவுலர் ஈராப்பள்ளி பிரசன்னா தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். இ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்தின் தொடர் ஒன்றில் அவர் முரளிதரன் பந்து வீச்சு பற்றி கூறியதாவது: மிகவும் சுவாரஸ்யமான ஒரு ஸ்பின் பவுலர் என்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது முத்தையா முரளிதரனே. இவரது பந்து வீச்சை விவரிப்பது அவ்வளவு சுலபமல்ல. முரளிதரன் ஒரு வினோதமான பவுலர். இவரது பந்து வீச்சு முறை குறித்து சர்ச்சைகள் இருந்தாலும், ஸ்பின் உலகின் தலை சிறந்த பவுலர் அவர். இவரது பந்துகள் பல முறையற்றவை என்று கர…
-
- 2 replies
- 573 views
-
-
விராத் கோஹ்லி நம்பர்–1 , ஒருநாள் போட்டிகளில் சொதப்பிய விராத் கோஹ்லி, ‘டுவென்டி–20’ தரவரிசைப்பட்டியலில் ‘நம்பர்–1’ இடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி. சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்டில் மொத்தம் 134 ரன்கள்(சராசரி 13.40) தான் எடுத்தார். நான்கு ஒருநாள் போட்டிகளில் வெறும் 54 ரன்கள்(சராசரி 26.00) எடுத்தார். இந்நிலையில், நேற்று ஐ.சி.சி., வெளியிட்ட சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிக்கான ‘பேட்டிங்’ தரவரிசை பட்டியலில் முதன் முறையாக முதலிடம் பெற்று வியப்பு அளித்துள்ளார் கோஹ்லி. சமீபத்தில் பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில், இவர், 41 பந்தில் 66 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 8 ரேட்டிங் புள்ளிகள் பெற்ற கோ…
-
- 0 replies
- 499 views
-