விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
பிரிமியர் லீக் கால்பந்து - இந்த வார அப்டேட் இங்கிலாந்தில் உள்ள சிறந்த 20 கால்பந்து கிளப்கள் மோதும், பிரிமியர் லீக் தொடர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 38 வாரங்கள் நடக்கும் இந்த தொடர் தற்போது 29-வது வாரத்தை நெருங்கியுள்ளது. இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் ஆட்டங்கள் உண்மையிலேயே சூடு பிடிக்க தொடங்கி உள்ளன. இந்த வாரம் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடைபெற்றதால் இங்கு பிரிமியர் லீக்கில் குறைவான ஆட்டங்களே அட்டவணையில் உள்ளன. இந்த வார ஆட்டங்களை பார்ப்பதற்கு முன், புள்ளிகள் பட்டியலில் அணிகளின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். செல்சி கிளப் 66 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள டோதன்ஹாம் அணியை…
-
- 0 replies
- 296 views
-
-
உலக சிலம்பம் சம்பியன்ஸிப் போட்டி இந்தியா பெங்களூரில் மே 12ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, சுவீட்சர்லாந்து, இங்கிலாந்து, மலேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர், பெல்ஜியம், இத்தாலி, துபாய் ஆகிய பத்து நாடுகள் பங்குப்பற்றின. சிலம்பத்தின் பகுதிகளான நெடுகம்பு வீச்சு, இரட்டை நடுகம்பு வீச்சு, வேல்கம்பு ஆகிய போட்டிகளுக்காக மலையகத்திலிருந்து சென்ற 19 வீரர்கள் 69 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டனர். இவ்வீரர்களுக்கு பயிற்சியை திவாகரன்,ராம்குமார்,தினேஸ்குமார் ஆகியோர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/254363
-
- 0 replies
- 296 views
- 1 follower
-
-
மத்தியின் வர்ண இரவு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் வழங்கப்படவுள்ள வர்ண இரவு விருதிற்கான விண்ணப்பங்கள் கல்லூரியின் பழைய மாணவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளதாகக் கல்லூரி அதிபர் எஸ்.கே. எழில் வேந்தன் அறிவித்துள்ளார். மத்திய கல்லூரியில் கல்வி கற்று விளையாட்டுத்துறை அமைச்சு, கல்வியமைச்சு, இளைஞர் விவகார அமைச்சு, ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட தேசிய மட்ட சங்கங்கள் போன்றன நடத்திய தொடர்களில் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய, தேசிய அணியில் இடம் பெற்ற, சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்ட, சர்வதேச போட்டிகளில் வெற்றியீட்டிய பழைய மாணவர்களிடமிருந்தே விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பப் படிவங்களையும் ச…
-
- 0 replies
- 296 views
-
-
கஜிஸ்கோ றபடாவுக்கு விருது மழை தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்துவரும் இளம் வீரரான கஜிஸ்கோ றபடா, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் வருடாந்த விருதுகளை அள்ளியெடுத்துக் கொண்டார். 21 வயதான றபடா, இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளிலும் 20 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 16 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் மாத்திரமே விளையாடியுள்ள போதிலும், அவ்வணியின் முக்கிய வீரராக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. விருது விவரம்: சிறந்த கிரிக்கெட் வீரர்: கஜிஸ்கோ றபடா சிறந்த டெஸ்ட் வீரர்: கஜிஸ்கோ றபடா சிறந்த ஒ.நா.ச.போ வீரர்: கஜிஸ்கோ றபடா சிறந்த இ-20 ச.போ வீரர்: இம்ரான் தாஹிர் வீரர்களின் சிறந்த வீரர்: கஜிஸ்கோ றபடா இரசிகர்களின் சிறந்த வீரர்:…
-
- 0 replies
- 296 views
-
-
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அசார் அலி ராஜினாமா பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த அசார் அலி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின், ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்தவர் அசார் அலி. சமீபத்தில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் அணிக்கு அசார் அலி கேப்டனாக இருந்தார். இந்த தொடரில் பாகிஸ்தான் 1-4 என படுதோல்வியடைந்தது. இதனால் அசார் அலி மீது விமர்சனம் எழுந்தது. மேலும் அனைத்த…
-
- 0 replies
- 296 views
-
-
கங்குலியின் அழைப்பின் பேரில் சாதனை மன்னன் ரூனி இந்தியா வருகிறார்! இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் வேயர்ன் ரூனி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் அழைப்பின் பேரில் இந்தியா வரவுள்ளார். நடப்பு சீசனுக்கான ஐ.எஸ்.எல். தொடர் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் மாதத்தில் டெல்லி வரும் கால்பந்து ஜாம்பவான் பீலே, கொல்கத்தா சென்று. அத்லெடிகோ டி கொல்கத்தா அணி விளையாடும் கால்பந்து போட்டியை காணவுள்ளார். கொல்கத்தாவில் நேற்று அத்லெடிகோ டி கொல்கத்தா அணியின் உரிமையாளரான சவுரவ் கங்குலி செய்தியாளர்களிடம் கூறுகையில்'' இங்கிலாந்து அணியின் வேயர்ன் ரூனி நவம்பர் மாதத்தில் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் கொல்கத்தா வருகிறார். மான்செஸ்டர் யுனைடெட…
-
- 0 replies
- 296 views
-
-
ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ரஷிய வீராங்கனைக்கு உலக தடகள கூட்டமைப்பு அனுமதி ரியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் எந்த ஒரு நாட்டையும் சாராத நடுநிலையாளராக கலந்து கொள்ள ரஷிய வீராங்கனை யூலியா ஸ்டெப்பநோவாவிற்கு உலக தடகள கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஊக்க மருந்து சர்ச்சையை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷிய வீரர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், யூலியா ஸ்டெப்பநோவா ரியோ போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல் ரஷியர் ஆவார். அதீத திறமை காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான யூலியா ஸ்டெப்பநோவாவின் விண்ணப்பதைஏற்று கொண்டதாக உலக தடகள ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. 2013ல் ஊக்க மருந்து மோசடியில் சிக்கும் வரை, 100 மீட்டர் …
-
- 0 replies
- 296 views
-
-
இலங்கையில் பலரை விசாரணை செய்கின்றோம்- ஐ .சி.சி. அதிகாரி அதிர்ச்சித் தகவல் ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவினர் இலங்கையில் பலரை விசாரணை செய்து வருகின்றனர் என அதன் தலைவர் அலெக்ஸ் மார்சல் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்குள் ஊருடுவி அதற்கும் இளம் வீரர்களிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வரும் ஊழல் மற்றும் துஸ்பிரயோகம் என்ற நச்சுவட்டத்தை உடைக்க முயல்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கின்போவுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பேட்டடியின் வடிவம் வருமாறு, கேள்வி - இலங்கையில் தனது நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு ஏன் தீர்மானித்தது? அலெக்ஸ் மார்சல்- இலங்கை உட்பட பல நாடுகள் குறித்து எங்களிற்கு பெருமளவு …
-
- 0 replies
- 296 views
-
-
‘உன் வழியில் செய், அவர்கள் வழியில் செய்யாதே’- ஸ்லெட்ஜிங் குறித்து தோனியின் அணுகுமுறை படம். | ஏ.பி. கேப்டன் கூல் தோனி அவ்வளவு கூல் அல்ல என்பதற்கு மேலும் ஓரு உதாரணமாகவும், எதையும் தனித்துவமாகச் செய்வதில் தோனியின் பாணி கவனத்துக்குரியதும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டதுமானது என்பதை பரத் சுந்தரேசன் என்பவர் தனது புதிய புத்தகமான The Dhoni Touch என்பதில் விவரித்துள்ளார். அந்தப் புத்தகத்தில் அவர் விவரித்துள்ள சுவையான தகவல்கள் சில: 2008-ல் காமன்வெல்த் பேங்க் ஒருநாள் தொடரில் பாண்டிங் தலைமை ஆஸ்திரேலியா 159 ரன்களுக்கு மடிந்தது, இந்தியாவுக்கு 160 ரன்கள் இலக்கு எனும்போது வெற்றி பெற இன்னும் 10 ரன்கள் உள்ள …
-
- 0 replies
- 296 views
-
-
ஐ.சி.சி. யின் உலக அணி அறிவிப்பு : சங்காவும் இடம்பிடிப்பு 2015 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் கனவு அணியை ஐ.சி.சி இன்று அறிவித்துள்ள அதேவேளை, இலங்கை அணியின் நட்சத்திரம் குமார் சங்கக்காரவும் உலகக் கிண்ண அணியில் இடம்பிடித்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் அணிக்கு நியூசிலாந்து அணியின் தலைவர் பிரண்டன் மெக்குலம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 44 நாட்களாக இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை மூலைக்கல்லாக நின்று வழிநடத்திய மெக்குலம் 4 அரைச்சதங்களை பெற்றதுடன் 328 ஓட்டங்களை குவித்துள்ளார். ஐ.சி.சி. யின் கனவு அணியில் நியூசிலாந்து அணி வீரர்கள் ஐவரும் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் மூவரும் தென்னாபிரிக்க வீரர்கள் இருவரும் இலங்கை வீரர் ஒருவ…
-
- 0 replies
- 296 views
-
-
சானியா மிர்ஷாவுக்கு விளையாட்டுத்துறையின் உயரிய 'ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது' விளையாட்டுத்துறையில் இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது' இந்த ஆண்டு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷாவுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு அர்ஜுனா விருதையும் 2006ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் சானியா மிஷ்ரா பெற்றுள்ளார். விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. கடந்த 2013-14ஆம் ஆண்டில் யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டுக்கான விருதுக்குரியவர்களை தேர்வு செய்யப்பட வேண்டியவர்கள் குறித்து அற…
-
- 0 replies
- 296 views
-
-
இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரர் ரூனே கைது: குடிபோதையில் கார் ஓட்டியதாக வழக்கு இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரரான வேய்ன் ரூனே குடிபோதையில் கார் ஓட்டியதாக போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். சர்வதேச கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த வேய்ன் ரூனே(வயது 31). இங்கிலாந்து அணிக்காக 119 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள ரூனே, 53 கோல்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக அதிக கோல் அடித்த வீரரான இவர் சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தனது சொந்த அணியான எவர்ட்…
-
- 0 replies
- 296 views
-
-
மஸ்ரபீ முர்தஷாவுக்கு போட்டித் தடை விதித்தது ஐ.சி.சி! பங்களாதேஷ் அணியின் தலைவர் மஸ்ரபீ முர்தஷாவுக்கு ஒருநாள் போட்டியொன்றில் விளையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. இலங்கை அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியின் போது, பந்துவீசுவதற்கு வழங்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டமைக்காகவே குறித்த போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவரது போட்டிக் கட்டணத்தில் 40 சதவீதம் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதுடன், ஏனைய வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் தண்டமாக அறவிடப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 70 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk…
-
- 0 replies
- 296 views
-
-
பந்து வீச்சில் சகாப்தம்: பிராட்மேனுடன் ஒப்பிடுவது மிகப்பெரிய கவுரவம் - அஸ்வின் பந்து வீச்சின் பிராட்மேன் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் தன்னை ஒப்பிட்டது மிகப்பெரிய கவுரவம் என்று அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை: இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவர் 250 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஸ்வின் அதிவேகப் பந்தில் 250 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை புரிந்தார். அஸ்வினின் பந்து வீச்சை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் வெகுவாக பாராட்டி இரு…
-
- 0 replies
- 295 views
-
-
வார்னருடன் சண்டையில் ஈடுபட்ட ஜோ ரூட்டுக்கு மது விருந்துகளில் பங்கேற்கத் தடை! ஆஷஸ் தொடரின் போது மது விருந்தில் கலந்து கொள்ள இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. அப்போது பார் ஒன்றில் மது விருந்தில் கலந்து கொண்ட, இங்கிலந்து வீரர் ஜோ ரூட் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருடன் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த டேவிட் வார்னர், ஜோ ரூட் முகத்தில் தாக்கினார். இந்த சம்பவத்தையடுத்து, ஜோ ரூட்டுக்கு தற்போதைய ஆஷஸ் தொடரின் போது மது விருந்தில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் பிர்மிங்ஹாமில் நடைபெற்ற 3வது போட்டியில…
-
- 0 replies
- 295 views
-
-
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் பதவிக்கு மனோகர் தெரிவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது 2015-09-28 12:58:42 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவராக ஷஷான்க் மனோகர் தெரிவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் ஜெக்மோன் டால்மியாவின் மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளார். இந்நிலையில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவைப் பெற்றுள்ள ஷஷான்க் மனோகர் இப்பதவிக்கு பொருத்தமானவராகக் கருதப்படுகின்றார். இவர் பத்து வருடங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக பதவ…
-
- 0 replies
- 295 views
-
-
கங்குலி சட்டையை கழற்றிதான் சுற்றினார்; 2019-ல் உ.கோப்பையை வென்றால், நான் சட்டை இல்லாமல் ஆக்ஸ்போர்ட் தெருவில் நடப்பேன்: விராட் கோலி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியுடன், தற்போதைய கேப்டன் விராட் கோலி: கோப்புப் படம் - படம்: ஏஎப்ஃபி 2002-ல் நடந்த நாட் வெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் வென்ற போது கங்குலி சட்டையைக் கழற்றிதான் சுற்றினார். ஆனால் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றால், ஆக்ஸ்போர்ட் தெருவில் சட்டையில்லாமல் நடப்பேன் என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார். கடந்த 2002ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு கங்குலி தலைமையிலான இந்திய அணி பயணம் மேற்கொண்டது. அதில் நா…
-
- 0 replies
- 295 views
-
-
முதல் இடத்தை பிடிக்க இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையே கடும் போட்டி! ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியா 118 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 112 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 108 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது. தற்போது இந்த நான்கு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தபின் டெஸ்ட் தர வரிசை வெளியிடப்படும். இதில் முதல் இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியா அவ்விடத்தை தக்கவைக்க தீவிர முயற்சி மேற்கொள்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான், இலங்கிலாந்து, இந்தியா அந்த பதவியை பறிக்க முயற்சி செய்கிறது. எது நடக்கிறது என்று டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர்…
-
- 0 replies
- 295 views
-
-
முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி டக்வத்லுவிஸ் முறைப்படி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் வனிது ஹசரங்க 3 விக்கெட்களையும் சாமிக, பினுர மற்றும் சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்க…
-
- 0 replies
- 295 views
-
-
பிரசவத்துக்குப் பின்னர் முதல் தடவையாக அபுதாயில் களமிறங்குகிறார் செரீனா உலகின் முன்னிலை டென்னிஸ் நட்சத்திரங்களில் ஒருவரான செரீனா வில்லியம்ஸ், பிரசவத்திற்கு பின் மீண்டும் இவ்வாரம் போட்டிகளுக்குத் திரும்புகிறார். அபுதாபியில் நாளை மறுதினம் ஆரம்பமாகும் முபாதலா உலக வல்லவர் டென்னிஸ் கண்காட்சித் தொடரின் பங்குபற்றுவதன் மூலம் டென்னிஸ் களத்தில் தனது மீள்பிரவேசத்தை ஆரம்பிக்கிறார் 36 வயதான செரீனா வில்லியம். உலகின் முதல் நிலை வீராங்கனையாக விளங்கிய செரீனா வில்லியம்ஸ், கடந்த வருடம் கர்ப்பிணியான நிலையில் போட்டிகளிலிருந்து ஒதுங்கியிருந்தார். கடந்த செப்டெம்பர் மாதம் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அதன்பின், தனத…
-
- 0 replies
- 295 views
-
-
இலங்கையில் டெஸ்ட் போட்டிகளில் 10 கேட்ச்கள்: ரஹானே சாதனை; மேலும் சுவையான தகவல்கள் இலங்கை மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 10 கேட்ச்கள் பிடித்து ரஹானே சாதனை. | படம்: ஏ.எப்.பி. இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 10 கேட்ச்களைப் பிடித்த முதல் இந்திய பீல்டர் ஆனார் அஜிங்கிய ரஹானே. ஆனால் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஒரு தொடரில் 10 கேட்ச்களை அசாருதீனும் எடுத்துள்ளார், ஆனால் அது இந்தியாவில் 1993-94-ல் நடைபெற்ற தொடரின் போது என்பது குறிப்பிடத்தக்கது. அமித் மிஸ்ரா 3-வது முறையாக ஒரு இன்னிங்சில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா, வங்கதேசத்துக்கு எதிராக 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மிஸ்ரா. இன்று அவ…
-
- 0 replies
- 295 views
-
-
சொந்த மண்ணில் இராமகிருஸ்ணா முதலிடம் -வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட உறவுகளின் ஞாபகார்த்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் சொந்தமண்ணிலே முதலிடத்தினை பெற்றுக்கொண்டது. மேற்படி கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 26கழகங்கள் பங்கேற்று, இறுதிப்போட்டிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகமும் கல்லடி யூத் கழகமும் தெரிவாகியிருந்தன. போட்டியின் வழமையான நேரத்தில் இரு அணிகளும் எவ்விதமான கோல்களையும் இடாத சந்தர்ப்பத்தில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்காக பெனால்டி மத்தியஸ்தரினால் வழங்கப்பட்டது. பெனால்டியில், இராமகிருஸ்ணா வெற்றி பெற்று …
-
- 0 replies
- 295 views
-
-
ஐ.பி.எல்.: புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ அணியின் பெயரை வெளியிட்டது அணி நிர்வாகம்! நடப்பு ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரில் புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ அணியின் பெயரை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, லக்னோ அணிக்கு ‘லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 2016ஆம் மற்றும் 2017ஆம் ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றபோது புனே அணியை வாங்கியிருந்த சஞ்சீவ் கோயங்கா அதற்கு ரைஸிங் புனே சுப்பர் ஜெயன்ட் எனப் பெயர் சூட்டியிருந்தார். இந்நிலையில், தற்போது லக்னோ அணியை வாங்கியுள்ள கோயங்கா, இதற்கும் சுப்பர் ஜெயன்ட் என்றே பெயர் சூட்டியுள்ளார். லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆன்டி பிளவர் மற்றும் ஆலோசகராக கௌதம் கம்பீர் ஆகியோர்…
-
- 0 replies
- 295 views
-
-
வங்கதேச டூருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ஹர்பஜன்சிங்கிற்கு வாய்ப்பு, யுவராஜ் புறக்கணிப்பு! மும்பை: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ தேர்வு குழு அறிவித்துள்ளது. 2 வருடங்களுக்கு பிறகு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், டெஸ்ட் போட்டிக்கான அணியில் மட்டும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. யுவராஜ் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இதிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வங்கதேசம் செல்கிறது. டெஸ்ட் போட்டி ஜூன் 10ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள், அம்மாதம், 18ம் தேதி, 21 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தொடர்க…
-
- 0 replies
- 295 views
-
-
22 NOV, 2023 | 08:14 PM (ஜே.ஜி.ஸ்டீபன்) பிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டியொன்று பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீனா ஆகிய அணிகளுக்கிடையில் நேற்று பிரேசிலின் மரகானா மைதானத்தில் இடம்பெற்றது. போட்டி ஆரம்பமாவதற்கு முன்பதாக பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீன அணிகளின் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பிரேசில் பொலிஸார் ஆர்ஜன்டீன ரசிகர்கள் மீது இரத்தம் சொட்டச்சொட்ட கடுமையான தடியடித் தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் களேபரம் உருவானது. இதனால் சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக போட்டி தடைப்பட்டதுடன் பார்வையாளர் அரங்கிலும் பெரும் பரபரப்பு காணப்பட்டது. அத்துடன் பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 295 views
- 1 follower
-