விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை அ-அ+ இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 315 ஒருநாள் போட்டியில் விளையாடி 401 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். #Dhoni #MSDhoni #MSD400 #Dhoni400 #MSD நேற்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் பந்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் மெர்க்ராமை விக்கெட் கீப்பர் டோனி ஸ்டம்பிங் செய்தார். இதன்மூலம் அவர் 400 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்தவர் என்ற சாதனையை படைத்தார். 315 ஒருநாள் போட்டியில் விளையாடி 401 விக்கெட் (295 கேட்ச்+106 ஸ்டம்பிங்) வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த…
-
- 0 replies
- 293 views
-
-
உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் ஆண்டர்சன்: இங்கிலாந்து பயிற்சியாளர் புகழாரம் டிரெவார் பேலிஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் உலகின் மிகச் சிறந்த பவுலராக வலம் வருகிறார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிரெவார் பேலிஸ் கூறினார். இதுதொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஓராண்டில் அதிக அளவில் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகின்றன. ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தையொட்டி அதிக பயிற்சி ஆட்டங்களில் இந்தியா பங்கேற்கவில்லை. இதுவும் அந்த அணி தோல்விகளைப் பெறுவதற்கு ஒரு காரணமாக இருக்கல…
-
- 0 replies
- 293 views
-
-
சூப்பர் ஸ்டார் கலாச்சாரம், இரட்டை ஆதாயப் பதவி: கிரிக்கெட் கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்த ராமச்சந்திர குஹா குற்றச்சாட்டு ராமச்சந்திர குஹா. | படம்.| கே.முரளிகுமார். உச்ச நீதிமன்றம் நியமித்த பிசிசிஐக்கான நிர்வாகிகள் கமிட்டியின் உறுப்பினர் ராமசந்திர குஹா தன் பதவியை ராஜினாமா செய்ததற்கு பல காரணங்களை கடிதம் மூலம் விளக்கியுள்ளார். உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டியிலிருந்து பிரபல கிரிக்கெட் வரலாற்றறிஞர், கட்டுரையாளர், ஆசிரியர், எழுத்தாளரான ராமச்சந்திர குஹா ராஜினாமா செய்ததற்கு பிசிசிஐ நிர்வாகத்தின் செயல்பாடுகளின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியே காரணம் என்று கூறியுள்ளார். கிரிக்கெட் நிர்வாகிகள் குழு என்…
-
- 1 reply
- 293 views
-
-
டேவிஸ் கிண்ணத்தை ஆர்ஜன்டீனா முதல் தடவையாக சுவீகரித்தது ஆடவருக்கான சர்வதேச டென்னிஸ் அரங்கில் உலகக் கிண்ணப போட்டியாக வருணிக்கப்படும் டேவிஸ் கிண்ணத்தை ஆர்ஜென்டீனா முதல் தடவையாக சுவீகரித்தது. ஸக்ரிப் டென்னிஸ் அரங்கில் வார இறுதியில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியின் கடைசி இரண்டு மாற்று ஒற்றையர் போட்டிகளில் குரோஷியாவை வீழ்த்தி 3 – 2 ஆட்டக் கணக்கில் வெற்றிகொண்டதன் மூலம் ஆர்ஜன்டீனா சம்பியன் பட்டததை சுவீரிகத்தது. வெள்ளியன்று ஆரம்பமான இப் போட்டியில் முதல் நாள் நடைபெற்ற ஒற்றையர் போட்டிகளின் நிறைவில் இரண்டு நாடுகளுக்கு 1-1 என்ற ஆட்டக் கணக்கில் ச…
-
- 0 replies
- 293 views
-
-
நிகத் ஜரீன்: உலக பாக்சிங் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த தெலங்கானா வீராங்கனை 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை தெலங்கானா வீராங்கனை நிகத் ஜரீன் வென்றார். சீனியர் பிரிவில் உலக சாம்பியனான அவர், இந்த சாதனையை நிகழ்த்திய முதல் தெலுங்கு பெண் என்ற சாதனையை படைத்தார். துருக்கியில் நடந்த சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (IBA) உலக சீனியர் பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். வியாழக்கிழமை நடைபெற்ற 52 கிலோ பிரிவு (பிளை வெயிட்) இறுதிப் போட்டியில் நிகத் 5-0 என்ற கணக்கில் ஜிட்பாங் ஜூடாமஸை (தாய்லாந்து) தோற்கடித்தார்…
-
- 2 replies
- 293 views
- 1 follower
-
-
பதவி விலகுவதாக ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீ மேன் அறிவிப்பு: தவறிழைத்தவர்களை மன்னிக்க வேண்டுகோள் செய்தியாளர்கள் சந்திப்பில் டேரன் லீ மேன் உணர்ச்சிவயப்பட்டார். - படம். | ராய்ட்டர்ஸ். பால் டேம்பரிங் சர்ச்சையில் தப்பிய டேரன் லீ மேன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியுடன் தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் ஆகியோரை ஆஸ்திரேலிய மக்கள் பெரிய மனதுடன் மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட டேரன் லீ மேன், “இந்த அறையில் அமர்ந்தவர்களுக்குத் தெரியும் மனதிற்கினியவர்களைப் பிரிந்து பாதிநாள் அணியுடன் பயணம் எவ்வளவு கடினம் என்பது தெரி…
-
- 1 reply
- 293 views
-
-
என் முதல் டெஸ்ட்டில் உடைந்த என் பேட்டை ஒட்டிக் கொடுத்தவர் சச்சின்- கங்குலி நெகிழ்ச்சிப் பகிர்வு சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி - படம் உதவி: ஏஎஃப்பி என் முதல் டெஸ்ட் போட்டியில் உடைந்த என்னுடைய பேட்டை பிளாஸ்டர் போட்டி எனக்காக சச்சின் ஒட்டிக்கொடுத்தார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருடன், சவுரவ் கங்குலியும் இதுவரை ஏராளமான போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளனர். கிரிக்கெட்டில் தனது கிடைத்த அனுபவங்கள், எதிர்கொண்ட நிகழ்வுகள், சந்தித்த மனிதர்கள்குறித்து கங்குலி தனது சுயசரிதையான…
-
- 0 replies
- 293 views
-
-
17 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்காத இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 17 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது இல்லை என்ற சாதனையை சமன் செய்ததுள்ளது. இதை பற்றி விரிவாக பார்க்கலாம். * டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 17 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது இல்லை என்ற சாதனையை நேற்று சமன் செய்தது. கடைசியாக 2015-ம் ஆகஸ்டு மாதம் காலேவில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, அதன் பிறகு தோல்வ…
-
- 0 replies
- 293 views
-
-
மெஸ்ஸி சோபிக்கவில்லை, மீண்டும் அர்ஜெண்டினா, சிலி அணிகள் தடுமாற்றம் YouTube லயோனல் மெஸ்ஸி, வெனிசூலா வீரர் ஜூனியர் மொரீனோவுக்குக் கைகொடுக்கிறார். - படம். | ஏ.எஃப்.பி. 2018 உலகக்கோப்பை கால்பந்துத் தொடருக்கான தகுதிப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன இதில் அர்ஜெண்டினா அணி வெனிசூலாவுக்கு எதிராக 1-1 என்று டிரா செய்ய சிலி அணி பொலிவியாவுக்கு எதிராக 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது. அர்ஜெண்டினா அணி இடைவேளை வரை ஏகப்பட்ட கோல் வாய்ப்புகளை கோல் அருகில் சென்று மோசமான பினிஷிங்கினால், திட்டமிடலின்மையால் தவற விட்டது. கடைசியில் வெனிசூலா அணி தன் கோலில் அடித்த ஷாட்டின் மூலமே அர்ஜெண…
-
- 0 replies
- 293 views
-
-
செய்தித் துளிகள் ஹாக்கியில் புதிய விதிமுறை ஹாக்கி இந்தியா லீக் (ஹெச்ஐஎல்) தொடரில் புதிய விதிமுறை புகுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 4-வது சீசனிலிருந்து ஒவ்வொரு ஃபீல்டு கோலும், 2 கோல்களாக கணக்கில் கொள்ளப்படும். ஹெச்ஐஎல் தலைவர் நரீந்தர் பாத்ரா இதனை அறிவித்துள்ளார். அணியில் வீரர்களின் எண்ணிக்கை 24-லிருந்து 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில், 12-8 என்ற விகித்தில் இந்திய-வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறுவர். இதுதவிர, ஓர் அணியில் 2 கோல் கீப்பர்கள் கட்டாயம் என்பது உள்ளிட்ட விதிமுறைகளும் புகுத்தப்பட்டுள்ளன. வில் வித்தையில் தங்கம் கொலம்பியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வில் வித்தைப் போட்டியில் ஆடவர் பிரிவில் சர்வேஷ் பரீக், சந்தீப் குமார், இசய்யா ராஜேந்தர் சனம் ஆகியோரடங்கிய இந்…
-
- 2 replies
- 292 views
-
-
குரங்குச் சேட்டை செய்பவர் கேப்டனாக இருக்க முடியாது.. கோஹ்லிக்கு கிர்மானி "நறுக்" பெங்களூரு: கேப்டன் டோணிக்கு முன்னாள் இந்திய விக்கட் கீப்பர் சையத் கிர்மானி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கேப்டன் என்றால் இவரைப் போலத்தான் இருக்க வேண்டும். மைதானத்தில் குரங்குச் சேட்டை செய்பவர் கேப்டனாக இருக்க முடியாது என்றும் அவர் மறைமுகமாக விராத் கோஹ்லியை கண்டித்துள்ளார். வருங்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக வருபவர்கள், டோணியைப் பின்பற்ற வேண்டும் என்றும் கிர்மானி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்த கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர் கிர்மானி. ஒன்இந்தியாவுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: டோணிதான் பெஸ்ட்…
-
- 0 replies
- 292 views
-
-
தன்னம்பிக்கை பெறுவது பற்றி தோனி எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்: அஜிங்கிய ரஹானே தன்னம்பிக்கையுடன் செயல்படுவது எப்படி என்பதை கேப்டன் தோனி இளம் வீரர்களுக்கு கற்றுக் கொடுத்தார் என்று அஜிங்கிய ரஹானே பாராட்டு தெரிவித்துள்ளார். "தோனியின் கீழ் விளையாடும் போது இளம் வீர்ர்களான நாங்கள் நிறையக் கற்றுக் கொண்டோம். அவர் எங்களுக்கு பெரிய அளவில் தன்னம்பிக்கையை ஊட்டினார். டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் என்று எதுவாக இருந்தாலும் அவர் எங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது பற்றியும் ஒவ்வொரு சூழலிலும் எப்படி வினையாற்ற வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தார்” என்றார் அஜிங்கிய ரஹானே. விராட் கோலி பற்றி.. விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுபவர், எதிரணியினர் ஆஸ்திரேலியாவாக …
-
- 0 replies
- 292 views
-
-
இலங்கை அணி பாக்கிஸ்தான் சென்றடைந்தது- குண்டு துளைக்காத பேருந்தில் விமானநிலையத்திலிருந்து அழைத்துச்செல்லப்பட்டனர். மீண்டும் பாக்கிஸ்தான் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என இலங்கை இருபதிற்கு இருபது அணியின் தலைவர் திசாரபெரேரா தெரிவித்துள்ளார். மூன்றாவது இருபதிற்கு இருபது போட்டிகளிற்காக இலங்கை அணியினர் கடும் பாதுகாப்பி;ன் மத்தியில் பாக்கிஸ்தானை சென்றடைந்துள்ளனர். விமானநிலையத்திலிருந்து அவர்கள் குண்டுதுளைக்காத பேருந்து மூலம் ஹோட்டலிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.வீதிகளில் நூற்றுக்கணக்கில் படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் லாகூர் ஹோட்டலை சென்றடைந்துள்ளனர். இதேவேளை பாக்கிஸ்தானிற்கு மீண்டும் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக…
-
- 1 reply
- 292 views
-
-
புதிய பயிற்சியாளராக கிளாப் ( Jürgen Klopp) சிலிர்த்தெழுமா லிவர்பூல்? உலகின் சிறந்த கால்பந்து பயிற்சியாளராகக் கருதப்படுப்படும் போர்சியா டோர்ட்மன்ட் அணியின் பயிற்சியாளர் ஜார்ஜியான் கிளாப் ( Jürgen Klopp)நேற்று லிவர்பூல் அணியின் புதிய பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதற்காக மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கிளாப் 15 மில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த வாரம் டாட்டன்ஹாம் அணிக்கு எதிராக முதல் முறையாக லிவர்பூல் அணி களமிறங்குகிறது. அந்த போட்டிக்கு லிவர்பூல் அணியை முதல் முறையாக வழிநடத்தவுள்ளார் கிளாப். இங்கிலாந்தின் கால்பந்து கிளப்களில் பழமையும் பெருமையும் வாய்ந்த அணி லிவர்பூல். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் 5 முறை கோப்…
-
- 2 replies
- 292 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ரபாடா வருகையால் தென் ஆப்ரிக்கா உற்சாகம் ரபாடா - Getty Images ரபாடா - AFP ரபாடா - Getty Images ரபாடா - AFP தென் ஆப்ரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்குப் பின் இந்த டெஸ்ட் போட்டியில் ரபாடா ஆடுவதால் தென் ஆப்ரிக்க அணி அதிக உற்சாகத்துடன் உள்ளது. தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து…
-
- 0 replies
- 292 views
-
-
டாடா மோட்டார்ஸ்க்கு லயனல் மெஸ்சி விளம்பர தூதர்! இந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸ்க்கு பிரபல கால்பந்து வீரர் லயனல் மெஸ்சி விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே கால்பந்து மூலம் அதிக வருவாய் ஈட்டும் வீரர்களில் 2வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா கேப்டனும் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்சி, இந்திய நிறுவனம் ஒன்றுக்கு பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கானது. இது குறித்து லயனல் மெஸ்சி கூறுகையில், '' இந்தியா குறித்து பல்வேறு வியக்கத்தகு விஷயங்கள் கேள்விப்பட்டுள்ளேன். பெருமை வாய்ந்த அந்த நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருப்பது கவுரவமிக்கது'' என்று குறிப்பிட்டுள்ளார். ht…
-
- 0 replies
- 292 views
-
-
அப்பாவுக்கு டார்ச்லைட், மகனுக்கு சாம்பியன்ஷிப்: தங்க மகன் சாய்நரேன்! வீட்டில் சுவரில் மாட்டியிருக்கும் ஒரு கடிகாரத்தைத் தவிர அந்த ஒற்றை அறை வீடு முழுக்க நிரம்பி யிருப்பவை பதக்கங்களும், கோப்பைகளும், சான்றிதழ்களும்தான். இத்தனைக்கும் சொந்தக்காரன் சிறுவன் சாய்நரேன். சென்னை கே.கே நகரைச் சேர்ந்த கார்த்திக்கின் மகன் சாய்நரேன் தாய்லாந்தில் நடந்த சர்வதேச ஓப்பன் ரோலர் ஸ்கேடிங் போட்டியில் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று திரும்பியிருக்கிறான். கே.கே. நகர் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் சாய்நரேன் மாவட்ட, மாநில, தேசிய அளவில் ஸ்கேட்டிங், இசை, ஓவியம் என்று பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வாங்கிக் குவித்து வருகிறான். தாய்லாந்து நாட்டில் …
-
- 0 replies
- 292 views
-
-
இங்கிலாந்தில் சங்கா மிரட்டல் இங்கிலாந்து துடுப்பாட்டக் கழகங்களுக்கு இடையில் நடைபெற்றுவரும் றோயல் லண்டன் கிண்ணத்துக்கான தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் சங்காவின் சிறப்பான செயற்படால் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் சர்ரே அணி வெற்றிபெற்றது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு (இலங்கை நேரப்படி) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சர்ரேயை எதிர்த்து மிடில்செக்ஸ் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது சர்ரே அணி. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மிடில்செக்ஸ் அணி 9 இலக்குகள் இழப்புக்கு 243 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ராம்போல் 4 இலக்குகளை வீழ்த்தினார். பதிலுக்குக் களமிறங்கிய சர்ரே அணி சங்காவின் சிறப்ப…
-
- 0 replies
- 292 views
-
-
அனைத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் : சயீத் அஜ்மல் 35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயீத் அஜ்மல் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இரண்டாவது முறையாகவும் அஜ்மல் த்ரோ செய்வதாக புகார் எழ இவரது பந்து வீச்சு முறை மாற்றியமைக்கப்பட்டது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட பிறகு இவரால் முன்பு போல் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை, இன்னும் சொல்லப்போனால் விக்கெட்டுகளையே வீழ்த்த முடியாமலே போனது. “நடப்பு தேசிய டி20 தொடருக்குப் பிறகு அனைத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன், என்னை பொறுத்தவரை நான் என்ன சாதிக்க வேண்டுமோ அவை அனைத்தையும் சாதித்ததாகவே கருதுகிறேன…
-
- 0 replies
- 292 views
-
-
தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 204 ஓட்டங்கள்! தென்னாபிரிக்க – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 45.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் ஹஷன் அலி 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். இன்னும் சற்றுநேரத்தில் தென்னாபிரிக்க அணி 204 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடவுள்ளது.…
-
- 0 replies
- 292 views
-
-
ஓய்வு பெறுகிறார் பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென பிரத்யேக இடம் பிடித்தவர் மிஸ்பா உல் ஹக். தன் நேர்த்தியான ஆட்டத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டிப்போட்ட மிஸ்பா, தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்குப் பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் மிஸ்பா. 43 வயதாகும் மிஸ்பா, 2011-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்து வருகிறார். டெஸ்ட் அணியை சிறப்பாக வழி நடத்திய மிஸ்பா, ஐசிசி பட்டியலில் பாகிஸ்தான் அணி சிறந்த இடத்துக்கு முன்னேற காரணமாக இருந்தவர். இந்நிலையில், மேற்கிந்திய தீவ…
-
- 0 replies
- 292 views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோ உட்பட மெஸ்ஸிக்கு யாரும் இணையாக முடியாது: பார்சிலோனா பயிற்சியாளர், வீரர்கள் புகழாரம் அட்லெடிகோஸ் மாட்ரிட் அணிக்கு எதிரான போட்டியின்போது, எதிரணி வீரர்களை அநாசயமாக வீழ்த்தி கோலடிக்கும் பார்சிலோனாவின் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு யாரும் இணையாக மாட்டார்கள் என பார்சிலோனா பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக், தடுப்பாட்டக்காரர் ஜோர்டி அல்பா ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர். சாம்பியன்ஸ் லீக் போட்டியை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது பார்சிலோனா. கடந்த 1990-ம் ஆண்டு ஏசி மிலன் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை வென்றது. அதன்பிறகு எந்த அணியும் வெற்றிக்கோப்பையைத் தக்கவைத்ததில்லை. கடந்த மே மாதம் நடந்த இறுதிப்போ…
-
- 0 replies
- 292 views
-
-
அடுத்த முறை இங்கிலாந்து பந்துவீச்சை கோலி நிச்சயம் பதம் பார்ப்பார்: பயிற்சியாளர் நம்பிக்கை விராட் கோலி. | படம்: கே.பாக்யபிரகாஷ். விராட் கோலியின் பேட்டிங் ‘அடுத்த கட்டத்திற்கு’ முன்னேறியுள்ளதாகக் கூறும் அவரது ஆரம்பகால பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா சச்சின் சாதனைகளை கோலியால் முறியடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன், விராட் கோலியை தனது செல்லப்பிள்ளையாக்கி சொல்லி, சொல்லி வீழ்த்திக் கொண்டேயிருந்தார், இதனால் ஒரு அரைசதம் கூட 5 டெஸ்ட் போட்டிகளில் கோலியால் எடுக்க முடியவில்லை, இது பற்றி அவரது பயிற்சியாளர் கூறும்போது, அடுத்த முறை இங்கிலாந்தில் நிச்சயம் பந்து வீச்சை…
-
- 0 replies
- 292 views
-
-
இலங்கை அணியின் முன்னாள் தலைவருக்கு புதிய பொறுப்பு இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் டெஸ்ட்போட்டிகளில் இனிமேல் நான்காம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக மட்டுமே(வேறு எதிலும் கவனம் செலுத்தாது) செயற்படுவார் எனஅறியக்கிடைக்கின்றது. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவரான மெதிவ்ஸ், முன்னாள் ஜாம்பவான்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இலங்கை அணியில் விளையாடியிருந்த போது ஐந்தாம் இலக்க துடுப்பாட்ட வீரராக அணியின் மத்திய வரிசையினைப் பலப்படுத்தும் வீரர்களில் ஒருவராக காணப்பட்டிருந்தார். எனினும் சங்கா, மஹேல ஆகியோரின் ஓய்வுக்குப் பின்னர் இலங்கை அணியில் இருக்கும் சிறந்த துடுப்பாட்ட வீரரான மெ…
-
- 0 replies
- 292 views
-
-
சம்பியன் வாய்ப்பைத் தக்கவைத்தார் ஹமில்டன் மெக்ஸிக்கன் கிரான்ட் பிறிக்ஸை வென்ற மெர்சிடிஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், தனது நான்காவது போர்மியுலா வண் சம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லுவதற்கான வாய்ப்புகளைத் தக்கவைத்துள்ளார், பந்தயத்தின் ஆரம்பத்தில், ஹமில்டனின் காரின் முன் சக்கரம் இறுகியதால், முதலாவது வளைவில் வெளியே சென்று, அதிர்ச்சியொன்றை எதிர்நோக்கியிருந்தாலும், அதன்பின்னர், எந்தவொரு பிரச்சினைகளையும் எதிர்நோக்காது, தனது வாழ்நாளில், 51ஆவது வெற்றியைப் பெற்றார். பிரேஸில், அபு தாபியில் இடம்பெறவுள்ள பந்தங்களில் மொத்தமாக 50 புள்ளிகளைப் பெறமுடியும் என்ற நிலையில், தனது சக மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான நிக்கோ றொஸ்பேர்க்கை விட 19…
-
- 0 replies
- 292 views
-