விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
ஒரு காலை இழந்தும் ஃபீல்டிங் செய்த கிரிக்கெட் வீரர் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மாற்றுத் திறனாளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த லியம் தாமஸ் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது, அவரது செயற்கை கால் தனியாக விழுந்துவிட்டது. அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ச்சியாக பந்தை தடுத்து கீப்பரிடம் த்ரோ செய்தார். செயற்கை கால் இழந்தாலும், விளையாட்டில் முழு ஈடுபாடு காண்பித்த அவரது செயல் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. இது பற்றி முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் பால் காலிங்வுட்டும் அவரது ட்விட்டர் பக்கத்தில், பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். http://www.vikatan…
-
- 0 replies
- 438 views
-
-
ஐபிஎல் போட்டிகளில் ஆடி காயமடைய வேண்டாம்: ஆஸி. வீரர்களுக்கு மைக்கேல் கிளார்க் எச்சரிக்கை மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.எஃப்.பி. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை ஆஸ்திரேலிய வீரர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுரை வழங்கியுள்ளார். 2016 ஐபிஎல் போட்டிகளில் ஐபிஎல் போட்டிகளில் ஆடிய முக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் காயமடைந்ததை அடுத்து மைக்கேல் கிளார்க் கூறும்போது, “வீரர்களின் பணிச்சுமையை அதிகரிக்கிறது ஐபிஎல். இதனால் ஓய்வு இன்றி கடுமையான களைப்பு ஏற்படுகிறது. சாதகமான அம்சம் பணம் வருகிறது என்பதுதான். ஆனால் அதற்கு கொடுக்கும் விலை அதிகமாக உள்ளது. களைப்பு, ஓய்வின்மை. நமக்கு சிறந்த…
-
- 0 replies
- 263 views
-
-
கெளரவ டாக்டர் பட்டத்தை நிராகரித்தார் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தனக்கு பெங்களூரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன் வந்ததை நிராகரித்துள்ளார். கெளரவத்தை நிராகரித்தார் தற்போது இந்த கெளரவ டாக்டர் பட்டம் பெறுவதை விட , தான் விளையாட்டுத் துறையில் இன்னும் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்த பின் டாக்டர் பட்டம் பெற்றுக் கொள்ளப் போவதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார். பெங்களூருவில் வளர்ந்த ராகுல் டிராவிட், தனது கல்லூரி படிப்பை இந்நகரத்தில்தான் நிறைவு செய்தார். இந்நிலையில், வரும் ஐனவரி 27-ஆம் தேதியன்று நடக்கவுள்ள தனது 52-ஆவது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில், ரா…
-
- 0 replies
- 385 views
-
-
சாதனை நிலைநாட்டிய ஜொய்சனின் குதிக்காலில் ஐந்து தையல்கள் (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனை நிலைநாட்டிய அளவெட்டி அருணோதயா கல்லூரியின் நெப்தலி ஜொய்சன், குதிக்காலில் ஏற்பட்ட காயத்திற்காக ஐந்து தையல்கள் போட நேர்ந்தது. இப் போட்டியில் 4.61 மீற்றர் உயரம் தாவி போட்டிக்கான புதிய சாதனையை நிலைநாட்டிய ஜொய்சன், 4.76 மீற்றர் உயரத்தைத் தாவ முயற்சித்தபோது மெத்தையில் சிக்குண்டு குதிக்காலில் காயத்திற்குள்ளானதாக அவரது பயிற்றுநர் பாகீஸ்வரன் தெரிவித்தார்.…
-
- 0 replies
- 439 views
-
-
பிரிமா கிண்ணத்திற்கான மோதலுக்கு வடக்கு, கிழக்கு அணிகளும் தயார் பிரிமா கிண்ணத்திற்கான மோதலுக்கு வடக்கு, கிழக்கு அணிகளும் தயார் பாடசாலை மட்ட கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தேசிய மட்டத்திற்கு சிறந்த வீரர்களை உருவாக்கும் எண்ணக்கருவுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பூரண ஒத்துழைப்புடன் 11ஆவது தடவையாக நடைபெறவுள்ள 15 வயதிற்குட்பட்ட பிரிமா கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் மாகாண மட்டப் போட்டிகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளன. இதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாடளாவிய …
-
- 0 replies
- 337 views
-
-
கிரிக்கெட் சாதனைகள் தெரியும்... வீரர்களுக்கு நடந்த சோதனைகள் தெரியுமா? #FunnyWickets கிரிக்கெட்... வியர்க்க விறுவிறுக்க கடைசிப் பந்து வரை போராடி வெற்றிபெற்ற அனுபவங்கள் எல்லா அணிகளுக்கும் இருக்கும். அதேபோல் எல்லா அணிகளிலுமே `அடப் பாவத்த' என்ற ரகத்தில் சில விக்கெட்டுகளும் விழுந்திருக்கும். அவற்றைப் பற்றிய ஓர் அலசல்! பாகிஸ்தானின் மிக முக்கியமான வீரர் இன்சமாமுக்கும் இப்படியொரு நிலை இருமுறை ஏற்பட்டிருக்கிறது. முதல் சம்பவம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான தொடரின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி 2006-ம் ஆண்டு நடந்தது. `களமிறங்கிக் கலக்கலாம்!' என்ற எண்ணத்தில், 19 ரன்களைக் கடந்துவிடுவார் இன்சமாம். அந்த நேரத்தில் `ரவுண்டாக 20 ஆக்கிவிடல…
-
- 0 replies
- 917 views
-
-
கோப்பை வெல்ல 10 பாயின்ட் தியரி..! கோலி படைக்கு வாழ்த்துகள் #IndVsNz கிரிக்கெட்டை நன்கு கவனித்து வரும் கடைக்கோடி ரசிகன் முதல், கிரிக்கெட்டையே பிழைப்பாகக் கொண்டிருக்கும் நிபுணர்கள் வரை அனைவரிடத்திலும் இருக்கும் ஒரே கேள்வி, "தற்போதுள்ள அணியை வைத்து, 2019-ல் இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பையை, கோலி தலைமையிலான இந்திய அணியால் வென்றுவிட முடியுமா?" இரண்டு வருடங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பையின், அரையிறுதியில், தொடரை நடத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்று, நாடு திரும்பியது தோனி தலைமையிலான இந்திய அணி . அதற்கு முன்னதாக நடைபெற்ற போட்டிகளிலும் (முத்தரப்பு தொடர்) இந்தியா, ஃபைனலுக்குத் தகுதி பெறவில்லை. நல்ல ஓப்பனர்கள், அனுபவ மிடில் ஆர்டர் பே…
-
- 0 replies
- 473 views
-
-
’தோனிக்கும் எனக்கும் இடையே பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுகிறார்கள்’ - மனம் திறந்த கோலி தோனிக்கும் தனக்கும் இடையில் பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுவதாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். விராட் கோலி மற்றும் தோனி இடையிலான உறவுகுறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியான நிலையில், அது தொடர்பாக கேப்டன் கோலி முதல்முறையாக மனம் திறந்துள்ளார். ’பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ என்ற வெப் சீரிஸில் இதுகுறித்துப் பேசியுள்ள கோலி, ‘எனக்கும் தோனிக்கும் இடையில் பிரச்னை இருப்பதாகப் பலரும் கதைகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், அதுபோன்ற கதைகளை நானோ, தோனியோ படிப்பதில்லை என்பதுதான். எங்கள் இருவரையும் …
-
- 0 replies
- 410 views
-
-
17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணம் 17 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணமடைந்தார். அவருக்கு வயது 49. செக்குடியரசு நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா. முன்னாள் நம்பர் 2 வீராங்கனையான இவர், 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார். 49 வயதான இவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என பெண்கள் டென்னிஸ் அசோசியேசன் செய்தி வெளியிட்டுள்ளது. இரட்டையர் பிரிவில் கொடிகட்டிப் பற…
-
- 0 replies
- 440 views
-
-
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டால் 7 ஆண்டு சிறைத்தண்டனை: நியூசிலாந்தில் புதிய சட்ட மசோதா அறிமுகம் வெலிங்டன், ஜூலை 31- நியூசிலாந்தில் விளையாட்டு வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கும் புதிய சட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. மேட்ச் பிக்சிங் மசோதா பாராளுமன்றத்தில் இன்று அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற உள்ளன. அதற்கு முன்னதாக முன்னதாக இந்த புதிய சட்டத்தை அமலுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. ‘மேட்ச் பிக்சிங் சர்வதேச அளவில் வளர்…
-
- 0 replies
- 377 views
-
-
வலைப்பயிற்சியில் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளாமல் சாதித்த சச்சின் – ராகுல் புகழாரம்! 2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிகளின் போது தொடர் முழுதும் வலைப்பயிற்சியில் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளாமல் சச்சின் டெண்டுல்கர் சாதித்துக் காட்டினார் என்று ராகுல் திராவிட் புகழாரம் சூட்டியுள்ளார். அந்த உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் எடுத்தது இன்று வரை உலக சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத் தக்கது. பொதுவாக சச்சின் என்றாலே பயிற்சி மேலும் பயிற்சி மேன்மேலும் பயிற்சி என்பதுதான் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் திராவிட் கூறியிருப்பது உண்மையில் ஒரு ஆச்சரியமான தகவலே. “அவரது தயாரிப்பு அவ்வப்போது மாறுபடும். 2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் போது தொட…
-
- 0 replies
- 559 views
-
-
அசார் அலியின் நண்பர்கள் பாக். ஓய்வறையில் உள்ளனர்: ஸ்மித்தை எச்சரித்த மைக்கேல் கிளார்க் சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன் மைக்கேல் கிளார்க் எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் ஆடி வந்த போது, பேட்ஸ்மென் அசார் அலியுடன் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஏதோ உரையாடியுள்ளார். அதனைத் தவறாகப் புரிந்து கொண்ட ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், ஸ்மித்தை அழைத்து, ‘அசார் அலியின் நண்பர்கள் பாக். ஓய்வறையில் உள்ளனர். களத்தில் நட்பு தேவையில்லை’ என்று எச்சரித்ததாக ஆஸ்திரேலிய ஊடகச் செய்தி ஒன்று கூறியுள்ளது. கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது செய்கையை தவறாகப் புரிந்து கொண்டார் என்று ஸ்மித் பெர்த் நகரில் செ…
-
- 0 replies
- 456 views
-
-
-
- 0 replies
- 399 views
-
-
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை 9 விக்கெட்க்கல் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது. இந்திய மேற்கிந்திய தீவகள் அணிகளுக்கிடையிலான, ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (வியாழக்கிழமை) திருவானந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டி இரு அணிக்கும் மிக முக்கியமான போட்டியாக அமைந்திருந்த நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, அந்திய அணியின் பந்து வீச்சிற்கு…
-
- 0 replies
- 417 views
-
-
இந்திய அணியின் அட்டவணை மும்பை: வங்கதேச தொடருக்குப் பின், அடுத்த ஆண்டு ‘டுவென்டி–20’ உலக கோப்பை வரை இந்திய அணி தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. எட்டாவது ஐ.பி.எல்., தொடர் முடிந்ததும் இந்திய அணி வங்கதசம் செல்கிறது. பின் ஜூலை மாதம் ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி 3 ஒருநாள், 2 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அடுத்து ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்லும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடருக்குப் பின் இந்திய அணி சொந்தமண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் (செப்., 2015) மோதுகிறது. இதன் பின் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்படும் இந்த…
-
- 0 replies
- 475 views
-
-
ஒவ்வொருவர் கேப்டன்சியும் வித்தியாசமானதே: தோனி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 பவுலர்களுடன் கோலி களமிறங்கியது குறித்து தோனி கூறும்போது, ஒவ்வொரு தனிநபரும் தலைமைத்துவ அணுகுமுறையும் வித்தியாசமானதாகவே இருக்கும் என்று கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தோனி, “இது ஒரு நல்ல கேள்வி. நாம் ஒருநாள் போட்டிகள் பற்றி பேசுவோம். ஒவ்வொரு தனிநபரும் வித்தியாசமனவரே. நீங்கள் அனைவரும் கேள்வி கேட்கிறீர்கள் ஆனால் உங்கள் கேள்வி வித்தியாசமாக இல்லையா அது போல்தான் இதுவும். அணி தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை நாம் இயல்பான நிலையில் அனைத்தையும் வைத்துக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் அதே சமயத்தில் தனிநபர்கள் வித்தியாசமானவர்களாக இருப்பது அவசியம். அனைவரும் ஒ…
-
- 0 replies
- 277 views
-
-
அது போன மாசம்... யுவராஜிடம் சிக்கி ஒரே ஓவரில் 6 சிக்சர் விட்டு கொடுத்த பிராட் (வீடியோ) இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பிராட், நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்... பிராட் தந்தை கிறிஸ் பிராடும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். இதனால் பிராட்டின் ரத்தத்திலேயே கிரிக்கெட் கலந்துள்ளது. தந்தையை போலவே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்த பிராட். 17 வயது வரை தொடக்க வீரராகத்தான் இருந்தார். அதற்கு பின்தான் பந்துவீச்சுக்கு மாறினார். கடந்த 2007ஆம் ஆண்டு, டி20 உலகக் கோப்பை போட்டியில் யுவராஜ்சிங், பிரா…
-
- 0 replies
- 313 views
-
-
விவ் ரிச்சர்ட்ஸ் ஒரு மிகப்பெரிய வீரர், அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள்: விராட் கோலி விராட் கோலி. | கெட்டி இமேஜஸ். விராட் கோலியின் ஆட்டத்தில் தன்னுடைய ஆட்டத்தின் சில சுவடுகள் தெரிவதாக மே.இ.தீவுகள் ‘கிரேட்’ விவ் ரிச்சர்ட்ஸ் கூறியதையடுத்து ரிச்சர்ட்ஸ் மிகப்பெரிய வீரர், அவர் எங்கே, நான் எங்கே... என்று விராட் கோலி தன்னடக்கம் காண்பித்துள்ளார். ஏற்கெனவே கடந்த ஆண்டு அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளன்று பெரிய இலக்கைத் துரத்திய போது அபார சதம் கண்ட விராட் கோலியின் ஆட்டம் விவ் ரிச்சர்ட்ஸ் போன்று இருந்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர், தற்போது விவ் ரிச்சர்ட்ஸே இப்படி கூறுவது உண்மையில் கோலிக்குப் பெருமை சேர்ப்பதாகு…
-
- 0 replies
- 414 views
-
-
கிழக்கின் சமர் கால்பந்தாட்டம் 'கிழக்கின் சமர்" என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை, அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி எதிர்வரும் முதலாம் திகதி பிற்பகல் 3.30மணியளவில் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. அக்கரைப்பற்று ஸ்ரீஇராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் அதிபர் எம். கிருபைராஜா தலைமையில் நடைபெறும் போட்டி நிகழ்வுகளில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளார். இரண்டாவது வருடமாக …
-
- 0 replies
- 384 views
-
-
பிரீமியர் லீக் 2016/2017 ஏழாவது வார போட்டி முடிவுகள் பிரீமியர் லீக் 2016/2017 ஏழாவது வார போட்டி முடிவுகள் #Everton 1-1 Crystal Palace எவெர்ட்டன் கிரிஸ்டல் பலஸ் அணிகள் மோதிய ஆட்டம் சமநிலையில் முடிவடைந்துள்ளது. எவெர்ட்டன் சார்பாக லுகாகு 1 கோலும் கிரிஸ்டல் பல்ஸ் சார்பாக பெண்டேகே 1 கோலும் பெற்றனர். #Swancea City 1-2 Liverpool ஸ்வான்சி சிட்டி அணிக்கெதிராக லிவர்பூல் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே லெரோய் பெர் இன் கோலுடன் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்வான்சி முதல் பாதியில் முன்னிலை பெற்றாலும் இரண்டாம் பாதியில் லிவர்பூல் சார்பாக பிர்மினோ 1 கோலும் இறுதி நேரத்தில் மில்னர் பெனால்டி வாய்ப்பில் ஒரு கோலும் அடித்து லிவர்பூ…
-
- 0 replies
- 563 views
-
-
கிளென் மேக்ஸ்வெலுக்கு அபராதம்: ஆதரவும் எதிர்ப்பும் மேக்ஸ்வெல். | கோப்புப் படம்: கே.ஆர்.தீபக். மேத்யூ வேட் குறித்து பொதுவெளியில் வெளிப்படையாக விமர்சனம் செய்த அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெலுக்கு ஆஸ்திரேலிய லீடர்ஷிப் குழு அபராதம் விதித்துள்ளது. அபராதம் என்பதற்கும் மேலாக கிளென் மேக்ஸ்வெலின் கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளதாகவே ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விக்டோரிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் யார் எந்த நிலையில் களமிறங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார், நான் அவருக்குப் பின்னால் களமிறங்குவது வேதனை அளிக்கிறது, இது எனது டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பை பறித்துள்ளது என்று ஊடகங்களில் கிளென் மேக்ஸ்வெல்…
-
- 0 replies
- 447 views
-
-
திரும்பி வருகிறார் ஹர்ஷா போக்லே! ஒரு வருட காலம் கிரிக்கெட் வர்ணனை செய்வதில் இருந்து நீக்கப்பட்ட ஹர்ஷா போக்லே மீண்டும் வருகிறார். நாக்பூரில் இந்தியா-நியூஸிலாந்து, டி-20 போட்டியின்போது விதர்பா கிரிக்கெட் சங்கத்தினருக்கும், ஹர்ஷா போக்லேவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அமிதாப் பச்சன் தன் ட்விட்டர் பக்கத்தில் 'இந்திய வர்ணனையாளர் வேறு விஷயங்களைப் பேசுவதை தவிர்த்து தங்கள் வீரர்களைப் பற்றி பேசினால் நல்லது' என்று பதிவிட்டார். அப்போதைய கேப்டன் தோனி அமிதாப்பின் பதிவை பகிர்ந்தார். இதையடுத்து ஹர்ஷா போக்லேவை வர்ணனையாளர்கள் பிரிவிலிருந்து, பி.சி.சி.ஐ நீக்கியது. கிரிக்கெட் ரசிகர்களிடம் நற்பெயரை கொண்ட ஹர்ஷா போக்லே நீக்கப்பட்ட விவக…
-
- 0 replies
- 432 views
-
-
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 106 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பிரிட்ஜ்டவுனில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. பிரிட்ஜ் டவுன்: பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. வெஸ்ட்இண்டீஸ் முதல் இன்னிங்சில் 312 ரன்னும், பாகிஸ்தான் 393 ரன்னும் எடுத்தன. யாசிர்ஷாவன் அபார பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் தினறியது. 4-வது …
-
- 0 replies
- 229 views
-
-
யாழ்ப்பாணத்தில் 300 இற்கும் அதிகமான அணிகள் மோதும் கால்பந்து திருவிழா ஐந்தாவது வருடமாக யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் யாழ். கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து மைலோ நிறுவனம் நடத்தும் மைலோ வெற்றிக் கிண்ணத்திற்கான கால்பந்தாட்டத் தொடர் தற்போது ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்குடனேயே இக்கால்பந்தாட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இவ் ஆண்டுக்கான மைலோ கிண்ணத் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இம்முறை 100 பாடசாலை அணிகளுடன் 210 கால்பந்து கழக அணிகளும் கலந்துகொள்ளவுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட…
-
- 0 replies
- 381 views
-
-
கொழும்பு றோயல் கல்லூரியை வீழ்த்தியது யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி அணியினை 10 ஓட்டங்களால் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி கிரிக்கெட் அணி. இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவு 2இன் (டிவிஷன் ll) குழு D அணிகளுக்கான ஒரு போட்டியாக இவ்விரு அணிகளும் மோதிய இந்த ஆட்டம் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில் நணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு றோயல் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோ…
-
- 0 replies
- 435 views
-