விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
விராட் கோலியிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன்: நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் கேன் வில்லியம்சன். | படம்: ஏ.பி. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன். அவர் 3 வடிவங்களிலும் சிறந்த வீரர் என நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. முன்னதாக நியூஸிலாந்து அணி 16-ம் தேதி மும்பை அணிக்கு எதிராக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த ஆட்டம் டெல்லி பெரோ…
-
- 0 replies
- 280 views
-
-
கோலியின் கேப்டன்சி தவறுகளை சுட்டிக்காட்டிய சவுரவ் கங்குலி கங்குலி. | கோப்புப் படம்: அசோக் சக்ரவர்த்தி. ராஸ்டன் சேஸின் அபாரமான சதம், பிளாக்வுட்டின் அதிரடி ஆட்டம், டவ்ரிச், ஹோல்டரின் இரும்பு போன்ற உறுதியினால் 2-வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அபார எழுச்சி பெற்று டிரா செய்தது. ஆனால் கோலியின் கேப்டன்சியில் சில தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளார் சவுரவ் கங்குலி. இது குறித்து தனியார் சேனல் ஒன்றில் கங்குலி கூறியிருப்பதாவது: அமித் மிஸ்ராவுக்கு முன்பாகவே அஸ்வினை பந்து வீச அழைத்திருக்க வேண்டும். அதே போல் உமேஷ் யாதவ்வை கோலி இன்னும் கூட நன்றாகப் பயன்படுத்தலாம். அவருக்கு அளித்த ஓவர்கள் எண்ணிக்கையை விட அவரது பந்து வீச்சு திறமை சிறப்பானது…
-
- 0 replies
- 280 views
-
-
சாம்பியன்ஸ் லீக் ஒரே பிரிவில் பேயர்ன்மியூனிச், ஆர்சனல்! இந்த ஆண்டுக்கான (2015-16) சாம்பியன்ஸ் லீக் தொடர் அட்டவணை விபரம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 'எப்' பிரிவில் ஜெர்மனி ஜாம்பவான் பேயர்மியூனிச் அணியுடன் ஆர்சனல், ஒலிம்பிகாஸ் மற்றும் டைனமோ சக்ரப் அணிகள் இடம் பெற்றுள்ளன. சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ள சான்சிரோ மைதானம் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி' ஈ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் பேயர் வெவர்கியூசன், ரோமா, பாடே போரிசவ் அணிகள் இருக்கின்றன.' ஏ 'பிரிவில் சக்தர் டொனாஸ்க், ரியல்மாட்ரிட், மால்மோ,பாரீஸ் செயின்ட் ஜெர்மயின் அணிகளும் 'பி ' பிரிவில் மான்செஸ்டர் யுனைடெட், பி.எஸ்.வி என்டோவன், சி.எஸ்.கே. மாஸ்கோவா, வுல்ஸ்பர்க் ஆகிய அ…
-
- 0 replies
- 280 views
-
-
மோசடியால் வாய்ப்புப் பெற்றதா கட்டார்? 2022ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை நடாத்தும் வாய்ப்பை, மோசடி செய்து கட்டார் பெற்றது என்று கூறப்படுவது தொடர்பான அறிக்கையை, ஜேர்மனியப் பத்திரிகையான பில்ட் பிரசுரித்துள்ளது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நன்னெறிக் கோவை மீறல் முன்னாள் விசாரணையாளரான மைக்கல் கர்சியாவின் 2014ஆம் ஆண்டு அறிக்கையையே தாம் பெற்றதாக, பில்ட் தெரிவித்துள்ளது. பிரசுரிக்கப்பட்ட அறிக்கையில், சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன அதிகாரி ஒருவரின் 10 வயது மகளுக்கு, இரண்டு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டன என்று கூறப்பட்ட விவரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கட்டாருக்…
-
- 0 replies
- 280 views
-
-
களத்தில் நெஞ்சை நிமிர்த்தும் பழைய ஆக்ரோஷம் ஆஸி. அணிக்கு தேவை: வீரர்களைத் தூண்டும் ஸ்மித் படம். | ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சமீப காலமாக களத்தில் அமைதியாக இருக்கின்றனர், இது சரிபட்டு வராது, பழைய பாணி ஆக்ரோஷம் தேவை என்று கேட்பன் ஸ்மித் வலியுறுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் பிறகு ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் ஆகியவை வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்ரோஷ அணுகுமுறையில் நெஞ்சை நிமிர்த்தி எதிரணியினரை சீண்டும் பழைய பாணி கிரிக்கெட்டுக்குச் செல்ல வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் டேவிட் வார்ன…
-
- 0 replies
- 280 views
-
-
பரிஸ் செய்ண்ட் ஜெர்மைனிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றார் இப்ராஹிமோவிக் மர்சேய் அணியைத் தோற்கடித்து கூப்பே டீ பிரான்ஸ் கிண்ணத்தை பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி கைப்பற்ற, பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணிக்கான தனது இறுதிப் போட்டியில் இரண்டு கோல்களைப் பெற்று வெற்றியுடன் ஸல்டான் இப்ராஹிமோவிக் விடைபெற்றார். மேற்படி கிண்ணத்தினை வென்றமையையடுத்து தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக உள்ளூர் கிண்ணங்கள் அனைத்தையும் பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி வென்றுள்ளது. மேற்படி போட்டியில் 4-2 என்ற கோல்கணக்கில் பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில் பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி சார்பாக இப்ராஹிமோவிக் 2 கோல்களையும் எடின்சன் கவானி, பிளை…
-
- 0 replies
- 280 views
-
-
ஹர்திக் பாண்டியாவின் திறமையை முன்னரே கண்டுணர்ந்த சச்சின் டெண்டுல்கர் சிக்ஸ் வெளுக்கும் ஹர்திக் பாண்டியா. | படம்.| ஏ.எஃப்.பி. அனைவருக்கும் முன்னரே தனது திறமையைப் பாராட்டி ஊக்குவித்தவர் சச்சின் டெண்டுல்கர்தான் என்று ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஹர்திக் பாண்டியா கூறியதாவது: நான் அப்போது என் முதல் போட்டியில் கூட ஆடியிருக்கவில்லை. ஹைதராபாத்தில் ஒரு முக்கியப் போட்டிக்காகச் சென்றிருந்த போது சச்சின் டெண்டுல்கர் என்னை அழைத்து பிறகு தன்னைச் சந்திக்குமாறும் சில விஷயங்கள் பேச வேண்டியுள்ளது என்றும் என்னிடம் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு மும்பையில்தான் அவருடன் பேச வாய்ப்புக் …
-
- 0 replies
- 280 views
-
-
குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது - நார்வே முதலிடம் தென்கொரியாவின் பியாங்சங் நகரில் நடைபெற்று வந்த 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக நிறைவடைந்தன. #WinterOlympics2018 #Closingceremony #Pyeongchanggames பியாங்சங்: 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (23-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்) தென்கொரியாவின் பியாங்சங் நகரில் கடந்த 8-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 93 நாடுகளை …
-
- 0 replies
- 280 views
-
-
யாழ்ப்பாணம் கல்லூரிக்கு 3ஆம் இடம் (நெவில் அன்தனி) இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட 31ஆவது மைலோ அகில இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பி பிரிவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்று அசத்தியது. 13, 15, 17, 19 ஆகிய நான்கு வயது பிரிவுகளில் நடத்தப்பட்ட மைலோ பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றின. இந்த சுற்றுப் போட்டியில் வட மாகாணத்திலிருந்து பங்குபற்றிய ஒரே ஒரு அணியான வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி 17 வயதுக்குட்பட்ட பி பிரிவில் 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது. மாத்தறை உயன்வத்தை மைதானத்தி…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
இறுதி வரை பரபரப்பு: இந்தியா – மேற்கிந்தியதீவு போட்டி சமநிலையில் நிறைவு! இறுதி வரை பரபரப்பாக நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இந்தியா – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (புதன்கிழமை) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 321 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி ஆட்டமிழக்கத்து 157 ஓட்டங்களை, அம்பத்தி ராயுடு 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி ஓபேட் மெக்காய், …
-
- 0 replies
- 279 views
-
-
அங்குரார்ப்பண ஜனாதிபதி விளையாட்டுத்துறை விருது விழா: அதி சிறந்த வீரர் சங்கக்கார, அதி சிறந்த வீராங்கனை நிமாலி 2016-05-20 10:23:42 அங்குரார்ப்பண ஜனாதிபதி விளையாட்டுத்துறை விருது (2015) விழா வில் வருடத்தின் அதி சிறந்த விளையாட்டு வீரர் விருதை இலங்கையின் முன்னாள் கிரிக்ெகட் வீரர் குமார் சங்கக்காரவும் அதி சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை மெய்வல்லுநர் நிமாலி லியனஆராச்சியும் வென்றெடுத்தனர். இவ் விருதுவிழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது. வருடத்தின் விளையாட்டுத்துறையில் அதி சிறந்த ஆளுமை மிக்கவருக்கான விருது சர…
-
- 0 replies
- 279 views
-
-
பார்சிலோனாவின் பிரியாவிடை செய்தியாளர் சந்திப்பில் கண்ணீருடன் மெஸ்ஸி ஞாயிற்றுக்கிழமை காலை தனது பிரியாவிடை செய்தியாளர் சந்திப்பில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதை உறுதி செய்தபோது லியோனல் மெஸ்ஸி கண்ணீர் விட்டார். பார்சிலோனாவை விட்டு வெளியேறுவது தனது வாழ்க்கையில் கடினமான தருணம் என்று 34 வயதான மெஸ்ஸி விவரித்தார். லியோனல் மெஸ்ஸி தனது செய்தியாளர் சந்திப்பைத் தொடங்கியபோது கண்ணீரை எதிர்த்துப் போராடினார், அதில் அவர் தனது முழு வாழ்க்கையையும் விளையாடிய கால்பந்து கிளப்பான பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதை உறுதிப்படுத்தினார். அவர் ஒரு தொடக்க அறிக்கையை கூறுவதற்கு முன்பு அவர் உணர்ச்சிவசப்பட்டார். "இந்த சமீபத்திய நாட்களில், நான் என்ன…
-
- 0 replies
- 279 views
-
-
என்னால் அணிக்கு பங்களிப்பு இல்லையெனில் ஆடுவதில் பயனில்லை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த நிலையில் ஓய்வு பற்றி யோசனை எழுந்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். சிட்னி டெஸ்ட்டுக்கு முன்னதாகவே அவர் ஓய்வை அறிவிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியில்லையெனில் இந்தத் தொடர் முடிந்து ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது. மெல்போர்ன் தோல்வி, தொடர் தோல்வியானதையடுத்து பாகிஸ்தானின் மிகச்சிறந்த வெற்றி தலைவரான மிஸ்பா கூறியதாவது: ஓய்வு பெறுவது குறித்து நான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அணிக்கு பங்களிப்பு செய்ய முடியாதபோது ஆடி என…
-
- 0 replies
- 279 views
-
-
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ‘லயன்’ மெஸ்ஸி ஹாட்ரிக்; 7-0 கோல்கணக்கில் பார்சிலோனா வெற்றி கெல்டிக் அணிக்கு எதிரான போட்டியில் நெய்மர் பாஸை கோலாக மாற்றிய மெஸ்ஸி. | படம்: ஏ.எஃப்.பி. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் கெல்டிக் அணியை 7-0 என்று பார்சிலோனா வீழ்த்துவதற்கு மெஸ்ஸியின் அபாரமான ஹாட்ரிக் உதவி புரிந்தது. அலவேஸ் அணிக்கு எதிராக பார்சிலோனா கடந்த சனிக்கிழமை அதிர்ச்சித் தோல்வி அடைந்தது, இதனையடுத்து பார்சிலோனா பயிற்சியாளர் லூயிஸ் ஹென்றிக் எந்த வித சோதனைகளையும் செய்ய விரும்பாமல் வலுவான அணியைக் களமிறக்கினார். ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே நெய்மரிடம் இருந்து பாஸைப் பெற்ற லயோனல் மெஸ்ஸி நெருக்கடியான ஒரு கோணத்திலிருந்து முதல…
-
- 0 replies
- 279 views
-
-
பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயம்: மெக்ஸிகோ கிராண்ட்பிரியில் ரோஸ்பெர்க் வெற்றி மெக்ஸிகோ கிராண்ட்பிரியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஜெர்மனியின் ரோஸ்பெர்க். படம்:ஏஎஃப்பி. பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயத்தின் 17வது சுற்று மெக்ஸிகோவில் நடைபெற்றது. இதில் ஜெர்மனி வீரர் ரோஸ்பெர்க் வெற்றி பெற்றார். இங்கிலாந்தின் ஹேமில்டன் 2 வது இடத்தை பிடித்தார். இந்த சீசனில் ரோஸ் பெர்க் பெற்ற 4வது வெற்றி இது வாகும். ஏற்கெனவே அவர் ஸ்பெயின், மொனாக்கோ, ஆஸ்தி ரியா போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தார். 23 ஆண்டுகளுக்கு பிறகு மெக்ஸிக்கோவில் நடைபெற்ற பார்முலா 1 போட்டியில் ரோஸ் பெர்க் வெற்றி பெற்றுள்ளார். அவர் 272 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான கார் பந்தயம் மொத்தம்…
-
- 0 replies
- 278 views
-
-
பேட்டிங்கை அலசி ஆராய்ந்து மெருகேற்ற மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட பேட்கள்: ரோஹித் சர்மா, ரஹானே பயன்படுத்துகின்றனர் ரோஹித் சர்மா, ரஹானே. | படம்.| ஏ.எஃப்.பி. வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கணினிமயமாக்கப்பட்ட சிப்களை தங்கள் மட்டைகளில் பொருத்தி இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, அஜிங்கிய ரஹானே ஆகியோர் விளையாடவிருக்கின்றனர். அதாவது ஒவ்வொரு அணியிலும் 3 பேட்ஸ்மென்கள் இத்தகைய சிப் பேட்களை பயன்படுத்துவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. எதற்காக சிப் பொருத்தப்பட்ட பேட் என்றால், மட்டையின் இயக்கம், மட்டையாளரின் நகர்தல் ஆகியவை பற்றிய தரவுகளை சிப்கள் மூலம் சேகரித்து தங்கள் பேட்டிங்கை மேலும் மெருகேற்றிக் கொள்ளலாம், தவறுகளை திருத்திக் க…
-
- 0 replies
- 278 views
-
-
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: ஸ்பெய்ன், இத்தாலி வெற்றி ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக்கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளில், நேற்று சனிக்கிழமை (12), இடம்பெற்ற போட்டிகளில், முன்னாள் உலக சம்பியன்களான ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. ஸ்பெய்ன், மசிடோனியா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வெற்றி பெற்றது. ஸ்பெய்ன் சார்பாக, விட்டோலோ, நாச்சோ மொன்றீயல், அரிட்ஸ் அடுரிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்ததோடு, “ஓவ்ண் கோல்” மூலம் மேலுமொரு கோல் பெறப்பட்டிருந்தது. இத்தாலி, லிட்டின்ஸ்டைன் ஆகிய அணிகளுக்கான போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத…
-
- 1 reply
- 278 views
-
-
தனது குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட இந்திய வீரர்களுக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோனி, கோலி, யுவராஜ்வுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அசார் அலியின் குழந்தைகள் | படம் உதவி: அசார் அலியின் ட்விட்டர் பக்கத்திலிருந்து தனது குழந்தைகளுடன் நேரம் செலவழித்த இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெர்ட் வீரர் அசார் அலி நன்றி தெரிவித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தானுடனான இந்தத் தோல்வி இந்திய கிரிக்கெட் ரசி…
-
- 0 replies
- 278 views
-
-
தப்பியது சங்கா -மஹேல சாதனை, இந்தியாவின் ராஞ்சி கிண்ணப் போட்டிகளில் புதிய இணைப்பாட்ட சாதனை. தப்பியது சங்கா -மஹேல சாதனை, இந்தியாவின் ராஞ்சி கிண்ணப் போட்டிகளில் புதிய இணைப்பாட்ட சாதனை. இந்தியாவில் இடம்பெற்றுவரும் முக்கிய ராஞ்சி கிண்ணப் போட்டிகளில் டெல்லி மற்றும் மகாராஸ்த்ரா மாநில அணிகளுக்கிடையிலான போட்டியில் புதிய இணைப்பாட்ட சாதனை படைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கையின் சங்கா- மஹேல ஜோடி 3 வது விக்கெட்டில் 2005 ம் ஆண்டு இலங்கையில் வைத்து தென் ஆபிரிக்க அணிக்கெதிராக நிலைநாட்டிய 624 எனும் சாதனை இணைப்பாடடம், இன்றைய நாளில் முறியடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டாலும் இறுதியில் தப்பித்துப் போயிருக்கிறது. இந்தியாவின் மகாராஸ்த்ரா மாநிலத…
-
- 0 replies
- 278 views
-
-
ரோயல் லண்டன் ஒருநாள் தொடரில் மஹேல லண்டனில் இடம்பெற்றுவரும் நெட்வெஸ்ட் டி20 பிளாஷ்ட் போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் மஹேல ஜயவர்தன ரோயல் லண்டன் ஒருநாள் தொடரிற்கும் ஒப்பந்நம் செய்யப்பட்டுள்ளார். சமரெஸ்ட் அணிக்காக நெட்வெஸ்ட் டி20 பிளாஷ்டில் மாத்திரம் விளையாடி வந்த நிலையில் சமரெஸ்ட் அணிக்காக ரோயல் லண்டன் ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவுள்ளார். http://www.virakesari.lk/article/8892
-
- 0 replies
- 278 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: விண்டீஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்கள் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் விண்டீஸ் அணி, எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ஓட்டங்களை பெற்றுள்ளது. விண்டீஸ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, பிரிட்ஜ்டவுனில் நேற்று ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று விண்டீஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. போட்டியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய பிராத்வைட் மற்றும் அறிமுக வீரர் கேம்ப்பெல் ஆகியோர் முறையே 40, 44 என்ற ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஷாய் ஹோப் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அதேபோல் ரோஸ்டன் சேஸ் 54 ஓட்டங்களையும், ஹ…
-
- 0 replies
- 278 views
-
-
வரி ஏய்ப்பு.. பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மார் மீது புகார்! ரியோ டி ஜெனீரோ: பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மார் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ளது. பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மார், பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வருகிறார். இந்நிலையில், பிரேசிலின் சாந்தோம் கிளப் அணியில் இருந்து ஸ்பானிஷ் கிளப் அணிக்காக அவர் பரிமாற்றம் செய்யப்பட்டதில், தனக்கு அளிக்கப்பட்ட தொகையில் நெய்மார் வரி ஏய்ப்பு செய்ததாக பிரேசிலை சேர்ந்த வார இதழ் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. நெய்மாருக்கு சொந்தமான அனைத்து சொத்துகளின் மதிப்புகளையும் தணிக்கை செய்யுமாறும் சண்டோஸ் நகர் மத்திய அரசு வழக்கறிஞர்கள் உத்தரவிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் மீதான குற்றச்சாட்டு …
-
- 0 replies
- 278 views
-
-
நெய்மரை தக்க வைக்கிறது பார்சிலோனா: டேனி ஆல்வ்ஸ் அணி மாறுகிறார் நெய்மர் ஸ்பெயின் நாட்டில் கால்பந்து கிளப் அணிகளில் பிரபலமானது பார்சிலோனா. இந்த அணியில் மெஸ்சி, நெய்மர், சுவாரஸ் போன்ற நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர். தற்போது கிளப் அணிகளுக்கு இடையிலான வீரர்கள் மாற்றம் நடைபெற்று வருகிறது. வீரர்கள் மாற்று அணிக்கு செல்ல விரும்பும்போது, அவர்கள் சார்ந்த கிளப்புகள் அவர்களை விடுவிக்கும். அந்த வகையில், பார்சிலோனாவில் விளையாடும் முக்கிய வீரரான நெய்மர் இந்த சீசனில் வேறு அணிக்கு மாறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை பார்சிலோனா அணியின் தொழில்நுட்ப இயக்குநர் ராபர்ட் பெர்னாண்டஸ் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது,…
-
- 0 replies
- 277 views
-
-
நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் ‘டிரா’ மழையால் கடைசி நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. டுனிடின்: நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா அணிகள் டுனிடினில் மோதிய முதல் டெஸ்ட் ‘டிரா ஆனது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 308 ரன்னும், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 341 ரன்னும் குவித்தன. 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்கா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து இருந்தது. இன்றைய 5-வது மற்…
-
- 0 replies
- 277 views
-
-
டோக்யோ ஒலிம்பிக்: லவ்லீனா போர்ஹோகெய்னின் சார்பட்டா வெற்றி சாத்தியமானது எப்படி? வந்தனா பிபிசி இந்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லவ்லீனா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கத்தை உறுதி செய்தார் குத்துச் சண்டை வீராங்கனை லவ்லீனா போர்ஹோகெய்ன். 69 கிலோ வெல்டர்வெயிட் பிரிவின் காலிறுதிப் போட்டியில் சீன தைபே வீராங்கனை சென்-நீன் சென்னை அவர் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அசாம் மாநிலத்தில் இருந்து ஒலிம்பிக்கிற்குச் சென்ற முதல் இந்திய மகளிர் குத்துச்சண்டை வீரர் அவர். லவ்லீனா தோற்…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-