விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
வரி ஏய்ப்பு.. பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மார் மீது புகார்! ரியோ டி ஜெனீரோ: பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மார் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ளது. பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மார், பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வருகிறார். இந்நிலையில், பிரேசிலின் சாந்தோம் கிளப் அணியில் இருந்து ஸ்பானிஷ் கிளப் அணிக்காக அவர் பரிமாற்றம் செய்யப்பட்டதில், தனக்கு அளிக்கப்பட்ட தொகையில் நெய்மார் வரி ஏய்ப்பு செய்ததாக பிரேசிலை சேர்ந்த வார இதழ் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. நெய்மாருக்கு சொந்தமான அனைத்து சொத்துகளின் மதிப்புகளையும் தணிக்கை செய்யுமாறும் சண்டோஸ் நகர் மத்திய அரசு வழக்கறிஞர்கள் உத்தரவிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் மீதான குற்றச்சாட்டு …
-
- 0 replies
- 278 views
-
-
விளையாட்டுச் செய்தித் துளிகள் - 02/08/2015 # நியூஸிலாந்து-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. டென் கிரிக்கெட் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. # 700 நீச்சல் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி வரும் அக்டோபர் 28-ம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்குகிறது. ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் 40 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. # வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் வங்கதேசம்-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டமும் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் ரத்து ச…
-
- 0 replies
- 959 views
-
-
'இந்திய டி20 அணியை வீழ்த்துவது சிரமம்!' - சொல்கிறார் ஆஸி. அணியின் ஆலோசகர்! டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து நாட்டு வீரர்களும் இந்தியாவில் எப்படி விளையாடுவது என தயாராகி வருகிறார்கள். அதில் ஆஸ்திரேலிய அணி ஒரு படி மேலே சென்று, இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஸ்ரீதரன் ஸ்ரீராமை ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசகராக நியமித்துள்ளது. மைக் ஹஸ்ஸியுடன் இணைந்து, ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆஸ்திரேலிய அணிக்குப் பயிற்சியளிப்பார். இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்த, ஆஸ்திரேலிய அணிக்குப் பயிற்சியளிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஸ்ரீதரனிடம் பேசினேன்... ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசகர் பதவி எப்படி கிடைத்தது? …
-
- 0 replies
- 577 views
-
-
இலங்கை பகிரங்க கோல்வ் போட்டிகளில் தங்கராஜாவுக்கு முதலாவது சம்பியன் பட்டம் (நெவில் அன்தனி) றோயல் கலம்போ கோல்வ் கழகத்தினால் நடத்தப்பட்ட பெலிஸ் இலங்கை பகிரங்க கோல்வ் போட்டிகளில் நடராஜா தங்கராஜா மூன்று நகர்வுகள் வித்தியாசத்தில் சம்பியனானார். 43 கோல்வ் வீரர்கள் பங்குபற்றிய இலங்கை பகிரங்க கோல்வ் போட்டிகள் கடந்த வாரம் றோயல் கோல்வ் கழக புல் தரையில் நடைபெற்றது. இந்த நான்கு நாள் போட்டியில் முதல் இரண்டு தினங்களும் குறைந்த நகர்வுகளுடன் தங்கராஜா முன்னிலையில் இருந்தார். ஆனால், மூன்றாம் நாளன்று 2015 சம்பியன் கந்தசாமி பிரபாகரன் முன்னிலை அடை…
-
- 0 replies
- 677 views
-
-
’’சங்கக்காரா, ஜெயவர்த்தனேவின் ஒய்வு தோல்விக்கு காரணம் அல்ல’’ டில்ஷான் March 11, 2016 சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோர்களின் ஓய்வையே எப்போதும் தோல்விக்கு காரணம் காட்ட முடியாது என்று டில்ஷான் கூறியுள்ளார். டி20 உலகக்கிண்ணத் தொடர் இந்தியாவில் களைகட்ட தொடங்கியுள்ளது. இதற்காக இலங்கை அணி இந்தியாவுக்கு பயணமாகியுள்ளது. இந்நிலையில் உலகக்கிண்ண டி20 தொடர் குறித்து இலங்கை அணியின் தொடக்க வீரர் டில்ஷான் கூறுகையில், ”எங்கள் அணியில் அதிக அளவில் இளம் வீரர்கள் உள்ளனர். சமீபத்திய தொடர்களின் இருந்து அவர்கள் அதிக அனுபவம் பெற்றிருப்பார்கள். முன்னாள் வீரர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தனே அணியில் இல்லை என்று எப்போதும் நாம் காரணம் காட்ட முடியாது. அனுபவ வீரர்களான சனத்…
-
- 0 replies
- 386 views
-
-
கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் அதிரடி கைது! இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை – பாணந்துறை, ஹொரேத்துட்டுவ பகுதியில் இன்று அதிகாலை மென்டிஸ் பயணித்த கார் – சைக்கிளுடன் மாேதிய விபத்தில் ஒருவர் பலியானமை தாெடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த விபத்தில் 64 வயதுடைய ஒருவர் பலியானமை முறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/கிரிக்கெட்-வீரர்-குசல்-ம/
-
- 0 replies
- 553 views
-
-
நியூஸிலாந்து - மும்பை மோதும் 3 நாள் கிரிக்கெட் இன்று தொடக்கம் நியூஸிலாந்து மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான 3 நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு நியூஸிலாந்து வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். படம்: ஆர்.வி.மூர்த்தி நியூஸிலாந்து - மும்பை அணி களுக்கிடையேயான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆட நியூஸிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக மும்பை அணிக்கு எதிராக அந்த அணி 3 நாள் கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ளது. இப்போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மை…
-
- 0 replies
- 386 views
-
-
பிரிட்டிஷ் டென்னிஸ் வீரர் ஆண்டி மர்ரீ தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியிலிருந்து மிலோஸ் ரவோனிக் விலகியதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் டென்னிஸ் சாம்பியன் ஆண்டி மர்ரீ ஆண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கோப்புப்படம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அரையிறுதி ஆட்டத்திலிருந்து மிலோஸ் ரவோனிக் விலகினார். இதன் காரணமாக, தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதற்கு மர்ரீக்கு தேவைப்பட்ட வெற்றி கிடைத்தது. கடந்த திங்களன்று, புதிய பட்டியல் வெளியான போது, உலகத் தரவரிசையில் முதல் இடத்திலிருந்த நோவாக் ஜோகோவிச்சை ஆண்டி மர்ரீ முந்தியுள்ளார். 1973 ஆம் ஆண்டிலிருந்து கணினிமயமாக்கப்பட்ட தர…
-
- 0 replies
- 390 views
-
-
பொழுதுபோக்கு பெண்களை ஹோட்டல் அறைக்குள் அழைத்துவந்த இரு பங்களதேஷ் வீரர்களுக்கு அபராதம் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களான அல்- அமின் ஹுசைன் மற்றும் சபீர் ரஹ்மான் ஆகியோருக்கு ஒழுங்கு விதிகளை மீறிய குற்றசாட்டுக்காக 15 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த இருவரும் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளுக்குள் பொழுதுபோக்கு பெண் விருந்தினர்களை அழைத்துவந்துள்ளதால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பங்களதேஷ் பிரிமியர் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டுடிருக்கும் நிலையில், இவர்களுக்கு நேற்று குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பங்களதேஷ் கிரிக்கெட் சபை விடுத்த…
-
- 0 replies
- 325 views
-
-
வாரம் 96 லட்சம் - மைக்கேல் ஷூமேக்கர் மெடிக்கல் பில் இதுவரை ரூ.116 கோடி! ‘ஒரு தலைவலி, காய்ச்சல் என்றாலே 500 ரூவா காலியாகிடுதுப்பா” - இப்படிப் புலம்பாதவர்களே இருக்க முடியாது. மருத்துவச் செலவுகள் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்ட காலகட்டம் இது. எதிர்பாராதவிதமாய் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்ட கார் பந்தய ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கரின் மெடிக்கல் பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவரது மருத்துவச் செலவாக இதுவரை ரூ. 116 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேரந்த 45 வயதான பார்மூலா -1 கார் பந்தய வீரர் மைக்கல் ஷூமேக்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி, பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொ…
-
- 0 replies
- 421 views
-
-
Nadia Comaneci: ஒலிம்பிக் சரித்திரத்தை நிரந்தரமாக மாற்றி எழுதிய ஜிம்னாஸ்டிக் நாயகி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிக எடை தூக்கியது யார்? அதிக கோல் அடித்தது யார்? அதிக ரன்கள் எடுத்தது யார்? குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்தது யார், அதிக தூரம் வீசியது யார்? என எல்லா விளையாட்டுகளிலும் மிகத் தெளிவான முடிவுகள் கிடைக்கும். ஆனால் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற சில விளையாட்டுகளில் முழுக்க முழுக்க நடுவர்களின் தனிப்பட்ட புள்ளிகளைப் பொறுத்து வெற்றியாளர் தீர்மனிக்கப்படுவார். அப்படிப்பட்ட விளையாட்டில், ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக 10-க்கு 10 புள்ளிகளைப் பெற்று மொத்த உலகையும் வ…
-
- 0 replies
- 350 views
- 1 follower
-
-
மகளிர் உலகக் கிண்ணத்தில் தொடர்ச்சியான தோல்விகளை சந்திக்கும் இலங்கை Merissa Aguilleira's late cameo gave West Indies a late lift, West Indies v Sri Lanka, Women's World Cup, July 9, 2017 ©Getty Images இங்கிலாந்தில் நடைபெற்று வரும், மகளிர் உலகக் கிண்ணத்தில் இன்று (9) நடைபெற்று முடிந்திருக்கும் போட்டியொன்றில், இலங்கை மகளிர் அணியை மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 47 ஓட்டங்களால் வீழ்த்தி இத்தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டெர்பி நகர கவுண்டி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை மகளிர் அணியின் தலைவி இனோக்கா ரணவீர முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை ஸ்டெபானி டெ…
-
- 0 replies
- 332 views
-
-
ஐசிசி மகளிர் உலக கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 275 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது இந்தியா 27 மார்ச் 2022, 03:22 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகக் கோப்பை அரை இறுதிக்குள் நுழைவதற்கான போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்கா அணி அரை இறுதிக்குள் நுழைந்தது. தென்னாப்பிரிக்காவின் இறுதிக்கட்ட பேட்டிங்கின்போது, 48 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி, 6 விக்கெட்களை இழந்து, 261 ரன்களை எடுத்திருந்தது. ஆட்டம் இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க, ஓவரின் ஒவ்வொரு பந்…
-
- 0 replies
- 364 views
- 1 follower
-
-
ஸ்வீடனிடம் தோல்வி எதிரொலி: உலகக்கோப்பைக் கால்பந்துக்கு இத்தாலி தகுதி பெறுவதில் நெருக்கடி இத்தாலியை வீழ்த்திய ஸ்வீடன் அணி கொண்டாடும் காட்சி. - படம். | கெட்டி இமேஜஸ். உலக்கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்று பிளே ஆஃப் ஆட்டத்தில் ஸ்வீடனிடம் இத்தாலி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியதையடுத்து 1958-க்குப் பிறகு உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்வீடன், சோல்னாவில் நடைபெற்ற இந்த பிளே ஆஃப் போட்டியில் ஸ்வீடன் பதிலி வீரர் ஜேகப் ஜொஹான்சன் கோல் அடித்தார், ஆனால் இத்தாலியினால் ஸ்வீடனின் வலுவான தடுப்பு வியூகத்தை ஒருமுறை கூட ஊடுருவ முடியவில்லை. இதனையடுத்து சான்சிரோவில் அடு…
-
- 0 replies
- 322 views
-
-
பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தத்தை 2021 வரை நீட்டித்தார் மெஸ்சி கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்சி பார்சிலோனா உடனான ஒப்பந்தத்தை 2021 வரை நீட்டித்துள்ளார். அவரது டிரான்ஸ்பர் பீஸ் 835 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனாக திகழும் லயோனல் மெஸ்சி இந்த தலைமுறையின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப் ஆன பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். தனது ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த கிளப்பிற்காகத்தான் விளையாடி வருகிறார். தொடர்ந்து அணியில் இடம்பிடித்து வந்தாலும் அவரது ஒப்பந்தம் குறிப்பிட…
-
- 0 replies
- 317 views
-
-
இளையோர் உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 9 ஆம் இடத்துக்கான கோப்பைப் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்ட இலங்கை இளையோர் அணி, விக்கெட் காப்பாளர் நிஷான் மதுஷ்கவின் அபார சதத்தின் உதவியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் கடந்த 13 ஆம் திகதி முதல் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இதில் D பிரிவில் இடம்பெற்ற இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் மற்றம் பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வியைத் தழுவி, காலிறுதியில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்டது. …
-
- 0 replies
- 491 views
-
-
ஈடன் கார்டன் மைதானத்துக்கு ஸ்டீவ் வாஹ் புகழாரம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம் இந்திய துணைக் கண்டத்தின் லார்ட்ஸ் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் புகழாரம் சூட்டி யுள்ளார். இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட் டின் மெக்காவாகத் திகழ்கிறது. இந்த நிலையில் அந்த மைதானத்தோடு ஈடன் கார்டனை ஒப்பிட்டுள்ள ஸ்டீவ் வாஹ், “இந்தியாவில் நான் கடைசியாக சுற்றுப்பயணம் மேற் கொண்ட தொடரில் ஈடன் கார்டனில் விளையாடியபோது 5 நாட்களுமே 90 ஆயிரம் இருக்கைகள் கொண்ட அந்த மைதானம் நிரம்பி வழிந்தது. அந்த மைதானம் இந்திய துணைக் கண்டத்தின் லார்ட்ஸ் என்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு அது மிகவும் வியப்பான மைதானம் ஆகும். அங்கு சதமடித்த நான் அதிர்ஷ்…
-
- 0 replies
- 447 views
-
-
கிரிக்கெட்...கால்பந்து...ஹாக்கி! * ‘சகலகலா’ தோனி சாகசம் அக்டோபர் 25, 2014. ராஞ்சி: கிரிக்கெட்டில் சிகரங்களை தொட்ட தோனி, ஐ.எஸ்.எல்., தொடரில் சென்னை கால்பந்து அணியின் இணை உரிமையாளரானார். தற்போது ஹாக்கி அணியை வாங்கி தனது எல்லையில்லா விளையாட்டு ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் தோனி, 33. 2007ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை, 2011ல் 50 ஓவர் உலக கோப்பை மற்றும் 2013ல் சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) தொடர்களில் கோப்பை வென்றார். பைக் பிரியர்: கிரிக்கெட் போட்டி தவிர, பைக்குகள் மீது இவருக்கு ஆர்வம் அதிகம். 2013ல் ‘மகி ரேசிங் டீமை’ நடிகர் நாகார்ஜூனாவுடன் இணைந்து வாங்கினார். ‘சூப்பர்ஸ்போர்ட் உலக சாம்பியன்ஷிப்’ பந்தயங்களில் இந்த அணி …
-
- 0 replies
- 578 views
-
-
எம்பாப்பே அடித்த சாதனை கோல்: ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரெஞ்சு உள்நாட்டு கால்பந்து தொடரில் கோலியாத்தாக வலம் வரும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி லீக் ஆட்டம் ஒன்றில் எஃப்.சி. நான்ட் அணியை வீழ்த்தியது. அந்த அணியின் வரலாற்றில் நட்சத்திர வீரரான எம்பாப்பே புதிய சாதனை படைத்துள்ளார். பிரான்சின் லீக் 1 கால்பந்து தொடரில் நட்சத்திர வீரர்கள் நிரம்பிய, பலம் வாய்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி எஃப்.சி.நான்ட் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டம் பாரிசில் உள்ள பார்சி டெஸ் பிரின்ஸஸ் மைதானத்தில் நடைபெற்றது. பாரிஸ் செயின்ட் ஜெர…
-
- 0 replies
- 445 views
- 1 follower
-
-
செயலாளர் பதவியை வகிக்கும் முதலாவது தமிழன் -ஏ.தேவராஜா- "இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சர்வதேச ரீதியில் மிகவும் பலம் வாய்ந்த ஒரு அணியாகத் திகழ்வதினால், எதிர்வரும் உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டம் வரை இலங்கை முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது" இவ்வாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக்குழுவின் செயலாளர் கே.மதிவாணன் தினக்குரலுக்கு அளித்த விசேட பேட்டியில் தெரிவித்தார். இப்பேட்டியில் அவர் முதலில் தன்னைப் பற்றி தெரிவிக்கையில்; எனது சொந்த இடம் பருத்தித்துறை. நான் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் கல்வி கற்றேன். சிறுவயதில் இருந்து எனக்கு கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம். கல்லூரியின் கிரிக்கெட் அணியில் நான் சிறப்பாக விளையாடியதினால் யாழ். மாவட்ட…
-
- 0 replies
- 887 views
-
-
உலக சதுரங்க விளையாட்டு சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் கார்ல்சென்! உலக சதுரங்க விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டியில், நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சென், நான்காவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், நடப்பு சம்பியனான மேக்னஸ் கார்ல்சென், அமெரிக்காவின் ஃபபியானோ கருணா இருவரும் சம்பியன் பட்டத்துக்காக மோதிக்கொண்டனர். இதில் மேக்னஸ் கார்ல்சென் நடப்பு சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடனும், 26 வயதான கருணா, 1972ஆம் ஆண்டு பாபி ஃபிஷருக்குப் பிறகு உலக சம்பியன் பட்டம் வெல்லும் அமெரிக்க வீரர் என்கிற பெருமையை அடைய வேண்டுமென்ற வேட்டைகயுடனும் களமிறங்கினர். இருவரும் இதுவரை நடைபெற்ற 12 போட்டிகளில் மோதிய நில…
-
- 0 replies
- 453 views
-
-
குதிரை பந்தயங்களில் கலக்கிய 'குயிட்டோ ஸ்டார்' மரணம்! சர்வதேச அளவில் குதிரை பந்தயங்களில் வெற்றி பெற்ற, புகழ்பெற்ற 'குயிட்டோ ஸ்டார்' குதிரை, இடுப்பு எலும்பு முறிவு காரணமாக நேற்று மரணமடைந்தது. இங்கிலாந்தில் நடைபெறும் பல்வேறு குதிரை பந்தயங்களில் கலந்து கொண்டு கோப்பைகளை வென்ற குதிரை குயிட்டோ ஸ்டார். தற்போது 15 வயதான குயிட்டோ ஸ்டார், கடந்த 2012ஆம் ஆண்டு குதிரை பந்தயங்களில் இருந்து ஓய்வு பெற்றது. ஓய்வுக்கு பின், இந்த குதிரை அதன் உரிமையாளர் ஸ்மித்தின் பராமரிப்பில் இருந்து வந்தது. இந்தநிலையில் மேய்ச்சலுக்கு போன குயிட்டோ ஸ்டார், கீழே விழுந்ததில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த குதிரைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று குயிட்டோ ஸ்டார் பர…
-
- 0 replies
- 295 views
-
-
தேவை: கபில்தேவ்களா, குருநாத்களா? கிரிக்கெட் வாரியத்தால் கபில்தேவ்களை அல்ல; குருநாத் மெய்யப்பன்களைத்தான் உருவாக்க முடியும்! ‘அப்படியானால் தோனியின் கதி?’- இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பிறகு சராசரியான ரசிகர்கள் மனதில் எழுந்த கேள்வி. ஐ.பி.எல்லின் இந்த இரு அணிகளின் உரிமையாளர்கள் / உயர் மட்ட நிர்வாகிகள் இருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி லோதா தலைமையிலான குழு இந்தத் தீர்ப்பை வழங்கியது. ஐ.பி.எல்லை ரசித்துப் பார்த்த பலருக்கும் அதிர்ச்சி தந்த இந்தத் தீர்ப்பு, ஐ.பி.எல். போட்டிகளில் மலிந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்படும் ஊழல்களுக்கான நிரூ…
-
- 0 replies
- 265 views
-
-
சைக்கிளிங்கில் சாதிக்கும் யுவதி...! முதல்முதலாக உலக சைக்கிளிங் பந்தய தரவரிசையில், நான்காவது இடம் பிடித்திருக்கிறார் ஒரு இந்திய வீராங்கனை. அவர் டெபோரா ஹெரால்ட். அந்தமான் நிக்கோபார் தீவை சேர்ந்த, 20 வயதாகும் டெபோரா, 9 வயதாக இருக்கும்போது சுனாமி ஆபத்தில் இருந்து தப்பித்து வந்தவர். நேற்று சர்வதேச சைக்கிளிங் யூனியன் வெளியிட்ட, தரவரிசைப்பட்டியலில் 211 புள்ளிகளுடன், 500 மீட்டர் டைம் ட்ரையல் பிரிவில், நான்காம் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார். 10வது இடத்தில் இருந்த டெபோரா, கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில், ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப்பதக்கம் வெல்ல, 6 இடங்கள் முன்னேறி நான்காவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். இதனால் இந்திய அணியும், 500 மீ டைம்…
-
- 0 replies
- 596 views
-
-
அதிகாரப் போட்டியால் அவதியுறுகிறது கிரிக்கெட் இலங்கை கிரிக்கெட் சபைக்குள் காணப்படும் அதிகாரப் போட்டியின் காரணமாக,, இலங்கையின் கிரிக்கெட், அவதியுறுவதாக, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் முன்னாள் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநருமான சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் தோன்றிய மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் சமிந்த வாஸ், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், 2012ஆம் ஆண்டில், நியூசிலாந்து அணியின் இலங்கைக்கான சுற்றுலாவுக்கான வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராகச் செயற்பட்டார். அந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள், மிகச்சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்த, 2013ஆம் ஆண்டில், இலங்கையின் வேகப்…
-
- 0 replies
- 456 views
-