விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
Oct 27, 2025 - 09:35 AM - இந்தியாவின் ராஞ்சியில் நேற்று (26) முடிவடைந்த தெற்காசிய சிரேஸ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பல போட்டிகளில் இந்தியாவுடன் போட்டியிட்ட இலங்கை, பதக்கப் பட்டியலில் 4 தங்கப் பதக்கங்கள் வித்தியாசத்தில் முதலாம் இடத்தை இழந்தது. இலங்கை 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலத்துடன் 40 பதக்கங்களை வென்றது. 20 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற்றதுடன், 20 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களையும் வென்றது. இருப்பினும், இலங்கை மற்றும் இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாடும் தங்கப் பதக்கத்தை வெல்லவில்லை. குறிப்பாக, 02 வெள்ளிப் பதக்கங்களை வென்ற நேபாளத்தைத் தவிர, வேறு எந்த நாடும் வெள்ளிப்…
-
- 2 replies
- 221 views
- 1 follower
-
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் சங்காவை முந்தினார் விராட் கோலி 25 Oct, 2025 | 06:42 PM ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககராவை முந்தினார் இந்திய அணியின் விராட் கோலி. அவுஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் துடுப்படுத்தாடிய அவுஸ்திரேலியா 236 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 237 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. சுப்மன் கில் 24 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். முதல் இரண்டு போட்டிகளில் டக்அவுட் ஆன விராட் கோலி, முதல் பந்திலே…
-
- 1 reply
- 222 views
- 1 follower
-
-
ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் வெற்றியைத் தீர்மானிக்கும் 5 விஷயங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 18 அக்டோபர் 2025 இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) பெர்த் நகரில் தொடங்குகிறது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் மறுபடியும் மோதுவதால் இத்தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடர்கள் சவால் நிறைந்தவையாக இருக்கும். ஆஸ்திரேலியாவின் பலமான வேகப்பந்துவீச்சு, அதிரடியான பேட்டர்கள், எப்போதும் இந்தியாவுக்கு பிரச்னையாக விளங்கும் டிராவிஸ் ஹெட் என இம்முறையும் இந்திய அணிக்கு பல …
-
-
- 15 replies
- 2.9k views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Duif du Toit/Gallo Images/Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் மணி நேரங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் இன்று அரைசதம் அடித்திருக்கிறார். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து ஏரியாக்களிலும் ஜொலித்த அவருக்கு இன்றோடு ஐம்பது வயது ஆகிறது. சுமார் 19 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் விளையாடிய அவரது பயணத்தை எண்களின் வாயிலாக அலசுவோம். ஏனெனில், "நம்பர்களை வைத்துப் பார்த்தால் ஒரு முழுமையான கிரிக்கெட்டர் என்பதற்கு மிக அருகில் வருவது காலிஸ்தான்" என்று டிராவிட்டே கூறியிருக்கிறார்! பட மூலாதாரம், Cameron Spencer/Getty Images டெஸ்ட் கிரிக்கெட்டில் காலிஸ் 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் காலிஸ், 55…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
சென்னையில் இளைஞர் மரணம்: மாரத்தானில் யாரெல்லாம் பங்கேற்கக் கூடாது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மாரத்தான் ஒன்றில் கலந்து கொண்ட 24 வயது இளைஞர் போட்டியின்போதே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். கோட்டூர்புரம் அருகே நடைபெற்ற இந்த மாரத்தானில் பங்கேற்ற, தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான பரமேஷ் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துவிட்டனர். மருத்துவ பரிசோதனை மற்றும் உடல்தகுதி பரிசோதனை இல்லாமல் மாரத்தான் போட்டிகளில் கலந்…
-
-
- 1 reply
- 196 views
- 1 follower
-
-
உயரம் பாய்தலில் மன்னார் மாணவி வில்ஷியா, களுதாவளை மாணவன் பகிர்ஜன் புதிய போட்டி சாதனைகள் Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 03:22 PM (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவி ஒருவரும் மாணவன் ஒருவரும் உயரம் பாய்தலில் சாதனைகள் படைத்து தங்கப் பதக்கங்களை சுவீகரித்து அசத்தியுள்ளனர். 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 1.56 மீற்றர் உயரத்தைத் தாவிய மன்னார் பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவி டபிள்யூ. வில்ஷியா புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 16 வயதுக்குட…
-
- 3 replies
- 297 views
- 1 follower
-
-
09 Oct, 2025 | 12:28 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் முதல் தடவையாக ஐசிசி மகளிர் கிரிக்கெட் வாரத்தை அறிமுகப்படுத்தப்படுகிறது. மகளிர் கிரிக்கெட்டின் உலகளாவிய கொண்டாட்டமாக அமையும் இந்த நிகழ்வு அக்டோபர் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும். இந்த கொண்டாட்டம் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2025 உடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. இந்த புதுமையான முயற்சியானது, ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டுடன் இணைத்தவாறு உலகளாவிய கிரிக்கெட் சமூகத்தை ஒன்றிணைக்கவும், பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்தவும் ஆதரிக்கவும்; கிரிக்கெட் சபைகள் அர்த்தமுள்ள மற்றும் உள்ளூர் ரீதியாக பொருத்தமான வழிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி மக…
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல; மகளிர் கிரிக்கெட்டின் தலையெழுத்து மாறியது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் மிதாலி ராஜ் (கோப்புப் படம், 2017) கட்டுரை தகவல் தினேஷ்குமார் பிபிசி தமிழுக்காக 4 அக்டோபர் 2025 நடப்பு மகளிர் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்பது பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. ஒருகாலத்தில் இந்திய ஆடவர் அணியின் நிழலில் ஒதுங்கியிருந்த இந்திய மகளிர் அணி, இன்று உலகின் வலிமையான அணிகளுள் ஒன்று. விராட் கோலி, ரோஹித் சர்மாக்களுக்கு இணையாக இன்று, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றுள்ளனர். ஆடவர் கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ, அதேயளவு மிதாலி ரா…
-
- 2 replies
- 466 views
- 1 follower
-
-
03 Oct, 2025 | 02:38 PM கனடா, மெக்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கான உத்தியோகபூர்வ பந்தான 'ட்ரையோண்டா' (TRIONDA)வை ஃபிபா (FIFA) அமைப்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. ட்ரையோண்டாவின் சிறப்பம்சங்கள் அடிடாஸ் (Adidas) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பந்து, மூன்று நாடுகளின் ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1. பெயரின் பின்னணி: 'ட்ரையோண்டா' என்ற பெயரானது, ஸ்பானிய மொழியில் "மூன்று அலைகள்"(Three Waves) என்று பொருள்படும்.'ட்ரை' (Tri) என்பது போட்டியை நடத்தும் மூன்று நாடுகளையும், 'ஓண்டா' (Onda) என்பது அலை அல்லது உற்சாகத்தையும் குறிக்கிறது. 2. வடிவமைப்பு மற…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இடம்பெற்றுள்ளார்கள். இருவரும் சுப்மன் கில் தலைமையின் கீழ் விளையாட உள்ளனர். ரோஹித் சர்மா நீக்கம் பற்றி பிசிசிஐ தேர்வு குழுவின் தலைவர் அஜித் அகர்கரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது 2027 ஒருநாள் உலக கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார் இந்த முடிவு பற்றி ரோஹித் சர்மா தற்போது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில் சமூக ஊடகங்களில் யூகங்கள், விமர்சனங்கள், ஆதரவுகள் என விவாதிக்கப்பட்டு வருகின்றன. கேப்டனாக நியமிக்…
-
- 1 reply
- 259 views
- 1 follower
-
-
இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி - பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் ஜொலித்த ஜடேஜா பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் 104 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 2) தொடங்கிய…
-
- 4 replies
- 341 views
- 1 follower
-
-
28 Sep, 2025 | 05:23 PM இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற 'யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025' இன் நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி ஆகியோர் கலந்து கொண்டு, ஓட்ட நிகழ்வைத் தொடக்கி வைத்ததுடன் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவித்தனர். உலகளாவிய அளவில் 150 இற்க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் ஓட்டம் 2025, இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தை கொண்டாடுவதோடு, சேவை, மனவொற்றுமை மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவித்து, உலகம் முழுவதும் சமூகங்களை இணைக்…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
Published By: Vishnu 24 Sep, 2025 | 07:22 PM (நெவில் அன்தனி) பிரான்ஸ் நியூஸ் மெகஸின் (பிரான்ஸ் செய்தி சஞ்சிகை) மற்றும் பிரெஞ்சு கால்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றினால் வருடாந்தம் வழங்கப்படும் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பெலன் டி'ஓர் விருதை பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் கழக வீரரும் பிரான்ஸ் தேசிய வீரருமான உஸ்மான் டெம்பிலி வென்றெடுத்தார். அதி சிறந்த வீராங்கனைக்கான பெலன் டி'ஓர் விருதை மூன்றாவது தொடர்ச்சியான வருடமாக பார்சிலோனா மற்றும் ஸ்பெய்ன் மத்திய கள வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி வென்றெடுத்தார். பிரான்ஸ் தேசத்தில் பாரிஸ் நகரில் அமைந்துள்ள தியேட்டர் டு சாட்லே அரங்கில் கடந்த திங்கட்கிழமை இரவு 69ஆவது பெலன் டி'ஓர் விருது விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ் விழாவில் அதி சிறந்த வீர…
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, துபையில் நடந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி 4 மணி நேரங்களுக்கு முன்னர் "இந்திய அரசு, பிசிசிஐ மற்றும் நாங்கள் மூவரும் ஒரே பக்கத்தில் இருந்தோம். நாங்கள் இங்கு வந்தோம், ஒரு முடிவை எடுத்தோம். நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம் என்று நினைக்கிறேன், நாங்கள் அவர்களுக்குச் சரியான பதிலைக் கொடுத்தோம்." ஆட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் எதிரணி வீரர்களுடன் கை குலுக்காதது குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் தெளிவாகப் பதிலளித்தார். ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பற்றிப் பேசப்படாததை விட, டாஸின் போதும், சூர்யகுமார் யாதவ் வெற்றி ஷாட்டை அடித்த…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
ஜப்பானின் டோக்கியோவில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலக தடகள செம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவின் மெலிசா ஜெபர்சன் வூடன், பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்யை 10.61 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில், ஜமைக்காவின் ஒப்லிக் செவில்லே ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியை 9.77 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmfjr9skw00e9qplpmdrbz4zp
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 1 13 Sep, 2025 | 02:06 PM இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே, மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில், இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்களை பெற்று, சர்வதேச இருபதுக்கு - 20 வரலாற்றில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரராகக் களமிறங்கிய, பில் சால்ட், 60 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் உட்பட 141 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம், இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக சதம் அடித…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
தொடர்ந்து விளையாடி வரும் வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் எவ்வித அக்கறையையும் வெளிப்படுத்துவது இல்லை என்று ஷர்துல் தாக்கூர் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 11 மாதங்களாக இடைவெளியின்றி பல்வேறு போட்டிகளில் விளையாடி வரும் ஷர்துல் தாக்கூர், வீரர்களின் உடல் தகுதி விஷயத்தில் கவனம் செலுத்தும் அணி நிர்வாகம் தொடர்ந்து விளையாடும் வீரர்களின் உடல் நிலை குறித்து கவனம் கொள்வதில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஆண்டு முழுதும் பல்வேறு தொடர்களில் ஆடுகிறோம். எனவே ஒரே மாதிரியான உடல்தகுதியினை பராமரிப்பது கடினம். பெரும்பாலான நேரங்களில் நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறோம். நிர்வாகம் உயர்ந்த மட்டத்தில் இல்லை. பல மாதங்கள் ஆடிய பிறகும் கூட எங்கள் உடல் நிலை என்ன? எப்படியி…
-
- 1 reply
- 248 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 05 Sep, 2025 | 02:33 PM (நெவில் அன்தனி) மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்னேஸ்வரன் ஆகாஷ் தொடர்ச்சியாக பந்துவீச்சில் பிரகாசிக்க, மேற்கிந்தியத் தீவுகளுடனான 3ஆவது போட்டியில் 8 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 7 போட்டிகளைக் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது. இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஆகாஷ், இந்தப் போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய சாமிக்க சமுதித…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
03 Sep, 2025 | 05:07 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் ராஷித் கான் படைத்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச ரி20 மும்முனை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 165ஆக உயர்த்திக்கொண்டார். இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை ராஷித் கான் நிலைநாட்டினார். ஒட்டுமொத்த ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை கடந்த சில மாதங்களாக தன்னகத்த…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
Published By: Vishnu 02 Sep, 2025 | 09:08 PM (நெவில் அன்தனி) விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 49ஆவது தேசிய விளையாட்டு விழா காலி தடெல்ல மைதானத்தில் கடந்த வார இறுதியில் நிறைவடைந்தது. விளையாட்டு விழாவில் மிகவும் முக்கியமானதும் கடைசியுமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு, மலையக, கிழக்கு வீர, வீராங்கனைகள் பதக்கங்கள் வென்று அசத்தியிருந்தனர். கோலூன்றிப் பாய்தலில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவுகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரனும் நேசராசா டக்சிதாவும் தத்தமது சொந்த சாதனைகளை முறியடித்து புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதங்கங்களை சுவீகரித்து பலத்த பாராட்டுதல்களைப் பெற்றனர். மெய்வல்லுநர் போட…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
02 Sep, 2025 | 12:51 PM சீனாவில் நடைபெறவுள்ள 16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட அணியும் பங்குபற்றவுள்ளது. இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட திறன்காண் தேர்வின்போது 16 வயதுக்குட்பட்ட பூர்வாங்க இலங்கை பாடசாலைகள் குழாத்தில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த என். கெஸ்ரோன், கே. ஜெனிஸ்ரன் ஆகிய இருவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். திறன்காண் தேர்வின்போது அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி இம் மாதம் 20ம் திகதியிலிர…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் பணப்பரிசு நான்கு மடங்காக அதிகரிப்பு; சம்பியன் அணிக்கு 134 கோடி ரூபா Published By: Digital Desk 3 01 Sep, 2025 | 05:12 PM (நெவில் அன்தனி) இந்தியாவிலும் இலங்கையிலும் இந்த மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள 8 அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொத்த பணப் பரிசாக 418 கோடியே 5 இலட்சத்து 74,000 ரூபா (13.88 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படவுள்ளது. இதன் படி இந்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பணப் பரிச நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. நியூஸிலாந்தில் 2022இல் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் மொ…
-
-
- 49 replies
- 1.6k views
- 2 followers
-
-
27 Aug, 2025 | 11:02 AM இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.பி.எ.ல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவரது இரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், ஐ.பி.எல். மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து மட்டுமல்லாமல், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்…
-
- 1 reply
- 163 views
- 1 follower
-
-
2025 ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு! அடுத்த ஆண்டு ஐ.சி.சி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தை இந்தியாவுடன் இணைந்து நடத்தத் தயாராகி வரும் இலங்கை, 2025 ஆசியக் கிண்ணத்துக்கான தனது அணியை அறிவித்துள்ளது. 16 பேர் கொண்ட இந்த அணியினை சரித் அசலங்க வழிநடத்துகிறார். இதில் நட்சத்திர சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவும் இடம்பெற்றுள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான உள்நாட்டு தொடரின் போது சுழற்பந்து வீச்சாளரும், துடுப்பாட்ட வீரருமான ஹசரங்க காயமடைந்தார். இதனால், இன்று (29) ஆரம்பமாகும் சிம்பாப்வே சுற்றுப்பயணத்திலும் அவர் இடம்பெறவில்லை. ஆனால், அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஆரம்பகவுள்ள ஆசியக் கிண்ணத்துக்கு அவர் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் இலங்கை அணி…
-
- 1 reply
- 243 views
-
-
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 16 ஆவது விளையாட்டுத்திருவிழா : மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி சாதனை படைப்பு 23 AUG, 2025 | 02:26 PM 2025 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான 16வது விளையாட்டுத்திருவிழா 16.08.2025 தொடக்கம் 20.08.2025 வரை ஐந்து நாட்கள் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இதில் மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி 05 தங்கப்பதக்கம், 03 வெள்ளிப்பதக்கம், 04 வெண்கலப்பதக்கம், 02 நான்காம் இடம், 03 ஐந்தாம் இடம், 01 ஆறாம் இடத்தினை பெற்று மொத்தமாக 102 புள்ளிகளை பெற்று ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தினைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் அஞ்சல் ஓட்ட சம்பியன் ஆகவும் 14 வயது மற்றும் 20 வயது பிரிவில் வடமாகாண சிறந்த அணி என்னும் விருதையும் தட்ட…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-