விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
முதல் டி20 கிரிக்கெட்: வங்காள தேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து கேன் வில்லியம்சின் அபார ஆட்டத்தால் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்காள தேசத்தை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. வங்காள தேசம் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. ஏற்கனவே முடிவடைந்த இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. நேப்பியரில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்காள தேசம் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர…
-
- 0 replies
- 236 views
-
-
பாகிஸ்தான் வீரர் அஹமட் ஷேசாத் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணம் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று (10) உறுதி செய்தது. இதன் காரணமாக அவருக்கு குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அவரிடம் விளக்கம் கோரி குற்றப்பத்திரிகை சமர்பிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 26 வயதுடைய அனுபவமிக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் கிண…
-
- 0 replies
- 236 views
-
-
இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ; இந்திய கிரிக்கெட் வீரர் அகால மரணம் இலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இடம்பெறும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12 வயதான வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பமுனுகம ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்ட வீரர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது. இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்காக 19 இந்திய இளம் வீரர்கள் இங்கு வந்துள்ளமை குறிப…
-
- 0 replies
- 236 views
-
-
டி20 போட்டிகளில்ல் முதல்முறை: ஃபீல்டிங்குக்கு இடையூறு செய்ததால் ஜேசன் ராய் அவுட் ரன் அவுட் டிலிருந்து தப்பிக்க த்ரோவுக்கு இடையூறு செய்ததாக ஜேசன் ராய் அவுட்.| படம்.| கெட்டி இமேஜஸ். இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், களத்தில் ஃபீல்டிங் செய்ய தடை செய்ததால் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். டி20 போட்டிகளில் இப்படி ஒருவர் ஆட்டமிழப்பது இது முதல்முறையாகும். இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளிடையே டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 175 ரன்கள் வெறி இலக்கை விரட்டியது இங்கிலாந்து. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜேசன் ராய் 97 ரன்கள் எடுத்திருந்தார். கிறிஸ் மோரிஸ் வீசிய 16-வது ஓவரில், இங்கில…
-
- 0 replies
- 235 views
-
-
தாக்கிய சுறாவை பந்தாடிய தில்லான உலக சாம்பியன் வீரர்! (வீடியோ) கடலில் அலை சறுக்குப் போட்டியில் ஆஸ்திரேலியா வீரரும், உலக சாம்பியனுமான மிக் ஃபானிங் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென சுறா தாக்கியதால் சுதாரித்துக் கொண்ட அவர், எதிர் தாக்குதல் நடத்தி அதனை விரட்டி அடித்துள்ளார். இந்த தில்லான சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் நடந்துள்ளது. https://youtu.be/iJchroxUM0Q ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நீர்சறுக்கு வீரர் மிக் ஃபானிங். இவர் நீர் சறுக்கு விளையாட்டில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்நிலையில் போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஃபானிங், தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். போர்ட் எலிசபெத் நகரில் ஜெஃப்ரி பே ஓபன் அலை சறுக்குப் போட்டியில் அவர் ஈடுபட்டு…
-
- 0 replies
- 235 views
-
-
ஆட்டம் காண்கிறது அவுஸ்திரேலிய கிரிக்கெட்! தேர்வாளர் ரொட்னி மார்ஷ் பதவி விலகினார் 2016-11-18 11:26:25 அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் படுதோல்விகளி னால் மனம் நொந்துபோன ரொட்னி மார்ஷ், அவுஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் மார் ஷும் தெரிவுக்குழு உறுப்பினர்களான ட்ரவொ ஹோன்ஸ், மார்க் வோ ஆகியோரும் ஹோபார்ட்டில் கூடினர். அந்தச் சந்தர்ப்பத்தில் தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்வதாக ரொட்னி மார்ஷ் அறிவித்தார். அவரது பதவிக்காலம் அட…
-
- 0 replies
- 235 views
-
-
ஒருநாள் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றார் யூனிஸ் கான் இங்கிலாந்துக்கு எதிராக புதன் அன்று நடைபெறும் ஒருநாள் போட்டியே கடைசி போட்டி. யூனிஸ் கான் ஓய்வு. | படம்: ஏ.பி. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் அறிவித்துள்ளார். இன்று (புதன்) அபுதாபியில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியே தனது கடைசி ஒருநாள் போட்டி என்று பாகிஸ்தான் மூத்த வீரர் யூனிஸ் கான் அறிவித்துள்ளார். இந்த பகலிரவுப் போட்டியில் விளையாடுவதோடு தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்வை முடித்துக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். “டி20 மற்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை விளையாடும்போதே எ…
-
- 0 replies
- 235 views
-
-
தொடர்ச்சியாக ஆசியக்கிண்ணம் பங்களாதேஷில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக பங்களாதேஷில் ஆசியக் கிண்ணத்தை நடாத்துவது என சிங்கப்பூரில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஐந்து நாடுகளைக் கொண்ட இந்தப் பிராந்திய கிரிக்கெட் தொடரில் போட்டியை நடாத்தும் நாடான பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஒரு துணைக் கண்ட நாடு பங்கேற்கவுள்ளது. இம்முறை தொடர் எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப்போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இத்தொடர் முடிந்து ஐந்து நாட்களில் உலக இருபது-20 தொடர் ஆரம்பிக்கவுள்ளமையால், எதிர்வரும் ஆசியக் கிண்ணத்தில் முதற்தடவையாக இருபது-20 போட்டிகளும் இடம்பெறவுள்ளன. அடுத்த வருடம்,…
-
- 0 replies
- 235 views
-
-
தேசிய கொடிக்குப் பதிலாக சர்வதேச ஒலிம்பிக் கொடியின் கீழ் இலங்கை பங்குபற்றக்கூடிய அபாயம் நிலவுகிறது – தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ (பிரேஸிலிலிருந்து நெவில் அன்தனி) ஒலிம்பிக் போன்ற சர்வதேச பல்வகை விளையாட்டுப் போட்டிகளில் தேசிய கொடிக்குப் பதிலாக சர்வதேச ஒலிம்பிக் கொடியின் கீழ் இலங்கை பங்குபற்றக்கூடிய அபாயம் நிலவுகின்றது. இலங்கையில் விளையாட்டுத்துறை சட்டமூலம் இரண்டு மாதங்களுக்குள் திருத்தப்படாவிட்டால், சில அணிகள் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கொடியின்கீழ் ரியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றியதுபோன்ற நிலை இலங்கைக்கும் ஏற்படும் என தேசிய ஒலிம்பிக் குழுத் தலை…
-
- 1 reply
- 235 views
-
-
திங்கள்கிழமை உலக ஜூனியர் சம்பியன் போட்டியில் தோல்வியடைந்து தங்க பதக்கததை இழந்தத பின்னர் ரஷ்ய அணியை சேர்ந்த சியாற் பெய்ஜின் ஆபத்தான வழியில் தன் பொறுமையை இழந்தார். கனடிய அணியினர் தங்கள் வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கையில் 19-வயதுடைய குறிப்பிட்ட ரஷ்ய வீரர் தனது குச்சியை ஒரு ரசிகரை தாக்கும் வண்ணம் அரங்கத்தில் எறிந்துள்ளார். இந்த தங்கப்பதக்க போட்டியில் கனடா 5-4 ஆக ரஷ்ய அணியை வென்றது. கனடியர்களின் வெற்றி கொண்டாட்டத்தின் போது கனடிய வீரர் ஒருவரும் தனது குச்சியை மேல் நோக்கி வீசியுள்ளார். பெய்ஜின் நீல கோட்டிற்கு சறுக்கிச் சென்று தனது குச்சியை கண்ணாடி மீது வீசினார். ஜூனியர்சின் அணியை நிரவகிக்கும் சர்வதேச ஐஸ் ஹொக்கி கூட்டமைப்பு இந்த சம்பவத்திற்காக பெய்ஜின் தண்டனையை எதிர்நோக்க…
-
- 0 replies
- 235 views
-
-
18 SEP, 2024 | 04:51 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் வரலாற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை வழங்கும் சகாப்தம், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியுடன் உதயமாகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி வருடாந்த மாநாட்டில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. 2030ஆம் ஆண்டிலேயே இருபாலாருக்கும் சம பரிசுத் தொகையை வழங்குவதென ஐசிசி முடிவுசெய்திருந்தது. ஆனால் இப்போது 6 வருடங்களுக்கு முன்னரே அந்தத் தீர்மானத்தை அமுல்படுத்துவதென ஐசிசி முடிவுசெய்துள்ளது. இந்த வருட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஒட்டுமொத்த பணப்பரிசாக 7.95 மில்லியன் அமெரி…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
முதல் முறையல்ல, பந்தை சேதப்படுத்தியதற்காக ஸ்மித், வார்னர் ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டனர்: போட்டி நடுவர் பகீர் தகவல் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் : கோப்புப் படம் - படம்: கெட்டி இமேஜஸ் பந்தை சேதப்படுத்தும் சம்பவத்தில் டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஈடுபடுவது முதல்முறை அல்ல, ஏற்கெனவே உள்நாட்டு போட்டிகளில் இதுபோல் செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்று போட்டி நடுவர் டேர்ல் ஹார்பர் பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் கேமரூன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரு…
-
- 1 reply
- 235 views
-
-
வெளியாகியது இங்கிலாந்து பிறிமீயர் லீக் போட்டி அட்டவணை 2016-17 பருவகாலத்துக்கான இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஓகஸ்ட் 13ஆம் திகதி, இப்பருவகாலத்துக்கான முதலாவது போட்டி இடம்பெறவுள்ளது. முதல் வாரத்தில், நடப்புச் சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றி அணி, ஹள் சிற்றி அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஆர்சனல் - லிவர்பூல், போர்ண்மெத் - மன்செஸ்டர் யுனைட்டட், பேர்ண்லி - சுவன்சி சிற்றி, செல்சி - வெஸ்ட் ஹாம் யுனைட்டட், கிறிஸ்டல் பலஸ் - வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன், எவேர்ட்டன் - டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர், மன்செஸ்டர் சிற்றி - சண்டர்லான்ட், மிடில்ஸ்புரோ - ஸ்டோக் சிற்றி, சௌதாம்டன் - வட்போர்ட் ஆகிய போட்டிகள், முதல் வாரத்தின் ஏனைய…
-
- 0 replies
- 235 views
-
-
மெஸ்சியின் மதிப்பு 5343 கோடி ரூபாய்: இழக்கும் அபாயத்தில் பார்சிலோனா மெஸ்சியின் மதிப்பு 5343 கோடி ரூபாயாக உள்ள நிலையில், வேறு கிளப்பிற்கு ப்ரீ டிரான்ஸ்பராக செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. #Messi #Barcelona #Catalonia அர்ஜென்டினாவைச் சேர்ந்த 30 வயதாகும் மெஸ்சி, கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து அதாவது 16 வயதில் இருந்தே பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வரும் மெஸ்சி, பார்சிலோனா கிளப்பிற்காக பல்வேறு சாம்பியன் பட்டங்களை வாங்கி கொடுத்துள்ளார். இவரும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் பார்சிலோனா …
-
- 0 replies
- 234 views
-
-
Published By: VISHNU 17 NOV, 2023 | 11:05 AM (எம். எம். சில்வெஸ்டர் ) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 34 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 20 வயதுக்கு மேற்பட்ட குண்டெறிதல் போட்டியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்திருந்த எஸ். மிதுன் ராஜ் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 34ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்றைய தினம் சாம்பிரதாய பூர்வமாக நேற்றைய தினம் ஆரம்பமானது. எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிறு வரை நடைபெறவுள்ள இப்போட்டி விழாவில் நாடு முழுவதிலிருந்தும் 15 வயது முதல் 29 வயது வரையான 3000 க்கும் அதிகமான வீ…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
ஊழலில் கைது செய்யப்பட்ட ஃபிஃபா அதிகாரி அமெரிக்காவிடம் ஒப்படைப்பு! லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஃபிஃபா நிர்வாகி ஒருவரை, சுவிட்சர்லாந்து அரசு அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது. லஞ்சம் ஊழலில் திளைத்த 7 ஃபிபா அதிகாரிகளை சுவிட்சர்லாந்து அரசு, கடந்த மே 27ஆம் தேதி கைது செய்தது. அமெரிக்க புலனாய்வுத்துறையான எப்.பி.ஐ, சுவிட்சர்லாந்து அரசை கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உலககையே அதிர வைத்த இந்த கைது நடவடிக்கைக்குள்ளான 7 பேரும், உலக கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவில் பல்வேறு பதவிகளில் இருந்தவர்கள், இருப்பவர்கள். அப்படி கைது செய்யப்பட்ட 7 பேரில் ஒருவரை சுவிட்சர்லாந்து அரசு, நேற்று அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டது. இதற்காக அமெரிக்காவ…
-
- 0 replies
- 234 views
-
-
பந்துவீச்சு பயிற்சிக்காக தினமும் 40 கி.மீ பயணம் செய்த முஸ்தாபீகுர் ரக்மான்! வங்கதேச அணியின் இடது கை பந்துவீச்சாளர் முஸ்தாபீகுர் ரக்மான் விசுவரூபம் எடுத்துள்ளார். களமிறங்கிய முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்ற இவர் தனது இரண்டாவது போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். கடந்த 1995ஆம் ஆண்டு பிறந்த ரக்மானுக்கு தற்போது வயது 19. அதாவது வங்கதேச அணி முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் போது இவருக்கு மூன்றரை வயதுதான். பேட்ஸ்மேனாக வாழ்க்கையை தொடங்கினாலும் பின்னர் பந்துவீச்சில் ஆர்வம் செலுத்தினார். வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் சட்கீரா மாவட்டத்தை சேர்ந்த முஸ்தாபீகுர் ரக்மான் தினமும் 40 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து கிர…
-
- 0 replies
- 234 views
-
-
மியாமி டென்னிஸ்: ஹிங்கிஸ் இணையை வென்று இறுதிச்சுற்றில் சானியா இணை! மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியில்... மகளிருக்கான இரட்டையர் பிரிவில், சானியா- ஸ்ட்ரைகோவா இணை, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் நடைபெற்றுவரும் மியாமி ஓப்பன் டென்னிஸ் தொடரில், மகளிர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா- செக் குடியரசின் ஸ்ட்ரைகோவா இணை, அரையிறுதிப் போட்டியில் சான்- ஹிங்கிஸ் இணையரை எதிர்த்து விளையாடியது. இதில், சானியா இணை முதல் செட்டை 6-7 எனத் தோற்றாலும், அடுத்தடுத்த செட்களில் 6-1, 10-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. http://www.vikatan.com/news/sports/85103-sania-strycova-in-miami-fina…
-
- 0 replies
- 234 views
-
-
சங்ககராவின் சாதனையை முறியடித்துள்ள டோனி இருபதுக்கு இருபது போட்டியில் 134 பந்துகளை பிடித்ததன் மூலம் மகேந்திர சிங் டோனி, இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககராவின் சாதனையை முறியடித்துள்ளார். இந்தியா – தென்ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் நேற்றைய முதல் போட்டியில் இந்தியா 28 ஓட்டவித்தியாசத்தில் வெற்றியீட்டியிருந்தது. இந்தப் போட்டியின் போது புவனேஸ்வர் குமார் வீசிய பந்தை ஹென்றிக்ஸ் அடித்தபோது மேல்நோக்கி சென்ற பந்தினை டோனி பிடித்திருந்தார். இதன்மூலம் இருபதுக்கு இருபது போட்டியில் 134 பந்துகளை பிடித்து சங்ககராவின் சாதனையை முறியடித்தார்.சங்ககரா 254 போட்டிகளில் 134 பிடிகளை பிடித்துள்ளார். டோனி 275 …
-
- 0 replies
- 234 views
-
-
கால்பந்து வாழ்க்கையில் 500 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை! ரியல்மாட்ரிட் ஸ்டிரைக்கர் ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையில் 500 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி மால்மோ அணியை எதிர்கொண்டது. ஸ்வீடனில் உள்ள மால்மோ நகரில் நடந்த இந்த போட்டியில் 28வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல்மாட்ரிட் அணிக்கான முதல் கோலை அடித்தார். இது அவரது கால்பந்து வாழ்க்கையில் அடிக்கும் 500வது கோல் ஆகும். இதற்கு ரொனால்டோவுக்கு 753 போட்டிகள் தேவைப்பட்டது. அதோடு சாம்பியன்ஸ் லீக் தொடரில் 117 போட்டியிகளில் ஆடியுள்ள அவர் அடிக்கும் 81வது கோலாகவும் இது அமைந்தது. பிற்பாதி ஆட்டத்தில் 90வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒர…
-
- 0 replies
- 234 views
-
-
8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் By VISHNU 06 OCT, 2022 | 11:16 AM (என்.வீ.ஏ.) மலேசியாவின் லங்காவி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் 8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான குழுநிலைப் பிரிவில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இலங்கை சார்பாக முன்னாள் உலக சம்பியன் நிஷான்த பெர்னாண்டோவும் ஷஹீத் ஹில்மியும் இணைந்து வெண்கலப் பதக்கதை வென்றனர். பங்களாதேஷ் அணியினரை எதிர்த்தாடிய இலங்கை அணி 2 - 1 ப்ரேம்கள் கணக்கில வெற்றிபெற்று 3 ஆம் இடத்தைப் பெற்றது. கடந்த திங்கட்கிழமை (03) ஆரம்பமான 8 ஆவது உலக கெரம் சம்பியன்ஷிப் போட்டி வெள்ளிக்கிழமை (07) நிறைவடையவுள்ளது. …
-
- 0 replies
- 233 views
- 2 followers
-
-
நுவான் பிரதீப்பின் 'நோ போல்': அநியாயமா, தவறா? -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகள், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குக் கிரிக்கெட் தொடர்களுக்காகச் செல்லும்போது, நடுவர்களின் தீர்ப்புகளும் மத்தியஸ்தர்களின் முடிவுகளும், கீழைத்தேய நாடுகளுக்கு எதிராகவே கிடைக்குமென்பது, முன்பிருந்த எதிர்பார்ப்பு. முன்னைய காலங்களில், சர்வதேச கிரிக்கெட் சபையில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளே ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலையில், அவற்றுக்குச் சார்பான முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் சபையில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்ததோடு, மூன்றாம் நாடொன்றைச் சேர்ந்த நடுவர்கள், கிரிக்கெட் போட்டிகளில் பங்க…
-
- 0 replies
- 233 views
-
-
தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில் நடுவரின் தீர்ப்பின் ஆதிக்கம் குறைக்கப்படவுள்ளது தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில், கள நடுவர் வழங்கும் தீர்ப்பு செலுத்தும் தாக்கத்தை குறைப்பதற்கான பரிந்துரை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கையணியின் முன்னாள் தலைவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவிலுள்ளவருமான மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவுக்கு நியமிக்கப்பட்டு, கடந்த வாரம் இடம்பெற்ற குறித்த குழுவின் இறுதிச் சந்திப்பில் பங்கேற்றிருந்த ஜயவர்தனவே, தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில், கள நடுவரின் தீர்ப்பு செலுத்துகின்ற தாக்கமானது அரைவாசியாக குறைக்கப்…
-
- 0 replies
- 233 views
-
-
மொரின்ஹோவுக்கு தடை, அபராதம் செல்சி கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோவுக்கு, 50,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தடையும், கால்பந்தாட்டச் சம்மேளனத்தால் விதிக்கப்பட்டுள்ளது. சௌதம்டன் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்த பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த மொரின்ஹோ, செல்சி அணிக்கான தீர்ப்புகளை வழங்குவதற்கு, போட்டி மத்தியஸ்தர்கள் அச்சத்துடன் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார். போட்டி அதிகாரியொருவர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என்ற கருத்துப்படி வெளியிடப்படும் கருத்தெனத் தெரிவித்து, மொரின்ஹோவின் கருத்துக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே, 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அவருக்கு ஒரு போட்டித்தடை விதிக்க…
-
- 0 replies
- 233 views
-
-
ஒருநாள் தொடரில் ஸ்மித்துதான் என் இலக்கு: இர்பான் சொல்கிறார் ஆஸ்திரேலியாவின் ஆடுகளத்தை பயன்படுத்தி நல்ல பாஃர்மில் இருக்கும் ஸ்மித்தை வீழ்த்துவதே என் இலக்கு என பாகிஸ்தான் வீரர் இர்பான் சொல்கிறார். பாகிஸ்தானின் உயரமான வேகப்பந்து வீச்சாளர் என்று அழைக்கப்படும் மொகமது இர்பான் 7 அடியும் ஒரு இஞ்ச் உயரம் கொண்டவர். இவர் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 13-ந்தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மொகமது இர்பான் கூறுகையில் ‘‘நான்தான் மிகவும் அதிக உயரம் கொண்…
-
- 0 replies
- 233 views
-