விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
ஜெங் தாவோ: நீச்சல் போட்டியில் 6 தங்கப் பதக்கம் - யார் இந்த ஜெங் தாவோ? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ஆண்கள் நீச்சல் போட்டியில் பங்கேற்ற பிறகு ஜெங் தாவோ. சீனாவை சேர்ந்த ஜெங் தாவோவுக்கு 30 வயது. ஒரு மின்சார ஷாக்கில் தமது இரண்டு கைகளையும் இழந்த இவர், டோக்யோ பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை அள்ளினார். "என்னைப் பார் மகளே, கைகள் இல்லாவிட்டாலும் என்னால் வேகமாக நீந்த முடிகிறது!" என்று ஒரு போட்டிக்குப் பிறகு தமது மகளுக்கு அனுப்பிய ஒரு வீடியோ மெசேஜில் கூறினார் ஜெங். குழந்தையாக இருக்கும்போதே தமத…
-
- 0 replies
- 403 views
- 1 follower
-
-
தொடங்குமுன் சாதனை படைக்கப்போகும் உலக சம்பியன்ஷிப் தொடர் லண்டனில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள உலக சம்பியன்ஷிப் தொடர், அதிக டிக்கெட்டுக்களை விற்பனை செய்ததில் சாதனை படைக்கவுள்ளது. லண்டன் நகரில் உலக சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் உலகளவில் உள்ள முன்னணி தடகள வீர,- வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட் 100 மீற்றர், 200 மீற்றர் மற்றும் 4X100 தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்கிறார். இதுதான் அவருடைய கடைசி ஓட்டமாகும். இந்த தொடருடன் உசைன் போல்ட் ஓய்வு பெறுகிறார்.…
-
- 0 replies
- 227 views
-
-
பொன் அணிகளின் போர்: புனித பத்திரிசியார் கல்லூரி 10 விக்கெட்களால் வெற்றி 105 ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட பொன் அணிகளின் போரில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 10 விக்கெட்களால் வெற்றி பெற்றது. நேற்றைய தினம் ஆரம்பமான இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி 98 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முதல் இனிங்ஸில் பதிலளித்தாடிய பத்திரிசியார் கல்லூரி அணி 08 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது முதல் நாளாட்டம் நிறைவிற்கு வந்தது. துடுப்பாட்டத்தில் எஸ். கீர்த்தனன் 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இன்று முதல் இனிங்ஸைத் தொடர்ந்த புனித பத்திரிசியார் கல்லூரி 156 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும…
-
- 0 replies
- 346 views
-
-
ஓய்வு பெறுகிறார் 'கம்-பேக்' மன்னன் நெஹ்ரா! தனது 18 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை வரும் நவம்பர் 1-ம் தேதியுடன் முடித்துக் கொள்கிறார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா. வரும் நவம்பர் 1-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பை-பை சொல்கிறார் நெஹ்ரா. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1999-ம் ஆண்டு அறிமுகமான நெஹ்ரா, தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் பல காயங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். அதனால், அவருக்கு இந்த காலகட்டத்தில் 12 சர்ஜரிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி இருந்தும் அவர் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றி பெற்ற அணியில் ஒருவராக இருந்தார். 2003-ம் ஆண்டு இங்கிலா…
-
- 0 replies
- 378 views
-
-
மீள்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்: தென் ஆப்பிரிக்க கேப்டன் ஜேபி டுமினி கருத்து ஜேபி டுமினி - AFP இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் மோசமாக அமைந்தது. அதிலும் ரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் வீழ்ச்சி கண்டிருந்தனர். இந்நிலையில் தென் ஆப்பிக்க அணியின் தோல்வி தருணங்கள் தற்போது டி 20 தொடருக்கும் வியாபிக்கத் தொடங்கி உள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தில் இந்திய அணியிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி கண்டது. இந்த ஆட்டம் முடிவடைந்ததும் அந்த அணியின் கேப்டன் ஜேபி…
-
- 0 replies
- 222 views
-
-
இந்திய கிரிக்கெட் சபை குறித்து ஐ.சி.சியிடம் புகாரிடப்படும்: விளையாட்டுத்துறை அமைச்சர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியின்போது இலங்கை அமைச்சர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நடத்திய விதம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலிடம் (ஐ.சி.சி) முறையிடவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்திய இணை நாடு என்ற வகையில் ஏனைய நாடுகளின் அமைச்சர்களை இலங்கை நடத்திய விதத்திற்கும் எமது அமைச்சர்களை இந்திய கிரிக்கெட் சபை நடத்திய விதத்திற்கும் முரண்பாடு உள்ளது. இது குறித்து நான் திருப்தியடையவில்லை. இறுதிப்போட்டியை பார்வையிட எமது நாட்டிலிருந்து 20 அமைச்சர்கள் சென்றனர். விளையாட்டுத்துறை அமைச்சரான நானும…
-
- 0 replies
- 4.1k views
-
-
பார்சிலோனா அணியின் முழுநேர கேப்டனாக மெஸ்ஸி நியமனம்! பார்சிலோனா அணியின் கேப்டனாக லயோனல் மெஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார். கால்பந்து உலகின் நாயகனாக வலம் வருபவர் லயோனல் மெஸ்ஸி. இவர் ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணிக்காக கடந்த 2005ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து, இந்த அணியின் கேப்டனாக இருந்து வருபவர் ஆன்ட்ரே இனியஸ்டா. இந்த அணியின் துணை கேப்டனாக லயோனால் மெஸ்ஸி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இனியஸ்டா கடந்தாண்டு பார்சிலோனா அணியிலிருந்து 2017-18 சீசனுடன் விலகுவதாக அறிவித்திருந்தார். அவர் ஜப்பானின் வெசல் கோப் அணிக்காக விளையாட இருக்கிறார். இதையடுத்து, துணை கேப்டனாக இருந்த லயோனால் மெஸ்ஸி தற்போது பார்சிலோனா அணியின் க…
-
- 0 replies
- 456 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டிற்கு நான் புதியவன்- நோபோல் சர்ச்சையில் சிக்கிய நடுவர்Share1 பங்களாதேஸ் மேற்கிந்திய அணிகளிற்கு எதிரான ரி20 போட்டியில் தொடர்ச்சியாக தவறுதலாக நோபோல் தீர்ப்பு வழங்கியதன் மூலம் கடும் சர்ச்சைக்கு காரணமாக நடுவர் தன்வீர் அகமட் தனது தவறினை ஏற்றுக்கொண்டுள்ளார். நான் சர்வதேச கிரிக்கெட்டிற்கு புதியவன் இதனால் நான் தவறிழைத்தேன் என அவர் தெரிவித்துள்ளார். பந்துவீச்சாளரின் காலிற்கும் கோட்டிற்கும் இடையிலான நெருக்கம் காரணமாக நோபோல் என்பது எப்போதும் பிரச்சினைக்குரிய விடயமே என குறிப்பிட்டுள்ள தன்வீர் அகமட் பந்து வீச்சாளர் வேகமாக பாய்ந்தால் நோபோலை கண்டுபிடிப்பது கடினம் எனவும் தெரிவித்துள்ளார். நான் சர்வதேச கிரிக்கெட்டிற்கு பு…
-
- 0 replies
- 530 views
-
-
வங்கதேசத்திடம் படுதோல்வி: யூனிஸுக்கு வலுக்கிறது எதிர்ப்பு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் படுதோல்வி கண்டதைத் தொடர்ந்து அந்த அணியின் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறிய தாவது: பாகிஸ்தான் படுதோல் வியைச் சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் வக்கார் யூனிஸ் தனது பதவியை ராஜினாமா செய்வது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அவர் அப்படி செய்தால் அவருக்கும் அது நல்லது. வங்கதேச அணி அதன் கிரிக்கெட்டை மேம்படுத்தியுள்ளது. ஆனாலும் பாகிஸ்தான் இவ்வளவு மோசமாக தோற்றிருப்பதை சகித்துக்கொள்ள முடியாது. இந்தத் தோல்விக்கு பாகிஸ் தான் அணி நிர்வாகம்த…
-
- 0 replies
- 297 views
-
-
யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழக்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டித் தொடரில் ஒர்அங்கமான இருபாலருக்குமான கபடிப் போட்டியில் பெண்கள் பிரிவில் காலநிதி விளையாட்டுக்கழக அணியும், ஆண்கள் பிரிவில் ஒளிச்சுடர் விளையாட்டுக்கழக அணியும் கிண்ணம் வென்றன. கடந்த திங்கட்கிழமை கரைநகர் இந்துக்கல்லூரி மைதானத்தில் இறுதியாட்டங்கள் இடம் பெற்றன. முதலில் இடம் பெற்ற ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் ஒளிச்சுடர் விளையாட்டு கழக அணியை எதிர்த்து காரை சலைஞ்சஸ் விளையாட்டு கழக அணி மோதியது. 43:26 என்ற புள்ளி அடிப்படையில் ஒளிச்சுடர் விளையாட்டு கழக அணி வெற்றி பெற்றது. …
-
- 0 replies
- 609 views
-
-
2016 ஜனவரியில் இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது: 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் 2016- ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது இந்திய அணி. | கோப்புப் படம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் அந்த அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தத் தொடரில் 3 டி20 சர்வதேச போட்டிகளும் அடங்கும். 2015 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏமாற்றத் தோல்வியைத் தழுவியதையடுத்து ஆஸ்திரேலியாவை மீண்டும் ஜனவரியில் அவர்கள் சொந்த மண்ணில் சந்திக்கிறது இந்திய அணி. நியூஸிலாந்து மற்றும் மே.இ.தீவுகளுக்கு எதிராக தலா 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலியா அதற்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக…
-
- 0 replies
- 270 views
-
-
பொதுவாக ஆப்கானித்தான் என்றதும், தலிபான் மற்றும் குண்டுவெடிப்புக்கள் தான் நினைவுக்கு வரும். 36 மில்லியன்கள் மக்களை கொண்ட இந்த நாடு பல யுத்தங்களை கொண்டிருக்கின்றது. பல வல்லரசுகளை எதிர்த்து போராடி உள்ளது. ஆனால், இங்கே மிகவும் விருப்பம் பெற்ற விளையாட்டாக கிரிக்கெட் இருந்து வருகின்றது, ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி ஆப்கானித்தான் நாட்டினை முன்னிருத்தி சர்வதேச துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடும் துடுப்பாட்ட அணியாகும். துடுப்பாட்டம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆப்கானித்தானில் விளையாடப்பட்டாலும், சமீபத்திய ஆண்டுகளில் மட்டுமே அந்த அணி முக்கியத்துவம் பெற்று உள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கூட்டமைப்பு 1995 ல் உருவாக்கப்பட்டு மற்றும் 2001 ல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் …
-
- 0 replies
- 888 views
-
-
கட்டாக்கில் சர்வதேச போட்டி நடத்த 2 ஆண்டு தடை விதிக்க வேண்டும்: ரசிகர்களின் ரகளையால் கவாஸ்கர் காட்டம் கோப்புப் படம். கட்டாக் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த 2 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்தபோது கோபமடைந்த ரசிகர்கள், தண்ணீர் பாட்டில்களை மைதானத்துக்குள் எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் ஆட்டம் பாதிப்புக்குள்ளானது. ரசிகர்களின் இந்த செயலால் கோபமடைந்த கவாஸ்கர் மேலும் கூறியிருப்பதாவது: ரசிகர்கள் பாட்டிலை தூக்கி எறிந்தபோது போலீஸார் அதை வேடிக்…
-
- 0 replies
- 198 views
-
-
இந்திய கிரிக்கெட் அணி எங்களுடன் விளையாடாவிட்டால் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. எங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்திய கிரிக்கெட் அணி (டிசம்பர்–ஜனவரியில்) விளையாட மறுத்தால் உலகக் கிண்ணத்தை புறக்கணித்து விடுவோம் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் ஷகாரியார் கான் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடர்வதற்கான அனைத்துவித வாய்ப்புகளையும் இந்தியா தவிர்த்தால், அதன் பின்னர், பாகிஸ்தான் அரசின் அறிவுரையை கேட்டு அடுத்தகட்ட முடிவெடுப்போம். அப்படி…
-
- 0 replies
- 160 views
-
-
இந்தியா போராடித் தோல்வி ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 24, 2008 சிட்னி: சிட்னியில் இன்று நடந்த ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், கடுமையாக போராடி இந்திய தோல்வியைத் தழுவியது. இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை முத்தரப்புத் தொடரில் இன்று சிட்னியில் முக்கிய ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட முடியும். ஆனால் தோற்றால் இலங்கைக்கு சாதகமாக வாய்ப்புகள் திரும்பி விடும் என்ற நிலை இருந்தது. இந்த சூழ்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. எடுத்தது முதல் அதிரடியாக ஆடத் தொடங்கியது ஆஸ்திரேலியா. தொட…
-
- 0 replies
- 963 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்சர்கள்: மெக்கல்லம் சாதனை பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள். | கோப்புப் படம்: ஏ.எப்.பி. இலங்கைக்கு எதிராக டியுனெடின் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் தனது 100-வது டெஸ்ட் சிக்சரை அடித்தார் நியூஸிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம். நியூஸிலாந்து முதல் இன்னிங்சில் 137 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸில் இன்று 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கைக்கு வெற்றி இலக்கு 405 ரன்கள்; ஆனால் இலங்கை 4-ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்து போட்டியைக் காப்பாற்ற போராடி வருகிறது. …
-
- 0 replies
- 618 views
-
-
டோனியின் வாழ்க்கை செப்ரெம்பரில் ரிலீஸ் December 30, 2015 டோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை தலைவரான டோனி, அணிக்கு 2 உலகக்கிண்ணங்களை வென்று கொடுத்தவர். கடந்த ஆண்டு அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டநிலையில், தற்போது ரி-20 மற்றும் ஒருநாள் ஆட்டங்களின் தலைவராக உள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி ‘சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்று தயாராகிறது. நீரஜ் பாண்டே இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில் சுவாந்த் சிங் ராஜ்புத் (டோனி), கயாரா அத்வானி (சாக்சி), அனுபம் கெர் (டோனியின் தந்தை) ஆகியோர் நடிக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியு…
-
- 0 replies
- 476 views
-
-
கேப்டனாக தோனியின் கடைசி இன்னிங்ஸா இது? - மூன்று அதிர்ச்சி காரணங்கள் ஏழ்மையானவர்கள் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்து, தடதடவென சாதனைகளை உடைத்து நொறுக்கி, இந்திய அணியை புரட்டிப்போட்டு , தனது அதிரடி அபார ஃபினிஷிங் மற்றும் அட்டகாசமான கேப்டன்ஷிப் துணை கொண்டு, இந்திய அணிக்கு குறுகிய காலத்தில் டி20, ஒருநாள் உலககோப்பைகள், சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்று, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை தரவரிசையில் முதல் இடத்துக்கு உயர்த்தி , உலகில் எந்தவொரு கிரிக்கெட் கேப்டனும் செய்யாத சாதனைகளை படைத்தவரும், உலகின் வெற்றிகரமான கேப்டன்களில் டாப் இடத்தில் இருப்பவருமான மகேந்திர சிங் தோனிக்கு இன்று கடைசி ஒரு தின போட்டியாக அமையக்கூடும் என தகவல்கள் கசிகின்றன. அதற…
-
- 0 replies
- 418 views
-
-
சென்னையில் களமிறங்கும் ஜூனியர் ஷூமேக்கர்! ஃபார்முலா ஒன் கார்பந்தயத்தில், ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கரின் மகன் மிக் ஷூமேக்கர். இவர், இந்தியாவில் நடக்கவிருக்கும் எம்.ஆர்.எஃப் சேலஞ்ச் கார் பந்தயப் போட்டியில் பங்கேற்கவுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் நடக்கும் இப்போட்டியில், பல முன்னாள் வீரர்களின் வாரிசுகளும் பங்கேற்கவுள்ளனர். ஃபார்முலா ஒன் வரலாற்றில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஷூமேக்கர், பனிச்சறுக்கின்போது தலையில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்று மீண்டவர். அவரது மகனான 16 வயது மிக், இதுவரை 22 'ஃபார்முலா 4' பந்தயங்களில் பங்கேற்று, 1 பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார். ‘வேன் அமர்ஃபூட் ரேசிங்’ அணிக்காக பங்கேற…
-
- 0 replies
- 678 views
-
-
லிவர்பூலுக்கு மற்றொரு வெற்றி: மெஸ்ஸி கோலால் வென்றது பார்சிலோனா இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, லிவர்பூல் எதிர் மன்செஸ்டர் யுனைடட் அன்பீல்டில் நடைபெற்ற மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடி 2-0 என வெற்றியீட்டிய லிவர்பூல் அணி 30 ஆண்டுகளின் பின் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளது. புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் அணி இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் 16 புள்ளிகள் இடைவெளியுடன் முன்னணியில் உள்ளது. தனது சொந்த மைதானத்தில்…
-
- 0 replies
- 386 views
-
-
கிரிக்கெட்: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை இழந்தது ஏன்? படத்தின் காப்புரிமை Kai Schwoerer / getty images ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை 2016 அக்டோபருக்கு பிறகு முதல்முறையாக இந்தியா இழந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை 116 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலியா பிடித்துள்ளது. அடுத்த நிலையில் நியூசிலாந்தும் (115 புள்ளிகள்), 114 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையே இந்தியா பிடித்துள்ளது. 2016-17 காலகட்டத்தில் முதலிடத்தை பிடித்த இந்தியா 12 டெஸ்ட்களில் வென்றது. ஒரு போட்டியில் மட்டுமே தோற்…
-
- 0 replies
- 477 views
-
-
இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு உலக சாதனைகளுடன் தங்கங்கள் 2016-09-16 12:25:47 ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்றுவரும் பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பெரிய பிரித்தானியாவின் கதீனா கொக்ஸ் இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், அந்த இரண்டு போட்டிகளிலும் உலக சாதனைகளை நிலைநாட்டி பெருமை தேடிக் கொண்டார். ரி 38 - 400மீற்றரில் மாற்றுத்திறன் கொண்ட வீராங்கனைகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே இரண்டு வகையான விளையாட்டுக்களில் உலக சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். 25 வயதுடைய கதீனா, ஒலிம்பிக் விளையாட்டரங்கில் புதனன்று நடைபெற்ற ரி 38 பிரிவு…
-
- 0 replies
- 416 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட்: இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மறுப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரன் குவிக்கும் எந்திரம் என்று அழைக்கப்படும் ஜோ ரூட் ஐ.பி.எல். போட்டியில் விளையாட மறுத்து விட்டார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம். லண்டன் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரன் குவிக்கும் எந்திரம் என்று அழைக்கப்படும் ஜோ ரூட் இதுவரை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடியதில்லை. இந்த சீசனில் ஐ.பி.எல். போட்டியில் விளையாட வைக்க சில அணி நிர்வாகங்கள் அவரை அணுகின. ஆனால் அவர் மறுத்து விட்டார். இது குறித்து 26 வயதான ஜோ ரூட் கூறுகையில், ‘இந்த ஆண்டு…
-
- 0 replies
- 454 views
-
-
ஊக்க மருந்து பயன்படுத்திய சக வீரர் மீது கோபம் கிடையாது – போல்ட் ஊக்க மருந்து பயன்படுத்தியமை நிரூபணமான சக வீரர் மீது கோபம் கிடையாது என நட்சத்திர ஓட்ட வீரர் ஹூசெய்ன் போல்ட் தெரிவித்துள்ளார். சக வீரரின் ஊக்க மருந்து பயன்பாட்டு குற்றச்சாட்டு காரணமாக போல்ட் ஒர் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை இழக்க நேரி;ட்டுள்ளது. அஞ்சல்ப் போட்டியில் ஜமெய்க்காவின் சார்பில் பங்கேற்ற வீரர் ஒருவர் ஊக்க மருந்து பயன்படுத்தியமை அம்பலமாகியுள்ளதனால் இவ்வாறு பதக்கம் ஒன்றை இழக்க நேரிட்டமை வருத்தமளிக்கின்றது என்ற போதிலும் சக வீரர் மீது குரோத உணர்வு ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்பது தங்கப் பதக்கங்களை வென்றிருந்த ஹூசெய்ன் போல்ட்இதில் ஒரு பதக்கத்தை தற்…
-
- 0 replies
- 479 views
-
-
119 வருட ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்தார் ரென்ஷா 20 வயதிற்குள் 500 ரன்கள் எடுத்து 119 வருட கால ஆஸ்திரேலியாவின் சாதனையை இன்றைய ராஞ்சி டெஸ்டில் முறியடித்துள்ளார் தொடக்க வீரர் ரென்ஷா. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் இளம் தொடக்க வீரரான ரென்ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். புனே, பெங்களூரு டெஸ்டில் அரைசதம் அடித்தார். இன்று ராஞ்சியில் தொடங்கிய போட்டியில் 44 ரன்கள் எடுத்தார். இவர் 11வது இன்னிங்சில் இந்த ரன்னை எடுத்துள்ளார். 21 வயதை பூர்த்தி…
-
- 0 replies
- 428 views
-