விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
பீபா தலைவருக்கான தேர்தலில் பிளட்டினி போட்டியிடமாட்டார் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பீபா தலைவருக்கான தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என இடைநிறுத்தப்பட்டுள்ள, ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்புத் சங்கத்தின் தலைவரான மைக்கல் பிளட்டினி தெரிவித்துள்ளார். கால்பந்தாட்டம் தொடர்பான நடவடிக்கைகளில் பங்குபற்றுவதற்கு பீபாவின் தலைவர் செப் பிளாட்டருக்கும் பிளட்டினிக்கும் உலக கால்பந்தாட்ட ஆளும் உடலினால் எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு பிளட்டினிக்கு வழங்கப்பட்ட 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சம்பந்தமாக இருவரும் குற்றமிழைத்தவர்களாக கருதப்பட்டனர். தங்களது தடைகளுக்கு எதிராக இருவரும் மேன்முறையீடு மேற்கொண்டு…
-
- 0 replies
- 412 views
-
-
ஒருநாள் போட்டிகளில் அக்ரத்தின் சாதனையை முறியடிக்க முரளிக்கு இன்னும் 30 விக்கெட்டுகள் தேவை [03 - July - 2008] ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அக்ரத்தின் சாதனையை முறியடிக்க முரளிதரன் ஆர்வமாயுள்ளார். உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முரளிதரன். அவர் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் என்ற சாதனை படைத்துள்ளார். 37 வயதான முரளிதரன் 120 டெஸ்டில் விளையாடி 735 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷேன் வோர்னின் சாதனையை முறியடித்து அவர் முதலிடத்திலுள்ளார். ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பாகிஸ்தான் முன்னாள் கப்டன் வாஸிம் அக்ரமின் சாதனையை முறியடிக்க முரளிதரன் …
-
- 0 replies
- 921 views
-
-
ஐந்தாவது டி20 போட்டியிலும் தாமதமாக பந்துவீசிய இந்திய அணிக்கு அபராதம் By Mohammed Rishad Getty image நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை இந்தியா வீசி முடிக்காததால் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து – இந்தியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 163 ஓட்ட்களை எடுத்தது. பின்னர் 164 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசி…
-
- 0 replies
- 501 views
-
-
இலங்கைக்காக 7 பதக்கங்களைப் பெற்ற வடக்கு வீரர்கள் க. அகரன் இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச காலுதைச்சண்டைப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்துகொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். பாகிஸ்தானின் லாகூரில் அமைந்துள்ள கடாபி வளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் இன்று வரை நடைபெற்ற சர்வதேச காலுதைச்சண்டைப் போட்டியில் கலந்துகொண்ட வட மாகாண காலுதைச்சண்டை வீரர்கள் எழுவர் இலங்கைக்கு நான்கு தங்கப் பதக்கங்களையும், மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். வட மாகாண காலுதை…
-
- 0 replies
- 830 views
-
-
ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்க நிறைவேற்றுக் குழுவில் முதலாவது பெண் உறுப்பினராக ஃபுளொரென்ஸ் தெரிவு ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தில் முதலாவது பெண் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த ஃப்ளொரென்ஸ் ஹார்டுய்ன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தின் பொதுச் சபை மாநாட்டில் நடத்தப்பட்ட வாக்களிப்பு மூலம் ஃப்ளொரென்ஸ் தெரிவு செய்யப்பட்டார். இப்பதவிக்கான வாக்கெடுப்பில் 33 – 21 என்ற வாக்குகள் அடிப்படை யில் நோர்வேயின் முன்னாள் சர்வதேச வீரர் கரென் எஸ்பெலண்டை ஃப்ளொரென்ஸ் வெற்றி கொண்டார். …
-
- 0 replies
- 296 views
-
-
ரியோ ரியல் ஹீரோஸ்! எப்போதும் போலவே இந்த முறையும் அமெரிக்காவும் சீனாவும் தங்க வேட்டை யாட, ரியோ ஒலிம்பிக்-2016 இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. எண்ணற்ற மகிழ்ச்சிகள், அதிர்ச்சிகள், பிரிவுகள், உறவுகள், வேதனைகள், சாதனைகள் என கலந்துகட்டிய உணர்வுத் திருவிழாவில் இருந்து விறுவிறு ஹைலைட்ஸ் இங்கே! கோல்டு ஃபிஷ் பசிகொண்ட திமிங்கலம் போல பாய்கிறார் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். அள்ளிக்கோ அசத்திக்கோ என ஆடித் தள்ளுபடி ஆஃபர் போல தங்கப்பதக்கங்களை வரிசையாகக் கபளீகரம் பண்ணுகிறார் பெல்ப்ஸ். போட்டி தொடங்கிய இரண்டே நாட்களில் நான்கு தங்கங்களை வீட்டுக்கு கூரியர் பண்ணிவிட்டார். ஒரு போட்டிக்கு முன்னர், முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனா வெற்றியை தடுத்த ரியல் மாட்ரிட் கேப்டன் ரியல் மாட்ரிட் அணியின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனாவின் வெற்றியை தடுத்தார். ‘எல் கிளாசிகோ’ என்று அழைக்கப்படும் பரம எதிரிகளான பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் நேற்று ஸ்பெயினில் உள்ள கேம்ப் நவு மைதானத்தில் ‘லா லிகா’ லீக் போட்டியில் மோதின. இந்த போட்டியை நேரில் பார்க்க 98 ஆயிரத்து 485 ரசிகர்கள் வந்திருந்தனர். சொந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பார்சிலோனா அணி களம் இறங்கியது. அதே சமயத்தில் 6 புள்ளிகள் முன்னில…
-
- 0 replies
- 434 views
-
-
‘கெப்டன் கூல்’ தோனிக்கு இந்திய அணி வழங்கிய விசேட பரிசு! திறமையான வழிநடத்தல் மற்றும் வசீகரமான தலைமைத்துவம் போன்றவற்றால் இந்திய கிரிக்கெட் அணிக்குப் பெரும் புகழ் தேடித் தந்திருக்கும் மகேந்திர சிங் தோனியை இந்திய கிரிக்கெட் அணி நினைவுப் பரிசளித்து கௌரவித்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற இ-20 போட்டிக்கு முன்னதாக இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்திய அணி வீரர்கள் மற்றும் ஒரு சில அதிகாரிகளே கலந்துகொண்ட இந்த பிரத்தியேக நிகழ்வில், இந்திய அணி சார்பில் தோனிக்கு ஒரு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மரத்தாலான ஒரு சட்டகத்தில், தோனியின் மார்பளவுப் படமும், அவரது தலைமைத்துவத்தின் கீழ் பெற்ற முக்கியமான நான்கு வ…
-
- 0 replies
- 352 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: டி நடராஜன் விளையாடுவது சந்தேகம் இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 12 ஆம் தேதி தொடங்குகிறது. பதிவு: மார்ச் 10, 2021 09:08 AM அகமதாபாத், இந்தியா - இங்கிலாந்து இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர் டி நடராஜன், காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடராஜன் தோள் பட்டை மற்றும் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தன்னுடைய உடற் தகுதியை உறுதி செய்ய பய…
-
- 0 replies
- 664 views
-