விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இலங்கை குழாத்தில் ஓஷத, நிஷான் - நெவில் அன்தனி தென் ஆபிரிக்காவுக்கு எதிராக இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட 17 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாத்தில் துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோ, சுழல்பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸ் ஆகியோர் இடம்பெறுகின்றனர். நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசிக்கத் தவறிய ரமேஷ் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார். அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா உட்பட 10 வீரர்கள் ஏற்கனவே தென் ஆபிரிக்கா சென்று அங்கு நீல் மெக்கென்ஸியின் கீழ் விசேட பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். …
-
-
- 18 replies
- 875 views
- 1 follower
-
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஃபார்மில் இல்லாதபோதும் கோலியை கொண்டாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக விராட் கோலி இந்த ஆண்டில் டெஸ்டில் மொத்தமாக 250 ரன்கள் சேர்த்து 22 சராசரி மட்டுமே வைத்துள்ளார். இந்நிலையில், மோசமான ஃபார்மில் இருந்தும், அவர் பார்டர் கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியா வந்தவுடன் அவரை ஆஸ்திரேலிய ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கிக் கொண்டாடுகின்றன. இதற்குக் காரணம் என்ன? கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், செளரவ் கங்குலி, தோனி போன்ற பல முக்கியமான வீரர்களை இந்திய கிரிக்கெட் கண்டிருக்கிறது. அந்த வரிசையில் விராட் கோலியும் கவனிக்கப்படுக…
-
-
- 106 replies
- 6.2k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒட்டுமொத்தப் போட்டியில் டைசன் 18 குத்துக்களை மட்டுமே பதிவு செய்தார். எழுதியவர், கல் சஜாத் பதவி, டெக்சாஸ், பிபிசி ஸ்போர்ட் பத்திரிகையாளர் உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற மைக் டைசனை, யூடியூபராக இருந்து குத்துச்சண்டை வீரராக மாறிய ஜேக் பால் வென்றுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸில் AT &T மைதானத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசனை அவர் வீழ்த்தியுள்ளார். இந்த ஆட்டத்தை 70 ஆயிரம் ரசிகர்கள் நேரிலும், லட்சக்கணக்கானோர் நெட்ஃபிளிக்ஸ் மூலம் நேரலையிலும் கண்டு களித்தனர். 58 வயதான மைக் டைசன் இரண்டு முறை ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்றவர். அவர் 19 வருடங்களா…
-
-
- 9 replies
- 769 views
- 1 follower
-
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் நவம்பர் 29இல் ஆரம்பம் (நெவில் அன்தனி) ஆசிய கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 50 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி துபாயிலும் ஷார்ஜாவிலும் நடைபெறவுள்ளன. சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அந்தஸ்துடைய ஐந்து நாடுகள் உட்பட 8 நாடுகள் இப் போட்டியில் பங்குபற்றவுள்ளன. நடப்பு சம்பியன் பங்களாதேஷுடன் இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகியன பி குழுவில் இடம்பெறுகின்றன. பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஏ குழுவில் இடம்பெறுகின்றன. அந்த இரண்டு நாடுகளுடன் ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான் ஆகியனவும் இக் குழுவில் இடம்பெறுகின்றன. ஐக்கிய …
-
-
- 18 replies
- 788 views
- 1 follower
-
-
பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது; ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் அட்டவணை திருத்தப்படலாம்? (நெவில் அன்தனி) ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் செல்லப்போவதில்லை என இந்தியா உறுதிபடக் கூறியுள்ளது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டுக்கான அட்டவணைகளில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் 2025 பெப்ரவரி 19ஆம் திகதி ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தியாவின் இந்தத் தீர்மானம் போட்டியின்போது சிக்கல்களை தோற்றுவிக்கும் என கருதப்படுகிறது. …
-
-
- 39 replies
- 1.7k views
- 1 follower
-
-
இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ரி-20 இன்று ஆரம்பம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட ரி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தம்புள்ளையில் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான 10 வது ரி-20 போட்டி இதுவாகும். இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 9 போட்டிகளில் 5 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளதுடன், கடைசியாக நடைபெற்ற 4 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றியை உறுதி செய்துள்ளது. இலங்கை அணிக்கு இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ள போதும், 3 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன. https://thinakkural.lk/article/311911
-
-
- 15 replies
- 1.1k views
- 1 follower
-
-
சாம்ஸன் சாதனை சதம்: தென் ஆப்ரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே புரட்டி எடுத்த இந்திய இளம்படை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சஞ்சு சாம்ஸன் பந்தை விளாசுகிறார். எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக சஞ்சு சாம்ஸனின் தொடர்ச்சியான 2வது டி20 சதம், சுழற்பந்துவீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சு ஆகியவற்றால், சொந்த மண்ணிலேயே தென் ஆப்பிரிக்க அணியை முதல் டி20 ஆட்டத்தில் அபாரமாக வென்றது சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி. டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மெட் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. 203…
-
-
- 24 replies
- 1.2k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் கல்லூரிக்கு 3ஆம் இடம் (நெவில் அன்தனி) இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட 31ஆவது மைலோ அகில இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பி பிரிவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்று அசத்தியது. 13, 15, 17, 19 ஆகிய நான்கு வயது பிரிவுகளில் நடத்தப்பட்ட மைலோ பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றின. இந்த சுற்றுப் போட்டியில் வட மாகாணத்திலிருந்து பங்குபற்றிய ஒரே ஒரு அணியான வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி 17 வயதுக்குட்பட்ட பி பிரிவில் 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது. மாத்தறை உயன்வத்தை மைதானத்தி…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
பாகிஸ்தானை பிரமிக்கவைத்த பெட் கமின்ஸின் துடுப்பாட்டம்; அவுஸ்திரேலியா 2 விக்கெட்களால் வெற்றி (நெவில் அன்தனி) மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (04) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது. இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்டியில் பெட் கமின்ஸின் திறமையான துடுப்பாட்டம் அவுஸ்திரேலியாவுக்கு சாதகமான முடிவைப் பெற்றுக்கொடுத்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலை…
-
- 9 replies
- 555 views
- 1 follower
-
-
ஒருநாள் கிரிக்கெட் தொடர்: மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஹெட்மயர், இங்கிலாந்து அணித் தலைவர் லிவிங்ஸ்டன் (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிரான இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் தலா 1 - 2 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள் தனது சொந்த மண்ணில் இதே வகையான இரண்டு தொடர்களில் இங்கிலாந்தை சந்திக்கவுள்ளது. இங்கிலாந்தை 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரிலும் மேற்கிந்தியத் தீவுகள் எதிர்த்தாடவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. இத் தொடரை முன்னிட்டு மேற…
-
-
- 6 replies
- 917 views
- 1 follower
-
-
இலங்கை - அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இரண்டு போட்டிகளும் காலியில் நடைபெறும் (நெவில் அன்தனி) இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கைக்கு ராசியான மைதானம் என நம்பப்படும் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் 2023 - 2025 தொடரான இந்தத் தொடர் அடுத்த வருடம் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி 2025 ஜனவரி 29ஆம் திகதியிலிருந்த பெப்ரவரி 2ஆம் திகதிவரையும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 6ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முடித்துக்க…
-
- 1 reply
- 458 views
- 1 follower
-
-
இலங்கை வலைப்பந்து அணிக்கு பயிற்சியளிப்பதற்கான சவாலை ஏற்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வீராங்கனை தர்ஜினி தெரிவித்துள்ளார். இதற்காக தம்மிடம் ஏற்கனவே உள்ள நிலை 01 சான்றிதழுக்கு அப்பால், விரைவில் நிலை 02 மற்றும் நிலை 03 பயிற்சி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நான்கு வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண மற்றும் ஐந்து ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய தர்ஜினி, 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த கேப் டவுன் உலகக் கிண்ணத்துக்கு பிறகு தேசிய அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தற்போது வசிக்கும் தர்ஜினி தனது இந்திய கணவர் ஆர்.பிரசாத்துடன் பெங்களூரில் நடந்த 13ஆவது ஆசிய நில…
-
- 1 reply
- 580 views
- 1 follower
-
-
பங்களாதேஷ் - தென் ஆபிரிக்கா டெஸ்டில் முதல் நாளன்று 16 விக்கெட்கள் சரிந்தன: ரபாடா 300 விக்கெட்கள் பூர்த்தி (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் மிர்பூர், ஷியர் பங்க்ளா தேசிய விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று 16 விக்கெட்கள் சரிந்ததுடன் தென் ஆபிரிக்க வீரர் கெகிசோ ரபாடா 300 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்தார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது. தனது 65ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கெகிசோ ரபாடா, எதிரணி வீரர் முஷ்பிக்குர் ரஹிமின் விக்…
-
- 10 replies
- 11k views
- 1 follower
-
-
(நெவில் அன்தனி) அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மற்றும் மத்திய மாகாண பாடசாலைகள் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளன. கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது. 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் மன்னார், தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வீராங்கனை ஏ. யதுர்ஷிகா 37.39 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டியில் மன்னார் மாவட்ட பாடசாலைகள் சார்பாக வீராங்கனை ஒருவர் பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும். …
-
- 1 reply
- 443 views
- 1 follower
-
-
முதலாவது டெஸ்ட்: இந்தியாவை 46 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து 134 ஓட்டங்களால் முன்னிலை (நெவில் அன்தனி) பெங்களூரு, எம். சின்னசுவாமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை அதன் முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்களில் வெறும் 46 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 134 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவின் 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் பெற்ற மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவாகும். அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் 1936இல் பெற்ற 36 ஓட்டங்கள், இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸி…
-
-
- 81 replies
- 7.4k views
- 1 follower
-
-
2026 ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டியில் பொலிவியா அணிக்கு எதிராக ஹட்ரிக் கோல் பதிவு செய்து மெஸ்ஸி அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான தகுதி சுற்று போட்டிக்கான இந்த ஆட்டம் அர்ஜெண்டினாவில் நடைபெற்றது. கணுக்கால் காயம் காரணமாக சமீபகால போட்டிகளில் பங்கேற்காத 37 வயதான நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி, அண்மையில் அணிக்கு திரும்பினார். இதில் 19, 84, 86 ஆகிய நிமிடங்களில் மெஸ்ஸி கோல் பதிவு செய்தார். சக அணி வீரர்கள் 2 கோல்கள் பதிவு செய்ய அசிஸ்ட் செய்து அவர் உதவினார். அதன் மூலம் தனது அபார ஆட்டத்திறனை அவர் வெளிப்படுத்தி இருந்தார். இதில் மெஸ்ஸி பதிவு செய்த…
-
- 0 replies
- 1.5k views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவனாக இன்னும் தன்னால் வெல்ல முடியாத சிலவற்றில் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் உள்ளது என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் நவம்பர் இறுதியில் தொடங்கி ஜனவரி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடர் குறித்து அவுஸ்திரேலிய அணியின் தலைவர் கம்மின்ஸ், “இன்னும் நான் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வெல்லவில்லை. அது குறித்து நான் எண்ணி பார்ப்பது உண்டு. அணியில் உள்ள சிலர் வென்றிருந்தாலும் இன்னும் நான் அதனை செய்யவில்லை. அணியின் கேப்டனாக நான் எனது பயணத்தை தொடங்கிய போது எனக்கு ஆதரவு …
-
-
- 3 replies
- 383 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் “விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் விட்டுச் சென்ற இடம் பெரியது. அவர்களின் வெற்றிடத்தை நிரப்ப இந்திய அணிக்குச் சில காலம் ஆகும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்திய அணி இருவரின் பங்களிப்பு இல்லாமல் சாதிக்கும். ஏனென்றால் இருவரும் இந்திய அணிக்கு ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள்.” இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ரோஜர் பின்னி இந்த வார்த்தைகளைக் கூறினார். ஆனால், வெகு விரைவாகவே ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் வெற்றிடங்கள் நி…
-
- 1 reply
- 329 views
- 1 follower
-
-
பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஃபேல் நடால் பிரபல ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ஆவார். இவர் இதுவரை 22 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இந்த சூழலில், இவர் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் ஸ்பெயினில் நடைபெறும், டேவிஸ் டென்னிஸ் தொடர் போட்டிதான் இவர் விளையாடும் கடைசி போட்டியாகும். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஃபேல் நடால் பேசியதாவது, “நான் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்கிறேன். கடைசி இரண்டு வருடம் மிகவும் கடினமாகவே இருந்தது. என்னால் இதற்கு மேல் விளையாட முடியாது என தோன்றியது. அனைவரும் ஒரு நாள் இந்த முட…
-
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ரி20 தொடருக்கு பெயரிடப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் தசுன் ஷானக்க இல்லை (நெவில் அன்தனி) மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை முன்னிட்டு 17 வீரர்களைக் கொண்ட பலம்வாய்ந்த இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக கண்டியில் ஜூலை மாதம் நடைபெற்ற சர்வதேச ரி20 தொடரில் 0 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இலங்கை அணியில் இடம்பெற்ற முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க, துஷ்மன்த சமீர ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதிரடி வீரர் பானுக்க ராஜபக்ஷ மீண்டும் குழாத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். இலங்…
-
-
- 14 replies
- 688 views
- 1 follower
-
-
இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தார் ஜோ ரூட் (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையை ஜோ ரூட் இன்று புதன்கிழமை (09) படைத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 71ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலிஸ்டெயா குக்கின் 12472 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்து ஜோ ரூட் முன்னிலை அடைந்தார். கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்டுவரும் அப் போட்டியில் ஜோ ரூட் சதம் குவித்து அசத்தினார். தனது 147ஆவது டெஸ்ட் போட்டியில் விளை…
-
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
07 OCT, 2024 | 01:36 PM (நெவில் அன்தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவந்த ஐந்து அணிகளுக்கு இடையிலான தேசிய சுப்பர் லீக் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் சரித் அசலன்க தலைமையிலான கொழும்பு அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (06) கணிசமான மொத்த எண்ணிக்கைகள் குவிக்கப்பட்ட இறுதிப் போட்டியில் ஜனித் லியனகே தலைமையிலான யாழ்ப்பாணம் அணியை 92 ஓட்டங்களால் வெற்றிகொண்டு கொழும்பு அணி சம்பியனானது. சரித் அசலன்க குவித்த இரட்டைச் சதம், அவிஷ்க பெர்னாண்டோ குவித்த சதம் என்பன கொழும்பு அணியின் வெற்றியை இலகுவாக்கின. …
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
இலங்கை அணிக்கு பெருமை சேர்த்த யாழ். யுவதி! மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 'சுப்பர் கிண்ண' கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இரு சம்பியன்ஷிப்களையும் வென்றன. பெண்கள் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் பெண் வீராங்கனையான பி.சிவானுஜாவும் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றினார். இந்நிலையில் மாலைதீவினை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை அணி 74:72 என்ற எண்ணிக்கையில் மாலைதீவை வீழ்த்தி வெற்றி பெற்றது. மாலைதீவின் மாலே நகரில் செப்டம்பர் 26 முதல் 30 வரை இந்தப் போட்டிகள் நடைபெற்றன. அந்தவகையில் நான்கு நாடுகளின் அணிகள், குறிப்பாக உலகின் வலிமையான வெளிநா…
-
- 2 replies
- 677 views
-
-
முதலாமிடத்துக்கு முன்னேறிய பும்ரா சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா முன்னேறியுள்ளார். பங்களாதேஷுக்கெதிரான இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையையடுத்தே இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை பும்ரா அடைந்துள்ளார். இதேவேளை நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது போட்டியில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் பிரபாத் ஜெயசூரிய, எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார். முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு, ஜஸ்பிரிட் பும்ரா, …
-
-
- 2 replies
- 571 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆக்ரோஷமான பேஸ்பால் ஆட்டத்தை கையில் எடுத்து 2 நாட்களில் டெஸ்ட் போட்டியை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை இந்திய அணியினர் நிரூபித்துள்ளனர். 1 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கான்பூரில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2வது மற்றும் 3வது நாள் ஆட்டம் மழை காரணமாக முற்றிலும் ரத்து செய்யப்பட்டநிலையில் 4வது நாள் மற்றும் கடைசிநாள் ஆகிய இருநாட்களில் சிறப்பாக விளையாடி இந்திய அணி இந்த போட்டியை வென்றுள்ளது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.…
-
- 0 replies
- 592 views
- 1 follower
-