விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
ஸ்டீவ் ஸ்மித் அதிரடி வருகை: 85 ரன்கள் விளாசினார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது கிளப் அணி சார்பில் பங்கேற்ற ஆட்டத்தில் 85 ரன்களை விளாசி தனது திறமையை பறை சாற்றியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது, பந்தை சேதப்படுத்த முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர், வீரர் பேங்க்கிராப்ட் ஆகியோரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சஸ்பெண்ட் செய்தது. ஸ்மித், வார்னருக்கு தலா ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.சர்வதேச கிரிக்கெட் போட்டி தவிர உள்ளூர் ஆட்டங்களில் பங்கேற்று ஆடலாம் என சிஏ அறிவித்தது. கனடா கிரிக்கெட் லீ…
-
- 0 replies
- 462 views
-
-
மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கத் தயாராகும் டில்ஷான் இலங்கை அணி தற்போது சந்தித்துள்ள பின்னடைவை பார்க்கும் போது மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆவலுடன் இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். அத்துடன், தன்னை நாட்டுக்கும், அணிக்கும் தேவை என்று நினைத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மீண்டும் அழைப்பு விடுத்தால் இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐந்து தடவைகள் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணிக்கு, இவ்வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறவேண்டிய துர்…
-
- 0 replies
- 406 views
-
-
2019 ஆண்டின் உலகக் கிண்ணம் இலங்கையில் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான வெற்றிக் கிண்ணம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு வெற்றிக் கிண்ணம் உலகம் முழுக்க எடுத்துச்செல்லப்படுகின்றது. அதன் ஒரு கட்டமாக உலகக் கிண்ணம் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள உலகக் கிண்ணத்தை வரவேற்கும் நிகழ்வு நேற்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த முன்னாள் அண…
-
- 1 reply
- 724 views
-
-
10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தி ஜார்கண்ட் வீரர் ஷபாஸ் நதீம் உலக சாதனை அ-அ+ விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட் வீரர் ஷாபாஸ் நதீம் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய உலக சாதனை நிகழ்த்தி உள்ளார். #VijayHazareTrophy #ShahbazNadeem சென்னை : விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை முருகப்பா மைதானத்தில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ராஜஸ்தான்- ஜார்கண்ட் அணிகள் மோதின. …
-
- 0 replies
- 441 views
-
-
இந்த ஆண்டுக்கான தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் 10 தமிழ் பேசும் வீரர்கள் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் 106 பேர் கொண்ட தேசிய மெய்வல்லுனர் குழாம் நேற்று (18) அறவிக்கப்பட்டது. இதில் வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் வீரர்களுக்கு தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் வாய்ப்பு வழங்க இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அடுத்த வருடம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் கட்டாரில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு Super Pool, Elite Pool, National Pool என மூன்று தேசிய மெய்வல்லுனர் …
-
- 0 replies
- 519 views
-
-
இலங்கை அணி ரசிகர்களுக்கு மஹேலவின் வேண்டுகோள் ! இலங்கை அணியை சிக்கலில் இருந்து ரசிகர்களாகிய நாம் முன்னோக்கிக்கொண்டு செல்வதற்கு தேவையான தீர்வுகளை ஆராய வேண்டுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான மஹேல ஜெயவர்தன டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இடம்பெற்றுவரும் ஆசியக் கிண்ணத் தொடர்ரில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடமும் ஆப்கானிஸ்தான் அணியிடமும் படு மோசமாக தோல்வியடைந்தது. இந்நிலையில் இலங்கை அணி மீதும் வீரர்கள் மீதும் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் மிக மோசமாக விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திரவீரருமான மஹேல ஜெயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்க…
-
- 0 replies
- 671 views
-
-
ஜோர்ன் டாபர்ட் மெய்வல்லுனரில் வட மாகாண வீரர்ளுக்கு ஐந்து பதக்கங்கள் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 88 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (19) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. சிலோன் பிஸ்கெட் நிறுவனத்தின் ரிட்ஸ்பறி சொக்கலட்ஸ் தொடர்ச்சியாக 8 ஆவது தடவையாகவும் அனுசரணை வழங்குகின்ற இம்முறை போட்டிகளில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 1500 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். 16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக நடைபெறுகின்ற இம்முறை ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் நாளில் 15 வயதுக்கு உட்பட்ட பெ…
-
- 5 replies
- 1.8k views
-
-
மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு?! #UCL 2017 ல் ரியல் மாட்ரிட்டிடம் நூலிழையில் சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட யுவென்டஸ் இந்த முறை ரொனால்டோவையே தனது பிரத்யேக ஆயுதமாக மாற்றி கோப்பைக்குக் குறிவைத்திருக்கிறது. இந்தியாவில் இனி நள்ளிரவு, அதிகாலை நேரங்களிலும் கூட தொலைக்காட்சிகள் அலறப் போகின்றன; இந்திய இளசுகள் எல்லாம், `ஃபுட்பால் ஹேங் ஓவரில்’ இரவு முழுவதும் விழித்துக்கிடக்கப் போகின்றனர். 2018-19 சீஸனுக்கான `சாம்பியன்ஸ்லீக் ஃபுட்பால் இஸ் பேக்’. ஆம், ஐரோப்பாவின் டாப் கிளப்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கால்பந்துத் திருவிழாவான, சாம்பியன்ஸ்லீக் கால்பந்து தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்தமுறை கோப்பையைக் கைப்…
-
- 2 replies
- 806 views
-
-
இளையோர் ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இரண்டு யாழ் வீரர்கள் பங்களாதேஷில் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில், பங்குபெறவிருக்கும் 15 வீரர்கள் அடங்கிய 19 வயதின் கீழான இலங்கை கிரிக்கெட் குழாம் இன்று (18) அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை வீரர்கள் குழாமில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியைச் சேர்ந்த செல்வராசா மதுஷன் இடம்பிடித்துள்ளார். இதேவேளை, ஆசியக் கிண்ணத் தொடருக்கான மேலதிக இலங்கை வீரர்கள் பட்டியலில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த்திற…
-
- 1 reply
- 1k views
-
-
‘தம்பி, உங்க அம்மாகிட்ட சொல்லிட்டு வந்தியா?’- சச்சினிடம் வம்பு; மன்னிப்பு கேட்ட ஹர்பஜன்: ருசிகரங்களைப் பகிர்ந்த வாசிம் அக்ரம் சச்சின் டெண்டுல்கர், வாசிம் அக்ரம் : கோப்புப்படம் சச்சின் டெண்டுல்கர் அறிமுகப் போட்டியில் களமிறங்கியபோது, அவரைக் கிண்டல் செய்த விதம், நினைவுகள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பகிர்ந்துள்ளார். டெல்லியில் இந்தியாடுடே வார இதழ் சார்பில் சலாம் கிரிக்கெட் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம், சுனில் கவாஸ்கர், யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக், அப்துல் காதிர், ஹர்பஜன் சிங், முகமது அசாருதீன், ஆர்.அஸ்வின், முத்தையா முரளிதரன், மதன் லால் ஆகியோர் பங்கேற்று தங்களின…
-
- 0 replies
- 465 views
-
-
நாடு திரும்பும் இலங்கை அணியின் அடுத்த மோதல் இங்கிலாந்துடன் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, இலங்கை அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு இருபதுக்கு 20 போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்குமிடையேயான இப் போட்டித் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் முதலில் ஆரம்பமாகவுள்ள ஐந்து ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி (பகல் 2.30)தம்புள்ளை, ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் இரண்டாவது போட்டி 13 ஆம் த…
-
- 0 replies
- 530 views
-
-
ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டு: சிறைத் தண்டனை பெற்ற அல்பி மோர்கல் ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை பெற்றதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான அல்பி மோர்கல் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் அல்பி மோர்கல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்காவில் வேட்டை ஆடுவதற்காகச் சென்றபோது ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறைத் தண்டனை பெற்றதாக அண்மையில் பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து அல்பி மோர்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறும்போது, "நான் மொசாம்பிக்காவில் எனது பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பும்போது காரை சுத்தம் செய்யுமாற…
-
- 0 replies
- 414 views
-
-
‘பெர்லின் மாரத்தான்’- உலக சாதனை படைத்த கென்யா வீரர் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கென்யா வீரர் எலியாட் கிப்சோஜ் புதிய உலகசாதனை படைத்துள்ளார். ‘பெர்லின் மாரத்தான்’ போட்டி ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நேற்று நடைபெற்றது. இதில் ஒலிம்பிக் சாம்பியனான கென்ய வீரர் எலியாட் கிப்சோஜ் (33) பங்கேற்றார். இந்தப் போட்டியில் 42 கிலோ மீட்டர் பந்தய இலக்கை அவர் 2 மணி ஒரு நிமிடம் 39 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இது உலக சாதனையாகவும் அமைந்தது. 2014-ம் ஆண்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கென்ய வீரரான டென்னிஸ் கிமெட்டொ 2 மணி 2 நிமிடம் 57 விநாடிகளில் இலக்கை அடைந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. இதை 1 நிமிடம் 18 விநாடிகள் வித்தியாசத்தில் …
-
- 0 replies
- 448 views
-
-
வலைப்பந்தாட்ட உலகையே வென்ற யாழ். மங்கை தர்ஜினி சிவலிங்கம் சிங்கப்பூரில் கடந்தவாரம் நிறைவுக்கு வந்த 11ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி ஐந்தாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம். இவரின் உயரம் ஆறு அடி பத்து அங்கும். இவரின் மீள்வருகை இலங்கைக்கு வலைப்பந்தாட்டத்தில் மீண்டும் ஒருமுறை ஆசிய கிண்ணத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவானைப் பிறப்பிடமாகக் கொண்ட தர்ஜினி சிவலிங்கம், ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாக பிறந்தவர். இவரது குடும்பத்தில் அநேகர் உயரமானவர்கள்தான். அதீத உயரம் …
-
- 6 replies
- 1.9k views
-
-
மோசமாக பேட் செய்தால் நீக்கப்படுவார்கள்; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு செல்லும்: பிசிசிஐ அதிரடி இந்திய அணி : கோப்புப்படம் இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்த தவறி மோசமாக பேட் செய்தால் இளம் வீரர்கள் அழைக்கப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம்(பிசிசிஐ) தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது, ஒருநாள் தொடரை 2-1 என்று பறிகொடுத்தது. டெஸ்ட் தொடரில் கேப்டன் விராட் கோலி, புஜாரா, ரஹானே, ராகுல் தவிர மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இது பெரு…
-
- 0 replies
- 553 views
-
-
ஓய்வு குறித்த சிந்தனையே இல்லாமல் ஆடி வரும் 1990 காலகட்ட கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு குறித்த சிந்தனையே இல்லாமல் 1990 காலகட்டத்தில் அறிமுகமான 4 வீரர்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜென்டில்மேன் ஆட்டம் எனப்படும் கிரிக்கெட் உலகம் முழுவதும் சொற்ப நாடுகளில் மட்டுமே ஆடப்பட்டு வருகிறது. டெஸ்ட், 50 ஓவர் ஒரு நாள் ஆட்டம் போன்றவை மட்டுமே ஆடப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட டி 20 ஆட்டங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக பெரிய அணிகள் மோதும் டெஸ்ட் ஆட்டங்களைத் தவிர ஏனைய ஆட்டங்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில்…
-
- 0 replies
- 487 views
-
-
என்னை ஒசாமா என்று அழைத்த ஆஸி. வீரர்: மொயீன் அலி வெளிப்படுத்தும் ‘இனப்பாகுபாடு’ சம்பவங்கள்! இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தன்னுடைய சுயசரிதையை எழுதி வருகிறார். அதன் சில பாகங்கள் தி டைம்ஸ் பத்திரிகையில் வெளிவருகின்றன. அதில் மொயீன் அலி, ஆஸ்திரேலிய வீரர்களின் நடத்தை குறித்து கூறியதாவது: 2015 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் என்னிடம் மோசமாக நடந்துகொண்டார்கள். ஒரு சம்பவம் என்னை பாதித்தது. மைதானத்தில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் என்னைப் பார்த்து ஒசாமா (பின்லேடன்) என அழைத்தார். அவர் என்னிடம் அப்படிக் கூறியதை என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு மிகவும் கோபம் வந்தது. மைதானத்தில் ஒருபோத…
-
- 4 replies
- 1.5k views
-
-
கோலியா தோனியா? யார் சிறந்த டெஸ்ட் கேப்டன்? எண்கள் கூறுவது என்ன? YouTube தோனி, கோலி. | படம்: விவேக் பென்ரே. டெஸ்ட் போட்டிகள் என்று வரும்போது இந்திய கேப்டன்களிலேயே பெரிய பெயரை அயல்நாட்டினர் மத்தியிலும் எடுத்ததில் மன்சூர் அலிகான் பட்டவ்டிதான் சிறந்த கேப்டன். இரட்டை அயல்நாட்டு தொடர்களை அடுத்தடுத்து வலுவான மே.இ.தீவுகள், இங்கிலாந்து என்று கொடிநாட்டியவர் அஜித் வடேகர். இது வெற்றி தோல்விகளினால் அல்லாமல் பட்டவ்டியின் கேப்டன்சி திறமையினால் அவருக்கு கிடைத்த நற்சான்றிதழாகும். அதே போல் சவுரவ் கங்குலி கேப்டனான பிறகு அயல்நாடுகளில் இந்திய வீரர்களின் ஆட்டத்தில் புத்தெழுச்சி ஏற்பட்டது. எண்களை விடுத்துப் பார்த…
-
- 1 reply
- 459 views
-
-
16 வயதின் கீழ் தேசிய கால்பந்தாட்ட அணியில் ஆறு வட மாகாண மாணவிகள் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 16 வயதின்கீழ் பெண்களுக்கான கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் முதற்தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ளது. இதில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் யாழ். மாவட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த ஆறு மாணவிகளும், குருநகால் மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த ஏழு மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர். நாளை (15) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கொழும்பு CR&FC மைதானத்தில் நடைபெறவுள்ள ஆசிய சம்மேளன கிண்ண, 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கால்பந்தாட்டத் தொடரின் குழு ஏ இற்கான தகுதிகாண் போட்டிகளில் வரவேற்பு நாடான இலங்கையுடன், சீனா,…
-
- 0 replies
- 495 views
-
-
யாழ் மாவட்ட கிரிக்கெட்டில் புதிய முயற்சி “ ஜெப்னா சுப்பர் லீக்” யாழ். மாவட்டத்தில் கழகமட்ட கிரிக்கெட் விளையாட்டினை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் நோக்குடன் T20 லீக் போட்டித் தொடர் ஒன்றினை யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் ஏற்பாடு செய்துவருகின்றனர். “Jaffna Super League” என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த போட்டித் தொடரிற்கு யாழ் மாவட்டத்தின் பிரதான நகரங்களை மையமாகக்கொண்ட 08 அணிகள் உருவாக்கப்படும். போட்டித் தொடரில் அணியின் உரிமையாளராக ஆர்வமுள்ளவர்கள் தமது கேள்வித் தொகையினை யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினரிடம் முன்வைக்க வேண்டும். கேள்வித் தொகையின் அடிப்படையில், அதிகூடிய தொகையினை முன்வைத்த முதல் 08 விண்ணப்பதாரிகளும் அணிகளின் உரிமையாளர்…
-
- 0 replies
- 515 views
-
-
“வடக்கின் கில்லாடி யார்” கடந்த 2016, 2017 ஆகிய இரு ஆண்டுகளில் யாழ் மாவட்ட அணிகளை உள்ளடக்கிய “யாழின் கில்லாடி யார்?” கால்பந்து போட்டித்தொடர் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. எனினும், தமது அமைப்பின் நூற்றாண்டு விழாவினையொட்டி அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையமானது, யாழ் உதைபந்தாட்ட இரசிகர்கள் மத்தியில் பிரபலமான இத்தொடரினை இம்முறை வடமாகாணத்தின் 08 கால்பந்து லீக்குகளை உள்ளடக்கியதாக வடக்கின் கில்லாடியினை தெரிவு செய்யும் தொடராக விஸ்தரித்துள்ளது. எனவே, பிரமாண்டமாக இடம்பெறும் ”வடக்கின் கில்லாடி யார்?” போட்டித் தொடரின் ஊடக அனுசரணையாளர்களாக இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான T…
-
- 18 replies
- 3.9k views
-
-
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது ஏன்? மனம் திறக்கும் தோனி 'உலகக்கோப்பைத் தொடருக்கு அணியைத் தயார்செய்ய விராட் கோலிக்கு தேவையான நேரம் அளிப்பதற்காகவே, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன்' என்று தோனி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக இருந்து சிறப்பான பங்களிப்பை அளித்த மகேந்திரசிங் தோனி, 2017-ம் ஆண்டு ஜனவரியில் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இந்த நிலையில், ராஞ்சியில் ஒரு விழாவில் தோனி கலந்துகொண்டார். அப்போது, 'இந்திய அணி ஒரு தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதைத் தவறவிட்டது. அதனால்தான், வீரர்கள் கடினமான நேரத்தில் தடுமாறுகின்றனர். எனினும், தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக…
-
- 0 replies
- 496 views
-
-
பாக்.டெஸ்ட் தொடர்: வலுவில்லாத ஆஸி. அணியில் 5 புதிய வீரர்கள்; மீண்டும் பழைய வீரர் சிடில் புதிய வேகப்பந்துவீச்சாளர் டாகெட், பேட்ஸ்மேன் மாட் ரென்ஷா - படம் உதவி: ட்விட்டர் பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அனுபவம் இல்லாத 5 புதிய வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்டனர். அதன்பின் ஆஸ்திரேலிய அணி பலவீனமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக …
-
- 1 reply
- 518 views
-
-
தோனி போல் வருமா? கீப்பர்-பேட்ஸ்மென் இடத்தை நிரப்புவது மிகக்கடினம்; ரிஷப் பந்திடம் பொறுமை காட்டுங்கள்: ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை கெட்டி இமேஜஸ். இந்திய அணியில் டெஸ்ட் விக்கெட் கீப்பிங் தோனி ஓய்வு பெற்ற பிறகே பெரிய ஓட்டை விழுந்துள்ளது. விருத்திமான் சஹா ஆஸ்திரேலியா தொடரில் ஆடுவது கூட சந்தேகம் என்ற நிலையில் ரிஷப் பந்த்தின் சந்தேகத்துக்குரிய பார்ம் இப்போது சிக்கலாகியுள்ளதால் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆஸ்த்ரேலிய முன்னாள் கிரேட் ஆடம் கில்கிறிஸ்ட் தன் கருத்தை வெளியிட்டபோது கூறியதாவது: தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து …
-
- 0 replies
- 345 views
-
-
14வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் சேர்பிய வீரர் நொவாக் ஜொகோவிக் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை சேர்பியாவைச் சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் நொவாக் ஜொகோவிக் வென்றெடுத்தார். ஆர்ஜன்டீன வீரர் ஜுவான் மார்டின் டெல் போர்ட்டோவிற்கு எதிராக அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவிலும் இலங்கை நேரப்படி இன்று அதிகாலையிலும் நிறைவடைந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 6ற்கு 3 ; 7ற்கு 6 ; 6ற்கு 3 என நேர் செட்களில் வெற்றியீட்டினார் நொவாக் ஜொகோவிக். இந்த வெற்றி அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் அவர் ஈட்டிய மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்துள்ள அதேவேளை ஒட்டுமொத்தமாக அவர் வென்றெடுத்துள்ள கிராண்ட்ஸ்லாம் பட்…
-
- 0 replies
- 575 views
-