விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஃபேல் நடால் பிரபல ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ஆவார். இவர் இதுவரை 22 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இந்த சூழலில், இவர் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் ஸ்பெயினில் நடைபெறும், டேவிஸ் டென்னிஸ் தொடர் போட்டிதான் இவர் விளையாடும் கடைசி போட்டியாகும். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஃபேல் நடால் பேசியதாவது, “நான் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்கிறேன். கடைசி இரண்டு வருடம் மிகவும் கடினமாகவே இருந்தது. என்னால் இதற்கு மேல் விளையாட முடியாது என தோன்றியது. அனைவரும் ஒரு நாள் இந்த முட…
-
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
2026 ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டியில் பொலிவியா அணிக்கு எதிராக ஹட்ரிக் கோல் பதிவு செய்து மெஸ்ஸி அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான தகுதி சுற்று போட்டிக்கான இந்த ஆட்டம் அர்ஜெண்டினாவில் நடைபெற்றது. கணுக்கால் காயம் காரணமாக சமீபகால போட்டிகளில் பங்கேற்காத 37 வயதான நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி, அண்மையில் அணிக்கு திரும்பினார். இதில் 19, 84, 86 ஆகிய நிமிடங்களில் மெஸ்ஸி கோல் பதிவு செய்தார். சக அணி வீரர்கள் 2 கோல்கள் பதிவு செய்ய அசிஸ்ட் செய்து அவர் உதவினார். அதன் மூலம் தனது அபார ஆட்டத்திறனை அவர் வெளிப்படுத்தி இருந்தார். இதில் மெஸ்ஸி பதிவு செய்த…
-
- 0 replies
- 1.5k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் “விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் விட்டுச் சென்ற இடம் பெரியது. அவர்களின் வெற்றிடத்தை நிரப்ப இந்திய அணிக்குச் சில காலம் ஆகும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்திய அணி இருவரின் பங்களிப்பு இல்லாமல் சாதிக்கும். ஏனென்றால் இருவரும் இந்திய அணிக்கு ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள்.” இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ரோஜர் பின்னி இந்த வார்த்தைகளைக் கூறினார். ஆனால், வெகு விரைவாகவே ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் வெற்றிடங்கள் நி…
-
- 1 reply
- 328 views
- 1 follower
-
-
147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் 'குட்டி ப்றட்மன்' கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை; டொன் ப்றட்மன், சுனில் கவாஸ்கரினாலும் கூடாமல் போனது Published By: VISHNU 26 SEP, 2024 | 07:49 PM (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட்டின் 147 வருட வரலாற்றில் இலங்கையின் 'குட்டி ப்றட்மன்' கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை படைத்து வரலாற்று ஏடுகளில் தனது பெயரைப் பதித்துக்கொண்டுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (26) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அரைச் சதம் குவித்ததன் மூலமே 25 வயதான கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனையை படைத்தார். …
-
-
- 6 replies
- 556 views
- 1 follower
-
-
சென்னை டெஸ்ட்: இந்திய அணி எப்படித் தயாராகிறது? வங்கதேசத்தின் 24 ஆண்டு தாகம் நிறைவேறுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்தி ராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. அதில் முதல் போட்டி வரும் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் 27-ஆம் தேதி உத்தரப்பிரசேதம் மாநிலம் கான்பூரில் நடக்கிறது. 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க இரு அ…
-
-
- 19 replies
- 865 views
- 1 follower
-
-
இலங்கை அணிக்கு பெருமை சேர்த்த யாழ். யுவதி! மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 'சுப்பர் கிண்ண' கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இரு சம்பியன்ஷிப்களையும் வென்றன. பெண்கள் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் பெண் வீராங்கனையான பி.சிவானுஜாவும் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றினார். இந்நிலையில் மாலைதீவினை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை அணி 74:72 என்ற எண்ணிக்கையில் மாலைதீவை வீழ்த்தி வெற்றி பெற்றது. மாலைதீவின் மாலே நகரில் செப்டம்பர் 26 முதல் 30 வரை இந்தப் போட்டிகள் நடைபெற்றன. அந்தவகையில் நான்கு நாடுகளின் அணிகள், குறிப்பாக உலகின் வலிமையான வெளிநா…
-
- 2 replies
- 676 views
-
-
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. அதற்கமைய, சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த கிரிஸ் சில்வர்வூட் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துடன் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சனத் ஜயசூரிய இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். சனத் ஜயசூரியவின் தலைமை பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதோடு, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. …
-
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
முதலாமிடத்துக்கு முன்னேறிய பும்ரா சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா முன்னேறியுள்ளார். பங்களாதேஷுக்கெதிரான இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையையடுத்தே இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை பும்ரா அடைந்துள்ளார். இதேவேளை நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது போட்டியில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் பிரபாத் ஜெயசூரிய, எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார். முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு, ஜஸ்பிரிட் பும்ரா, …
-
-
- 2 replies
- 571 views
-
-
07 OCT, 2024 | 01:36 PM (நெவில் அன்தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவந்த ஐந்து அணிகளுக்கு இடையிலான தேசிய சுப்பர் லீக் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் சரித் அசலன்க தலைமையிலான கொழும்பு அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (06) கணிசமான மொத்த எண்ணிக்கைகள் குவிக்கப்பட்ட இறுதிப் போட்டியில் ஜனித் லியனகே தலைமையிலான யாழ்ப்பாணம் அணியை 92 ஓட்டங்களால் வெற்றிகொண்டு கொழும்பு அணி சம்பியனானது. சரித் அசலன்க குவித்த இரட்டைச் சதம், அவிஷ்க பெர்னாண்டோ குவித்த சதம் என்பன கொழும்பு அணியின் வெற்றியை இலகுவாக்கின. …
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆக்ரோஷமான பேஸ்பால் ஆட்டத்தை கையில் எடுத்து 2 நாட்களில் டெஸ்ட் போட்டியை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை இந்திய அணியினர் நிரூபித்துள்ளனர். 1 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கான்பூரில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2வது மற்றும் 3வது நாள் ஆட்டம் மழை காரணமாக முற்றிலும் ரத்து செய்யப்பட்டநிலையில் 4வது நாள் மற்றும் கடைசிநாள் ஆகிய இருநாட்களில் சிறப்பாக விளையாடி இந்திய அணி இந்த போட்டியை வென்றுள்ளது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.…
-
- 0 replies
- 592 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 01 OCT, 2024 | 01:04 PM பொலன்னறுவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் திகதி பாடசாலைகளுக்கிடையிலான 2024 தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் 17 வயது பிரிவின் கீழ் திருகோணமலை சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி சி.கிசோத்திகா தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளனர். 20 வயது பிரிவின் கீழ் திருகோணமலை / சாம்பல்தீவு மகா வித்தியாலய மாணவி சி. கதுர்சிகா வெள்ளி பதக்கத்தையும், திருகோணமலை /சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி வி.பிரீசா வெண்கலப் பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கும் திருகோணமலைக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர். இம் மாணவிளை கே.உமா சுதன் (பயிற்றுவிப்பாளர்) திறன்பட பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது…
-
- 0 replies
- 252 views
- 1 follower
-
-
நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள் பகல்போசன இடைவேளையின்போது இலங்கை 88 - 2 விக் 18 SEP, 2024 | 12:34 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (18) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, மதிய போசன இடைவேளையின்போது அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. திமுத் கருணாரட்ன 2 ஓட்டங்களுடனும் துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்த பெத்தும் நிஸ்ஸன்க 27 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (33 - 2 விக்.) மொத்த எண்ணிக்கை 69 ஓட்டங்களாக இருந்தபோது ஏஞ்சலோ மெத்யூஸ், ஆட்…
-
-
- 14 replies
- 994 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 304 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து இங்கிலாந்து அணி பதிலளித்தாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் டக்வத் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 209 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் மழை குறுக்கிடுவதற்கு முன்னர் 37.4 ஓவர்கள் ந…
-
- 3 replies
- 323 views
- 1 follower
-
-
19 SEP, 2024 | 10:30 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடுநிலையான ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (18) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் மிக இலகுவாக ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்காவை முதல் தடவையாக வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது. பஸால்ஹக் பறூக்கி, 18 வயதுடைய அல்லா மொஹமத் கஸன்பார் ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி தம்மிடையே 7 விக்கெட்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு வரலாற்று வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். தென் ஆபிரிக்காவின் வழமையான அணித் தலைவர் டெம்பா பவுமா சுகவீனம…
-
-
- 2 replies
- 521 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,RAMESH BABU படக்குறிப்பு, பிரக்ஞானந்தாவும் அவரது சகோதரி வைஷாலியும் இந்திய அணிகளில் இடம் பெற்றிருந்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக ஆடும் அணிக்கு ‘கப்ரிந்தஷ்விலி கோப்பை’ வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டு இந்தக் கோப்பையை …
-
- 0 replies
- 506 views
- 1 follower
-
-
18 SEP, 2024 | 04:51 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் வரலாற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை வழங்கும் சகாப்தம், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியுடன் உதயமாகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி வருடாந்த மாநாட்டில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. 2030ஆம் ஆண்டிலேயே இருபாலாருக்கும் சம பரிசுத் தொகையை வழங்குவதென ஐசிசி முடிவுசெய்திருந்தது. ஆனால் இப்போது 6 வருடங்களுக்கு முன்னரே அந்தத் தீர்மானத்தை அமுல்படுத்துவதென ஐசிசி முடிவுசெய்துள்ளது. இந்த வருட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஒட்டுமொத்த பணப்பரிசாக 7.95 மில்லியன் அமெரி…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
துலிப் சமரவீரவுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 20 ஆண்டுகள் தடை! நடத்தை விதிகளை மீறிய காரணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் துலிப் சமரவீரவுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 20 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 52 வயதான சமரவீர, கிரிக்கெட் விக்டோரியா ஊழியராக இருந்த காலத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் நடத்தை விதிகளை கடுமையாக மீறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு 20 ஆண்டுகள் தடை உத்தரவை வழங்கியது. 1993 மற்றும் 1995 க்கு இடையில் இலங்கைக்காக ஏழு டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியா பெண்கள…
-
- 0 replies
- 254 views
-
-
ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடந்த 9ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மைதானத்தில் நீர் தேங்கியது. இதனால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. மைதானத்தில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியவில்லை. தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மைதான ஊழியர்கள் போராடி 3வது நாளான நேற்று முன்தினம் தண்ணீரை வெளியேற்றினர். ஆனால் மீண்டும் கிரேட்டர் நொய்டாவில் மழை…
-
- 0 replies
- 499 views
- 1 follower
-
-
தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் இலங்கையின் சந்துனுக்கு தங்கம் Published By: VISHNU 12 SEP, 2024 | 09:54 PM (நெவில் அன்தனி) சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (12) இலங்கைக்கு மேலும் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 10 பதக்கங்கள் கிடைத்தது. போட்டியின் முதல் நாளன்று இலங்கைக்கு 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்திருந்தன. இதற்கு அமைய இரண்டாம் நாள் போட்டி முடிவில் இலங்கைக்கு 4 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்து…
-
- 1 reply
- 896 views
- 1 follower
-
-
பாரிஸ் 2024 பராலிம்பிக்கில் சாதிக்கும் குறிக்கோளுடன் 8 இலங்கை மாற்றுத்திறனாளிகள் Published By: VISHNU 26 AUG, 2024 | 08:17 PM (நெவில் அன்தனி) டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற சமித்த துலான் கொடிதுவக்கு உட்பட 8 மாற்றுத் திறனாளிகள் இலங்கை தாய்திருநாட்டுக்கு புகழீட்டிக்கொடுக்கும் குறிக்கோளுடன் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ளனர். ஜப்பானின் கோபே பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கங்கள் வென்ற நுவன் இந்திக்க கமகே, சமித்த துலான் கொடிதுவக்கு, பாலித்த பண்டார பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழா புதன்கிழமை 28ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர்…
-
-
- 19 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஊக்கமருந்துப் பாவனையில் சிக்கிய இலங்கையின் முக்கிய துடுபாட்ட வீரர். கடந்த எல்.பி.எல். போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில். எதிர்காலத்தில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. ஊக்கமருந்து பயன்பாடு ஊக்கமருந்து பயன்பாடு தொடர்பான இவ்வாறான அறிக்கை கிரிக்கெட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் காரணமாக திக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநிறுத்தப்…
-
-
- 5 replies
- 575 views
- 1 follower
-
-
லோர்ட்ஸ் அரங்கில் ஜூன் 11 இலிருந்து 15 வரை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025 இறுதிப் போட்டி Published By: VISHNU 03 SEP, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் 2025 உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூன் 11ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் ஜனவரி மாதம் நிறைவடைந்த பின்னர் அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். இரண்டு வருட சுழற்சி பருவ காலத்தைக் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள …
-
- 2 replies
- 325 views
- 1 follower
-
-
அயூப், ஷக்கீல் குவித்த அரைச் சதங்கள் பாகிஸ்தானை நல்ல நிலையில் இட்டன Published By: VISHNU 21 AUG, 2024 | 11:07 PM (நெவில் அன்தனி) பங்களதேஷுக்கு எதிராக ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (21) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இன்று காலை பெய்த மழை காரணமாக சுமார் நான்கரை மணித்தியாலங்கள் தாமதித்தே போட்டி தொடங்கியது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் முதல் 3 விக்கெட்களை 16 ஓட்டங்களுக்கு இழந்து பெரும் தடுமாற்றத்…
-
-
- 11 replies
- 685 views
- 1 follower
-
-
இங்கிலாந்துக்கு தனியாக செல்லும் இலங்கை வீரர்கள். இலங்கை டெஸ்ட் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ள கமிந்து மெண்டிஸ் மற்றும் jeffrey vandersay ஆகியோர் இன்றைய தினம் இங்கிலாந்து நோக்கி செல்லவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் குழாம் கடந்த 11ஆம் திகதி இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்ற நிலையில், விசா கிடைக்காமை காரணமாக அன்றைய தினம் குறித்த இரண்டு வீரர்களும் செல்ல முடியாமல் போனது. அதேநேரம், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395815
-
-
- 26 replies
- 1.4k views
- 1 follower
-
-
தனது சாதனையை முறியடிப்பது என்பது தற்போதைய கிரிக்கெட்டில் சாதாரண விஷயம் அல்ல என்றும், அதற்கான காரணம் குறித்தும் இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார். டி20 போட்டிகளால் சமீப காலமாகவே டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அதனால் பெரும்பாலான வீரர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து 35 வயதுக்குள்ளேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான், வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கவலை தெரிவித்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை…
-
-
- 5 replies
- 586 views
- 1 follower
-