Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மேற்கிந்திய தீவுகளை அடுத்து இலங்கைக்கு தென்னாபிரிக்காவின் சவால் கடந்த ஆண்டு கத்துக் குட்டி அணிகள் தொடக்கம் ஜாம்பவான் அணிகள் வரைக்கும் அனைவரிடமும் வலிதரக் கூ டிய தோல்விகளை சந்திந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு, முன்னணி வீரர்களின் உபாதைகள், போட்டித் தடைகள் என்பன வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வுகளாக இருந்தன. இலங்கையின் இந்த தொடர் தோல்விகள் தென்னாபிரிக்க அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இருந்தே ஆரம்பித்திருந்தன. 2017ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி அதில் முதற்கட்டமாக இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என தென்னாபிரிக்க அணியினால் வ…

  2. விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி - ஆறரை மணி நேர போராட்டத்துக்கு பின் இறுதியில் நுழைந்தார் கெவின் ஆண்டர்சன் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆறரை மணி நேரம் போராடி அமெரிக்க வீரர் இஸ்னரை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தார். #Wimbledon2018 #JohnIsner #KevinAnderson விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.…

  3. ஓய்வு பெற்றார் இந்திய அணியின் பறக்கும் வீரர் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொத்த 37 வயதாகும் முகம்மது கைப், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக 13 டெஸ்ட்கள் மற்றும் 125 ஒரு நாள் போட்டிகள், முதல் தரப் போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்தவர் முகம்மது கைப். 2000 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் தலைவராக இருந்தவர். 2002 ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பையை வெல்வதற்கு மிகப் பெரிய பலமாக இருந்தவர் கைப். அந்தப் போட்டியில் 87 ஓட்டங்களை எடுத்து இந்தியாவுக்கு கோப்பையை வென்றுத் தந்தார். நாட்வ…

  4. The return of the English Disease? உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும் “காலடியில் வந்து சேரும் பந்து என்னுடையதல்ல, அது என் குழுவினுடையது என்று எப்போதும் நினை. நீதான் கோல் போட வேண்டுமென ஒரு போதும் நினைக்காதே. உனக்குப் பெரும் தடைகள் சூழ்ந்து வரும்போது, பந்தை மேல் எடுத்துச் செல்ல வசதியுடன் உன் சக ஆட்டக்காரர்கள் காத்துக் கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே”. - சுந்தரராமசாமி ( ஜே.ஜே. சில குறிப்புக்களில்) - மீண்டும் உலக கால்பந்து போட்டியொன்று ஆரம்பமாகியுள்ளது. உலகின் பெரும்பாலான மக்கள் அதனால் பின்னப்பட்ட மாய வலையின் பிரமிப்பிலிருந்து விடுபடாமல் குடும்பங்கள், வேலைகள், நோய்கள், கடன் சுமைகள் என அனைத்து பிரச்சினைகளையும் மறந்து அதில் லயிக்க ஆ…

  5. தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியது செல்சி செல்சி அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரான ஆன்டோனியோ கான்டேவை அவரது பதவியில் இருந்து நீக்கியுள்ளது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் முன்னணி அணியாகவுள்ள செல்சி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ஆன்டோனியோ கான்டோ. இவரது தமைமையில் செல்சி 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கோப்பையை கைப்பற்றியது. அப்போது செல்சி அணி 38 போட்டிகளில் 30 போட்டிகளை வெற்றிகொண்டது. 13 வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்றமை குறிப்பிடத்தக்கது. கான்டேவிற்கும் அந்த அணியின் உரிமையாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில் கான்டேவின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்…

  6. வட மாகாண வீரர் வியாஸ்காந்த் இலங்கை இளையோர் அணியில் இந்திய இளையோர் அணிக்கெதிராக எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டித் தொடருக்கான இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் யாழ் மத்திய கல்லூரி அணியின் சகலதுறை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் முதற்தடவையாக உள்வாங்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற மாகாண அணிகளுக்கிடையிலான 19 வயதுக்கு உட்பட்ட ஒரு நாள் தொடரில் வட மாகாண அணிக்காக விளையாடி திறமைகளை வெளிப்படுத்தியதன் பிரதிபலனாகவே வியாஸ்காந்துக்கு இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. …

  7. விம்பிள்டன்- 13-ம்நிலை வீராங்கனையை ஊதித்தள்ளி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார். #Serena #Wimbledon2018 விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் 11-ம் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் வெற்றி பெற்று இறுதிப…

  8. சந்திமல், ஹத்துருசிங்க உள்ளிட்ட மூவருக்கு போட்டி தடை இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமல் உள்ளிட்ட மூவருக்கு தலா இரு போட்டிகளுக்கு ஐ.சி.சி தடை விதித்துள்ளது. இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமல், இலங்கை அணிப் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கே குறித்த தடை உத்தரவு ஐ.சி.சி யினால் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக மைதானத்திற்கு வரமறுத்தமை மற்றும் போட்டியை தாமதமாக ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்தமை போன்ற செயற்பாடுகளால் அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த மூவரும்…

  9. பாகிஸ்தான் வீரர் அஹமட் ஷேசாத் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணம் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று (10) உறுதி செய்தது. இதன் காரணமாக அவருக்கு குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அவரிடம் விளக்கம் கோரி குற்றப்பத்திரிகை சமர்பிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 26 வயதுடைய அனுபவமிக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் கிண…

  10. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சுழல் மன்னன் ஹேரத் விரைவில் ஓய்வு டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 400 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய உலகின் முதலாவது இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத், எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக பிபிசி சிங்கள செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவானான முத்தையா முரளிதரன் ஓய்வுபெற்ற பிறகு, ரங்கன ஹேரத் 2010ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அணியின் துரும்புச் சீட்டாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார். டெஸ்ட் அரங்கில் இலங்கை அணி அண்மைக்காலமாக சுழற்பந்து வீச்சினால் பெற்ற ஒருசில முக்கிய வெற்றிகளுக்கு காரணமா…

  11. விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் - முன்றரை மணி நேரம் போராடி காலிறுதியில் தோல்வி அடைந்தார் பெடரர் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் காலிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மூன்றரை மணி நேரம் போராடி தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #Wimbledon2018 #RogerFederar #KevinAnderson விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. …

  12. ``எனது முடிவைப் புரிந்துகொள்ளுங்கள்!” ரசிகர்களுக்கு ரொனால்டோ உருக்கமான கடிதம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து உலகில் தவிர்க்க முடியாத பெயர். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவரின் கால்பந்தாட்ட திறமைக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த உலகக்கோப்பையிலும் அவரின் விளையாட்டை நாடுகள் கடந்து ரசித்தனர். உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையில் மிக முக்கிய முடிவு ஒன்றை அறிவித்தார். அதாவது கடந்த 9 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ, இனி யுவெண்டஸ் கிளப் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது ரியல் மாட்ரிட் ரசிகர்களுக்கு பெரு…

  13. ரோ‘ஹிட்’ மேன் என்ற செல்லப்பெயர் பிடித்திருக்கிறது: தினேஷ் கார்த்திக்கிடம் ரோஹித் சர்மா ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக். | படம்: விவேக் பெந்த்ரே. ஞாயிறன்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் சதம் எடுத்து வெற்றிக்கு வித்திட்ட நாயகன் ரோஹித் சர்மா பிசிசிஐ.டிவிக்காக தினேஷ் கார்த்திக் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அணியில் இடம்பெற்று ஆட வேண்டிய தினேஷ் கார்த்திக் இண்டெர்வியூ மேனாக மாற்றப்பட ரோஹித் ‘ஹிட்’ மேன் செல்லப்பெயர் குறித்து பதில் அளித்துள்ளார்! பிசிசிஐயின் கிளிஷேயான கேள்விகளுக்கு ரோஹித் சர்மா அளித்த பதில்கள் இதோ: கொலின் மன்ரோவுக்கு இணையாக 3 டி20 சர்வதேச சதங்களை எப்படி உணர்கிறீர்கள்? …

  14. ‘விராட் கோலியை சதம் அடிக்க விட்டுவிடுவோமா?’- ஆஸி. வீரர் பாட் கம்மின்ஸ், மெக்ரா சவால் விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் : கோப்புப்படம் ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் டெஸ்ட் தொடருக்காக வரும் இந்திய அணிக்கு நெருக்கடி அளிப்போம். கேப்டன் விராட் கோலியை சதம் அடிக்கவிடாமல் பார்த்துக்கொள்வோம் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் சவால் விடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராவும் கம்மின்ஸ் சவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட உள்ளது.…

  15. எண்பதுகளை ஆட்கொண்ட 'சன்னி டேஸ்': சுனில் கவாஸ்கர் அறிந்ததும்-அறியாததும்! ஜூலை 10, 1949-ஆம் வருடம் மும்பையில் பிறந்த சுனில் கவாஸ்கர், 1966-ஆம் ஆண்டு தன்னுடைய 17-ஆவது வயதில் இந்தியாவின் பள்ளிகள் அளவிலான மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்படுகிறார். அன்று முதல் கிரிக்கெட் உலகின் புதிய சகாப்தம் உதயமானது என்றே கூறலாம். அப்போது மும்பையின் ரஞ்சி அணிக்காக தேர்வு செய்யப்படுகிறார். அன்றைய காலகட்டம் முதல் இந்திய அளவிலான உள்ளூர் அணிகளில் சிறந்த அணியாக மும்பை இருந்து வருகிறது. அதுபோன்ற ஒரு அணியில் சிறிய வயதிலேயே தேர்வானாலும் அடுத்த இரு சீசன்களுக்கு அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. பின்னர் 19…

  16. ஐபிஎல் ரசிகர்களுக்கு மீண்டும் 360 டிகிரி அதிரடி காணக்கிடைக்குமா? மவுனம் கலைத்த ஏ.பி.டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்த தென் ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மென் ஏ.பி.டிவில்லியர்ஸ் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவாரா ஆடமாட்டாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இந்நிலையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் இது குறித்து மவுனம் கலைத்துள்ளார்: “ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆடுவேன், அதே போல் டைட்டன்ஸ் அணிக்கு ஆடி இளம் வீரர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன், என்னிடம் திட்டமிடல் எதுவுமில்லை. இதனை நீண்டநாட்களாக என்னால் தெரிவிக்க முடியாமல் இருந்தது அவ்வளவே. நிறைய இடத்தி…

  17. விம்பிள்டனில் புதிய சாதனை: முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றவர்கள்! (படங்கள்) கிராண்ட்ஸ்லாம் ஓபன் எராவில் இப்படி நடைபெற்றதில்லை. இதுவே முதல்முறை என்பதால் இந்த எட்டு வீராங்கனைகளும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்கள். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த வருட விம்பிள்டன் போட்டியில் மகளிர் பிரிவில் காலிறுதிக்குத் தகுதி பெற்ற எட்டு வீராங்கனைகளும் போட்டித் தரவரிசையில் டாப் 10-க்கு வெளியே உள்ளவர்கள். ஓபன் எரா காலக்கட்டத்தில் எந்தவொரு கிராண்ட்ஸ்லாமிலும் இதுபோல நடைபெற்றதில்லை. (ஓபன் எரா - 19…

  18. டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஆரோன் பின்ச் டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக 900 புள்ளிகளை கடந்து ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் சாதனை படைத்துள்ளார். துபாய் : டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியளில் 900 புள்ளிகளை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரும், டி20 போட்டிகளின் கேப்டனுமான ஆரோன் பின்ச் படைத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற தொடரின் ம…

  19. பாக். கேப்டன் சர்பராஸ் அகமதுவின் நீட்டிய கையைப் புறக்கணித்த கிளென் மேக்ஸ்வெல் படம். | ஏ.எப்.பி. ஹராரேயில் நடைபெற்ற முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியபோது ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெலின் விளையாட்டுணர்வற்ற செயல் பலரது கவனத்தையும் ஈர்த்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது, அப்போது மேக்ஸ்வெல், ஷோயப் மாலிக்குடன் கைகொடுத்தார். நடுவர்களுக்குக் கைகொடுத்தார், ஆனால் பாகிஸ்தான் வெற்றிக் கேப்டன் சர்பராஸ் அகமது தன் கையை மேக்ஸ்வெலை நோக்கி நீட்டியபோதும் கண்டும் காணாமல் சென்றார் கிளென் மேக்ஸ்வெல், இதனை கேமரா…

  20. ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனைப் படைத்து தல டோனி அசத்தல் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் தல டோனி இரண்டு உலக சாதனைப் படைத்து அசத்தியுள்ளார். #WorldCup2018 இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலின் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 8-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் …

  21. பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ்- ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளினார் செபஸ்டியான் வெட்டல் பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸில் லெவிஸ் ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளி பெர்ராரி வீரர் செபஸ்டியான் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார். #BritishGP ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ பந்தயம் 21 சுற்றுகளாக (கிராண்ட் பிரிக்ஸ்) நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். அதன்படி 10-வது சுற்று பிரட்டனில் இன்று நடைபெற்றது. இது பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் என்று அழைக்கப்படும் இதற்கான தகுதிச் சுற்று வெள்ளிக்கிழமை மற்றும் சன…

  22. லிதுவேனியாவுடனான மோதலை சமநிலையில் முடித்த இலங்கை இலங்கை மற்றும் லிதுவேனியா கால்பந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற சர்வதேச நட்பு ரீதியிலான போட்டித் தொடரின் முதலாவது போட்டி எந்தவித கோல்களும் இன்றி சமநிலையில் நிறைவுற்றுள்ளது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இன்று (08) மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்த மோதல் இலங்கை அணி சுமார் 20 மாதங்களின் பின்னர் ஆடும் சர்வதேசப் போட்டியாகவும், 6 வருடங்களின் பின்னர் இலங்கையில் விளையாடும் சர்வதேசப் போட்டியாகவும் அமைந்தது. போட்டியின் ஆரம்பத்திலேயே லிதுவேனிய அணி இலங்கை வீரர்களை சோதித்தது. அலோசியஸ் டடஸ் உள்ளனுப்பிய பந்தை ஸ்டோன்கஸ் லோரினஸ் தலையால் தட்டி கோலாக்க முயற்சித்த ப…

  23. இங்கிலாந்துடன் நாளை முதல் டி20 போட்டி: சவாலுக்கு தயாரா கோலி படை?- ராகுல், தினேஷ் யாருக்கு இடம்? இங்கிலாந்து கேப்டன் மோர்கன், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் கோப்பையுடன் இன்று போட்டோவுக்கு போஸ் கொடுத்த காட்சி - படம்: ஏபி இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யார் இடம் பெறுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இங்கிலாந்துக்கு 3 மாதங்கள் சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முன்னதாக அயர்லாந்துடன் நடந்த டி20 தொடரை 2-0 …

  24. 28 வருடத்திற்குப் பிறகு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1990-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தியுள்ளது. #PAKvAUS ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்தது. பின்னர் 184 ரன்கள…

  25. “தாதா” கங்குலிக்கு இன்று பிறந்தநாள்: தன்னுடைய ஸ்டைலில் வாழ்த்துக்கூறிய சேவாக் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி : கோப்புப்படம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இன்று 46-வது பிறந்தநாளாகும். அவருக்கு முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணி, டிராவிட் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி என்பது மறுப்பதற்கில்லை. கடந்த 1990களில் இந்திய அணிக்கு அறிமுகமாகினார் சவுரவ் கங்குலி. தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.