அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
எதிர்பார்ப்புக்களின் தோல்வி மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இலக்குடனும் அந்த இலக்கை அடைந்து கொள்ளும் எதிர்பார்ப்புடனுமே காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு சமூக வாழ்வோடு இணைந்த ஒவ்வொரு விடயத்திலும் ஓர் இலக்கும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் சமூகங்களின் மத்தியில் இருப்பது இன்றியமையாதது. அத்தகைய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் நாட்டை ஆளும் அரசாங்கத்திலும் ஒவ்வொரு சமூகம் சார்ந்த அரசியல் தலைமைகளிலும் மக்கள் பிரதிநிதிகளிலும் அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளிலும் காணப்படுகின்றன. சமூகக் கட்டமைப்பின் விருத்தியில் அரசியல் அதிகாரம் முக்கியமானது. ஒரு சமூகத்தின் அடிப்படைத் தேவைகள் நிறை…
-
- 0 replies
- 218 views
-
-
சந்தனத்தை அழித்து முகத்தில் சேற்றைப் பூசிய தவராசா! கூட்டுக் கோபத்தைச் சரியாகச் செயற்படுத்திய கிழக்குப் பல்கலை. மாணவர்கள் தயாளன் வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஒரு தமிழனா? என்ற கேள்வி போய் மனிதனா என்ற கேள்வியே மேலோங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக சபை உறுப்பினர்களின் கொடுப்பனவிலிருந்து ரூபா ஏழாயிரம் பங்களிப்பைப் பெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. உண்மையில் இது அந்த உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவம்தான். இவர்களின் மன அழகு எப்படிப்பட்டதோ முக அழகுக்கு வைக்கப்பட்ட பொட்டுப் போன்றது அது. அங்கு சிந்தப்படும் கண்ணீரை ஒவ்வொருவரிடமும் சென்று துடைக்க முடியாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் இந்த நினைவேந்தலுக்கு எம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்…
-
- 0 replies
- 402 views
-
-
2019 இல் மற்றுமொரு ஜெனிவா பிரேரணை வருமா? எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பான எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதாவது 40 ஆவது ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக என்ன நடக்கப்போகின்றது என்பதே தற்போது எழுந்திருக்கும் மிகப்பெரிய கேள்வியாக கருதப்படுகின்றது. அதாவது 2012ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் 2015ஆம் ஆண்டு பிரேரணையைத் தவிர ஏனைய அனைத்துப் பிரேரணைகளையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்தது. ஆனால் 2015 ஆம் ஆண்டு பிரேரணைக்…
-
- 0 replies
- 516 views
-
-
தொடரும் விரிசல்! ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த ஆட்சி, எதிர்பார்த்ததைப் போன்று நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டவில்லை. நாட்டை முன்னேற்றகரமான வழியில் வழிநடத்திச் செல்லவும் இல்லை. மாறாக பொருளாதாரம் நலிவடைந்திருக்கின்றது. முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. ஆட்சியில் குழப்பங்களும், ஆட்சியாளர்களிடையே அரசியல் பனிப்போர் பகைமையுமே ஏற்பட்டிருக்கின்றன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாமல் செய்வதன் மூலம் தனிநபரின் ஆட்சி அதிகார ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப் போவதாக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் கொள்கை …
-
- 0 replies
- 515 views
-
-
விடுதலைப்புலிகள் சரணடைவற்கு இந்தியா கொடுத்த புரபோஷல்!- 01 April 6, 2018 மாவைக்கும் கஜேந்திரகுமாருக்கும் தெரியாத வேற லெவல் டீலிங் இது பீஷ்மர் ஈழ யுத்தத்தின் இறுதியில் விடுதலைப்புலிகளை சரணடைய வைக்க பல முயற்சிகள் நடந்தன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவையெல்லாம் எப்படி நடந்தன? அவற்றிற்கு என்ன நடந்தது? யாரெல்லாம் அதில் சம்பந்தப்பட்டார்கள் என்பதை விலாவாரியாக நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தல் சமயங்களில் மாவை சேனாதிராசாவும், கஜேந்திரகுமாரும் மாறிமாறி பிடுங்குப்படுவதுதானா அந்த விவகாரம்? நிச்சயம் இல்லை. யுத்தத்தின் இறுதிநாட்களில், எல்லா கதவுகளும் அடைபட்ட பின்னரே நமது உள்ளூர் அரசியல்வாதிகள் அரங்கிற்கு வந்தனர். அதற்கு பல மாதங்களிற்கு முன்னரே இ…
-
- 9 replies
- 2.9k views
-
-
விரைவான தீர்வுதான் தமிழர்களின் தேவை இனப் பிரச்சினைக்கு நடப்பு ஆண்டுக்குள் தீர்வு கிடைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திக் கூறியுள்ளமை தற்போதைய காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கொழும்பு அரசு மற்றும் இந்தியா உள்ளிட்ட பன்னாட்டுச் சமூகத்திடம் கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை வலியுறுத்திக் கூறியுள்ளமை குறிப்பிடத் தக்கது. கூட்டரசிடம் தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை முற்றாகவே இழக்கப்பட்ட நிலையில், தமிழ் மக்களது ஏகப் பிரதிநிதிகளாகக் கருதப…
-
- 0 replies
- 393 views
-
-
ஈரான் - இலங்கை உறவு ‘பொருளாதாரத்தையும் தாண்டிய ஒத்துழைப்பு மத்திய கிழக்குக்கான முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சரும் சபாநாயகரின் சர்வதேச விவகாரத்துக்கான தற்போதைய சிரேஷ்ட ஆலோசகருமான டொக்டர் ஹொசைன் அமீரப்துல்லாஹியான் உடன், சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவு, மத்திய கிழக்கில் தற்போது காணப்படும் நிலை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்களின் தொகுப்பு இங்கு வழங்கப்படுகிறது. இலங்கை விஜயத்துக்கான நோக்கம் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்பு, நீண்டகால சரித்திரத்திரத்தைக் கொண்டதாகும். அண்மைக்காலமாக இத…
-
- 0 replies
- 751 views
-
-
இனியும் தாக்கு பிடிக்குமா கூட்டு அரசு? ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய பொருளாளர் எஸ்.பி. திஸாநாயக்க, “கூட்டு அரசாங்கம் முழுப் பதவிக்காலத்துக்கும் தாக்குப் பிடிக்காது, இன்னும் கொஞ்ச நாளில் கவிழ்ந்து விடும்” என்று, அண்மையில் கூறிய தகவலை, அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான விரிசல்கள், உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்ற நிலையில்தான், அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட இப்போது, ஐ.தே.க மீதான தாக்குதல்களை ஆரம்பித்திருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போதுதான், எஸ்.ப…
-
- 0 replies
- 501 views
-
-
கஞ்சிக் கோப்பை அரசியல் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள், அனைத்து ஆட்சியாளர்களிலும் அதிருப்தியுற்ற ஒரு காலமாக, நிகழ்காலம் கடந்து கொண்டிருக்கின்றது. நெடுங்காலத் தலையிடிகளுக்கு மருந்து தேடாமல், தலையணைகளை மட்டும் மாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் போக்கு, இலங்கையில் காணப்படுகின்றமையால் இன்னும் தலைப்பாரங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதே, முஸ்லிம்களின் அனுபவமாக இருக்கின்றது. இவ்வேளையில், முஸ்லிம்களைத் தம்வசப்படுத்துவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தரப்புகள், தொடர்ச்சியான பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன. …
-
- 0 replies
- 551 views
-
-
தயாசிறி ஜயசேகரவின் கதைக்கு பின்னாலுள்ள கதை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேர்பெச்சுவல் டிரெஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸிடம், பத்து இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக வெளியாகியிருக்கும் செய்தியால் குழம்பிப் போயுள்ளார். அத்தோடு, மேலும் 118 பேர் அவ்வாறு அலோசியஸிடம் பணம் பெற்றதாகக் கூறப்படுவதால், அது கடந்த வாரம் முழுவதும் நாட்டின் பிரதான செய்தியாகி இருந்தது. இச்செய்திகளை அடுத்து, ஊழல் பேர்வழிகளிடம் அவ்வாறு பணம் பெற்ற அரசியல்வாதிகள் யார் என்பதை அறிய, மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால், தமி…
-
- 0 replies
- 890 views
-
-
நிகழக் காத்திருக்கும் அதிசயம் தேசியப்பட்டியல் என்கிற ‘வஸ்து'வுக்கு முஸ்லிம் அரசியலில் கொஞ்சம் காரமும் பாரமும் அதிகமாகும். சிலவேளைகளில், முஸ்லிம் அரசியலில் கேலிக்குரியதொரு சொல்லாகவும் அது பேசப்பட்டிருக்கிறது. புத்தி ஜீவிகளையும் சமூகத்துக்காகத் தொண்டாற்றுகின்றவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தேசியப்பட்டியல் முறைமையானது, அநேகமான தருணங்களில் அந்த இலக்கை நிறைவேற்றவில்லை என்பது, வேறு கதையாகும். தொடங்கிய கதை முஸ்லிம் அரசியலரங்கில், தேசியப்பட்டியல் என்பது துரும்பாகவும் வியாபாரப் பண்டமாகவும் பயன்படுத்தப்பட்ட வரலாறுகள் அதிகமாகும். 1989ஆம் ஆண்டு, என்.எம்.…
-
- 0 replies
- 579 views
-
-
கிழக்கு: அரசியலை தூக்கி எறிந்துவிட்டு... சீனாவால் அமைக்கப்பட்டுவரும் கொழும்புத் துறைமுக நகரத்தையும் சேர்த்த கொழும்பின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டிருக்கிறது. நில அளவையாளர் நாயகம் பி.எம்.பி. உதயகாந்த இதை வெளியிட்டு வைத்ததுடன், இலங்கையின் புதிய வரைபடத்திலும் பல மாற்றங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், கிழக்கின் அரசியல் வரைபடத்தில் மாற்றங்களை யார் கொண்டு வருவது என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும். அரசியலை வெறுக்காதவர்கள், அடி மட்டம் முதல் உயர்நிலை வரையில் இருக்கத்தான் செய்கிறார்கள். இருந்தாலும் அரசியலைத் தூக்கி எறிந்து விட்டு, எதைத்தான் செய்துவிட முடியும். ‘அரசியலும் மண்ணாங்கட்டியும்’ என்று இப்போது இருந்…
-
- 0 replies
- 714 views
-
-
இரகசியமாக தயாராகும் தமிழரசுக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் இவர்தான்: மாவைக்கு இம்முறையும் அல்வாவா? June 1, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த வடமாகாண முதலமைச்சர் யார் என்ற சர்ச்சைகள் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழரசுக்கட்சியின் உயர்பீடத்தால் தற்போது சடுதியான புதிய நகர்வொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாவை சேனாதிராசாவை தவிர்த்து, புதிய- நிர்வாக பரிச்சயமுள்ள ஒருவரை அரங்கிற்கு கொண்டுவரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. யார் அந்த புதிய முகம்? அவரை அரங்கிற்கு கொண்டு வர முயற்சிப்பவர் யார்? ஆளை சொல்வதற்கு முன்னர், இந்த விவகாரம் குறித்த சிறிய பிளாஷ்பேக் ஒன்றை சொல்கிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தான்தானென மாவை…
-
- 0 replies
- 620 views
-
-
சி.ஐ.ஏ: சித்திரவதையின் உலகமயமாக்கல் அனைத்தும் உலகமயமாகியுள்ள சூழலில், சித்திரவதை விலக்கல்ல. சித்திரவதை பல வகைகளில் நடக்கின்றன. ‘உண்மையை அறியும் வழி’ என்ற போர்வை, சித்திரவதைகளைக் கண்மூடித்தனமான அனுமதிக்கிறது. ‘பயங்கரவாதி’ என்ற சித்திரிப்பு மட்டுமே, ஒருவர் சித்திரவதைக்குள்ளாகப் போதிய காரணியாகிறது. பொதுப்புத்தி மனநிலை, அதை விமர்சனமின்றி ஏற்கிறது. தம்மை நாகரிக ஜனநாயக சமூகங்கள் என்போர், சித்திரவதையை அனுமதிக்கிறார்கள். சித்திரவதை ஜனநாயகத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது. நாம், மனிதரை மனிதராக மதிக்கும் ஒரு சமூகமா என்ற கேள்வியை, நாமெல்லோரும் கண்ணாடி முன் நின்று கேட்க வேண்டும். …
-
- 0 replies
- 784 views
-
-
காணிகளை விடுவிக்க- வீதியோரம் போராடும் மக்கள்!! முல்லைத்தீவின் கேப்பாப்புலவு பகுதியில் இராணுவத்தினர் வசமிருக்கும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக்கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி முதல் கேப்பாப்புலவு மக்கள் ஆரம்பித்த காணி மீட்புப் போராட்டம், முன்னேற்றம் எதுவுமற்ற நிலையில் 450 நாள்களை தாண்டியும் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படுகின்றது. இரவு, பகல் என்றும் பாராது குளிர், வெயில் மற்றும் நுளம்புத் தொல்லைகளுக்கு மத்தியிலும், கேப்பாப்புலவு மக்கள் தமது மாதிரிக் கிராமங்க…
-
- 0 replies
- 665 views
-
-
வெளியாரின் ஆக்கிரமிப்புக்குள் வடமராட்சி கிழக்கின் கடலும் நிலமும் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் குறிவைத்து அழிக்கும் செயற்பாடுகள், காலத்துக்குக் காலம் வெளித்தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைக்காலம் வரையில், இந்திய ரோலர்களின் ஆக்கிரமிப்பால் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்த வடமராட்சி கிழக்கு மீனவர்கள், தற்போது தென்இலங்கை மற்றும் வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வடமராட்சி கிழக்கு மீனவர்கள், பாரம்பரிய முறையிலான கரையோர மீன்பிடியையும் நவீன முறையிலான ஆழ்கடல் மீன்பிடியையும் ஒன்றுக்கொன்று பாதிப்பு ஏற்படாத வகையில்…
-
- 0 replies
- 339 views
-
-
தமிழினத்தின் முடிவுறாத சாபம்; அதுவே தென்னிலங்கையின் வரம் “முல்லைதீவு மாவட்டத்தின் கொக்கிளாய், நாயாறு, சாலை, சுண்டிக்குளம் எனப் பல பிரதேசங்களைத் தாண்டிய, தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு, தற்போது யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு வரை சென்று விட்டது. இப்படியே சென்றால், யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்துக்கு அருகில் விகாரை அமையப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் வடக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக, கொழும்பு அமைச்சர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களுடன் கதைத்தும் ஆக்கபூர்வமான ப…
-
- 0 replies
- 445 views
-
-
ஆளப்போறான் தமிழன் இக்கட்டுரை தமிழ் தேசியத்தைப்பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளாத தமிழ்நாட்டு மக்களுக்காக எழுதப்பட்டது. அறிமுகம் ‘……ஆண்ட பரம்பரை மீண்டுமொரு முறை ஆள நினைப்பதிலென்ன குறை………….‘ என்கிறார் உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன். வடவேங்கடம் தொட்டு ஈழம் வரை பரந்து விரிந்து கிடக்கிறது தமிழ்நாடு. தற்போது வடமாலவன் குன்றமென்னும் வேங்கடாசலபதியின் திருப்பதிப் பிரதேசம் தமிழ் நாட்டைவிட்டுப் பறித்தெடுக்கப்பட்டு விட்டது. கடல் கோளால் அழிந்து போன தென் குமரிக் கண்டத்தில் ஈழம் தமிழனுக்காக எஞ்சியிருக்கிறது. மிகுதி சிங்கள சிறீலங்காவாக மாறிவிட்டது. தமிழனுக்கான …
-
- 0 replies
- 851 views
-
-
முஸ்லிம்களுக்கு தலைமை தாங்க கட்சி வேண்டும் இலங்கை முஸ்லிம்களுக்கு தேசிய ரீதியில் தலைமை தாங்கக் கூடிய அரசியல் கட்சி ஒன்றின் அவசியம் உணரப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் அத்தகையதொரு இடத்தினைப் பெற்றிருந்தது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தன் செல்வாக்கிலும், கொள்கைப் பின்பற்றுதலிலும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டு செல்வதனால் தேசிய ரீதியில் அரசியல் தலைமைத்துவம் கொடுக்கக் கூடிய தகுதியை இழந்து கொண்டிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் . இதனால், அக்கட்சி தமது நிலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களிடையே பல அரசியல் கட்சிகள் உள்ளன. அவை முஸ்லிம் சமூகத்திற்குரிய அரசியல் நட…
-
- 0 replies
- 485 views
-
-
இனத்துவ அரசியலில் குயில்களுக்கு இடமில்லை: கவிஞர் வ ஐ ச ஜெயபாலன்! கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியா விட்டால் வடகிழக்கு மாகாணம் தமிழர் அலகு, முஸ்லிம்களின் அலகு, சிங்களவர் அலகு என பிரிந்து செல்வது மட்டும்தான் தெரிவாக இருக்கும் என பிரபல சமூக ஆய்வாளரும் சர்வதேச எழுத்தாளருமான வ.ஐ.ச ஜெயபாலன் கரிசனை வெளியிட்டுள்ளார். ”வடகிழக்கு இணைப்பும் முஸ்லிம்களும் - எனது நிலைபாடும்” (NORTH EAST MEAGER THE MUSLIMS AND MY STAND.) என்ற அறிக்கையில் அவர் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடகிழக்கு முஸ்லிம்கள் தொடர்பாக முஸ்லிம்கள்தான் தீர்மானம் எடுக்கவேண்டுமே…
-
- 0 replies
- 417 views
-
-
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சிறுபான்மையினருக்கு கை கொடுக்கின்றதா? துரைசாமி நடராஜா நிறைவேற்று ஜனாதிபதி முறையினை நீக்குவதா? இல்லையா? என்பது குறித்து மஹிந்த அணியினரிடத்தில் கருத்தொருமைப்பாடு இல்லாத நிலைமையே காணப் படுகின்றது. கருத்து வேற்றுமைகளே இங்கு காணப் படுகின்றன. இவ்வணியினரின் முடிவினைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை குறித்த வாதப்பிரதிவாதங்கள் இப்போது இடம்பெற்று வருகின்றன. இம்முறைமையினை நீக்குவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கும் 20 ஆம் திருத்தத்தை மக…
-
- 0 replies
- 1.8k views
-
-
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும் அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் ரொறி மெட்காப் (Prof. Rory Medcalf) அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்தார். இவர் சிறிலங்காவில் தங்கியிருந்த போது ‘டெய்லி மிரர்’ நாளிதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். பேராசிரியர் தனது நேர்காணலில் சிறிலங்காவின் மூலோபாய அமைவிடம் மற்றும் அவுஸ்ரேலியாவின் பார்வையில் சிறிலங்காவின் அமைவிடத்தின் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளித்திருந்தார். பேராசிரியரின் நேர்காணலிலிருந்து சில முக்கிய குறிப்புக்கள் பின்வருமாறு: நாங்கள் அவுஸ்ரேலியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான மூலோபாய மற்றும் …
-
- 0 replies
- 369 views
-
-
அரசியலைத் தாண்டிய பொருளாதார அடாவடித்தனம் உலக ஒழுங்கை மீறி பொருளாதாரத்தை அபாயத்தில் தள்ளும் ட்ரம்ப் சதீஷ் கிருஷ்ணபிள்ளை உலக வல்லரசின் ஜனாதிபதி பதவி. அந்தப் பதவியை அலங்கரிப்பவர் சற்று நிதானம் தவறியவராக இருந்தால் போதும். ஒட்டுமொத்த உலகமும் பாதுகாப்பற்றதாக மாறி விடும். இன்றைய அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப். தாம் மனநல ஆரோக்கியத்துடன் இருப்பதை உளவியல் மருத்துவ சோதனைகள் மூலம் நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட தலைவர். உலக நலன் கருதிய மரபு சார்ந்த சிந்தனைகளைத் தாண்டி, வல்லரசு மனப்பான்மையுடன் முதலில் அமெரிக்கா(America First) என்ற கொள்கையை முன்னிறுத்தியவர். அதன் அடிப்…
-
- 0 replies
- 513 views
-
-
பலஸ்தீனியர்களின் 70 ஆண்டுகால அவலம் அஸ்தமிப்பது எப்போது? ஜனாதிபதி டோனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா தலைவராக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதற்கு முன்னர் பல வெளிநாட்டுக் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாதை வேறு எனது பாதை வேறு என உலகத்திற்கு எடுத்துக்காட்டினார். வெளிநாட்டு கொள்கை மாற்றங்களில் மிகவும் பிரசித்தமானது என வர்ணிக்கப்படக்கூடியது, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை மாற்றப்போவதாக விடுத்த அறிவிப்பு என துணிந்து கூறலாம். சென்ற ஆண்டு 2017ஆம் ஆண்டில் இச்செய்தியை வெளியிட்டார். பலஸ்தீனிய விவகாரத்தில் தொடர்பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்ட பலஸ்தீன அதிகாரசபை தாம் எதிர் க…
-
- 1 reply
- 995 views
-
-
"குளம் வற்றும் வரை காத்திருக்கும்"வடக்கு முதலமைச்சரின் யுக்தி கடந்த வாரம் நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மொஹமட் அலியின் வெற்றிக்கான யுக்தியைப் பற்றி விளக்கியிருந்தார். மொஹமட் அலியிடமிருந்து தமிழ் மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது அந்த விளக்கத்துக்கான காரணம். அதனை அவர் வெளிப்படையாகவும் கூறியிருந்தார். தன்முகத்தில் அடிபடாமல் வைத்துக்கொண்டு எதிரியைக் களைப்படைய வைத்து தோற்கடிப்பது தான் மொஹமட் அலியின் யுக்தி என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். தற்போது அரசியல் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள், கடன்சுமை மற்றும் சர்வதேச அழுத்தங்களால் சிங்கள அரச…
-
- 1 reply
- 807 views
-