அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
சூடு பிடிக்கும் பொதுவேட்பாளர் விவகாரம் என்.கண்ணன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பான விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, கோத்தாபய ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ, என போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் என்று எதிர்வு கூறப்படுபவர்களின் பெயர்களின் பட்டியலின் நீளம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இந்த வரிசையில் இப்போது புதிய பெயர் ஒன்று அடிபடுகிறது. அவர் ஒன்றும் அரசியல்வாதியல்ல. ஆனால், முன்னணி அரசியல்வாதிகளை விடவும் பிரபலமானவர். இலங்கை கிரிக்கெட் அணியின் மு…
-
- 0 replies
- 434 views
-
-
மக்களது தேவைகளை நிறைவேற்றும் – அரசே நீடித்து நிலைக்கும்!! நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பெரும்பாலான அரசுகள் கைக்கொண்ட பொருளாதாரக் கொள்கைகள், காலப்போக்கில் நாட்டு மக்களால் நிராக ரிக்கப்பட்டமை வரலாற்றுப் பதிவுகள். அதற்குக் காரணம், குறித்த அரசுகளது பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள், உலக நடப்பின் யதார்த்தத்தைச் சரிவரப் புரிந்து கொள்ளத் தவறியமையே ஆகும். ஒரு நாட்டினது பொருளாதாரக் கொள்கை இன்னுமொரு நாட்டுக்குப் பொருந்துவதில்லை …
-
- 0 replies
- 463 views
-
-
யுத்தமும் – நுண்கடனும் – கடன்காரியும் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… எங்களுக்கு அயல் கிராமத்தில் ஒரு அம்மா இருந்தார். அவருக்கு நான்கு பெண் பிள்ளைகள். கணவர் யுத்தத்தில் இறந்துபோய்விட்டார். அவர் ஒரு பெட்டிக் கடைதான் நடாத்திக் கொண்டிருந்தார். என் சிறு வயது முதலே அவர் ஒரு பெட்டிக்கடையை துணையாக்கிக் கொண்டதை பார்த்திருக்கிறேன். இடம்பெயர்ந்தால் அந்தப் பெட்டிக்கடையும் அவருடன் இடம்பெயறும். அவர் எங்கு போய் அடைக்கலம் புகுந்துகொள்ளுகிறாரோ அங்கே அந்தப் பெட்டிக்கடையும் குடியேறும். அப்படியே இடம்பெயர்ந்து 2009 யுத்தம் முடிந்த பின்னர் அவர்கள் தங்கள் பெட்டிக்கடையை திறந்து கொண்டார்கள். முள்வேலி முகாமிலேயே அப்படி ஒரு கடையை…
-
- 0 replies
- 493 views
-
-
சுமந்திரனின் பதில் என்ன? யதீந்திரா சுமந்திரன் எப்போதும் தன்னை பற்றிய விடயங்கள் சூடாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் ஒருவர். இதற்காகவே அவ்வப்போது அவர் வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்துவதுண்டு. இது ஒரு தேர்தலரசியல் தந்திரம். அண்மையில் கூட ஊடகவியலாளர்களுக்கு வகுப்பெடுப்பது போன்று ஏதோ சில விடயங்களை பேசியிருந்தார். உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் கனடிய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அரசியல் தீர்வு முயற்சிகள் தோல்வியில் முடிந்தால் அதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு அரசியலிலிருந்து விலகும் எண்ணம் இருப்பதாகவும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் சுமந்திரன் வடக்கு மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் காண்பித்து வரும் ஆர்வத்தை பார்த்தால் அவருக்கு அரசியலிலிருந்…
-
- 0 replies
- 591 views
-
-
முள்ளிவாய்க்காலும் இனவாதமும் வடமாகாண சபை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அரசாங்கமும் தென்னிலங்கையரும் அதையொரு குருஷேத்திரமாகப் பார்க்கும் நிலை இன்னும் அற்றுப்போகவில்லை என்பதற்கு உதாரணம் கடந்த 18 ஆம் திகதி முள்ளி வாய்க்காலில் அனுஷ்டிக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு. அதில் பங்கெடுத்துக்கொண்ட வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மீது தென்னிலங்கையினரின் பாய்ச்சல் தீவிர இனவாதத்தை கொட்டுவதாகவிருக்கிறது. வடமாகாணசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டு சி.வி. விக்கினேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்ற நாளிலிருந்து தென்னிலங்கை சமூகமும் ஆட்சியாளர்களும் பேரின தலைவர்களும் பௌத்த பேரினவாதிகளும…
-
- 0 replies
- 327 views
-
-
புலம்பெயர் அமைப்புகள் இயக்கப்படுவது யாரால்!! – கதிர் http://www.kaakam.com/?p=1136 இன்று புலம்பெயர் தமிழ் அமைப்புகள் யாரால் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற ஐயுறவை ஏற்கனவே காகத்தில் பதிவிட்டிருக்கிறோம். இன்று தமிழீழ மண்ணில் நிகழும் பல வழமைக்கு மாறான மிகக் கேவலமான பல செயற்பாடுகளின் பின்னணியில் சில புலம்பெயர் அமைப்புகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றமையால் மீளவும் அதுபற்றி பேச வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. “தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்” மிக வலுவான அரணாக உருவாக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகள் இன்று “தமிழீழம் கேட்காத” அரசியல் கட்சிகளின் கொடி தூக்கிகளாக மாறியிருக்கிறார்கள் அல்லது மாற்றப்பட்டிருக்கிறார்கள். புலிகள் அமைப்பு இயங்கு நிலையில் இ…
-
- 0 replies
- 864 views
-
-
இருமுகத்தோற்றம் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தினமாகிய மே 18 ஆம் நாள் நாட்டை அரசியல் உணர்வு ரீதியாக இரு துருவங்களாக்கியிருக்கின்றது. இன ஐக்கியத்திற்கும் அமைதி–சமாதானத்திற்கும் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட யுத்த முடிவு தினமானது அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது. அந்த தினம் நேர் முரணான இரு முகத்தோற்றங்களைக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் அது யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகின்றது. ஆனால் வடக்கிலும்–கிழக்கிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்கள் மனங்களிலும் அந்த தினம் ஆழ்ந்த துயரத்தைத் தரும் ஒரு சோக தினமாக–- துக்க தினமாக…
-
- 0 replies
- 428 views
-
-
முஸ்லிம் கட்சிகளின் தேசியப் பட்டியல் கதை முஸ்லிம் சமூக அரசியலில், பதவிகள் என்பது மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்ற ஒரு விடயமாக மாறியிருக்கின்றது. பதவிகளும் அதனூடான அதிகாரமும் இருந்தால், மக்களுக்கு நிறையச் சேவை செய்வதற்கான பலம், தானாகவே வந்துவிடுவதாக ஒரு கருத்துநிலை தோன்றியிருக்கின்றது. இதில் உண்மையில்லாமலும் இல்லை. ஆனால், முஸ்லிம் அரசியலில் பதவிகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனைபேர், இந்தச் சமூகத்துக்காக, அந்தப் பலத்தை உச்சமாகப் பயன்படுத்தி இருக்கின்றனர்? பதவியிருந்தால் சாதித்துக் காட்டுவோம் என்று சொன்ன எத்தனைபேர், நிஜத்தில் அதைச் செய்து காட்டியிருக்கின்றார்கள் என்ற கேள்விக்கு, வெட்கப…
-
- 0 replies
- 496 views
-
-
எரிபொருள் விலைக்குள் அரசியல் மோதல் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும், அரசியல் சண்டைகள் மாத்திரம் ஓயவில்லை. குறிப்பாக, எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முடிவைத் தொடர்ந்து, பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எரிபொருள் விலை அதிகரிப்பென்பது, சாதாரண மக்களைப் பலமாகப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. பஸ் கட்டணத்திலிருந்து சோற்றுப் பொதியின் விலையிலிருந்து, பல பொருட்களினதும் சேவைகளினதும் விலைகள் அதிகரித்திருக்கின்றன. எரிபொருளுக்கான வரியை நீக்கி, எரிபொருளின் விலை நீக்கப்படுமென …
-
- 0 replies
- 311 views
-
-
ஜாலியன்வாலா பாக்கை நினைவுபடுத்தும் தூத்துக்குடி! ஜாலியன் வாலா பாக் படுகொலையை தூத்துக்குடி துயரம் நினைவுபடுத்துவதாகவே அநேகமான தமிழகத் தமிழர்களும் கூறுகின்றனர். ஈழத் தமிழர்கள்கூட அப்படியே கருதுகின்றனர். கடந்த ஆண்டு ஜாலியன் படுகொலைக்கு பிரிட்டன் அரசாங்கம் 99 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னிப்புக் கோரியது. (அப்போது குளோபல் தமிழ் வெளியிட்ட கட்டுரை http://globaltamilnews.net/2017/46558/) அத்தகைய மிருகத்தனமான கொலைகளை நிறுத்த வேண்டும் என்று ஈழத்தில் இருந்து குரல்கள் எழுகின்றன. ஆக அத்தகைய கொலைகளுக்கு மன்னிப்பும் எதிர்ப்பும் எழும் ஒரு காலத்தில் தமிழக அரசு நிகழ்த்திய தூத்துக்குடி படுகொலை ஒரு சாதாரண நிகழ்வல்ல. தி இந்துவில் …
-
- 0 replies
- 712 views
-
-
‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல் போர் முடிவுக்கு வந்த ஒன்பதாவது ஆண்டை நினைவு கூரும் வகையில், நாடாளுமன்ற வளாகப் பகுதியில் உள்ள படையினருக்கான நினைவுத் தூபியில் நடந்த அஞ்சலி நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியிருந்தார். “ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தீவிரவாதத்தைத் தோற்கடித்த போதும், இன்னமும் அவர்களின் கொள்கையைத் தோற்கடிக்க முடியவில்லை. நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன், தீவிரவாதிகள் வெளிநாடுகளின் அணி திரளுகிறார்கள். நான், அண்மையில் இலண்டனுக்குப் பயணம் மேற்கொண்டபோது, போராட்டம் நடத்தினார்கள்” என்று அப்போது கூறியிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கர…
-
- 0 replies
- 620 views
-
-
ஆசையும் துயரங்களும் “எரிபொருள் மூலம் அரசு அறவிடும் 40,000 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட வரியை நீக்கி, எரிபொருள் விலை குறைக்கப்படும். பொதுப் போக்குவரத்துச் சேவைக்கும் ஓட்டோக்களுக்கும், மோட்டார் சைக்கிள்களுக்கும் இதன் மூலம் விசேட சலுகை கிடைக்கும்”. மேலே உள்ளது, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்ட விடயமாகும். ‘வலுசக்தியைப் பாதுகாக்கும் இலங்கை’ எனும் தலைப்பில் மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயினும், கடந்த 10ஆம் திகதி, எரிபொருள்களுக்கான விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டன. 117 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு …
-
- 0 replies
- 404 views
-
-
உலக அரசியல் அரங்கு: ஒரு கணக்கெடுப்பு அரசியல் அரங்கின் சுவையே அதன் நிச்சயமின்மையே. அச்சுவையின் அபத்தம் யாதெனில், பல சமயங்களில் அச்சுவாரசியம் அவலச் சுவையுடையது. உலக அரசியல் அரங்கு, நிச்சயமின்மைகளாலும் அவலங்களாலும் நிறைகின்ற காலப்பகுதியில், எதிர்காலத்தை வெறித்துப் பார்த்தபடி எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஒருபுறம், இதுவரை கட்டமைக்கப்பட்ட சமூக அரசியல் விழுமியங்கள், புதிய வாசிப்புகளையும் விளக்கங்களையும் பெறுகின்றன. மறுபுறம், உலகம் எதேச்சாதிகாரத்தின் நவீன வடிவங்களை நோக்கி நகர்கிறது. இவை புதிய கேள்விகளையும் விளக்கங்களையும் வேண்டி நிற்கின்றன. உலகமயமாக்கலின் முடிவு கடந்த அ…
-
- 0 replies
- 750 views
-
-
பலவீனங்களுக்குப் பரிகாரம் தராத பலவீனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பலவீனம் அடைந்துள்ளது” என அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் இதையே சுட்டி நிற்கின்றன. கடந்த ஒன்பது வருடங்களில், தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டம், ஒருவித தேக்க நிலையை அடைந்துள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் மக்களது அரசியல் சார்ந்த செல்நெறியில், செயற்றிறனுடைய செயற்றிட்டங்கள் தீட்டப்பட்டதாகத் தெரியவில்லை. …
-
- 0 replies
- 501 views
-
-
மதவாதிகளால் சீரழிகின்ற- இலங்கைத் திருநாடு!! ‘‘இந்த நாட்டின் பெரும்பான்மையினமான பெளத்த சிங்கள மக்களையும், பெளத்த தேரர்களையும் கட்டுப்படுத்துகின்ற முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாக மகிந்த கூறியிருப்பது சிறுபிள்ளைத் தனமானது. மதத் தலங்கள் கட்டுப்பாடுகளின்றி நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கும் வகையிலான சட்டமூலம் ஒன்றை அரசு தயாரித்து வருவதைத் திரிபுபடுத்திக் கூறி, மக்களை அரசுக்கு எதிராகக் கிளர்ந்ெதழச் செய்வதே மகிந்தவின் நயவஞ்சகத் திட்டமாகும். பெளத்த மதத்தின் ஆதிக்கம் அரசினுள் நி…
-
- 1 reply
- 629 views
-
-
நினைவேந்தல் குழறுபடிகள்: மாணவர்கள் பதிலுரைக்க வேண்டும் நினைவேந்தல் நிகழ்வொன்றுக்கும், எழுச்சி நிகழ்வொன்றுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசம் உணரப்படாமல், ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்’ பிரதான நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் தினம் உள்ளிட்டவற்றை முன்வைத்து புலம்பெயர் தேசங்களில்தான் இதுவரை காலமும் ‘நான் நீ’ என்கிற அடிதடி மோதல்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. கடந்த ஆண்டு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சிலரால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களை அடுத்து, இம்முறை அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு, நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக…
-
- 1 reply
- 436 views
-
-
சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 1 அமெரிக்கா, அரசியல், சிரியா, வரலாறுFebruary 21, 2016March 4, 2016 இ.பா.சிந்தன் ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சிரியா என்கிற நாடு குறித்து பெரிதாக நாம் அறிந்திருக்கமாட்டோம். ஆனால் இன்று சர்வசாதாரணமாக டீக்கடை விவாதங்களில்கூட சிரியா ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. அப்படி சிரியாவில் என்னதான் நடக்கிறது? சிரியாவின் உள்நாட்டுப்போருக்கு யாரெல்லாம் காரணம்? இப்போரினால் பாதிக்கப்படுவதும்/பாதிக்கப்படப்போவதும் யார்? இப்போரினால் இலாபம் அடையப்போவது யார்? சிரியாவில் தொடங்கிய போர் சிரியாவோடு முடிந்துவிடுமா அல்லது மூன்றாம் உலகப்போருக்கான ஆயத்தப்பணிகளா? இது போன்ற பல கேள்விகளுக்கு விடைகள் தேடும் முயற்சியே இக்கட்டுரைத்தொடர்…. உலகில் மன…
-
- 0 replies
- 759 views
-
-
வட பகுதி நினைவேந்தல்களும் தென் பகுதி அச்சங்களும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பற்றி, ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது கூறிய ஒரு கருத்து, தெற்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கருத்துக்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, நாட்டில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது. முள்ளிவாய்க்காலில், போரில் கொல்லப்பட்டவர்கள் நினைவு கூருவது தொடர்பாக, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டு இருந்தார். “அவ்வாறு போரில் கொல்லப்பட்டவர…
-
- 0 replies
- 547 views
-
-
MANO GANESAN AND NORTH EAST MERGER. மனோ கணேசனும் வடகிழக்கு இணைப்பும் விவாதங்கள். . வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டுமென 21.05.2018 அன்று மட்டக்ககளப்பில் நடந்த ஊடக சந்திப்பில் மனோ கணேசன் தெரிவித்தார். இது கிழக்கு தமிழர் மத்தியில் பேராதரவையும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும் உருவாக்கி உள்ளது. முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்பை ஆதரிக்கக்கூடாது என்றும் மனோகணேசன் கிழக்குமாகான மக்கள் பிரச்சினையில் தலையிடக்கூடாது அவர் மலையக மக்கள் பிரச்சினையை மட்டும் பார்கட்டும் என்றும் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பான விடயங்களில் ஆய்வு செய்கிறவன் என்கிற வகையில் என் கணிப்புக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். . வடகிழக்கு இணைப்பு பற்றி மனோ கணேசன் குறிப்பிட்ட…
-
- 0 replies
- 409 views
-
-
இந்தப் படத்திற்கு, உங்கள் கருத்து என்ன? சில படங்களை பார்க்கும் போது.... மனதிற்குள், சில கேள்விகள். எழுவது இயற்கை. இந்தப் படம், எனது மனதை, விசனத்துக்கு உள்ளாக்கி விட்டது. இப்படியான படங்களை..... காணும் போது, உங்கள் மனம் என்ன... நினைக்கின்றது என்று..... சொல்லுங்கள். ++++++++++++++ எனது கருத்து. பிளான்... பண்ணி , செய்யுறாங்களா? சம்பந்தன், சுமந்திரன், மாவைக்கு..... குடை பிடித்தவர்கள்.... அந்த.. ஆமத்துறுவுக்கும், ஒரு குடை பிடித்தால், குறைந்தா ... போய் விடுவார்கள். அப்படி... அந்த, பிக்குவை, அவமதிப்பது என்றால்... அந்த, நிகழ்ச்சிக்கு, பிக்கு அழையாத விருந்தாளியாக வந்திருக்க வேண்டும். இந்தப் படத்தை..... பொது பல சேனா போன்ற அமைப்…
-
- 6 replies
- 831 views
-
-
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை மீட்சி இல்லை கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய கொள்கை உரையை நாம் இப்போது விவாதிக்கின்றோம். இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்தார். அதனை அதே கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் வழிமொழிந்திருந்தார். இந்த அரசாங்கம் நாட்டை ஆளக்கூடாது என்பதுதான் அவர்களது உரைகளின் முக்கிய கருப்பொருள் என்பதை நாம் காணலாம். ஆட்சிபீடத்திற்கு மீண்டும் அவர்கள் கொண்டுவரப்பட வேண்டும் அல்லது நாட்டை அவர்கள் ஆள்வதற்கு அவர்களுக்கு வகைசெய்யப்பட வேண்டும் என்பது அதன் பொருளாகும். அவர்கள் இந்த நாட்ட…
-
- 0 replies
- 499 views
-
-
வடகொரிய - ஐ.அமெரிக்கப் பேச்சுவார்த்தை: நிழல் யுத்தமொன்று - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறக்கூடும் என வடகொரியா அச்சுறுத்தும் போதிலும், ஐ.அமெரிக்க - வடகொரிய பேச்சுவார்த்தை, வரலாறு காணாத முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடப்பட வேண்டியதாகும். ஜனாதிபதி ட்ரம்பின் ‘கடுமையான கொள்கைக்கு’ கிடைத்த வெற்றி என தென்கொரியா இதைக் கருதும் போதிலும், இந்நிலையானது பலமட்ட சர்வதேச அரசியல் நிலைகளினாலேயே சாத்தியமானது எனலாம். ஐ.அமெரிக்க - வடகொரியா மோதலானது, 25 வருட வரலாற்றைக் கொண்டிருந்ததுடன், இது ஐ.அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதிகளான ஜிம்மி காட்டர், பில் கிளின்டன் ஆகியோரின்…
-
- 0 replies
- 627 views
-
-
புளொட்டிடம் உள்ள மாற்று உபாயம் என்ன? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் புளொட்டின் அதாவது டி.பி.எல்.எப் இன் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றிருந்தது. இதன் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த புளொட்டின் தலைவர் சித்தார்த்தன், நல்லாட்சி அரசில் அரசியல் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். இது தன்னுடைய கருத்து மட்டுமல்ல தங்களது அமைப்பின் மத்திய குழுவிலுள்ளவர்களின் நிலைப்பாடும்தான் என்றும் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்னரும் பல்வேறு இடங்களில் பேசுகின்ற போதும் சித்தார்த்தன் மேற்படி கருத்தை தெரிவித்திருக்கிறார். சித்தார்த்தன் அவர் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் சார்பில் புதிய அரசியல் யாப்பு ஒன்றின் உள்ளடக்கம் தொடர்பில் ஆராய்வ…
-
- 1 reply
- 579 views
-
-
முஸ்லிம்களும் அரசியல் சூதாட்டமும்! சஹாப்தீன் முஸ்லிம் கட்சிகள் மற்றுமொரு அரசியல் சூதாட்டத்திற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதாவது, உள்ளூராட்சி சபைகளின் தேர்தலையடுத்து தற்போது மாகாண சபைத் தேர்தலுக்குரிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளன. முஸ்லிம் கட்சிகள் காலத்திற்கு காலம் வரும் தேர்தலை எதிர்கொள்வதற்கானதொரு கருவியாக மட்டுமே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் நடவடிக்கைகளை எடுப்பதில்லை. தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் தேர்தல்…
-
- 0 replies
- 436 views
-
-
இஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா? வேல் தர்மா இஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு ரஷ்யா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது. இஸ்ரேலை எதிர்த்து நின்ற இந்தியா பல துறைகளிலும் அதனுடன் இணைந்து செயற்படுகின்றது. சவூதி அரேபியா உட்பட பல அரபு நாடுகள் இஸ்ரேலுடன் இரகசியமாக ஒத்துழைக்கின்றன. இஸ்ரேலில் தன்னிலும் பார்க்க பல மடங்கு மக்கள் தொகையைக் கொண்ட அயல் நாடுகளுடன் பகையான நாடாக இருக்கின்றது. அவற்றில் நிலங்களை அபகரித்து வைத்திருக்கின்றது. அயல்நாடுகளிலும் பார்க்க இஸ்ரேலில் வித்தியாசமான கலாசாரம், வித்தியாசமான ஆட்சி முறை இருந்தும் இஸ்ர…
-
- 0 replies
- 1k views
-