Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இம்முறை தாயகத்தில் மாவீரர்நாள் ஒரு வெகுசன நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. அரசியல்வாதிகளின் நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. மே பதினெட்டுக்குப்பின் தாயகம் தமிழகம் டயஸ்பொறா ஆகிய மூன்று தரப்புக்களும் ஒரே நாளில் ஒரு விடயத்துக்காக உணர்வுபூர்வமாக ஒன்று திரண்ட மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. தாயகத்தில் அதை ஒரு வெகுசன நிகழ்வாக ஒழுங்குபடுத்திய அரசியல்வாதிகளே அதைத் தங்களுடைய நிகழ்வாகவும் வடிவமைத்திருந்தார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த ஏழாண்டுகாலப் பகுதிக்குள் தமிழ் மக்கள் துணிந்து காலடிகளை முன்வைத்த மற்றொரு நிகழ்வு அது. கடந்த ஏழு ஆண்டுகளில் தாயகத்தில் முதன்முதலாக ஒரு வெகுசன நிகழ்வாக அனுட்டிக்கப்பட்ட மாவீரர் நாள் இது. மாற்றத்தின் விரிவை தமிழ் மக்கள் வ…

  2. எட்டாக்கனியாக மாறும் பாதிக்கப்பட்டோருக்கான நீதி ரொபட் அன்­டனி பொறுப்­புக்­கூறல் பொறி­ முறை என்­பது மிகவும் உணர்­வு­பூர்­வ­மான மற்றும் மிக இல­குவில் தீப்­பற்­ றிக்­கொள்­ளக்­ கூ­டிய விவ­கா­ர­மான ஒரு விடயம் என்­பதை நாம் அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். இந்த விட­யத்தை மிகவும் கவ­ன­மா­கவும் பொறுப் ­பு­ட­னுமே அனைத்து தரப்­பி­னரும் அணு­க­ வேண்டும். இந்த விடயம் தீப்­பற்­றிக்­கொண்டால் அர­சாங்­கத்தின் இருப்­ புக்கே பாத­கத்தை ஏற்­ப ­டுத்தும் என்­பதை புரிந்­ து­கொண்டே இந்த விட ­யத்தை நாங்கள் அணு­க­வேண்டும் "தம்பி.. அர­சி­ய­ல­மைப்பு வரை­பைக்­காட்டி பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டை இல்­லாமல் செய்யும் செயற்­பாட்­டையே முன்­னெ­டுக்­கி­றாங்கள், போற…

  3. மாவீரர் தினமும் வடக்கும் கிழக்கும் அடக்­கு­மு­றை­களும் ஆதிக்க கெடு­பி­டி­களும் எங்கு இறுகிப் போகின்­றதோ அங்­கெல்லாம் முரண்­பா­டு­களும் மோதல்­களும் புரட்சி உணர்­வு­களும் வெடித்து வெளிக்­கி­ளம்­பு­கின்­றன என்­ப­தற்கு வடக்கில் இம்­முறை அமை­தி­யா­கவும் அடக்­க­மா­கவும் நினைவு கொள்­ளப்­பட்ட மாவீரர் தினம் சிறந்த உதா­ர­ண­மாகும். ஆயிரம் ஆயிரம் அக்­கி­னிப்­பந்­து­க­ளாக, எரி நட்­சத்­தி­ரங்­க­ளாக துருவ தார­கை­க­ளாக எமது விடு­தலை வானை அழ­கு­ப­டுத்­திய, இனத்தின் இருப்­புக்­காக இன்­னு­யிர்­களை ஈகம் செய்த மாவீ­ரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த அணி திர­ளுங்கள் என வடக்கின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சிறீ­தரன் மாவீரர் தினத்தை முன்­னிட்டு பாரா­ளு­மன்றில் அ…

  4. நம்­பிக்­கை­ வீணடிக்கப்படுமா? இனப்­பி­ரச்­சி­னைக்கு எத்­த ­கைய தீர்வு காணப்­படும் என்­பது தெளி­வில்லை. ஆயினும், ஒரே கல்லில் இரண்டு மாங்­காய்­ களை வீழ்த்­து­கின்ற தந்­தி­ரோ­ பாய ரீதியில் அர­சாங்கம் செயற் ­பட முற்­பட்­டி­ருக்­கின்­றதோ என்ற சந்­தே­கமும் எழுந்­தி­ருக்­கின்­றது. ஏதோ ஒரு வகையில் - இரா ­ஜ­தந்­திர வியூ­கங்­களின் மூலம் அர­சியல் ரீதி­யாக அழுத்­தங்­ களைப் பிர­யோ­கித்து, தான் விரும்­பு­கின்ற முறையில் ஓர் அர­சியல் தீர்வை வழங்கி இனப் ­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு கண்­டு­ வி­டலாம் என்ற போக்கில் அர­ சாங்கம் செயற்­பட முற்­பட்­டி­ருப் ­பதை உணர முடி­கின்­றது. நாட்டில் உறு­தி­யான அர­சியல் போக்கை ஏற்­ப­டுத்தி சமா­தா­னத்­தையும், ஐக்­கி…

  5. முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய கட்சியான ஶ்ரீலங்கா மக்கள் முன்னணி (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன) இலங்கை அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ள முக்கியமானதொரு கேள்வியாகும். இரு பிரதான அரசியல் கட்சிகளையும் விட்டு கடந்த காலங்களில் வெளியேறி புதிய கட்சிகளை அமைத்துக் கொண்டவர்கள் தங்கள் நோக்கங்களில் வெற்றிபெற முடியாத நிலையில் மீண்டும் தாய்க்கட்சிகளுடனேயே இணைந்து கொண்டதை இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல தடவைகள் கண்டிருக்கின்றோம். இந்த வரலாற்று அனுபவங்களின் தொடர்ச்சியாக ஶ்ரீலங்கா மக்கள் முன்னணிக்கும் அதே கதிதான் நேரும் என்று கூறுவதற்கு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நி…

  6. புது வெளிச்சம்// பாராளுமன்றத்தில் சுமத்திரனின் உரை // கருணாவின் கைது

  7. மாவீரர் நினைவேந்தல்: தெற்குக்கு வழங்கிய செய்தி - கே.சஞ்சயன் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர், வடக்கில் மிகப் பெரியளவில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தன. கடந்த ஆண்டு வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன் 13 பேர் மட்டும்தான் மாவீரர் நாளை அனுஷ்டித்தனர். இந்தமுறை எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைத்தான் பார்த்து விடுவோம் என்று கேலியாகப் பேசிய அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றவர்களும் மாவீரர்களை நினைவுகூர முடியாது; அதற்கு இடமளிக்கப்படாது என்று எச்சரித்த அமைச்சர்களும் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டுள்ளனர். இராணுவ அச்சுறுத்தல்களால் சில ஆண்டுகளாக அடங்கிக்…

  8. காவுகொள்ளப்பட்ட காணிகள் - மொஹமட் பாதுஷா நிலங்களைப் பிடிப்பதும் காணிகளைக் கையகப்படுத்துவதும் உலக சரித்திரத்துக்குப் புதிய விடயமல்ல. நாடுகளைப் போரிட்டுக் கைப்பற்றல், தீவுகளைச் சொந்தமாக்கல், நிலங்களை அபகரித்தல், நிலங்களை ஆக்கிரமித்தல் என உலக சரித்திரத்தின் பெரும் பகுதியானது நிலம் சார்ந்த உரிமையை மையமாக வைத்தே எழுதப்பட்டிருக்கின்றது எனலாம். உண்மையில், காலனித்துவம் என்பதும் ஒரு வகையான நில உடைமைத்துவத்தின் நாகரிகமான பெயர் என்றே குறிப்பிடலாம். இஸ் ரேல் என்றொரு நாடு உருவாகுவதற்குத் தமது பெருநிலப்பரப்பில், ஓர் எல்லையில் இடமளித்த பலஸ்தீன மக்கள் படும் அவஸ்தைகளும், எண்ணெய் வளமுள்ள நிலத்துக்காக, மேற்குலகம் நடத்துகின்ற யுத்த நாடகங்களும் கூட இந்த…

  9.  மைத்திரிக்கு ஸ்ரீ ல.சு.கட்சியை வெற்றி பெறச்செய்ய முடியுமா? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை காட்சிப் பொருளாகப் பாவித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (பொதுசன முன்னணி) என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்ததை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த சனிக்கிழமை அவர் அதற்காக இரண்டு கட்சி அபிவிருத்திக் கூட்டங்களில் கலந்து கொண்டார். இரண்டும் கட்சிக்கு மேலும் அங்கத்தினர்களைச் சேர்த்துக் கொள்வதை நோக்கமாகவே நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை காலையில் அவர் காலியில் நடைபெற்ற கட்ச…

  10. ஃபிடல் காஸ்ட்ரோ: வரலாற்றின் விடுதலை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ வரலாற்றின் வழித்தடத்தில் தவிர்க்கவியலாத தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் வெகுசிலரே. அதிலும் வரலாற்றின் திசைவழியை மாற்றியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் மட்டுமன்றி மாண்புடையோருமாவர். உலகில் ஒடுக்கப்படும் மக்களுக்கான அயராத குரல்கள் எப்போதும் மெச்சத்தக்கன. அவ்வாறான குரல்கள் உலகெங்கும் போராடுவோருக்கு முன்உதாரணமாக, உந்துசக்தியாக இருக்கும். உலகை நேசித்த அக்குரல்கள் காலம்கடந்தும் நிலைக்கும். வரலாறு அவ்வாறான குரல்களை விடுதலை செய்யும். தனது 90 ஆவது வயதில் கியூபப் புரட்சியின் தலைமைத் தளபதியும் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக கியூபாவைத் தலைமையேற்று வழிநடாத்திய…

  11.  ஃபிடல் காஸ்ட்ரோ: நாயகனா, வில்லனா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அரச ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினார்; நிர்வாகக் கட்டமைப்புக்கு எதிராகப் போராடினார்; விழுமியம் நிறைந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முயன்றார்; அவரது மக்களில் பெரும்பான்மையானோரால் போற்றிக் கொண்டாடப்படுகிறார்; மேற்கத்தேய உலகில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் ஒருவராக இருக்கிறார்; மனித உரிமைகளை மீறியதாகக் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன; நவம்பர் 26ஆம் திகதி, வாழ்வில் முக்கியமான நாளாக அமைந்துள்ளது. இவையெல்லாம், நவம்பர் 26ஆம் திகதி பிறந்தநாளைக் கொண்டுள்ள, தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட முயன்ற, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின…

  12. மாவீரர் நினைவேந்தலுக்கான பகிரங்க வெளி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் சற்றுப் பகிரங்கமாகவே இம்முறை நடத்து முடிந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விதையாக வீழ்ந்தவர்களை நினைவுகூருவதற்கான வெளியை இலங்கை அரசாங்கமும் அதன் பாதுகாப்புக் கட்டமைப்பும் கடந்த காலங்களில், குறிப்பாக போருக்குப் பின்னரான கடந்த ஏழு ஆண்டுகளில் அனுமதித்திருக்கவில்லை. இறந்தவர்களை நினைவுகூருவதற்கான மக்களின் கூட்டுரிமையையே மஹிந்த அரசாங்கம் தன்னுடைய கொடுங்கரம் கொண்டு அடக்கியிருந்தது. ஆனால், இம்முறை அந்தக் கரத்தினை முற்றாக விலக்காமல் பிடியின் இறுக்கத்தைச் சற்றுத் தளர்த்தியிருக்கின்றது. (ஆம், அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது.) அதுதான், மக்களைப் பெருவாரி…

  13. மைத்திரியின் அரசும் மாவீரர் தினமும் – செல்வரட்னம் சிறிதரன் சுமார் எட்டு வருடங்களின் பின்னர், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டிருக்கின்றது. இது பலருக்கும் ஆறுதல் அளித்திருக்கின்ற ஒரு முக்கியமான சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது. விடுதலைப்புலிகளினால் பிரகடனப்படுத்தப்பட்டு, மிகவும் முக்கியமான ஒரு தினமாகப் பின்பற்றப்பட்டு வந்த மாவீரர் தினத்தை, அனுட்டிக்கக் கூடாது. கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவுகூரக் கூடாது என்று முன்னைய அரசாங்கம் விடாப்பிடியாக இருந்து வந்தது. இதனால் மாவீரர் தினம் அனுட்டிக்கப்படக்கூடாது என்ற கடு…

  14. தமிழ் மக்கள் அங்­கீக­ரிக்­காத எந்­த­வொரு தீர்­­வையும் ஏற்கோம் கடந்த காலத்­­தைப்போல் ஏமா­ற­வும் மாட்டோம் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை இன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளான ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகி­யோ­ரு­டைய அனு­ச­ர­ணை­யுடன் பெற்றே தீருவோம். எவ்­வகை சூழ்­நி­லை­யிலும் கடந்த காலங்கள் போல் நாம் ஏமா­றப்­போ­வ­து­மில்லை. இதே­வேளை தமிழ் மக்கள் அங்­கீ­க­ரிக்­காத எந்­த­வொரு அர­சியல் தீர்­வையும் நாம் ஏற்­றுக்­கொள்ளப்போவ­து­மில்லை என்­று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன். சம­கால அர­சியல் போக்கு குறித்தும் அர­சியல் தீர்வின் முன்­னேற்றம் குறித்தும் பொது மக்­க­ளுக்கும் புத்­தி­ஜீ­வி­க­ளுக்கும் கட்­சியின் உ…

  15. புதிய அரசியல் யாப்பு தொடர்பான முதலாவது இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கின்ற நிலையில், அது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முன்ரைவிடவும் அதிகரித்திருக்கின்றன. அடுத்த மாதம் 10ஆம் திகதி வெளிவரவுள்ள இரண்டாவது இடைக்கால அறிக்கையுடன் புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கான இடம் என்ன என்பதும் தெட்டத் தெளிவாகிவிடும். கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சித்தார்த்தன் தலைமை வகித்த உப குழுவின் அறிக்கை ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றது. இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே அடுத்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கையில் இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற ஒற்றையாட்சி முறைமை தொடர்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது: “மாகாண சபைகளின் வினைத்திறனான செயற்பாட்டிற்க…

  16. உலக நாடுகளின் பார்வையாளர் தேசம் - பாலஸ்தீனம்! ஐ.நா.வின் சின்னம் நவம்பர் 29-ம் தேதியை ‘பாலஸ்தீன மக்களுக்கு உலக ஆதரவு தினமாக’ ஐ.நா. சபை அறிவித்து அதன்படியே ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. மன்னிக்கவும்; அனுசரிக்கப்படுகிறது. “சரி.. ஏதோ நடக்கப் போகிறது... ஐ.நா.வே சொல்லி விட்டது” என்று பாலஸ்தீனிய மக்களில் சிலருக்கேனும் நம்பிக்கை தோன்றியிருக்கும். பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபை ஒரு சிறப்புக் குழுவை நியமித்தது. 1947 மே மாதம் இக்குழு, தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதன்படி, யூத நாடு - அரபு நாடு என்று இரண்டாகப் பிரித்து, தனி பாலஸ்தீனம் அமைக்கலாம் என்று பரிந்துரைத்தது. …

  17. மாவீரர்களுக்காய் ஒளிர்ந்த நிலம் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்- மாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில் அளித்த ராஜித எத்தனை பேர் விளக்கேற்ற வருகிறார்கள் என்று பார்க்கதானே போகிறோம் என்று நக்கலாகப் பதில் அளித்தார். அதற்குத்தான் நவம்பர் 27 அன்று அலையாக திரண்டு பதில் அளித்துள்ளனர் தமிழ் மக்கள். இதற்கான முதல் எழுச்சியை ஏற்படுத்தியது கிளிநொச்சி துயிலும் இல்லம். இந்த நிலையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு, அங்கு மாவீரர்களுக்கு விளக்கேற்றத் தீர்மானித்த…

  18. சட்­டத்தின் ஆட்­சிக்கு சவா­லாகும் பிக்­கு­மாரின் நடத்­தைகள் இரைச்­ச­லினால் சுற்­றாடல் மாச­டை­வ­தற்கு எதி­ராக தொடுக்­கப்­பட்ட வழக்­கொன்றின் விசா­ர­ணையில் ஆஜ­ரா­கு­மாறு இரா­ஜ­கி­ரி­யவில் உள்ள பௌத்த விகா­ரையின் குரு­வுக்கு உயர் நீதி­மன்றம் அழைப்­பாணை பிறப்­பித்­தி­ருந்­தது. அவர் மன்றில் ஆஜ­ராகத் தவ­றி­ய­தனால் அவ­ருக்கு எதி­ராக பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டது. பிர­தம நீதி­ய­ரசர் தலை­மை­யி­லான உயர்­நீ­தி­மன்ற அமர்­வினால் பிறப்­பிக்­கப்­பட்ட அந்த உத்­த­ர­வை­ய­டுத்து தேரரைக் கைது செய்த இரா­ஜ­கி­ரிய பொலிஸார் விளக்­க­ம­றி­யலில் வைத்­தனர். அவரைப் பிணையில் விடு­விக்­கு­மாறு கோரி பிறகு மனு­வொன்றும் தாக்கல் செய்­யப்­பட்­டது. அந்த பிணை­ம­னுவை பரி­சீ­ல­னைக்கு எடுப்…

  19. ஜனநாயக பண்புகளுக்கு அமைய நாடு ஆளப்பட வேண்டும் 2017ஆம்­ ஆண்­டுக்­கா­ன வ­ர­வு – ­செ­ல­வுத்­திட்­டத்­தின்­ இ­ரண்­டாம் ­வா­சிப்­பு­ மீ­தா­ன­ ஐந்தாம் நாள்­ வி­வா­தத்­தில் ­த­மிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பின் த­லை­வ­ரும்­ எ­திர்க்­கட்­சித்­ த­லை­வ­ரும்­ தி­ரு­கோ­ண­ம­லை மாவட்ட எம்.பி.யுமா­ன ­இ­ரா. ­சம்­பந்­தன்­ ஆற்­றி­ய­ உரை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் பிர­தம மந்­தி­ரியும் கொள்கை திட்­ட­மிடல் மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்­ச­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­தாங்கும் ஐக்­கி­ய­தே­சிய கட்சி ஆகிய இந்த நாட்டின் இரு பிர­தான அர­சியல் கட்­சிகள் இணைந்து நடத்தும் தற்­போ­தைய…

  20. பொது­மக்­களின் காணி­களை மீளவழங்க வேண்­டி­யதன் அவ­சியம் வடக்கு, கிழக்கில் படை­யி­னரின் தேவைக்­கென சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­களின் காணிகள் முற்­று­மு­ழு­தாக விடு­விக்­கப்­ப­ட­வேண்­டு­மென்று தொடர்ந்தும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. யுத்தம் முடி­வ­டைந்து 8 வரு­டங்கள் ஆகப்­போ­கின்ற நிலையில் கூட இன்­னமும் பொது­மக்­களின் காணிகள் படை­யி­னரின் தேவைக்­கென பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றமை ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க செயற்­பாடு அல்ல. பொது­மக்­களின் காணிகள் அதி­பா­து­காப்பு வல­யங்கள் என்ற பெயரில் படை­யி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் அந்­தப்­ப­குதி மக்கள் தொடர்ந்தும் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளா­கவே தங்­கி­யி­ருக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக…

  21. தலை­வர்­க­ளுக்­காக முஸ்லிம் அர­சியல் நலி­வ­டை­கி­றது இலங்கை முஸ்­லிம்கள் தங்­க­ளது அர­சியல் நட­வ­டிக்­கை­களை மீள­மைத்துக் கொள்­ள­வேண்­டிய கட்­டா­யத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளனர் . முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளி­னதும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­னதும் அர­சியல் இலா­பங்­களை மாத்­திரம் கணக்கில் கொண்டே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இத­னால்தான், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கடும்­போக்கு இன­வா­தி­க­ளி­னாலும், அதி­கா­ரத்தில் உள்­ள­வர்­க­ளி­னாலும் மேற்கொள்­ளப்­ப­டு­கின்ற அதி­ரடி நட­வ­டிக்­கை­க­ளையும், பிற­செ­யற்­பா­டு­க­ளையும் தடுத்து நிறுத்­து­வ­தற்கு முடி­யாத அவ­லத்தில் முஸ்லிம் சமூகம் இருக்­கின்­றது. எனவே, முஸ்லிம் தலை­வர்கள் தங்­க­ளது அரசி…

  22. இன்னமும் தொடரும் மாவீரர் நாள் நடுக்கம் இன்று மாவீரர் நாள். ஆயுதப் போராட்­டத்தில் உயிர்­நீத்த, தமது போரா­ளி­களை நினைவு கூரு­வ­தற்­காக விடு­தலைப் புலி­களால் 1989ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதே, இந்த மாவீரர் நாள். பிற்­கா­லத்தில் விடு­தலைப் புலிகள், தம்­முடன் இணைந்து செயற்­ப­டாமல், தமி­ழரின் விடு­தலைப் போராட்­டத்­துக்­காக உயிர்­நீத்த பல­ரையும் மாவீ­ரர்­க­ளாக அங்­கீ­க­ரித்­தி­ருந்­தனர். ரெலோ அமைப்பை ஆரம்­பித்த குட்­டி­மணி, தங்­கத்­துரை, ஜெகன் போன்­ற­வர்­களும், ஈரோஸ் அமைப்பில் இருந்து போராடி உயிர்­நீத்த போரா­ளி­க­ளையும் கூட விடு­தலைப் புலிகள் மாவீ­ரர்­க­ளாக அங்­கீ­க­ரித்­தி­ருந்­தனர். 1989ஆம் ஆண்டு தொடங்கி, விடு­தலைப் ப…

  23. பெரும்பான்மையின வாதம் மஹிந்தவின் புதிய ஆயுதம் அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் பெரும்­பான்­மை­யி­ன­வா­தத்தை முன்­னி­றுத்தி டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்­றியின் தாக்கம், இலங்கை அர­சி­யலில் எதி­ரொ­லிக்கத் தொடங்கி விட்­டது. அண்­மைய நாட்­க­ளாக இலங்­கையில் பெரும்­பான்­மை­யி­ன­வா­தத்தை முன்­னி­றுத்­திய கருத்­துக்­களும், செயற்­பா­டு­களும், தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதைக் காண­மு­டி­கி­றது. கண்­டியில் பொது பல­சேனா நடத்­திய பேர­ணியில் எதி­ரொ­லித்த இன­வாதக் கருத்­துக்­க­ளிலும் சரி, கொழும்பில் முஸ்­லிம்­களின் இரத்­த­ஆறு ஓடும் என்று ஞான­சார தேரர் விடுத்த எச்­ச­ரிக்­கை­யிலும் சரி, சிங்­களப் பேரி­ன­வா­தத்தின் கோர­முகம் தான் பிர­தி­ப­லித்­தத…

  24. கூட்டமைப்புடன் முட்டி மோதிக்கொள்ளும் சுவாமிநாதன் அர­சியல் களத்தில், அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­த­னுக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இடை­யி­லான முரண்­பா­டு­களும், முட்­டுப்­பா­டு­களும் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யுள்­ளன. ஐ.தே.க.வின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டி.எம். சுவா­மி­நாதன், அமைச்­ச­ராகப் பத­வி­யேற்ற பின்னர், வடக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடு­களை அமைக்கும் பாரிய திட்டம் ஒன்றை முன்­வைத்தார். இங்கு தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும், அமைச்சர் சுவா­மி­நா­த­னுக்கும் இடையில் மோதல் உரு­வா­னது. இந்­திய வம்­சா­வளி வர்த்­த­க­ரான லக்ஸ்மி மிட்­டலின், ஆர்­சிலர் மிட்டல் நிறு­வ­னத்­துடன் இணைந்து, 65 ஆயிரம் உலோக…

  25. இரா­ணு­வ ஆட்சி சாத்தியமா? கூட்டு எதி­ர­ணியின் தலை­வ­ரான தினேஸ் குண­வர்த்­தன நாடா­ளு­மன்­றத் தில் இரா­ணுவம் அதி­கா­ரத்தைக் கைப்­பற் றும் வாய்ப்பு இருப்­ப­தாக விடுத்த எச்­ச­ரிக்­கையை அடுத்து. இரா­ணுவ ஆட்­சிக்­கான வாய்ப்­புகள் இருக்­கி­றதா- இல்­லையா என்­பதே அர­சி­யலில் பெரும் விவா­தத்­துக்­கு­ரிய விட­ய­மாக மாறி­யி­ருக்­கி­றது. தெரிந்தோ தெரி­யா­மலோ, தினேஸ் குண­வர்த்­தன இந்த ஆபத்­தான விட­யத்­துக்குள் கால­டியை எடுத்து வைத்து விட்டார். அதனால் தான், கூட்டு எதி­ர­ணியைச் சேர்ந்த எவரும், அவ­ரது கருத்­துக்கு ஆத­ர­வாக வாய் திறக்­காமல் மெள­ன­மாக இருக்­கி­றார்கள். மஹிந்த ராஜபக் ஷவோ, விமல் வீர­வன்­சவோ, உதய கம்­மன்­பி­லவோ, வாசு­தேவ நாண­யக்­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.