அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
காட்டுமிராண்டி பௌத்த துறவிகளின் தொடரும் வன்முறை எதிர்கொள்ளப்பட வேண்டும்! 11/16/2016 இனியொரு... மட்டக்களப்பில் தமிழ்க் கிராம சேவரைத் நடுத்தெருவில் வைத்துத் திட்டித்தீர்த்த காட்டுமிராண்டி பௌத்த பிக்கு தொடர்பான அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. இலங்கை அரசு இன்று பேசிவரும் நல்லிணக்கம் என்ற கருத்தியலின் மீதான நேரடித் தாக்குதல் நடத்தியுள்ள இந்த பௌத்த துறவி தனியாள் இல்லை. இன்றைய இலங்கையின் சிங்கள பௌத்த மனோ நிலையின் மொத்த உருவம் தான் இவர். யாழ்ப்பாணத்தில் இரண்டு மாணவர்களைக் கொலை செய்வதற்கான துணிவை வழங்கியதும், பௌத்த துறவியை பொலிஸ் முன்னிலையில் பேச வைத்ததும் சிங்கள பௌத்த மேலாதிக்க உளவியல் தான். ஆக, இப் பௌத்த துறவி நல்லிணக்கம் என்று இலங்கை அரசு கூறும் அழகான வார்த்தை சிங்கள…
-
- 0 replies
- 557 views
-
-
எதற்காக இந்த முஸ்லிம் தனியார் சட்டச் சர்ச்சை? இலங்கைக்கு 2010 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை உயர்த்தும் வகையில் அச்சட்டத்தைத் திருத்த வேண்டும் என அமைச்சர் சாகல ரத்னாயக்க கூறியதாகச் சில ஊடகங்கள் கூறியிருக்கின்றன. முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை உயர்த்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டுமா, இல்லையா? என்பது வேறு விடயம். ஆனால், வரிச் சலுகையைப் பெறுவதற்காக இந்தச் சட்டத்தையோ அல்லது நாட்டில் மற்றொரு சட்டத்தையோ திருத்த வேண்டும் எ…
-
- 0 replies
- 522 views
-
-
கூட்டமைப்பை நோக்கி கூச்சல் எழுப்ப வேண்டிய தருணம் இதுவல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் மீண்டும் ஏமாற்றத்தைச் சந்தித்து நிற்கின்றன. கானல் வெளியை பெரும் நம்பிக்கையாகக் கொண்டு வியர்க்க விறுவிறுக்க நடந்தவர்கள் கொள்ளும் எரிச்சலுக்கு ஒப்பானது அந்த ஏமாற்றம். விளைவு, காட்டுக் கூச்சல்கள் எழுப்பப்படுகின்றன. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு மிகவும் அவசியமானதும் ஆரோக்கியமானதுமான கருத்துகளையும் விமர்சனங்களையும் வேண்டி நிற்கின்ற தருணத்திலேயே, இந்தக் கூச்சல்கள் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. தமிழ் மக்கள் காலம் காலமாக எதிர்நோக்கி வரும் அரசியல் பிரச்சினைகளுக்குப் பெறுமதியான (கனதியான) தீர்வினைப் புதிய அரசியலமை…
-
- 0 replies
- 388 views
-
-
அதிபராகும் ஹிலாரியின் கனவு கலைந்தது எப்படி?
-
- 0 replies
- 479 views
-
-
அமெரிக்க மக்களின் தீர்ப்பு குறித்து எம்மவர்கள் ஆளமாக பதட்டப்படுவதும் அமெரிக்க மக்களை ஏதோ வேற்று கிரகவாசிகள் போன்று தள்ளி நிற்பதும் தெரிகிறது. அமெரிக்க மக்களின் அரசியல்வாதிகள் மீதான விசவாசத்தின் கடைசி பின்னகர்தல் கறுப்பு இனத்தவரை இருமுறை ஐனாதிபதியாக்கியது என்பதை அரசியல்வாதிகள் உணராததன் வெடிப்பே இது. இது அடுத்த வருடம் பிரான்சிலும் எதிர்பார்க்கலாம். இரண்டாவது சுற்றுக்கே தேவையேற்படாமலும் போகலாம். எம்மவரின் பதட்டம் புரிந்து கொள்ளக்கூடியதே. அடுத்தவரின் நிழலில் வாழத்தலைப்படும் இனத்தின் தளம்பல்நிலை இது. தனக்கென்று ஒரு நிலமில்லாத இனத்தில் 10 வீதம் மக்களே ஒரு இனத்தின் விடுதலைக்கு பங்காளிகளாக வரக்கூடிய ஒரு இனத்தில் இதைவி…
-
- 16 replies
- 1.3k views
-
-
நல்லிணக்க செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார். நல்லாட்சி அரசாங்கமானது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்துவருகின்ற போதிலும் அதனை குழப்பும் வகையிலான செயற்பாடுகளில் இனவாத சக்திகள் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றன. அரசாங்கமானது அரசியலமைப்பை மாற்றியமைத்து பிரச்சி னைக்கு தீர்வுகாண்பதற்கான முன்முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஆனால் இந்த முயற்சிகளைக் கூட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையி…
-
- 0 replies
- 211 views
-
-
அபாய சங்கு முகம்மது தம்பி மரைக்கார் மாயக்கல்லி மலை ‘விவகாரம்’ அநேகமானோருக்கு மறந்துபோகும் நிலைக்கு வந்து விட்டது. மக்களும் ஊடகங்களும் அதுபற்றிப் பேசாமலிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகளின் அவாவாகவும் உள்ளது. எங்கோ ஒரு மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையொன்றினை முன்னிறுத்தி, ஆட்சியாளர்களுடன் முட்டி மோதுவதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பௌத்தர்கள் யாருமில்லாத தமது பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதை, அங்குள்ள மக்கள்தான் பிரச்சினையாகப் பார்க்கின்றார்கள். ஆனால், அதிகாரத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு, அதுகுறித்து அக்கறைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. …
-
- 1 reply
- 495 views
-
-
விடிவு வராது: இப்போதைக்கு ‘வீடியோ’தான் தெய்வீகன் மட்டக்களப்பில் கிராம சேகவர் ஒருவருக்கு எதிராக பௌத்த பிக்கு ஒருவர் மேற்கொண்ட வெறித்தனமான - இனவாத தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்று, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களில் பரவலாக உலாவுகிறது. “தமிழர்கள் எல்லோரும் புலிகள்தான்; உங்கள் எல்லோரையும் கொன்றொழிப்பேன்” என்று அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துக் குழறும் அந்த மதகுருவின் பேச்சுக்கு எந்த மறுபேச்சும் இல்லாமல் அந்தக் கிராமசேவகர் சிலைபோல நிற்கிறார். தொடர்ந்தும் தனது குரூரமான முகபாவங்களால் திரட்டிய பல கெட்டவார்த்தைகளை அந்தக் கிராம சேவகரின் மீது கொட்டித்தீர்க்கிறார் அந்தப் பிக்கு. அந்தக் கிராமசேவகர் எந்தப் பதிலும்…
-
- 0 replies
- 306 views
-
-
வடகிழக்கில் அரசின் 100 விகாரைகள்! தமிழர் கலாசார மரபுரிமை அழிப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் காலத்தில்தான் அறிமுகமானது. ஈழத் தமிழ் மக்கள்மீது மிகக் கொடிய இனப்படுகொலை போரை நடாத்திவிட்டு அந்தப் போரரையே நல்லிணக்கத்திற்காக நடத்தியதாக கூறியவர் மகிந்த ராஜபக்ச. அத்துடன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழ் நிலத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்களையும் சிங்களக் குடியேற்றங்களையும் தமிழர் கலாசார உரிமை மீறல்களையும் தீவிரவாக முன்னெடுத்தபோது அதற்கு நல்லிணக்க நடவடிக்கை என்றே பெயர் சூட்டினார் மகிந்த ராஜபக்ச. உலகில் மனிதாபிமானத்திற்காக, இனப்படுகொலை போர்…
-
- 0 replies
- 706 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் அதிர்ச்சி தரும் முடிவும் அவர் கோடீஸ்வர வர்த்தகர். ரியல் எஸ்டேட் துறையில் பெரும் உடமைகளுக்கு சொந்தக்காரர். ஒரு கட்டத்தில் தொலைக்காட்சியின் மீது அவரது கவனம் குவிகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அரசியல் பற்றிப் பேசுகிறார். அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்த கறுப்பின மனிதரை சாடுகிறார். அந்த இளைஞன் அமெரிக்காவில் பிறக்கவில்லை. அமெரிக்கப் பிறப்புச் சான்றிதழ் இல்லாதவன் அந்நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறான் என்றால், அதனை விடவும் மோசடி இருக்க முடியாது என்கிறார். அடுத்து, அந்தக் கறுப்பின மனிதரான அமெரிக்க ஜனாதிபதியின் முறை. பத்திரிகை…
-
- 4 replies
- 836 views
-
-
ஆவா குழு விவகாரம் தொடர்பிலான சர்ச்சை யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் வன்முறைகளில் ஈடுபட்டுவரும் ஆவா குழு தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நிலவி வருகின்றது. இந்தக் குழுவை யார் உருவாக்கினார்கள். அதன் நோக்கம் என்ன, அதன் பின்னணி என்ன என்ற விடயங்களில் தொடர்ந்தும் முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. வடக்கில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஆவா குழுவானது கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய ஒரு சில மேஜர்தர அதிகாரிகளினால் உருவாக்கப்பட்டதாகும். இதன் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய …
-
- 0 replies
- 338 views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ; முடிவுகள் சொல்லும் செய்திகள் சில மாதங்களுக்கு முன்பு வரை கொழும்பில் பணியாற்றிய இந்தியாவின் பிரபல ஆங்கிலத் தினசரியொன்றின் செய்தியாளரான நண்பர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முதல்நாளான கடந்த திங்கட்கிழமை முகநூலில் பதிவொன்றைச் செய்திருந்தார். ‘அபிப்பிராய வாக்கெடுப்புகள் பலவற்றில் டொனால்ட் ட்ரம்பை விடவும் ஹிலாரி கிளின்டனே முன்னணியில் நிற்பதாகத் தோன்றினாலும் மக்கள் செல்வாக்கில் இருவருக்கும் இடையிலான வெளி குறுகிக்கொண்டே வருகின்றது. 1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களின் முடிவுகளை ஆராய்ந்து பார்த்தால், ஹிலாரி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்…
-
- 0 replies
- 476 views
-
-
ஹிலாரிக்காக தேங்காய் உடைக்கிறார் சிவாஜிலிங்கம் என்றவுடன் பொங்கி எழுந்தார்கள் பலரும். அரைவேக்காடு இப்படித்தான் பலதும் செய்யும் என்றார்கள். இப்ப நம்ம சுமேந்திரனே இப்படிச்சொல்கிறார். ”ட்ரம்பின்” வெற்றி இலங்கை மீதான அமெரிக்க அழுத்தத்தை குறைக்கும். ஆனால் நாம் சமாளிப்போம் -#சுமந்திரன் அப்போ சிவாஜிலிங்கம் தேங்காய் உடைத்தது தமிழர் நன்மை கருதித்தானே? ஒருவன் செய்வது எல்லாம் தப்பு என்று நாம ஒரு முடிவை எடுத்து வைத்துக்கொண்டு அவர் செய்வது அனைத்தையும் அதே கண்ணோட்டத்தோடு பார்க்கப்படாது கண்டியளோ...
-
- 5 replies
- 648 views
-
-
ட்ரம்பின் குரல் எப்படி பெரும்பான்மை அமெரிக்கர்களின் குரலானது? அமெரிக்கர்களில் மூன்றில் ஒருவர் கடன்காரர், 18 வயதை எட்டும் கல்லூரி மாணவர்களில் 70% பேர் கடனாளிகள் “கோர்பச்சேவ், கதவைத் திறங்கள்; கோர்பச்சேவ், இந்தச் சுவரை இடித்துத் தள்ளுங்கள்” - அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன், அப்போது மேற்கு பெர்லின் என்று அழைக்கப்பட்ட நகரில் பேசியது, 12.06.1987. “மிகச் சிறந்த, பெரிய, அழகிய நாளை (எதிர்காலம்) நமதே” ஃப்ளோரிடா மாநிலத்தின் ஆர்லாண்டோ நகரில் உள்ள வால்ட் டிஸ்னி கேளிக்கை நகரில் 1964 முதல் நாளது வரை பாடப்படும் நிகழ்ச்சியின் தொடக்கப் பாடல். “எதிர்காலம் என்பது, கடந்த காலத்தைப் போல இருக்காது” - ஓஹியோ கிராமப் பக…
-
- 0 replies
- 561 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து வரவு –- செலவுத்திட்டத்தின் கரிசனை என்ன? போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சலுகை அளிக்கப்படவில்லை. போரினால் நிர்க்கதியான மக்கள் தேசிய ரீதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு உள்ளேயே உள்வாங்கப்படுகின்றனர். இதனை நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு–செலவுத்திட்டமும் வெளிப்படுத்தியுள்ளது. காரணம், போரினால் பாதிக்கப்பட்ட மக்களை விசேடமாகப் போசிப்பதற்கான ஏற்பாடுகளை வெளிப்படையாக வரவு–செலவுத்திட்டத்தில் சுட்டிக்காட்ட முடியவில்லை. போர் முடிவடைந்து தற்போது ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் வடக்குக் கிழக்கில் யுத்தத்தின் அவலங்கள் நிறைவடைந்தே…
-
- 0 replies
- 432 views
-
-
புத்தர் சிலைக்கு பின்னாலுள்ள அரசியல் ஊருக்குள் பெரிய ஆஜானபாகுவான ஆட்களாக தம்மைக் காட்டிக் கொள்ளும் ‘மைனர்கள்’, வெளியூருக்கு சென்று அவமானப்பட்டு வருவார்கள். ஊர் எல்லைக்குள் வந்ததும், மீண்டும் வீரமும் தற்பெருமையும் பேசத் தொடங்கி விடுவார்கள். தனது உடம்பில் இருப்பது அடிபட்ட காயமல்ல, மாறாக வெளியூர் சண்டியனுக்கு அடித்தபோது ஏற்பட்ட கீறல்கள் என்பது போலிருக்கும் அவர்களது பேச்சுக்கள்! அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசமான மாணிக்கமடுவில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயம் கடந்த இரு வாரங்களாக சர்ச்சைகளையும் வார்த்தை மோதல்களையும் எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்தி இருக்கின்றது. …
-
- 0 replies
- 797 views
-
-
சர்ச்சையைக் கிளறிய சீனத்தூதுவர் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் முக்கியமானதொரு கட்டத்தை அடைந்திருக்கின்ற நிலையில், இருதரப்பு இராஜதந்திர உறவுகளில் மீண்டும் ஒரு நெருடல் ஏற்பட்டிருக்கின்றது. சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் கடந்த முதலாம் திகதி கொழும்பில் ஊடகவியலாளர்கள் குழுவொன்றுடன் நடத்திய சந்திப்பில் வெளியிட்ட கருத்துக்களே இந்த நிலைமைக்கு முக்கியமான காரணமாகும். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சீனத் தூதுவர் அளித்திருந்த பதில்கள், சீனாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு அப்பால் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் தொனியையும், கேள்வி எழ…
-
- 0 replies
- 465 views
-
-
முஸ்லிம்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ள நல்லாட்சி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் இனவாதிகளினால் பல நெருக்கடிகளை எதிர் கொண்டார்கள். பல இடங்களில் தாக்கப்பட்டார்கள். இதனை அன்றைய அரசாங்கம் பாராமுகமாக இருந்தது. ஆளு் தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து அறிக்கைகளை விடுத்தார்களேயன்றி, அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு வலுவற்றவர்களாகவே இருந்தார்கள். இந்நிலையில் ஆட்சி மாற்றம்தான் முஸ்லிம்களை பாதுகாத்துக் கொள்வதற்கு சிறந்த வழி என்ற முடிவுக்கு முஸ்லிம்கள் வந்தார்கள். ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் சுயமாகவே மஹிந்த ராஜபக்…
-
- 0 replies
- 409 views
-
-
ட்ரம்பின் வெற்றி யாருக்கு சாதகம்? அமெரிக்காவில் கடந்தவாரம் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவு உலகம் முழுவதற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹிலாரி கிளின்டனே வெற்றி பெறுவார் என்று ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்டு வந்த நம்பிக்கையையும், கடைசி வரையில் அதையே கூறிக் கொண்டிருந்த பெரும்பாலான ஊடகங்களினது கருத்துக்கணிப்புகளையும் அடித்து நொருக்கிக் கொண்டு வெற்றியைப் பெற்றிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். தேர்தல் பிரசாரங்களின் போது, பலசமயங்களில் கோமாளித்தனமான பிரசாரங்களை மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் அவர். ஆனாலும், அவரது தீவிரமான கருத்துகள்- பெரும்பான்மையான வ…
-
- 0 replies
- 417 views
-
-
தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர் கொள்வது – நிலாந்தன் புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்டால் பெரும்பாலும் வரும் ஆண்டில் மாகாண சபைகள் கலைக்கப்படக்கூடும். அதன்பின் புதிய அதிகார கட்டமைப்பிற்கான ஒரு தேர்தல் நடைபெறக் கூடும். அத் தேர்தலில் விக்கினேஸ்வரனுக்கு தமிழரசுக்கட்சி இடம் கொடுக்காது. என்பது ஒரு பரவலான ஊகம். விக்னேஸ்வரனும் அப்படித்தான் நம்புவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அண்மையில் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு பேட்டியில் கருத்துத் தெரிவித்திருந்தார். இவ்வாறான ஒரு பின்னணியில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு விழாவில் விக்னேஸ்வரன் சி…
-
- 0 replies
- 327 views
-
-
மாற்றம் வேண்டும் -செல்வரட்னம் சிறிதரன் இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள நிபந்தனை முஸ்லிம் தனியார் சட்டத்துடன் தொடர்புபட்டுள்ள முஸ்லிம் பெண்களின் மனித உரிமை குறித்து பரவலான விவாதங்களைக் கிளப்பிவிட்டிருக்கின்றது. ஜிஎஸ்பி வரிச்சலுகைகளைப் பெறுவதாக இருந்தால், இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ள ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான சாசனங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்திருக்கின்றது. இதில் குறிப்பாக பெண்களுக்கான சர்வதேச திருமண வயதெல்லை பெண்க…
-
- 0 replies
- 392 views
-
-
சிறிலங்காவின் அரசியல் வரலாற்றின் பிரகாரம், சீனா மற்றும் சிறிலங்காவின் உறவு மிகவும் நெருக்கமானதாகக் காணப்படுகிறது. எனினும், 1952-2014 வரையான ஆறு பத்தாண்டு கால சீன-சிறிலங்கா உறவு நிலையானது மேலும் நெருக்கமானதாகக் காணப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அண்மையில் சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் மற்றும் சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு இடையிலான சூடான வார்த்தைப் பிரயோகங்கள் இந்த உறவில் மேலும் சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் ராஜபக்சவின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா மீது சீனா அதீத செல்வாக்கைச் செலுத்தியிருந்தது. இதன் காரணமாக தற்போதைய அரசாங்கமா…
-
- 0 replies
- 342 views
-
-
டொனால்ட் ட்ரம்ப் எதிர்கொண்டுள்ள சவால்கள் உலகத்தில் மிகவும் பலம்வாய்ந்த நாடாகக் கருதப்படும் அமெரிக்க வல்லரசின் 45 ஆவது ஜனாதிபதியாக குடியரசுக்கட்சியின் டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். இவருக்கு எதிராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார். அதாவது முழு உலகையும் வியப்பில் ஆழ்த்திய வண்ணமே டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதுடன் அடுத்த நான்கு வருடங்களுக்கு உலக வல்லரசு நாட்டை ஆளும் சந்தர்ப்பத்தை தனதாக்கிக்கொண்டுள்ளார். இந்தத் தேர்தலில் ஜனநாயகக்…
-
- 1 reply
- 732 views
-
-
இலங்கை நாட்டிலே இழைக்கப்பட்ட அட்டூழிங்கள் குற்றச்செயல்களையிட்டு நடந்து முடிந்துவிட்ட சம்பவங்களின் விளைவாக அர்த்தமுள்ள வழக்குகளை நடாத்துவதற்கு வழிவகுக்கும் விதத்திலே, இலங்கைச் சட்டத்துக்குள் சர்வதேசக் குற்றச்செயல்களும் உள்ளடக்கப்படவேண்டும் என நானும் எலியானோர் வெர்மன்ட் என்பவரும் (Eleanor Vermunt) அண்மையிலே பதிப்பிக்கப்பெற்ற கட்டுரையொன்றிலே வாதித்திருந்தோம். ஆயுதப்போர் முடிவுக்கு வந்ததுதொட்டு, சர்வதேச மனிதநேயச் சட்டங்களின் மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் மீறல்கள் ஆகியவைகள் தொடர்பாகப் பல்வேறு உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகப்பற்றற்ற குற்றச்சாட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பல ஐ.நா. அறிக்கைகளின்படி இந்தக் குற்றச்சாட்டுகள் – அவை நிரூபிக்கப்படும் பட்சத்திலே…
-
- 0 replies
- 345 views
-
-
எம்மை நாமே பரிபாலித்து வர அரசியல் யாப்பு இடமளிக்க வேண்டும் கடந்த கால கொடிய யுத்தத்தின் காரணமாக இருப்பை, பொருள் பண்டங்களை, வீடு, காணி, நீர் நிலைகள் என அனைத்தையும் எம் மக்களுள் பலர் இழந்துள்ளார்கள். தத்தமது கணவன், மனைவி, பிள்ளைகள் ஆகியவர்களை பறிகொடுத்தவர்கள் பலர். உடல் அங்கவீனம் அடைந்தவர்கள் பலர். பலதரப்பட்ட கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் மீண்டும் தமது இருப்பிடங்களில் குடியேறி வாழ்வதற்குரிய அடிப்படை உதவிகள் ஏதும் அற்ற நிலையில் மிகவும் அல்லலுறுவதை நாம் நன்கு அறிந்துள்ளோம். இம் மக்களுக்கு வடமாகாண சபையின் நிதியில் இருந்து சிறிய உதவிகளையாவது வழங்க நாம் முன்வந்தாலும் எமது சிறிய…
-
- 0 replies
- 389 views
-