அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
தடம்மாறுகின்றதா நல்லாட்சி அரசாங்கம்? செல்வரட்னம் சிறிதரன் இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் கிள்ளுக்கீரையாகவே கருதப்படுகின்றார்கள். அது மட்டுமல்ல. அவர்கள் பெரும்பான்மை இன மக்களின் தயவில் வாழ வேண்டிய நிலையில், இரண்டாந்தரப் பிரஜைகளாக்கப்பட்டுள்ளார்கள். அந்நியராகிய ஆங்கிலேயரிடமிருந்து நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதலாக, படிப்படியாக, இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தச் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதையே இப்போதும் காணக் கூடியதாக இருக்கின்றது. பல இனங்களைச் சேர்ந்த மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள். பல மதங்களை அவர் கள் பின்பற்றி வருகின்றார்கள். இந்த நாட்…
-
- 0 replies
- 347 views
-
-
வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா சம்பந்தன்? 'கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, 2016 ஆம் ஆண்டு முடிவுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வழங்கியிருந்தார். இரா.சம்பந்தன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு முடிவதற்கு இன்னமும் இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல்க் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை இரா.சம்பந்தன், பின்னரும் அவ்வப்போது நினைவுபடுத்தியிருந்தார். அந்த வாக்குறுதியை அவரால் நிறைவேற்ற முடியாது என்பது முன்னரே ஊகிக்கக்கூடிய விடயம்தான். ஏனென்றால், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் ஒரு பிரச்சி…
-
- 0 replies
- 501 views
-
-
அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்களின் இன்றைய நிலைப்பாடு என்ன? எந்தவொரு தேசியப் பிரச்சினை தொடர்பிலும் நிலைப்பாடொன்றை எடுப்பதற்கான சகல உரிமைகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்கு இருக்கிறது. தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு விவகாரத்திலும் தீர்மானத்தை எடுப்பதற்கான விசேட பொறுப்பையும் உரிமையையும் கூட அவர்கள் கொண்டிருக்கிறார்கள். மாறுகின்ற நிலைவரங்களுக்கும் பின்புலங்களுக்கும் ஏற்ற முறையில் தங்களது நிலைப்பாட்டை மாற்றுவதற்கு அல்லது திருத்தம் செய்வதற்கும் அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், எந்தவொரு பிரச்சினையிலும் தங்களது புத…
-
- 0 replies
- 410 views
-
-
தாய்லாந்து: முடியாட்சிகளின் எதிர்காலம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ முடியாட்சிகள் என்றென்றைக்கும் உரியனவல்ல; அவை காலம்கடந்து நிலைப்பதில்லை. அவற்றின் பெறுமதி அப்பதவிகளின் அலங்கார நோக்கத்துக்காகவன்றி அதிகாரத்தின் பாற்பட்டதன்று. காலம் அதன் போக்கில் எழுதிச் செல்லும் கதையில் இறந்த காலத்துக்குரியதாய் முடியாட்சிகளை மெதுமெதுவாய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. உலகின் மிக நீண்டகாலம் ஆட்சி செய்த அரசர் என்ற பெருமையைத் தன்வசம் வைத்திருந்த தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபோல் அடுல்யடேஜ் கடந்தவாரம் மரணமடைந்தார். 70 ஆண்டுகளாகத் தாய்லாந்தின் மன்னராக இருந்த இவரின் ஆட்சிக்காலத்தில் அந்நாடு பாரிய மாற்றங்களைக் கண்டது. அம்மாற்றங்களின் விளைவால் தாய்லாந்து மக்களின் …
-
- 0 replies
- 545 views
-
-
நல்லாட்சியில் ஓட்டை விழுந்து விட்டதா? மைத்திரிபால சிறிசேன 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, ஒன்றரை ஆண்டுகளில் அரசியல்த் தூய்மைக்கும் ஊழலுக்கும் எதிராகத் தமக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டிருந்தார் என்றால் ஒரே ஒரு உரையின் மூலம் அவரே, அந்த பெயரில் 90 சத வீதத்தைக் களங்கப்படுத்திக் கொண்டார் போல்தான் தெரிகிறது. ஊழலை ஒழித்து, ஊழலற்ற ஜனநாயக நாடொன்றை உருவாக்குவதாகத் தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பெரும் கோஷத்தை எழுப்பினர்; நல்லாட்சியே அவர்களது பிரதான கோஷமாக இருந்தது. எனவேதான், தற்போதைய அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் என அழைக்கப்பட்…
-
- 1 reply
- 290 views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுகிறதா? வலுவடைகிறதா? செல்வரட்னம் சிறிதரன் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பட்டவர்களினாலும் வலுவாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆயினும் அந்தக் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. யுத்த மோதல்கள் முடிவடைந்து ஏழரை வருடங்களாகின்ற நிலையிலேயே, பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாகப் புதிய சட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அரச படைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்காக, ஜன…
-
- 0 replies
- 366 views
-
-
இலங்கை ராணுவத்தின் போர்க் கொள்ளை! அஜித் போயகொட அழிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டால், கண்ணில் படும் அனைத்தையும் நாசப்படுத்த வேண்டும் எனும் உள்ளுணர்வு உருவாகிவிடும்போலும்! என்னுடைய ராணுவ வாழ்க்கையின் போக்கைத் தீர்மானித்த மிக முக்கியமான தருணம் அது. வடக்குத் தீவுகளில் உள்ள காரைநகரில், 1991-ல் நாங்கள் நடத்திய ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து நடந்த சம்பவம். நோய்வாய்ப்பட்ட, பலவீனமான மக்களை எதிர்கொள்ளும்போது போரின் பாதிப்புகளை உங்களால் உணர முடியும். கடைசியாக எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடக்குப் பகுதியில் பணிபுரிந்த நான், அந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்துக்கு மாறுதலுக்காகக் காத்திருந்தேன். காரைநகரின் கடற்…
-
- 0 replies
- 553 views
-
-
சர்வதேச அரசியற் கட்டமைப்பிலே மிகவும் சிறியதாகவும் தற்காப்பு பலம் குறைந்ததாகவும் இருக்கும் ஒரு நாடு, மிகஇலகுவாக அடிபட்டு போகக்கூடிய நிலையை கொண்டதாக உள்ளது. பலங்குறைந்த நாடுகளை பலம் பெற்ற நாடுகள் தமது அணுகூலங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும் நிலையே தற்போதைய அடாவடி உலகின் பண்பாகும். சர்வதேச அரசியற்கட்டமைப்பு என்பது அடாவடித்தனம் கொண்டது. எல்லா அரசுகளையும் கட்டுப்படுத்தக் கூடிய சட்ட விதிமுறைகளோ அல்லது பலம் வாய்ந்த உலக அரசுகளுக்கான கட்டமைப்போ என எதுவும் இல்லாத உலகில் அடாவடித்தனம் கொண்ட சர்வதேச கட்டமைப்பே நடைமுறையில் உள்ளது. உலகின் காவல்காரன் என்று எவரும் இல்லாத நிலை என்பது பலம் இல்லாதவன் அடிபட்டு போகவும் பலம் கொண்டவன் வாழ்வு பெறவும் வாய்ப்பளிக்கிறது. தற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வீழ்கிறார் ட்ரம்ப்? அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்க நெருங்க தனது நடவடிக்கைகள் மூலமே ஆதரவை இழந்துவருகிறார் ட்ரம்ப் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் அமெரிக்க அதிபர் தேர்தல், இந்த வருடம் நவம்பர் 8 அன்று வரவிருக்கிறது. அமெரிக்காவில் கோடை முடிந்து இலையுதிர் காலம் தொடங்கி, குளிர் சற்றே தலைகாட்டத் தொடங்கிவிட்டது. ஆனால், தேர்தல் சூட்டில் நாடே தகிக்கிறது. ட்ரம்ப் - ஹிலாரி. அமெரிக்காவின் இரண்டு முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள். தத்தமது கட்சிக்குள் ஏனைய போட்டியாளர்களைப் பின்தள்ளி மேலே வர இருவருமே கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. ஹிலாரிக்குக் கடும் போட்டியாக இருந்த பெர்னி சாண்டர்ஸ், இப்போது அவருக்குத் துணையாக பிரச…
-
- 0 replies
- 536 views
-
-
தமிழருக்கு சிவசேனை பெரும் சோதனையா? ப.தெய்வீகன் ஈழத்தமிழர் தாயகத்தில், இந்தியாவின் அதிதீவிர வலதுசாரிக் கட்சியும் மதவாத அமைப்புமான ‘சிவசேனா’ கால் பதித்திருப்பது தொடர்பான அகோரமான எதிர்ப்புக்கள் அனைத்துத் தரப்பிலும் முன்வைக்கப்பட்டாயிற்று. இந்த அமைப்பின் வருகையின் பின்னணி என்ன? அமைப்பை ஆரம்பித்திருப்பவர் யார்? இதனால் ஏற்படப்போகும் தாக்கங்கள் என்ன? போன்ற ‘மயிர் பிளக்கும்’ வாதங்கள் சமூக வலைத்தளங்களில் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் திட்டமிட்ட காலக்கணிப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையை ஈழத்தமிழர்கள் எதிர்க்க வேண்டும்; எதிர்த்துக் களமாட வேண்டும் என்று ஆளுக…
-
- 1 reply
- 700 views
-
-
மக்களுக்கும் தலைமைக்குமான இடைவெளி அதிகமாகிறதா? பதில் தருகிறார்... சரவணபவன் பா.உ
-
- 1 reply
- 530 views
-
-
எதிர் முனைப்பட்ட அணி திரட்டல்களும் புதிய கட்சிகளின் தோற்றத்துக்கான வாய்ப்புகளும் இலங்கையில் தெற்கிலும் வடக்கிலும் மக்களை அணி திரட்டும் இரு வெவ்வேறு அரசியல் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இரு அணித்திரட்டல்களுமே முற்றிலும் முரண்பட்ட நோக்கங்களைத் கொண்டிருக்கின்ற அதேவேளை, ஒன்றை மற்றையது பரஸ்பரம் வசதிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. அத்துடன் இந்த எதிர்முனைப்பட்ட இரு செயற்பாடுகளுமே இறுதியில் புதிய அரசியல் கட்சிகளை அல்லது புதிய அரசியல் அணிகளைத் தோற்றுவிக்கக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றன என்றும் கூறலாம். தென்னிலங்கையில்…
-
- 0 replies
- 305 views
-
-
இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழரின் தலைவிதியை மீட்டெடுக்க வேண்டுமென்றால் இந்துசமுத்திர அரசியல் பற்றி ஆழமாகவும், விரிவாகவும், தெளிவாகவும் ஆராய்ந்து அறிய வேண்டியது அவசியம். 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முள்ளிவாய்க்கால் பேரழிவோடு இந்துசமுத்திரம் ஈழத் தமிழரின் இரத்தத்தால் சிவந்து அது வல்லரசுகளுக்கு உரம்பாய்ச்சும் ஒன்றாய் காணப்படுகிறது. கோடிக்கணக்கான ஆண்டுகாலங்களாக கடற்பிராணிகளின் சமுத்திரமாக விளங்கும் இந்துசமுத்திரம் கிபி 10ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழப்பேரரசின் எழுச்சியோடு அரசியல் சமுத்திரமாக மாறியது. சோழப்பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அராபியரின் கை இந்து சமுத்திரத்தில் ஓங்கியதுடன் 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீன…
-
- 1 reply
- 621 views
-
-
ஒரு சகாப்தத்தின் முற்றுப்புள்ளி : கேள்விக்குறியாகும் தாய்லாந்தின் எதிர்காலம் சர்வதேச விவகாரம் தாய்லாந்து மன்னர் பூமிபோல் அத்துல்யாதெவ் மரணித்து விட்டார். ஏழு தசாப்த காலம் அரியணையில் அமர்ந்திருந்த சகாப்தத்தின் முற்றுப்புள்ளி, ஒரு தேசத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறிக்கு ஆளாகியிருக்கிறது. தமது குடிகளால் தெய்வீகக் குணாம்சம் பொருந்தியவராக மதிக்கப்படும் மாமனிதர். மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் செல்வாக்கை வளர்த்துக் கொண்டு தாய்லாந்து தேசத்தை ஒருமுகப்படுத்தி வைத்த தலைவர் என்ற பெருமைகள் ஏராளம். பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்து, தாய்லாந்தை நடுத்தர அளவிலான வருமானம் ஈட…
-
- 0 replies
- 473 views
-
-
புதிய அரசியல் சாசனம் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா? தேர்தல் மறுசீரமைப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது பற்றி பல்வேறு ஊகங்களும் கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புதிய அரசியல்யாப்பின் மூலம் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தரப்பினரும் பல்வேறு அழுத்தங்களை அரசுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதேவேளை, புதிய அரசியல் சாசனத்தின் மூலம் சிறுபான்மை மக்களின் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காணப்படுமென அரசாங்கம் உறுதியாக இருப்பதுடன் வாக்குறுதிகளையும் வழங்கி வ…
-
- 0 replies
- 330 views
-
-
தமிழ் - முஸ்லிம் உறவும் வடக்கு, கிழக்கு இணைப்பும் ஒரு பிள்ளை அழத் தொடங்கிய பிறகுதான், அந்தப் பிள்ளையின் தாய்க்கு அக்குழந்தை ஏதோ ஒரு தேவையுடன் இருக்கின்றது என்பது புரிகின்றது. பிள்ளைக்கு இப்போதைக்கு எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த தாய், புதிதாக தேவையொன்று உருவாகி இருப்பதை உணர்வாள். “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்பார். சில பிள்ளைகள் சொல்லும் அல்லது அதற்கான சைகையை காட்டும். வேறு சில பிள்ளைகள் கடைசிமட்டும் என்னவென்று சொல்லாமல் அழுதுகொண்டே இருக்கும். மூத்த பிள்ளையை கண்ணுற்ற, இளைய பிள்ளையும் தனது பசியை வெளிப்படுத்த வேண்டுமென்று நினைப்பான். ஆனால், தாய்க்கு புரியும்படியான கோரிக்…
-
- 0 replies
- 487 views
-
-
கேள்விக்குள்ளாகும் அரசியல் நேர்மை "போரில் பங்கேற்ற படையினர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடாது என்பதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடாக உள்ளது. அதனால் தான், போரில் ஈடுபட்ட கடற்படைத் தளபதிகளை விசாரணைக்காக அழைக்கப்பட்டதை நான் விரும்பவில்லை என்று அவர் வெளிப்படையாக கூறி யிருக்கிறார். இதிலிருந்தே, படையினரை எந்த சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தக் கூடாது என்பதே அவரது மனோநிலையாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். " பாதுகாப்பு அமைச்சில் கடந்தவாரம் நடந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய உரை, அவரது அரசியல் நேர்மைக்குப் பலத்த சவாலையும், சர்…
-
- 0 replies
- 328 views
-
-
எழுக தமிழிற்குப் பின்னரான இலங்கைத்தீவின்அரசியல் – நிலாந்தன்:- எழுக தமிழிற்கு எதிராக தென்னிலங்கையில் தோன்றிய எதிர்ப்பு எழுக தமிழின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘எழுக தமிழ்’; தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திருக்கக் கூடிய விளைவுகளை விடவும் அதிகரித்த விளைவை அது தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருக்கிறது என்று கூடச் சொல்லலாம். இத்தனைக்கும் எழுக தமிழ் ஒரு போர்ப்பிரகடனம் அல்ல. அது யாருக்கும் எதிரானது அல்லவென்று விக்னேஸ்வரன் தனது உரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டிருந்தார். அவர் தனது உரையில் பாவித்த வார்த்தைகளிலும் சரி கருத்துக்களைத் தெரிவித்த விதத்திலும் சரி ஆகக் கூடிய பட்சம் அந்த உரையை ஒரு நல்லெண்ணச் சமிக்ஞையாகக் காட்டவே முற்பட்டார். …
-
- 0 replies
- 242 views
-
-
வரவு- செலவுத்திட்டத்துக்கு முன்னர் அறிக்கை சாத்தியமா? ரொபட் அன்டனி எ ன்ன நடக்கப்போகின்றது? எவ்வாறு தீர்வுத்திட்டம் வரப்போகின்றது? வரவு–செலவுத்திட்டத்துக்கு முன்னர் தீர்வுத்திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுமா என்பன பலரும் விவாதித்துக்கொண்டிருக்கும் விடயங்களாகும். ஆனால் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போக்கை பார்க்கும்போது மிக விரைவாக இவை அனைத்தும் சாத்தியமா என்பது முன்வைக்கப்படும் வாதமாகும். விசேடமாக இரண்டு விடயங்கள் குறித்து மக்கள் அவதானம் செலுத்தியுள்ளனர். அதாவது எப்போது அரசியலமைப்பு தொடர்பான வரைபு முன்வைக்கப்படும்? மற்றும் அதில் உள்ளடங்…
-
- 0 replies
- 352 views
-
-
போர்க் காலத்தில் ராஜபக்ச அரசாங்கமானது தமக்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களைக் குறிவைத்து வேட்டையாடியது. இதனால் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக அப்பாவி ஊடகவியலாளர்கள் இந்தியாவிற்குத் தப்பியோடினர். அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா தன்னிடம் அடைக்கலம் புகுந்த சிறிலங்காவின் ஊடகவியலாளர்களுக்கு நுழைவுவிசைகளை வழங்கியது. தமது அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்தியா நுழைவுவிசைகளை வழங்கியது தொடர்பில் இந்தியா மீது ராஜபக்சாக்கள் கோபங் கொண்டனர். இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக மகிந்தவால் பசில், கோத்தபாய, லலித் வீரதுங்க அடங்கிய குழுவினர் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். அப்போது சிறிலங்க…
-
- 0 replies
- 376 views
-
-
ஐனாதிபதியின் மறுபக்கம் நல்லாட்சி அரசாங்கத்திற்குள் பிளவுகள் ஏற்பட்டுவிட்டதோ......., அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ...... என்ற ஐயப்பாடுகள் இப்போது பரவலாக எழுந்துள்ளன. புலனாய்வு பொலிஸ் பிரிவினர் -(சி.ஐ.டி), நிதி குற்றவியல் விசாரணை பிரிவினர் (எவ்.சி.ஐ.டி) மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி என்ற ரீதியில் வெளியிட்டுள்ள அதிருப்தியே இதற்குக் காரணமாகும். முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக் ஷ, முன்னாள் கடற்படைத்தளபதிகள், இராணுவ புலனாய்வு பிரிவினர் ஆகியோரை விசாரணைக்கு உட்படுத்தி வருவதையும் அவர்களை நீதிமன்றத்தில் …
-
- 0 replies
- 615 views
-
-
பெளத்தத்திற்கு முன்னுரிமை சாதகமா? பாதகமா? பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் விடயத்தில் புதிய அரசியல் சாசனம் ஏலவேயுள்ள அரசியல் சாசனத்திலுள்ளவாறே பின்பற்றும். அரசியல் சாசனத்தில் பெளத்த மதத்தை முதன்மைப்படுத்தும் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. ஏனைய மதத்தலைவர்களும் இவ்விவகாரம் தொடர்பில் தமது பூரண ஆதரவை நல்க காத்திருக்கின்றார்கள். மேற்படி கருத்தை பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. பிரதமரின் இக்கருத்தானது ஏனைய மதத்தலைவர்களால் தெரிவிக்கப்படும் முக்கிய செய்தியாகவும் தமிழ் மக்கள…
-
- 1 reply
- 493 views
-
-
புரிந்து கொள்ளப்பட வேண்டிய பூகோள அரசியல் பூகோள அரசியல் மாற்றங்கள் இலங்கையில் எத்தகைய செல்வாக்கைச் செலுத்துகின்றன? தமிழர் பிரச்சினைக்கான தீர்வில் இதன் தாக்கம் என்ன என்பது தொடர்பாக, அண்மைக்காலத்தில் தமிழர் அரசியல் பரப்பில் சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியப் பெருங்கடலின் மையத்தில், கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்திருப்பதால், பூகோள அரசியல் மாற்றங்களின் ஒவ்வொரு கட்டத்திலும், இலங்கைத் தீவு அதன் தாக்கத்துக்கு உட்படுகிறது. அதுவே தொடர்ந்தும் நிகழப்போகிறது. இது எவராலும் மாற்றப்பட முடியாத ஒரு விதியாகவே நீளும். அகிம்சைப் போராட்டங்களில் இருந்து ஆயுதப் போராட்டத…
-
- 0 replies
- 485 views
-
-
மோதிக் கவிழ்ந்ததா ட்ரம்ப் ரயில்? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு, இன்னும் 30 நாட்கள் கூட இல்லாத நிலையில், அந்தத் தேர்தலின் போக்கு, ஓரளவுக்குத் தெளிவாகியிருப்பதாகக் கருதப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்த ஹிலாரி கிளின்டன், கோடீஸ்வரரான டொனால்ட் ட்ரம்ப்பைத் தோற்கடிப்பாரென்ற ஓரளவு உறுதியான நம்பிக்கை, இப்போது தான் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவு அனுபவமும் திறமையையும் கொண்ட ஒருவர், தேர்தலுக்கு இவ்வளவு நெருக்கமாக வந்து தான், தனது வெற்றியை ஓரளவு உறுதிப்படுத்த முடியுமா என்பது ஆச்சரியமாக இருந்தாலும், இம்முறை தேர்தல், ஆச்சரியங்களையும் வியப்புகளையும் ஏற்படுத்திய தேர்தலாக இருக்கையில், அவ்விடயத்த…
-
- 0 replies
- 398 views
-
-
டொய்ச்செ பான்க் ( Deutsche Bank ) நெருக்கடி: பிணையெடுப்பது யார்? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ எல்லா உண்மைகளையும் பொய்களால் மறைக்கவியலாது. எத்தனை முறை திருப்பிச் சொன்னாலும் பொய்கள் உண்மையாகா; காலம் உண்மையை மீளமீள நினைவுபடுத்தும்; உண்மையின் வலிமை அது. பொதுக் கருத்துக்கள் கட்டமைக்கப்படுகின்ற இக்காலத்தில் உண்மைகளும் கட்டமைக்கப்படுகின்றன. இதனால் உண்மை எது? உண்மைபோல் தெரிவது எது? என்ற மயக்கம் இயல்பாகவே வருகிறது. இம்மயக்கங்களைத் தாண்டி உண்மையை அறிவது கொஞ்சம் கடினம். ஆனால் உண்மையை அறியும் அவா அதைக் கண்டுணர உதவலாம். ஜேர்மனியின் மிகப்பெரிய வங்கியான டொய்ச்செ பான்க் பாரிய நெருக்கடியில் உள்ளது. இந்நெருக்கடியை வெறுமனே ஒரு வங்கியின் நெருக்கடி…
-
- 1 reply
- 545 views
-