அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
அமெரிக்க அதிபர் தேர்தல் - மாறும் காட்சிகள் : ராஜாஜி ஸ்ரீதரன் வாக்குறுதிகளை நம்பி வேட்பாளர்களை வெற்றியடைச் செய்து மக்கள் எப்பொழுதும் தோல்வியை தழுவுவதே வழக்கமாகிவிட்ட தேர்தலில் முடிவுகள் எதிர்பார்ப்பது போன்றோ ஊகிப்பது போன்றோ எல்லா வேளைகளிலும் அமைந்து விடுவதில்லை. ஆற்றுலும் தகைமையும் கொண்ட பல போட்டியாளர்களிலிருந்து மிகச்சிறந்த ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை ஏற்படும் போதோ தலைமைப் பதவிக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர்கள் அல்லது தகுதியற்றவர்கள் என்று மக்களால் கருத்தப்படுபவர்கள் தேர்தல் களத்தில் காணப்படும் போதோ முடிவை எதிர்வு கூற முடியாத நிலை ஏற்படும். இந்த பொதுவான அவதானிப்புக்கு உலகத்தலைமை நாடென்று கருதப்படும் அ…
-
- 0 replies
- 637 views
-
-
எழுக தமிழ் காலத்தின் கட்டாயமா; அரசியல் உட்பூசலா? கடந்த 24ஆம் திகதி நடந்தேறிய எழுக தமிழ் பேரணியானது மீண்டும் ஒருமுறை ஒரு உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட பேரணியாக காணப்பட்டாலும், இந்தப் பேரணியின் நோக்கமும் இந்தப் பேரணியின் நிறைவில் உரையாற்றியவர்களின் உரைகளையும் உற்று நோக்குகின்ற போது, இந்தப் பேரணியானது உண்மையிலேயே மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முன்னெடுக்கப்பட்ட ஒன்றா? அல்லது தமிழரசுக் கட்சிக்கு இணையாக ஒரு சக்தி உருவாக்குகின்றது என்பதை வெளிக் கொணர முன்னெடுக்கப்பட்ட ஒன்றா? என்பதில் ஒரு நியாயமான சந்தேகம் உள்ளது. ஏனெனில் பேரவையின் இணைத்தலைவர் என்ற வகையில் முதலமைச்சர் விக்கினேஸ் வரன் தனது உரையின் ஆரம்பத்திலேயே,…
-
- 0 replies
- 407 views
-
-
இலங்கையை பல்லின சமூக ஜனநாயகமாக மறுசீரமைப்புச் செய்வது சாத்தியமானதா ? இலங்கை வெளியுறவு அமைச்சின் ஆலோசகராக இருக்கும் ஹரிம் பீரிஸ் அண்மையில் ‘ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் ‘ஐக்கிய தேசியக்கட்சியினதும் மகாநாடுகளும் தேசிய அரசாங்கக் கோட்பாடும்’ (The SLFP and UNP Conventions and ideology of National government) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையொன்று கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றில் வெளியாகியிருந்தது. அதில் அவர் தற்போது முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இயங்கும் ஜனாதிபதியின் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் (President’s office of National unity and Reconciliation) உறுப்பினர்களில் ஒருவராக இருக்கும் கலா…
-
- 0 replies
- 453 views
-
-
எழுந்து நிற்கிறது எழுக தமிழ்! முருகவேல் சண்முகன் தமிழரின் தாகம் தணிவதில்லை, அடி மனத்தின் கோடியில் அது குடிகொண்டிருக்கிறது. தேவையேற்படும் சந்தர்ப்பங்களில், அது தீயாக எழும் என்பதற்குச் சான்றாக, சனிக்கிழமை (24) இடம்பெற்ற எழுக தமிழ்ப் பேரணி அமைந்திருந்தது. சுயபாதுகாப்பு முறையில் உறங்குநிலையில் இருந்த தமிழர்களின் சாத்வீக போராட்டக் குணத்தைத் தூண்டி விட்டிருக்கிறது. அதுவும், இப்போதைய காலவோட்டத்தை உள்வாங்கி, அதற்கேற்ற வகையில் தமிழர்களைத் தயார்படுத்துவதற்கான ஆரம்பக் கட்டமைப்பையும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டபோது, களத்திலிருக்கும் மக்களை பிரதிபலிக்காது, வாக்கு வங்கி அரசியலையும் தமது பதவிகளைத் …
-
- 0 replies
- 740 views
-
-
அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படவுள்ள அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக பல்வேறு ஆய்வுகளையும் கலந்துரையாடல்களையும் முக்கிய சந்திப்புக்களையும் இவ்வாரம் தொடர்ந்து அடுத்த வாரமும் மேற்கொள்ளவுள்ளோம் என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தன். ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களும் இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் பருவகாலமாக இருக்கப் போகிறது என்பதை அவர் கூறிய தகவல்களிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றின் முடிவுகளும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆ…
-
- 0 replies
- 370 views
-
-
மூன்று விடயங்கள் தமிழ் மக்களை உறுத்திக்கொண்டிருக்கின்றன. நிலைத்து நிற்கக் கூடிய நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்குமா......, எப்போது கிடைக்கும்? யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும், கொலைகளுக்கும், ஆட்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கும், சிறைச்சாலைகளில் அநியாயமாக வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் அனுபவிக்கின்ற வேதனைகளுக்கும் உண்மையான நீதி கிடைக்குமா? காணி அபகரிப்புக்கும், பௌத்த மேலாதிக்க ஊடுருவலுக்கும் முடிவேற்படுமா......, எந்த வகையில் யார் அந்த முடிவை ஏற்படுத்துவது?.....என்று, இந்த விடயங்கள் இன்று எரியும் பிரச்சினையாக தமிழ் மக்கள் மனங்களில் …
-
- 0 replies
- 408 views
-
-
சவாலை எதிர்கொள்வதற்கு தயாராகும் அரசாங்கம் புதிய அரசியலமைப்பு பூர்வாங்க வரைவு நவம்பரில் வரவு- – செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெறுவதற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்கத்தலைவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்பொன்றில் மக்களின் அங்கீகாரத்தை அரசாங்கம் பெறவேண்டும். அத்தகைய வாக்கெடுப்பில் மக்கள் புதிய அரசியலமைப்பு வரைவை நிராகரிப்பார்களாக இருந்தால், அதுவே அரசாங்கத்தின் வாட்டர்லூவாக இருக்கலாம். புதிய அரசியலமைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்தும்…
-
- 0 replies
- 442 views
-
-
புதிய அரசியலமைப்பும் அரசியல் தீர்வும் புதிய அரசியலமைப்பின் பூர்வாங்க வரைவு (Draft Constitution) எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு–செலவுத்திட்டம் மீதான விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்கத்தலைவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த வருடத்துக்கான அரசாங்கத்தின் வரவு–செலவுத் திட்டம் நவம்பர் 10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்றும் தொடர்ந்து ஒருமாத காலத்துக்கு அதன் மீதான விவாதம் நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறானால், அரசியலமைப்பு வரைவு இன்னமும் 6 வார காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும். இவ்வருட ஆரம்…
-
- 0 replies
- 528 views
-
-
யேமன்: சவூதி அரேபியாவின் கொலைக்களம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சமகாலத்தில் நிகழ்வனவற்றில் சில கவனத்தைப் பெற்றுவிடுகின்றன; பல கவனம் பெறுவதில்லை. நிகழ்வின் தன்மையை மட்டும் வைத்துக்கொண்டு கவனம் பெறுபவை எவை என்பதைத் தீர்மானிக்க முடியாது. மாறாக அதனுடன் தொடர்புள்ள அரங்காடிகளும் அந்நிகழ்வு வேண்டி நிற்கும் உலகத்தின் கவனமும் அதைப் பெரிதும் தீர்மானிக்கின்றன. எனவே உலகத்தின் கவனிப்பற்று, ஒரு மூலையில் நடைபெறும் கொடுமைகள், பொதுக் கவனத்தை எட்டுவதில்லை. யேமன் மீது சவூதி அரேபிய ஆக்கிரமிப்பு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் தொடக்கம் சவூதி தலைமையிலான கூட்டணி யேமனில் விடாது போரிடுகின்றது. இதனால் மத்திய கிழக்கெங்கும் விரி…
-
- 0 replies
- 663 views
-
-
எழுக தமிழ்; வெற்றிக்காகவும் தோல்விக்காகவும் ஏங்கும் தரப்புக்கள்! எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் தாண்டி உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பது அல்லது அதன் நீட்சியைப் பேணுவது தொடர்பிலான முனைப்புக்களில் ஒன்றாக எழுக தமிழைக் கருதுபவர்கள் அதன் ஆதரவாளர்களாகவும் இறுதி மோதல்களுக்குப் பின்னரான காலத்தில் தற்காலிகமாகத் தோற்றம்பெற்ற அரசியல் ஒழுங்கிற்கு ஒட்டுமொத்தமாக இசைவடைந்தவர்கள் எழுக தமிழின் அதிருப்தியாளர்களாகவும் மாறி உரையாடிக் கொண்டிருக்கின்றார்கள். இன்னொரு பெரும் தரப்போ எல்லாவற்றையும் அமைதியாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. இவை தவ…
-
- 0 replies
- 351 views
-
-
‘எழுக தமிழ்’ மூலம் யார் எழவேண்டும்? தெய்வீகன் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்று அறைகூவி விட்டு பன்னிருநாள் உண்ணா நோன்பிருந்து தன் உயிரை அர்ப்பணித்த தியாகி திலீபனின் அறப்போராட்ட ஞாபகார்த்த காலப்பகுதியில் ‘எழுக தமிழ்’ என்ற மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்றை நடத்துவதற்கு ‘தமிழ் மக்கள் பேரவை’ அழைப்பு விடுத்திருக்கிறது. தமிழர் தாயகத்தில் கடந்த காலங்களில் இதுபோன்ற பல எழுச்சிப் பேரணிகளை பல அமைப்புக்கள் நடத்தியிருக்கின்றன. அவற்றில் முக்கியமாக ‘பொங்குதமிழ்’ நிகழ்வு எவ்வளவு உணர்ச்சி பிரவாகமாக - தமிழ்மக்களின் உரிமைக்குரலாக - ஓங்கி ஒலித்தது என்பதை கண்டிருக்கிறோம். உரிமைகள் மறுக்கப்பட்…
-
- 0 replies
- 543 views
-
-
வடக்கு வாழ்கின்றது. தெற்கு தேய்கின்றது என்று தமிழகத்தில் ஒரு காலத்தில் தேர்தல் கோஷம் எழுப்பப்பட்டிருந்தது. தென் மாநிலமாகிய தமிழ் நாட்டிற்கு வடக்கில் உள்ள டெல்லி அரசு உரிய உரிமைகளைக் கொடுக்கவில்லை. ஹிந்தியைத் திணிக்க முயல்கின்றது என்ற காரணங்களை வைத்து தமிழ் நாட்டில் தனிநாட்டுக்கான கோரிக்கை எழுந்திருந்த சந்தர்ப்பம் அது. திராவிட கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் தமிழக மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்றிருந்த போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு, அதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. திமுக தலைவர் அண்ணாத்துரையின் தலைமையிலான தமிழகத் தலைவர்கள் திடீரென தமது தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு, இந்தியா என்ற தேசிய கொள்கையைக் கையில் எடுத்திருந்தனர். சீனாவிடம் இருந்து…
-
- 0 replies
- 762 views
-
-
எழுக தமிழ்: தமிழ் மக்கள் தற்காப்பு அரசியலை விட்டு வெளிவர வேண்டும் - நிலாந்தன்:- தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு பதில்வினையாற்றும் ஒரு தரப்பாகவே தமிழ்த்தரப்பு காணப்படுகிறது. ஆனால் ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் நிலைமை வேறாகவிருந்தது. தமிழ்த்தரப்பு மேற்கொள்ளும் ஒரு தாக்குதலுக்கு எதிர்த்தரப்பும் வெளித்தரப்புக்களும் பதில்வினையாற்றும் நிலைமை அப்பொழுது காணப்பட்டது. இவ்வாறு தமிழ்த் தரப்பானது பதில்வினையாற்றும் ஒரு தரப்பாக மட்டும் சுருங்கிக் காணப்படுவது என்பது கடந்த ஏழாண்டுகளாக மட்டும்த்தான் …
-
- 0 replies
- 476 views
-
-
தலைவிதியை தீர்மானிக்கப் போகிறவர்களுக்கு நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் புதிய தேசிய அரசாங்கத்தின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகும். அதுமட்டுமின்றி தேசிய அரசாங்கத்தின் புதிய முயற்சிகள் ஊடாக புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உள்ள நிலையில் அந்த நம்பிக்கையில் ஏமாற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்திவிடக்கூடாது. அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் புதிய அணுகுமுறையை முன்னெடுத…
-
- 1 reply
- 475 views
-
-
ஒற்றையாட்சிக்குள் ஒடுங்குவதற்கு தமிழர்கள் தயார்படுத்தப்படுகிறார்களா? தேர்தல்கள் ஆணைக்குழு, அடுத்த ஆண்டு முக்கியமான இரு தேர்தல்களை நடத்துவது தொடர்பில் முன்களப் பணிகளை ஆரம்பித்துள்ளது. முதல் காலாண்டுப் பகுதியில் புதிய அரசியலமைப்பினை அங்கீகரிப்பது தொடர்பிலான பொது வாக்கெடுப்பையும் இரண்டாம் காலாண்டில் உள்ளூராட்சி தேர்தலையும் நடத்துவது தொடர்பிலான முன்னெடுப்புக்கள் அவை. ஆக, 2017ஆம் ஆண்டின் ஆரம்பம், தமிழ் மக்கள் மத்தியில் முக்கியமான தீர்மானமொன்றை எடுக்குமாறு கோரவுள்ளது. இலங்கையின் கடந்த கால அரசியலமைப்புக்களின் வடிவமைப்பிலோ, நிறைவேற்றத்திலோ தமிழ் மக்கள் தங்களைப் பங்காளிகளாக வைத்துக் கொண்டதில்லை. அல்லது அதனை, பௌத்த - சிங்கள மைய சக்திகள் அனுமதித்ததில்லை. த…
-
- 0 replies
- 447 views
-
-
'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக் கற்றோம்' இவ்வாறு கூறி இருப்பவர் பான்கிமூன். கடந்த வாரம் கொழும்பில்அனைத்துலக உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் அவர் உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அவர் இவ்வாறு கூறுவதற்கும் ஏறக்குறைய ஒரு கிழமைக்கு முன்பு சொல்கெய்மும் இதே தொனிப்பட கருத்துத் தெரிவித்திருந்தார். இலங்கைத் தீவிலிருந்து தான் கடுமையான பாடங்களைக் கற்றிருப்பதாக. குறுகியகால இடைவெளிக்குள் இரு வேறு மேற்கத்தைய பிரதிநிதிகள் இவ்வாறு ஒரே தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. இருவரையும் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்.ஒருவர் இலங்கைத் தீவில் ஒப்பீட்…
-
- 0 replies
- 657 views
-
-
வெளியில் சொல்ல வேண்டும் மொஹமட் பாதுஷா தீர்வுத்திட்டம் தொடர்பாகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றியும் அதில் முஸ்லிம்களுக்கான உப தீர்வு பற்றியும் பிரதான முஸ்லிம் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெளிவான நிலைப்பாட்டை பகிரங்கமாகச் சொல்லாமல் இருப்பது நல்ல சகுணமல்ல. 'சேதாரமில்லாத விட்டுக் கொடுப்புக்கு தயார்' என்று பேசுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முஸ்லிம்களையும் திருப்திப்படுத்தப் போவதான ஒரு பிரக்ஞையை உருவாக்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு உரித்தான 'பங்கு' தொடர்பில் என்ன நிலைப்பாட்டுடன் இருக்கின்றார்கள்? என்பது புதிராகவே இருக்கின்றது. இந்த விவகாரத்தில் தமிழர்களையும் …
-
- 0 replies
- 502 views
-
-
பான் கீ மூன்: செயற்கரிய செய்யார் பெரியர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ திக்விஜயங்கள் பெரும்பாலும் சொல்லப்படும் காரணங்களுக்காக நிகழ்வதில்லை. ஆனால், அவை பெறும்; கவனமும் ஊடக ஒளியும் அவற்றை முக்கியப்படுத்துகின்றன. நிகழும் அனைத்து விஜயங்களும் திக்விஜயங்கள் அல்ல என இங்கு நினைவுறுத்தல் தகும். கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் இலங்கை வருகை சர்வதேச கவனத்தைப் பெற்றது. தனது நீண்ட ஆசியப் பயணத்தின் ஓர் அங்கமாக அவர் இலங்கைக்கு வந்தது தற்செயலல்ல. எவ்வாறாயினும் உலகளாவிய பெருமன்றமாகிய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் என்ற வகையில் அவரது ஆசிய சுற்றுப்பயணத்தை திக்விஜயமாகவே கொள்ளத் தகும்;. இவ்வாண்டுடன் தனது பதவிக் காலம்…
-
- 0 replies
- 545 views
-
-
இலங்கைக்கான இந்தியத் தூதுவராக, தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகிய செய்தி, அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. ஏற்கெனவே கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில், முக்கியமானதொரு காலகட்டத்தில் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான கவுன்சிலராகப் பணியாற்றியவர் என்பதால்தான், தரன்ஜித் சிங்கின் இந்த நியமனம் ஆழமான கரிசனைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. தற்போதைய அரசாங்கத்துடனான உறவுகளில், புதிய அணுகுமுறைகளைக் கையாளுவதற்காகவே இவரை நியமிக்க இந்தியா முனைகிறதா என்ற சந்தேகம் பலரிடம் தோன்றியிருக்கிறது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, மூன்றாண்டு பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு, பிரித்தானியாவுக்கான இந்தியத் தூதுவராக பொறுப்பே…
-
- 0 replies
- 544 views
-
-
உண்மையின் தரிசனமாக இருக்கத்தக்க.. கருத்துக்களைச் சொல்லும் காணொளிகளை இங்கு இணைப்போம். அந்த வகையில்.. ஈழத்தமிழர்களை பலிகொடுத்த இந்தியா.. நாளை தமிழகத் தமிழர்களையும் பலிகொடுக்கும்..
-
- 0 replies
- 637 views
-
-
உள்நாட்டு பொறிமுறை தொடர்பில் சம்பந்தனின் நிலைப்பாடு என்ன? - யதீந்திரா அரசாங்கம் மிகவும் அவசர அவசரமாக சில விடயங்களை அரங்கேற்றி வருகிறது. மக்களுடனான கலந்தலோசனைக்கான செயலணி (Consultation Task Force), காணாமல் போனோருக்கான அலுவலகம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போதே, குறித்த அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. அவ்வாறாயின் இதுவரை மக்கள் வழங்கிய ஆலோசனைகளின் பெறுமதி என்ன? அரசாங்கத்தின் மேற்படி செயலானது அரசாங்கம் விடயங்களை இதயசுத்தியுடன் அணுகவில்லை என்பதையே உறுதிப்படுத்துகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே உண்மை ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள…
-
- 0 replies
- 479 views
-
-
முரண்பாடான நிலைப்பாடு இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டது. ஆனால், சிறுபான்மையினராகிய தமிழ் மக்களின் தேசியத்துக்கான போராட்டங்கள் ஓயவில்லை. இந்தப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆளுந்தரப்பினரோ அல்லது இந்த நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்களாக வர்ணிக்கப்படுபவர்களோ ஆக்கபூர்வமான முறையில் முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரியவில்லை. முப்பது வருட கால மோசமான யுத்தத்தின் பின்னர், இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மனக்கசப்புக்களை, அரசியல் ரீதியான அதிருப்திகளை வெறுமனே பெயருக்காக மேற்கொள்ளப்படுகின்ற நல்லிணக்க நடவடிக்கைகளின் மூலம் போக்கிவிட முடியாது என்ற யதார்த்த…
-
- 0 replies
- 428 views
-
-
அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கின்ற போதும் தனது பதவியின் அந்திமகாலத்தில் இருக்கின்ற செயலாளர் நாயகம் இலங்கைஅரசுக்கு ஒரு நல்ல நண்பனாகவும் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு கருணை காட்டும் பிதாவாகவும் இருக்க விரும்புகிறாரே தவிர தனது அதிகாரத்துக்குட்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஆளுமைத்தன்மையை தனது இலங்கை விஜயத்தின்போது நிரூபிக்க தவறிவிட்டார் என்பதே தமிழ் மக்களின் விமர்சனங்களாகக் காணப்படுகின்றன. இதே விடயத்தில் இலங்கை அரசாங்கம் மதியூகியாக செயற்பட்டு வெற்றி கண்டுள்ளது என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாகும். இரண்டாம் உலக மகா…
-
- 0 replies
- 489 views
-
-
(விசேட ஆய்வு ஜெரா) இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன. வடக்கு மாகாண சபை கொண்டு வந்த தீர்மானமும், ஐ.நா நிலவரங்களும் அதனைக் கிளறிவிட்டிருக்கின்றது. போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருக்கிறது. இதனால் உண்மைகள் மறைக்கப்படுவதற்கும், பாதிக்கப்பட்டோரிற்கான நீதி, நியாயங்கள் முற்றாக மறுக்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், ஊடகங்களும் பல்வேறு வடிவிலான ஆவணப்படுத்தல்களை இந்த விடயம் தொடர்பில் தயாரித்து வைத்திருக்கின்றன. ஆனால் அவை தமிழ் இன அழிப்பின் இறுதிக் கட்டத்தில் சேமிக்கப்பட்டவை. இந்த இன அழிப்புக்கு திரட்சித் தன்மைமிக்க ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருப்ப…
-
- 1 reply
- 801 views
-
-
பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே - See more at: http://www.tamilmirror.lk/181480/ப-ரப-கரன-க-க-ந-கர-ப-ரப-கரன-#sthash.WZaKYxX8.dpuf
-
- 0 replies
- 847 views
-