அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப்புள்ளியாகி விட்டதா என்ற பொதுக் கேள்வியிலிருந்து தொடங்குவோம். உலக அரசியல் பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய அரசியல் ஒழுங்கைத் தோற்றுவித்து வருகின்றன. உலகின் இயங்கு திசை வல்லரசுக் குழுக்களின் இயங்கு திசையாகவே உள்ளது. அதை மக்களின் இயங்கு திசையாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. தெற்கு சூடான் விடுதலை பெற்ற (2011) அண்மைக் காலம் வரை, உலக அரங்கில் தேசிய இன விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறாத நிகழ்வு என்பதையே காட்டுகிறது. 1990களில் ஸ்லேவேனியா, கொசாவோ,மாசிடோனியா, உக்ரைன், ஜார்ஜியா, டிராண்டஸடிரியா, போஸ்னியா, எரித்ரியா, மால்டோவா, கிழக்கு திமோர் போன்ற நாடுகள், 2000-ங்களில் மாண்டிநிக்ரோ, தெற்கு ரேசடியா, …
-
- 0 replies
- 731 views
-
-
திண்ணைப் போர் கே. சஞ்சயன் / 2019 ஓகஸ்ட் 02 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:07 Comments - 0 ‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்’ என்று காத்திருந்த கூட்டமைப்பினர், புலிகள் போன பின்னர், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று, அவர்களை ஏமாற்றி விட்டு, அரசாங்கத்துக்குத் துணை போவதாக, கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஒரு ‘பிடி’ பிடித்திருந்தார். ‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்’ என்ற பழமொழி, அரசியலுக்கே நன்கு பொருந்தும். அரசியலில் இவ்வாறான எதிர்பார்ப்புகள் பலரிடம் இருப்பது உண்மை. எல்லோராலும் அரசியலில் வெற்றியைப் பெறமுடியாது. வெற்றி பெற்றவர்கள் இறக்கும் போது, பலருக்கு அந்த…
-
- 0 replies
- 628 views
-
-
கடலுடன் கலக்கும் ’எழுபது இலட்சம்’ காரை துர்க்கா / 2020 மே 26 கொரோனாவும் அது தொடர்பிலான நிகழ்காலம், எதிர்காலத் தாக்கங்கள் குறித்து, ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்த் துறைப் போராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம், ''ஒரு வருடத்தில் சுமார் 70 இலட்சம் ஏக்கர் கனஅடி மகாவலி நீர், திருகோணமலை, கொட்டியாரக்குடாக் கடலில் கலக்கின்றது'' எனத் தெரிவித்திருந்தார். அதாவது, மலையகத்தில் ஊற்றாகி வருகின்ற இந்தச் சொத்து (நன்னீர்) வீணே எவ்வித பிரயோசனமும் இன்றி கடலுடன் சங்கமமாகின்றது. ''இயற்கை அன்னை வழங்குகின்ற ஒரு சொட்டு நீர் கூட, வீணே கடலுடன் கல(ந்து)க்க விடக்கூடாது; அந்த நீரைச் சேமிக்க வேண்டும்; அதற்காக நீர்நிலைகள் அமைக்க வேண்டும்; அவை, எத…
-
- 0 replies
- 813 views
-
-
காஷ்மீர் பிரச்சனை : மதமா? அரசியலா? இந்தியா சுதந்திரம் பெற்ற போது, இங்கு 500 குறுநில அரசுகள் இருந்தன. இந்த குறுநில அரசுகளுக்கு மூன்று வகையான வாய்ப்புகள் வழங்கப்பட்டன: 1. இந்தியாவுடன் இணைவது 2. பாகிஸ்தானுடன் இணைவது 3. தற்சார்புடன் இருப்பது. அந்த அரசுகளின் பரப்பளவு மற்றும் அந்தந்த மக்களின் விருப்பம் சார்ந்து முடிவுகள் எடுக்க, சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. ஏறக்குறைய அனைத்து அரசுகளும் தங்கள் முடிவுகளை விரைவாக எடுத்துவிட்ட போதும், அய்திராபாத் மன்னரும், ஜுனாகர் -காஷ்மீர் மன்னர்களும் தயக்கம் தெரிவித்தனர். அய்தராபாத் மற்றும் ஜுனாகர் அரசுகள் ராணுவ நடவடிக்கையின் மூலம் இணைக்கப்பட்டன. ஜம்மு -காஷ்மீர், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக (80 சதவிகிதம்) வசிக்கும் மாநிலமாகும் எனவே, கா…
-
- 0 replies
- 784 views
-
-
மஹிந்தவின் மறு எழுச்சியா? 'ஜன சட்டன’ என்ற பெயரில், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றுத் தொடங்கப்பட்டுள்ள கூட்டு எதிரணியின் பாதயாத்திரைக்கு ஊடகங்கள் அதிகளவு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கின்றன. அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் பாதயாத்திரையின் விளைவுகள் எத்தகையதாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னர், நடத்துகின்ற மிகப்பெரிய அரசியல் நடவடிக்கையாக இது காணப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைப் பறிகொடுத்த பின்னர், அரசியல் ரீதியாகத் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக கடுமையாகப…
-
- 0 replies
- 351 views
-
-
தமிழ் நாட்டின் எல்லையை விளங்கிக்கொள்ளல் - யதீந்திரா தமிழ் நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. பத்துவருடங்களுக்கு பின்னர் மீளவும் திராவிட முன்னேற்ற கழகம், அதிகாரத்தை கைப்பற்றியிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து, அனைவரது பார்வையும் தீடிரென்று தமிழ் நாட்டின் பக்கமாக திரும்பியிருக்கின்றது. கருணாநிதியை துரோகியென்று கூறுபவர்களை தவிர, அனைத்து அரசியல் தரப்பினருமே, பாரபட்சமில்லாமல், ஸ்டாலின் மீதான எதிர்பார்ப்பை வெளியிட்டிருக்கின்றனர். இது ஒரு பக்கமென்றால் – இன்னொரு பக்கமும் இருக்கின்றது. அதாவது, சீமான் மூன்றாவது சக்தியாக வந்துவிட்டதான கொண்டாட்ட மனோநிலை. இப்போதும் விடுதலைப் புலிகளை தங்களின் அரசியல் முதலீடாகக் கொண்டிருப்பவர்கள் …
-
- 0 replies
- 471 views
-
-
மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை மறந்து வடாதீர்கள் வாக்குறுதி அளித்துவிட்டு பதவிக்கு வந்த தேசிய அரசாங்கம் தற்போது தனது பாதையி லிருந்து தடம்மாறுகின்றதா? அல்லது திசைமாறுகின்றதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாதிருக்கிறது நாட்டில் அரசியல் போக்குகள் சூடுபிடிப்பதாக தெரிகின்ற போதிலும் அரசாங்கத்தின் பயணம் என்பது மந்தகதியிலேயே உள்ளது விசேடமாக இதுவரை முக்கியமான பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படாத நிலையிலேயே ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்த தேசிய நல்லாட்சி அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கின்றது. அப்படி பார்க்கும் போது நல்லாட்சி அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கின்றதா? அல்லது த…
-
- 0 replies
- 266 views
-
-
-
- 0 replies
- 439 views
-
-
மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தை விக்கி நாடாதது ஏன்? திருமதி வாசுகி சிவகுமார் அவர்கள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் திரு வரதராஜபெருமாள் அவர்களைப் பேட்டி கண்டபோது எழுப்பிய கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள்;. 23 ஜுலை 2017 தினகரன் வாரமஞ்சரியில் வெளியிடப்பட்டது. கேள்வி 1:- பல்வேறு அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு மத்தியில், குறுகிய காலம் மட்டுமே நீடித்திருந்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த நீங்கள் அந்த மாகாண சபைக்கும், தற்போதைய மாகாண சபைக்கும் இடையே அரசியல் மற்றும் நிர்வாகரீதியாக காணுகின்ற வேறுபாடுகள் எவை? பதில்:- உங்களுடைய கேள்வியிலேயே அந்த மாகாண சபை உட்பட்டிருந்த ந…
-
- 0 replies
- 514 views
-
-
குருந்தூர் மலையும் காலிமுகத்திடலும் - நிலாந்தன் நாட்டில் பொருளாதார நெருக்கடி என்ற ஒன்று உண்டா என்று ஐயப்படும் அளவுக்கு திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் விமரிசையாக நடக்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் திருவிழாக்களில் கூடுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கொண்டாட்டங்களில் கூடுகிறார்கள்.வல்லிபுர ஆழ்வார் கோவில், பாசையூர் அந்தோணியார் கோவில், வற்றாப்பளை அம்மன் கோயில் போன்றவற்றில் திருவிழாக்கள் அமோகமாக நடந்தன. இக்கட்டுரை எழுதப்படும் நாளில் கண்டியில் கிரிக்கெட் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.திருவிழாக்கள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் சனங்கள் அணியும் ஆடைகள்,எடுப்புச் சாய்ப்பு எதிலுமே பொருளாதார நெருக்கடியைக் காணமுடியவில்லை. ஆனால் யாழ் பல்கல…
-
- 0 replies
- 389 views
-
-
பெரிய மீன்களின் ‘ சின்ன’ அரசியல் – இதயச்சந்திரன் மீண்டும் தேர்தல்! அதிகாரத்தின் பங்காளியாக மக்களைக் காட்டும் நாடகம்இ மறுபடியும் அரங்கேறப்போகிறது. ‘மக்கள் அதிகாரம்’ என்கிற ஜனநாயக வெள்ளையடிப்போடுஇ சர்வதேசவல்லரசுகளும் பூமழை பொழிய, இனிதே முடிவடையும் இந்த ஓரங்க நாடகம். பொருளாதார சுமைஇ வேலைவாய்ப்பற்ற கையறுநிலைஇ நிலமற்ற அகதிவாழ்வுஇ நில ஆக்கிரமிப்பு போரின் வடுக்கள்இ காணாமல்போகடிக்கப்பட்டோரை தேடும் அவலநிலைஇ இவற்றின் மத்தியில் ‘ தீர்வினைநோக்கிய பயணம்’ என்றவாறு முழக்கமிடும் கூட்டமைப்புஇ என்பவற்றைஎதிர்கொண்டவாறு நகரும் மக்கள் கூட்டம். அதற்குள் ‘ வேலை வேண்டுமா தீர்வு வேண்டுமா?’ என்ற குத்தல் கதை வேறு. பண்டா காலத்தி…
-
- 0 replies
- 548 views
-
-
தவறான போக்கு தேர்தல் என்பது மாற்றங்களுக்குரிய நம்பிக்கையை ஏற்படுத்துவது. அல்லது நிலவுகின்ற நன்மையான நிலைமையைத் தொடர்ந்து பேணுவதற்கு வழிசமைப்பதாக அமையும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகும். ஆனால், குட்டித் தேர்தல் என்று வர்ணிக்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அத்தகைய எதிர்பார்ப்பைக் கடந்து ஓர் அரசியல் வியூகத்தில் கால் பதிக்க முற்பட்டிருக்கின்றது. இதனால் விரலுக்கு ஏற்ற வீக்கம் என்ற நிலையைக் கடந்து, அடுத்த கட்ட அரசியல் நிலைமைகள் என்ன ஆகும் என்ற கவலை தோய்ந்த கேள்வியை எழுப்பியிருக்கின்றது. அடிமட்டத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடியிருப்பு, கிராமிய போக்குவரத்து, குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி, சுகாதாரம் மற்றும் பொது வசதிகள் என்பவற்றில் அபிவ…
-
- 0 replies
- 786 views
-
-
அரசியல்களம்... திரு வரதராஜபெருமாள் அவர்களுடனான செவ்வி
-
- 0 replies
- 499 views
-
-
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யோசனை குறித்து ஒரு மீள்பார்வை Veeragathy Thanabalasingham on October 3, 2022 Photo, AFP எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்வதற்கு அண்மையில் லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் சகல சமூகங்களையும் சேர்ந்த குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் அதில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றிய பிறகு லண்டனில் இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றிய பிரபல பத்திரிகையாளர் நெவில் டி சில்வா அவருடன் கலந்துரையாடியபோது ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிம…
-
- 0 replies
- 271 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து கேவலமான அரசியலின் மற்றுமோர் அத்தியாயம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம், இன்று நடைபெறவிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரும், பகிரங்கமாகவே பிரதமருக்கு எதிராகக் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், இந்தப் பிரேரணை பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விவகாரமே, இந்தப் பிரேரணையில், பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டாகும். தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், அதாவது 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி, மத்திய வங்கி பிணைமுறி வ…
-
- 0 replies
- 539 views
-
-
வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 01: முசோலினியின் நூறு ஆண்டுகளின் பின்னர்... தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அதுவோர் அழகிய நாள்! இலையுதிர்காலம் முழுமையாகத் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தது. அந்த ஓக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையே, கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி, ஒருவித மகிழ்ச்சியைத் தரும் ஆண்டின் இறுதித் தினமென்பதைப் பலர் அறிவர். ஓஸ்லோ நகரின் மத்தியில், குழந்தைகளுக்கான பல செயற்பாடுகளை, அவர்களுடன் நாடக நடிகர்களும் முன்னெடுத்திருந்தனர். வீதிகளில் பல்வேறு நிறங்களினாலான வெண்கட்டிகளால் படங்களை வரைவது, பாடுவது, ஆடுவது விளையாடுவது என்று ‘பல்கலைக்கழக வளாகம்’ என்று அறியப்பட்ட அப்பகுதி களைகட்டியிருந்தது. அப்பகுதிக்கு வாத்தியங்களை இசைத்தபடி, கொடிகளைத் தாங…
-
- 0 replies
- 270 views
-
-
உலகின் ஒட்டு மொத்த கவனத்தையும் குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளின் நேரடிப் பார்வையின் கீழ் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியிலும் வாழ்வா, சாவா என்ற போராட்டத்திற்கும் மத்தியிலும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் நாட்டில் ஆட்சி மாற்றமா? இராணுவ ஆட்சியா? போன்ற பதற்றம் அதிகரித்தே காணப்பட்டது. அதை மெய்ப்பிப்பது போலவே கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் 20 மாவட்டத் தபால் வாக்குகள் எண்ணிக்கை செய்யப்பட்டும் உடனடியாக அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனால் உடனடியாக மஹிந்தர் வெற்றியடைந்த மாவட்டங்களைத்தான் ஆணையம் முதன் முதலாக 6 மாவட்ட முடிவுகளை அறிவித்தது. காரணம் இராணுவ நகர்வு ஒன்…
-
- 0 replies
- 1k views
-
-
பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் முதல்வர் ஜெயலலிதா உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இங்குள்ள முக்கிய கட்சிகளான அ.தி.மு.க.வும் (அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்), தி.மு.க.வும் (திராவிட முன்னேற்றக் கழகம்) தங்களது பிரசாரக் கணைகளை கூர் தீட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். தி.மு.க.வின் சார்பில் வருகின்ற பெப்ரவரி மூன்றாம் திகதி அக்கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனையும் ஓர் அஜெண்டாவாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வோ எம்.ஜி.ஆர் பிறந்த நாளை (ஜனவரி 17) வெகு விமரிசையாக கொண்டாடி, 'இந்தக…
-
- 0 replies
- 910 views
-
-
நம்பிக் கெட்ட சூழல் நிபந்தனையற்ற ஆதரவின் மூலம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையினால் பொத்திப் பொத்தி பாதுகாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம், அரசியல் தீர்வையும் காணவில்லை. தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் முன்வரவில்லை. ஏற்கனவே தமிழ் மக்களை உள்ளாக்கியிருந்த இந்த நிலைமை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையை மனக்கசப்புக்கும் வெறுப்புக்கும் ஆளாக்கி இருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிக் கெட்ட சூழலில் இருந்து எவ்வாறு வெளிவருவது என்று கூட்டமைப்பின் தலைமை தத்தளித்துக் கொண்டிருப்பதையே காண முடிகின்றது. இந்த நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை கூட்டமைப்புக்கு ஒர…
-
- 0 replies
- 462 views
-
-
ஆரம்பிக்கும் தோல்விக்கான தேர்தல் பயம்! Editorial / 2019 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:38 Comments - 0 -இலட்சுமணன் தான் போகவே வழியில்லையாம் தவில்போல மத்தாப்புக் கேட்கிதாம் என்ற பழமொழி போல, நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ‘நானும் ஜெயிலுக்குப் போறேன். நானும் ரவுடிதான் , நானும் ரவுடிதான்” என்ற தமிழ்த் திரைப்பட வசனம் அடிக்கடி ஞாபகத்துக்கு வருகின்ற சம்பவங்கள் போன்று தான் இலங்கையின் தமிழ் அரசியல் நிலைமையும் இருக்கிறது. ஐயோ என்று தலையில் கையைவைத்துக் குந்திக் கொள்ள வேண்டியும் ஏற்படுகிறது. கிழக்கில் மாத்திரமல்ல எல்லா இடங்களிலுமே அரசியல் போட்டி மிகப்பெரியதொரு போராட்டமாகவே மாறி வருகிறது. ஆனால், வழமைக்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அ…
-
- 0 replies
- 571 views
-
-
அதிகாரம் இல்லாத ஜனாதிபதிப் பதவிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஓகஸ்ட் 08 வியாழக்கிழமை, மு.ப. 09:52 Comments - 0 ஐக்கிய தேசியக் கட்சி, இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது, அக்கட்சியின் சார்பில் நிறுத்தப் போவது, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையா அல்லது, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவையா அல்லது, சபாநாயகர் கரு ஜயசூரியவையா என்பது, இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அதன் வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நிறுத்த வேண்டும் என, அக்கட்சியில் பெரும்பாலானவர்கள் கோருவதாகத் தெரிகிறது. ஆனால், அக்கட்சியை வழிநடத்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது சகோதரரான கோட்டாவை, இன…
-
- 0 replies
- 367 views
-
-
தமிழர் தலைவிதியை தேர்தல்கள் தீர்மானிக்குமா? Editorial / 2019 செப்டெம்பர் 19 வியாழக்கிழமை, பி.ப. 06:54 Comments - 0 ஜனாதிபதித் தேர்தலுக்கான காத்திருப்பு தொடங்கிவிட்டது. சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன; சில அறிவிக்கவில்லை. சில பிற கட்சிகளின், சிறுபான்மையினரின் ஆதரவைத் திரட்டுகின்றன. தேர்தலைச் சுற்றி, மிகப்பெரிய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்போது, தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது பேசுபொருளாகியுள்ளது. தமிழர்கள், வாக்களித்தும் புறக்கணித்தும் ஜனாதிபதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால், தமிழர்களின் வாழ்வில் ஏற்றம் ஏற்படும் வண்ணம், மாற்றங்கள் நடைபெற்றுள்ளனவா என்ற கேள்வியை, நாம் இப்போது கேட்டாக வேண்டும். ‘சமாதானப் புறா’ சந்தி…
-
- 0 replies
- 442 views
-
-
தாழ்ந்துவரும் தமிழ்ப் பேரம் பேசும் சக்தி? நிலாந்தன்:- 14 பெப்ரவரி 2016 விக்னேஸ்வரன் அரசியலில் இறங்கியபோது தயான் ஜெயதிலக அவரை மென்சக்தி என்று அழைத்திருந்தார். அவர் ஏன் அப்படி அழைத்தார்? இலங்கைத்தீன் நீதிபரிபாலன கட்டமைப்புக்குள் நீண்டகாலமாக உயர் பொறுப்புக்களை வகித்த ஒருவர் அந்த நீதிபரிபாலனக் கட்டமைப்பினால் பாதுகாக்கப்படும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்திற்கு விசுவாசமாகவே இருப்பார் என்றஓர் எதிர்பார்ப்பில் தான். விக்னேஸ்வரனும் ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஒப்பீட்டளவில் தீவிரத்தன்மை குறைந்தவராகவே காணப்பட்டார். ஆனால் ஆட்சிமாற்றத்தின் பின் அவர் தயான் ஜெயதிலகபோன்றவர்கள் எதிர்பார்த்திராதஒருவளர்ச்சிக்குப் போhய்விட்டார். தயான் ஜெயதிலக இப்பொழுதும் அவரை ஒரு மென்சக்தி…
-
- 0 replies
- 478 views
-
-
இந்தோ- பசுபிக்கில் பட்டுப்பாதையும் ஈழத் தமிழரின் எதிர்காலமும். முன்னாள் யாழ் பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு.
-
- 0 replies
- 549 views
-
-
ஒரு தீவு இரு நினைவு நாட்கள் - நிலாந்தன் கடந்த 18ஆம் தேதியும் 19 ஆம் தேதியும் இலங்கைத் தீவில் இரண்டு மக்கள் கூட்டங்கள் இருப்பதனை மீண்டும் உணர்த்திய அடுத்தடுத்த நாட்கள். 18 ஆம் திகதி தமிழ் மக்கள் இன அழிப்பை நினைவு கூர்ந்தார்கள். 19ஆம் திகதி சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினார்கள். பதினெட்டாம் திகதியை நோக்கி அந்த வாரம் முழுவதும் தமிழ் மக்கள் ஊர் ஊராக, சந்தி சந்தியாக கஞ்சி காய்ச்சிக் கொடுத்தார்கள். 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் கூடினார்கள்; உருகி அழுதார்கள். அடுத்த நாள் கொழும்பில் அரசாங்கம் யுத்த வெற்றியைக் கொண்டாடியது. காலையில் அரசுத் தலைவர் உடல் வழங்காத படை வீரர்கள் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று அவர்களைக் கௌரவித்தார். அதன்பின் படைத் தள…
-
- 0 replies
- 238 views
-