Everything posted by மாறன்
-
குட்டிக் கதைகள்.
பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது. எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து "ராஜாகிட்ட பணமில்லே... என்கிட்டதான் பணமிருக்கு! ராஜாகிட்ட பணமில்லே... என்கிட்டதான் பணமிருக்கு!" என்று கத்தியது. கடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார். இப்போ குருவி, "என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்" என்று கூவியது. வெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார். குருவி விடாமல், "என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்", என்று தொடர்ந்தது.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தான் தவிர்க்கப்படுதல் தெரியாமல் அண்டை வீட்டிற்கு விளையாடச் சென்று வெறுமையாய் திரும்பும் சிறுவனின் மனவலியை உணரச்செய்துவிடுகிறார்கள் சிலர்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உலகத்துலயே மிக அதி பயங்கர போதை எது தெரியுமா?... அடுத்தவங்க பரிதாபத்துக்காக நாம ஏங்குவதுதான்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நிராகரிக்கப்படும்போதெல்லாம் நம்மால் நிராகரிக்கப்பட்டவர் யாரேனும் நினைவில் வருகிறார்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
விலகியதும் விமர்சனம் செய்யாத உறவுகள் கிடைப்பது வரமே!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நல்லவன் போல் நடிப்பதை நிறுத்தும் போதே, எதார்த்தமான வாழ்க்கை வாழ கற்று கொள்கிறோம்!