Jump to content

செண்பகம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    560
  • Joined

  • Last visited

Everything posted by செண்பகம்

  1. இலங்கையில் கெரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,402 ஆக உயர்வு Daya Dharshini November 19, 2020இலங்கையில் கெரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,402 ஆக உயர்வு2020-11-19T08:21:02+05:30 LinkedInFacebookMore நாட்டில் மேலும் 327 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் 325 பேர் அடையாளம் காணப்பட்டனர். கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 893 ஆக உயர்ந் துள்ளது. வெளிநாட்டில் வருகை தந்த கடற்படையினர் இருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப் பட்டுள்ளனர். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 402 ஆக உயர்ந் துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 377 பேர் நேற் றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொ ரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 587 ஆக அதிகரித் துள்ளது. தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 5 ஆயிரத்து 746 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர். இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 489 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளமை குறிப் பிடத்தக்கது. https://thinakkural.lk/article/90572
  2. இன்று 401 பேருக்கு உறுதியானது தொற்று! கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி அல்லது இரண்டாம் அலை காரணமாக இன்று (17) இதுவரை 401 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 14,568 ஆக உயர்ந்துள்ளது. இன்று வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய மூவருக்கும் தொற்று உறுதியானது. இதனுடன் இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 18,075 ஆகும். இதேவேளை மொத்தமாக 12,210 பேர் குணமடைந்துள்ளதுடன், இப்போது 5,799 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/இன்று-401-பேருக்கு-உறுதியான/
  3. கொவிட் -19 பாதிப்பில் இலங்கைக்கு 99ஆவது இடம் C.L.Sisil November 17, 2020கொவிட் -19 பாதிப்பில் இலங்கைக்கு 99ஆவது இடம்2020-11-17T12:23:11+05:30 FacebookTwitterMore கொவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 99ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலையிலேயே இலங்கை 99 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளது. மேலும் 98 ஆவது இடத்தில் பதிவாகியுள்ள பின்லாந்தில் 19 ஆயிரத்து 419 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதேநேரம், 17 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள மடகாஸ்கர் 101 ஆவது இடத்தில் உள்ளது. குறித்த பட்டியலில் முதல் நூறு நாடுகளின் வரிசையில் ஆகக்குறைந்த மரணங்கள் சிங்கப்பூரில் பதிவாகியுள்ளன. அங்கு இதுவரையில், 28 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்திலுள்ள இலங்கையில் 61 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஏனைய நாடுகளில் நூற்றுக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/89988
  4. கொரோனாவை விட மிக வேகமாகவும் அதிகமாகவும் மக்களை தாக்கும் சமூக ஊடக போலிச் செய்திகள் Bharati November 16, 2020 கொரோனாவை விட மிக வேகமாகவும் அதிகமாகவும் மக்களை தாக்கும் சமூக ஊடக போலிச் செய்திகள்2020-11-16T13:53:35+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore கொரோனாவை விட மிக வேகமாகவும் அதிகமாகவும் சமூக ஊடக போலிச் செய்திகள் மக்களை தாக்குகிறது. இது ஆரோக்கியமற்றது. கருத்தோவியம் ; ஆர்.சுரேந்திரன் https://thinakkural.lk/article/89660 நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 231 பேருக்கு கொரோனா Daya Dharshini November 17, 2020நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 231 பேருக்கு கொரோனா2020-11-17T08:51:03+05:30 FacebookTwitterMore இலங்கையில் நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பெரும் பாலானவர் கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்றைய தினம் 387 பேர் கொவிட்-19 கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள் ளனர் இவர்களில் 231 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் 42 பேர், களுத் துறை மாவட்டத்தில் 20 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காலி மாட்டத்தில் 02 பேர் , இரத்தினபுரி , கேகாலை, மொன ராகல, யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா ஆகிய மாவ ட்டங்களிலும் தலா ஒரு தொற்றாளர்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளனர். போகம்பர சிறைச்சாலையில் 41 பேர், வெலிகட சிறைச் சாலையில் ஒருவர் , பொலிஸ் அதிகாரிகள் 08 பேர், பொ லிஸ் சிறப்புப் பணிக்குழுவினர் 05 பேர் ஆகியோர் இவ் வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/89853
  5. மேலும் 382 பேருக்கு கொரோனா Daya Dharshini November 17, 2020மேலும் 382 பேருக்கு கொரோனா2020-11-17T07:01:35+05:30 FacebookTwitterMore நாட்டில் மேலும் 382 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 382 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங் கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 170 ஆக உயர்ந் துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக உயர்ந் துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 562 பேர் நேற் றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர் களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 806 ஆக அதி கரித்துள்ளது. தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5 ஆயிரத்து 807 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 464 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளமை குறிப் பிடத்தக்கது. https://thinakkural.lk/article/89830
  6. கொழும்பு நகரை 3 வாரங்கள் முடக்க வேண்டும் – மாநகர மேயர் கொழும்பு நகரை மூன்று வாரங்கள் பயணக் கட்டுப்பாடுகளுடன் முடக்க வேண்டும் என்று கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், “கொழும்பில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் அது சவாலானதாக மாறும். நகரில் முதியோர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களை தொற்று நோயில் இருந்து பாதுகாக்க முடியுமா என்பது கேள்விக்குள்ளாகி வருகிறது. தனிமைப்படுத்தலில் உள்ள மட்டக்குளியில் இருந்து நேற்றும் வேலைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே நகரில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் தேவை. எனவே கொழும்பு நகரை 14 அல்லது 21 நாட்களுக்கு வெளியேற, உள்வரத் தடை விதித்து முழுமையாக முடக்க வேண்டும்” – என மேயர் கோரியுள்ளார். https://newuthayan.com/கொழும்பு-நகரை-3-வாரங்கள்-ம/
  7. ட்ரோன் கமெராக்கள் கண்காணித்தன – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 15 பேர் முகத்துவாரத்தில் கைது Bharati November 12, 2020ட்ரோன் கமெராக்கள் கண்காணித்தன – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 15 பேர் முகத்துவாரத்தில் கைது2020-11-12T21:36:56+05:30 FacebookTwitterMore தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இடம்பெறும் பயணங்களை கண்காணிக்க விமானப்படையின் உதவியுடன் ட்ரோன் கமராக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் ட்ரோன் கமராக்களில் கண்காணிக்கப்பட்டதன் பின்னர் விதிமுறைகளை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு இணங்க பொதுமக்கள் செயற்படுகின்றார்களா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்காக இந்த ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறியுள்ளார். https://thinakkural.lk/article/88689
  8. இலங்கையில் நேற்று மட்டும் 635 பேருக்கு கொரோனா தொற்று பரவியது Bharati November 12, 2020இலங்கையில் நேற்று மட்டும் 635 பேருக்கு கொரோனா தொற்று பரவியது2020-11-12T06:39:11+05:30 FacebookTwitterMore இலங்கையில் நேற்றும் 635 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலையில் மட்டும் சிக்கிப் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 876 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது. தொற்றாளர்களில் 5 ஆயிரத்து 121 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 ஆயிரத்து 183 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 46 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/88361
  9. மொரட்டுவவில் இரு பகுதிகள் முடக்கப்பட்டது Bharati November 9, 2020மொரட்டுவவில் இரு பகுதிகள் முடக்கப்பட்டது2020-11-09T19:57:53+05:30 LinkedInFacebookMore மொரட்டுவவில் அங்குலான வடக்கு, அங்குலான தெற்கு ஆகிய பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/87672
  10. கிளிநொச்சியின் இரண்டு பகுதிகள் முடக்கப்பட்டன – தொற்றாளர் ஒருவர் நடமாடியதையடுத்து அதிரடி Bharati November 9, 2020கிளிநொச்சியின் இரண்டு பகுதிகள் முடக்கப்பட்டன – தொற்றாளர் ஒருவர் நடமாடியதையடுத்து அதிரடி2020-11-09T06:08:16+05:30 FacebookTwitterMore கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் வடக்கு, தெற்கு பிரதேசங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன் உறுதிப்படுத்தினார். நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளி தனிமைப்படுத்தலை மீறி சுற்றித் திரிந்தமை அம்பலமானமையை அடுத்தே இந்தப் பகுதிகள் நேற்று முடக்கப்பட்டுள்ளன. கொழும்பில் பணியாற்றும் ஜெயபுரத்தை சேர்ந்த குறித்த நபர் கடந்த 25 ஆம் திகதி சொந்த இடத்திற்கு திரும்பியிருந்தார். அவரை சுயதனிமைப்படுத்துமாறு பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அத்துடன், அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனையும் நடத்தப்பட்டது. ஆய்வில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், அவரிடம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நடத்திய ஆய்வில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி அவர் ஜெயபுரத்தின் வடக்கு, தெற்கு பிரதேசங்களில் நடமாடியமை தெரிய வந்தது. இதையடுத்தே அந்தப் பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/87321
  11. தனிமை முடக்கம் அமுலாகும் பொலிஸ் பகுதிகள் – விபரங்கள் இதோ! நாளை (09) முதல் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ள நிலையில் மாவட்ட ரீதியாக கொரோனா ஆபத்து உள்ள பொலிஸ் பகுதிகள் தனிமைப்படுத்தி முடக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன்படி முடக்கப்படும் பொலிஸ் பகுதிகளின் விபரம், கொழும்பு – மட்டக்குளி, முகத்துவாரம், ப்ளூமென்டல், ஆட்டுப்படித்தெரு, கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், வாழைத்தோட்டம், கரையோரம், பொரளை, தெமட்டகொடை, மாளிகாவத்தை, வெல்லம்பிட்டி. கம்பஹா – வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகை, சபுகஸ்கந்தை, நீர்கொழும்பு, பமுனுகமை, ஜா-எல. கேகாலை – மாவனல்லை, ருவான்வெல்ல. களுத்துறை – ஹொரனை, இங்கிரிய, பாணந்துறை வெகந்த கிராம சேவர் பிரிவு. குருநாகல் – மாநகர சபை பகுதி, குளியாப்பிட்டிய. https://newuthayan.com/தனிமை-முடக்கம்-அமுலாகும்/ கொரோனா தொற்றுடன் ஆரோக்கியமான குழந்தை பெற்ற பெண் Daya Dharshini November 7, 2020கொரோனா தொற்றுடன் ஆரோக்கியமான குழந்தை பெற்ற பெண்2020-11-07T18:28:22+05:30 FacebookTwitterMore கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாய் ஒருவர் ஆரோக்கியமாகக் குழந்தை பெற்றுள்ளார். குறித்த கர்ப்பிணி தாய் கொழும்பு தேசிய வைத்திய சாலையிலேயே குழந்தை பெற்றுள்ளார். சிசேரியன் சத்திர சிகிச்சை ஊடாக அவர் குழந்தையைப் பிரசவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சத்திர சிகிச்சைக்காக 20 பேர் கொண்ட வைத்திய குழுவொன்று செயற்பட்டுள்ளார்கள் என சத்திர சிகிச்சை மேற்கொண்ட விசேட வைத்தியர் மயுர மானதெவொலகே தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான தாய் ஒரு வர் ஆரோக்கியமான முறையில் குழந்தை பெற்ற இரண் டாவது சந்தர்ப்பம் இதுவாகும். https://thinakkural.lk/article/87091
  12. இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியது Daya Dharshini November 7, 2020இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியது2020-11-07T07:37:13+05:30 FacebookTwitterMore நாட்டில் மேலும் 400 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் நேற்றைய தினம் மேலும் 400பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 970 ஆக உயர்ந் துள்ளது. அதன்படி, திவூலபிட்டி – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9492 ஆக உயர்ந்துள்ளது என்று தொற்றுநோயில் பிரிவு தெரி வித்துள்ளது. தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5ஆயிரத்து 755 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 467 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந் துள்ளமை குறிப்பிடத்தக்கது https://thinakkural.lk/article/86858
  13. வழங்கியது சிங்கப்பூர் !!!! இலங்கையில் கொரோனா சிகிச்சை சேவையைப் பலப்படுத்தும் நோக்கில், இன்று (5) சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று, 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான 50 வென்டிலேட்டர்களை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது. சிங்கப்பூரின் டிம்செக் நிதியம் இந்த அன்பளிப்பை செய்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இலங்கையின் மெட் டெக்னோலோஜி ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் கபில கீதனகே இந்த வென்டிலேட்டர்களை கையளித்துள்ளார். https://newuthayan.com/இலங்கைக்கு-50-வென்டிலேட்ட/ கொரோனாவால் மேலும் ஐவர் மரணம் – சற்றுமுன் அறிவிப்பு! இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளது. இன்று (05) சற்றுமுன் இந்த மரணங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மரணித்தவர்களின் விபரங்கள், கொழும்பு 2ஐ சேர்ந்த 46 வயது ஆண், இவர் கிட்னி தோயாளி, வெல்லம்பிட்டியை சேர்ந்த 68 வயது பெண், இவர் நெஞ்சு வலியேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், கொழும்பு 12ஐ சேர்ந்த 58 வயது பெண், இவர் இருதய பிரச்சினையால் வீட்டில் மரணித்தார், கொழும்பு 14ஐ சேர்ந்த 73 வயது பெண், இவர் சுவாச பிரச்சினையால் வீட்டில் மரணித்தார், கொழும்பு 15ஐ சேர்ந்த 74 வயது ஆண், இவர் சுவாச இருதய பிரச்சினையால் வீட்டில் மரணித்தார். இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 29 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட இருவர் இதுவரை தற்கொலை மற்றும் விபத்து காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/கொரோனாவால்-மேலும்-ஐவர்-ம/
  14. மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி Daya Dharshini November 4, 2020மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி2020-11-04T10:24:05+05:30 LinkedInFacebookMore மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். வெலிசர பொருளாதார மத்திய நிலையத்தை எதிர்வரும் திங்கட்கிழமை 9 ஆம் திகதி மீண்டும் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெலிசர பொருளாதார மத்திய நிலையம் முழுமையாகத் தொற்று நீக்கம் செய்யப்படும். அத்துடன் அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அத்துடன், வெலிசர பொருளாதார மத்திய மொத்த விற்பனை நிலையத்தின் நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை 9 ஆம் திகதி மீண்டும் திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கிடையில், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பகுதியில் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை விநியோகிப்பதற்கு எந்த இடையூறும் இல்லாமல் அனுமதி வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/85938
  15. இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 11,744 ஆக உயர்வு நாட்டில் மேலும் 409 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திவுலபிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் மேலும் 409 நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 401 பேர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங் களில் 08 பேர் ஆகியோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றார்களின் மொத்த எண்ணிக்கை 8ஆயிரத்து 266 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 11ஆயிரத்து 744 ஆக உயர்வடைந் துள்ளது. தற்போது, 6ஆயிரத்து 140 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சை யளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5ஆயிரத்து 581ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 430 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந் துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/85875 அதிரடிப்படையின் மூன்று முகாம்கள் மூடப்பட்டன – 183 பொலீஸாருக்கு கொரோனா Bharati November 3, 2020அதிரடிப்படையின் மூன்று முகாம்கள் மூடப்பட்டன – 183 பொலீஸாருக்கு கொரோனா2020-11-03T19:27:29+05:30 FacebookTwitterMore கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கை இன்று 183 ஆக அதிகரித்துள்ள நிலையில் மூன்று அதிரடிப்படையின் முகாம்கள் இன்று மூடப்பட்டுள்ளன. களுபோவில, ராஜகிரிய, களனி ஆகிய பகுதிகளிலுள்ள முகாம்களே இன்று மூடப்பட்டன. இந்த முகாம்களில் உள்ள படையினர் பலருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அந்த முகாம்கள் மூடப்பட்டன. https://thinakkural.lk/article/85875
  16. இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,335 ஆக உயர்வு இலங்கையின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 11,335 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் 275 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 232 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என தெரியவந் துள்ளது. ஏனைய 43 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களைச் சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது மினுவாங்கொடை – பேலியகொட கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றா ளர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆயிரத்து 857 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் 344 பேர் கொரோனா தொற்றிலிருந்து குண மடைந்த நிலையில் வைத்தியசாலைகளை விட்டு வெளி யேறியுள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் எண் ணிக்கையும் 5ஆயிரத்து 249 ஆக பதிவாகியுள்ளது. தற்போது இரண்டு வெளிநாட்டினர் உட்பட 6,065 கொ ரோனா தொற்றாளர்கள் நாடு முழுவதும் உள்ள 46 வைத் தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் 389 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் களின் மொத்த எண்ணிக்கை 21 ஆக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/85616 STF படையினர் 23 பேருக்கு கொரோனா நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 275 பேரில் 23 பொலிஸ் விசேட படையினர் உள்ளடங்குவதாக, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 39 பொலிஸாருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கொழும்பு 1-15 வரையான பிரதேசங்களிலிருந்து 32 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் கொழும்பு மாநகர சபை பணியாளர்கள் 9 பேர் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நேற்றைய தினம் கம்பஹா மாவட்;டத்தில் 90 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/STF-படயனர-23-பரகக-கரன/175-257965
  17. பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா Daya Dharshini November 2, 2020பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா2020-11-02T10:13:37+05:30 FacebookTwitterMore பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரி சோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், களுத்துறை மாவட்டத்தில் உள்ள கொ ரோனா சிகிச்சை மையத்திற்கு அவர்கள் அழைத்துச் சென்றுள்ளதாக பொரள்ளை பொலிஸ் காரியாலயம் தெரி வித்துள்ளது. https://thinakkural.lk/article/85337
  18. 397 பேர் நேற்று மட்டும் பாதிப்பு; கொரோனா தொற்றாள் தொகை 11 ஆயிரத்தை தாண்டியது நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று மட்டும் மொத்தமாக 397 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் மொத்த பாதிப்பு பதினொராயிரத்தைக் கடந்துள்ளது. இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 41 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் என்பதுடன் ஏனைய 356 பேரும் பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து 582ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 60ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை நான்காயிரத்து 905 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் ஆறாயிரத்து 135 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். https://thinakkural.lk/article/85245 9 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால், மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 9ஆம் திகதி காலை 5 மணிவரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாளை காலை 5 மணி தொடக்கம் எதிர்வரும் 9ஆம் திகதி வரை, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலும் குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/9-ஆம்-திகதி-வரை-ஊரடங்கு-நீடிப்பு/150-257827
  19. கொரோனா தொற்றாளருடன் பஸ்ஸில் யாழ் வந்த 6 பயணிகள் தலைமறைவு; தேடும் பணி பொலிஸாரிடம் ஒப்படைப்பு Bharati November 1, 2020கொரோனா தொற்றாளருடன் பஸ்ஸில் யாழ் வந்த 6 பயணிகள் தலைமறைவு; தேடும் பணி பொலிஸாரிடம் ஒப்படைப்பு2020-11-01T07:41:40+05:30 FacebookTwitterMore யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6 பேரையும் கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: “யாழ்ப்பாணத்துக்கு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்பட்ட என்.சி.ஜி என்ற பெயர் கொண்ட டபிள்யூ.பி.என்.சி 8760 என்ற இலக்கமுடைய பஸ்ஸில் பயணித்தவர்கள் சமூக அக்கறையுடன் உடனடியாக சுகாதார அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. அத்துடன் பஸ் சேவை நிறுவனத்திடமிருந்து பயணித்தவர்களின் தொலைபேசி இலக்கம் பெறப்பட்டு சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் நேற்று ஈடுபட்டனர். அவ்வாறு 37 பயணிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அத்துடன், சாரதியும் நடத்துநரும் கொழும்பில் தங்கியுள்ள நிலையில் சுயதனிமைப்படுத்தப்பனர். எனினும் அந்த பஸ்ஸில் பயணித்த 6 பேர் அலைபேசியை நிறுத்தி வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6 பேரையும் கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார். https://thinakkural.lk/article/85080
  20. வடமராட்சி கொரோனா நோயாளி சென்று வந்த இடங்கள் அறிவிப்பு! பருத்தித்துறை – கீரிமலைக்கான 763ம் இலக்க வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்டு வரும் அரச பேருந்தில் கொரோனா தொற்றாளர் பயணம் செய்துள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து குறித்த வழித்தடத்தில் பயணித்தவர்களுக்கான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புபட்டு வடமராட்சி, பொலிகண்டி பிரதேசத்தில் வசித்து வரும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை நேற்று இரவு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து குறித்த தொற்றாளரிடம் சுகாதாரப்பிரிவினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் அவரது பயண வழித்தடங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர் பேலியகொடை மீன் சந்தையிலிருந்து வந்த பின்னர், https://newuthayan.com/வடமராட்சி-கொரோனா-நோயாளி/
  21. நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா பரவியது; மொத்த எண்ணிக்கு 10 ஆயிரத்தை நெருங்குகின்றது Bharati October 30, 2020நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா பரவியது; மொத்த எண்ணிக்கு 10 ஆயிரத்தை நெருங்குகின்றது2020-10-30T05:01:18+05:30 FacebookTwitterMore நாட்டில் நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் 53 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள். ஏனைய 115 பேரும் பேலியகொடை கொரோனா கொத்தணி தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மட்டும் 600 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில்தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஆறாயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுவரையான பாதிப்பு 9 ஆயிரத்து 800 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், நாட்டில் தொற்று கண்டறியப்பட்டோரில் இதுவரை 4 ஆயிரத்து 142 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளஅதேவேளை இன்னும் 5 ஆயிரத்து 600 பேருக்கு மேல் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/84453
  22. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8ஆயிரத்து 870 ஆக உயர்வு Daya Dharshini October 28, 2020கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8ஆயிரத்து 870 ஆக உயர்வு2020-10-28T07:51:11+05:30 FacebookTwitterMore திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொரோனா கொத்த ணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 396 உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் 457 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், திவுலபிட்டிய- பேலியகொட கொரோனா கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 447 பேர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மத்திய நிலை யத்தில் மேலும் 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 8ஆயிரத்து 870 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாட்டின் 32 வைத்தியசாலைகளில் 4 ஆயிரத்து 808 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா தொற்றால் 4ஆயிரத்து 043 பேர் குண மடைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. https://thinakkural.lk/article/83777
  23. கொரோனா தொற்றாளருடன் கொழும்பிலிருந்து மன்னார் பயணித்தவர்கள் யார்? உடன் தொடர்பு கொள்ளுமாறு அவசர கோரிக்கை Bharati October 26, 2020கொரோனா தொற்றாளருடன் கொழும்பிலிருந்து மன்னார் பயணித்தவர்கள் யார்? உடன் தொடர்பு கொள்ளுமாறு அவசர கோரிக்கை2020-10-26T19:34:27+05:30 FacebookTwitterMore கொழும்பில் இருந்து கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு11.20 மணியளவில் மன்னார் நோக்கி பயணித்த ரத்னா ரவல்ஸ் என்ற தனியார் பேரூந்தில் பயணித்த மக்களையும், 21 ஆம் திகதி புதன் கிழமை காலை 8.45 மணியளவில் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த அரச பேரூந்தில் பயணித்த மக்களையும் உடனடியாக தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “கொழும்பு பேலிய கொட பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அங்கே மேற்கொண்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட நிலையில் தப்பி வந்த நபர் ஒருவர் மன்னார் புதுக்குடியிறுப்பு பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். குறித்த நபர் கொழும்பில் இருந்து கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11.20 மணியளவில் மன்னார் நோக்கி பயணித்த ரத்னா ரவல்ஸ் என்ற தனியார் பேரூந்தில் வருகை தந்து 21 ஆம் திகதி புதன் கிழமை காலை 8.45 மணியளவில் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த அரச பேரூந்தில் பயணத்தை மேற்கொண்டு மன்னார் புதுக்குடியிறுப்பு பகுதிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு உரிய வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குறித்த பேரூந்துகளில் பயணித்த மக்கள் உடனடியாக 071-8474361 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தமது இருப்பிடத்தை தெரியப்படுத்திக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/83421
  24. வடமாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் சற்று முன்னர் ஆரம்பம்! நாட்டில் கொரோனா தொற்று வலுவடைந்துள்ள நிலையில் வட மாகாணத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை சுகாதார நடைமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்குமாகாண ஆளுநர் சாள்ஸ் தலைமையில் வடமாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. குறித்த கூட்டத்திற்கு வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்கள், பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதிகள் மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் பிராந்திய சுகாதார பணிப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் குறித்த கூட்டம் ஆரம்பமாகியது. https://newuthayan.com/வடமாகாண-கொரோனா-ஒழிப்பு-ச/
  25. சீதுவை ஹோட்டலில் தங்கியிருந்த உக்ரைன் பிரஜை மூலமே கொரோனாவின் இரண்டாவது அலை ஆரம்பமானது- சிங்கள செய்தித்தாள் தகவல் Rajeevan Arasaratnam October 26, 2020சீதுவை ஹோட்டலில் தங்கியிருந்த உக்ரைன் பிரஜை மூலமே கொரோனாவின் இரண்டாவது அலை ஆரம்பமானது- சிங்கள செய்தித்தாள் தகவல்2020-10-26T10:16:55+05:30 FacebookTwitterMore உக்ரைனிலிருந்து வந்த விமானபணியாளர்கள் குழுவை சேர்ந்த ஒருவரே இலங்கையில் இரண்டாவது சுற்று கொரோனா பரவலிற்கு காரணம் என அருண செய்த்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. துருக்கியிலிருந்து வந்த விமானத்தில் இலங்கை வந்த உக்ரைன் பிரஜைகள் சீதுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என அருண தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அறிக்கையில் புலனாய்வு அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன. துருக்கியிலிருந்து வந்த இலங்கை விமானத்தில் உக்ரைனை சேர்ந்த 11 விமானபணியாளர்கள் இலங்கை வந்தனர் அவர்கள் சீதுவையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர் என அருண தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளமை உறுதியானதை தொடர்ந்து அவர் கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என அருண தெரிவித்துள்ளது. ஹோட்டலில் தங்கியிருந்த ஒருவர் பாதிக்கப்பட்டதால் அவருடன் ஹோட்டல் பணியாளர்களையும் தனிமைப்படுத்தவேண்டும் ஆனால் ஹோட்டல் நிர்வாகம் இதனை பின்பற்றவில்லை என சிங்கள செய்தித்தாள் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட ஹோட்டலின் 60 பணியாளர்களில் 18 பேர் தங்கள் வீடுகளுக்கு சென்றுவருபவர்கள், அவர்களில் ஐவர் இதுவரை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அருண தெரிவித்துள்ளது. ஹோட்டல் பணியாளர்களிடம் பிரன்டிக்ஸ் தொழிலாளர்களிடம் காணப்பட்ட வைரஸ்கள் ஒரே மாதிரியானவையாக காணப்படுகின்றன இது இரண்டாவது அலை சீதுவ ஹோட்டலில் இருந்தே ஆரம்பமானது என்பதை இது புலப்படுத்தியுள்ளது என அருண குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/83191
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.