Everything posted by நன்னிச் சோழன்
-
தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
- 382 replies
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
- LTTE Flag - November 01, 1994
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- last flag of liberation tigers of Tamil Eelam aka LTTE or Tamil Tigers
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- 'தமிழன் கனவு' என்ற ஈழத் தமிழரின் எதிர்காலத்தை அன்றே எதிர்வுகூறிய புத்தகம்
தமிழன் கனவு நூல் கிடைத்தது... எமது இனத்தில் எதிர்காலத்தை அப்படியே கூறும் நூல்.... முற்றாக வாசித்தேன்... எழுதியிருப்பது விளங்குகிறது, ஆனால் விளங்கவில்லை. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81- யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் மாற்றுக் கருத்தாளர்கள்! அ.நிக்ஸன்
யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் மாற்றுக் கருத்தாளர்கள்! -- ---- ----- *இவர்கள் தமிழர்களை சிதைக்கும் அரசியல் கருவிகள். *செம்மனி பேசும் நிலையில் ரணில் கைது *முறிந்த பனைமரக் குழுக்களின் தொடர்ச்சி *ஜெனீவா கூட்டம் ஆரம்பிக்கவுள்ள நிலையில்... -- ---- --- மாற்றுக் கருத்து என்ற போர்வையில் தமிழர்களின் "அரசியல் விவகாரம்" என்ற பிரதான இலக்கை திசை திருப்ப - மலினப்படுத்த பலர் பலவிதமான விடயங்களைக் கையில் எடுக்கின்றனர். 2009 இற்குப் பின்னர் இத் தன்மை வெவ்வேறு வடிவங்களில் உருவெடுத்து முளைத்துள்ளது. முறிந்த பனைமரக் குழுக்களிடம் இருந்து 1980 களில் ஆரம்பித்தது தான் இந்த மாற்றுக் கருத்து. உண்மையில், விடுதலை வேண்டி நிற்கும் இனம் ஒன்றுக்குள் வரக் கூடிய மாற்றுக் கருத்து என்பது, அந்த இனத்தின் விடுதலை உணர்வுக்கு மற்றொரு வகிபாகத்தில் அறிவுசார்ந்து உரமூட்டுவதாக அமைதல் வேண்டும். ஆனால் ஈழத்தமிழர்களை சிதைப்பதற்கே மாற்றுக் கருத்து - ஜனநாயகம் - என்று கட்டமைக்கப்படுகிறது. இந்த போலியான மாற்றுக் கருத்தாளர்கள் யார் என்று பார்த்தால்---- A) தமிழ் பேசத் தெரியாத ஆங்கிலம் பேசும் தமிழர்களாக இருப்பர். B) அல்லது சிங்களம் கலந்த தமிழர்களாக இருப்பர். C) அல்லது புலி எதிர்ப்பாளர்களாக இருப்பர். D) அல்லது கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள இடதுசாரி - முற்போக்கு வாதம் பேசும் தமிழர்களாக இருப்பர். முற்போக்குத் தமிழ் இலக்கியவாதிகள் சிலரும் இந்த மாற்றுக் கருத்தாளர்களுக்குள் அடங்குவர். இந்த போலியான மாற்றுக் கருத்தாளர்கள் என்ன செய்வார்கள் என்றால்---- தமிழ்த் தேசிய நோக்கு நிலை எப்போது எழுச்சி அடைகிறதோ அல்லது தீவிரமாக பேச ஆரம்பிக்கப்படும் சூழல் தென்பட்டால், உடனடியாக யாழ்ப்பாணத்துக்குப் படையெடுப்பார்கள். அல்லது கொழும்பு அரசியலில் ஏதேனும் திடீர் அரசியல் சர்ச்சைகள் நடக்கும் (Sudden Political Controversy) உடனடியாக நடந்த சில உதாரணங்கள் -- 1) செம்மணி விவகாரம் கொழும்பில் உள்ளக ரீதியாக பேச ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிலையில்தான் ரணில் கைது நடந்திருக்கிறது. 2) இச் சூழலில்தான் மாற்றுக் கருத்தாளர்கள் யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்யப்படுகிறார்கள். 3) கொழும்புத் துறைமுக மனித புதை குழி பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். இது பற்றி சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் கூட்டம் ஒன்றும் நடந்துள்ளது. துறைமுக மனித புதை குழி பற்றி தூதுவர்களுக்கும் விளக்கமளிப்பது இந்த மாற்றுக் கருத்தாளர்கள் தான். 4) இந்த மாற்றுக் கருத்தாளர்கள்தான் ஜேவிபி காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருடன் சமப்படுத்தி வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் பற்றிய நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட தயார்படுத்தி வருகின்றனர். 4) ஆணையாளரின் உருப்படியில்லாத உள்ளக விசாரணை என்ற, அரசாங்கத்தைக் காப்பற்றும் முன்னோடி அறிக்கையைக் கூட (Pioneer Report to Protect the Government) நீர்த்துப் போகச் செய்யும் நோக்கில், மாற்றுக் கருத்தாளர்களின் கூட்டங்கள் - ஆய்வுகள் யாழ்ப்பாணத்தில் அடுத்த மாத ஆரம்பத்தில் இருந்து நடக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே இலங்கைத்தீவில் மாற்றுக் கருத்தாளர்கள் என்பதன் பொருள், ”ஈழத்தமிழர்களை சிதைக்கும் அரசியல் கருவிகள்” (Political Tools) அ.நிக்ஸன்- பத்திரிகையாளர் https://www.facebook.com/amirthanayagam.nixon- உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 5 பொதுவாகத் திருக்கோணமலை மாவட்டத்தில் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போவதானால் எத்தனை மைல் நடக்க வேண டும் என்று சொல்லமாட்டார்கள். எத்தனை மணித்தியாலம் நடக்க வேண்டும் என்றே கூறுவார்கள். எட்டு மணித்தியால நடை, பத்து மணித்தியால நடை என்பார்கள். இந்தப் பிரயாண ஆரம்பத்தில் "இந்தப் பிரயாணம் தான் கொஞ்சம் கஷ்டம். பிற்பகல் 2.30க்குப் புறப்பட்டால் அதிகாலை 4.00 மணிக்கு எங்களுடைய நடையில் (திருமலை மாவட்டப் போராளிகளின்) போய்ச்சேரலாம். உங்களுடைய நடைக்கு அதிகாலை 5.30 மணிசெல்லும் என நினைக்கின்றேன் என்றார் பதுமன். இடையில் எங்குமே தங்கமுடியாது. இந்தப் பயணத்தின்பின் நீங்கள் பொது மக்களைச் சந்திக்கக் கூடியதாக இருக்கும் என்றார். 14-9-90 அன்று திருமலையில் கால் வைத்த நாம் 23-9-90 அன்றுதான் பொதுமக்களைக் கண்ணால் காணப்போகின்றோம். (ஏற்கனவே நான் குறிப்பிட்ட வாழைத்தண்டில் இருந்த காய்களை மக்கள் விழுந்தடித்துப் பொறுக்கி முண்டி விழுங்கிய சம்பவம் 25-9-90 பிரயாணத்தின் போது நடந்தது) இதுவரை நாம் சந்தித்த முகாம்களில் இருந்தவர்கள் பொது மக்களைக் காணமுடியாது? அவர்களுடைய உலகம் இந்தக் காடுகளும், போராளிகளும் தான். நான் ஒருநாள் ஒரு போராளியைச் சந்தித்து இதுபற்றி உரையாடியபோது, தற்போதைய போரைவிட ஒரு நெருக்கடி யானநிலை இந்திய இராணுவத்துடனான போரில் இருந்தது என்று குறிப்பிட்டார். தனக்கு இரு மருமக்கள் இருக்கின்றார்கள் என்றும், அவர் களின் நினைவு தன்னை அடிக்கடி வாட்டும் என்றும் குறிப்பிட்டார். தான் அப்போது குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் இருந்த பகுதியை அண்டிய காடுகளில் இருந்ததால் காலையில் எட்டு மணியளவில் உயரமான மரங்களில் ஏறி நின்று பாலர் பாடசாலைக்குச் செல்லும் சிறு குழந்தை களைக் கண்டு ஆனந்திப்பதாகக் குறிப்பிட்டார். அந்தக் குழந்தைகளைக் காணு ம் போது தனது மருமக்களைப் பார்க்கும் உணர்வு ஏற்படுவதாகவும் கூறினார். “மென்மையான மனது கொண்டவர்களே போராளிகளாகின் றார்கள். அவர்களால்தான் தமது இனத்திற்கெதிரான அடக்குமுறை களைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதைச் சகித்துக்கொள்ளும் மனம் உடையவர்களே போராட்டத்துக்கு வெளியில் இருப்பவர்கள்” என்று ஒருமுறை போராளி சீலன் (சார்ள்ஸ் அன்ரனி) கூறியது நினைவுக்கு வந்தது. எமது பயணத்தில் இன்னோர் அம்சம் ஓர் இடத்திலிருந்து எம்மை அழைத்துச் செல்லும் போராளிகள் நாம் சென்று அடையப்போகும் முகாமைச் சேர்ந்தவர்களை இடையில் சந்தித்து எம்மை அவர்களிடம் ஒப்படைப்பார்கள். திரு. பதுமனும் அவரது மெய்ப்பாதுகாவலர் சிலரும் மட்டுமே எம்முடன் திருமலை மாவட்ட எல்லைவரை வருவார்கள். ஏனெனில் ஒவ்வொரு முகாமைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் அந்தப் பகுதிக் காடுகளைப் பற்றித் தெரியும். இடையில் இராணுவத்துடன் மோதல் ஏற்பட்டாலும் அவர்களால் மட்டுமே சரியான பாதையில் எம்மைக் கொண்டு போய்ச்சேர்க்க முடி யும். இன்றைய பிரயாணம் எட்டு இராணுவ முகாம்களைக் கடக்க வேண்டிய பிரயாணம் என்பதைத் தெரிந்துகொண்டோம். ஒரு முகாமைப் பகலில் கடந்துவிட்டோம். இந்தப் பிரயாணத்தில் யாராவது கதைக்கவோ, இருமவோ முடியாது. முகாம்களுக்கு மிக அருகிலேயே எமது பிரயாணம் தொடர்வதால் சப்பாத்து ஒலியைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. ஏற்கனவே செய்த ஏற்பாட்டின்படி எம்மைப் பொறுப்பெடுக்கப் போகும் குழுவும் தனது பிரயாணத்தைத் தொடங்கியிருந்தது. பயணத்தின் இடையில் இராணுவ முகாம்களில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுப் பபிற்சிச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. இரவானதும் முகாம்களின் வெளிச்சம் பிரகாசமாய்த் தெரிந்தது. மிக அருகருகே இருந்த இந்த இராணுவ முகாம் ஏழும் ஒரே இரவில் கடக்க வேண்டியவை இந்த ஏழு முகாமில் எந்த முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் எமது பாதையில் படுத்திருந்து தாக்கினாலும் சண்டை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. முழுவதும் வயல்கள். இரவு வந்ததும் ஒருவாறு நான்கு முகாம்களைக் கடந்து விட்டோம். ஐந்தாவது முகாமை நோக்கி நேராக நடக்கவேண்டும். முகாமுக்கு நூறு யார் தூரத்திலேயே எமது பாதை மாற்றப்பட்டது. அந்த இடத்தில் எம்மைப் பொறுப்பேற்க அடுத்த குழு தயாராக இருந்தது. புதிய குழுவுடன் இணைந்து பிரயாணத்தைத் தொடர்ந்தோம். ஆறாவது முகாமை அண்மித்ததும் அங்கிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. பயத்தினால் இரவில் அவ்வாறு இடையிடையே சுடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டோம். இதன்பின் தான் சிரமம்தெரிந்தது. முழுக்க சேறுகள் நிறைந்த பாதை. அப்போதுதான் நாம் ஒரு பொது மகனைக் கண்டு கொண்டோம். அப்பாடா! இப் பொதுமகன் எமக்கு வழிகாட்ட வந்தவர், இப் பகுதியை அங்குலம் அங்குலமாகத் தெரிந்துகொண்டவர். பெரும்பகுதி முழங்கால் அளவு சேறு, துப்பாக்கிகளையும், முதுகில் தொங்கும் சுமையான பைகளையும் சுமந்துகொண்டு போராளிகள் படும்பாடு பெரும்பாடுதான். பொத்துப்பொத்தென்று விழுவார்கள் உடல் முழுவதும் சேறு பிரளும். சேற்றை எண்ணிச்சப்பாத்தைக் கழற்றினால் பின்பு வரும் வயல்களில் உள்ள தொட்டால் சுருங்கி கால்களை விறாண்டும். திருப்பி சப்பாத்தைப் போட முடியாது. அடுத்த சில நிமிடங்களில் சேறைச் சந்திக்க வேண்டியிருக்கும். வழிகாட்டியாக இருப்பவர் ஒவ்வொரு இடத்திலும் நின்று இங்கே முள்ளுக்கம்பி உண்டு, இங்கே பள்ளம் உண்டு என்று இரகசியமாகக் கூறுவார். முதுகில் சுமை. நடைக் கஷ்டம். நடக்கும்போதே இப்போராளிகள் தூங்குவதும் உண்டு. தூக்க நடை நடப்பவர்கள் வயல் வரம்புகளில் இடறி விழுவார்கள். வரிசையாகச் செல்லும் போது சிலர் நின்ற நிலையிலேயே தூங்குவார்கள். பின்னால் வருபவர் முதுகில் தட்டி முன்னே போ என்று சமிக்ஞை செய்யவேண்டும். இந்தப் பகுதியில் நடக்கும்போது (எமக்கு அடுத்த பயணத்தில்) ஒருவர் தூக்கத்தில் ஒரு கிணற்றில் விழுந்து விட்டார். ஒருவாறு எட்டு முகாம்களையும் கடந்து விட்டோம். ஆனால் போக வேண்டிய இடம் இன்னும் உண்டு. அதிகாலை 3.15 மணியளவில் சோர்ந்து படுத்து விட்டோம். அப்பாடா என்ன சுகம்! இப்போதும் சிலர் காவலில் நின்றார்கள். மீண்டும் காலை 6.45க்கு பயணம் தொடங்கியது. இந்தப் பயணம் காலை 10.30 வரை நீடித்தது. இரவு மாத்தயா அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவந்த முட்டைமாவில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து உள்ளங் கையில் கொட்டிச் சாப்பிட்டதைத்தவிர வேறுசாப்பாடே இல்லை. இனிக்கதைக்கலாம் என்றார் பதுமன். "என்ன பதுமன் இவ்வளவு கஷ்டமா?” என்று கேட்டோம். ‘உங்களுக்காகத்தான் இந்தப்பாதை. இல்லாவிட்டால் கழுத்தளவு தண்ணீர், சேறு, காடுகளுக்குள்ளால் தான் போகவேண்டும்!' என் றார். வழிவழியே ஆற்றங்கரைகள், காடுகளில் மக்கள் கூட்டம்கூட்டமாக இருப்பதைக் கண்டோம். இவர்கள் அகதி முகாமுக்கு போகவில்லையா? என்று வழிகாட்டியாக வந்த அந்தப் பொதுமகனைக் கேட் டோம். 'நான்கூட ஒருநாள் அகதிமுகாமில் இருந்துள்ளேன். ஆனால் முஸ்லிம் ஊர் காவல் படையினரின் தொல்லை டொறுக்கமுடிய வில்லை. அது தான் ஓடிவந்து விட்டேன் என்னைப்போல் வெளியேறியவர்கள்தான் இவர்கள்!' என்றார். ‘அகதி முகாம்களில் என்னதான் நடக்கிறது?" என்று கேட்டேன். எதையென்று சொல்ல...' என்றவாறே தொடர்ந்தார். (தொடரும்)- உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 4 நீங்கள் குறிப்பிடும் பகுதியிலுள்ள மக்கள் உயிர் வாழ்வதற்கு ஏதோ சாப்பிட வேன்டும்தானே? என்ன செய்கிறார்கள்? என்று கேட்டேன். வேதனையுடன் பெருமூச்சு விட்டவாறே தொடர்ந்தார். ஈச்சமரத்தின் குருத்தை வெட்டிச் சாப்பிடுகிறார்கள். காட்டில் கிடைக்கும் சில வகைக் கொடிகளின் கீழ் உள்ள கிழங்குகளைப் பிடுங்கிக் கொண்டு வருகிறார்கள், தொலைதூரத்துக்குச் சென்று குளங்களில் மீன்பிடித்து அதை மட்டுமே சாப்பிடுகிறார்கள். இவர்கள் என்ன நடந்தாலும் தமது மண்ணை விட்டுச்செல்லமாட்டார்கள். தமது மண்ணைப் பிரிவது என்பது இவர்களால் முடியாத காரியம். தற்போதைய போரில் கூட இலக்கந்தையில் 10 பேரும், மட்டப்புக்களியில் 35 பேரும் இராணுவத்தினால் கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்டார்கள். ஆனாலும் அகதிகளாகச் செல்வதற்கு இவர்கள் முயலவில்லை என்றார். ஈச்சைமரமும், கிழங்குகளும் மீனும் எத்தனை நாட்களுக்குக் கிடைக்கும் என்று கேட்டேன். ஒரு நாள் அந்தப்பகுதியால் எமது போராளி ஒருவன் சென்றான். ஏதோ தேவைக்கு தீப்பெட்டி தேவைப்பட்டது. ஒரு வீட்டில் சென்று தம்பி தீப்பெட்டி இருக்கிறதா? என்று கேட்டான். "அண்ணை நாங்கள் அடுப்பு மூட்டியே ஐந்து நாட்கள். எங்களிடம் தீப்பெட்டி கேட்கிறீர்களே! என்றான் அந்தச் சிறுவன்" என்றார் ரூபன். நான் அதிர்ந்துபோய் நின்றேன். இதற்கே இப்படி என்றால் இனிச் சொல்லப் போவதை நீங்கள் கேட்டால்... என்றவாறே தொடர்ந்தார். பசியின் கொடுமையால் உப்பூரலில் இருந்து தோப்பூர் என்ற முஸ்லம் கிராமத்துக்கு பிச்சை எடுக்கச் சென்ற முதியவர்களை 13.9.90 அன்று அங்குள்ள முஸ்லிம் ஊர்காவல் படையினர் அடித்துக் கொன்றுள்ளனர். சிலரைக் காயப்படுத்தியுள்ளனர் என்றார் ரூபன். கதிர்காமம் மாரியான் (75 வயது), மாரியான் வைரவன் (75 வயது) இந்த இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். கந்தன் வைரவன் (70வயது), சீனித்தம்பி கந்தையா (75 வயது), வைரவன் சித்திரவேல் (60 வயது) ஆகியோர் நடமாட முடியாதளவுக்கு காயப்படுத்தப்பட்டுள்ளனர்? அத்துடன் தமிழருக்கு எவரும் பிச்சைகொடுக்கக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர் என்றார். இது மட்டுமல்ல அடுத்த நாள் 14.9.90 அன்று காலை காணாமற்போன இவர்களை தேடிப் போன ஆறுபேரையும் முஸ்லிம் ஊர்காவல் படையினர் பிடித்துக் கொண்டனர். இவர்களின் நிலைமை என்னவென்று இன்னும் தெரியவில்லை. எனக்கென்றால் இவர்கள் உயிரோடிருப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை என்றார். உப்பூரல், முதியவர்கள் கொல்லப்பட்டு, காயமடைந்த அதே தினம் 13.9.90 அன்று நல்லூரில் இருந்து தோப்பூர் சென்ற க. வைரமுத்து (65 வயது), கந்தையா (76 வயது) வைரன் முத்துக்குமார் (46 வயது) ஆகியோரையும் கடுமையான சித்திரவதைக் குள்ளாக்கியுள்ளனர் முஸ்லிம் ஊர்காவல்படையினர். வயது போன இவர்களையே இப்படிச் செய்கிறார்கள் என்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? இந்தப் பகுதியில் உள்ள மக்களின் பிரதான உணவு சோளம். அண்மைய இராணுவ நடவடிக்கையின்போது இவர்களின் வீடுகளில் இருந்த சோளத்தை இராணுவத்தினர் எரித்துள்ளார்கள். பிச்சைக்குப் போனால் முஸ்லிம் ஊர்காவல் படையினர் கொல்கின்றார்கள். அகதி முகாமுக்குப் போனால் அங்கும் மரணம். இந்த நிலையில் செஞ்சிலுவைச் சங்கம் அகதிமுகாமுக்குப் போனால்தான் நிவாரணம் தரமுடியும் என்று சொல்கிறது என்றார் ரூபன். தொடர்ந்து இதையெல்லாம் நீங்கள் கண்ணால் தானே காணத்தானே போகிறீர்கள் என்றார். அவர் கூறியது போலவே அதற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கத்தான் செய்தது. திரு. மாத்தயாவின் வருகை திருமலை மாவட்டத்திலுள்ளதமிழ் மக்களுக்குத் தெரிந்து விட்டது. ஆங்காங்கே அகதி முகாம்களிலும், காடுகளிலும் இருப்போர் எப்படியோ நாம் போகும் பாதையில் கூடிவிடு வார்கள். இவர்களுக்கே சாப்பாடு இல்லை. அப்படியிருந்தும் ஒரு வாழைக்குலையுடன் நின்றார்கள். ஏழ்மை நிலையில் இருந்தபோதும் அவர்களின் இந்தப்பண்பு நெகிழ வைத்தது. அவர்கள் கொடுத்த வாழைக்குலையைப் பெற்றுக்கொண்டோம். ட்றக்டரில் இருந்தபடியே அனைவருமாகச் சாப்பிட்டோம். வாழைக்குலையின் அடியில் சிறிய காய்கள் இருந்தன. குறிப்பிட்ட இப்பகுதிக் குள்வந்தபோது தான் தண்டை வெளியே வீசினோம். எங்கிருந்தோ இதைக் கவனித்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடிவந்து இதையெடுத்து ஆளுக்கொரு காய்களாகப் பிடுங்கினார்கள் அவசர அவசரமாக முண்டி அவர் விழுங்கினார்கள். அவர்கள் ஓடி வந்த வேகமும், காய்களைப் பிடுங்கியவிதமும், அவர்களின் கோலமும் எம்மனதில் சம்மட்டியால் அறைந்தது போலிருந்தன. (தொடரும்)- ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சரத் வீரசேகர குழு
எந்த அமர்வாலும் அம்மன் சல்லிக்கும் பயனில்லை ....- Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Text Documentary
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Manned Explosive Float/ MEF 1 (Class Name lost in time) OBM (1) Front side: Rear side: 'A Sea Black Tiger waving one last time before going for a mission with his MEF' (craft name lost in time) At least 1 - A small surface explosive cylinder that floats (an LPV) on the water, is propelled by a 2 HP outboard motor (OBM), and guided by a diver/ operator toward its target. It's not a torpedo. Length: 8.2 feet Breadth: 3.8 feet- 32 replies
-
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
-
Tagged with:
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
- ltte boats
- ltte stealth boats
- ltte submarine
- ltte submarines
- ltte sucide boats
- ltte suicide vessal
- sea black tigers boats
- sea tigers
- sea tigers boats
- sea tigers eelam
- sea tigers sri lanka
- sea tigers srilanka
- tamil eelam naval crafts
- tamil eelam navy
- tamil tigers
- Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Text Documentary
Sea Black Tigers Vessel The following reply boxes in this forum thread will cover the different types and classes of Sea Black Tigers vessels that were used. The explosive-laden crafts used by them are called 'Sakkai Vandi.' (meaning Explosive Wagon) in Tamil by the Sea Tigers. Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Human Torpedoes - Under Construction 1 Not named IBM Img. Credits: HI Sutton Real image: Not named 1 2 Not named IBM Not named 1 3 Not named IBM Not named 1 - The vertical tube in the middle is a crude periscope or snorkel for the operator. - The cutout in the mid-section is where the operator would sit.- 32 replies
-
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
-
Tagged with:
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
- ltte boats
- ltte stealth boats
- ltte submarine
- ltte submarines
- ltte sucide boats
- ltte suicide vessal
- sea black tigers boats
- sea tigers
- sea tigers boats
- sea tigers eelam
- sea tigers sri lanka
- sea tigers srilanka
- tamil eelam naval crafts
- tamil eelam navy
- tamil tigers
- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
தியாக தீபம் திலீபனிற்கான நினைவுக்கல் 26-9-2004 அன்று விடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்தில் எழுப்பப்பட்டது. இது இந்திய துணைத்தூதரகம் யாழில் நிறுவப்பட்டபின் 2012 ஆம் ஆண்டு அவர்களின் உத்தரவிற்கமைவாக அடித்து நொறுக்கப்பட்டது.- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
தியாகதீபத்தின் நினைவிடம் நல்லூர் "நல்லூரின் வீதியில் நடந்தது யாகம் நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம் தியாகத்தின் எல்லையை மிஞ்சிய பிள்ளை திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை" இடிக்கப்பட்டு 7 ஆண்டுகளின் பின் மீண்டும் திறக்கப்பட்டது: 25/08/2003 புதிய நினைவுத்தூணின் படிமங்களே இவையாகும் யாழ் '2004' 'திறப்பு விழாவில்'- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
'தியாகதீபம்' லெப். கேணல் திலீபன் நினைவுத்தூண் யாழ்ப்பாணம் ~1991-1996- Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Text Documentary
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Diver Propulsion Vehicle 1 (class name lost in time) - (craft name lost in time) 1 - Indigenously produced DPV 2 M-tex - - At least 2 Procured 3 Sea-Doo - - 8+ Procured 4 APOLLO AV-1 - The orange DPVs shown in the images above, located in the third row. - 2+ Procured It is widely speculated that a few of these Diver Propulsion Vehicles were destroyed at sea while being transported into de facto Tamil Eelam. In addition, Sea Tigers also possessed a large number of underwater equipment, including IDA71 rebreathers, AQUACOM STX-101 SSC units, BAUER Mariner 200 air compressors, and more. Sea Tigers also used a few improvised underwater breathing rigs, likely for infiltration, made by combining two oxygen tanks and an IDA71 rebreather on a mounting tray, similar to the one shown below. Image 1: improvised underwater breathing rigs *****- 32 replies
-
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
-
Tagged with:
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
- ltte boats
- ltte stealth boats
- ltte submarine
- ltte submarines
- ltte sucide boats
- ltte suicide vessal
- sea black tigers boats
- sea tigers
- sea tigers boats
- sea tigers eelam
- sea tigers sri lanka
- sea tigers srilanka
- tamil eelam naval crafts
- tamil eelam navy
- tamil tigers
- காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 30ஆம் திகதி வடக்கு, கிழக்கில் போராட்டம் ஏற்பாடு
ஆடுகள் நனைகிறது என்று இந்த கோவிந்தன் ஓநாய் அழுகிறது... இவன் செய்யாத படுகொலைகளா? பச்சை கொலைகாரப் பாவி... இவன்ட தம்பி ரேப்பிற்கு புகழ் போனவன் கோவிந்தன் கருணாகரம் எ ஜனா (ரெலோ) என்பவர் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காப் படைத்துறையுடன் இணைந்து மட்டக்களப்பில் பெருமளவான படுகொலைகளில் ஈடுபட்டவராவர். இவர் தொடர்பில் பல இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவலைத் தொகுத்து கோர்வையாக கீழே தந்துள்ளேன் குறிப்பாக, 01/12/1990 அன்று வன்புணர்ச்சிக்குள்ளாகி படுகொலையான மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரியின் வணிகவியல் பிரிவு மாணவியான ஆரையம்பதியைச் சேர்ந்த நல்லதம்பி அனுஷ்யா (05/04/1972 - 01/12/1990) என்ற விஜி அவர்களின் படுகொலையுடன் தொடர்புடையவன் ஜனா ஆவான்; அமரர் விஜி அவர்கள் பரதநாட்டியத்திலும் மெய்வல்லுநர் போட்டிகளிலும் சிறந்து விளங்கியதோடு மிகவும் வடிவானவருமாவார். இவர் கல்லடியில் தங்கியிருந்து படித்து வந்தார். தன் விடுமுறைக் காலங்களின் போது தனது சொந்த ஊரான ஆரையம்பதிக்கு வந்து போவது வழக்கமானதொன்றாகும். அவ்வாறு வந்து செல்லும் வேளையில் அவரை கண்ணுற்ற ரெலோ காவாலிகள் அவரை அடைய வேண்டுமென்ற இச்சையால் இவரது தாய் மாமனான மூதூர் முற்றுகையின் போது மேஜர் கஜேந்திரனுடன் வீரச்சாவடைந்த 2ம் லெப். கோபி (நாகமணி ஆனந்தராசா) அவர்களைக் காரணம் காட்டி இரவில் வந்து தொல்லை கொடுத்துச் சென்றனர். இதனால் இவர் இரவு நேரங்களில் அருகிலிருந்த தோழியின் வீட்டில் சென்று தங்கியிருந்தார். அப்போதொருநாள் இரவு அன்னாரை ரெலோ காவாலிகளான ராபர்ட் (சாவொறுப்பு), வெள்ளையன் (சாவொறுப்பு), லோகேஸ்வரராஜா எ ராம், அன்வர் (சோனக இனக்குழுவைச் சேர்ந்தவன்/ சாவொறுப்பு) மற்றும் இந்த ஜனாவின் தம்பியான கோவிந்தன் கருணாநிதி எ ரெலோ மாமா (30.10.2017 அன்று லண்டனில் பார்வை இழந்த நிலையில் இயற்கையால் சாவடைந்தான்) ஆகியோர் அவரது தோழியின் வீட்டில் வைத்து கடத்திச் சென்று வன்புணர்ச்சி செய்த பின்னர் படுகொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிச் சென்றார்கள். கடத்தப்பட்டவுடன் அன்றைய கால கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ரெலோ பொறுப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்டப் பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டுவந்தவனுமான இவனிடம் சென்று கேட்ட போது தாங்கள் கைது செய்யவில்லை என்று கூறி மழுப்பினான், அன்னாரின் குடும்பத்தாரிடம். இதில் இன்னும் கொடுமையென்னவெனில் இவரது சடலத்தை எடுக்க வேண்டுமெனில் அவர் ஒரு புலி உறுப்பினர் என்று கையெழுத்து வைத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு சிங்கள அரசு தரப்பிலிருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டமையே ஆகும். இத்தனைக்கும் இவர் எந்தவொரு இயக்கத்தையும் சாராதவராவார். அத்துடன் 22.10.1990 அன்று படுகொலையான "நாட்டுப்பற்றாளர்" சின்னத்துரை பூரணலட்சுமியின் படுகொலைக்கு உத்தரவிட்டவனும் இவனே ஆவான்; இவரை அவனது உத்தரவிற்கு அமைவாக அன்னாரின் வீட்டிற்கு வந்து கிழவி ரவி, வெள்ளை (சாவொறுப்பு), மற்றும் ராபட் (சாவொறுப்பு) ஆகியோரைக் கொண்ட ரெலோ கும்பல் சுட்டுத் தள்ளியது. மேலும் ஜனா நேரடியாகவே தன்கையால் 2ம் லெப். கலா (பொன்னம்பலம் சதானந்தரத்தினம்) என்ற தமிழீழ விடுதலை வீரனை 19.04.1988 அன்று செட்டிபாளையத்தில் வைத்து சம்மட்டியால் கொன்றான் என்பது குறிப்பிடத்தக்கது.- ஈழத் தமிழர்களுக்கு முஸ்லிம்கள் செய்த படுகொலைகள்
இதற்குள் ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் யாவும் திகதி வாரியாக 1954ம் ஆண்டு முதல் 2009 வரை பதியப்பட்டுள்ளது.- மே 17, 2009 கேப்பாப்பிலவு ஊடறுப்புச் சமர்
இதற்குள் மே 17, 2009 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை வெளியேற்ற எடுத்த கடைசி முயற்சியான கேப்பாப்பிலவு ஊடறுப்புச் சமர் தொடர்பான தகவல்கள் உள்ளது.- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
(இனந்தெரியாதோரின்) நினைவுச்சின்னம் யாழ்- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
(இனந்தெரியாதோரின்) வீரவணக்க நினைவாலயம் யாழ்- 'Negapatnam van Choromandel', 18th century Dutch engraving of Nagapattinam after original engraving by Johannes Kip c. 1702
- Colachel port in 1900s.jpg
From the album: Different types of boats used by Tamils historically
- batticaloa harbour.jpg
From the album: Different types of boats used by Tamils historically
- உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 3 திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து வெளியேறியோரில் கணிசமானோர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் சென்று விட்டனர். இவர்களில் அநேகர் யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவுக்கும் போய்ச் சேர்ந்து விட்டனர். ஏற்கெனவே நடைபெற்ற இனஅழிப்பு நடவடிக்கைகளின் போது இந்தியாவுக்குச் சென்றவர்கள் அங்கே ஏதாவதொருதொழில் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. இம்முறை இந்த வசதிகள் எதுவும் இல்லை. அப்படி இருந்தும் இங்கிருந்து போனவர்கள் படகு கவிழ்ந்தும், கடற்படைசுட்டும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவருகிறது. திருமலை மாவட்டத்தில் தம்பலகாமம் மகாவித்தியாலயம், கிண்ணியா ஜி.பி.எஸ் கிளப் பன்பேர்க், கந்தளாய் பரமேஸ்வரா வித்தியாலயம், இறால் குழி பாடசாலை, நிலாவெளி தேவாலயம், கோபாலபுரம் பாடசாலை, சாம்பல் தீவு தேவாலயம், பச்சைநூர் பாடசாலை, பச்சைநூர் தேவாலயம். 59 ஆம் கட்டை பாட சாலை, மூதூர் தியேட்டர், பள்ளிக்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம், சம்பூர் பாட சாலை, கூனித்தீவு பாடசாலை, வெருகல் பாடசாலை, ஆகிய இடங்களில் அகதிகள் தங்கியுளளனர். இதைவிட வெருகல் பகுதி (மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி) கதிரவெளி பாடசாலை வாகரை ஆகிய இடங்களிலும் தங்கியுள்ளனர். இதில் தம்பலகாமம் போன்ற பகுதிகளில் இருப்பவர்களின் நிலை மிகப் பரிதாபகரமானது. இவர்கள் அங்கிருந்து எங்கும் தப்பமுடியாது. தேவையான போது இவர்கள் இழுத்தெடுத்துக் கொண்டு செல்லப்படுவர். எவரும் உயிருடன் திரும்புவது இல்லை என்றார் ரூபன். இவர்கள் பெயர் விபரங்கள் உண்டா? என்று கேட்டேன். இதோ பாருங்கள் என்று பதிவுப் புத்தகத்தை நீட்டினார். ஆனிமாதம் 2ஆம் திகதி (கோவிலடி-65 வயது), ஈஸ்வரன் (வர்ண மேடு - 31 வயது), கோணேச பிள்ளை (வர்ணமேடு-37வயது) ஐயாத்துரை (கள்ளிமேடு - 26 வயது). சுப்பிரமணியம் (கோவிலடி -29 வயது), குட்டி (மேற்குகொலனி-31 வயது)... இப்படியாக பட்டியல் நீண்டு கொண்டே போனது. தம்பலகாமத்தை இராணுவமும் முஸ்லிம் காடையரும் எரியூட்டிய போது இவர்கள் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டனர் என்றார். இப்படியாக ஆடி மாதம். ஆவணி மாதம் என்று முகாமிலிருந்து கொண்டு செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அனைவரின் பெயரும் இருந்தன. (இத் தொடரை எழுதுகையில் கூட 23-10-90 அன்று கிளப்பின் பேர்க் அகதி முகாமிலிருந்து 23 தமிழ் பொதுமக்கள் கூவர் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஊர்காவல் முஸ்லிம் படையினராலும், சிறிலங்கா ராணுவத்தாலும் படுகொலை செய்யப்பட்டனர் என்று செய்தி வந்துள்ளது) என்று கேட்டேன். உயிர் வாழ்வதற்குப் போதுமான உணவு இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள் என்றார் ரூபன் சமூகநல ஸ்தாபனங்கள் எதுவும் இவர்களுக்கு உதவி செய்யவில்லையா என்று கேட்டேன். திருக்கோணமலை மாவட்டத்தில் சமூகநலஸ்தாபனங்களின் கண்ணில் தெரிவது சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும்தான். தமிழர்களை அவர்கள் அகதிகளாகவோ, ஏன் மனிதர்களாகவோ கருதுவது இல்லை என்றார். அவர். எதைக் கொண்டு இ படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அகதிமுகாம்களில் இருந்து அடிக்கடி தமிழர்களைக் கைது செய்கிறார்கள். பச்சைநூர் அகதிமுகாம்களில் இருந்து அடிக்கடி தமிழர்களைக் கைது செய்கிறார்கள். பச்சைநூர் அகதிமுகாமில் இருந்து 42 பேரைக் கைது செய்த சம்பவம் மூதூர் உதவி அரசாங்க அதிபர், செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் முன்னிலையில்தான் நடைபெற்றது. தங்கள் பொறுப்பில் உள்ள முகாமில் இருந்து கைது செய்யப்பட்டவர்கள் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அதேவேளை சிங்கள மக்களின் வயல்களுக்குத் தண்ணீர் தேவையென்பதற்காக இராணுவம் வரப்பயப்படும் இடங்களுக்கு இவர்கள் தண்ணீர் திறந்துவிட வருகிறார்கள். இதிலிருந்து யாருடைய நலனை இவர்கள் முதன்மைப்படுத்துகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். சிலவேளை தமது உயிரைப் பாதுகாக்க இவர்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்றார் ரூபன். அகதிமுகாம்களில் நடக்கும் சம்பவங்களை விளக்கமாகக் கூறுங்கள் என்றேன். இதை நான் சொல்வதைவிட சம்பந்தப்பட்ட மக்களிடம் நீங்கள் நேரடியாகக் கேட்பதுதான் நல்லது. எனினும் ஒரு விடயத்தைக் குறிப்பிடுகிறேன். 13-9-90 அன்று தமது மிதி வெடியின் சக்தியைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக பச்சைநூர் அகதிமுகாமில் இருந்த இருசிறுமிகளை தாம் புதைத்த மிதிவெடிகளுக்கு மேலால் நடந்து செல்லச் சொன்னார்கள் இராணுவத்தினர். இதனால் ஒன்பது வயதுச் சிறுமி காலையும், எட்டுவயதுச் சிறுமி கண்ணையும் இழந்துள்ளனர். வைத்திய பரிசோதனை செய்வதற்கு தடுப்பு முகாமில் இருந்த யூதர்களைப் பயன்படுத்தினான் ஹிட்லர். எமது நாட்டில் இராணுவ பரிசோதனைகளுக்கு தமிழர் களைப் பயன்படுத்துகிறார் என்றார் வேதனையுடன். அகதி முகாமிற்கு வெளியி லும் தமிழர்கள் உண்டா? என்று கேட்டேன். அகதி முகாமில் கைதுசெய்யப்படுவதும், பெண்கள் பாலியல் வன் முறைக்குட்படுத்தப்படுவதும், தொடர்வதால் முகாம்களுக்குச் செல்லப் பயப்பட்டு அனேகர் காடுகளில் வாழ்கிறார்கள். இதைவிட மலைமுந்த லில் 78 குடும்பம், பாட்டாளிபுரத்தில் 100 குடும்பம், வீரமாநகரில் 110 குடும்பம். அரிப்பில் 184 குடும்பம், நல்லூரில் 88 குடும்பம் எந்தவித உதவியும் இல்லாமல் இருக்கிறார்கள் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சமூகநல ஸ்தாபனங் களின் பார்வை மறந்தும் கூட இவர்கள்மீது படுவது இல்லை. இதற்கு அவர்கள் கூறும் காரணம் அகதிமுகாம் இருந்தால் தான் உதவி செய்வோம் என்பது தான். தங்கள் பொறுப்பில் உள்ள அகதிமுகாம்களில் கைது செய்தலையும் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாவதையும் கண்முன்னால் பார்த்தும் இப்படியான பதிலைச் சொல்கிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் இவை இயங்குகின்றன என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என்றார். தலையைப் பிய்த்துக் கொண்டேன். (தொடரும்)- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
(இனந்தெரியா அடிக்கற்களில் ஒருவர் மற்றுமொரு போராளியின்) வீரவணக்க நினைவாலயம் யாழ்- உலகத் தமிழர்களின் முதலாவது தமிழ் நாளேடு: உதயதாரகை | 1841
தங்கள் ஊக்கத்திற்கு நன்றி ஐயை
Important Information
By using this site, you agree to our Terms of Use.