Everything posted by நன்னிச் சோழன்
-
SLNS ship sunk in trincomale.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
உலகத் தமிழர்களின் முதலாவது தமிழ் நாளேடு: உதயதாரகை | 1841
உதயதாரகை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இருந்து வாராந்தம் ஒவ்வொரு வெள்ளி கிழமையிலும் வெளியானது. 1841 இல் இதன் முதல் இதழ் வெளியானது. கிறிஸ்தவ வார இதழாக வெளியான இந்த பத்திரிகை ஈழத்தின் முதலாவது தமிழ் பத்திரிகை யாக காணப்படுகிறது. செய்திகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம் , அறிவியல், மருத்துவம் என பல்துறை சார்ந்த விடயங்களையும் தாங்கி இந்த இதழ் நீண்ட காலமாக வெளியானது. தமிழிலும் ஆங்கிலத்திலும் இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது. தொடக்கத்தில் மாதம் இருமுறை வெளியிடப்பட்ட இது பின்னர் வாரத்துக்கு ஒரு முறை தெல்லிப்பழையில் அச்சிட்டு வெளிவந்தது. இதன் முதல் ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஹென்றி மார்ட்டின், சேத் பேசன் ஆகிய இரு யாழ்ப்பாணத் தமிழர் ஆவர். To read the newspapers: https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88
- uthikkum thisai nookki unnatha payanam.jpg
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 1 திரு. மாத்தயாவின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து திருமலை மாவட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம். ஏற்கனவே அங்கே குறிப்பிட்ட இடத்திற்கு வந்திருந்த திருமலை மாவட்டக் குழுவினருடன் இணைந்து கொள்கின்றோம். கால்நடையாகப் பயணத்தைத் தொடர்கிறோம். எறும்புக்கூட்டம் மாதிரி நீண்ட வரிசையாய்ப்பயணம் தொடர்கிறது. ஒரு காலத்தில் பச்சைப்பசேல் என்றிருந்த வயற்காணிகள் கட்டாந்தரையாகக் காட்சியளிக்கின்றன. செல்லும் பாதையெங்கும் மனித நடமாட்டமே இல்லை. பற்றைகள், முட்கள், சேறு எல்லாவற்றையும் தாண்டி வெகு வேகமாக ஆனால் விழிப்புடன் திருமலை மாவட்டக் குழுவினர் முன்னே செல்கிறார்கள். நாம் போய்ச்சேர வேண்டிய இடம் விரைவில் வந்துசேர்ந்து விடக்கூடாதா? என்ற எதிர்பார்ப்புடன் சென்று கொண்டிருக்கிறேன். வழயில் நாங்கள் கண்ட ஒரேயொரு உயிரினம் மாடுகள் தான். கேட்பார் மேய்ப்பார் யாருமின்றி கூட்டம் கூட்டமாகத் திரிகின்றன. தமிழர்களுக்கில்லாத சுதந்திரம் இந்த மாடுகளுக்கு! தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் அனைவருமே இப்பகுதிகளைவிட்டு வெளியேறி விட்டனர். எங்கோ ஓரிரு ஆண்கள் மட்டும் தங்கள் மண்ணைப் பிரியமனமில்லாமல் குடும்பத்தினரை அனுப்பி விட்டு தாங்கள் மட்டும் அங்கேயே வசித் வருகின்றனர் எனக் கேள்விப்படுகிறோம். இராணுவ முகாம்களின் வெளிச்சம் மட்டும் மிகப் பிரகாசமாக உள்ளது. அதிகாலை 5.30 மணியளவில் தற்காலிகமாகப் பயணம் நிறுத்தப்படுகிறது. அந்த இடத்தில் நாங்கள் தங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணம் தொடங்கும்போது எனக்காகத் தரப்பட்ட இரவு உணவைச் சாப்பிடக் கூடிய நிலையில் நான் இல்லை. உடனே தேவைப்படுவது தூக்கம். சுமார் மூன்று மணித்தியாலங்கள் அயர்ந்த தூக்கம். காலை 8.30 மணியளவில் எழுந்து வெளியே வருகிறேன். நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து அயலைப் பார்க்கின்றேன். கிராமமே வெறிச்சோடிக் கிடக்கின்றது. அங்கொருவர் இங்கொருவராக இருந்தவர்கள் போராளிகளுக்கான உணவைத் தயாரிப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பயணத்தைத்தொடர்வதற்குரிய ஆயத்தநிலையில் திருமலை மாவட்டக் குழுவினர் இருக்கின்றனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் இவர்கள் யாரும் தூங்கிய மாதிரி இல்லை. எனக்கோ ஆச்சரியம். ஏனெனில் நாங்கள் கடந்து வந்த தூரத்தின் இருமடங்கு தூரத்தை இவர்கள் அந்த இரவில் நடந்துள்ளார்கள். எம்மை அழைத்துச் செல்வதற்காக இப்பகுதியில் நடந்து வந்து திரும்ப எங்களுடன் இங்கே நடந்து வந்துள்ளார்கள். அத்துடன் இந்த இடைப்பட்ட நேரத்தில் தூங்கவுமில்லை. அடுத்த காணிக்குள் சில நாய்கள் உலாவுகின்றன. நாயின் சொந்தக்காரர்கள் அகதிகளாகச் சென்றுவிட இந்த மண்ணின் பாதிப்பு நாய்களிலும் தெரிகிறது. சாப்பாடு இல்லாத இந்த நாய்கள் பாவம் என நினைத்துக் கொள்கிறேன். இரவுச் சாப்பாட்டுக்கென எனக்காகத் தரப்பட்ட பார்சல் நினைவுக்கு வரவே அதை நாய்களுக்குப் போடுவோம் என்றெண்ணி அந்த வீட்டின் உள்ளே வருகின்றேன். திருமலை மாவட்டப் பொறுப்பாளர் பதுமன் வருகிறார். வழக்கமான உரையாடல். “இரவு நாங்கள் நடந்த தூரம் எவ்வளவு?” எனது கேள்வி. ஐந்து அடுத்து மூன்று அப்படியே... என்று கணக்குப்போட்டு மொத்தம் 20 மைல்கள் என்கிறார். வியப்பில் ஆழ்கின்றேன். நான் 20 மைல் நடந்து விட்டேன் என்றல்ல. திருமலை மாவட்டப் போராளிகள் 40 மைல்கள் நடந்திருக்கிறார்களே என்பதும், அத்துடன் இந்த இடைநேரத்திலும் தூங்காமல் அடுத்த பயணத்துக்குரிய தயார் நிலையில் இருக்கிறார்களே என்பதும்தான் எனது வியப்புக்குக் காரணம். பதுமனை விட்டு விலகிச் செல்கிறேன். தன்னைச் சூழ இருந்தவர்களிடம் மெதுவான குரலில் பதுமன் கேட்கிறார். “எல்லோரும் சாப்பிட்டாச்சா?” வழக்கமான இந்தக் கேள்வியைத் தொடர்ந்து மௌனம் நிலவுகிறது. மீண்டும் பதுமனே தொடர்கிறார். “எல்லோரும் சாப்பிடாதீங்க சோறு இல்லை” – வழமைக்கு மாறான வேண்டுகோள். சூழ இருந்தவர்கள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. நான் வியக்கிறேன். ஏனெனில் இதுவரை நாளும் ஒரு சராசரிக் குடும்பஸ்தனாக இருந்தவன் நான். மூன்று நேரச் சாப்பாட்டில் எந்த நேரமும் பிந்தக் கூடாது எனக்கு. கொஞ்சம் பிந்தினாலும் மிகவும் சிரமப்படுவேன். அந்தக் காட்சிகள் நினைவுக்கு வந்தன; அத்துடன் இந்த மாதிரியான ஒரு இடத்தில் இரவுச் சாப்பாட்டைக் காலைச் சாப்பாடாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லாமல் நாய்களுக்குப் போட நினைத்த என்னை எண்ணி நான் குறுகிக் கொண்டேன். சாப்பாடு ஓரளவு குறைந்தால் பங்கிட்டுச் சாப்பிடச் சொல்லியிருப்பார் பதுமன். ஆட்களின் தொகையையும் சாப்பாட்டின் அளவையும் நினைத்துத்தான் இவ்வாறான வேண்டுகோளை தனது போராளிகளுக்கு விடுத்துள்ளார் என்பதை நினைக்கும் போது திருமலை மாவட்டத்தின் யதார்த்த நிலையில்ன் கோரத்தைப் புரிந்து கொண்டேன். வெளியே திருமலை மாவட்டப் போராளிகள் மாமரத்தின்கீழ் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்களுக்கான உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. குழுத் தலைவர்களின் அறிவுறுத்தல்களின் பின் அவர்கள் கலைகிறார்கள். ஒருவரோடொருவர் சிரித்துப்பேசியபடி மாங்காய்களைத் தடியால் எறிந்து விழுத்துகிறார்கள். ஏதோ சொட்டைத் தீனுக்காகத்தான் இதை வீழ்த்துகிறோம் என்ற பாவணையில் மாங்காய்களைப் பொறுக்கி கடிக்கிறார்கள். இந்தப் பிரயாண முடிவில் அவர்கள் சென்றடையும் முகாமில்தான் இனி வயிறாரச் சாப்பிட வேண்டும். பதுமன் வருகிறார். திருமலை மாவட்ட போராளிகளின் உணவு நிலைமைபற்றி அளவளாவுகிறேன். “இப்ப ஒருமாதிரி பிரச்சினை யில்லை. I. P. K. F. காலத்தில் தான் ஆகக்கஷ்டப்பட்டிட்டம். இவனெல்லாம் ஒரு தொடர்புமில்லாமல் காட்டுக்குள் பாலைப்பழத்தையும், விளாங்காயையும் சாப்பிட்டுக் கொண்டே சில காலம் இருந்திருக்கிறான். இவனோடை இருந்தவங்களெல்லாம் கடலில் வண்டி கவிழ்ந்து போனதில செத்துப் போனாங்கள்” என்று சொல்லி ஒரு பையனை அறிமுகப்படுத்துகிறார். மனித நடமாட்டமில்லாத பகுதியில் மீண்டும் பிரயாணம் தொடங்குகிறது. கையில் தூப்பாக்கியை ஏந்தியபடி தமது சொந்தமண்ணில் காலடிபதிக்கிறார்கள். 90க்கு மேற்பட்ட படை முகாம்கள் உள்ள இந்த மாவட்டத்தில் உள்ள தமிழனாகப் பிறந்த எவனதும் ஆயுட்காலத்தை அதிகரிப்பது, உயிர்வாழ்வுக்கு உத்தரவாதம் கொடுப்பது இந்த ஆயுதங்களே. இலட்சியத்தில் நம்பிக்கை கொண்ட இவர்களின் பின்னால் கூனிக்குறுகியபடி நானும்... (தொடரும்)
-
pathuman.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
sea Black tigers boat.jpg.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
sea Black tigers boat.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
இந்நெடுந்தொடரானது ஈழநாதம் நாளேட்டில் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த தொடராகும். இது தென் தமிழீழத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையினர், முஸ்லிம் காடையர்கள் மற்றும் சிங்கள படைத்துறை இயந்திரத்தால் அம்மாவட்ட மக்கள் கண்ட அவலங்களை எடுத்துரைக்கிறது. இதனை மூத்த விடுதலைப் போராளி பசீர் காக்கா அவர்கள் எழுதியுள்ளார். இக்கட்டுரையானது 1993இற்கு முன்னர் நூல் வடிவம் பெற்று தமிழீழத்தில் வெளியிடப்பட்டது. எனினும் இதில் தேசத்துரோகி மாத்தையா தொடர்பிலும் வருவதால், அவனது வஞ்சகத்தால், அவன் தொடர்பான அனைத்து ஆவணங்களும் புலிகளால் பொது வெளிப்பரப்பிலிருந்து நீக்கப்பட்ட போது இந்நூலும் மெள்ள மறைந்து போனது. தற்போது காலத்தின் தேவை கருதி, குறிப்பாக முஸ்லிம்கள் தனியினமாக தம்மைக் கருதி எம்மினத்திற்கு இழைத்த கொடூரங்களை வெளிக்காட்டும் முகமாக இந்நூல் மீளவும் எழுத்துணரியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஆயினும் இக்கட்டுரையின் இரு பத்திகள் கிடைக்கப்பெறவில்லை. கிடைக்கப்பெற்ற யாவற்றையும் எனது வேண்டுகோளின் பேரில் திரு. தா. இளங்குமரன் அவர்கள் எழுத்துணரியாக்கம் செய்து தந்தார். அதனை நான் இங்கு வெளியிட்டு வைக்கிறேன். அத்துடன் இதனை மீளவும் நூலாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
-
கடற்புலிகளின் தொலையியக்கி கட்டுப்படுத்தி கடற்கலம்
இது 2022ம் ஆண்டு நான் எழுதிய பதிவின் மீள் வெளியீடு: இது ஒரு உண்மைச் சம்பவம்... சிங்களப் படைகளிடத்தில் உயிருடன் பிடிபட்டு சித்திரவதையால் எம்மை விட்டுப் பிரிந்துவிட்ட எனது கடற்புலி உறவினர் ஒருவர் இறுதிப் போர்க்காலத்தில் தெரிவித்த பற்றியம் இதுவாகும். எனது உறவினர் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவுகள் ஒன்றினது கட்டளையாளர் ஆவார். சமாதான காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு எல்லாம் சென்று அந்தப் பிரிவிற்கான சிறப்புப் பயிற்சிகள் எல்லாம் எடுத்து நாடு திரும்பியவர் ஆவர். (எனது பாதுகாப்பிற்காக அவருடைய பெயரை எழுதவில்லை. அவருடைய நிழற்படம் கூட என்னிடம் இல்லை😢) இவர் இதை கரையா முள்ளிவாய்க்காலிலிருந்த எங்கள் உறவினரின் வீடொன்றில் கடற்புலிகள் தம் படைக்கலன்களை கொண்டுவந்து வைத்த போது தெரிவித்தார். அப்போது அங்கு என்னைத் தவிர எங்கள் பிற உறவினர்களும் அங்கிருந்தனர். அன்றொரு நாள் நண்பகல் போல் அவ்வீட்டின் பதுங்ககழிக்குள் நாங்கள் எல்லோருமிருந்து கதைத்துக்கொண்டிருக்கும் போது அவர் தெரிவித்தார், புலிகளின் புலனாய்வுத்துறையினர் சில நாட்களுக்கு முன்னர் நீர் மட்டத்திற்கு கொஞ்சம் மேலால் பயணிக்கிற தொலையியக்கியால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஆளில்லாத படகு ஒன்றின் மூலம் படைக்கலன்களை வெளியில் இருந்து தருவித்தனர் என்று. அதில் சில ஏகே துமுக்கிகள் மற்றும் அவற்றிகான சன்னங்கள் போன்ற மிகக் குறைந்த அளவிலான வலுவற்ற ஆயுதங்களே தருவிக்கப்பட்டது என்றும் ஆனால் அவை அப்போதைய நிலைமைக்கு போதாது என்றும் கூறி அலுத்துக்கொண்டார். இதைப் அப்போது பகிரக் காரணம், புலிகளிடம் ஏதோ ஒரு புதுவித தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்திருந்தது என்பதை வெளிக்காட்டிடவே. ஆயினும் அது தொடர்பில் அவர் கூறிய ஏனைய விடையங்கள் என்னினைவில் இப்போது இல்லை. இதே போன்று வெளியிலிருந்து தொலைக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் வெடிக்க வைக்கக்கூடிய மிதக்கும் பொருளொன்று 9/03/2000 அன்று திருமலைத் துறைமுகத்தினுள் வைத்து சிங்களக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் வீரவணக்க நினைவுச்சின்னம் யாழ். இந்துக்கல்லூரி 2005 இது அமரர் குணா என்பவரால் அமைக்கப்பட்டு பின்னாளில் சிங்களப் படையினரால் உடைக்கப்பட்டது.
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
பெயர்: தமிழீழத் தேசிய எழுச்சி சின்னம் தீருவில், யாழ்ப்பாணம் இரண்டாம் ஈழப்போர்க்காலத்தில் எழுப்பப்பட்டது மாவீரர் து.இ. இருந்த தமிழீழ தேசிய எழுச்சி சின்னம்:
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
யாழிலிருந்த கேணல் கிட்டு நிழலுருப்படம் 1991-1996
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் அமைந்திருந்த மேஜர் ரஞ்சன்/சித்தப்பா நிழலுருப்படம்
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
லெப். கேணல் சுபன், லெப் கேணல் ராதா, மேஜர் அசோக் ஆகியோரின் நிழலுருப்படங்கள் யாழ் 1993-1995- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
கப்டன் அப்பன் நிழலுருவப்படமும் மணி மண்டபமும் கைதடிச்சந்தி, யாழ் 1993 'கைதடி வட்டவைப் பொறுப்பாளர் கப்டன் அப்பன்'- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
2ம் லெப். மாலதி நிழலுருப்படம் இடம்: அறியில்லை- Images of the Tamil Genocide Monuments and Memorials
Tamil Genocide Memorial Stones and a Tamil Genocide Monument (a statue) Opened on May 18, 2016 Mullivaikkal, Mullaitivu, Tamil Eelam Tamil Genocide Monument depicting the Tamil victim family in Mullivaikkal 60 Tamil Genocide Memorial Stones are inscribed with the names of victims of the Genocide. Photo- Duncan McCargo- Second Tamil Genocide Memorial - Erected in Chuzhipuram-Kaattuppulam area of Valikamam west, Jaffna, on 2010 May 18 and still there (3)
- Tamil Genocide Monuments around the world
This album has a collection of memorials and monuments about the Tamil Genocide that occurred in Sri Lanka/Tamil Eelam by Sinhalese against the Eelam Tamils during the Eelam War, a.k.a. Tamil War of Independence or Sri Lankan Civil War. Image credits to the respective photographers. Document:-
Second Tamil Genocide Memorial - Erected in Chuzhipuram-Kaattuppulam area of Valikamam west, Jaffna, on 2010 May 18 and still there (3)
-
Second Tamil Genocide Memorial - Erected in Chuzhipuram-Kaattuppulam area of Valikamam west, Jaffna, on 2010 May 18 and still there (2)
-
Second Tamil Genocide Memorial - Erected in Chuzhipuram-Kaattuppulam are of Valikamam west, Jaffna, on 2010 May 18 and still there (1).jpg
-
First Tamil genocide memorial - Erected in 2010 at Samankulam Grama Mandal Ground, Vavuniya, Northern Tamil Eelam | destroyed by Sinhalese on 2012 May
-
Tamil Genocide Memorial in Thanjavur district of Tamil Nadu state in the India - Mullivaikal Muttram or முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் (33).jpg
-
Tamil Genocide Memorial in Thanjavur district of Tamil Nadu state in the India - Mullivaikal Muttram or முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் (32).jpg
-
Tamil Genocide Memorial in Thanjavur district of Tamil Nadu state in the India - Mullivaikal Muttram or முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் (31).jpg
-
Tamil Genocide Memorial in Thanjavur district of Tamil Nadu state in the India - Mullivaikal Muttram or முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் (30).jpg
-
Tamil Genocide Memorial in Thanjavur district of Tamil Nadu state in the India - Mullivaikal Muttram or முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் (29).jpg
-
Tamil Genocide Memorial in Thanjavur district of Tamil Nadu state in the India - Mullivaikal Muttram or முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் (28).jpg
-
Tamil Genocide Memorial in Thanjavur district of Tamil Nadu state in the India - Mullivaikal Muttram or முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் (27).jpg
-
Tamil Genocide Memorial in Thanjavur district of Tamil Nadu state in the India - Mullivaikal Muttram or முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் (26).jpg
-
Tamil Genocide Memorial in Thanjavur district of Tamil Nadu state in the India - Mullivaikal Muttram or முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் (25).jpg
-
Tamil Genocide Memorial in Thanjavur district of Tamil Nadu state in the India - Mullivaikal Muttram or முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் (24).jpg
-
Tamil Genocide Memorial in Thanjavur district of Tamil Nadu state in the India - Mullivaikal Muttram or முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் (23).jpg
-
Tamil Genocide Memorial in Thanjavur district of Tamil Nadu state in the India - Mullivaikal Muttram or முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் (22).jpg
-
Tamil Genocide Memorial in Thanjavur district of Tamil Nadu state in the India - Mullivaikal Muttram or முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் (21).jpg
-
Tamil Genocide Memorial in Thanjavur district of Tamil Nadu state in the India - Mullivaikal Muttram or முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் (20).jpg
-
Tamil Genocide Memorial in Thanjavur district of Tamil Nadu state in the India - Mullivaikal Muttram or முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் (19).jpg
-
Tamil Genocide Memorial in Thanjavur district of Tamil Nadu state in the India - Mullivaikal Muttram or முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் (18).jpg
- Second Tamil Genocide Memorial - Erected in Chuzhipuram-Kaattuppulam area of Valikamam west, Jaffna, on 2010 May 18 and still there (2)
- Second Tamil Genocide Memorial - Erected in Chuzhipuram-Kaattuppulam are of Valikamam west, Jaffna, on 2010 May 18 and still there (1).jpg
- Images of the Tamil Genocide Monuments and Memorials
The surrounding wall of this Indian memorial was demolished by the Tamil Nadu government in the year 11/2013- First Tamil genocide memorial - Erected in 2010 at Samankulam Grama Mandal Ground, Vavuniya, Northern Tamil Eelam | destroyed by Sinhalese on 2012 May
- ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
நிகழ்படங்கள் சிங்களவர் மற்றும் முஸ்லிம்களின் வாக்குமூலங்கள் இலங்கை சோனகர்கள் எவ்வாறு தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் சிங்களவருக்கு ஆதரவாக புலனாய்வு சேவை உட்பட்ட பணிகள் செய்தனர் என்று சிறிலங்காக் கடற்படையின் கலக்கூட்டக் சேர்ப்பர் (Admiral of the Fleet) வசந்த குமார் ஜயதேவ கரண்ணகொட விளக்குகிறார் நெறியற்ற முறையில் தமிழருக்கு எதிராக நீதியரசரை மாற்றிய ஹிஸ்புல்லா: https://eelam.tv/watch/_wZrFz5e44nxn1BY.html- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
Important Information
By using this site, you agree to our Terms of Use.